Home Historical Novel Jala Deepam Part 2 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

68
0
Jala Deepam Ch9 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch9 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –9 “முடியாது”- ஸார்கேல்

Jala Deepam Part 2 Ch9 | Jala Deepam | TamilNovel.in

கணவனை இழந்த இரண்டே நாட்களுக்குள் காதற்கணைகளைத் தொடுக்கும் துணிவு எந்தக் காரிகைக்கும் வர முடியாதென்பதை உணர்ந்ததால் காதரைனின் விபரீதப் போக்கைப் பற்றி அச்சமும், அல்லி மலரைப்போல் வெளுத்துக் கிடந்த அவள் அழகிய மேனியின் அழைப்பினால் ஏற்பட்ட ஆர்வமும் கலந்து என்ன செய்வதென்று தெரியாமல் பிரமித்துவிட்ட இதயசந்திரனை நெருங்கி வந்து நின்று கொண்ட அந்த வெள்ளை யுவதி“ அச்சம் தவிர்’ என்ற தமிழ்ப் பழமொழியைச் சொல்லவில்லையென்றாலும் ‘கெட் ரிட் ஆஃப் யுவர் பியர்’ என்ற அவள் கூற்றுக்குச் சரியான மொழிபெயர்ப்பு அந்தத் தமிழ்ப் பழமொழியே என்று தனக்குள் சொல்லிக் கொண்ட தமிழக வீரன் அவளுக்குப் பதிலேதும் சொன்னானில்லை. அவனருகில் வந்து கௌனைத் தலைக்குமேல் கழற்றிக் கையில் பிடித்துக் கொண்டு அவள் நின்றபோதும் அவன் பேசச் சக்தியின்றிச் சிலையென நின்று கொண்டேயிருந் தான். கௌனைக் கழற்றிய பின் உள்ளேயும் அவள் வேறு உடையொன்று அணிந்திருந்ததை இதயசந்திரன் கண்டானானாலும், அவளது சமீபத்தாலும் உள்ளுடை விளக்கிய அழகிடங்களாலும் அவன் கிட்டதட்ட விட்டில் பூச்சி போலானான். சற்று அண்ணாந்து அவனைப் பார்த்த கழுத்தின் வெண்மை, முகவெள்ளியில் பதிக்கப்பெற்ற நீலக் கற்களிரண்டு, அத்தனையும் சுற்றி அலங்கோலமாக விழுந்திருந்த தங்கக் குழல்கள், உள்ளுடையின் இரு பாகங் களுக்கிடையே வெள்ளை வெளேரென்ற சிற்றிடை அனைத்தும் அவனைப் பைத்தியமாக அடித்தன. அத்துடன் தனது கைகளிலொன்றைத் தூக்கி அவன் தோள்மீது வைத்தாள். அதிகமாக நெருங்கி மீண்டும் கேட்டாள்:

“ஏனிப்படி பயப்படுகிறீர்கள்? நான் என்ன செய்து விட்டேன்?” என்று.

