Home Ilaya Rani Ilaya Rani Ch11 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch11 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

135
0
Ilaya Rani Ch11 Ilaya Rani Sandilyan, Ilaya Rani Online Free, Ilaya Rani PDF, Download Ilaya Rani novel, Ilaya Rani book, Ilaya Rani free, Ilaya Rani,Ilaya Rani story in tamil,Ilaya Rani story,Ilaya Rani novel in tamil,Ilaya Rani novel,Ilaya Rani book,Ilaya Rani book review,இளையராணி ,இளையராணி கதை,Ilaya Rani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani full story,Ilaya Rani novel full story,Ilaya Rani audiobook,Ilaya Rani audio book,Ilaya Rani full audiobook,Ilaya Rani full audio book,
Ilaya Rani Ch11 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch11 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

இளையராணி – சாண்டில்யன்

அத்தியாயம் – 11 ரஜனியின் சபதம்

Ilaya Rani Ch11 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

ஆடு மிகவும் சாதுவான பிராணி. கொஞ்சம் அதட்டினால்கூடப் பயப்படும். சாதாரண காலங்களில் அதை அதிகமாகச் சட்டை செய்பவர்கள் கிடையாது. அனால் அம்மன் கோயில் திருவிழாவன்று அதைக் காவு கொடுப்பதற்குச் சமயம் வந்தாலோ அதற்கு நடக்கும் உபசாரத்தைச் சொல்லி முடியாது. நன்றாகக் குளிப்பாட்டுவார்கள். நெற்றியில் குங்குமம் இட்டுக் கழுத்தில் மஞ்சள் நீரைக் கொட்டி, மாலையும் போட்டு அலங்கரிப்பார்கள். இப்படி அலங்கரிக்கப்பட்ட ஆடு மேளதாளத்துடன் காவுக்கு அழைத்துச் செல்லப் படும்.

இவ்வளவு வைபோகம் அன்று ஜஸ்வந்தசிம்மனுக்கும் நடந்தது. இளைய ராணி தோழிகளை விட்டு அவனை நன்றாக அலங்கரிக்கச் சொன்னாள். ராஜ புதனத்திலேயே பிரதான ராஜ்யமாக விளங்கிய மேவார் ராணாவின் அரண்மனையில் எந்தெந்த உயர்ந்த ஆடைகள் கிடைக்குமோ அவற்றையெல்லாம் அவனுக்கு நன்றாக அணிவித்தார்கள். இவற்றின் மேல் லேசாகத் தடவப்பட்ட வாசனைத் திரவியங்களின் இரண்டொரு துளிகள் அவன் சென்றவிடத்திலெல்லாம் பரிமளமான வாசனையையும் கூட்டி வந்தது. இந்த மாதிரி வாசனையுடன் வீரத்தனம் என்ற வாசனையும் சிறிது கலந்திருந்தால், ரஜனி ஜஸ்வந்தசிம்மனை அவ்வளவு தூரம் வெறுத்திருக்கமாட்டாள். வீரம் இல்லாத பேடியான மனிதன் வெளிவேஷத்தால் தன் முட்டாள்தனம் இன்னும் அதிகமாக விளங்க உள்ளே மைந்தால் அவளுக்கு எப்படித்தான் இருக்கும்?

ருத்திராகாரமான கோபம் அவள் மனத்தில் பொங்கி எழுந்தது. அதுவும், ‘இவனுக்குச் சுயமாக எந்த யோசனையும் கிடையாது. ஒரு ஸ்திரீயின் பேச்சுப்படி படுகிற மடையன்’ என்பதை அறிந்திருந்த அவளுக்குக் கோபத்துடன் வெறுப்பும் பரிதாபமும் கலக்கவே அவனைத் தண்டிக்கலாமா வேண்டாமா என்று யோசனையில் பிரம்பைச் சிறிது நேரம் தனக்குப் பின்னால் ஒளித்துக்கொண்டாள். ஆயினும் கோபம் சிறிதும் தணியாதிருக்கவே இரண்டு கைகளும் அந்தப் பிரம்பைப் பிடித்தும் உருவியும் வளைத்தும் ஏதேதோ செய்து துடித்துக் கொண்டிருந்தன.

