Home Historical Novel Jala Deepam Part 3 Ch25 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch25 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

85
0
Jala Deepam part 3 Ch25 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch25 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch25 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 25 பயங்கரத் தலையீடு

Jala Deepam Part 3 Ch25 | Jala Deepam | TamilNovel.in

மறுநாள் பொழுது புலருவதற்கு நான்கு நாழிகை களுக்கு முன்பாகவே சுகாஜியிருந்த இடத்துக்குச் சென்ற இதயசந்திரன் அவனைத் தட்டி எழுப்பி, “படைகள் இன்னும் ஒரு நாழிகைக்குள் நகரவேண்டும்” என்று அதட்டிச் சொன்னான். உபதளபதி அப்படி அதட்டியதை அதுவரையில் பார்த்தோ கேட்டோ அறியாத சுகாஜி கண்களை நெருடிக் கொண்டு எழுந்து நின்று சற்று ஏறெடுத்து உபதளபதியை நோக்கினான். “சொல்வது விளங்குகிறதா இல்லையா? சீக்கிரம் வேலையைக் கவனி’ என்று மறுபடியும் உஷ்ணத்துடன் உத்தரவிட்டு, அவ்விடத்தில் நிற்காமல் சரேலெனத் திரும்பிச் சென்றுவிட்ட இதயசந்திரனை நோக்கிக் கொண்டே, நின்ற இடத்தில் நின்ற சுகாஜியின் கண்கள், சற்றுத் தூரத்திலிருந்த வண்டியிலிருந்து மிஸ் எமிலி இறங்கியதையும், அவள் இதழ்களில் புன்சிரிப் பொன்று தவழ்ந்து கொண்டிருந்ததையும் கவனித்தன. அது மட்டுமின்றி, அவள் கலைந்த குழல்களையும் ஆடையையுங் கூடக் கவனிக்கவே செய்தன. வண்டியிலிருந்து இறங்கிய மிஸ் எமிலி நின்றவண்ணம் தலைக் குழல்களைக் கோதி நன்றாக எடுத்துச் சுருட்டிக் கொண்டையிட்டுக் கொண்டாள். கௌன் மேல்பாகத்திற்கு இரண்டு மூன்று பித்தான்களைப் போட்டுக் கொள்ளவும் செய்தாள். பிறகு சற்றே கைகளை மேலே தூக்கி உடலை யும் சிறிது நெளித்து வண்டியின் முகப்பில் உட்கார்ந்து கொண்டாள். அவள் பேரானந்த நிலையில் இருந்ததைப் புரிந்து கொண்ட சுகாஜி மிகுந்த கோபத்துடன் சற்று எட்ட இருந்த தனது புரவியிடம் சென்று அதன் மீது கடுவேகத்தில் தாவி ஏறி, தனது மடியிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தில் இருமுறை சுட்டான். பிறகு புரவியைக் கடிய வேகத்தில் செலுத்தினான் படைத் தளத்தின் ஊடே. “ஊம்! எழுந்திருங்கள்! புறப் படுங்கள்” என்று கூவிய அவன் குரல், அந்தக் கானக மெங்கும் ஒலித்தது. அடுத்த வினாடி புரவிகளின் கனைப்பு ஒலிகளும், அவற்றின் மீது சேணம் போடும் வீரர்களின் கோஷங்களும், பீரங்கி வண்டிகள் இழுபடும் ஒலிகளும் காதைப் பிளந்தன. அவர்கள் புறப்படு முன்பாகவே பயணத்திற்குச் சித்தமாகிவிட்ட இதயசந்திரன் தனது புரவியில் முன் சென்று அணிவகுத்து நின்ற படைகளை பின்னால் வருமாறு வாளை உருவித் தலைக்கு மேல் வீசிச் சைகை காட்ட, படை நகர்ந்தது.