ஒரு கோடியிலிருந்த மங்கலான அறை விளக்கு அவள் பொற்குழல்களில் பட்டுப் பெருமெருகு கொடுத்ததால் பள பளத்த பொன்னாபரணம் போல் அவள் தலைகாட்சி அளித்தது. ஆண் மகனின் சமீபத்தினால் வெள்ளைக்கன்னங்களில் ஏறிவிட்ட வெட்கச் சிரிப்பு அவளழகைப் பதினாயிரம் மடங்கு அதிகப்படுத்தியிருந்தது. அவள் உடல் அவன்மீது மட்டும் படாமலிருந்தாலும் அவற்றின் அழகுகளை எண்ணியதாலேயே இதயம் வெடித்துவிடும் போலிருந்தது உபதளபதிக்கு. ஆழ்ந்து மட்டும் அவளை அவன் கவனித் திருந்ததால் அவள் கண்களில் காமத்தின் வெறியிருப்பதை அவன் உணர்ந்து கொண்டிருப்பான். அப்படி உணர்ந்து கொண்டிருந்தால் அவன் உணர்ச்சிகள் அவன் செய்கைக்கு வேலியும் போட்டிருக்கும். ஆனால் ஆழப் பார்க்கச் சக்தியற்ற கண்கள், அளவில் அடங்காத உணர்ச்சி, சிதைந்து கிடந்த சித்தம், இரட்டைக் குதிரை ரதம்போல் வேகமாக ஓடிய இதயம், இவை அவனைப் பலபடி தூக்கியெறியவே உண்மை நிலை உணராத அவன் கைகள் அவள் அழகிய சிற்றிடையை லேசாகச் சுற்றின. கைகள் இறுக்கவில்லை சிற்றிடையை. அதுவே வழவழவெனத் தவழ்ந்து வந்தது அவன் கை வளையத்துள். அவன் முதலில் உள்ளே வந்த வேகத்தில் அறைக் கதவை முழுதும் மூடாததால் இடை வெளி மூலம் வந்த காற்றில் அறை விளக்குப் படபடத்தது. இதயசந்திரன் இதயம் அந்த விளக்குடன் போட்டி போட்டது. அந்தப் போட்டியில் உணர்ச்சிகளும் கலந்து கொண்டன.
அந்த நிலையில் அந்தக் கட்டழகி பேசவில்லை நீண்ட நேரம். இடையில் தவழ்ந்த கை அப்படியே நின்றுவிட்டதைக் கவனித்தாள். நிலை தடுமாறிய நிலையிலும் தமிழன் நின்ற இடத்தைவிட்டு நகராமல் நின்று கொண்டிருந்ததையும் கவனித்தாள், அவனுடைய உள்ளத்து உணர்ச்சிகளுடன் பண்பாடு போராடிக் கொண்டிருப்பதையும் கவனித்தாள். மெல்லத் தலையை அவன் மார்மீது சாய்த்துப் பெருமூச்சும் விட்டாள். அந்தப் பெருமூச்சு துக்கத்தின் மூச்சா, காதலின் மூச்சா என்பது புரியவில்லை தமிழனுக்கு. இரண்டும் அதிக வித்தியாசமில்லையென்பதையும் காதலும் ஒருவகைத் துன்பம்தான் என்பதையும் நினைத்த அவன், அவள் தலைக்குழல்களைக் கோதி விட்டான். “கால் வலிக்கிறது, அப்படி உட்காரட்டுமா?” என்று மெல்லக் கேட்டாள். அவள் அப்படிக் கேட்ட போது அவள் இதழ்கள் சொல்லைக் கூட்ட இருமுறை மார்பில் பிரிந்து மூடின. அதனால் உணர்ச்சிகளுக்குப் பலியான இதயசந்திரன் அவளுக்குப் பதிலேதும் சொல்லாமல் அவளை அழைத்துச் சென்று மஞ்சத்தில் உட்கார வைத்தான். அவள் அங்கிருந்த தலையணையில் சாய்ந்து கொண்டாள். இதயசந்திரனைக் கையைப் பிடித்துப் பக்கத்தில் உட்கார்த்தவும் செய்தாள்.

மந்திரத்தால் இயக்கப்பட்ட பதுமைபோல் அவள் காமத் தந்திரங்களுக்குத் தக்கபடி அசைந்த இதயசந்திரன் உட்கார்ந்ததும் செயலற்றிருந்தான். அவள் மெல்லக் கேட்டாள். “என்மீது கோபமா உங்களுக்கு?” என்று.

”இல்லை.” யந்திரம் போல் உதிர்ந்தது ஒற்றைச்சொல்.

“பயமா?” அவள் காம உதடுகள் உதிர்த்தன அச்சொல்லை விஷம் ஒலியில்.

“எதற்குப் பயம்?” என்று கேட்டான் அவன் அவள் மோகன சரீரத்தின் மீது கண்களை ஓட்டி.

“எதற்கா!” இதைச் சொல்லி நகைத்தாள் அவள்.

”ஆம். எதற்கு ?”

“ஐயோ! புருஷர்களுக்கு எதுவும் தெரிவதில்லை.” “என்ன தெரிய வேண்டும்?” “பெண்ணின் இதயம்.”

