Home Ilaya Rani Ilaya Rani Ch8 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch8 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

82
0
Ilaya Rani Ch8 Ilaya Rani Sandilyan, Ilaya Rani Online Free, Ilaya Rani PDF, Download Ilaya Rani novel, Ilaya Rani book, Ilaya Rani free, Ilaya Rani,Ilaya Rani story in tamil,Ilaya Rani story,Ilaya Rani novel in tamil,Ilaya Rani novel,Ilaya Rani book,Ilaya Rani book review,இளையராணி ,இளையராணி கதை,Ilaya Rani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani full story,Ilaya Rani novel full story,Ilaya Rani audiobook,Ilaya Rani audio book,Ilaya Rani full audiobook,Ilaya Rani full audio book,
Ilaya Rani Ch8 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch8 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

இளையராணி – சாண்டில்யன்

அத்தியாயம் – 8 காதின் விசேஷம்

Ilaya Rani Ch8 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

அம்பர் வீரர் இருவரால, சேனாதிபதி உதவியால் பத்திரத்திலிருந்து அபகரிக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்ட ரஜனியை இளையராணி தனது அறையிலேயே சந்தித்தாள். அவள் முகத்தில்கோபம் பொங்கிகொன்டிருந்தது. காதலனிடமிருந்து பிரிந்துவிட்டாயா?” என்று அவள் கேட்டபோது, அவள் அழகிய உதடுகள் லேசாகத் துடித்தன.

ரஜனி இளைய ராணியை தைரியத்துடன் ஏறெடுத்து நோக்கினாள். பிரியவில்லை: பிரிக்கப்பட்டேன்” என்று அலட்சியமாகப் பதிலும் சொன்னான்.

இப்பொழுது புரிந்துகொள். என்னிஷ்டமின்றி மேவார் எல்லையை தாண்ட முடியாதென்பதை” என்று சீறினாள் இளைய ராணி.

கேவலம் பெரிதும் கண்களில் துளிர்த்த பார்வையைக் கமலாதேவி மீது எஜனி வீசினாள். புரிந்து கொண்டேன், அது மட்டுமல்ல நான் புரிந்து கொண்டது. அவரின்றித் தனித்திருந்த சமயத்தில் சேனாதிபதியைக் கொண்டு என்னை அபகரிக்க கோழைத்தனத்தைக் கூடப் புரிந்து கொண்டேன்” என்று கூறினாள் பலனி வெறுப்பு மண்டிய குரலில்,

“ரஜனி?” இளைய ராணியின் குரல் கிறிச்சிட்டது.

“என்ன ராணி… சே சே! அப்படிக்கூட உங்களை அழைக்கக் கூடாது…” என்ற ரஜனியை எறெடுத்து நோக்கிய இளைய ராணி “ஏன் அழைக்கக்கூடாது, நான் மேவாரின் ராணியல்லவா?” என்று வினவினாள்.

“ராஜாவைக் கல்யாணம் செய்து கொள்ளுகிறவர்களெல்லாம் அவர் காம இச்சைக்கு இலக்காகுபவர் களெல்லாம் ராணியென்றால் நீங்களும் ராணிதான். ஆனால் மேவாரில் ராணியென்ற பெயருக்குப் பொருள் உண்டு. அந்த ராணிகள் பெரும் தியாகிகள். வரலாற்றில் இடம் பெற்றவர்கள்” என்றாள் ரஜனி. அவள் குரலில் பெரும் பெருமை இருந்தது; தோற்றத்தில் தோரணையிருந்தது.

இளைய ராணி சிறிது நேரம் இடிந்து உட்கார்ந்து விட்டாள். பிறகு கூறினாள். மெல்ல சமாளித்துக் கொண்டு உறுதியான குரலில், “ரஜனி! அமரன் ஏதோ உன்னை இரண்டு ஜாமத்துக்குக் கடத்திச் சென்று விட்டானென்பது பற்றிப் பெருமைப்படாதே! அவன் இனி உன்னை அணுக முடியாது. தவிர அவன் இந்தப் பகுதியில் இருந்தால் பிடித்துக் கொன்றுவிடவும் சேனாதிபதிக்கு உத்தரவிட்டிருக்கிறேன். ஆகையால் அவனை மறந்துவிடு. உனக்குக் கணவன் ஜஸ்வந்த சிம்மன். உங்கள் இருவருக்கும்தான் மேவார் அரியணை, இதில் சந்தேகம் வேண்டாம்” என்றாள்.

