Home Historical Novel Jala Deepam Part 3 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

57
0
Jala Deepam part 3 Ch3 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch3 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 3 கடற்கரை அதிர்ச்சி

Jala Deepam Part 3 Ch3 | Jala Deepam | TamilNovel.in

கவர்னர் ஏஸ்லாபியிடம் நடந்த அந்த அரை மணிப் பேட்டி முழுவதும் உணர்ச்சிகளைப் பெரிதும் அடக்கிக் கொண்டும் தனது சித்தத்தில் ஓடும் எண்ணங்களைச் சிறிதும் காட்டாமலும் வெகு சாமர்த்தியத்துடன் தனது தூதுப் பணியை நிறைவேற்றிய இதயசந்திரன், கவர்னர் கடைசியாக பானுதேவியின் பெயரை உச்சரித்ததும் அத்தனை நேரம் கையாண்ட எச்சரிக்கையை அடியோடு உதறி முகத்தில் அதிர்ச்சி தாண்டவமாட, “என்ன, பானு தேவியா! ஷாஹுவின் மருமகளா!” என்று வினவினான், அதிர்ச்சியின் பிரதிபலிப்பு குரலிலும் பூரணமாக துலங்க.

கவர்னர் ஏஸ்லாபியின் உதடுகளில் புன்னகை விரிந்தது, கண்களில் விஷமம் சொட்டியது. ‘ஆம்” என்ற அவர் பதிலில் ஆயிரம் அர்த்தங்கள் தொனித்தன.

இதயசந்திரன் உணர்ச்சிகள் கட்டுமீறிச் சென்றதால், “மகாராஷ்டிர அரச மகளிர் இத்தகைய நடன விருந்து களுக்கு வரமுடியாதே. அது அரச குல கட்டுப்பாட்டுக்கும் விரோதமாயிற்றே?” என்று கூறினான்.

கவர்னர் தமது ஆசனத்தைவிட்டு எழுந்திருந்து இதய சந்திரன் அருகில் வந்து அவனைச் சில விநாடிகள் உற்று நோக்கினார். பிறகு சற்றுச் சங்கடத்துடன் கூறினார். “இதயசந்திரா! சாதாரணமாக ஒரு கவர்னர் சொல்லக் கூடிய விஷயமல்ல இது; இருப்பினும் நீ பெரிய வீரன். ஒரு மகாவீரனின் தூதுவன் என்பதால் கூறுகிறேன்…” என்று. பிறகு கவர்னர் சற்று நிதானித்தார்.

“சொல்லுங்கள் பிரபு!” என்று கேட்டான் இதய சந்திரன் அவர் நிதானத்தைத் தாங்க முடியாதவனாய்.

“ஷாஹுவின் மருமகள் தனித்து வரவில்லை இந்த விருந்துக்கு…” என்று கூறி மறுபடியும் ஏதோ சிந்தித்தார்.

கவர்னர் தன்னிடமிருந்து எதையோ மறைக்கப் பிரியப்படுகிறார் என்பதை உணர்ந்த இதயசந்திரன், “கவர்னர் பிரபு! எதுவாயிருந்தாலும் சொல்லுங்கள், மறைக்க வேண்டாம்” என்று சற்று வலியுறுத்தி வினவினான். வினவிய குரலில் பணிவுமிருந்தது, கெஞ்சலுமிருந்தது. கெஞ்சலில் பெரும் சந்தேகமும் ஊடுருவிக் கிடந்தது.

கவர்னர் அவன் உணர்ச்சிகளின் திருப்பம் எதையும் கவனிக்கத் தவறவில்லையென்றாலும், தான் கவனித்த தற்கு அறிகுறியாக முகத்திலோ பேச்சின் தோரணை யிலோ எந்தவித மாறுபாட்டையும் காட்டாமல், “பானுதேவியுடன் இரண்டு தோழிகளும் வருகிறார்கள் விருந்துக்கு” என்றார்.

“அது இயற்கைதானே” என்றான் சற்று ஆசுவாசப் பெருமூச்சு விட்ட இதயசந்திரன்.

