Home Historical Novel Jala Deepam Part 3 Ch5 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch5 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

55
0
Jala Deepam part 3 Ch5 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch5 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch5 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 5 அரசியல் தர்க்கம்

Jala Deepam Part 3 Ch5 | Jala Deepam | TamilNovel.in

இந்தியாவுக்கு வந்த ஓரிரு ஆங்கிலப் பிரபுக்கள், முக்கியமாக கவர்னர்கள் உபயோப்படுத்தி வந்த பீட்டன் வகையில் அமைக்கப்பட்ட புரவி வண்டியில் தன்னை ஏறி உட்காரச் சொல்லிப் பிறகு தானும் ஏறி உட்கார்ந்து கொண்ட பானுதேவி, வண்டியின் சாரதியிடம் போக வேண்டிய இடத்தைப்பற்றி ஏதும் சொல்லவில்லை யென்பதைக் கவனித்த இதயசந்திரன், அதைப்பற்றிச் சிறிது முதலில் ஆச்சரியப்பட்டாலும், ‘போக வேண்டிய இடம் பானுதேவியின் இருப்பிடம்தானே. அதைப்பற்றிச் சொல்வானேன்?’ என்று சமாதானம் செய்து கொண்டான். ஆனால் அந்த வண்டி சென்றது அவள் இருப் பிடத்திற்கில்லை என்பதையும், தனது இருப்பிடத்திற் கருகில் வந்து அது நின்றுவிட்டதையும் கவனித்த இதய சந்திரன் மீண்டும் வியப்பின் வசப்பட்டு, “இங்கு ஏன் வந்திருக்கிறது வண்டி?” என்று வினவினான் பானு தேவியை நோக்கி.

“நீங்கள் போய் வேறு ஆடை அணிந்துவர. இந்த நனைந்த ஆடையுடனும் குளித்த உடலுடனும் என்னிருப் பிடம் நீங்கள் வரமுடியாதல்லவா?” என்றாள் பானுதேவி மிக அலட்சியமாக. நனைந்த ஆடையைப் பற்றியும் குளித்த உடலைப் பற்றியும் அவள் பேசிய போது அந்தப் பேச்சில் பழைய அன்போ, காதலோ, வேறுவித இன்ப ஒலியேர் காணப்படவில்லை. பட்டவர்த்தனமாக உள்ள நிலையை எடுத்து வேலைக்காரனுக்கு விளக்கும் அதிகாரமே இருந்தது அந்த அரசகுல மகளின் பதிலில்.

அவள் குரலிலிருந்த அலட்சியத்தையும் அதிகாரத்தை யும் கவனிக்கவே செய்த இதயசந்திரன், அவள் தன் மனத்தைச் சுற்றிப் பெரிய இரும்பு வேலியைப் போட்டுக் கொண்டுவிட்டாள் காதல் சம்பந்தப்பட்டவரை, என்ப தைப் புரிந்து கொண்டான். ‘அப்படி என்னை அடியோடு அலட்சியப்படுத்துவது அவசியமானால், என்னை அழைத்துவர யாராவது ஒரு காவலனை ஏவியிருக்கலாமே? தானே நேரில் வரவேண்டிய காரணமென்ன? அதுவும் நீராடுமிடமறிந்து அங்கு வந்து புலி நக ஆபரணத்தை என் காலடியில் வீசிவிட்டுத் தள்ளி நிற்பானேன்?’ என்றெல்லாம் யோசித்தான். எதற்கும் விடை காண சக்தியில்லாதவனாய் ஏதும் பேசாமல் சாலையி லிருந்து சத்திரத்துக்கு நடந்து சென்று வேறு ஆடை புனைந்து, கனோஜியின் மூன்றாவது மனைவி கஹினா கொடுத்த கடிதத்தையும் எடுத்துக்கொண்டு வந்து வண்டியில் ஏறிக்கொண்டான். வண்டி மறுபடியும் பறந்தது.