ரஜனி இளைய ராணியை நன்றாக ஏறெடுத்து ‘நோக்கினாள். “சிங்கம் சிங்கத்தைதான் மணக்கும் ராணி, நரியை மணக்காது. தவிர மனப்பால் குடிக்க வேண்டாம். எல்லோருக்கும் மேவார் அரியணை இடங்கொடுக்காது” என்றும் தெரிவித்தாள், இளையராணியின் குரலைவிட உறுதியான குரலில்.

“பார்ப்போம் ரஜனி” என்று பதிலிறுத்த இளைராணி காவலரைக் கூப்பிட்டு, “அரசகுமாரியை மேல் தளத்து தனி அறையில் அடைத்து வையுங்கள்; இரவும் பகலும் இருவர் காவல் இருங்கள். என் உத்தரவின்றி எவரும் உள்ளே நுழையக்கூடாது. யாரும் இவளுடன் பேச்சு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று உத்தரவிட்டாள்.

ரஜனி பதிலேதும் பேசவில்லை. இளைய ராணியை நோக்கி கர்வமும் அலட்சியமும் நிரம்பிய பார்வையை வீசிவிட்டுக் காவலருடன் சென்றாள்.

இந்தச் சம்பவங்கள் நடந்த மூன்றாம் நாள் மேவார் ரகசியமாக யுத்தக்கோலம் போட்டுக் கொள்ளத் துவங்கியது. இளைய ராணியின் தூண்டுதலின்மேல் பகிரங்கமாக அமரசிம்மனை விரோதம் செய்துகொண்டபின் ராதோர், சிசோதய வீரர்களிடமிருந்து தான் எத்தகைய உதவியையோ கருணையையோ எதிர்பார்க்க முடியாதென்பது சேனாதி பதிக்குத் தெரிந்தே இருந்தது. அவர்களை ஏதோ காரணத்தைச் சொல்லி வெளியூருக்கு அனுப்பியதே புத்தி சாலித்தனமாகப் போய்விட்டது என சேனாதிபதி நினைத்தான். “அரசர் வரும்வரையில் அம்பர் வீரர்களைக் கொண்டுதான் நாம் தலை நகரையும் ராஜகுமாரியையும் காப்பாற்ற வேண்டும் மகாராணி!” என்று ஜெயபாலன் கமலாதேவிக்கு யோசனை சொன்னான்.

“அதற்கென்ன? அப்படியே செய்வோம். தலை நகரத்தின் பிரவேச ஸ்தலங்களில் மாத்திரம் வேவுகாரர்களை வைப்போம். அரண்மனையை அம்பர் வீரர்கள் காவல் புரியட்டும். ராதோர், சிசோதய வம்சத்தில் சேராத ராஜபுத்திர வீரர்களாகச் சிலபேரை அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து பொறுக்கிச் சேர்த்துக்கொள் வோம். அமரன் ராதோர்களைக் கூட்டி வந்தால், அரண்மனைக்கெதிரிலேயே அவர்களைச் சந்திப்போம்” என்றாள் இளைய ராணி.

“நல்ல யோசனை தான்” என்று சேனாதிபதியும் சம்மதித்தான்.

“ராஜகுமாரியைக் காவல் புரியச் சரியான காவலாள் ஒருவன் வேண்டும்” என்றாள் இளைய ராணி.

“ராஜகுமாரிக்குக் காவல் எதற்கு? இத்தனை வாயிற் படிகளையும் வீரர்களையும் தாண்டியா ராஜகுமாரி தப்பிப் போகமுடியும்?” என்றான் சேனாதிபதி.

“சேனாதிபதி! உமது புத்தி இவ்வளவு கட்டை என்று எனக்குத் தெரியாது! இந்த அரண்மனையில் நாம் யாரையும் நம்ப முடியாது. தவிர ராஜகுமாரி பந்தோபஸ்தாயிருக்கும் வரையில்தான் நமது நிலைமையும் பந்தோபஸ்தாயிருக்கும். அமரன் நமது வீரர்களையும் மீறி, அரண்மனைக்குள் புக நினைத்தால் ரஜனிக்குத் தீங்கு விளைவிப்பதாகப் பயமுறுத்தி அவனை எட்டவே நிற்க வைக்கலாம்” என்றாள் இளைய ராணி.

