Home Ilaya Rani Ilaya Rani Ch12 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch12 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

72
0
Ilaya Rani Ch12 Ilaya Rani Sandilyan, Ilaya Rani Online Free, Ilaya Rani PDF, Download Ilaya Rani novel, Ilaya Rani book, Ilaya Rani free, Ilaya Rani,Ilaya Rani story in tamil,Ilaya Rani story,Ilaya Rani novel in tamil,Ilaya Rani novel,Ilaya Rani book,Ilaya Rani book review,இளையராணி ,இளையராணி கதை,Ilaya Rani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani full story,Ilaya Rani novel full story,Ilaya Rani audiobook,Ilaya Rani audio book,Ilaya Rani full audiobook,Ilaya Rani full audio book,
Ilaya Rani Ch12 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch12 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

இளையராணி – சாண்டில்யன்

அத்தியாயம் – 12 ராகியின் பிச்சைக்காரன்கள்

Ilaya Rani Ch12 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

ராஜபுதனத்திலேயே வெகுகாலம் வசித்து அங்குள்ள ஜனங்களின் பழக்க வழக்கங்களில் பெரிய ஆராய்ச்சிகள் செய்த கர்னல் டாட், ராகிப் பண்டிகை யைப்பற்றிப் பெரிதும் புகழ்ந்து எழுதுகிறார். ‘கஷ்டப்படும் பெண்களைக் காப்பாற்றுவதற்கென்றே ஒரு பண்டிகை; அதில் பெண்களுக்குத் தரப்படும் சுதந்திரம், அதில் ராஜபுத்திர வீரன் காட்டும் தன்னலமற்ற வீரம், இதற்கிணை நாகரிகம் மிகுந்ததாகச் சொல்லப்படும் ஐரோப்பாவின் எந்த நாட்டுச் சரித்திரத்திலும் காண முடியாது’ என்று டாட் சொல்லுகிறார். சில சமயங்களில் பெண்கள் தங்கள் வளையல்களைத் தோழிகள் மூலம் அனுப்பிவிடுவார்கள்; தாங்கள் யாருக்காகச் சண்டை போடுகிறோம் என்பதை அறியாமலே ராஜபுத்திரர்கள் உதவிக்கு வருவார்கள்; பிரதிபலனாக அந்தப் பெண்ணின் முகத்தைக் காணும் பாக்கியங் கூடச் சில சமயம் அவர்களுக்குக் கிட்டாது’ என்று ‘டாட் தம்மையும் மறந்து புகழ்ந்திருக்கிறார்.

அத்தகைய ராகிப் பண்டிகையும் வந்ததும், ‘சாதாரண நாளில் அரசர் மாளிகையில் திருமணமென்றால், டங்கா பேரி, மேளச் சத்தங்கள் ஊரைப் பிளந்து விடும்! ஆனால் ராகிப்பண்டிகையன்று ஊரில் கிளம்பிய சத்தம் அரண்மனை மேளத்தைக் காதில் கேட்க முடியாமல் அடித்தது. எங்கு பார்த்தாலும் பண்டாக்களின் பஜனை கோஷமும் எல்லாத் தெருக்களிலும் பிச்சைக காரர்கள் பாடிய நாமாவளிகளும் காதைப் பிளந்தன. குதிரை வீரர்கள் அதிவேகமாகத் தெருக்களில் பறந்து சென்றனர். பெரிய வெள்ளிச் சிலம்புகளை அணிந்த பெண்கள் கூட்டங் கூட்டமாகத் தெருக்களில் நடப்பதால் எற்பட்ட கலீர் கலீர்’ என்ற ஒலி பூமாதேவியே எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டதுபோல் நாலா திசைகளிலும் பரவலாயிற்று.

இளையராணி தன் கனவைப் பூர்த்தி செய்வதற்கும் அவசியமான ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்து கொண்டிருந்தாள். உள்ளே மணப்பந்தல் ஜோடிக்கப் பட்டிருந்த போதிலும் அரண்மனை வாயிலில் சாவலைப் பலப்படுத்தியிருந்தாள். கோட்டை வாசலைத் திறந்து வையுங்கள். பிச்சைக்காரர், பண்டாக்கள் இவர்களைத் தடை செய்ய வேண்டாம். ஆனால் சந்தேகப்படும்படியான ஆசாமி யார் வந்தபோதிலும் உடனே கைது செய்து விடுங்கள்” என்று உக்காவிட் மருந்தாள். உள்ளே புரோகிதர்களின் வேத கோஷமும் பலமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. வெளியே பிச்சைக்காரர்கள் கூட்டங் கூட்டமாக அரண்மனைக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தார்கள்.