படை நகர்ந்த நிமிஷத்திலிருந்து பகல் உணவுக்காகக் கொடுத்த இடைவேளை போக வேறு ஓய்வேதும் கொடுக்காமலே படையை நடத்திச் சென்ற இதயசந்திரன், மாலை முதிர்ந்த பின்னும் பாசறை அமைக்க அனுமதி கொடுக்கவில்லை. அதைப்பற்றி சுகாஜி மெல்லப் பிரஸ்தாபித்த போது, “அடுத்த பாசறை கல்யாண் நகரில் அமைக்கப்படும்” என்று சீறி விழுந்தான் தளபதி. இதயசந்திரன் சில வேளைகளில் புரவியை தனித்து நிறுத்திக் கொண்டு அணிவகுத்துச் சென்ற படையைப் பார்வையிட்டபோதும் சரி, புரவியில் படையின் பக்கவாட்டில் சவாரி செய்த போதும் சரி, தன்னை அடியோடு கண்ணால் பார்க்காத தைக் கண்ட எலிமி அதைப் பற்றி உள்ளூரச் சிரித்துக் கொண்டாள். ஓரிரு முறை அவள் வண்டிக்கு அருகில் அவன் வந்தபோது வெளியே தலையை நீட்டி, ”உபதளபதியின் கண் இந்த ஏழைமீது திரும்பாது போலிருக்கிறது” என்று கேட்டாள் அவள் விஷமமாக. பதிலுக்கு இதயசந்திரன் அவளை முறைத்துப் பார்த்தான். வண்டியை ஓட்டியவனையும் எரித்து விடுவதுபோல் பார்த்து, “கவனித்து அணி வகுப்புக் கலையாதவாறு செலுத்து வண்டியை” என்று எரிந்து விழுந்து விட்டுப் புரவியைக் கன வேகத்தில் தட்டிவிட்டான். இப்படிச் சிதைந்த சித்தத்துடனும் கெடுபிடியுடனும் கோபத்துடனும் தனது உப தலைவர்களை அதட்டிப் படையை மறு நாள் இரவு கல்யாண் நகருக்கு முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினான். அந்த நகரத்தை ஏறெடுத்துப் பார்த்த பின்புதான் அதில் எத்தனை ஆபத்திருக்கிறதென்ப தைப் புரிந்து கொண்டான் கனோஜியின் உபதளபதி.

கல்யாண் நகரத்தைச் சுற்றிலும் பெருங்கோட்டை எதுவுமில்லாததையும், உள்ளேயுள்ள சிறு கோட்டை சுவர்கூட எந்தவிதமான பாதுகாப்பையும் அளிக்க முடியாதென்பதையும், அம் மாநகரைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொண்ட இதயசந்திரன், அந்த நகரத்தின் ஒரு புறத்தில் பெரும் சமவெளியிருப்பதால் பேஷ்வா தன்னை நோக்கி வந்தால், தான் அவருக்கு ஈடு கொடுப்பது அத்தனைச் சுலபமல்லவென்பதையும் சந்தேகமற உணர்ந்து கொண்டான். அந்த உணர்வின் காரணமாக உடனடியாக அந்த நகரத்தில் தனது படை யைத் திடமாக அமைத்துக்கொள்ள முடிவு செய்த உபதளபதி, நகரத்தின் முகப்பில் தனது முரசுகளைப் பலமாகக் கொட்டச் செய்தான். முரசுகளைக் கேட்ட ஒரு நாழிகைக்குள் அவனைச் சந்திக்க வந்த கல்யாண் நகர தேஷ்முக் அவனது விருப்பத்தை அறிய விரும்பிக் கை கட்டி வாய் புதைத்து நின்றார். இதயசந்திரன் புரவியிலிருந்து இறங்காமலே அவரை நோக்கி வினவி னான், “நீர்தான் கல்யாண் தேஷ்முக்கா?” என்று.

”ஆம்” என்றார் தேஷ்முக் பணிவுடன்.

“இங்கு ஷாஹு மகாராஜாவின் காவற் படைவீரர் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்று வினவினான்.

“இருநூறு பேர் இருக்கிறார்கள். பொக்கிஷத்தைக் காப்பதும், பொது மக்களுக்குச் சாதாரணப்பாதுகாப்பளிப்பதும் அவர்கள் கடமை” என்றார் தேஷ்முக்.