உள்ளே நுழைந்த ஜஸ்வந்தசிம்மன் சிறிது நேரம் பேசாமல் நின்றான். ரஜனியை முதலில் பார்த்த கண்கள் அவள் முகத்தில் கொழுந்துவிட்டுப் பிரகாசித்த கோப ஜ்வாலையைக் கண்டு தரையை நோக்கின. மனி தர்கள் சந்தித்தால் விரோதிகளாயிருந்தால்கூட நீண்ட நேரம் பேசாமலிருக்க முடிவதில்லை. யாராவது ஒருவர் பேச்சை ஆரம்பிக்க வேண்டுமே என்ற சம்பிரதாயத் திற்காக, “என்ன ஜஸ்வந்த்! எங்கே வந்தாய்?” என்று கேட்டாள் ரஜனி.

ஜஸ்வந்தசிம்மன் ரஜனியைவிட மூன்று நான்கு வருஷங்கள் பெரியவன். ரஜனி மேவாருக்கு வந்த முதல் இரண்டொரு நாள் ஜஸ்வந்தசிம்மனுடன் அதிகமாகப் பழகாமலும் பேசாமலும் இருந்து வந்தாள். பிறகு அவன் எப்படி நடத்தப்படுகிறான் என்பதையும் இயற்கையின் அவசியத்தால் அவன் ஓரளவு ஆள் மாதிரி மாறிவிட்டானேயொழிய அவன் உண்மையில் உள்ள வலுவோ, உடல் வலுவோ இல்லாத சவலைசு குழந்தைக்குச் சமானம் என்பதையும் அறிந்து கொண்டாள். அது முதல் அவனுடன் சகஜமாகப் பழக ஆரம் பித்தாள். இளைய ராணி, ரஜனிக்கு ஏற்பட்ட இந்த அன்பை முதலில் விபரீதமாக அர்த்தம் செய்து கொன்டாள். தன்னுடைய திட்டம் பலப்பட்டு உருவாக கொண்டிருக்கிறது என்று நினைத்தாள். ஆனால், காலக் கிரமத்தில் உண்மை விளங்கிவிட்டது. ரஜனி ஜஸ்வந்து சிம்மனைக் குழந்தைக்கும் கேவலமாக மதிக்கிறான் என்பதை அறிந்தவுடன் கனவில் தான் கண்ட கோட்டை தவிடுபொடியாக உடைந்து கொண்டிருப் பதைத் தெரிந்து கொண்டாள். அது முதல் ரஜனியின் வாழ்க்கையிலும் கட்டுப்பாடுகள் ஏற்படலாயின.

இந்தக் கட்டுப்பாடுகளோ இளைய ராணியின் தொடர்ச்சியான பயமுறுத்தலோ ரஜனியின் மனத்தில் எத்தகைய மாறுதலையும் செய்ய முடியவில்லை.

இன்று அவன் உள்ளே நுழைந்தபோதும் அதேவித உணர்ச்சிகளே அவள் மனத்தில் இருந்தன. தான் கேட்ட கேள்விக்குப் பதில் வராதிருக்கவே அதே கேள்வியைக் கொஞ்சம் அழுத்தந்திருத்தமாக ரஜனி இரண்டாம் முறை திருப்பினாள்.

ஜஸ்வந்தசிம்மனுக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை. அவளை அவன் சாதாரணமாகப் பெயர் சொல்லித்தான் அழைப்பது வழக்கம். அதற்குக் காரணம் ரஜனி கொடுத்த இடந்தான். “பாவம்! அப்பாவி. அவன் எப்படி கூப்பிட்டால் என்ன?” என்று இருந்துவிட்டாள். ஆகையால், “ரஜனீ” என்று அவன் ஆரம்பித்து இழுத்த போதும் அவள் பேச்சு முறையைக் கவனிக்காமல், ரஜனிக்கு என்ன, சொல் ‘லேன் ஜஸ்வந்த்” என்று கடுமையாகப் பேசினாள்.