அரண்மனை மண்டபத்தில் ஒரு தூணுக்கருகில் பெரிய கொப்பரை. அது நிறையத் தானியங்களை வைத்திருந்தார்கள். மகாராணி தன் இரு கைகளாலும் தானியத்தை வாரித் தானம் செய்து கொண்டிருந்தாள்.

எந்த ராஜாத்தியாக இருந்தாலும் இம்மாதிரிப் பண்டிகைக் காலங்களில் அவள் சாதாரண கிருகணியாகி விடுகிறாள். ஏழைகள் அநுஷ்டிக்கும் அத்தனை தர்மத்தையும் அவர்கள் அநுஷ்டிக்கத்தான் வேண்டும். உயர்ந்ததான ஹிந்து சமூகத்தில் இந்த தர்மங்கள் கையாளப்பட்டு வந்ததற்குச் சரித்திரத்தில் ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன.

ராணி பிச்சை போட்டுக் கொண்டிருந்த ‘பிச்சைக்காரர்கள் மேலும் மேலும் வந்து கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் சேனாதிபதி வந்து அம்மணி! கல்யாணம் நடக்காது போலிருக்கிறதே என்றான்.

“ஏன்?” என்றாள் ராணி. பிச்சை போடுவ நிறுத்திச் சிறிது நிமிர்ந்து நின்றாள்.

“கொஞ்சம் உள்ளே வந்தால் சொல்கிறேன்” என்றான் சேனாதிபதி.

இருவரும் உள்ளே சென்றார்கள். ”ராம், ராம், ஹரேராம்” என்று பண்டாக்கள் கோஷித்துக் கொண்டே அரண்மனை வெளிச்சதுக்கத்தில் நிரம்பிக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே சென்றதும், “மீண்டும் என்ன தொல்லை?” என்று ராணி கேட்டாள்.

“மணப்பந்தலுக்கு வருமுன்பு ராஜகுமாரி அமரனைப் பார்க்க விரும்புகிறாள். அவனிடம் ஜஸ்வந்தனை மணக்கும் உண்மைக் காரணத்தைத் தெரிவித்த பின்புதான் மணப்பந்தலுக்கு வருவாளாம். பாவம்! ஜஸ்வந்தசிம்மன் வெகு நாழியாக மணையில் உட் கார்ந்து புரோகிதர்கள் போடும் புகைச்சலில் கண்ண விந்து கஷ்டப்படுகிறார்” என்று சேனாதிபதி பரிதாபப் பட்டான்.

“அமரனை நாம் எங்கிருந்து கொண்டு வருவது சேனாதிபதி?” என்றாள் இளையராணி. அந்த வழி தெரியாமல்தான் சேனாதிபதியும் விழித்தான்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பது தான் பழமொழி. சேனாதிபதியின் புளுகு மறு நாளே அம்பலத்துக்கு வரும் என்பதை ராணி முதலில் எதிர்பார்க்கவில்லை.

அமரன் அகப்பட்டுவிட்டதாகப் பொய் சொல்ல ரஜனியைக் கல்யாணத்துக்குச் சம்மதப்படுத்தி விடுவோம். விஷயம் மீறிய பிறகு ராஜகுமாரி என்ன செய்ய முடியும்?” என்று யோசனை சொன்னவன் சேனாதிபதி தான். “நீங்கள் ராஜகுமாரியிடம் பேசிக் கொண்டிருப்பது போல் இருங்கள்; நான் ஆளிடம் விஷயத்தைச் சொல்லியனுப்புகிறேன்’ என்று சேனாதிபதிதான் முதல் நாள் நாடகத்தை நடத்தி வைத்தான். அந்த மோச வலையில் ரஜனியும் சிக்கிக் கொண்டாள். ஆனால் அது இப்படித் திரும்பும் என்று சேனாதிபதி கண்டானா?

ராணியும் ஒன்றும் தெரியாமல் விழித்தாள். தோல்வியால் ஏற்படும் கோபத்தையெல்லாம் சேனாதிபதியின் மீதிலேயே திருப்பினாள். “சேனாதிபதி! உன்னை நம்பி இந்த ஏற்பாட்டில் நான் இறங்கினேனே, என்னைத்தான் சொல்லவேண்டும். சீ, என் எதிரில் நிற் காதே போ” என்று கூச்சலிட்டாள்.

வெளியே கூச்சலிட்டுக் கொண்டிருந்த பிச்சைக் காரர்கள் உள்ளேயும் நுழைந்தார்கள்.

“யாரடா இவர்களை உள்ளே விட்டார்கள் என்று ராணி அதட்டிக் கொண்டிருக்கும்போதே தெருக்களில் குதிரைகளின் காலடிச் சத்தம் பலமாகக் கேட்டது. பக்கத்தில் தங்கக் கொப்பரையில் தானியாகளை ஏந்தி நின்ற வேலைக்காரன் பிச்சைக்காரரைப் பார்த்ததும் மகாராணியிடம் கொப்பரையை நீட்டி சான. அதிலிருந்து தானியத்தை எடுத்து ஒரு பிச்சைக் காரனுக்குப் போடப் போன ராணி அவள் முகத்தை உற்றுப் பார்த்தாள். எங்கோ அவனைப் பார்த்த ஞாபகம் வந்தது.

