Home Ilaya Rani Ilaya Rani Ch3 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch3 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

77
0
Ilaya Rani Ch3 Ilaya Rani Sandilyan, Ilaya Rani Online Free, Ilaya Rani PDF, Download Ilaya Rani novel, Ilaya Rani book, Ilaya Rani free, Ilaya Rani,Ilaya Rani story in tamil,Ilaya Rani story,Ilaya Rani novel in tamil,Ilaya Rani novel,Ilaya Rani book,Ilaya Rani book review,இளையராணி ,இளையராணி கதை,Ilaya Rani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani full story,Ilaya Rani novel full story,Ilaya Rani audiobook,Ilaya Rani audio book,Ilaya Rani full audiobook,Ilaya Rani full audio book,
Ilaya Rani Ch3 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch3 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

இளையராணி – சாண்டில்யன்

அத்தியாயம் – 3 வஞ்சக வரவேற்பு

Ilaya Rani Ch3 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

அரசகுமாரன் சொன்ன வழியைக் கேட்டதும் அசந்து போனான் சேனாதிபதி ஜெயபாலன். போதாது காலம் தன் மென்னியை இறுகப் பிடிக்கிறது என்றும் தீர்மானித்துக் கொண்டான். “எனக்கு அப்படி அரண்மனையில் ஆபத்திருந்தால் அம்பர் அரசகுமாரியை நீரே இங்கு அழைத்து வந்து விடும்” என்ற அரசகுமாரன் சொற்கள் அவன் இதயத்தின்மீது நெருப்புத் துண்டங்களென விழுந்தன. ‘இவனைப் போக வேண்டாமென்று சொன்னால் நம் கழுத்திலேயே கத்தி வைக்கிறானே’ என்று நினைத்த சேனாதிபதி, உள்ளக் குமுறலை மெல்ல அடக்கிக் கொண்டு, “இளவரசர் ஒரு முக்கிய விஷயத்தை மறந்துவிட்டதாகத் தெரிகிறது” என்றான் முடிவில்.

சந்தேகம் நிரம்பிய அரசகுமாரன் விழிகள் சேனாதி பதியை ஏறெடுத்து நோக்கின. “என்ன அந்த முக்கிய விஷயம்?” என்று உதடுகள் கேட்டன துடிப்புடன்.

“நான் இளையராணியை எந்தவிதத்திலும் கட்டுப் படுத்த முடியாது…” என்று சேனாதிபதியை மடக்கிய இளவரசன், “இளைய ராணிதான் உம்மைக் கட்டுப்படுத்தலாம் போலிருக்கிறது!” என்று வினவினான்.

சேனாதிபதி மனதைத் திடம் செய்துகொண்டு, “ஆம் ராஜகுமார்! கட்டுப்படுத்தலாம். அவர்கள் ராணி, நான் ஊழியன்” என்று குறிப்பிட்டான்.

“ஊழியர்கள் எதற்கும் கட்டுப்பட வேண்டியது தானா?” வினவினான் அரசகுமாரன் இகழ்ச்சியுடன்.

“ஆம், ஊழியன் நானாகவும், கமலாதேவியார் இளைய ராணியாகவும் இருக்கும்வரை.”

“அப்படியா!”

“ஆம்.”

“இளைய ராணிக்குக் கட்டுப்படாமலிருக்க முடியாது.”

“ஏன்?”

“அரசன் எவ்வழி, அவ்வழி ஊழியர்.”

“சொல்வது விளங்கவில்லை.”

“மன்னரே இளையராணிக்குக் கட்டுப்பட்டு நடக்கும்போது ஊழியன் நிலை என்னவென்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.”

இதைக் கேட்ட அரசகுமாரன் கண்களில் கோபாக் கினி தெரிந்தது. “சேனாதிபதி!” என்ற கடுமையான சொற்கள் உக்கிரத்துடன் உதிர்ந்தன அவன் உதடுகளிலிருந்து.

அந்தக் குரல் சேனாதிபதியை நடுங்க வைத்தது. “இளவரசே….” என்று பதில் சொல்லத் துவங்கி மென்று விழுங்கினான்.

“நான் இளவரசன் என்பதில் உமக்குச் சந்தேகமில்லை!” என்றான் அரசகுமாரன்.

“அதெப்படி இருக்க முடியும்? என்றான் சேனாதிபதி, ஏதோ புது அனர்த்தம் உருவாகிறதென்ற நினைப்பில்.

இளவரசன் என்ற முறையில் நான் ஆணையிட்டால் என்ன செய்வீர்?” என்று அரசகுமாரன் வினவினான்.

“சக்தியிருந்தால் நிறைவேற்றுவேன்.”

“அப்படியானால் நூறு சிசோதய வீரர்களை அமைத்துக்கொண்டு அரண்மனை செல்லும். சென்று அம்பர் அரசகுமாரியை அழைத்து வாரும்.”