சுமார் இரண்டு நாழிகைப் பயணத்துக்குப் பிறகு, ஒரு மேட்டு நிலத்திலிருந்த தோப்புக்கருகில் வண்டி வந்து நின்றதும், சாரதி கதவைத் திறந்துவிட கீழே இறங்கிய பானுதேவி இதயசந்திரனையும் கீழே இறங்கும்படி சைகை காட்டினாள். கீழே இறங்கிய இதயசந்திரன் ஓர் அடர்த்தி யான தோப்பின் முன்பு தான் நிற்பதை உணர்ந்தான். அந்தத் தோப்பும் சிறு குன்று ஒன்றின்மீது இருந்ததையும் அந்தக் குன்றிலிருந்து சற்றுத் தூரத்தில் பெரிதாகக் கடல் சீறிக் கொண்டிருந்ததையும் கண்டான். அப்பொழுது நன்றாக இருட்டிவிட்டதால் தூரத்தே தெரிந்த கடல் கன்னங்கரேலென்று பயங்கரமாகக் காட்சியளித்தாலும், அலைகள் திட்டமாகத் தெரியாத காரணத்தாலேயே அதன் பயங்கரம் அதிகமாயிருந்தாலும் அவன் முன்பிருந்த தோப்புக்குள் விளக்குகள் சிறுகச் சிறுகத் தெரிந்தனவாகை யால், பயங்கரத்திலும் ஒரு சாந்தியிருந்தது அந்தச் சூழ்நிலையில். தோப்புக்குள் இரண்டு மூன்று வீடுகள் விட்டுவிட்டு இருந்ததும் புரிந்ததால், பானுதேவி மேற்கு ‘நோக்கிக் கையைக் கூப்பிவிட்டுத் தோப்புக்குள் நுழைந்ததால் அவளைப் பின்பற்றி இதயசந்திரனும் நுழைந்தான்.

மலைச்சரிவில் கரடுமுரடான பாறைப் பகுதியில் சிறிது தூரம் சிரமப்பட்டு அந்தத் தோப்புக்குள் குன்றின் உச்சியி லிருந்த ஒரு வீட்டின் முன்பு பானுதேவி வந்ததும், கதவுகள் தாமாகவே திறந்தன. உள்ளே பானுதேவியுடன் நுழைந்ததும் கதவைத் திறந்துவிட்டு அதன் பின்புறம் நின்றிருந்த காவலன் பானுதேவிக்கும் தனக்கும் வணங்குவதைக் கண்ட இதயசந்திரன் இந்த விடுதியை நோக்கி வருபவர்களை முன்கூட்டிப் பார்க்க இங்கு ஏற்பாடு ஏதோ இருக்க வேண்டும்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அவனை பானுதேவி உள்கூடத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஆசனங்களில் ஒன்றில் அமரச் செய்தாள். அந்த விடுதி பெரிய மாளிகையுமில்லாமல் சிறிய சாதாரண விடுதியாகவுமில்லாமல் நடுத்தரமாயிருந்ததை வீட்டின் முன்பு வரும்போதே கவனித்திருந்த இதயசந்திரன் அதன் உட்கூடமும் எந்தவித ஆடம்பரமுமில்லாமல் இரண்டொரு ஆசனங்களுடன் கீழே சாதாரண விரிப்பொன்றுடனுமிருந்ததைப் பார்த்தான். கூடத்தில் அதிக ஆசனங்களோ திண்டு திவாசுகளோ இல்லாது போனா லும் கூடம் மிக அழகாகக் காட்சியளித்தது. கூடத்தி லிருந்து சென்ற உள்ளறை வாயிற்கதவுகள் அழகிய திரைச் சீலைகளில் மறைக்கப்பட்டிருந்தன. கூடத்தின் சாளரங் களை வாசனை மலர்க்கொடிகள் மறைத்திருந்தனவாதலால், மலர்களின் நறுமணம் கூடத்தில் பரவியிருந்தது. கூடத்தின் கூரையிலிருந்து தொங்கிய ஒரு மண்ணெண்ணெய் ‘பவர் விளக்கு’ கூடத்திற்குச் சுமாரான ஒளியை அளித்திருந்தது. அந்த விளக்கு தான் உட்கார்ந்திருந்த ஆசனத்திற்கு நேர் உயர இருந்ததை அறிந்த இதய சந்திரன், ‘அறைக்குள்ளிருப்பவர்கள் யாராயிருந்தாலும் என்னைத் தெளிவாகப் பார்க்க முடியும். வெளிச்சத்தி லுள்ள நான் அறை இருட்டிலுள்ளவர்களைப் பார்க்க முடியாது. அறையிலிருந்து வீசப்படும் எந்த ஆயுதத்துக்கும் நான் பலியாக முடியும்’ என்று நினைத்துப் புன்முறுவல் செய்தான்.

