Home Ilaya Rani Ilaya Rani Ch7 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch7 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

98
0
Ilaya Rani Ch7 Ilaya Rani Sandilyan, Ilaya Rani Online Free, Ilaya Rani PDF, Download Ilaya Rani novel, Ilaya Rani book, Ilaya Rani free, Ilaya Rani,Ilaya Rani story in tamil,Ilaya Rani story,Ilaya Rani novel in tamil,Ilaya Rani novel,Ilaya Rani book,Ilaya Rani book review,இளையராணி ,இளையராணி கதை,Ilaya Rani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani full story,Ilaya Rani novel full story,Ilaya Rani audiobook,Ilaya Rani audio book,Ilaya Rani full audiobook,Ilaya Rani full audio book,
Ilaya Rani Ch7 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch7 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

இளையராணி – சாண்டில்யன்

அத்தியாயம் – 7 சேனாதிபதியின் சதி

Ilaya Rani Ch7 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

அமரன் சிறிது நிதானித்தான். பிரளயமாகப் பெரு சிக்கொண்டிருந்த இயற்கை உணர்ச்சிகளை மனோதிட மாகிற அணையைக்கொண்டு தடைசெய்ய முயன்றான். பாம்பரையாக அவன் வம்சத்தில் ஊறி வந்திருக்கும் உன்னத உணர்ச்சிகளெல்லாம் அவன் இன்ப வேட்கையோடு போராட எழுந்து நின்றன. “அமரா! உன் பாதுகாப்பைக் கோரி உன்னை நம்பி வந்த ஒரு பெண்ணின் மீதா இச்சை வைக்கிறாய்? இதுதானா நீ இத்தனை நேரம் பேசிய க்ஷத்திரிய தர்மத்தின் அர்த்தம்? வேண்டாம். விடு அந்தக் கையை” என்று உள்ளூர ஓர் எச்சரிக்கை எழுந்து ஒலித்தது. அமரன் கையை இழுத்துக் கொண்டிருப்பான். அவள் விரல்களுடன் மெல்ல மெல்ல விளையாடிப் பின்னிக் கொண்டிருந்த விரல்களைக் கழற்றி எடுக்க முயன்றான். ஆனால் அவள் விரல்கள் அதற்கு இடம் கொடுத்தால்தானே!

கொடி பற்றிக்கொண்டு ஏறுவதற்காகத்தான் கழியை நடுகிறோம். கொடி படர்ந்து கழியைச் சுற்றி வளைத்துப் பலமாகப் பிடித்துக்கொண்ட பிறகு பூமியில் ஊன்றிய கழி உளுத்து ஆடிப்போய் விட்டாலும் கொடியின் பற்றுதலிலிருந்து அது விடுபட முடிவதில்லை அல்லவா? அந்த நிலைமைதான் அமரனுக்கும் ஏற்பட்டது அவன் சொந்த தர்மத்தை நினைத்து அகல முயன்ற சமயத்திலும் அவள் விடுவதாயில்லை.

“இவரைவிட எனக்கு வேறு யார் ஆதரவு? என்று நனைத்தாள். இளைய ராணியிடமிருந்து தப்ப இவ்வளவும் செய்தேன், ஆகையால் அவளுக்கு உடந்தையாக மேவார் சிம்மாசனத்தை அபகரிக்கச் சூழ்ச்சி செய்யும் தந்தையிடமும் போக முடியாதே. எங்குதான் செல்வது?” என்ற யோசனைகள் அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. “அமரன் அழைத்துச் செல்லும் இடத்திற்கும் போகலாம். மேவாரின் பட்டமகிஷியிடம் ‘போகலாம். அப்புறம் என்ன?” இந்தக் கடைசி கேள்விக்கு விடை தெரியாமல் திகைத்தாள்.