‘யார் இவனா!” என்று உள்ளே எழுந்த கேள்வியில் ஏற்பட்ட திகில் அவள் முகபாவத்திலும் பிரதிபலிது. சேனாதிபத்ததி, கோட்டைக் கதவைச் சாந்த உத்தரவு போடுங்கள். சதி நடக்கிறது! சீக்கிரம் ‘என்று கூவினாள்.

இதற்குள் வெளியே குதிரைகளின் காலடிச் சத்தம் வலுத்தது. “ராதோர்கள்! ராதோர்கள்” என்ற கூச்சலும் கேட்டது.

“கோட்டைக் கதவை மூடச் சமயமில்லை மகாராணி” என்று எதிரேயிருந்த பிச்சைக்காரன் இடி இடி என்று சிரித்தான். “யார்? ரகூ! அமரன் வேலைக்காரனா? நீ பிழைத்துவிட்டாயா?” என்று ராணி மிரண்டாள்.

”உங்கள் துரதிருஷ்டம், பிழைத்து விட்டேன்!” ‘என்று ரகு சொன்னான்.

“இவனைப் பிடித்துக் கட்டுங்கள்” என்று ராணி உத்தரவிட்டாள். ரகு மீண்டும் சிரித்தான். அவள் திரும்பிப் பின்னாலிருந்த மண்டபத்தில் நடந்துகொண்டிருந்த விபரீதத்தைக் கண்ட பிறகு தான் அவன் சிரிக்கும் காரணத்தை உணர முடிந்தது.

பிச்சை வாங்க வந்தவர்கள் தங்கள் நீள அங்கிகளி லிருந்து பிச்சுவாக்களை உருவிக் காவல் காத்து நின்ற வீரர்களை நிராயுதபாணிகளாக்கிக் கொண்டிதார்கள்.

“மகாராணி! அவர்கள் அத்தனை பேரும் சிசோதய வீரர்கள். அவர்களை அம்பர் நாட்டுப் படை முழுவதும் வந்தாலும் சமாளிக்க முடியாது” என்றான் ரகு.

ராணி சுற்றும் முற்றும் பார்த்தாள். “மகாராணி, எங்கு பார்த்தாலும் பிரயோசனம் இல்லை. உங்கள் கட்டளையைக் கேட்கக்கூடிய ஆள் இப்போது அரண் மனையில் கிடையாது” என்றான் ரகு.

இதற்குள் ராதோர் வீரர்களும் வந்து விட்டார்கள். கோட்டைச் சதுக்கத்தில் நுழைந்த குதிரைகனின் “சட சட’வென்ற குளம்புகளின் சப்தமும் நிஜப் பிச்சைக் காரர்களின் பஜனைச் சத்தமும் சிசோதயர்களின் வெற்றிச் சிரிப்புமாக அரண்மனையில் குழப்பம் பெரிதும் அதிகரித்து விட்டது.

ராதோர் வீரர்களால் அரண்மனை சூழப்பட்டது. உள்ளே சிசோதயர்கள் ஆதிக்கம்! இந்த நிலைமையில் மகாராணியின் செல்வாக்கைப் பற்றி கேட்க வேண்டிய தில்லை. இருந்த போதிலும், அமரன் எங்கே?” என்று விசாரித்தாள். அந்தச் சமயத்திலும் அவளுக்கிருந்த நிதானத்தையும் மன உறுதியையும் கண்டு ரகு ஆச்சரியப் பட்டான்.

“இதோ அம்மா!” என்று சொல்லிக்கொண்டே குதிரையிலிருந்து இறங்கினான் அமரன்.

“அமரா! இது வெற்றிதான். சண்டையில் ஒருமுறை ஓடினாயல்லவா? நீயும் க்ஷத்திரியனா?” என்று சீறினாள் ராணி.

“ஓடாமலிருந்தால் உங்களுக்குச் சௌகரியமா யிருந்திருக்கும். என்ன செய்யட்டும் மகாராணி என் கெளாவம் மாத்திரம் அபாயத்தில் இருந்தால் எதிர்க்தே சன்டை செய்து மாண்டு உங்கள் மனதிற்குச் சந்தே வக்கை அளித்திருப்பேன். ஆனால், ஒரு பெண்ணின் ‘கௌரவமும் கலந்திருந்தது மகாராணி!” என்று பையிலிருந்த இரண்டு வளையல்களை எடுத்துக் காட்டினான் அமரன். சிசோதயர்களின் கைதியாயிருந்த சேனாதிபதி ‘ஜெயபாலன், தான் முதல் முதல் அந்த வளையல்களைப் பார்த்ததிலிருந்து நடந்த சம்பவங்களை ‘மனத்தில் கோக்க ஆரம்பித்தான். அவன் கதையை ‘முடிப்பதற்குள் அரண்மனை அமரன் வீரர்களின் வசமாகி விட்டது.