“அம்மா உன்னைப் பார்த்துவிட்டு வரச் சொன்னாள்” என்று மீண்டும் ஜஸ்வந்தசிம்மன் இழுத்தான். அவளுடன் மேற்கொண்டு விஷயத்தைச் சொல்லப்யிருக்கவே, தன் உடையைத் தட்டித் தடவிக் இக்கிக் கொண்டு அதனுடன் விளைாயட ஆரம் பித்தாள்.

அம்மா அனுப்பினாளா? எதற்காக?” என்று ரஜனி கேட்டாள்.

ஜஸ்வந்தசிம்மன் சிறிது சமாளித்துக் கொண்டான். மனியை மணம் செய்துகொண்டால், தான் மேவார் சிம்மாசனத்தில் எப்படி உட்காரலாம்; எப்படி எல்லோரும் தன் அடியில் பணிந்து தன் உத்தரவுக்காகக் காத்திருப்பார்கள் என்று இளையராணி காட்டிய ஆசை களையெல்லாம் மீண்டும் ஒரு முறை தன் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி, சிறிது தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டான்.

“இல்லை, ரஜனி! நீ என்னைக் கல்யாணம் செய்து கொண்டால், நம் இரண்டு பேருக்கும் நல்லது என்று அம்மா சொல்கிறாள்!”

“அப்படியா?”

“ஆமாம் ரஜனி, நீ வேண்டுமானால் அம்மாவைக் கேட்டுப் பாரேன்!”

வேண்டுமானால் அம்மாவைக் கேட்டுக் கொள்கிறேன். நீ சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் போ!”

“அம்மா சொல்கிற யோசனைக்கு உனக்கு ஏதாவது ஆட்சேபணை உண்டா என்று கேட்கலாம் என்று தான் வந்தேன்.”

“அதுவும் அம்மாவுக்கே தெரியுமே ஐஸ்வந்த அதையும் அம்மாவைக் கேட்டே தெரிந்துகொள்கிறது தானே!”

“என்னவோ நான் தான் உன்னை நேரில் வேண்டும் என்று அம்மா சொன்னாள்.’’

‘’கேட்டாயிற்றா இல்லையா?”

“ஆயிற்று.’’

“போயேன்…’’

‘’நீ ஒன்றும் பதில் சொல்லவில்லையே ரஜனி”

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்கிறதென்று. ரஜனிக்கே தெரியவில்லை. இதுவரை சொன்ன பதில் களிலேயே தன் அபிப்பிராயத்தைச் சொல்லியிருந்தும் மீண்டும் இப்படிக் கேட்கிறானே என்று நினைத்தாள் ”நான் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள முடியாது” என்று பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டுமாம் என்பதை நினைத்தபோது தன்னை அறியாமலே அவளுக்குச் சிரிப்பு வந்தது. இரண்டு கைகளால் முதுகுப் பக்கத்தில் மறைத்துப் பிடித்திருந்த பிரம்பைப் படுக்கையில் எறிந்து விட்டு மஞ்சத்தில் தானும் தடா லென்று விழுந்து சிரித்தாள்.

”அது எதற்கு ரஜனி?” என்று ஜஸ்வந்தசிம்மன் பிரம்பைக் காட்டிக் கேட்டான்.

“உனக்குப் பதில் சொல்வதற்காக வைத்திருந்தேன் ஜஸ்வந்த்!” என்றாள் அவள்.

இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத அவ்வளவு முட்டாளாக எந்த மனிதனும் இருக்க முடியாதல்லவா? அதன் அர்த்தம் ஜஸ்வந்தசிம்மனுக்குத் தெளிவாக தெரிந்தது. தாயின் வளர்ப்பினால் என்ன தான் விட்டாலும் உடம்பில் ஊறியிருந்த ராஜபுத்திர சிறிது கொதிக்கத்தான் செய்தது! அவனையும் அறியாமல் அவன் முகத்தில் கோபம் ஊரலாயிற்று.

“ரஜனி! என்னை எதற்காக இப்படி நடத்தும் கான் உன்னை என்ன செய்தேன் என்று கேட்டான்.

அதே கேள்வியை ரஜனியும் கேட்டுக்கொண்டாள். “ஆம்! இவன் நம்மை என்ன செய்தான் என்று நினைத்தாள். ஆனால், அவனுக்குப் பதில் சொல்லும் போது மட்டும் சிறிது கடுகடுப்பாகவே, தாய் தகப்பன் செய்யும் பாவத்தின் பலனைப் பிள்ளைகள் அநுபவித்துத்தான் தீரவேண்டும் ஜஸ்வந்தா என்றாள்.

ஜஸ்வந்த் நிதானமிழந்து விட்டான். மிகவும் பயங் காளியான மனிதன் கூட மதுவைக் குடித்துவிட்டு மயக்கத்தில் இருக்கும்போது கொடூர பாஷையில் இறங்கி விடுகிறான். கொடூரச் செயல்களுக்கும் மயக்கம் அவனை அழைத்துச் செல்கிறது. திரும்பத்திரும்பக் குத்தப்பட்ட ஜஸ்வந்தசிம்மன் மனத்தையும் கோபத்தால் மயக்கம் கவர்ந்து கொண்டது.
“என் பொறுமைக்கும் எல்லையுண்டு ரஜனி! அதை மறக்காதே!” என்றான்.

உண்மையில் ஜஸ்வந்தசிம்மன் தானா இப்படிப் பேசுகிறான் என்று ரஜனியே அசந்து போனாள்.

“பொறுமை மீறினால் என்ன செய்துவிடுவாய்” என்றாள். அடுத்து வந்த பேச்சுக்கள் அவளைத் திக் பிரமை அடையச் செய்துவிட்டன.

“என்ன செய்வேன் என்பதைச் சீக்கிரம் தெரிந்து கொள்வாய் ரஜனி உண்மையில் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டம் இல்லை ராஜ்ய நன்மைக்கு நமது விவாகம் அவசியம் என்று அம்மா சொன்னதால் சம்மதித்தேன். இல்லாவிட்டால் பெண் தன்மையே இல்லாத உன்னைப் போன்ற பிடாரியிடம் அகப்பட்டுக்கொள்ள நான் இஷ்டப்பட மாட்டேன்! உன் இஷ்டத்தையும் கேட்பது தர்மம் என்றுதான் உன்னைக் கேட்க வந்தேன். வாயை அதிகமாக விடுமுன்பு நான் ஆண்பிள்ளை என்பதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்” என்றான்.

“நல்லவேளை அதை ஞாபகப்படுத்தினாய் ஜஸ்வந்த், நீ ஆண்பிள்ளை என்கிற விஷயம் இத்தனை நாளாக எனக்குத் தெரியாது! நீ என்ன ஆண்பிள்ளை, தென்னம் பிள்ளையாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. உன் இஷ்டப்படி நடக்க எனக்கு இஷ்டம் இல்லை. உன் தாயின் பயமுறுத்தலுக்கே அசையாத நான், உன் பயமுறுத்தலுக்கு அசையப் போவதில்லை!” என்றாள் ரஜனி. அவள் முகத்தில் தாங்கொணா அருவருப்புத் தாண்டவமாடியது. அவனைப் பார்த்த அந்தக் கண்களில் இகழ்ச்சி பூரணமாகப் பிரகாசித்தது.

