Home Chittaranjani Chittaranjani Ch32 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch32 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

59
0
Chittaranjani Ch32 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch32 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch32 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 32 இருவர் திட்டங்கள்!

Chittaranjani Ch32 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனியை அவள் புரவியிலிருந்து தூக்கித் தனது புரவியில் தனக்கு முன்பாக உட்கார வைத்துக்கொண்டும், இடதுகையால் அசுரத்தனமாக அவளை அணைத்துக் கொண்டும், வலது கையால் புரவியின் கடிவாளங்களை இழுத்தும் தளர்த்தியும் கொடுத்துக் கொண்டும் சாதவாகனன் சென்றதையும், அரசகுமாரியின் புரவி கடிவாளம் நிலத்தில் புரண்டு வரச் சாதவாகனன் புரவிக்கு ஈடு கொடுத்து ஓடியதையும் இரண்டொரு விநாடிகளே பார்த்த க்ஷத்ரபன், யவனனுடன் மலைப்பகுதியின் வேறு பகுதிக்குச் சென்று விட்டானானாலும், அவன் எண்ணம் மட்டும் தனது வளர்ப்பு மகளையும் அவளைத் தூக்கிச் சென்ற புது மாப்பிள்ளையையும் சுற்றியே சுழன்று கொண்டிருந்ததால் பக்கத்தில் வந்த யவனனுக்கு அரைகுறையாகவே பதில் சொல்லிக்கொண்டு நடந்தான்.

சென்ற நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளுள் நாகபாணன் திட்டங்களில் எத்தனை திருப்புமுனைகள் ஏற்பட்டு விட்டன என்பதை நினைத்து வியப்புக் கடலில் மூழ்கியிருந்தான் க்ஷத்ரபன், ‘சித்தரஞ்சனியின் இனிமைக் குரலை உபயோகப் படுத்தி அவளைப் பிசாசாக்கித் தாபோல் மலைவாசிகளை வெளியேறச் செய்து அந்த மலைப்பகுதியைத் தங்கள் படைகளால் ஆக்கிரமித்து அங்கு தளம் அமைக்கத் திட்டமிட்ட மகாக்ஷத்ரபரின் திட்டம் தவிடுபொடியாகி விட்டதை உணர்ந்து க்ஷத்ரபன், ‘சித்தரஞ்சனியை நாங்கள் பிசாசாக்கி மலைவாசிகளை விரட்டினோம். ஆனால் அந்தப் பிசாசையே காதலியாக்கிக் கொண்டு மலைவாசிகளைத் திரும்பவும் வரவழைத்தான் சாதவாகனன். உதவிக்காக மற்ற மரக்கலங்களும் அதிக வீரர்களும் வந்தார்கள் நமக்கு. சாதவாகனனோதனது படைப் பிரிவு ஒன்றை வரவழைத்து அவற்றைக்கொண்டே மலைவாசிகளையும் வீரர்களாக்கி விட்டான். இவன் வந்த நாளிலிருந்து மகாக்ஷத்ரபருக்கு உறக்கமில்லை. எனக்கும் தொல்லை’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். இதற்கிடையே தான் சித்தரஞ் சனிக்காக ஏற்பாடு செய்திருந்த காஷ்டானன் எதிரியின் படைத் தலைவனாகி விட்டதை நினைத்து, “சீ! வெட்கங் கெட்டவன்” என்று அவனைத் தூற்றினான். “காஷ்டானன் மானமுள்ளவனாயிருந்தால் தனக்கு மனைவியாகப் போகிறவளை ஸ்வீகரித்துக் கொண்ட எதிரியிடம் கடைசி வரை போரிட்டு மடியவல்லவா வேண்டும்?” பழைய மாப்பிள்ளையைக் கண்டிக்கவும் செய்தான்.

இந்தக் கடைசி வார்த்தைகளை க்ஷத்ரபன் சற்று வாய் விட்டுச் சொல்லவே, அவன் பக்கத்தில் நடந்துகொண்டிருந்த யவனன் கேட்டான், “யார் எதற்காக மடிய வேண்டும்?” என்று.

“காஷ்டானன்” என்றான் சலிப்புடன் க்ஷத்ரபன்.

“எதிரியின் படைத்தலைவனா?” என்று கேட்டான் யவனன்.

“ஆம்.”