மேவாரின் பட்டமகிஷியின் பணிப்பெண்ணாகச் செல்வதை அந்தக் காலத்திலிருந்த ராஜபுத்ர ஸ்திரீகள் ‘பெரிய கௌரவமாக மதித்து வந்தார்கள். ஆனால். ரஜனிக்குப் பட்டமகிஷியின் நிழல் அவ்வளவு ஆறுதலைத் தருவதாகத் தோன்றவில்லை. தான் ஏதோ பெருத்த அனாதையாகி விட்டதாக நினைத்தாள். இம்மாதிரி சமயங்களில் பெண்கள் மனதுக்கு சாந்தியை அளிக்கக் கூடியது அவள் கை பிடித்த புருஷனின் ஆதரவுதான். அந்த ஆதரவைத்தான் ரஜனியின் மெல்லிய விரல்கள் கோரின. அவற்றின் அன்புப் பிணைப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள அமரனின் விரல்கள் சக்தியற்றவையாயின. சற்றுமுன் கத்தியை உரமாகப் பிடித்த அதே விரல்கள் அவள் மலர்க்கரத்தில் கூசி நடுங்கி என்னென்னவோ இன்ப வேதனைகளை அனுபவித்தன. தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடிவாக முயன்றான். மௌனத்தால் ஏற்பட்ட உணர்ச்சிகளைப் பேச்சினால் திருப்பப் பார்த்தான்.

“ராஜகுமாரி! சத்திரத்துக்கு அப்பொழுதே போன ரகு ஏன் இன்னும் திரும்பவில்லை?” என்று கேட்டான். என்ன அர்த்தமற்ற கேள்வி! ரகு சத்திரத்துக்குப் போன விஷயம் இவனுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவு தானே ராஜகுமாரிக்கும் தெரியும்? அசந்தர்ப்பமான நிலைமைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள மனிதனுக்கு ‘உதவுவதற்கென்றே கடவுள் இத்தகைய அர்த்தமற்ற கேள்விகளைச் சிருஷ்டித்திருக்கிறார் போலும்!

“போன இடத்தில் எப்படியிருக்கிறதோ? பார்த்துக் எண்டுதானே வர வேண்டும்?’ என்று ரஜனி ஆறுதல் சொன்னாள்.

“சத்திரம் வெகு அருகில்தானிருக்கிறது, ராஜகுமாரி” என்று விளக்கிச் சொன்னான் அமரன்.

சத்திரம் எவ்வளவு தூரம் இருக்கிறதென்று அவன் கவலைப்படவில்லை! ஏதோ பேச்சை வளர்க்க வேண்டுமே! அதற்காக அவளுக்கு அனாவசியமான தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தான். அவளும் பதில் சொல்லவேண்டிய மரியாதைக்காக, “அப்படியா” என்று கேட்டு வைத்தாள்.

இந்தச் சங்கடத்தை நிவர்த்திக்க நல்ல வேளையாக ரகு வந்து சேர்ந்தான்.

“என்ன ரகு! சத்திரத்தில் இடம் அகப்படுமா?” என்று அவன் கேட்டான்.

“ரொம்ப கஷ்டமாகிவிட்டது ராஜகுமார்! முதலில் இடமேயில்லை என்று சிப்பந்திகள் சாதித்து விட்டார்கள்! அப்புறம் ஒரு பெரியவர்- அவரை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அவர் வந்து சிபாரிசு செய்த தன் மேல் இடங்கொடுக்க ஒப்புக் கொண்டார்கள்” என்றான் ரகு.

”சரி போகலாம் வா. குதிரைகளை அவிழ்த்துக் கொள்” என்றான் அமரன். குதிரைகளை அவிழ்த்தவுடன் ராஜகுமாரியை ஒரு குதிரையில் ஏற்றினார்கள். இரண்டு குதிரையின் கடிவாளங்களையும் பிடித்துக் கொண்டு ரகு முன்னால் நடந்தான். ரஜனி ஏறியிருந்த குதிரையின் முதுகின்மேல் ஒரு கையை வைத்துக் கொண்டு ரஜனிக்குப் பக்கத்தில் அமரன் நடந்து சென்றான். அப்படிக் குதிரைக்கு வெகு அருகில் நடந்து சென்றதால் ஓரிரண்டு சமயங்களில் அவள் கால் அமரன் மார்மேல் தாக்கியது. அவள் காலை மடக்கிக் கொள்ளப் பார்த்தாள். அவன் அதைக் கெட்டிய தன் கைகளில் பிடித்து விளையாட்டாக மார்பின்பே அணைத்துக் கொண்டான்.