“சரி. அவர்களை இங்கு அனுப்பும். இன்னும் இரண்டு நாழிகை நேரத்தில் எனது படை நகரத்துக்குள் நுழையும். நகரத்தில் உமது காரியாலயத்தை அடுத்துள்ள கட்டிடங்களும், நகரத்தின் வெளித் தெருக்கள் நான்கும் காலியாகட்டும். எனது படைகள் அவற்றில் தங்கும். நகர மக்களுக்கு எந்தப் பயமும் வேண்டாமென்று முரசு கொட்டுங்கள். எனது படையுடன் உக்கிரான வண்டிகள் வந்திருக்கின்றன. அவற்றில் உணவுப்பொருள்கள் குறைந்தால் அதை நிரப்ப ஏற்பாடு செய்யுங்கள்” என்று உத்தரவிட்டான் உபதளபதி.

தேஷ்முக் நிலத்தில் படியும்படி பணிந்தார் உபதளபதிக்கு. பிறகு தமது காவலாட்களுடன் செல்லப் புரவியில் ஏறினார். அவர் புரவி ஓர் அடி எடுத்து வைக்குமுன்பாக “நான் தங்க ஏதாவது பெரிய கட்டிடம் இருக்கிறதா இந்த நகரின் நடுவில்?” என்று வினவினான் உபதளபதி.

“பேஷ்வா தங்கும் இடமே இருக்கிறது. அதை ஒழித்துக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார் தேஷ்முக். அடுத்த நான்கு நாழிகைக்குள் இதயசந்திரன் படை துப்பாக்கி ரவை ஒன்று கூடச் செலவழிக்காமலும், துளி ரத்தம் சிந்தாமலும் கல்யாண் நகரத்தை ஆக்ரமித்துக் கொண்டது. நகரத்தின் நடுப்பாகத்திலிருந்து மக்களுக்கு எந்தவித தொந்தரவும் வைக்காமல் அங்கிருந்த இரண்டு தெருக்களிலும், நகரத்தின் வெளித் தெருக்கள் நான்கிலும் படைகளைத் தங்கச் செய்த இதயசந்திரன் நகர மத்தியிலிருந்த பேஷ்வாவின் பெருமாளிகையில் தான் தங்கினான். அவனைக் கேட்காமலும் அவனை லட்சியம் செய்யாமலும் எமிலியும் அந்தக் கட்டிடத்துக்குள் தனது மருந்துப் பெட்டிகளோடு வந்து சேர்ந்தாள். அவள் வண்டி வாசலில் வந்து நின்றவுடனேயே பெரிதும் நிலைகுலைந்த இதயசந்திரன் சுகாஜியையும் அந்தக் கட்டிடத்திலேயே தங்கும்படி பணித்தான்.