“அதற்கென்ன இப்பொழுது?”

“இதென்ன அசட்டுக் கேள்வி?” என்ற அவள், “இந்தக் கால் நிரம்ப வலிக்கிறது” என்று தனது பாதத்தில் அவன் கையொன்றைத் தூக்கி வைத்தாள்.

அந்த ஒரு தவறை அவள் செய்திராவிட்டால் இதய சந்திரன் அன்று பூச்சியாயிருப்பான். அவள் அழகிய பாதத்தில் தன் கைப்பட்டதும் அதைத் தடவிக்கொண்டே யோசனையில் இறங்கினான். தடவிய அவன் விரல்களை அவள் பாத விரல்கள் நெறித்தன. இதயசந்திரன் வேறு வாழ்க்கைக்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு முந்திய வாழ்க்கைக்குச் சென்றான். பரசுராமபுரத்தின் கோபுர விளக்கு எழுந்தது அவன் கண்களில். அதிலிருந்து தென்புறம் தள்ளியிருந்த பரசுராம மலைச் சரிவு. அதிலிருந்த அந்தக் காடு, அந்தக் காட்டிலிருந்த மரம் அத்தனையும் எழுந்தன சித்தத்தில். மரத்தடியில் உட்கார்ந் திருந்த பானுதேவி தனது கால்களை நீட்டிக் கொண்டிருந்தாள். அந்தப் பாதத்தில் தவழ்ந்தது அவன் கை. கைவிரல்கள் அவள் பாதவிரல்களில் புகுந்தன. அவள் பாதவிரல்கள் அவன் கைவிரல்களை நெறித்தன. சற்று ஏறெடுத்து நோக்கினான் இதயசந்திரன். பானுதேவியின் கம்பீர விழிகள் அவன் விழிகளைக் கௌவின. “பானு! பானு!” என்று இதயம் வாய் திறந்து அழைத்தது. பிறகு ஏற்பட்ட சலசலப்பு, அவள் எழுந்து விரைந்து யார் வந்திருக்கிறானென்று ஆராய்ந்த திறமை, பிறகு தனக்கிட்ட உத்தரவு அனைத்தும் விரிந்தன அவன் இதயக் கண்களில்.

பானுதேவியைச் சந்தித்ததிலிருந்து ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்களை, மனக்கிளர்ச்சிகளை, போராட்டங்களை அனைத்தையும் அந்தச் சமயத்தில் எண்ணிப் பார்த்தான் தமிழன். அஞ்சன்வேல் கோட்டையில் ஒரே ஒருநாள் சந்தித்த முகத்தில் கத்தி வெட்டுள்ள, கிராதகனையும். நினைத்தான், அவனை இரண்டரை ஆண்டுகள் தேடியும்.

கிடைக்கவில்லையே என்ற நினைப்பால் பெருமூச்சும் விட்டான். ‘வந்தது ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைக்க. சிக்கியது அரசியலில் விளையாடிய பானுதேவியிடம், பிறகு மயங்கியது மாலுமி மஞ்சுவிடம். இப்போது இவளொருத்தி’ என்று நினைத்த இதயசந்திரன், ‘நான் எத்தனை பலவீனமடைந்து விட்டேன் இந்த இரண்டரை ஆண்டுகளில்!’ என்று நினைத்துக் கொண்டான். பிறகு காதரைனின் காலை ஒரு முறை அழுத்திப் பிடித்துவிட்டு எழுந்திருந்தான்.

“ஏன் எழுந்து விட்டீர்களா?” என்று காதரைன் கொஞ்சினாள்.

“வேலை இருக்கிறது” என்றான் இதயசந்திரன் அவளுக்கு முதுகைத் திருப்பிக்கொண்டு.

“கொஞ்ச நேரங்கூட காத்திருக்காது போலிருக்கிறது அந்த வேலை?”

சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான் இதய சந்திரன், “காத்திருக்காது” என்று கூறிவிட்டு நடக்க முற்பட்டான் வெளியே.