கவர்னர் தொடர்ந்தார், “அது இயற்கைதான். ஆனால் ஹிந்து மகளிர் வெள்ளைக்காரர் விருந்துக்கும் நடனத்துக்கும் வருவது அபூர்வம். எங்கள் நடன முறைக் கும் ஹிந்துக்களின் வாழ்க்கை நோக்குக்கும் வேறுபாடுகள் உண்டு. அதுவும் ஒரு ஹிந்து அரசகுல மகள் வெள்ளைக் காரர் விருந்துக்குப் போனாளென்றால் வதந்தி விரும்பத் தகாததாயிருக்கும். அப்படியிருக்க இந்த விருந்துக்கு பானுதேவி வர ஒப்புக்கொண்டது விசித்திரம். தோழிகள் உடன் வருவது சம்பிரதாயம். அதனால் சமுதாய ஆட்சேபணை அதிகமாக நீங்கிவிடா…” இந்த இடத்தில் சற்றுப் பேச்சை நிறுத்தினார் கவர்னர், தான் சொல்வதன் பொருள் தமிழன் இதயத்தில் நன்றாக உறைக்கட்டுமென்று.

அவர் சொல்வதன் பொருள் முழுவதும் விளங்கிற்று இதயசந்திரனுக்கு. மன்னர் ஷாஹுவின் மருமகள் வெள்ளைக்காரர் விருந்துக்குச் சென்றாள் என்றாலே ஹிந்துஸ்தானத்தில் பெரும் அபவாதம் அவளுக்கு ஏற்பட்டுவிடும் என்பதை அவன் சந்தேகமற உணர்ந்தான். அத்தகைய அபவாதம் ஏற்படுமென்று கவர்னருக்குத் தெரிந்துமா கண்ணியவானான கவர்னர் அவளை விருந்துக்கழைத்தார் என்று சிந்தித்தான் கனோஜியின் உபதலைவன். அவர் அழைத்தாலும் இத்தகைய அபவாத அலுவலுக்கு பானுதேவி எப்படி ஒப்புக்கொண்டாள் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவும் செய்தான் அவன்.

இத்தகைய சிந்தனை அவன் மனத்திலோடுவதைப் புரிந்துகொண்ட கவர்னர் கேட்டார்: “ஒரு பெண்ணுக்கு அபவாதம் விளையக்கூடிய செயலில் நான் ஏன் இறங் கினேன். எதற்காக அழைப்பு விடுத்தேன் என்று யோசிக்கிறாயா?” என்று.

வியப்பு மண்டிய இதயசந்திரன் விழிகள் அவரை நோக்கி எழுந்தன. ”ஆம் பிரபு! அதைத்தான் யோசிக்கிறேன்” என்று உதிர்த்தன சொற்களை அவன் உதடுகள்.

“நானாக அழைக்கவில்லை அரச மகளை. அவள் வேண்டுகோளின் மேல் அழைப்பு விடுத்தேன்” என்றொரு பெரு வெடியை எடுத்து வீசினார் ஏஸ்லாபி.

“நீங்களாக அழைக்கவில்லையா?” இதயசந்திரன் கேள்வியில் வியப்பு இருந்தது.

“இல்லை.” கவர்னர் சர்வசாதாரணமாகப் பதில் கூறினார். “அப்படியானால்…?”

“ஒருவன் மூலம் செய்தி வந்தது பானுதேவியிடமிருந்து!”

“என்னவென்று?”

“தான் இந்த விருந்தில் கலந்து கொள்ள விரும்புவதாக.”

“யார் மூலம் வந்தது அந்தச் செய்தி?”

கவர்னரின் அடுத்த பீரங்கி வெடித்தது. ”மானுவல் டீ காஸ்ட்ரோ என்பவனை உனக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்” என்ற கவர்னரின் சொற்கள் இதயசந்திரன் இதயத்தின் மீது பெருவேகத்துடன் பாய்ந்தன.

இதயசந்திரன் கண்களில் தீப்பொறி பறந்தது: ”தெரியும் அவனை” என்றான் சீற்றத்துடன்.

“அவன் மூலம்தான் செய்தி வந்தது’’ என்றார் கவர்ன ர்.

“அவனுக்கும் பானுதேவிக்கும் உள்ள சம்பந்தம்?” என்று சீறினான்.
“அதை நீதான் கண்டுபிடிக்க வேண்டும்” என்ற கவர்னர் முகத்தில் சிந்தனை ரேகை படர்ந்தது.

”அவன் பரம அயோக்கியன்” என்று சுட்டிக்காட்டினான் இதயசந்திரன்.

“சில காரியங்களுக்கு அயோக்கியர்கள் தேவையாயிருக்கிறது” என்ற கவர்னர் பொருள் துலங்கும் பார்வையொன்றை வீசினார் இதயசந்திரன்மீது.