சேனாதிபதி சிந்தித்தான். இரண்டு நாளாவது அவ காசமிருந்தால் படைப்பிரிவை வெளி ஊருக்கு அனுப்பி யிருக்கலாம். இளைய ராணி அந்த யோசனையைச் சொன்னதும் சொல்லாததுமாக இளவரசன் வந்து விட்டதால் அது பலிக்கவில்லை. ஆகவே என்ன செய்வதென்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து, “இளவரசே, இந்தக் கட்டளையை என்னால் நிறைவேற்ற முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறினான்.

“ஏன்?” என்று வினவினான் அமரசிம்மன் கோபத்துடன்.

‘”அரசரில்லாத சமயத்தில் அரண்மனைக்குள் படை வீரருடன் சென்று பலவந்த அலுவல்களில் ஈடுபடுவது முறையல்ல. அரசர் திரும்பி வந்து அதை அறிந்தால் என் தலை போய்விடும். தகாததைச் செய்யச் சொல்வது தங்களுக்கும் அழகல்ல” என்றான் சேனாதிபதி.

அவன் கூறியதில் நியாயமிருக்கிறதென்பதை உணர்ந்து கொண்ட அரசகுமாரன், நியாயம் சேனாதிபதி, அப்படியானால் ஒன்று செய்யும்” என்றான்.

“என்ன இளவரசே?”

”நீர் என்னுடன் வாரும் அரண்மனைக்கு…”

“நானா!”

“ஆம்.”

“என்னைத் தங்கள் சிற்றன்னையார் அங்கேயே வெட்டிப் புதைத்து விடுவார்கள்.”

அரசகுமாரன் இதழ்களில் வெறுப்பு அரும்பியது. பசேனாதிபதி! உம்மைப்பற்றி நான் கேட்ட தகவல்களில் எனக்கு நம்பிக்கை அதிகமாகிறது. மேவாரின் இளவரசனுக்கு உதவ பகிரங்கமாக மறுக்கிறீர். இதற்குத் தக்க பலனை வெகு சீக்கிரம் அடைவீர். ஒன்று மட்டும் சொல்கிறேன், உம்மைப்பற்றி நான் கேள்விப்படும் விஷயங்களில் ஏதாவது துளி உண்மை யிருப்பதாக நிரூபிக்கப்பட்டாலும் உம்மைக் கொல்லாமல் விடமாட்டேன். வீரர்கள் மரணத்தை அளிக்க மாட்டேன். மக்கள் காறித் துப்பும்படிக்கு உம்மை இந்த நகர மத்தியில் கட்டி வைத்து உமது தோலை உரித்து உப்பைத் தடவுவேன்… நினைவிருக்கட்டும்” என்று சீறிவிட்டு மாடிப்படிகளில் தடதடவென்று இறங்கிச் சென்றான்.

சேனாதிபதி திகில் வசப்பட்டு நின்றான். வெளியே டேய் ரகு! கொண்டா புரவியை” என்ற அமரனின் சீற்றம் நிரம்பிய கூச்சல் கேட்டது. அடுத்த நிமிடம் இரண்டு புரவிகள் தடதடவென ராஜ வீதியில் ஓடும் ஒலி காதில் விழுந்தது. வெளியே சென்று சாளரத்தின் மூலம் எட்டிப் பார்த்தான் சேனாதிபதி, அரசகுமாரன் புரவியும் அவன் வீரனின் புரவியும் வெகு வேகமாக வெகு தூரம் சென்று விட்டதைக் கவனித்துப் பெருமூச் செறிந்தான். அந்தப் பெருமூச்சுடன் அரசகுமாரன் தன்னைப்பற்றிக் கூறிய விஷயங்களும் அவன் மனத்தில் எழுந்தன. எழுந்ததால் ஒரு முடிவுக்கும் வந்தான் சேனாதிபதி, தனது பிற்காலம் இளைய ராணியின் பிற்காலத்துடன் பிணைக்கப்பட்டுவிட்டதை உணர்த்து கொண்டான். இத்தனைக்கும் அரசன் கோழைத்தனம் தான் காரணமென்பதையும் புரிந்து கொண்டான். அதனால் ஏற்பட்ட கிளர்ச்சியிலிருந்தும் சஞ்சலத்திலிருந்தும் விடுதலை பெற அந்த அறையைத் தாண்டி அடுத்த அறை சென்று அங்கிருந்த குவளையிலிருந்து மதுவை அருந்தினான். மதுவை அருந்திவிட்டுச் சிந்தனையில் இறங்கினான். பிறகு கைதட்டி இரு வீரர்களை அழைத்து அரசகுமாரன் நடவடிக்கை ஒவ் வொன்றையும் கவனித்துத் தனக்கு அவ்வப்பொழுது தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டான். பிறகு போதை தலைக்கேற நித்திரையிலாழ்ந்தான்.