படைகள் அவன் திட்டப்படி நகரத்தின் மத்தியிலும் வெளிப்புற வீதிகளிலும் தங்கியதும் தனது உபதலைவர் களை வரவழைத்து அன்றிரவே மந்திராலோசனை நடத்தி னான் இதயசந்திரன். ”வெளிப்புறத் தெருக்களில் நமது படைகளிருப்பதால் இந்த நகரத்திலிருந்து செய்தி யாரும் வெளியே கொண்டு செல்ல முடியாதென்றாலும், நாம் இதை ஆக்ரமித்துக் கொண்டதைக் கொங்கணிக்குள் நுழைந்துவிட்ட பேஷ்வா அறிய அதிக நேரம் பிடிக்காது. ஆகவே. வீரர்கள் சிலர் எப்பொழுதும் நகரத்திலிருந்து அரை காத தூரத்துக்குச் சென்று கண்காணித்து வரட்டும். பேஷ்வாவின் படை ஒருவேளை திரும்பினால் நமக்குச் செய்தி துரிதத்தில் கிடைக்கவேண்டும். படைவீரரும் சன்னத்தமாக இருக்கட்டும், எந்த நிமிடத்திலும் முன்னேறி எதிரியைச் சந்திக்க” என்று மற்ற உபதலைவர் களை எச்சரித்துவிட்டு, சுகாஜியுடன் தான் மட்டும் சென்று நகரத்தைச் சுற்றிப் பார்த்தான் இரண்டு நாழிகை நேரம். ஆங்காங்கிருந்த தனது படைப் பிரிவுகள் மிக எச்சரிக்கையுடனிருந்ததைப் பார்த்து மகிழவும் செய்தான். நடுநிசி நேரத்தில் மீண்டும் தனது இருப்பிடத்துக்குச் சென்று சுகாஜியை உணவருத்தி. நித்திரை செய்ய அனுமதி கொடுத்து அனுப்பிவிட்டு, தனது அறைக்குச் சென்று ராணுவ உடையை கழற்றிப் படுக்கைமீது எறிந்துவிட்டு, நடு முற்றத்திலிருந்த பீப்பாய்களிலிருந்த நீரை எடுத்துத் தலையில் ஊற்றிக் கொண்டான். நீராடி முடித்து, தலை துவட்டி, தனது அறைக்கு மீண்டும் அவன் வந்தபோது அவனது ராணுவ உடைகள் சீராக மடித்துப் படுக்கையின் ஓர் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தன. நீராடிய பின்னர் அணியச் சாதாரண புத்துடையொன்றும் கட்டிலின் மேலிருந்தது. இந்த ஏற்பாடுகள் யாருடையவையென்பது அவனுக் குத் தெரிந்தேயிருந்தது. இருப்பினும் அந்த ஏற்பாட்டைச் செய்தவர் அங்கில்லாத தைரியத்தில் புத்தாடை அணிந்தான். அவன் ஆடையணிந்து முடிந்ததும் வீரனொருவன் ஒரு தட்டில் சிறிதளவு உணவும் ஒரு குவளையில் காய்ச்சிய பாலும் கொண்டு வந்நான். இதயசந்திரன் ஆசுவாசப் பெருமூச்சு விட்டான். ‘நல்லவேளை! தட்டையும் பாலையும் அவள் கொண்டுவராதிருந்தாளே!’ என்று தன்னைப் பெரிதும் திருப்தி செய்து கொண்டு பாலை மட்டும் குடித்து விட்டு உணவை நிராகரித்து, வீரனை வெளியே அனுப்பிக் கதவைத் தாளிட்டுப் படுத்தான்.

கதவுத் ‘தாழ் நன்றாகப் பொருந்தியதென்றாலும் கட்டிலில் படுத்த பின்பு அவன் இதயத் தாழ்கள் திறந்தன. இரண்டறைகள் தள்ளி எமிலி படுத்திருக்கிறாளென்ற கள்ள நினைப்பு அவன் மனத்தில் மெல்ல மெல்ல எழுந்தது. சே சே! நான் மஞ்சுவுக்குச் சொந்தம். எமிலியை நினைப்ப தும் தவறு! என்று யாரோ தன்னைக் கேள்வி கேட்டது போல் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். ஆனால் முந்திய நாளிரவு வண்டியில் விளைந்தது அவன் நினைப்பில் எழுந்தது. அவளைப் பார்க்க அவன் வண்டிக்குள் தலை நீட்டியதும் அவள் மலர்க் கரங்கள் அவன் கழுத்தை வளைத்துக் கொண்டதும் அவன் மனத்தில் எழுந்தது. அக்கரங்கள் கழுத்தை வளைத்ததோடு இல்லாமல் அவளை நோக்கி இழுக்க முயன்றதும் அவன் சித்தத்தில் வளைய வந்தது. அவன் முகம் அவள் மார்பை எட்டியபோது அவள் கௌனின் பித்தான்கள் திறந்து கிடந்தன. அப்படி மார்பு உடை திறந்திருந்தது மார்பின் விம்மலாலா அவள் சாகசத்தாலா என்பது இந்த இரவில் கூடப் புரியவில்லை அவனுக்கு. திண்ணிய அழகில் புதைந்த தன் முகம், அதைத் தொடர்ந்து வண்டிக்குள் தானும் நுழைந்த வேகம், பிறகு விளைந்துவிட்ட விபரீதம், அத்தனையும் அவன் மனத்தில் எழுந்து அவன் உணர்ச்சிகளை வாட்டின. வண்டிக்குள் நுழைந்தபோது அவள் தான் சொன்னாளே, ‘அஞ்சாதீர்கள்’ என்று. ‘எதற்காக அதைச் சொன்னாள்?’ என்று கேட்டுக் கொண்டான் இன்று. ‘மஞ்சுவுக்குத் துரோகமல்ல இது. நீங்கள் அவளிடம் திரும்பும்போது நான் உங்களுடன் இருக்கமாட்டேன்.’ என்றாளே எமிலி. “அதெப்படி அத்தனை திட்டமாகச் சொன்னாள்?” என்றொரு கேள்வியும் எழுப்பினான்.