“ரஜனி, எனக்கு மிதம் மீறிக் கோபமூட்டாதே! கண்டபடி பேசாதே! பெண்களுக்கு வாய் ஜாஸ்தி யென்று எனக்குத் தெரியும்!” என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் இருந்த அவளுக்கு வெகு அருகில் ஜஸ்வந்தசிம்மன் வந்து விட்டான்.

ரஜனிக்கும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வாய் மாத்திரமென்ன ஜஸ்வந்த், கைகூடத்தான் எஸ்தி!” என்று பிரம்பை எடுத்து அவன் மீது வீசிநாள்.

விர் என்று விழுந்த அடி ஜஸ்வந்தசிம்மனை ஒரு லக்குக் கொண்டு வந்துவிட்டது. ரஜனி கோப வெறியில் மீண்டும் மீண்டும் பிரம்பை வீசினாள். அந்த வீச்சினின்று தப்ப அப்புறமும் இப்புறமும் குதிக்க ஆரம்பித்தான் அவன். பிரபல பரத நாட்டியக்காரர்கள் கூட வெட்கப்படும்படியான அவ்வளவு ஆட்டம் ஆடி விட்டான் ஜஸ்வந்தசிம்மன்.

ரஜனி கோப வெறியில் அளவுக்கதிகமாக அவனை ஆட்டிவிட்டதால், ஜஸ்வந்தசிம்மன் என்றுமில்லாத துணிச்சலுடன் அவள்மீது பாய்ந்து விட்டான். அந்த அதிர்ச்சியில் பின்வாங்கிக் கால் இடறிக் கீழே விழுந்த ரஜனியின் கையில் இருந்த பிரம்பையும் சரேலெனப் பிடுங்கிக்கொண்டு, “இப்பொழுது என்ன சொல்கிறாய் ரஜனி!” என்று பிரம்பை ஓங்கினான். அடுத்த வினாடி அவன் கண்கள் பிரமாதமான பயத்தால் விழித்தது விழுத்தபடி நிலைத்தன. அடிக்க ஓங்கிய பிரம்பைத் தாழ்த்தியபடி பின்வாங்கினான்.

“அடே ஜஸ்வந்தசிம்மா! உன் அல்ப உயிருக்கும் கேடு காலம் வந்து விட்டது. இதோ அதைப் போக்கி அதை அடிப்படையாகக் கொண்டு பெரிய பெரிய ஆசைக் கோட்டைகளைக் கட்டி வரும் உன் தாயின் எண்ணத்தில் மண்ணைப் போடுகிறேன். பத்மினி உதித்த இந்த ராஜபுத்திர நாட்டுப் பெண்கள் உன் அட்டகாசத்துக்கு அடங்கி விடுவார்களென்றா நினைத்தாய்? இந்தா இதை வாங்கிக் கொள்” என்று தன் இடையில் மறைத்து வைத்திருந்த உடைவாளைக் கையில் ஓங்கியவண்ணம் அவனை நோக்கி நகர்ந்தாள் ரஜனி.

ஜஸ்வந்தசிம்மன் அலறிவிட்டான். “ரஜனி! இதென்ன பைத்தியம்! கீழே போடு அந்தக் கத்தியை. நீ எப்படியாவது ஒழிந்து போ” என்று கதவை நோக்கிப் பின்வாங்க ஆரம்பித்தான்.