அவனைக் கூடத்தில் விட்டு அறை ஒன்றுக்குள் சென்று யாரிடமோ ஏதோ பேசிவிட்டுத் திரும்பிவந்த பானுதேவி, அவனை நோக்கிப் புன்முறுவல் செய்தாள். “வேண்டுமா னால் விளக்கைவிட்டுத் தள்ளிச் சாளரத்தின் மூலையில் ஆசனத்தை இழுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறவும் செய்தாள்.

இதயசந்திரன் சற்று லேசாக நகைத்துவிட்டுச் சொன் னான், “தேவி! மனிதர்களின் உட்கருத்தை அறிவதில் உங்களைவிடச் சிறந்தவர் ஒருவர்தானிருக்கிறார்!” என்று.

பானுதேவி சிரித்தாள். பவள இதழ்கள் திறந்து நல் முத்துக்கள் தெரிந்தபோது அவள் முகம் மோகனாகாரமா யிருந்ததை இதயசந்திரன் கவனித்தான். சிரித்த நிலையில் கன்னத்திலேற்பட்ட சிறு குழியும், கண்களில் அதிகப்படி யாகத் தெரிந்த ஒளியும் அவள் அழகு இணையற்றதென் பதை நிரூபித்தன. அப்பொழுதுதான் அவள் தலை முக்காட்டை நழுவவிட்டிருந்ததால் வைரச் சுட்டியைச் சுற்றிக் கலைந்து குழல்கள் அவள் அழகுக்கு ஓர் எல்லையை நிர்ணயிக்க முடியாதென்பதை எடுத்துக்காட்டின. பவர் விளக்கின் ஒளி வீச்சில் தெரிந்த அவள் உடலின் ஒவ்வொரு பகுதியும் காமக்கணைகளை அள்ளிச் சொரிந்தன. ஆனால் உதடுகள் அள்ளிச் சொரிந்தது, காமக்கணைகளை அல்ல; அரசியல் விவரங்களை எடுத்துக் கூறின. அவள் சிரிப்பை அடுத்து எழுந்தது கேள்வி, “யாரந்த மனிதர்? கொள்ளைக் காரரா?” என்று.

இதயசந்திரன் முகத்தில் கடுமை சற்றே படர்ந்தது. “மகாராஷ்டிர கடற்படைத் தலைவரைக் கொள்ளைக் காரரென்று அழைப்பது நியாயமல்ல. பகைவராயிருந்தாலும் மதிப்புக் கொடுப்பது பண்பு” என்றான் கடுமையுடன்.

பானுதேவி மிகக் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றாள். “வீரரே! ஒரு நாட்டின் பகைவன் அந்நாட்டு மன்னனுக்கு எதிராகச் செயல் புரிபவன். இப்பொழுது நாட்டு மன்னர் ஷாஹு. மன்னனை எதிர்ப்பவன் பிற நாட்டினனாயிருந்தால் அவன் பகைவன் எனப்படுவான். உள் நாட்டவனாகயிருந்தால் அவன் துரோகி எனப்படுகிறான். கடலில் மன்னர் ஆக்ஞாபத்திரம் பெற்றவனும் மன்னரால் நிய மிக்கப்பட்டவனுமான ஒருவனுடைய அதிகாரத்தின் கீழ் உலவும் கப்பல்கள் நாட்டின் கப்பல்களாகும். அவற்றைத் தலைமை தாங்கி நடத்துபவன் கடற்படைத் தலைவனாகிறான். அரசர் அனுமதியின்றி நாட்டு விரோதிகளுடன் இணைந்து இஷ்டப்படி தானே தஸ்தக் கொடுத்துக் கப்பல்களைத் தாக்கிச் சொத்துக்களைப் பறிப்பவன் கொள்ளைக்காரனாகின்றான். இந்த தத்துவத்தின் அடிப் படையில் கனோஜியைப் பாருங்கள்” என்று கூறினாள் பானுதேவி, நிதானமான குரலில், பெரிய உத்திரவுகளைப் பிறப்பிக்கும் அரச தோரணையில்.