அடுத்த சம்பவங்கள் தாம் ராகிப் பண்டிகையின் விமரிசையை நினைப்பூட்டுகின்றன. பிரம்மாண்டமான மேவார் மாளிகையில் வீரர்கள் அணிவகுத்து நின்றார்கள். இளவரசரும் அம்பர் அரசகுமாரியும் மெத்தைப் படிகளிலிருந்து இறங்கி வருகிறார்கள். அவர்களைக் கண்டவுடன், “மகாராஜா! பராக்’ என்ற ராதோர், சிசோதய வீரர்களின் வீர கர்ஜனை, ராஜ தம்பதிகள் கீழே வந்ததும் வீரர்கள் வாள்களை ஒருமிக்கத் தாழ்த் தும் அபூர்வக் காட்சி. இடையே நுழைந்த யௌவன மாதர் ஆரத்தி சுற்றுகிறார்கள். வெளியே வந்ததும் பண்டாக்கள் ஆசி… இத்தனை வைபவங்களுக்கிடையே அமரன் பிரயாணமாவதை ராஜா ஜெயசிம்மன் உப்பரிகையிலிருந்து களிப்புடன் பார்க்கிறார். வழக்கம்போல் இளைய ராணி அவர் பக்கத்தில் இல்லை. ஆனால், அரசர் அப்பொழுது பட்டமகிஷியைப் பற்றித்தான் நினைத்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்.
இரண்டாம் முறையாக அந்தப் பழைய மூன்று பிரயாணிகள் மட்டும் சந்திரகிரித் தடாகத்தை நோக்கம் பயணமானார்கள். இளவரசர் உத்தரவுப்படி அவர்களை யாரும் பின் தொடரவில்லை.

“ராதோர், சிசோதய வீரர்களை ஏன் வேன்டா மென்று சொல்லிவிட்டீர்கள்?” என்று ரஜனி, கேட்டாள். அப்பொழுது இருவர் குதிரைகளும் ஹாராவளிக் தொடரில் போய்க் கொண்டிருக்கின்றன. ரகு முன்னால் போய்க் கொண்டிருந்தான்.

“இரண்டு காரணங்கள்” என்றான் அமரன்.

“என்னவோ?” என்றாள் ரஜனி.

“முதலில் தாயிடமிருந்து புறப்படும்போது எப்படி தனியாகப் புறப்பட்டேனோ அப்படியே மீண்டும் படாடோபமில்லாமல் போய் அவளைப் பார்க்க வேண்டும் என்பது ஒரு காரணம்….”

“உம்…”

“ஏகக் கும்பல் இருந்தால் நமக்கு இடைஞ்சலா யிருக்குமே என்பது மற்றொரு காரணம்” என்று சொல்லிக்கொண்டே அமரன் அவள் கன்னத்தைத் தொட்டான்.

“ஐயோ, இதென்னப் பட்டப் பகலில்! அதோ ரகு வேறே….” என்று எச்சரித்தாள் ரஜனி. அந்த முரடன் அதற்கெல்லாம் மசியவில்லை.

இதற்குள் சந்திரகிரித் தடாகமும் வந்துவிட்டது. இங்கே சற்று இளைப்பாறுகிறீர்களா? நான் போய்ச் சத்திரத்தில் இடம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்றான் ரகு. அவன் தன்னைப் பார்த்து நகைக்கிறான் என்பது தெரிந்ததும் தெரியாதவன் போல, ஆமாம் ரகு! பார்த்துவிட்டு வா” என்று அமரன் அவனைத் துரத்தினான்.

ரஜனியும் அமரனும் தடாகத்தின் ஓரமாயிருக் ‘செடி மறைவில் இளைப்பாற உட்கார்ந்தார்கள். உக்கார்ந்த அமரன் சும்மாயிருக்கக் கூடாதா?

தெரியுமே எனக்கு. இதற்காகத்தான் அந்தரகுவையும் அனுப்பிவிட்டீர்கள். ஐயோ…. அப்படி பிடிக்காதீர்கள்….வலிக்கிறது… இன்னும் முரட்டுத்தன போகவில்லையே,’ என்று பொய்க் கோபம் கலந் உவகை ததும்பும் சொற்கள் ரஜனியின் வாயிலிருந்த வெளிவந்தன.

இளைய ராணி முற்றும்

Previous articleIlaya Rani Ch11 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch1 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here