“ஜஸ்வந்தசிம்மா! நீ உயிருடன் இந்த அறையை விட்டு வெளியேறப் போவதில்லை. உன்னிடம் நான் பரிதாபம் வைத்ததால்தான் இவ்வளவு கஷ்டத்துக்கும் ஆளானேன். ஆனால் அந்தக் கஷ்டம் முடியும் காலம் வந்துவிட்டது. என் கஷ்டம் மாத்திரமல்ல; மேவார் ராஜ்யத்தைப் பிடித்த சனியும் தொலையப் போகிறது. வா இப்படி. எங்கே போகிறாய்?” என்று அவனைக் தொடர்ந்தாள் ரஜனி. அழகிய அவள் கண்களில் குரூரம் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஜஸ்வந்தசிம்மனுக்கு வெகு அருகில் அவள் வந்து கையை ஓங்கிவிட்டாள். மிகுந்த பயத்தால் ஜஸ்வந்தசிம்மன் முகம் வியர்த்தது, கையிலிருந்த பிரம்பு நழுவியது. தன்னை எதிர்நோக்கிய விதிக்குக் கீழ்ப்படியத் தயாரானான். அந்த சமயத்தில் ‘கிரீச்’ என்று கதவுப் பக்கத்திலிருந்து வந்த ஓர் அலறலைக் கேட்டு ரஜனி திரும்பினாள். அவ்வளவுதான் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவள் கையை இளைய ராணி இறுகப் பிடித்து விட்டாள். பலமான அந்தப் பிடியில் ரஜனியின் கை துவள ஆரம்பித்தது. அதிலிருந்த கத்தியும் ‘டங்’ என்று கீழே விழுந்தது.

உண்மையில் கதவுக்கருகிலிருந்து அலறியது இளைய ராணிதான். பிள்ளைக்கு மணக்கோலம் அணிவிக்கத் தான் செய்த ஏற்பாடு பிணக்கோலத்தில் முடியும் என்ற நினைப்பினால் தாயின் இரத்தம் கொதித்து அப்படி அலறலைக் கிளப்பியது. அவ்வளவு துரிதமாக இளைய ராணி உள்ளே நுழைந்து தடுத்திரா விட்டால் ஜஸ்வந்தசிம்மன் கதி அதோ கதியாகி யிருக்கும். இளைய ராணி அந்த அறைக்கு அருகில் வந்து வெகு நாழிகையாகி விட்டது. வெளியிலிருந்தே எல்லா சம்பாஷணைகளையும் கேட்க முயன்றாள். காதில் ஒன்றும் விழவில்லை. ஜஸ்வந்தனும் ரஜனியும் கோபம் மேலிட்டு உரக்கப் பேசின பேச்சுக்கள் மட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி அவள் காதில் விழுந்தன. சரியான சமயத்தில் உள்ளே நுழைந்ததால் பெரிய ஆபத்தைத் தடுக்க முடிந்தது.

இரண்டு ஸ்திரீகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒருவர்மீது மற்றொருவருக்கு எவ்வளவு உல்ல அபிப்பிராயம் என்பதைக் கண்கள் தெளிவாக எடுத்துக் காட்டின.

இந்த நிலையில் இருக்கும்போதும் உன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் போகவில்லையே” என்றாள் இளைய ராணி.

இந்த நிலையில் நீங்கள் என்னை வைத்திருப்பது கான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா மகாராணி?” என்றாள் ரஜனி,

“ரஜனி, உன் நன்மையை உத்தேசித்துச் சொல்கிறேன் கேள். நான் உனக்கு அத்தை முறையாக வேண்டும். என்னைவிட உன்னிடம் மற்றவர்களுக்கு அதிக அக்கறை இருக்க முடியாது” என்று ராணி முடிப்பதற்குள் ரஜனி இடைமறித்து, “அதுதான் ஸ்பஷ்டமாகத் தெரிகிறதே மகாராணி” என்றாள்.

“ரஜனி! உன் ஹாஸ்யச்சுவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சமயம் சந்தர்ப்பம் தெரியாமல் உதயமாகும் ஹாஸ்யத்தால் பெரும் தீமைகள் விளையும்; ஞாபகம் வைத்துக்கொள். திரௌபதி துரியோதனனைப் பார்த்துச் சிரித்ததால் பாரத யுத்தம் வந்தது. ஆகையால் அதிக நகைச்சுவைக்கு இடம் கொடுத்து விடாதே. ஊரார் பார்த்துச் சிரிக்கும் நிலைமைக்கு வந்துவிடுவோம்” என்று புத்திமதி சொல்ல ஆரம்பித்தாள் இளைய ராணி.