“வீரரே” என்று அவள் பஞ்சணையில் சாய்ந்தபடியே அழைத்தாள்.

கதவுக்கருகில் சென்று அவன் திரும்பிப் பார்த்தான். “ஏன்?” என்றும் முரட்டுத்தனமாகக் கேட்டான்.

“நான் மட்டும் காத்திருக்கலாமா?” என்று கேட்டாள் காதரைன் புன்முறுவலுடன்.

“காத்திருக்க வேண்டாம்” என்று கூறிவிட்டுக் கதவைத் தடாலென்று அடித்துச் சாத்திவிட்டு வெளியே நடந்து விட்டான் தமிழன். காதரைன் கலகலவென நகைத் தாள். அவன் அடித்து மூடியதால் நன்றாகத் திறந்துவிட்ட கதவைப் பார்த்தாள். “இந்தக் கதவு போல்தான் நீங்களும்” என்று கூறி மேலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள்.

“இந்த ஆண்பிள்ளைகளுக்கு இந்த முரட்டுத்தனம் இல்லா விட்டால் எந்தப் பெண்ணுக்கும் காதலென்பதற்கு அர்த்தமே புரியாதே!” என்றும் கூறிக்கொண்டாள்.
அறையைவிட்டு வெளியே சென்ற இதயசந்திரன் கப்பல் தளத்தைச் சுற்றுமுற்றும் ஆராய்ந்தான். பீரங்கிப் பக்கத்திலிருக்கவேண்டிய பர்னாண்டோ சுக்கான் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்ரஹீமுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். பேச்சு சுவாரஸ்யத்தில் இதய சந்திரனை அவர்கள் பாராததால் திடீரென எதையோ பேசிச் சிரித்தார்கள். அருகே வந்த இதயசந்திரன் கேட்டான், “சிரிப்பு எதற்கு?” என்று.

திடுக்குற்றுத் திரும்பிய பர்னாண்டோ கூறினான்: வேடிக்கையாகப் பேசிக்கொண்டோம்” என்று.

“சரி சரி, பீரங்கியிடம் போ. அவரவர்கள் பணியை அவரவர் கவனிப்பது நல்லது” என்று கூறிய இதயசந்திரன் துடுப்புத் துழாவும் கீழறைக்குச் சென்று திரும்பினான். பிறகு பாய்மரத்தடியில் உட்கார்ந்து தண்டில் சாய்ந்து கொண்டான். அப்படியே உறங்கியும் விட்டான். பீரங்கியிடத்திலிருந்த பர்னாண்டோ இப்ரஹீமுக்கு ஏதோ சைகை செய்தான். இப்ரஹீம் தலையசைத்தான். இந்த பரஸ்பரச் சைகைகள் அடுத்த இரண்டு நாட்களில் அதிகப் பட்டன.

அடுத்த இரண்டு நாட்களில் மஞ்சு அடியோடு மாறுபட் டிருந்தாள். அவளது துணிவு எங்கோ பறந்துவிட்டது. “என்னை முத்தமிடுங்கள்” என்று ஜல தீபத்தின் தளத்தில் ஆதியில் கேட்ட மஞ்சு, அபரிமிதத் துணிவைப் பெற்ற மஞ்சு, துணிவை அறவே இழந்து கிடந்தாள். “யார் காத்திருக்கச் சொன்னது?” என்று கேட்டவள், “எது குறைந்துவிட்டது?” என்று சீண்டியவள், திடீரெனக் குணம் மாறி சிந்தனை படர்ந்த முகத்துடன் கப்பலில் நடமாடிக் கொண்டிருந்தாள். அவன் எப்படியும் தனது மணாளன் என்று உறுதிப்பட்டதும் எத்தனை பயம் பெண்களுக்கு? மனைவிப் பட்டம் ஏற்படப்போகிறது என்ற நினைப்பில் மகிழ்ச்சியுடன் அச்சமும் கலந்து வருகிறதல்லவா! இந்த மனோதத்துவம் தானே மிக நெருங்கிய மஞ்சுவையும் இதயசந்திரனிடமிருந்து விலக வைத்தது! இல்லாவிட்டால் பகிரங்கமாகவும் துணிவுடனும் இதய சந்திரனுடன் இரண்டரை ஆண்டுகள் பழகியவளுக்குத் திடீரென மாலுமிகள் சந்தேகப் பார்வைகள் சலனத்தை விளைவிக்குமா? இரண்டரை ஆண்டுகளாக இதய சந்திரனை நெருங்கியும், பிறகு விலகியும் பதைபதைக்க விட்ட மஞ்சு, இப்பொழுது திடீரென மாற்றமடைந்து கலங்கவேண்டிய காரணமென்ன? மாலுமிகள் கேலியா! அதுவுமிருக்கலாம். ஆனால் அத்தனைக்கும் காரணம் காதரைன். இந்த நிலையில் கச்சிதமாக வர்ணித்தான் இப்ரஹீம். ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது ஒரு கப்பலில் இரண்டு பெண்கள் இருக்க முடியாது” என்று.