கேள்விகள் எழ எழ அவன் பலவீனம் தான் அதிகமா யிற்று. அந்தப் பலவீனத்தின் காரணமாக எழுந்து அறைத்தாழை அகற்றி வெளியே நடந்து எமிலியின் அறையை நோக்கிச் சென்றான். அறை தாழிடப்பட்டிருந்தது. அதைத் தட்டத் தைரியமில்லாமல் நின்றான் சில வினாடிகள். உள்ளிருந்து துன்ப முனகல் ஒன்று கேட்டது. அதற்குமேல் பொறுக்காத உபதளபதி கதவைத் தட்டினான் இருமுறை. எமிலி நிதானமாகவே கதவைத் திறந்தாள். அவனைப் பார்த்ததும் ஏதும் பேசாமல் நின்றாள். உபதளபதியின் முகத்தில் அசடு வழிந்தது. “இங்கு முனகல் கேட்டதே” என்றான் மெல்ல.

“அப்படியா!” என்றாள் எமிலி அவனை நோக்கி.
அவன் அவளை நன்றாக நோக்கினான். அவள் கண்கள் சிவந்திருந்தன. நீண்ட நேரம் அழுதிருப்பதன் அறிகுறி தெரிந்தது. “எமிலி! அழுதாயா?” என்று வினவினான் உபதளபதி அனுதாபம் மிகுந்த குரலில்.

“ஆம்”. என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் ஆட்டினாள் அவள்.

.”ஏன்?”

“பெண் ஜென்மம் அதற்காக ஏற்பட்டது.”

“சே சே! பைத்தியம்.”

“அழுவதற்கு அதுவும் காரணம்.”

“எது?”

“பைத்தியம்.”

“என்ன பைத்தியம்?”

“பெண்களுக்கு புருஷர்களின் மீது ஏற்படும் பைத்தியம்”

இதைச் சொல்லிவிட்டு உள்ளே செல்ல முயன்ற எமிலியை கையைப் பிடித்து நிறுத்தினான் இதயசந்திரன்: நிறுத்தியதன்றித் தன்னை நோக்கித் திருப்பவும் செய்தான்

அப்பொழுதும் அவள் கவுனின் மேல்பகுதிப் பித்தான் கள் போடப்படவில்லை. திறந்த உடையிலிருந்து உள்ளழகுகள் லேசாக எட்டிப் பார்த்துக் சொண்டி ருந்தன. “சரி! உள்ளே வாருங்கள்” என்று கூறித் தனது கையை விடுவித்துக் கொண்டு உள்ளே நடந்தாள் அவள். உடன் வந்த இதயசந்திரனை நோக்கித் திரும்பி அவன் தோள்மீது தனது ஒரு கையைப் போட்டுக் கொண்டாள். “உங்கள் இடது கையால் என் இடையை சுற்றி வளைத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

இதயசந்திரன் அவள் சொன்னபடியே செய்தாலும், “இதெல்லாம் எதற்கு எமிலி” என்று கேட்டான்.

“நான் மீண்டும் வாழப் பார்க்கிறேன்” என்றாள்.

