Home Historical Novel Jala Deepam Part 1 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

56
0
Jala Deepam part 1 Ch9 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch9 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 9 தொட்டும் சுடவில்லை

Jala Deepam Part 1 Ch9 | Jala Deepam | TamilNovel.in

பானுதேவியென்ற பெயரைக் கேட்டதும் இதய சந்திரன் இடிந்து நின்றதற்கும் பலவித உணர்ச்சிகளின் வசப்பட்டதற்கும் காரணமிருந்தது கனோஜி ஆங்கரேயின் புருவம் வினா எழுப்பும் தோரணையில் உயர்ந்ததற்கும் அவர் ‘பாலம்’ என்று இதயசந்திரனை நோக்கி பரிதாபப் பட்டதற்கும் காரணமிருந்தது. மகாராஷ்டிரத்தின் பெரிய பெரிய அரசியல் பிரமுகர்களின் பெயருக்கு அடுத்த படியாகப் பிரசித்தி பெற்றிருந்த பெயர் அதுதான். ஷாஹு மகாராஜாவின் சிற்றன்னையான தாராபாய் மிகுந்த அழகியானாலும் அவள் அழகில் ஆண்மைத் தனமும் அரசியல் வேகமும் கலந்திருந்தமையால் அவளை ராஜதந்திரியாக மக்கள் மதித்து அச்சப்பட்டார்களே தவிர அவளை ஒரு பேரழகியென்றோ, கவர்ச்சிமிக்க காரிகையென்றோ எண்ணியவர்கள் யாருமயில்லை. செஞ்சிக் கோட்டையில் அவளுக்கு ஆண்மகவு பிறந்ததுமே அவள் மகாராஷ்டிர மகுடத்தை அவனுக்குச் சூட்ட அரசியல் சதிகளில் இறங்கினாளேயொழிய, பத்தினியென்ற முறையில் பர்த்தாவுடன் உறவு கொள்வதை விட்டாள். அவளிடம் அச்சம் கொண்டவர் பலர், இச்சை கொண்டவர் யாருமில்லை. மொகலாயரே அவளைக் கண்டு நடுங்கினார்கள். “தாராபாய் அசாத்திய அறிவுள்ளவள். ராஜ்யச் சிக்கல்களையும் ராணுவப் பிரச்சினைகளையும் நிர்வகிப்பதில் நிகரற்றவள்” என்று மொகலாய சரித்திர ஆசிரியர் காபிகான் எழுதுகிறார்.

தாராபாயின் இந்தப் பிரசித்திக்கு நேர் விரோதமான புகழைப் பெற்றிருந்தாள் பானுதேவி. ஷாஹுவின் ஒன்று