அவள் ரொம்ப வெட்கத்துடன் “இதென்ன ராஜகுமார்?” என்றாள். “இதுவா? இது ஒரு ராஜகுமாரியின் கால்” என்றான் அமரன். இந்த விளையாடலில் சத்திரம் வந்துவிட்டதுகூடத் தெரியவில்லை அவர்களுக்கு.

சத்திரத்துக்கு வந்ததும் ரகு தனக்குச் சிபாரிசு செய்த பெரியவரைத் தேடினான். அவன் அகப்படவில்லை. அப்பொழுதுதான் அவர் வெளியே போனதாகவும், அவர்கள் இறங்கலாமென்றும் சிப்பந்திகள் சொன்னார்கள். சத்திரத்தின் முன் அறையில் பிரயாணிகள் இறங்கினார்கள். குதிரைகளை எதிரேயிருந்த மரத்தடியில் கட்டிவிட்டு ரகுவும் உள்ளே வந்தான்.

“ராஜகுமாரி! சற்று நேரம் இளைப்பாறுங்கள்!” என்றான் அமரன்.

“நீங்கள்?” என்று கேட்டாள் ராஜகுமாரி.

“நாங்கள் இளைப்பாறுவதற்கு இது சமயமல்லா இந்த நிமிஷத்திலும் கூட இளைய தாயார் நம்மை அழைத்துச் செல்வதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யலாம். நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லி விட்டு அமரனும் ரகுவும் கதவை மூடிக்கொண்டு வெளியே சென்றார்கள்.

ரகு சம்பந்தப்பட்ட வரையில் அமரன் சின்னக் குழந்தைதான். குழந்தை முதல் ரகுவே அமரனை வளர்த்தான். ஒவ்வொரு ராஜபுத்ரர் குடும்பத்திலும் இம்மாதிரி உண்மை ஊழியர்கள் அந்தக் காலத்தில் இருந்து வந்தார்கள். கூலிக்கு மாரடிக்கும் வேலைக்காரர்களும் ஏழையைச் சுரண்டும் எஜமான்களும் அப்பொழுது மிகவும் குறைச்சல். வேலை செய்யச் சேருபவன் குடும்பத்தில் ஒரு பாகஸ்தனாகி விடுகிறான். அவன் கலியாணம் கார்த்தி எல்லாவற்றையும் ராஜ மானே கவனித்துக் கொண்டான். எஜமான் குழந்தை குட்டுகளை வேலைக்காரன் கவனித்துக் கொண்டான். ஏதோ எஜமான், வேலைக்காரன் என்று பெயரளவில் இருந்த தாரதம்மியத்தைத் தவிர வேறு வித்தியாசமே கிடையாது.

ஆகையால் ரகு குழந்தையைப் படுக்க வைக்க ஏற்பாடுகளைச் செய்யும் தகப்பனாரைப்போல அறை வாசற்படிக்கெதிரிலிருந்த இடத்தைத் தட்டலானான்.

நான் படுத்துக் கொள்ளப் போவதில்லை ரகு! நீ வேண்டுமானால் படுத்துக்கொள்” என்றான் அமான்.

“என்ன ராஜகுமார்! ஊரிலிருந்து பிரயாணப்பட்டது முதல் இன்றுவரை கண்ணை மூடவில்லை, உடம்பு என்னத்திற்கு ஆகும்?” என்று ரகு கேட்டான்.

