Home Cheran Selvi Cheran Selvi Ch48 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch48 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

81
0
Cheran Selvi Ch48 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch48 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch48 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 48. பாசறைக்கு வந்த பாவை

Cheran Selvi Ch48 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

தமிழ் காத்த பாண்டியர் தலை நகரில் பாண்டியர் ரத்தம் சிந்தப் போகிறதென்ற காரணத்தால் சினத்தின் வசப்பட்டவன் போல காலைக் கதிரவன் ரத்தத்தைவிட வெந்த முகத்துடன் கீழ்திசையில் அன்று உதயமாகி மதுரையின்
உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் தனது கிரணங்களால் ரத்தச் சிவப்பாக அடித்துவிட்டான். அந்த வேளையில் வடக்கு வாசல் கதவுகள் வெகு வேகமாகத் திறக்க, கோட்டைச் சுவர் மீதிருந்த தாரைகள் பலமாக முழங்க புரவிமீது
ஆரோகணித்து வலது கையில் உருவிய வாளும். இடது கையில் கடிவாளமும் ஏந்தி மிக விரைவாக வெளியே வந்தான் வீரபாண்டியன். அவனுடன் வந்த அவன் படையும் அதி துரிதத்துடன் அவனைப் பின்பற்றிவர வெகு வேகமாக
இளவழுதியின் படையை ஊடுருவிவிட்டான் பாண்டிய மன்னன்.
அப்படி அவன் ஊடுருவியது படை பலத்தினால் மட்டுமல்ல. ஊடுருவ இளவழுதியும் வசதி செய்து கொடுத்திருந்தான். முதல் நாள் தன்னிடம் யானை களில்லையென்பதைக் குறிப்பிட்டு, புலவரிடம் யானைகளைக் கடன் வாங்க
வேண்டாமென்றும் தானே வசதி செய்து தருவதாகவும் ஆஸ்தான மண்டபத்தில் வீரபாண்டியன் கூறியபோதே போர் தானிருக்கும் திசையில் தான் துவங்கப்படுமென்பதை இளவழுதி அறிந்திருந்தான். யானைப்படையில்லாமல் புரவிப்
படையுடன் பாண்டிய மன்னன் வரும் பட்சத்தில் தானும் புரவிப்படையை மட்டும் எதிரே நிறுத்திப் போராடத் தீர்மானித்த இளவழுதி, தனது புரவிப்படையை வடக்கு வாசலுக்கு நேர் எதிரில் நிறுத்தியிருந்தான். அதன் முன்னணியில்
தானே நின்றிருந்தான் ராஜாவின் மீது ஆரோகணித்து.
போரை எப்படி நடத்த வேண்டுமென்பதற்கு முதல் நாளே திட்டமிட்டு உதவிப் படைத்தலைவன் பலபத்ரனுக்கு அந்தத் திட்டத்தையும் விளக்கியிருந்தான் இளவழுதி. பாண்டிய மன்னனிடம் தூது சொல்லிவிட்டு விடையை சேர
மன்னனிடம் கூறிவிட்டுத் தன் பாசறைக்கு வந்து சேர்ந்ததும் பலபத்ரனை அழைத்து “ நாளை இந்த வாசல் வழியாகத்தான் வீரபாண்டியன் வருவான். அவனை வரவேற்க நமது புரவிப் படை மட்டும் தயாரா கட்டும்” என்று உத்தரவிட்டான்.
“காலாட்படை?” என்று வினவினான் பலபத்ரன்.
“வில்லேந்தி எட்ட நிற்கட்டும். கோட்டைச் சுவர் மீதிருந்த வீரர்கள் வேலோ அம்போ வீசும் பட்சத்தில் அவர்களைக் குறிவைத்து அம்பெய்யட்டும். அவசிய மிருந்தாலொழிய அதிக நாசம் வேண்டாம்” என்றான் இளவழுதி.
பலபத்ரன் சிறிது சிந்தனையுடன் இளவழுதியை நோக்கி “ இதில் என் பங்கு என்ன?” என்று வினவினான்.
“நான் படையின் முன்னணியில் நிற்பேன். நீயும் என்னுடன் நிற்கலாம். வீரபாண்டியன் படை ஊடுருவினால் நமது படை இரண்டாகப் பிரிந்து ஊடுருவ அனுமதிக்கும்.. அவன் ஊடுருவியதும் நமது பிளந்த படையின் ஒரு பாதிக்கு
நீயும் இன்னொரு பாதிக்கு நானும் தலைமை வகிப்போம். எதிரி பூர்ணமாக ஊடுருவியதும் பிளந்த பாதிகள் கூடும். இருபுறமும் எதிரியை நெருக்கும். அதற்குப் பிறகு எப்படிப் போர் வளைகிறதோ அதன்படி நமது முறையும்
மாறும்” என்று இளவழுதி விளக்கினான். விளக்கிவிட்டு “படையை ஒரு ஜாமம் உறங்கச் சொல். மூன்றாவது ஜாமத்தில் அணிவகுப்பு தயாராகட்டும்” என்றும் உத்தரவிட்டான்.
