Home Historical Novel Mannan Magal Part 2 Ch 25 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 25 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

108
0
Mannan Magal part 2 Ch 25 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 25 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 25 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 25 வெள்ளமும் தோணியும்

Mannan Magal Part 2 Ch 25 | Mannan Magal | TamilNovel.in

காதலுக்குத் தனிச் சூழ்நிலை தேவையில்லை. வேண்டிய சூழ்நிலையை அதுவே சிருஷ்டித்துக் கொள்கிறது. ஆசையாகிற காற்றினால் மோகமாகிற அலைகள் உந்தப்படும்போது பருவ வேட்கையாகிற சமுத்திரம் பிரளயம்போல் பொங்கி எழுந்து, இதர சப்தங்கள், பிரதேசங்கள் எல்லாவற்றையுமே முழுக அடித்து, பிரத் யேகமாகத் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொள்கிறது. ஆண் பெண் உணர்ச்சிகள் மட்டுமே உற வாடக்கூடிய அந்த இன்ப சாம்ராஜ்யத்தில், வேறு சக்திகளுக்கு இடம் இருப்பதில்லை. அத்தகைய ஒரு சாம் ராஜ்யத்திலே சிக்கிக் கிடந்தாள் செங்கமலச் செல்வி. அவளுடைய இளமையின் சக்திகள் வீசிய இன்பக் கயிறுகள், கரிகாலனையும் கட்டியிழுத்து மெள்ள மெள்ள அந்தச் சாம்ராஜ்யத்துக்கே இழுத்துச் சென்றுகொண் டிருந்தன.

மாலை முற்றி மையிருள் சூழ்ந்து இரவின் ஆதிக்கம் நன்றாக ஏறிவிட்டிருந்த சமயம் அது. அவள் அணைப்பிலே அவன் கிடந்த அந்த மாளிகைக்குப் புறம்பேயிருந்த சக்கரக் கோட்டப் பிரதேசத்தில், துயரமும் வெற்றிச் செருக்கும் கலந்த சூழ்நிலை பயங்கரத்தை எங்கும் பரப்பிக் கொண்டிருந்தது. ஈன்றெடுத்த புதல்வர்களை அன்றையப் போரிலே இழந்த தாய்மார்களும், கணவன்மார்களை இழந்து நூலறுந்து குங்குமமழிந்த மனைவிகளும், தந்தை இறந்து அநாதைகளாவிட்ட குழந்தைகளும் கிளப்பிய அழு குரல்கள், பற்பல வீதிகளிலிருந்தும் எழும்பிக் கொண்டிருந்தன. அந்த அலறல்களை அடக்க ஆணையிடுவன போல் கோட்டைக்கருகே இருந்த கொட்டகைகளில் பிணைக்கப்பட்டிருந்த போர் யானைகள் பயங்கரமாய் பிளிறின. அத்துடன் வெற்றியடைந்த சோழ வீரர்கள் புரவிகளின் மீது வீதிகளில் உலாவி அமைதியை நிலை நிறுத்த இட்டுக் கொண்டிருந்த உத்தரவுகளும், போர் முடிந்ததும் மூலை முடுக்குகளில் ஒளிந்து கொண்டுவிட்ட மாசுணி வீரர்களைப் பிடித்திழுத்துத் தள்ளிக்கொண்டு செல்ல சோழ உபதலைவர்கள் ஆணையிட்டதால் உண்டான பேரரவமும் கலந்து ஒலித்ததால், கோட்டைத் தளம் முழுவதிலும் இன்பமோ அமைதியோ மருந்துக்கும் இல்லாத சூழ்நிலையே மண்டிக் கிடந்தது.

துன்ப ஒலிகளும் வெற்றிக் கோஷங்களும் நிறைந்த அந்தச் சூல்நிலை, கரிகாலன் படுத்துக் கிடந்த அந்த மாளிகை மீதும் மோதத்தான் செய்தது. கோட்டை தளத்தில் எழுந்த அழுகுரல்கள் கரிகாலன் பஞ்சணைக்கு அருகேயிருந்த சாளரத்தையும் துளைத்துக் கொண்டு புகுந்தன. அப்படி உள்ளே புகுந்த போதிலும் செங்கமலச் செல்வியின் உணர்ச்சி அலைகள் சிருஷ்டித்துவிட்ட இன்ப சாம்ராஜ்யத்தின் பெரும் கோட்டைச் சுவர்களை அவற்றால் சிறிதும் உடைக்க முடியாததால், அந்த அரணுக்கு வெளியிலேயே அவை ஆட்சி புரிய வேண்டிய தாயிற்று. அவள் கன்னக் கதுப்பு அவன் தலைமீது பதிந் திருந்ததால், பக்கவாட்டில் திரை போட்ட அவள் கரிய கூந்தல் அவன் முகத்துக்கு மட்டுமல்ல, வெளி உலகத்துக்கே பெரும் திரையைப் போட்டுவிட்டது.