அமரன் பதில் சொல்லவில்லை. குழந்தையிலிருந்து அமரன் பிடிவாதக்காரன். அது ரகுவுக்கும் தெரியும். மேலே ஏதும் சொல்லாமல் நின்றான். அமரன் வாசற்படிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டான்.

நாழிகை ஆமை வேகத்தில் நகர்ந்தது. ஊரெங்கும் நிசப்தம், சத்திரத்திலிருந்த பிரயாணிகளில் இரண்டு பேர் மட்டும் சத்திரத்தின் கைப்பிடிச் சுவருக்கப்பால் நின்று கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

“எனடா! கொஞ்ச நாழிக்கு முன் யாரோ ஒரு பையனும் கிழவனம் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தார்களே. யாரடா அது சான்றான் ஒருவன்.

“யார் கண்டது? எல்லாம் தறிகெட்டுப் போன காலத்திலே யார் யாரோ யார் யாரையோ இழுத்துக் கொண்டு ஓடுகிறான், யாரப்பா கண்டுபிடிக்கிறது இந்தச் சனியனையெல்லாம்?”

“பெண் நன்றாயிருக்கிறாளடா!” என்றான் முதலில் பேசியவன்.

“நன்றாயிருக்கிறதாலேதான் இழுத்துக் கொண்டு வந்திருக்கிறான்” என்று பதில் சொன்னான் மற்றவன்.

“பையன் ஒன்றும் அவ்வளவு நன்றாயில்லையே. அவன் மூஞ்சியும் மோரக்கட்டையும் காலிப்பயல் மாதிரி இருக்கிறானே, இவனோட ஏன் வந்தாள் அந்தப் பெண்?”

“என்ன எழவோ! இந்தப் பெண்களுக்கே காலிப் பயல்கள் மேலேதான் இஷ்டம். அந்த ஜென்மத்துக்கே புத்தி வக்கிரம்.”

இந்தச் சம்பாஷணையை அசாத்திய பொறுமையோடு அமரன் கேட்டுக் கொண்டிருந்தான். அடுத்த ஒரு வார்த்தை அவன் பொறுமையைக் குலைத்து விட்டது.

“நல்ல ஜாதியாயிருக்காது. நல்லதாயிருந்தால் இப்படி ஓடி வருமா?” என்று மற்றவன் பதில் கொடுத்தான்.

ஜாதிப் பேச்சு அமரனை எழுப்பிவிட்டது. ஜாதிச் சண்டை ஹிந்து இரத்தத்தில் ஊறின விஷயம். அமரன் ரகுவைக் கூப்பிட்டு, “ரகு! நீ இந்தக் கதவை விட்டு நகராதே, ராஜகுமாரியையும் எழுப்ப வேண்டாம். நான் இந்தப் பயல்களை விசாரித்து விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மிகுந்த கோபாவேசத்துடன் அந்த இருவரையும் நோக்கிச் சென்றான்.

அமரன் வருவதைக் கண்ட அந்த இருவரில் ‘ஒருவன், “அடே! அதோ அவனே வருகிறான்” என்றான்.

“வரட்டுமே, எனக்கென்ன பயமா?” என்றான் மற்றவன்.

அமரன் அவர்களுக்கருகில் வந்து, “அடே நீங்கள் பார்?” என்றான் அதிகாரத்துடன்.

இருவரும் அமரனுக்குப் பதில் சொல்லவில்லை. மற்றவனைத் திரும்பிப் பார்த்து அதிகாரம் வேறே பலமாயிருக்கப்பா” என்றான். இருவரும் சிரித்தார்கள்.

அமரனின் கோபம் சிகரத்தை அடைந்து விட்டது. அவர்கள் இருவர் இடுப்பிலும் கத்தி தொங்குவதைக் கண்டான். ஆனால் அவன் தன் கத்தியை உருவவில்லை. முதலில் பேசியவன் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தான். அவன் கத்தியை உருவவே அமரனும் தன் கத்தியை உருவினான்.