அவள் முகத்தில் அதிக உணர்ச்சிகள் பிரதிபலிக்காத தையும், கம்பீரமாகவும் அமைதியாகவும் முகம் இருந்ததையும் இதயசந்திரன் கண்டான். பிரிட்டிஷ் ஆதரவைப் பெறவோ தனது சார்பாக வேறு எந்த ஏற்பாடுகளில் முனையவோ ஷாஹு மன்னர் பானுதேவியைவிடச் சிறந்த ராஜதந்திரியைப் பம்பாய்க்கு அனுப்பியிருக்க முடியாதென்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டான். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடனே பதிலும் கூறினான், “தேவி! உங்கள் தத்துவங்கள் பொதுவில் சரி. ஆனால், உள்ள நிலைமைக்கு ஒவ்வாத தத்துவங்கள் அவை. மகாராஷ்டிரத்துக்கு மன்னன் ஒருவன் மட்டுமிருந்தால் அவனை எதிர்ப்பது குற்றமாகும். எதிர்ப்பவன் துரோகி யாவான். எதிர்ப்பவன் கடற்பகுதியில் இருந்தால் அவன் கொள்ளைக்காரனாகவும் ஆவான். ஆனால், இப்பொழுது மகாராஷ்டிரத்துக்கு இரண்டு வாரிசுகள் இருக்கிறார்கள். நான் வேறு மூன்றாவது வாரிசைத் தேடி வந்திருக்கிறேன். மூன்றாவது வாரிசின் இருப்பிடம் தெரியவில்லையாதலால் அவரை ஒதுக்கி விட்டாலும் தெரிந்த வாரிசுகளில் இருவரில் ஒருவர் கனோஜியை ஸார்கேலாக நியமித்திருக்கிறார். ஆகவே ஷாஹு மகாராஜாவின் பார்வைக்கு கனோஜி கொள்ளைக்காரரானாலும் இன்னொருவர் பார்வையில் அவர் கடற்படைத் தலைவரல்லவா?” என்று கேட்டான்.

கலகலவென நகைத்தாள் பானுதேவி பதிலுக்கு. “தமிழக வீரரே! கனோஜியைக் கடற்படைத் தலைவராக இன்னொரு வாரிசு நியமிக்கவில்லை. ‘நியமித்தது அவர் தாயார். அரசு ஆசை பிடித்த ஒரு பெண்” என்று சுட்டிக் காட்டினாள் நகைப்புக்கிடையே.

இதயசந்திரன் இதழ்கள் இளநகை பூத்தன. ‘தேவி! மகாராஷ்டிரத்தின் ஒவ்வொரு வாரிசுக்கும் முன்னால் இருப்பது ஒரு பெண்தான். முதல் வாரிசுக்கு வாதாடத் தாங்கள், இரண்டாவது வாரிசுக்கு வாதாட மகாராணி தாராபாய். மூன்றாவது வாரிசுக்கு மகனைத் தேட என்னை அனுப்பிய தஞ்சையிலுள்ள ராஜாராமின் ரகசிய மனைவி. இந்த மூன்று பெண்கள் இல்லாவிட்டால் இந்த வாரிசுகளின் கதி அதோ கதிதான்” என்றான் இதய சந்திரன் புன்முறுவலுக்கிடையில்.

அவன் சொற்களில் புதைந்து கிடந்த ஏளனத்தைப் புரிந்துகொள்வதில் எந்தச் சிரமுமில்லை பானுதேவிக்கு.

“வீரரே, எந்தச் சர்ச்சையிலும் பெண்கள் இடையில் தான் வருகிறார்கள். ஆரம்பக் காலத்திலிருந்து, புராணக் காலத்திலும் அப்படித்தான். பிற நாட்டார் இங்கு காலடி எடுத்து வைத்துள்ள இந்தக் காலத்திலும் அப்படித்தான். ஆனால் எதுவும் நிலையான நியாயா நியாயங்களையும் தர்மாதர்மங்களையும் பொறுத்திருக்கிறது. இப்பொழுது மகாராஷ்டிரத்தில் சிவாஜி மகாராஜா நிறுவிய ஸதாரா வின் அரியணையில் வீற்றிருப்பது ஷாஹு மன்னர். அவர் தான் இப்பொழுது மன்னராவார்!” என்று சுட்டிக்க காட்டினாள் பானுதேவி.