செங்கமலச் செல்வி அன்று மலர்கள் ஏதும் அணியா விட்டாலும், தலைக்கு வாசனைத் தைலத்தைத் தடவி ஸ்நானம் செய்திருந்தாளாகையால், கோதிவிட்டு விரித் திருந்த அவள் கூந்தலிலிருந்து கிளம்பிய சுகந்தம், தாயின் நினைப்பால் துன்பக்கேணியில் நீந்திக்கொண்டிருந்த கரிகாலன் உள்ளத்துக்குப் பெரும் அமைதியை அளித்தது. அவள் மார்பிலே தவழ்ந்து கிடந்த பட்டுப்புடவை அவள் அழகிய தோளின் அசைவால் சற்றுத் தாழ்ந்து விலகியது காரணமாக உட்பக்கத்தில் பதிந்து கிடந்த தங்கச் சங்கிலியின் நவரத்தினப் பதக்கம் மட்டுமின்றி, அது உறவாடிக் கொண்டிருந்த இளமை பொங்கிய எழில் பிரதேசங்களும் பக்கவாட்டில் திரும்பிய அவன் கண் களுக்குப் புலனாகவே, அடியோடு சுயநிலை மறந்த கரிகாலன் தன் இடது கையை அவள் இடையைச் சுற்றி அலையவிட்டான்.

இனமறியாத இளங்கன்று பசும் புற்றரையைச் சுற்றி அலைவது போல் திரிந்த அவன் இடக்கரத்தின் ஸ்பரிசத்தால் அடக்க முடியாத உணர்ச்சிகளின் வசப்பட்ட செங்கமலச் செல்வி தன்னைத் திடப்படுத்திக் கொள்வதற்காக அவனது இன்னொரு கையின் விரல்களைத் தன் விரல்களோடு பின்னி இறுக்கிக் கொண்டாலும், அவன் விரல்கள் அங்கும் விவரிக்க இயலாத விந்தைகளை விளை வித்ததால், அவள் திடம் சுக்கு நூறாக உடைந்து உணர்ச்சி வெள்ளத்தை அவள் அழகிய உடலெங்கும் பரவவிடவே பஞ்சணையிலே துவண்டாள் அந்தப் பைங்கிளி.

அவள் முகம், அவன் தலையை விட்டுப் பக்கவாட்டில் சரிந்தது; கன்னம் கன்னத்தோடு இழைந்தது.

கமலமலரின் இதழ்களையும் பழிக்கும் அவள் செவ்விய இதழ்கள் ஏதேதோ இன்ப வார்த்தைகளை முணுமுணுத்தன.

அந்த அப்சரஸ் சிருஷ்டித்துவிட்ட சுவர்க்கத்திலே திண்மையும் மென்மையும் கலந்த அவள் உடல் அளித்த ஸ்பரிசத்திலே, தேனூறும் அவள் உதடுகள் ஊட்டிவிட்ட இன்பப் போதையிலே சிக்கி, உணர்வெல்லாம் இழந்த கரிகாலன் மனம், சக்கரக் கோட்டத்திலிருந்து எங்கோ பறந்து சென்றது. செங்கமலச் செல்வியின் அந்த ஸ்பரிசத்திலே வேறோர் அழகின் ஸ்பரிசத்தை அனுபவிக்கத் தொடங்கினான், பௌத்த மடச் சீடன். அவன் மனம் சக்கரக் கோட்டத்திலிருந்து வேறோர் இடத்துக்குப் பறந்து சென்றது. அவன் கண் முன்னே சாளுக்கியர்களின் பெரும் கோட்டையும் வசந்த மண்டபமும் எழுந்தன. வசந்த மண்டபத்தின் தோட்டத்தின் பகுதிகள் ஒவ்வொன்றும் அவன் மனக்கண் முன்னே தாண்டவமாடத் தொடங்கின. நந்தவனத்தின் மரங்களடர்ந்த அடர்த்தியான பகுதியும், அதன் இலைகளிலே புகுந்து தரையிலே கல்லிழைத்த வெண்மதியின் கிரணங்களும் அன்றுதான் ஏற்படுவன போல் தோற்றமளித்தன. அதோ, நந்தவனத்தின் நடுவேயுள்ள பூம்பொழில்! அந்தத் தோகை மயிலென்ன அந்த இடத்தில்தான் படுத்துக் கிடக்குமா? வசந்த மண்டபத்தின் முகப்பிலே பூத்து மஞ்சள் வாய் காட்டிச் சிரிக்கும் அந்தச் சம்பங்கிப் பூங்கொத்து என்ன சிரஞ்சீவியா? இத்தனை நாள் கழித்தும் வாடவில்லையே அது! அதோ வசந்த மண்டபத்தின் உட்புற அறை! அந்தப் பஞ்சணையில் மன்னன் மகளே படுத்துக் கிடக்கிறாளே! இப்படிப் பலவாறாக எண்ணமிட்டு உள்ளூரப் பேசிய அவன் மனம், மன்னன் மகளின் வனப்புப் பிரதேசங்களைக் கண்டதும் வாயடைத்து நின்றது.