மற்றொருவன் அவர்களுக்கிடையில் நின்றுகொண் டான். “தம்பி! சண்டை போடுவதானால் இங்கு வேண்டாம். சத்திரத்தில் ஜனங்கள் விழித்துக் கொள்வார்கள். காவற்காரர்களிடம் சிக்கிக் கொண்டால் உனக்கும் கஷ்டம், அதோ அந்தத் தோப்புக்குப் போனால் சண்டை போடலாம் ! சந்திர வெளிச்சமும் இருக்கிறது” என்றான்.

அமரனும் சம்மதித்து அவர்களுடன் சென்றான். தோப்புக்கருகில் அவர்கள் போய்க்கொண்டிருக்கையில் அவர்களில் ஒருவன் அமரன் முகத்தை ஊன்றிக் கவனித்து, “என்ன இது” ஆச்சரியத்துடன் கூச்சலிட்டான்.

“என்னப்பா?” என்றான் மற்றவன்.

“இது நமது ராஜகுமார் அமரசிம்மன் போலிருக்கிறதே!” என்றான்.

“வேறு யார் என்று நினைத்துக் கொண்டீர்கள் மடையர்களா?” என்றான் அமரன் கடுங்கோபத்துடன்.

“ராஜகுமார்! யாரோ என்று நினைத்தல்லவா கண்டபடி உங்களைப் பேசிவிட்டோம்! சத்திரத்துக் கருகிலேயே ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாதா? என்று இருவரும் நடுங்கிக்கொண்டே சொன்னார்கள் தங்கள் கத்திகளையும் அரசகுமாரன் பாதத்தில் எறிந்து விட்டார்கள்.

அமரன் கண்கள் அவர்களைக் கோபத்துடனும் இகழ்ச்சியுடனும் பார்த்தன. அவன் கால்கள் கத்திகளை உதைத்துத் தள்ளிவிட்டுச் சத்திரத்தை நோக்கிக் திரும்பி விரைந்தன. சத்திரத்தில் அறை வாசற்படியில் ரகு இரத்த வெள்ளத்தில் கிடந்தான். உள்ளேயிருந்து ‘ராஜகுமாரியைக் காணவில்லை .

எதிரிகளின் சூழ்ச்சியில் கோபம் தன்னைக்கொண்டு போய் அமிழ்த்தி விட்டதை அமரன் அறிந்து கொண்டான். தன்னைச் சத்திரத்திலிருந்து இழுத்துச் செல்வதற்கே மேற்படி நாடகம் நடத்தப்பட்டதென்பதை நினைக்க, அவன் மனதில் துக்கம் பெருகியது. தன் கோபத்தைப் பெரிதும் நொந்து கொண்டான்.

ரகுவை மெள்ளத் தூக்கி மார்பில் சாத்திக்கொண்டு அவன் காயத்தைப் பரிசீலித்தான். மார்பில் கத்தியின் காயம் ஆழமாக இருந்தது. தன் அரைக் கச்சையால் காயத்தைத் துடைத்து இரத்தத்தை நிறுத்தினான். ரகு மெள்ளக் கண் விழித்து ராஜகுமாரனைப் பார்த்தான்.

“ராஜகுமார்… நான் பார்த்த கிழவன்…. நமது சேனாதிபதி… ஜெயபாலன்… ராஜகுமாரிக்கு ஆபத்து…. சீக்கிரம் செல்லுங்கள்’ என்று தட்டுத் தடுமாறிச் ‘சொன்னான். “உன்னைவிட்டு எப்படிப் போவேன் ரகு?” என்றான் அமரன். என்றுமே அவன் கண்டிராத சோகம் அவன் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டது. ‘ராஜகுமாரியைத் தொடர்ந்து செல்வதா? தகப்பனுக்கும் மேலாகத் தன்னை வளர்த்த ரகுவைச் சிகிச்சை ஏதுமின்றி அங்கேயே சாகவிட்டுப் போவதா? என்ன செய்வதென்று தெரியாமல் நொந்து போய் உட்கார்ந்து விட்டான்.