படைத்தலைவன் உத்தரவை இம்மி பிசகாமல் நிறை வேற்றினான் உபதளபதி பலபத்ரன். மூன்றாவது ஜாமத்தில் படை எதிரியை வரவேற்கப் பரம சித்தமாக வடக்கு வாசலுக்கு எதிரே நின்றபோது பலபத்ரன் இளவழுதிக்கு முன்பே
படையின் முகப்புக்கு வந்துவிட்டான். அவன் வந்து அரை ஜாமம் கழித்தே வந்த இளவழுதி நீராடி நெற்றிக்குத் திருநீரும் திலகமும் அணிந்து தேவசேனாதிபதியான முருகன் போல் படை முகப்பில் தோன்றினான். தோன்றியதும் ராஜாவை
படை நெடுக நகர்த்தி அணி வகுப்பைப் பார்வையிட்டான். ஆங்காங்கு இருந்த சின்னஞ்சிறு பிரிவுகளின் தலைவர் பலருக்கும் என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்லிவிட்டு பலபத்ரனிருந்த இடத்துக்குத் திரும்பினான். அவன்
திரும்புவதற்குக் கோட்டைச் சுவர்களுக்கு மேலே தாரைகள் சப்திப்பதற் கும் கதவுகள் சரேலென்று திறப்பதற்கும் நேரம் கன கச்சிதமாயிருந்தது.
வீரபாண்டியன் ஓங்கிய வாளுடன் தன் படையுடன் நேரே இளவழுதியும் பலபத்ரனும் இருந்த இடத்தை நோக்கி வந்ததும் தனது படை புக முற்பட்டவுடன் இளவழுதியும் பலபத்ரனும் பிரிந்து விட்டதையும், பிரிந்த பகுதியில் தான் உள்
நுழைந்து வாளை வீசியபோதும் தனது படை வேல்களைக் கொண்டு புகுந்தபோதும் எதிரியின்படை பேருக்குப் போரிட்டதே தவிர, தன்னையும் நீள இருந்த தன் படையையும் உள்ளே அனுமதித்து விட்டதையும் கண்ட வீரபாண்டியன்
இளவழுதியின் போர்க் கலையைப் பெரிதும் உள்ளூர பாராட்டிக் கொண்டான். ஆனால் இளவழுதியின் தந்திரத்தைப் பாராட்டிய வீரபாண்டியன், எதிரி எதிர்பார்த்தபடி உள்ளே ஊடுருவினானே தவிர சிறிதளவும் தனது திட்டத்தை
மாற்றவில்லை. இளவழுதியின் படை முழுவதும் ஊடுருவப்பட்டு இரண்டாகத் துண்டிக்கப்பட்ட உடன் தனது வாளை உயரத் தூக்கி ஆட்டி, தனது படையை நீளவாட்டில் இரண்டாகப் பிரியும்படி சைகை செய்தான். அதனால் இரண்டாகப்
பிரிந்த வீரபாண்டியன் படை இளவழுதி ஒரு புறத்திலும் பலபத்ரன் ஒரு புறத்திலும் நெருக்க முற்பட்டபோது அவ்விருவர் படைவரிசைகளைத் தனிப்பட சமாளித்து நெரிபடுவதைத் தடுக்க உக்கிரமாகப் போரிடலாயிற்று.
பாண்டியன் படை வெகு வேகமாகவும் உக்கிரமமாகவும் போரிட்டது. இளவழுதியின் படை எந்த அவசரத்தையும் காட்டவில்லை. இளவழுதியும் பலபத்ரனும் இரு புறத்திலும் போரிட்டு மெள்ள பாண்டியனை நெருக்க முற்பட்டார்கள்.
அப்படி நெருக்கியதில் படைகள் இரண்டும் கைகலந்துவிடவே போர் மெள்ள மெள்ள மும்முரமாயிற்று. அன்று ராஜா தான் போரிலும் ராஜா வென்பதை நிரூபித்தது. திடீரென ஆகாயத்தில் எழுந்தும் பலரைக் காலால் உதைத்தது படையின்
வழி செய்து கொண்டு பாய்ந்தும், கடிவாளம் இழுபட்டக் குறிப்பை அவ்வப்பொழுது உணர்ந்து கொண்டு சுழன்றும் இளவழுதி போரிட சகல வசதிகளையும் செய்து கொடுத்தது.