ரஜனி அதற்கும் மசிகிற வழியாய்க் காணவில்லை. இளைய ராணியும் பொறுமையை இழந்தாள். “ரஜனி. அமரன் மீண்டும் ஏதாவது வேஷம் போட்டுக்கொண்டு வருவான் என்று துள்ளாதே. யார் வந்தாலும் உள்ள விட வேண்டாம் என்று படைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். கோட்டைக் கதவு சாத்தப்பட்டிருக்கிறது அமரன் ராதோர் வீரர்களை அழைத்துக்கொண்டு வந்காலும் கோட்டைக் கதவுகளை உடைக்க முடியாது! என்று தான் செய்திருக்கும் ஏற்பாடுகளை விவரிக்கலானாள்.

“வாஸ்தவம் மகாராணி. நாளைக்கு ராகிப் பண்டிகையாயிற்றே. கோட்டைக் கதவை மூடி வைத்தால் ஜனங்கள் உங்களைச் சும்மா விடமாட்டார்களே” என்றாள் ரஜனி.
அதை நினைத்தவுடன் இளைய ராணிக்குத் திகிலாய்ப் போய்விட்டது. “பாழாய்ப் போன ராகிப் பண்டிகை! இதை ஏற்படுத்தினவர் யாரோ!” என்று உரக்கவே சொல்லி நொந்து கொண்டாள். எதிரியின் மனக்கசப்பு ரஜனிக்கும் சிறிது தைரியத்தைக் கொடுத்தது.

ஆனால் எதிலும் தெய்வ சம்மதம் ஒன்றிருக்கிற தல்லவா? தெய்வம் அப்பொழுது ரஜனிக்கு பக்கத்தில் இல்லை போலிருக்கிறது. அந்த அறைக்குள் முன்னெச்சரிக்கை இன்றித் திடீரென்று நுழைந்த அம்பர் வீரன் ஒருவன் இளைய ராணியை நோக்கி வணங்கி, ‘மகா ராணி, இளவரசர் அகப்பட்டுவிட்டார், அவரைக் கைது செய்து விட்டோம். தங்கள் ஆக்ஞை என்னவென்று சேனாதிபதி கேட்டுவரச் சொன்னார் என்றான்.

இரண்டு ஸ்திரீகளும் ஆச்சரியத்தால் ஏககாலத்தில்”

“என்ன!”

“ஆம் மகாராணி! அமரசிம்மன் நேற்றிரவு அகழியில் விழுந்ததும் மறைந்துவிட்டார். அந்த இருட்டில் பந்தங்கள் வைத்துத் தேடியும் அகப்படவில்லை. ஆனால் அவர் நகரக்கூடிய ஸ்திதியில்கூட இல்லை. சண்டையில் தோளில் ஈட்டி பாய்ந்ததால் நீந்த முடியாமல் அகழியின் ஓரமாக மெல்ல நீந்திச் சென்று அங்கிருந்த செடிகளுக்கருகில் கரையில் மூர்ச்சையாய்விட்டார். சற்று நேரத்துக்கு முன்பு பாராக்காரன் பார்த்து விஷயத்தைத் தெரிவித்ததன்மேல் நாங்கள் இளவரசரைக் கோட்டைச் சிறைக்குக் கொண்டு வந்தோம். இப்பொழுது தான் கண் விழித்தார்” என்றான் சேவகன்.

ரஜனியின் கண்களில் நீர் தேங்கிற்று; அவள் உடம்பு முழுவதும் வேதனை செய்தது. மிகுந்த பத்துடன் கொஞ்சும் பாவனையில் அவள் இளைய பாணியைப் பார்த்து, ‘மகாராணி! ஒரு நிமிஷம் ராஜ தமாரைப் பார்க்கலாமா?” என்றாள்.