“இருக்கலாம். ஆனால், அயோக்கியர்கள் பணி, முடிவில் விபரீதப் பலனைத்தான் அளிக்கும்.”

“சற்று எச்சரிக்கையுடன் இருந்தால் விபரீதப் பலனைத் தடுக்கலாம். அறிவைத் தீட்டி வைத்துக் கொண்டால் அயோக்கியர்களை உபயோகப்படுத்திக் கொள்ளவும் செய்யலாம்.”

“அப்படியானால் நீங்களும் டி காஸ்ட்ரோவை உபயோகப்படுத்திக் கொள்வீர்களா?”

“கொள்வீர்களா என்பதைவிட கொள்கிறீர்களா என்று கேட்பது பொருந்தும். காஸ்ட்ரோ இப்பொழுது எனது கடற்படையில் ஒரு கப்பலின் தலைவன்.”

இதயசந்திரன் அப்படியே கல்லாய் சமைந்து நின்றான். சில வினாடிகள் கழித்துக் கேட்டான், “இத்தகைய அயோக்கியனை ஏன் கப்பல் தலைவனாக்கினீர்கள்?” என்று .

“முன்னமே சொன்னேனே, எந்த அயோக்கியனும் சில அலுவல்களுக்கு உபயோகப்படுவானென்று’ என்று கவர்னர் மீண்டும் சுட்டிக்காட்டி இளமுறுவல் கொண்டார்.

இதயசந்திரன் சற்று நேரம் சிந்தித்தான். பிறகு கேட்டான், ”கவர்னர் பிரபு! நான் வெளிப்படையாக ஒன்று கேட்க விரும்புகிறேன். கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?” என்று.

“கேள் இதயசந்திரா! வீரர்களிடத்தில் எதைக் கேட்டுக் கொள்வதும் தவறாகாது!” என்ற கவர்னர் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கும் பாவனையில் நன்றாக நிமிர்ந்து நின்று கொண்டார்.

“நீங்கள் எதற்காக பானுதேவிமீது இந்த காஸ்ட்ரோவை ஏவியிருக்கிறீர்கள்?” என்று வினவினான் இதயசந்திரன் தனது கண்களைக் கவர்னர் கண்களுடன் துணிவுடன் சந்திக்கவிட்டு.

“உன் ஊகம் இங்குதான் தவறிவிட்டது இதய: சந்திரா” என்றார் கவர்னரும் கம்பீரமான குரலில்.

”தவறிவிட்டதா பிரபு?”

“ஆம் தமிழா.”

“பின் உண்மையென்ன?”

கவர்னர் சொற்கள் அழுத்தமாக வெளிவந்தன. “பானுதேவிதான் எங்கள் மீது டீ காஸ்ட்ரோவை’ ஏவியிருக்கிறாள். உண்மையில் அவன் பானுதேவிக்காக எங்கள் மீது வேவு பார்க்கிறான். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை” என்றார்.

“வேறு எதற்குக் கவலைப்படுகிறீர்கள் பிரபு?”

“கையும் களவுமாக டீ காஸ்ட்ரோ கிடைத்தால் அவனைத் தூக்கில் போடுவேன். சதியில் பானுதேவி ஈடுபட்டால் சட்டப்படி அவளையும் நான் தண்டிக்காமல் விடமுடியாது. அத்தகைய நிலை ஏற்பட்டால் அது எனக்கு மிகவும் சங்கடம். பெண்களைத் தண்டிப்பது என் சுபாவத்துக்கு விரோதம். தவிர ஒரு பெரிய ஹிந்து ராஜ குடும்பத்துக்கு நான் மாசு விளைவிக்கவும் விரும்பவில்லை’” என்றார் அவர் ஒரே சீரான, ஆனால் உறுதியான குரலில்’.

கவர்னரின் பெருந்தன்மை , ஆனால் கடமையில் உள்ள உறுதி இரண்டும் இதயசந்திரன் இதயத்தைப் பெரிதும் கவர்ந்ததால் அவன் நன்றி ததும்பிய கண்களை அவர்மீது நிலைக்கவிட்டான். பிறகு மெல்லக் கேட்டான், “பிரபு! இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறீர்கள்?” என்று.

“நீ அவளை ஒரு காலத்தில் காதலித்ததாக வதந்தி இருக்கிறது. இப்பொழுதுகூட அவளை நீ காப்பாற்ற லாம். வேவுத் தொழிலைவிட்டு அவளை ஸதாராவுக்குப் போகச் சொல். டீ காஸ்ட்ரோவை நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றார் கவர்னர்.