ஊடுருவிய பாண்டியன் படையும், ஊடுருவ இடங்கொடுத்த இளவழுதியின் படையும் இரண்டு இரண்டாகப் பிரிந்துவிடவே நான்கு படைப்பிரிவுகள் போரிட்டுக் கொண்டிருந்தன. இப்படி விடாமல் நடந்த போரைப் பற்றி அறிந்த
புலவரும் தமது சிறிய யானைப் படையைப் போர் நிகழும் இடத்துக்கு அழைத்து வந்தார். அந்தப் படையை இளவழுதிக்கு உதவியாக ஏவவும் முற்பட்ட சமயத்தில் அங்கு தோன்றிய சேர மன்னன் அவரைத் தடுத்தான். “யானைப் படையை
கதவுகளை நோக்கி அனுப்பினால் கதவுப் புறத்தில் இருக்கும் வீரபாண்டியன் உதவிப் பிரிவை அழித்து விடலாமே” என்றார் புலவர்.
“அழித்து விடலாம். ஆனால் அது நமது நோக்க மல்ல. போர் நன்றாக நடக்கிறது. இரு பாண்டியரிடையே நாம் புகவேண்டாம்” என்று திட்டமாகக் கூறிவிட்டான் சேரமன்னன்.
அத்துடன் புரவிமீதிருந்தால் போரின் விவரம் தெரிய வில்லையென்பதற்காகப் பக்கத்திலிருந்த யானைமீது ஏறிக்கொண்டான் ரவிவர்மன். இளவழுதியின் படை அவ்வப்பொழுது வியூகத்தை மாற்றிக் கொண்டு நான்கு புறத்திலும்
வீரபாண்டியனை வளைத்துக் கொண்டு விட்டதையும், வீரபாண்டியன் நிலை வினாடிக்கு வினாடி அபாயமாக முற்பட்டதையும் கண்ட சேரன் முகத்தில் மகிழ்ச்சி ஏதுமில்லை. வருத்தத்தின் ரேகையே படர்ந்து கிடந்தது. மகாவீரனான
வீரபாண்டியன் கை சளைப்பது பெரும் துன்பத்தை அளித்தாலும், இளவழுதியின் படை அமைப்பும், போர்க் களத்திலும் அவன் அந்த அமைப்பை அடிக்கடி மாற்றிப் போரிட்ட முறையும் யுத்த சாஸ்த்திரங்களை முழுதும் அறிந்த
ரவிவர்மனுக்கும் வியப்பாயிருந்தது. யுத்தக் காட்சியை அவன் பார்த்துக் கொண்டிருந்த போது இளவழுதி வீரபாண்டியனை அணுகிவிட்டான்.
இளவழுதி அணுகியதும் சரேலென அவனை நோக்கி வீரபாண்டியனும் திரும்பினான் ஓங்கிய வாளுடன். இருவர் வாட்களும் மின்னல் வேகத்தில் மோதி இழுபட்டன. புரவிகளிரண்டும் சிறிது நகர்ந்து அவர்கள் போருக்கு இடைவெளி
ஏற்படுத்தின. திடீரென ராஜா இருகால்களையும் உயரத் தூக்கிக் கொண்டு வீர பாண்டியன் புரவி மீது பாயவே இளவழுதி அதன் வேகத்துக்குத் தகுந்தபடி தனது வாளையும் வீரபாண்டியன் தலைமீது இறக்கினான். ஆனால்
வீரபாண்டியன் வாள் எழுந்து அதைத் தடுத்தது. தடுத்ததால் வீரபாண்டியன் தலை தப்பினாலும் வாள் இரண்டாகப் பிளந்து ஒரு பகுதி தரையில் விழுந்தது. அதனால் சீற்றமடைந்த வீரபாண்டியன் உடைந்த வாளை இளவழுதியின்
கழுத்தில் சொருகிவிட சரேலென்று முன்புறம் நீட்டினான். வீரபாண்டியன் உத்தேசத்தை முன்னதாக உணர்ந்துகொண்ட இளவழுதி ராஜாவைப் பக்க வாட்டில் நகர்த்தி வீரபாண்டியன் வாள் கரத்தையும் தன் இடது கையால் பிடித்துக்
கொண்டான். அந்த சமயத்தில் சேர மன்னன் போர் நிறுத்த சங்கைப் பலமாக ஊதினான் பலமுறை.
தர்மயுத்தத்தைத் தவிர வேறொன்றையும் விரும்பாத ரவிவர்மன் சங்கத்தை சப்தித்ததும் சேரர் படைமட்டுமின்றி பாண்டியன்படையும் சட்டென்று போரை நிறுத்தியது. நிறுத்திய நேரத்திலும் போர்க்களத்தில் காயம்பட்டு விழுந்த
புரவிகளின் முனகலும் கனைப்பும், வீர சொர்க்க மடைந்துவிட்ட வீரர்கள் ஆகாயத்தை நோக்கிப் பகலவன் உக்கிரத்தை அறியாது விழித்த கோரமும், மிகப் பயங்கரமாயிருந்தன.