இவள் பெண்தானா அல்லது சனிபகவானே இவள் வேஷத்தில் வந்து மேவாரை இறுகப் பிடித்துக்கொண் டிருக்கிறானா என்று சேனாதிபதி யோசிக்கலானான். எப்படி இருந்தாலென்ன? சனியிடம் அகப்பட்டுக் கொண்டபின் சனிப்பிரீதி செய்தால்தான் பிழைக்கலாம் என்று தனக்குள் முடிவு செய்துகொண்டான் இரண்டு நாட்களுக்குப் பிறகு மிகப் பயங்கரமான ஒரு ராஜபுத்திர வீரனையும் ரஜனியைக் காவல் காப்பதற்காக அழைத்து வந்தான்.

இளைய ராணிக்கே அவனைப் பார்க்கும்போது அருவருப்பாயிருந்தது, “அதோ அவன்தானே!” என்று தூரத்திலிருந்தே கேட்டாள்.

“ஆம் மகாராணி! கிட்டே கூப்பிடட்டுமா?” என்றான் சேனாதிபதி.

“வேண்டாம் வேண்டாம். நம்பிக்கையான மனிதன் தானே?” என்றாள் ராணி.

“பெரிய வீரன் என்று நமது சேனாதிபதியே எழுதி யனுப்பியிருக்கிறார்.”

“யார் நமது உப சேனாதிபதியா?”

“ஆம் மகாராணி! அரசர் இன்னும் இரண்டு நாட்களில் தலைநகர் திரும்புவாராம். அந்தக் கடிதத்தை இவன் தான் கொண்டு வந்தான்.”

இளைய ராணி அவனைப் பார்த்தாள். நல்ல வய கேறியவனும் நிதானத்துடன் நிற்க முடியாமல் தள்ளாடி யவனுமான அவன் எப்படிக் காவல் புரிய முடியும் என்று எண்ணினாள். அந்தச் சமயத்தில், “டேய் இளைய ராணிக்குத் தலைவணங்கு’’ என்ற உத்தரவிட்டான் சேனாதிபதி.

கண்களுக்கு மேலே கையைக் கொண்டுபோய் மெள்ளப் பார்க்கத் துவங்கிய அந்த வயோதிகன் “எங்கிருக்கிறார்கள் மகாராணி?” என்று வினவினான்.

இளைய ராணியின் கோபம் எல்லை கடந்தது. “இந்தக் குருட்டுக் கிழவன் தான் உங்களுக்கும் உப சேனாதிபதிக்கும் கிடைத்தானா?” என்று வினவினாள் கமலாதேவி.

“இவனுக்குக் கண் மட்டும்தான் பழுது…” என்று இழுத்தான் சேனாதிபதி.

“காவலனுக்கு இருக்க வேண்டிய முக்கிய உறுப்பு ஒன்றுதான் பழுது போலிருக்கிறது.”

“இவனுக்கு அது தேவையில்லை.”

“ஏன்?”

“சற்றுப் பொறுங்கள் ராணி!” என்ற சேனாதிபதி டேய் கிழவா! அங்கு யாரோ நடக்கிறார்கள்” என்று சற்று எட்டச் சென்றுகொண்டிருந்த ஒரு வீரனைக் காட்டினான். அடுத்த விநாடி ஒரு பெரும் அதிசயம் நடந்தது. கிழவன் இடையிலிருந்த குறுவாள் மின்னல் வேகத்தில் வீரன் பாதக் குறட்டின் ஒலி கேட்ட திசையில் சென்றது. வீரன் ‘ஐயோ’ என்று அலறிக் காலைப் பிடித்துக்கொண்டான்.

இளைய ராணி பிரமித்தாள். சேனாதிபதி சொன்னான்: “இவனுக்குக் கண்தான் பழுதே தவிர காது பழுதில்லை” என்று. “இவனிருக்குமிடத்திலிருந்து பத்தடி தூரம் வருமுன் வருபவர் தன்னை யாரென்று அறிவித்துக் கொள்வது நல்லது” என்று விளக்கினான் சேனாதிபதி.

Previous articleIlaya Rani Ch7 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
Next articleIlaya Rani Ch9 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here