விட்ட் மருமகளைப்போன்ற அழகி யாருமில்லையென மக்கள் பகிரங்கமாகப் பேசினார்கள் அவள் ராஜபவனத்தி லிருந்து பல்லக்கில் செல்லும்போதும் புரவிமீதேறி மலைச் சரிவுகளில் பாய்ந்து செல்லும்போதும் அவளைப் பார்க்கக் கூடிய கூட்டங்களும். பார்த்து ஏங்கிய வாலிபர் உள்ளங்களும் பலப்பல. அவள் புரவியில் சென்றபோது அசைந்த அவள் லாவண்ய உடல் எத்தனை வாலிபர்களின் சித்தங்களைச் சிதைத்தன! எத்தனை பருவப் பெண்களின் பொறாமையைப் பொங்க வைத்தன! எத்தனை மனைவிமார்களின் எரிச்சலைக் கிளப்பிவிட்டன! எத்தனைக் கணவன்மார்கள் பானு தேவியின் எழிலைப் பாராட்டிவிட்டு வீட்டில் திண்டாடியிருக்கிறார்கள்! இப்படிப்பட்ட கதைகள் அனந்தம். அவளைப்பற்றி எக்கச் சக்கமாகப் பேசிவிட்டதற்காக அரண்மனை வீரர்களுக்குள் நிகழ்ந்துள்ள வாட்போர்கள் பல அவற்றில் காயமடைந்தோரும் உண்டு உயிர் விட்டோரும் உண்டு. நிலாக் காலங்களில் அவள் ஸதாரா கோட்டை அரண்மளையின் உப்பரிகையில் உலாவுவாள். அதைப் பார்த்துப் பார்த்து மனமொடிந்தவர்கள் உண்டு. அந்தக் காட்சியைப் பார்க்கப் புகழ்ந்த கணவர்களை உள்ளிழுத்து சாளரங் களைச் சாத்திய சாகச மனைவிமார்கள் எவ்வளலோ பேர்!
அழகுக்கே ஓர் இலக்கணமாகவும், கருணைக்கே இருப்பிடமாகவும், ஷாஹுவின் ஒன்று விட்ட மருமகளாகவும் விளங்கிய பானு தேவியின் புகழ் அவள் ஸதாராவுக்கு வருமுன்பே ஷாஹுவின் அரண்மனையில் அடிபட்டது. அப்படியொரு தூர உறவினள் ஒருத்தி தனக்கு உண்டு என்பத ஷாஹு மகாராஜாவுக்கு நீண்ட நாள் வரை தெரியாது. அவுரங்கசீப்பிடம் சிறையிலிருந்து அரை மயக்கந்தரும் பௌஸ்தாவைக் கலந்து அவுரங்கசீப் கொடுக்க, உண்டு உண்டு. அரை மயக்கத்தில் பதினெட்டு ஆண்டுகளைக் கழித்து அவுரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு மகாராஷ்டிரத்தில் மகுடம் சூட வந்து தாராபாயுடன் போரிலேயே காலம் கழித்துவந்த ஷாஹுவுக்கு அழகைப்பற்றியோ, வேறு சிறப்புகளைப் பற்றி யோ ஆராய நேரமில்லாதிருந்தது அவர் போர்ப் பாசறைகளிலிருந்த போதே மகாராஷ்டிரத்தில் ஒரு சிறு பெண் ஆண் மனங்களைக் கலங்க வைக்கிறாளென்று வதந்தி வந்தாலும் அவர் அதைப்பற்றி அப்பொழுது கவனிக்காவிட்டாலும், ஸதாராவில் சத்ரபதியாக முடிசூடிய பின்பு அதைப் பற்றிக் கவனிக்கும்படியாயிற்று பானுதேவியின் புகழ் அரண்மனைச் சுவர்களையும் அந்தப்புரச் சீலைகளையும் அசைக்கவே ஷாஹு தமது மருமகளைக் கொணர உத்தரவிட்டார். வந்தவள் புரவியில் வந்தாள் மற்றும் நான்கு பெண்களுடன். எங்கோ கிளம்பப் புரவியிலேறிக் கொண்டிருந்த ஷாஹு முன்பு கோட்டை முகப்பிலேயே புரவியிலிருந்து குதித்தாள். ஒருமுறை சுற்றுமிருந்த மலைச்சிகரங்களையும் பள்ளத்தாக்குகளையும் பார்த்தாள். ஏதோ காணாததைக் கண்ட காட்டுப் பெண் போல் ஷாஹுவையும் சுற்றிலும் நின்றிருந்த வீரர் குழுவையும் பார்த்தாள் பிறகு, ”தாங்கள் தான் சத்ரபதியாயிருக்க வேண்டும்” என்று கூறித் தலை வணங்கினாள்.

அவளைக் கண்ட ஷாஹு குதிரைமேல் அசைவற்று உட்கார்ந்துவிட்டார். இப்படி ஓர் அழகும் கம்பீரமும் மகாராஷ்டிரத்தில் இருக்க முடியும் என்று அவர் நினைக்கவில்லை. அவள் கண்கள் அவரை ஏறெடுத்து நோக்கிய போது அதில் ஓரளவு கர்வமும் காணப்பட்டதைக் கண்ட ஷாஹு அவள் அரசவம்சத்தினள் என்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்டார். அன்றிலிருந்து ஷாஹுவின் பாடு பெரும் திண்டாட்டமாயிற்று எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் பானுதேவி அடங்காததால் அரண்மனைப் பிரச்சினைகள் வளர்ந்தன. அவள் போர் முறைகள் பழகுவதற்காகக் காவலர் கூடாரங்களுக்குத் தனிமையில் சென்று வாட்போரும் துப்பாக்கி சுடவும் பழகினாள். சில நேரங்களில் யாரும் அச்சமுறும் வகையில் மலைச் சரிவுகளில் புரவியில் அதிவேகமாகச் சவாரி செய்தாள். அவளைச் சதா கூட்டம் சுற்றியதும், கோட்டைக்குள் அவள் காரணமாகச் சண்டைகள் நிகழ்ந்ததும் ஷாஹுவுக்குப் பெரும் தலைவலியாகப் போய்விடவே, பிரும்மேந்திர ஸ்வாமி ஸதாரா வந்த சமயத்தில் அவரிடம் பானுதேவியை ஒப்படைத்து, ”சில நாட்கள் இந்த முரட்டுப் பெண் உங்கள் கண்பார்லையில் இருக்கட்டும். உங்கள் ஆசிரமத்தில் இவளை அடைத்து வையுங்கள்’ என்று கூறி ஒப்படைத்தார். அவளை அழைத்துக் கொண்ட பிரும்மேந்திர ஸ்வாமி ஸதாராவிலிருந்து காட்மாதாவின் சரிவிலிறங்கி, சற்று சுற்றுவட்டமாகப் பயணம் செய்து ஸித்திகளின் ஆட்சியிலிருந்து கடல் பகுதிக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கி வலம்புரிச் சங்கு தேடினார். இரண்டு நாட்களும் பெண்களுக்கும் அந்தப் பணியைப் பழக்கி வைத்தார். சங்கை வாயில் வைத்து ஒலிக்கும் முறைகளையும் சொல்லிக் கொடுத்தார். அவசர அறிவிப்புக்கு சங்கு எப்படி ஊதுவது. சாதாரண அறிவிப்புக்கு எப்படி அதில் ஒலி கிளப்புவது, எப்படி அதைக் கொண்டு அபிஷேகம் செய்வது என்பதையும் பெண்களுக்கு விளக்கினார். கடைசியாக மறு தினம் காலை பயணப்படத் திட்டமிட்டிருந்த சமயத்தில் இதயசந்திரன் அவர் காலடியில் இடறிக் கிடந்தான்.