பர்னாண்டோ அதை ஒப்புக்கொண்டான். ஆனால் வேறு கோணத்தில் பார்த்தான் நிலையை. ‘இப்ரஹீம்! ஒரு கப்பலில் ஒரு பெண்ணிருந்தாலே உபத்திரவம் இரண்டு பெண்களிருந்தால் கேட்கவேண்டியதில்லை. இனி இந்தக் கப்பலில் மகிழ்ச்சி, வேடிக்கை, பாட்டு எல்லாவற்றுக்கும் முடிவு கட்ட வேண்டியதுதான்” என்றான்.

பர்னாண்டோ சொன்னது உண்மையாயிற்று. அடுத்த சில நாள்களில் மஞ்சு பேசவில்லை. இதயசந்திர னும் சற்று எட்டவே போய்க் கொண்டிருந்தான். எல்லார் மனத்திலும் கஞ்சலம் இருந்து கொண்டிருந்தது. ஆனால் சஞ்சலமில்லாத ஒருத்தியுமிருந்தாள். காதரைனின் நுண்ணிய அறிவு நிலைமையை நன்றாகப் புரிந்து கொண்டதால் அவள் சர்வ சாதாரணமாக எல்லோரிடத்திலும் நடந்து கொண்டாள். பிரதி தினம் காலையிலிருந்து மாலைவரை கறுப்புடை அணிந்தாள். கணவன் பிரிவுக்குத் துக்கம் கொண்டாடினாள். சில வேளைகளில் கடலைப் பார்த்துக்கொண்டு மணிக்கணக்கில் நின்று கொண்டிருந்தாள். சில வேளைகளில் மஞ்சுவிடம் தனது துயரங்களைக் கூறிக் கொண்டிருந்தாள். பழைய காதல் உணர்ச்சிகள் மறைந்துவிட்டதை உணர்ந்தான் இதய சந்திரன். அவனும் அவற்றை அறவே மறக்க முயன்றான். ஆனால் அது அத்தனை எளிதில்லை என்பதையும் புரிந்து கொண்டதால் கடைசியில் ஒரு. முடிவுக்கும் வந்தான். விஜயதுர்க்கத்தில் இறங்கியதும் மஞ்சுவின் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டிவிட்டால் காதரைன் தொல்லை தீரு மென்றும். தன் சித்தமும் திட சித்தமாகுமென்றும் தீர்மானித்தான். ஆனால் எந்த விதி அவனைக் கொங்கணிக் கரையில் தள்ளியதோ, அது வேறு விதத்தில் அவன் கதியை நிர்ணயித்திருந்தது. விஜயதுர்க்கம் சேர்ந்ததும் அவன் கனோஜி ஆங்கரேயிடம் கேட்டான், “மஞ்சுவை மணந்து கொள்ள அனுமதி வேண்டும் எனக்கு” என்று.

கனோஜி ஆங்கரேயின் பதில் திட்டமாகக் கிடைத்தது. “இப்பொழுது முடியாது’ என்று சந்தேகத்திற்கு இடமின்றிக் கூறினார் ஸார்கேல்.

Previous articleJala Deepam Part 2 Ch8 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch10 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here