”அவன். சாகவேண்டுமென்றால் போரில்தானே சாக வேண்டும்?”

“இல்லை, தற்கொலை செய்துகொள்ளலாம்.”
“எதற்காக?”

“அவனுக்கு மனைவியாக வேண்டியவள் இன்னொருத் தனிடம் போய்விட்டாள்.”

”அதனாலென்ன? அவளுக்கு இவரிடம் பற்றில்லா திருக்கலாம். இது ஒரு பெரிய விஷயமா?”

க்ஷத்ரபன் உடனடியாக பதில் சொல்லவில்லை. கடைசியில், “யவனரே! நீர் நினைப்பதுபோல் அத்தனை அல்ப விஷயமல்ல” என்று சொன்னான்.

“ஏனில்லை! கேவலம் பெண் விஷயந்தானே? ஒருத்தி போனால் இன்னொருத்தி கிடைக்கிறாள். அவள் போனால் என்ன? ராஜ்யமா போய்விட்டது?” என்று சர்வ சகஜமாகப் பேசினான் யவனன்.

“ஒரு பெண் நம்மைவிட்டுப் போனால் ராஜ்யமல்ல, சாம்ராஜ்யமே போய்விட்டது போலத்தான்’ என்றான் க்ஷத்ரபன்.

“பெண் அனுபவப் பொருள். ஒன்று போனால் வேறொன்று கிடைக்கும். அதற்காகப் பிராணனையா விட முடியும்?” என்று யவனன் கேட்டான்.

க்ஷத்ரபன் சிறிது சிரித்துவிட்டு, “உங்கள் நாட்டில் ஹெலன் என்ற பெண்ணுக்காகப் பெரும் போரே நடந்ததாமே?” என்று வினவினான்.

“நடந்தது. அதைவிட முட்டாள்தனம் வேறில்லை. எத்தனை பேர் சாவு?” என்று அலுத்துக் கொண்டான் யவனன்.

அவன் தத்துவத்தை நினைத்து வியந்தான் க்ஷத்ரபன். பெண்ணுக்கு அதிக மகத்துவத்தை அளிப்பது தவறு என்ற யவனன் எண்ணம் அனைவருக்கும் இருந்தால் எத்தனை போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் சிந்தித்தான். என்ன சிந்தித்தாலும் பெண் இனத்தை இழிவாக நினைக்கவராததால் மேற்கொண்டு பேச இஷ்டப்படாத க்ஷத்ரபன், “யவனரே! வாரும், உமது படைகளைப் பார்வையிடுவோம்” என்று அவனை அழைத்துத் தாபோல் மலையின் வடக்குப் பகுதிக்குச் சென்றான்.

மலையின் சரிவுகளிலும் குகைகளிலும் பாசறை அமைத்துத் தாங்கியிருந்த யவன வீரர்கள் சுமார் இரண்டா யிரம் பெயரைப் பார்த்தான். பயங்கரமான வாள்களும், வேல்களும் அக்கம் பக்கத்திலிருக்கப் படுத்துக் கிடந்த அந்த இரண்டாயிரம் வீரரும், எந்த நிலையிலும் போராடக் கூடியவர்கள் என்பதை உணர்ந்த க்ஷத்ரபன், தங்கள் வெற்றியில் சிறிது நம்பிக்கையும் கொண்டான். இந்த இரண்டாயிரம் வீரர்களும் தங்களிடமிருக்கும் மூவாயிரம் வீரர்களும் இணைந்தால் வலு மிக அதிகமென்று தீர்மானித் தாலும் சாதவாகனன் போர்த் தந்திரம் எப்படியிருக்கு மென்பது புரியாததால் வெற்றி பற்றிச் சிறிது சந்தேகமும் கொண்டான்.