சேனாதிபதி நித்திரை செய்த அதே சமயத்தில் அரண்மனையை நெருங்கிவிட்ட அமரசிம்மன், தன் தாய் ஆட்சி செய்ய வேண்டிய சிசோதயர்களின் அந்த அரண்மனையை ஏறெடுத்து நோக்கினான். பெரிய வீரச்செயல்களுக்கும் வீரர்களுக்கும் இருப்பிடமாகத் திகழ்ந்த அந்த அரண்மனை, அரசனின் சரச வாழ்க்கைக்கும் சதிக்கும் இலக்காகி ராஜபுதனத்துப் பாடகர்களின் ஏளனத்துக்கும் பரிதாபத்துக்கும் காரணமாகி விட்டதை நினைத்து மனம் நொந்து சில விநாடிகள் புரவிமீது நிலைத்து உட்கார்ந்திருந்தான். பிறகு அரண்மனை பெருவாயிற் கதவுகளை நோக்கிப் புரவியை நடத்தினான். கோட்டை மீதிருந்த வீரர்கள், வந்தவன் யாரென்பதைக் கண்டதும் கதவுகளைத் திறந்து விடவே, புரவி அரண்மனையின் உட்பாதையில் பாய்ந்து சென்றது.

அரண்மனைப் பகுதிகளை அவன் சிறு வயதில் பார்த்ததனாலும் ஓரளவு அவனுக்கு அதன் அமைப்பு சநதையில் உறைந்து கிடந்தது. ஆகவே நேராக அரண்மனையின் பிரதான கட்டட வாயிலில் சென்ற புரவியிலிருந்து கீழே குதித்தான். அவன் புரவியை இரண்டு வீரர்கள் பிடித்துக்கொண்டு சென்றார்கள். தனது வீரனை வாயிலிலேயே இருக்கக் கட்டளையிட்ட அமரன் அரண்மனைப் படிகளில் ஏறிச் சென்று அங்கிருந்த காவலரிடம், “நான் இளையராணியாரைப் பார்க்க வேண்டும்” என்று அறிவித்தான். காவலர் அவனுக்கு எந்தத் தடையும் விதிக்காமலும் பதிலேதும் சொல்லாமலும், “இப்படி வாருங்கள், ராணியார் அந்தப்புரத்திலிருக்கிறார்கள்” என்று கூறி அவனை அழைத்துச் சென்றார்கள்.

காவலர் போக்கு வியப்பாயிருந்தது அமரசிம்மனுக்கு. சிறுவயதில் தன்னைப் பார்த்த காவலர் எப்படி கன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று எண்ணிப் பார்த்தான். தன்னை அவர்கள் யாரென்று உணராதிருந்தால் தனக்கு அத்தனை மரியாதை காட்டவும் முடியாது என்று தீர்மானித்துக்கொண்டான், தான் வருவது இளையராணிக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டுமென்றும் அப்படித் தெரிந்திருந்தால் அது சேனாதிபதியின் மூலமாகத்தான் தெரிந்திருக்க வேண்டுமென்றும் முடிவு செய்து கொண்டு காவலனைப் பின்பற்றிச் சென்றான். இப்படி அரண்மனையின் பல கட்டுகளைத் தாண்டிச் சென்ற அமர சிம்மனுக்குக் காவலன் ஒரு பெரிய அறையைச் சுட்டிக் காட்டி உள்ளே செல்லுங்கள்” என்று கூறினான்.

அந்த அறைக்குள் சென்ற அமரசிம்மனை எதிரே ஆசனத்தில் அமர்ந்திருந்த கமலாதேவி, “வா அப்பா வா” என்று அன்பொழுக வரவேற்றாள்.

அமரசிம்மன் கண்கள் சிற்றன்னையை ஏறெடுத்து நோக்கின. சிற்றன்னையின் அழகைக் கண்டு அவனே பிரமித்துப் போனான். அத்தகைய அழகிற்குத் தந்தை மனத்தைப் பறிகொடுத்ததில் விந்தையேதுமில்லை என்றே எண்ணி, ஆனால் அந்த அழகில் நஞ்சும் கலக திருந்ததைக் கண்டான் அமரன். கமலாதேவி அழகிய வஞ்சகக் கண்கள் அவன் கூரிய விழிகளுடன் கலந்தன ஒரு விநாடி. மறுவிநாடி மலர்ந்தன. அவள் இதம்களில் மயக்கப் புன்முறுவலொன்றும் படர்ந்தது. ஆண்டுகள் ஓடி எத்தனை பெரியவனாகிவிட்டாய், இப்பொழுதுதான் உனக்குச் சிற்றன்னையின் நினைப்பு வந்ததா?’ என்ற இன்பச் சொற்கள் அவள் இதழ்களிலிருந்து படர்ந்தன. “வா, இப்படி உட்கார்” என்று தன் பக்கத்தில் இடத்தையும் காட்டி, மஞ்சத்தில் சிறிது நகர்ந்து உட்கார்ந்தாள் இளைய ராணி.

அந்த வஞ்சக வரவேற்பைக் கண்ட அமரன் இதழ் களிலும் முறுவல் படர்ந்தது.

Previous articleIlaya Rani Ch2 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
Next articleIlaya Rani Ch4 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here