அன்றிலிருந்து பிரும்மேந்திர ஸ்வாமி சித்தத்திலும் சிறிது கவலை பாய்ந்துவிட்டது. இதயசந்திரன் பானுதேவி யைத் தனிமையில் அழைத்துச் சென்றதும் வரலாறு கூறியதும், பிறகு தன்னிடம் விவரித்ததும் எல்லாமே மகாராஷ்டிர வரலாற்றுடன் பிணைக்கப்பட்டு வலையாகப் பின்னப்பட்டு வருவதை நினைத்துப் பெரும் சிந்தனையிலாழ்ந்தார் பிரும்மேந்திர ஸ்வாமி கனோஜி ஆங்கரே இதயசந்திரனை நோக்கி, ”பாவம்.” என்று அனுதாபப்பட்டதன் காரணமும் புரியாமலில்லை துறவிக்கு. இருப்பினும் அவர் இதயசந்திரனின் ஆசா பாசங்களைப்பற்றிக் கவலைப்படாமல், ”பானு தேவி.

தான் இன்னாரென்று உன்னிடம் கூறவில்லை இதய சந்திரா?” என்று வினவினார்.

பானுதேவியென்ற பெயரைக் கேட்டதால் அதிர்ச்சி யும், அவள் அழகு உருவமும் உள்ளத்தில் வலம் வந்ததால் ஆசையும், அவள் தன்னுடன் தனித்துக் காட்டுக்குள் வந்த தால் ஒருவேளை தன்னிடம் அவளுக்கு அன்பும் இருக்கலாமென்ற நினைப்பால் மகிழ்ச்சியும் மாறி மாறி வரக் குழம்பி நின்ற இதயசந்திரன், சுவாமியின் கேள்வியால் இவ்வுலகு வந்து, “இல்லை சுவாமி” என்றான்.

சுவாமி பிறகு கனோஜி ஆங்கரேயை நோக்கி, ‘பானு தேவியைப் பற்றி உனக்குமா தெரியாது?’ என்று வினவினார்.

“கேட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. ஆனால் பெயர் பொருத்தமாயிருக்கிறது” என்ற கனோஜி புன்முறுவல் கொண்டார்.

இதயசந்திரன் இமைகளைத் தூக்கி கனோஜியைப் பார்த்துக் கேட்டான். ‘என்ன பொருத்தத்தைக் கண்டீர்?” என்று. ”பானு என்றால் சூரியனல்லவா?”

“ஆம்”

“அந்த உஷ்ணம் இந்தப் பெண்ணிடமும் இருக்கிறது. என்னைப் பார்த்த விழிகளில் நெருப்பு இருந்தது.”

” அதனால்?”

தொட்டால் சுடும். நினைவில் வைத்துக்கொள்!” இதைச் சொன்ன கனோஜி ஆங்கரே நகைத்தார். நகைப்பு சற்று அதிகப்பட்டிருக்கும். சுவாமியின் விழிகள் அதைத் தடை செய்திராவிட்டால்.