பழகிய தந்தத்தைப் பழிக்கும் வழவழப்பான நிரஞ்சனாதேவியின் உடல் பஞ்சணையிலே புரண்டது. அப்படிப் புரண்டதால் மறைந்தும் வெளிப்பட்டும் ஜாலம் காட்டிய அழகம்சங்கள் அவனைப் பார்த்து நகைத்தன. பஞ்சணையில் புரண்ட அந்தப் பேரழகி எழுந்தாள். லாவண்யமெல்லாம் குலுங்க தெற்குப்புறச் சாளரத்தருகே சென்றாள், நின்றாள். அவனும் அவளை நெருங்கினான், மிகச் சமீபத்தில் நின்றான். அது என்ன, அவள் தலையிலிருந்த செண்பக மலரின் வாசனையா? அல்லது அவள் உடலுக்கே அந்த மணம் இருக்கிறதா? கிருஷ்ணா நதியி லிருந்து கிளம்பிய தென்றல் அவள் உடலைத் தழுவி வந்து அவன் மேலும் பட்டது. அந்தச் சுகத்தில் ஆடிய அவள் உடல் அவன் மீதும் பட்டது!

கரிகாலன் உள்ளத்திலிருந்து இன்பப் பெருமூச்சு கிளம்பியது. “தேவி” என்ற சொல் அதைத் தொடர்ந்து வெளிவந்தது.

“இல்லை, செல்வி!” என்ற இரண்டே சொற்கள் கரிகாலன் கனவுத்திரையைச் சரேலென்று கத்தி கொண்டு கிழித்ததால் அவன் உடல் ஒரு முறை குலுங்கியது. சட்டென்று பஞ்சணையில் எழுந்து உட்கார முயன்றான் அவன். ஏற்கெனவே செல்வியின் இடையிலே இருந்த கை அந்த இடைக்கு அடியிலே சிறைபட்டுக் கிடந்ததால் முழுவதும் உட்கார முடியவில்லை அவனால். அரையும் குறையுமாக எழுந்து உட்கார்ந்த நிலையிலேயே, பஞ்சணையில் கிடந்த அந்தப் பைங்கிளியாளைத் திரும்பிப் பார்த்தான்.

பஞ்சணையில் ஒயிலாகப் படுத்துக் கிடந்த செங்கமலச் செல்வியின் முகத்திலே காதல் பொங்கி வழிந்துகொண் டிருந்தது. அவள் உடல் அவன் அணைப்பை எதிர்ப் பார்த்துத் துன்பப்பட்டுக் கொண்டிருந்ததால், வேதனைக் குறியும் அவள் முகத்திலே தெரிந்தது. உணர்ச்சிகளின் வேகத்தை அடக்க முடியாமல் அவள் பெருமூச்சு விட்டதால், அவனை எதிர் கொண்டழைப்பனபோல், அவள் எழிலம்சங்கள் பெரிதாக மேல் நோக்கி எழுந்தன.

அவளைக் கரைகடந்த அநுதாபத்துடன் பார்த்தான் கரிகாலன். போர்க்கோலத்தில் கவசத்துக்குள்ளடங்கிய வீரசொரூபத்துடன் விளங்கவல்ல அவள் அழகிய உடல் குழந்தையின் சரீரம்போல் துவண்டு நெளிவதையும், புரவியின் பக்கவாட்டுகளில் பலமாக அணையும் அவள் கால்கள் கூடச் செயலற்றுக் கிடப்பதையும் கண்ட கரிகாலனும் துன்பப் பெருமூச்சு விட்டான். அவன் துன்பப் பெரு மூச்சைக் கண்ட செங்கமலச் செல்வி மெல்ல நகைத்தாள்.

“ஏன் நகைக்கிறாய் செல்வி?” என்று கேட்டான் கரிகாலன் மெல்லிய குரலில்.

அவள் கமல விழிகள் நன்றாக அகன்று அவனை ஏறெடுத்துப் பார்த்தன. அவள் உதடுகளும் லேசாக அசைந் தாலும் பேச்சு எதுவும் வெளியில் வரவில்லை.