இப்படி அவன் சிந்தனையில் இறங்கியிருந்த சமயத்தில் நாகபாணனும் கோட்டையில் அடுத்து வரும் போரைப் பற்றிச் சிந்தாக்கிராந்தனாயிருந்தான். யவனர்களும் சாகர்களும் கொண்ட தனது படை பலத்தைப் பற்றி அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. அஞ்சன்வேல் கோட்டையிலிருந்து படகுகள் மூலம் மூவாயிரம் போர் வீரரை முகத்துவாரத்தில் இறங்கச் செய்துவிட்டு, யவனர் படையை மலையின் வடக்குப் பகுதியிலிருந்து குறுக்கே வராவிட்டால் இரண்டுக்கும் இடையில் சாதவாகனன் படைகளைச் சிக்க வைக்கலாமென்று தீர்மானித்தான். அப்படி முகத்துவாரத் திலிருந்து மலைமேல் ஏறிச் செல்லும் படையையும் மலைமீதிருந்தே குறுக்கே வரும் யவனர் படையையும் ஏக காலத்தில் சமாளிப்பதானால் இருபுறத்திலும் சாதவாகனன் போராட வேண்டியிருக்கு மென்றும், அப்படிப் போராடினால் அவன் படை இரண்டாகப் பிரிய நேரிடுமென்றும் கணக்குப் போட்டான் நாகபாணன், ‘அப்படி ஏற்படும்போது தான் ஒரு சிறிய படையுடன் மலையின் மேற்புறத்திலிருந்து இறங்க முடியுமானால் சாதவாகனனை முறியடிக்கலாம்’ என்று தீர்மானித்தான். இப்படியொரு திட்டத்தை வகுத்துக் கொண்டதால் சற்று மன நிம்மதியுடன் படுக்கையில் புரண்டான் மகாக்ஷத்ரபன்.

அந்த இரவில் சாதவாகனனும் புரண்டான். பஞ்சணை மீதல்ல, கருங்கல் தரையில், கரடு முரடான ஒரு மலைப் பாறையில், அருகேயிருந்த சித்தரஞ்சனியை அவன் கைகள் அழுந்தப் பிடித்திருந்தன. அந்தக் கட்டழகியின் சரீரத்தைக் கட்டாந்தரை துன்புறுத்தாதிருப்பதற்காகவோ என்னவோ அவள் உடலைத் தனது மார்புமீது தூக்கிப் போட்டிருந்தான் கௌதமிபுத்ரன். அவள் அவன் மார்புமீது செயலற்றுக் கிடந்தாள். “சித்தரஞ்சனி” என்று மெதுவாக அழைத்தான் சாதவாகனன்.

“ஏன்?” என்றாள் சித்தரஞ்சனி மிக மெதுவாக.

“மரக்கட்டை போலிருக்கிறாயே?” என்றான் சாதவாகனன்.

“இரும்பைக்கூட வளைக்க நீங்களிருக்கிறீர்களே…” என்றாள் அவள்.

“இரும்பை வளைக்கலாம். மரக்கட்டையை வளைக்க முடியாது” என்றான் சாதவாகனன்.

அவள் மெதுவாக நகைத்து அவன் மார்புமீது கிடந்த படியே தனது கைகளால் அவனது கழுத்தை வளைத்தாள். அவன் கைகளும் அவளைச் சுற்றி வந்தன. அந்த நிலையில் அவன் கேட்டான், “மரக்கட்டையில் கொடி முளைக்குமா?” என்று.

“மரக்கட்டையைக் கொடி வளைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றாள் சித்தரஞ்சனி.

“கொடி கொத்தி ஏறக் கொழுகொம்பு வேண்டுமென்பது பழைய கதை; பழைய நியாயம். மரக்கட்டையே மலர்க் கொடியாக மாறுவது புதுக் கதை; புது நியாயம்” என்ற சாதவாகனன், கழுத்தைச் சுற்றிய அவள் கைகளைத் தடவினான்.

அவள் உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கினாள். அவன் கைகள் சோதித்த இடங்கள் அவளை நிலை கொள்ளாது அடித்தன. அவள் இருமுறை முனகினாள். சற்று அவன் உடல் மீது தவழ்ந்து அவன் காதுக்கருகில், தனது உதடு களைக் கொண்டு சென்று, “பிரபு! நீங்கள் அரண்மனைப் பஞ்சணையில் படுக்க வேண்டியவர், இந்தப் பாறையில் படுத்திருக்கிறீர்களே!” என்றாள்.

அவன் அவள் கழுத்தில் தனது உதடுகளைப் புதைத்து “சித்தரஞ்சனி! நீ உடனிருந்தால் பாறையும் பஞ்சணை யாகும். நீ இல்லாவிட்டால் பஞ்சணையும் பாறை யாகும்” என்று சொற்களை உதிர்த்தான். அத்துடன் ஒருமுறை பெருமூச்செறிந்தான். “சித்தரஞ்சனி! ஒரு நாள் ஓடிவிட்டது. இன்னும் பதினாறு நாட்கள். பதினேழாவது நாள் நமக்கு இரு வெற்றிகள்” என்றான்.