ஒரு பார்வையில் கனோஜியை அடக்கிய சுவாமி, “கனோஜி! ஆண்பெண் மயக்கத்தைவிடப் பெரும் பிரச்சினைகள் நம் முன்னிருக்கின்றன. இப்பொழுது மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தின் பிற்காலத்துக்கு இந்த

வாலிபன் பெரும் முட்டுக்கட்டையைக் கொண்டு வந்திருக்கிறான். இவன் கூறும் மனிதன் யாரென்பதை உன்னால் ஊகிக்க முடியுமா?” என்று வினவினார்.

”ராஜாராம் ரகசிய மகனைத் தூக்கிச் சென்ற வனையா?” என்று பதில் கேள்வி கேட்டார் கனோஜி.

“ஆம்” என்றார் சுவாமி.

“செஞ்சியிலிருந்த அமாத்யரைச் சேர்ந்தவனாயிருக்க வேண்டும். மகாராஷ்டிர சாம்ராஜ்ய சிக்கலில் பிரஹ்லாந் நீராஜியும் விளையாடுவதாகத் தெரிகிறது” என்றார் கனோஜி.
“அப்படித்தானிருக்க வேண்டும். சுமார் எட்டு ஆண்டுகள் தஞ்சையில் உறைந்து ராஜாராம் மகவைக் காக்கக்கூடிய ஒரு காவலன் இருக்கவேண்டுமானால் அவன் ராஜாராம் குழுவைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும், சாமானியக் காவலனாக இருக்க முடியாது” என்று ஒப்புக் கொண்டார் சுவாமியும்.

சிறிது நேரம் மூலருமே மௌனம் சாதித்தனர். பிறகு. “இந்த வாலிபன் அவனைப்பற்றித் தெளிவான அடையாளங்களைக் கூறுவதால் அவனைக் கண்டு பிடிப்பது சாத்தியம் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

கனோஜி அதை அத்தனை சுலபமான வேலையாக நினைக்கவில்லை. “அவன் வெளியிலிருந்தால் தேடலாம். மகாராஷ்டிரம் வந்ததும் சிறையில் அடைக்கப்பட்டாலோ அல்லது அவனைக் கொன்றிருந்தாலோ நாம் கண்டுபிடிக்க முடியாது” என்றார் கனோஜி.

”அவனைக் கொல்ல முடியாது” என்றார் பிரும்மேந்திர ஸ்வாமி திட்டவட்டமாக.

“ஏன்?”

”அந்த ஆண்மகவு ராஜாராமின் மகன் என்பதற்கு குழந்தையின் தாயைத் தவிர இவன் ஒருவன் தான் சாட்சி.

ஜலதீபம் அந்த சாட்சியை அகற்றிவிட்டால் அந்த வாரிசை வளர்த்ததும், தூக்கி வந்ததும் பயனற்றுப் போய் விடுமல்லவா?”

கனோஜி ஆங்கரே ஆமோதிப்பதற்கு அடையாள மாகத் தலையசைத்தார். ” அவன் மீது ஒரு கண் வைப்போம்” என்றும் கூறினார். ”எப்படிக் கண் வைப்பாய்?”

” விசாரிக்கச் சொல்லி மாலுமிகளிடம் சொல்லுகிறேன்.”

”அது தவறு. நாம் தேடுவது தெரிந்தால் அவன் எச்சரிக்கையடைந்து விடுவான்.” ”லேறு வழி?”

வழியைச் சொன்னார் சுவாமிகள். அந்த வழி இதய சந்திரன் வாழ்வையே நிர்ணயித்துவிட்டது. ”இந்த வாலிபனை உன்னுடன் அழைத்துச் செல்’ என்று கூறினார் சுவாமி.

”என்னுடனா!” கனோஜியின் கேள்வியில் வியப்பு இருந்தது.

”நான் சதா போரில் இருக்கிறேனே!” என்று குறிப்பிட்டார் கனோஜி.

“போரிலிருப்பதால் பல இடங்களுக்குப் போகிறாய். கனோஜி! உன்னைவிட அரபிக்கடல் பிராந்தியத்தில் நிலத்திலோ நீரிலோ சஞ்சரிப்பவர்கள் கிடையாது. ஏதாவது ஓர் இடத்தில் ஒரு சமயத்தில் அந்த மனிதன் அகப்படலாம்” என்றார் சுவாமி.