இளவழுதியின் இரும்புக்கரத்தால் பிடிக்கப்பட்ட வாள் கரத்தை ஒரே திமிராகத் திமிரி விடுவித்துக் கொண்ட வீரபாண்டியன் இளவழுதியை வியப்புடன் நோக்கினான். இளவழுதி பிடித்தது சாதாரணப் பிடியல்ல. சேரன் செல்வியிடம்
தான் சிறிதளவு கற்றறிந்த சீனப்பிடியும் அதில் கலந்திருந்தது. அந்த வித்தை சரியாகத் தெரியாத காரணத்தால் வீரபாண்டியன் கை செயலிழக்கவில்லையே தவிர வாளை உதற வேண்டிய நிர்பந்தம் ஏற்படவே செய்தது.
அப்படி வாளிழந்து நின்ற வீரபாண்டியனிடம் யானை மீது வந்த ரவிவர்மன் “பாண்டிய மன்னனே! இத்துடன் போர் நிற்கட்டும். நீங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டால் முற்றுகை இன்றுடன் தீர்ந்துவிடும்” என்று கூறினான்.
வீரபாண்டியன் கீழே உடைந்து இரண்டாகக் கிடந்த தனது வாளையும் சேதமடைந்த தனது படையையும் நோக்கினான். “ஒப்புக்கொள்ள இன்னும் என்ன பாக்கியிருக்கிறது?” என்று கேட்டான் ரவிவர்மனை நோக்கி.
“இப்பொழுதும் நீங்கள் நகருக்குள் சென்று மீண்டும் படை திரட்டி வரலாம். ஆனால் வீண் சேதத்தைத் தவிர்க்க விரும்புகிறேன். நீங்கள் மாலிக்காபூரையோ, குஸ்ரூகானையோ எதிர்த்திருந்தால் இந்தப் போரும்
அவசியமாயிருந்திருக்காது” என்றான் சேரமன்னன்.
வீரபாண்டியன் சிந்தித்தான் சிறிது நேரம். அவனை அப்படிப் போர்க்களத்திலேயே நிறுத்தி வைக்க இஷ்டப்படாத சேரன் “ நகருக்குள் சென்று முடிவெடுத்து இரவு சொல்லியனுப்புங்கள்” என்று கூறிவிட்டு இளவழுதியின் படையை
பின்னடைய சைகை செய்தான். போர்த் தாரைகள் இருமுறை சப்திக்கப் படை பின்வாங்கியது. மீதியிருந்த படையுடன் கதிரவன் மாலை வாயிலில் விழு முன்பு வீரபாண்டியன் நகருக்குள் நுழைந்தான்.
அவன் சென்றதும் யானையிலிருந்து இறங்கிய ரவிவர்மன் தனக்குத் தலை வணங்கிய இளவழுதியை மார்புறத் தழுவிக் கொண்டான். ‘இன்று சேரநாடு சிறப்புப் பெற்றது” என்றும் சொன்னான். “இளவழுதி! உன் போர்த்திறன்
பிரமிக்கத்தக்கது. ஆனால் வெற்றிக் கொண்டாட்டம் எதுவும் வேண்டாம். வீரபாண்டியன் மனம் புண்படும் எந்தக் கோலாகலத்திலும் நமது படை இறங்க வேண்டாம்” என்றும் சொன்னான். அடுத்தபடி பலபத்ரனையும் பாராட்டி விட்டு
யானையின் துதிக் கையை இழுத்த வண்ணம் புலவர் இருந்தவிடம் நடந்தே சென்றான்.
இரவு நெருங்கியது. இளவழுதியின் படைத்தளத்தில் விளக்குகள் எரிந்தன பல இடங்களில். இளவழுதியும் கோட்டைக்கு எதிரேயிருந்த வேட்டைக்காரன் இல்லத்தைத் தனது பாசறையாக அமைத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு பெரும்
மரத்தூணைப் பற்றி நிற்கையில் தான் அவள் வந்தாள். அவளை அடியோடு எதிர்பார்க்க வில்லை இளவழுதி. அவள் அழகிய கண்கள் அவனை சுட்டு விடுவன போல் பார்த்தன. முற்றும் எதிர்பாராத விதமாக பாசறைக்கு வந்த அந்தப்
பாவை ஏதும் பேச வில்லை கையிலிருந்த ஓர் ஓலையை அவன் காலை நோக்கி எறிந்தாள். அந்த ஓலையைக் குனிந்து எடுக்கவோ படிக்கவோ முயலவில்லை இளவழுதி. அவள் முகத்தில் விரிந்த இகழ்ச்சி அவன் இதயத்தை ஊடுருவி
தணல் போல் சுரீல் எனச் சுட்டது.

Previous articleCheran Selvi Ch47 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch49 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here