“நீ சொல்வது புரியவில்லை” என்றான் இதய சந்திரன்.

“நான் பம்பாய்க்குச் செல்லப் பிரியப்படுகிறேன்” என்ற அவள், தன் உடலை அவன் உடலுடன் இழைத் தாள்.

“செல், அனுப்பி வைக்கிறேன்.”

“தனித்தல்ல, உங்களுடன்.”

“எப்பொழுது?”

“இப்பொழுது.”

“என்ன உளறுகிறாய்?” மிஸ் எமிலி தன் முகத்தை அவன் மார்புமீது படிய வைத்துக் கொண்டாள். தலைக்குக் கீழிருந்த அவள் உடல் பூராவும் நெளிந்து அவன் உடலுடன் இழைந்தது. அந்த நிலையில் தொடர்ந்து, ”உபதளபதி! மனம் எங்கும் நம்மை அழைத்துச் செல்லும். பம்பாயில் கவர்னரின் நடன மண்டபத்துக்கு இப்பொழுது நாம் செல்கிறோம். உங்களுடன் நான் வாழ்ந்தது அந்த மண்டபத்தில் தான். அங்குதான், அந்த நடனத்தில் தான், உங்கள் உணர்ச்சித் துடிப்பை நான் கண்டேன். உங்களை அதற்குப் பிறகு என்னால் மறக்க முடியவில்லை. ஆகவே நகருங்கள். நடன முறையில் இணைந்து வாருங்கள்” என்று கூறிய எமிலி நகர்ந்தாள் ஆங்கில நடன பாணியில்.

கவர்ச்சியான அவள் உடலின் அழகு பூராவும் அவன் மீது இழைந்தது. இதயசந்திரன் மெல்ல மீண்டும் பம்பாயின் நடன மண்டபத்திற்குச் சென்றான். அறைக் கதவு திறந்திருந்ததைக்கூட கவனியாமல் அவர்கள் இருவரும் இணைந்து மெய்மறந்து அந்த அறையைச் சுற்றிச் சுற்றி நகர்ந்தனர். இடையிடையே எமிலி தன் இதழ்களை அவன் இதழ்களுடன் இழைத்தாள். அவன் இதழ்களும் தாழ்ந்து அவள் மலரிதழ்களைச் சந்தித்தன. பிறகு கழுத்திலும் புதைந்தன. நாழிகைகள் பறந்தன, நடனம் முடியவில்லை . பலபடி அவள் அசைந்தாள். அவனை முன்னோக்கி அசைத்தாள். பின் வாங்கி அசைந் தாள். அவள் குழல் பிரிந்து கிடந்தது. விழிகள் மூடிக் கிடந்தன. கைகள் செயல்பட்டன. இருவருக்கு மட்டுமே சிருஷ்டிக்கப்பட்ட உலகத்தில் அவர்கள் இருந்தார்கள்.

இருவர் உள்ளங்களிலும் வேட்கையுமிருந்தது, வேதனையுமிருந்தது. இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். நடனமாடிய நிலையில் அவளை அவன் கட்டிலுக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தான். அவன் கழுத்தைக்

கரங்களால் வளைத்த அவள், அவன் காதுக்கருகில் சொன்னாள், “பத்தே நாட்கள் எனக்கு” என்று.

அவன் புரிந்து கொண்டான். பதில் சொல்லவோ அவளைப் பிரிந்து செல்லவோ திராணியில்லாமல் திகைத்தான். இந்தச் சமயத்தில் தான் அந்தத் தலையீடு வந்தது. அவன் ஆயுளில் நினைத்திராத, முற்றும் எதிர்பாராத, அவன் மனத்தைக் காதல் மயக்கத்திலிருந்து இரத்த வெறிக்குக் கொண்டு சென்ற எதிர்பாராத தலையீடு அது. அந்தத் தலையீடு அவன் சுய நிலையையும் சுய அறிவையும் அடியோடு பறித்துச் சென்றது.

Previous articleJala Deepam Part 3 Ch24 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch26 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here