உலகத்தைச் சல்லடைப் போட்டுச் சலிக்கும் கதையாக இருந்தது கனோஜிக்கு. இருப்பினும் சுவாமி சொன்னதை மீற முடியாமல் ஒப்புக் கொண்டார். பிறகு சந்தேகத்துடன் கேட்டார் இதயசந்திரனை நோக்கி, “தமிழா! உனக்குக் கப்பல் இயக்கிப் பழக்கமுண்டா ?” என்று .

“இல்லை. ஆனால் வெகு சீக்கிரம் பயிலமுடியும்’ என்றான் இதயசந்திரன்.

கனோஜி இகழ்ச்சிப் புன்முறுவல் கோட்டினார். ”சரி, பார்ப்போம். நீ உறங்கிவிட்டுக் காலையில் வா” என்றார்.

சரியென்று தலையை ஆட்டிவிட்டு வெளியே வந்த இதயசந்திரன் ஏதேதோ யோசனைகளுடன் அந்த அடவி யில் நடந்தான். உண்மையில் அவன் படுக்க வேண்டிய இடம் சுவாமியின் கூடாரந்தான் அதைக்கூட சிந்திக்காமல் கனோஜி ஆங்கரே, “உறங்கிவிட்டுக் காலையில் வா” என்றதும் கூடாரத்தைவிட்டு வெளியே வந்தான், வந்ததும் சிந்தனைகள் சித்தத்தைக் குழப்ப நடந்து சென்றான், எங்கோ நடந்து அடுத்திருந்த கூடாரங்களுக்காக வந்தவன் சட்டென்று சில வினாடிகள் நின்றான். கூடாரத்தின் வாயிலில் கீழே இலைகளைப் பரப்பிப்படுத்துக் கிடந்தாள் பானுதேவி. அவளைச் சுற்றிலும் அவளுடைய தோழிகளும் படுத்திருந்தார்கள். அவர்கள் மீது உயரத்தில் வளைந்திருந்த காட்டு மரம் ஒன்று தனது ஊதா நிறப் புஷ்பங்களை உதிர்த்திருந்தது. கூடாரத்திலிருந்து மங்கலான வெளிச்சம் அவர்கள் மீது லேசாக விழுந்திருந்தது.

அந்தச் சமயத்தில் பானுதேவியின் அழகு பிரமிக்கத் தக்கதாயிருந்தது. உன்னித்தெழுந்திருந்த அவள் அழகு பிம்பங்கள் மூச்சில், எழுந்து தாழ்ந்தன, அவனுக்கு இதய வேதனையை அளித்தது. அங்கு நிற்பது தவறென்று நினைத்து சட்டென்று செல்லத் திரும்பினான். அவன் கால் பட்ட இடத்திலிருந்து இலைச் சருகுகள் விளைவித்த லேசான சப்தத்தில் பானுதேவி விழித்து அவனைப் பார்த் தாள். அவள் விழிகளில் நெருப்புப் பொறி பறந்தது. ”தொட்டால் சுடும்” என்று சற்று முன்பு பானுதேவியைப் பற்றி ஆங்கரே எச்சரித்ததை நினைத்துப் பார்த்த இதய சந்திரன், ‘தொட்டாலென்ன பார்த்தாலே சுடும்’ என்று எண்ணினான். ஆனால் அடுத்த விநாடி அந்த விழிகளின்

பார்வை கனிந்தது. அவள் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். அவள் இதழ்கள் குறு நகை கூட்டின. குறு நகையிலிருந்த குளிர்ச்சி, அவன் இதயத்தைக் குளிர வைத்தது. “பார்வையில் நெருப்பும் இருக்கிறது நீரும் இருக்கிறது. என்ன விசித்திர சேர்க்கை?” என்று எண்ணிய இதயசந்திரன் அவளுக்குத் தலை வணங்கிச் செல்ல எத்தனித்தான்.

“இருங்கள்” என்பதற்கு அறிகுறியாக பானுதேவி கையால் ஜாடை காட்டினாள். பிறகு மெல்ல எழுந்து அவனருகில் வந்தாள். ”இப்படி வாருங்கள்” என்று சற்று மறைவிடத்திற்கும் அழைத்துச் சென்றாள். அப்படிச் சென்றபோது அவன் கை அசைப்பில் அவள் மீது பட்டது. தொட்டுவிட்டோமே சுட்டுவிடுமோ என்று அச்சமும் கொண்டான். ஆனால் தொட்டும் சுடவில்லை குளிர் விழிகள் அவன் மீது திரும்பின. திரும்பிய விழிகளில் ஆவலும் தெரிந்தது.

Previous articleJala Deepam Part 1 Ch8 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch10 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here