“அரியணைகளில் அமருபவர்களையெல்லாம் நாடு மன்னரென்று ஒப்புக்கொள்வதில்லை. அவுரங்கசீப்பும் டில்லி அரியணையில் அமர்ந்துதானிருந்தார். அவரை நாட்டு .மன்னராக ராஜஸ்தானமும் ஒப்புக் கொள்ள வில்லை, மகாராஷ்டிரமும் ஒப்புக் கொள்ளவில்லை. அரியணை ஒரு சின்னம். அந்தச் சின்னம் குறிப்பிடும் கொள்கைக்கு மன்னன் தகுந்தவனா என்பதை நாட்டு மக்கள் ஆராய்கிறார்கள்” என்றான் இதயசந்திரன்.
“ஷாஹு மன்னரிடம் என்ன குறை கண்டீர்கள்?” பானுதேவியின் கண்களில் லேசாகச் சீற்றம் துளிர் விட்டது.

“ஏதும் குறை காணவில்லை. அவர் அவுரங்கசீப் பிடம் வளர்ந்தவர். ‘எந்த மொகலாயர்களை எதிர்க்க அவர் பாட்டனார் சிவாஜி ஆயுள் முழுவதும் போராடி. னாரோ அதே மொகலாயர்கள் ஆதரவால் அரியணை ஏறியிருப்பவர். ஆகவே சில தேச பக்தர்கள் அவரை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்” என்றான் இதய: சந்திரன்.

”அந்தப் பக்தர்களில் கனோஜியும் ஒருவரா?” என்று கேட்டாள் பானுதேவி.

“அது தெரியாது எனக்கு, தேவி! ஒன்று மட்டும். தெரியும். சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது.”

“சொல்லுங்கள்.”

“இன்றைய நிலையில் மகாராஷ்டிரத்தையும் பரத கண்டத்தையும் காக்க ஒரே ஒரு மனிதனால் தான் முடியும். அவர் தான் கனோஜி. அவர் ராஜத் துரோகியாயிருக்கலாம். நாட்டுத் துரோகியல்ல. கொள்ளைக்கார ராயிருக்கலாம். நாட்டுச் சொத்தைக் கொள்ளையடிக்கவில்லை. அவர் கொள்கையால் நாட்டுக்குச் சொத்து சேருகிறது, அவர் பலத்தால் நாட்டின் பயம் குறைகிறது. மிக புத்திசாலிகளான ஒரு கூட்டத்தார், அதுவும் ராஜ தந்திரத்தால் இணையிலாத கூட்டத்தார், இன்று நாட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் தான் பிரிட்டிஷார். அவர்களிடமிருந்து நாட்டைக் காக்க கனோஜி ஒருவரால்தான் முடியும். இல்லையேல் இந்த நாடு காலக்கிரமத்தில் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு விடும்” என்று வேகத்துடனும், உணர்ச்சிப் பெருக்குடனும் கூறினான் இதயசந்திரன்.

அந்தச் சமயத்தில் வந்தது ஓர் இடையீடு. ”அப்படி நாட்டை விழுங்குபவர்களுடன் சமாதானம் பேச நீ ஏன் வந்தாய் இங்கு” என்ற குரலொன்று ஊடுருவி வந்தது பக்கத்திலிருந்த அறையிலிருந்து. குரல் வந்த திசையை நோக்கிய இதயசந்திரன் வாயடைத்து நின்றான். திடீரென ஆசனத்தைவிட்டு எழுந்திருக்கவும் செய்தான். “உட்கார் அப்படியே!” என்ற அந்தக் குரல் அதட்டவே மீண்டும் செயலற்றுப் பதுமைபோல் ஆசனத்தில் உட்கார்ந்தான் தமிழக வீரன்.

Previous articleJala Deepam Part 3 Ch4 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch6 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here