“இரண்டு வெற்றிகளா?” தனது உதடுகளை அவனது உதடுகளுடன் இணைத்தாள்.

“ஆம் சித்தரஞ்சனி! இங்கு நான் நாகபாணனைச் சந்திக்கும்போது எனது சேனாதிபதி வஜ்ரபாகு இன்னொரு படைப்பிரிவுடன் வடக்கு கொங்கணத்தில் நுழைந்து விடுவான். நாகபாணன் ஒரே சமயத்தில் அரசின் இரு பகுதிகளை இழப்பான். பிறகு சிந்துநதிப் பகுதியில் அவனை முறியடிப்பதோ சாக சாம்ராஜ்யத்தை நிர்மூலமாக்கு வதோ பெரிய காரியமல்ல” என்று பேசினான்.

சித்தரஞ்சனி பிரமித்தாள். “என்ன திட்டத்துடன் வேலை செய்திருக்கிறீர்கள்?” என்றாள் மகிழ்ச்சியுடன்.

“எதையும் திட்டமில்லாமல் நான் செய்வதில்லை சித்த ரஞ்சனி. தாபோல் மலைப் போர் எனது முதல் வெற்றி. பிறகு தொடர்ச்சியாக வெற்றிதான்” என்றான் திட்டமாக.

“இந்தப் போருக்கும் திட்டமிட்டுவிட்டீர்களா?” என்று கேட்டாள் சித்தரஞ்சனி.

“அந்தத் திட்டம் வகுக்கப்பட்டு நாட்கள் பல ஆகின்றன. அதை நிறைவேற்றும் சிறிய பணிதான் பாக்கி” என்றான் சாதவாகனன். அத்துடன் சித்தரஞ்சனியைத் தனது இரு கைகளாலும் தூக்கித் தனக்கு மேலே குழந்தையைப் பிடிப்பது போலப் பிடித்துக்கொண்டு, “அடி சித்தரஞ்சனி! உன்னைச் சந்தித்த பிறகு எனது புத்தி மிகக் கூர்மையுடன் வேலை செய்கிறது” என்றான்.

அவள் அவனைப் பார்த்தபடி நகைத்தாள். “ராட்சஸனா யிருக்கிறீர்களே? இறக்குங்கள் என்னை” என்று சொன்னாள் நகைப்பின் ஊடே.

அவளை மெதுவாகத் தனது பக்கத்தில் இறக்கிவிட்டுத் தான் எழுந்து உட்கார்ந்தான். பிறகு அவள் உடலைத் தலையிலிருந்து கால்வரைதடவிக் கொடுத்து. “சித்த ரஞ்சனி! நீதான் இந்தத் தாபோல் மலை என்று வைத்துக் கொள். இதுதான் எனது போர்த்திட்டம்” என்று கூறி விட்டுத் திட்டத்தை அவள் அழகிய சரீரத்தில் சிருஷ்டித்துக் காட்டினான்.

எத்தனை நுட்பமாக அவன் போர்த் திட்டத்தை வகுத்திருக்கிறான் என்பதை அறிந்த சித்தரஞ்சனி அவன் புத்திக் கூர்மையை வியந்தாள். இப்படியொரு புருஷன் தனக்குக் கிடைத்ததைப் பற்றிப் பெருமகிழ்ச்சியும் நியாய மான கர்வமும் கொண்டாள். அவள் படுத்தபடியே கேட்டாள், “நான் தாபோல் மலையென்றால் என் மீதா போர் நடக்கப் போகிறது?” என்று வினவினாள் நாணப் புன்முறுவல் காட்டினாள். அவன் நகைத்துவிட்டுச் சொன்னான், “இந்தப் போருக்குப் பிறகு அது. அதுவும் தர்மப் போர் தான். அறத்தின் வழியில்தான் நடக்கும்” என்று. அத்துடன் அவளைப் பார்த்து, “இன்று நீ பேச்சுக் கொடுத்து என் ஆணையைக் காப்பாற்றிவிட்டாய். நீ உத்தமி” என்றான் சாதவாகனன். அவன் குரலில் அன்பும் பெருமிதமும் இணைந்து பிரவாகித்தது.

Previous articleChittaranjani Ch31 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch33 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here