இதயசந்திரன் நன்றியுடன் தலை வணங்கினான். அவன் புறப்பட எத்தனிக்கையில் ஏஸ்லர்பி அவனை நோக்கிக் கேட்டார், “அரச மகள் இருப்பிடம் உனக்குத் தெரியுமா?” என்று.
“கனோஜி சொல்லியிருக்கிறார்.”

“அப்படியானால் போய் வா!” என்று தமிழனுக்கு விடை கொடுத்த கவர்னர் , “வெளியே தங்குவதானாலும் நான் உனக்கு இடம் தர முடியும்” என்று அன்புடன் கூறவும் செய்தார்.

“வேண்டாம் பிரபு! நானே இடம் பார்த்துக் கொள் கிறேன்” என்று கூறிவிட்டு மீண்டுமொரு முறை கவர்னருக்குத் தலைவணங்கி அறைக் கோடியில் எதுவு மறியாத பூனைபோல் உங்கார்ந்திருந்த மிஸ்டர் ப்ரௌனுக்கும் தலை தாழ்த்திவிட்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய இதயசந்திரன் புத்தி பலவிதமாகக் குழம்பிக் கிடந்தது.

மகாராஷ்டிர அரச குடும்ப விரோதங்களுக்குப் பம்பாய் பெரிய சதிக்கூடமாகிவிட்டதை நினைத்து மனம் புழுங்கியவண்ணம் நீண்டநேரம் தனது புரவியின் மீது ஏறாமல் அதன் பக்கத்திலேயே நின்றிருந்தான். பிறகு ஒரு பெருமூச்சுவிட்டு அதன் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்த போதும் கவலை அவன் சித்தத்தை உடைத்துக் கொண்டிருந்தது. மகாராஜா ஷாஹுவிடமிருந்து அரசு பறிபோகக் கூடாதென்று கனோஜியின் மனைவி கஹினா கொடுத்த கடிதம் அப்பொழுதும் அவன் இடைக் கச்சையிலிருந்ததால் அதைத் தட்டிப் பார்த்துக் கொண்டான். ‘கனோஜி ராஜாராமின் இளைய மனைவி தாராபாயின் பக்கம், கனோஜியின் மனைவி கஹினா மகாராஜா ஷாஹுவின் பக்கம். ஷாஹு எதிர்க்க கனோஜி பிரிட்டிஷ் சமாதானத்தை நாடுகிறார். அதற்கு முன்பே இங்கு பானுதேவி வந்து ஏதோ சதி செய்கிறாள். இப்படியே அரசர்களின் உட்பகையே ஹிந்து சமுதாயத்தை அழிக்க முற்பட்டுவிட்டால் மாற்றார் அதை அழிப்பது எத்தனை சுலபம்?’ என்று எண்ணினான்.

அத்துடன் தான் தமிழகத்திலிருந்து வந்த காரியத்தை யும் எண்ணிப் பார்த்தான். ‘நான் வந்தது மகாராஷ்டிர சாம்ராஜ்ய மூன்றாவது வாரிசைத் தேட. ஆனால் இரண்டரை ஆண்டுகளில் அது பற்றிய முயற்சி குறைவு. மற்ற ஈடுபாடுகள் அதிகம்’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான். இத்தனைக் குழப்பத்திற்கும் காரணம் மூன்று பெண்களேயென்பதும் அவனுக்குத் திட்டமாகத் தெரிந்தது. ‘பானுதேவியின் ஏவலில்லா விட்டால் கனோஜியிடம் சிக்கியிருக்க மாட்டேன். மஞ்சுவின் உறவு இல்லாவிட்டால் ஜல தீபத்தின் தளபதியாயிருக்க மாட்டேன். ஜலதீபத்தின் தளபதியாயிராவிடில் காதரைனைச் சந்தித்திருக்க மாட்டேன். சந்தி சிரித்திருக்க வும் மாட்டேன். பம்பாய்க்கு வந்ததும் அவளால் தானே’ என்று மூன்று பெண்கள் மேலும் குற்றத்தைச் சுமத்தி விட்டுப் புரவியைப் பிடித்த வண்ணம் காஸில் என்று பெயர் பெற்ற கவர்னர் மாளிகையிலிருந்து சிறிது தூரத்திலிருந்த கடலோடிகளின் குடிசைக் கூட்டத்துக்கு வந்தான்.