இளையராணியின் கண்களில் வெற்றிக் குறி தோன் றியது. “என்ன பிரயோசனம் ரஜனி! உச்சி வேளையில் அவனைச் சிரச்சேதம் செய்துவிட உத்தரவிடப் போகிறேன்” என்றாள்.

“என்ன! ராஜகுமாரையா! உங்களுக்கு மூத்த பிள்ளை முறையிலிருக்கும் அவரையா கொல்லப் போகிறீர்கள்? நீங்கள் என்ன பெண்தானா மகாராணி? அவர் மீது கையை வைத்தால் ராஜபுதனம் உங்களை என்ன செய்யும் தெரியுமா மகாராணி? வேண்டாம், மகாராணி வேண்டாம், இந்தப் பாதகச் செயலில் இறங்காதீர்கள்” என்று கதறினாள் ரஜனி.

“ரஜனி! அவன் ஒருவன் என் காரியங்களில் தலை யிடாதிருந்தால் மேவார் சரித்திரத்தில் இவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டிரா. அவிழ்க்கமுடியாத சிக்கலை அறுத்துத் தான் எறிய வேண்டும். சிக்கலுக்கு அஸ்திவாரமான மனிதனை இன்றோடு களைந்துவிடுகிறேன்” என்றாள் ராணி. அவள் கண்களில் விரோதமும் தன் தாண்டவமாடின.

ரஜனி அவள் காலில் விழுந்தாள். “மகாராணி! அவரைக் காப்பாற்றுங்கள்! ஐயோ! என்னை நம்பியல்லவா இந்த ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டார்? மகாராணி! காப்பாற்றுங்கள்” என்று கதறினாள்.

மகாராணியின் உள்ளத்தில் பரிதாபம் சிறிதும் எழ வில்லை. “நீதான் வளையல் அனுப்பி அவனை இங்கு வரவழைத்தாய் ரஜனி! அவனை நீதான் காப்பாற்ற வேண்டும்” என்றாள் மகாராணி.

“வழியைக் காட்டுங்கள் மகாராணி! எதைச் சொன்னாலும் செய்கிறேன்” என்று மனமுடைந்து ரஜனி கதறினாள்.

“ஜஸ்வந்தசிம்மனை நீ மணக்க வேண்டும்! அவன் கட்டும் தாலி உன் கழுத்தில் ஏறின மறுகணம் அமரன் விடுதலை அடைவான். இல்லாவிட்டால்… அதுவும் ஒரு விதத்தில் விடுதலைதான். அது இன்று பிற்பகலே நடக்கும்” என்றாள் மகாராணி. ‘ரஜனி பூமியிலிருந்து எழுந்தாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். “உங்கள் இஷ்டப்படியே ஆகட்டும் மகாராணி! விவாகத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று ராணியை ஏறெடுத்துப் பார்த்தே சொன்னாள்.

அந்தப் பெண்ணின் தைரியத்தை ராணிகூட உள் ளுக்குள் மெச்சிக்கொண்டாள். பிள்ளை அசடாயிருந்தாலும் மேவாரை ஆளத் தனக்குப் பின்னால் இவள் பிள்ளைக்குப் பெரிதும் உதவியாயிருப்பாள் என்று ராணி அந்தச் சமயத்தில் நினைத்தாள்.

“அப்படியானால் நாளைக்கே முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் ரஜனி! உனக்கு சம்மதந்தானே!” என்றாள்.

‘ஆம்’ என்பதற்கு அறிகுறியாக ரஜனி தலையை வசைத்தாள். அவளுக்கிருந்த அத்தனை தைரியமும் ராணியும் ஜஸ்வந்தசிம்மனும் அறையை விட்டு வெளியேறியதும் பறந்துவிட்டது. ‘ஐயோ! ரஜனி! உன் அதிருஷ்டம் இவ்வளவுதானா?” என்று படுக்கைமேல் விழுந்து தேம்பித் தேம்பி அழுதாள்.

Previous articleIlaya Rani Ch10 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
Next articleIlaya Rani Ch12 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here