அதே இரவில் இரண்டு நாழிகைகளுக்குப் பின்னால் சேனாதிபதி ஜெயபாலன் இரு அம்பர் வீரர்களுக்கு இரண்டு பெரிய பண முடிப்புகளைக் கொடுத்து, “இதை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீரச்செயலுக்கு என் பரிசு இது” என்று கூறினான்.

சேனாதிபதி தங்களை இகழ்கிறானென்பதை வீரர் இருவரும் புரிந்துகொண்டார்கள். “எங்கள் வீரமா!’, என்று அவர்களில் ஒருவன் வியப்புடன் கேட்டான்.

ஆம்! எதிரியைச் சதி செய்து அழைத்துச் சென்று அவன் காலில் கத்தியை எறிந்து தப்புவது வீரமில்லையா?” என்று வினவினான் சேனாதிபதி அதிக இகழ்ச்சியுடன். அத்துடன், “இத்தகைய வீரம் அம்பர் நாட்டில் அதிகம்” என்று சொல்லம்பு தொடுத்தான்.

அம்பர் வீரனும் விடவில்லை , “அந்த வீரம் பலிக்க ஆணி வேர் வேண்டும்” என்று விளக்கினான் தாழ்மையுடன்.

“ஆணி வேரா!” சேனாதிபதியின் குரலில் விஷமம் பரிபூரணமாக இருந்தது.

“ஆம்.”

“எதைச் சொல்கிறாய்?”

“தங்கள் யுக்தியை. தங்கள் திட்டம் பலமாக ஊன்றியவுடன் சல்லிவேர்போல் நாங்கள் பக்கவாட்டு வேலைகளில் ஈடுபட்டோம். ஆகையால்…”

“ஆகையால் என்ன?” சேனாதிபதியின் சொற்களில் சீற்றம் ஒலித்தது.

“ஆகையால் தங்கள் வீரமும் குறைந்ததல்ல…” என்று சொற்களை முடிக்காமல் விட்டான் அம்பர் வீரன். குழைந்து தலைவணங்கவும் செய்தான்.

சேனாதிபதி நிதானமிழந்தான் “இந்தக் குழைவு வேண்டாம், வீண் வேஷத்தை நான் விரும்பவில்லை, என்னை ஏதாவது சொல்ல இஷ்டமிருந்தால் நேரில் சொல்லிவிடு” என்று சீறினான் சேனாதிபதி.

“அதிலும் தங்களை ஜெயிக்க முடியாது என்று குறிப்பிட்டான் அம்பர் வீரன்.

“எதில்?”

“வேஷத்தில். தாங்கள் அந்தக் கிழவேஷம் போடா விட்டால் இன்றிரவு எதுவும் நடந்திருக்காது.”

அதற்குமேல் சேனாதிபதி எதுவும் பேசவில்லை. ராணியின் சலுகையில் அம்பர் வீரர்கள் எதையும் பேச முடியும் என்பதைப் புரிந்து கொண்டபடியால், “சரி சரி, போங்கள். வெகுமதிதான் கிடைத்துவிட்டதே” என்றான் சேனாதிபதி.

அம்பர் வீரர்கள் தலை வணங்கிச் சென்றார்கள். சேனாதிபதி தீர்க்காலோசனையில் இறங்கினான். அடுத்து ராணி என்ன கட்டளையிடுவாளோ என்று ஏங்கினான்.

ராணியின் கட்டளை மறுநாளே வந்தது. அமரன் எங்கிருந்தாலும் பிடித்துச் சிறைப்படுத்தும்படி உத்தரவு வந்தது. உத்தரவைக் கொண்டு வந்தவன், வேறொரு செய்தியையும் கொண்டு வந்தான். ரஜனியை இளைய ராணி கடுங்காவலில் வைத்துவிட்டாள் என்ற செய்திதான் அது.

Previous articleIlaya Rani Ch6 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
Next articleIlaya Rani Ch8 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here