மகாராஷ்டிர பரம்பரை மாலுமிகளின் சதுக்கத்தில் ஏராளமான குடிசைகளிருந்தன. சில சிறு கட்டிடங்களு மிருந்தன. அந்தக் கட்டிடங்களை நோக்கி நடந்த இதய சந்திரன் அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு வந்து ஒரு சிறு கட்டிடத்துக்கு எதிரே நீண்ட நேரம்

கடற்கரை அதிர்ச்சி நின்றான். “இதுவாகத்தானிருக்க வேண்டும்” என்று கூறிக் கொண்டு புரவியை வாசலிலேயே நிற்க வைத்துவிட்டு உள்ளே நுழைந்தான். அந்தக் கட்டிடத்தின் முதல் உள் கூடம் மிகப் பெரிதாயிருந்தது. பல நாட்டு மாலுமி களும் இதர வழிப் போக்கர்களும் அதில் தங்கியிருந்தார் கள். அந்தச் சத்திரத்தின் முதல் கூடத்தில் புகுந்த இதய சந்திரன் “இந்தச் சத்திரத்தின் நிர்வாகி யார்?” என்று விசாரித்தான் அங்கிருந்த ஒருவனை நோக்கி.

அங்கு தரையில் ஒரு மரப்பெட்டிக்கருகில் உட்கார்ந்து கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவன் இதயசந்திரனை ஏற இறங்கப் பார்த்தான் ஒருமுறை. பிறகு எழுந்து வந்து, “உங்கள் அறை இந்தக் கட்டிடத்தின் பின்கட்டி லிருக்கிறது” என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு சென்று அறையைக் காட்டினான். “உங்கள் புரவியை நான் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் நீராடி இளைப்பாறுங்கள்” என்று பணிவுடன் கூறிவிட்டு வெளியே செல்ல முயன்றான்.

இதயசந்திரன் இதயத்தைச் சொல்லவொண்ணா வியப்பு ஆக்கிரமித்துக் கொண்டாலும் அதை வெளிக்குக் காட்டாமல் நீண்ட நேரம் அறையில் படுத்துக் கொண் டான். மாலை நேரம் வந்ததும் மேலைக் கடற்கரைக்குச் சென்றான், அலைகளில் அமிழ்ந்து நீராடி உடலின் ஆயாசத்தையும் உள்ளக் குழப்பத்தையும் ஒரு நிதானத் துக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன்.

கடலலைகள் அன்று பெரிதாக இருந்தன. முதன் முதலாகத் தன்னைக் கொங்கணித் தரையில் உருட்டிவிட்ட அந்த அலைகளின்மீது கோபப்பட்டவன்போல அவற்றை எதிர்த்து எதிர்த்து நீந்தினான். அலைகள் அவனை நோக்கி உருண்டோடி மலைபோல் எழுந்து இரைந்து, ‘ஹோ’ என்று நகைத்தன. நீண்ட நேரம் எதிர் நீச்சலிட்டு அவன் கரையேறி, தலை துவட்டக் கீழ்ச் சராயை மட்டும்

அணிந்து தோள் மீது அங்கியையும் துண்டையும் போட்டுக் கொண்டு கிளம்பினான். அப்பொழுது நன்றாக இருட்டி விட்டதனாலும், சற்றுத் தூரத்தில் மாலுமி குடிசைகளின். விளக்குகளும், கட்டிட விளக்குகளும் அவனுக்கு அடையாளம் காட்டி இப்படி வரலாமென்று அழைத்தன. இருப்பினும் அவன் கட்டிடங்களை நோக்கிச் செல்லாமல் கடற்கரையோரமே நடந்தான். நடந்தவன் காலில் ஏதோ இடரவே கீழே குனிந்து நோக்கினான். நோக்கியவன் மிதமிஞ்சிய திகிலுக்குள்ளாகி, கல்லாய்ச் சமைந்து நீண்ட நேரம் நிலைத்து நின்றான். “குற்றம், குற்றம், பெரும் குற்றம்” என்ற சொற்கள் பெரும் பீதியுடன் அவன் உதடுகளிலிருந்து உதிர்ந்தன. அவன் கண்டது அவன் சிந்தையி லிருந்தும் அறவே அகன்றுவிட்ட ஒரு பேரற்புதம்.

Previous articleJala Deepam Part 3 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch4 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here