“என்ன சொல்லுகிறாய் செல்வி?” என்று மீண்டும் கேட்டான் கரிகாலன்.

“செல்வியல்ல, தேவி!” என்று சொல்லிவிட்டு, துன்பப் புன்னகை காட்டினாள் அரையன் ராஜராஜன் மகள்.

“தேவியா?”

“ஆம், தேவிதான்.”
“புரியவில்லையே செல்வி.”

“நிலைமை இருவருக்கும் புரிந்துதானிருக்கிறது. விடை தான் புரியவில்லை.”

“என்ன நிலைமை? என்ன விடை?”

“சொல்லட்டுமா?”

“சொல்லேன். அதற்காகத்தான் கேட்கிறேன்.”

“உங்கள் நினைப்புக்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது.”

“நினைப்பு, பார்வை, வித்தியாசம்! புதிர் போடுகிறாயா செல்வி?”

“புதிர் ஒன்றுமில்லை. நீங்கள் நினைப்பது தேவி. ஆனால் பார்ப்பது செல்வி.”

அவள் சொன்னதை நன்றாகப் புரிந்து கொண்டான் கரிகாலன். இருந்தாலும் புரியாதது போலவே கேட்டான். “தேவியாவது! என்ன சொல்கிறாய்?” என்று.

செங்கமலச் செல்வியின் வலக்கரம் எழுந்து அவன் வலக்கரத்தைப் பற்றிக்கொண்டது. “என்னை ஏமாற்ற வேண்டாம் பிரபு! ஏமாற்றவும் உங்களால் முடியாது. உங்கள் வாயால் சொல்ல இஷ்டமில்லாததை நானே சொல்+கிறேன். உங்கள் நினைப்பெல்லாம் நிரஞ்சனா தேவியிடம் இருக்கிறது. நான் உங்கள் அருகிலே இருக்கிறேன். அவள் வெகு தொலைவில் இருக்கிறாள். ஆனால், உங்கள் உள்ளம் தொலைவில் உள்ள அவளிடம்தான் ஒன்றிக் கிடக்கிறது. உடல் மட்டும்தான் என்னருகே இந்த பஞ்சணையிலிருக்கிறது. இதை நன்றாக நானறிவேன். இன்னமும் அறிவேன் ஆனால்.” என்று வார்த்தையை நிறுத்தி முகத்தை ஒரு பக்கமாகத் தலையணையில் திருப்பிக்கொண்டாள் செங்கமலச் செல்வி.

“ஆனால் என்ன செல்வி?” கரிகாலனும் கேட்டான் தன் இடது கையை அவள் இடுப்பினின்றும் விடுவித்துக் கொண்டு.

“எவ்வளவோ வெட்கத்தை விட்டுத்தான் உங்களிடம் வருகிறேன். இருப்பினும் வெளிவிட்டுச் சொல்வதற்கும் அளவு இருக்கிறதல்லவா?” இதை அவள், முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டே சொன்னாள். ஆனால் அவன் கரத்தை அழுத்திய அவள் மலர்க் கரம் மீதிக் கதையைச் சொல்லியது.

அட பைத்தியமே! இது புரியவில்லையா உனக்கு? என் அணைப்பிலே நீ நிரஞ்சனாதேவியின் அணைப்பைக் கண்டாய். என் உதடுகளில் அவள் அதரச்சுவையை அநுபவித்தாய். இளமை பூரித்த என் அவயவங்களெல்லாம் அவள் எழிலாகத் தோன்றுகிறது உனக்கு. அவளுக்கும் உனக்கும் இடையே உள்ள ஆற்றைக் கடக்க என் உடல் ஒரு தோணி உனக்கு என்பதை நான் அறியவில்லையா என்ன? கரையை அடைந்ததும் தோணி எதற்கு? தோணியிலேயே துடுப்பையும் எறிந்துவிட்டு ஓடுகிறாய். தோணி ஆற்றோடு போனால் உனக்கென்ன? ஆற்றுச் சுழலில் ஆழந்து அடித்தரையில் அழிந்தால்தான் உனக்கென்ன?’ என்ற அவள், எண்ணங்களை விவரமாக எடுத்துச் சொல்லியது அவள் பூங்கரம்.
நிலைமை இருவருக்கும் புரிந்துவிட்டது. ஆனால் விடை? அதைத்தான் செங்கமலச் செல்வி மீண்டும் கேட்டாள்.

“பிரபு! உங்களுக்குத் தெரிந்துவிட்டதல்லவா?”

“உம்” சுரணையில்லாமலே பதில் சொன்னான் கரிகாலன்!

“ஆனால் விடை?”

“புரியவில்லை செல்வி.”

“அதைத்தான் முன்பே சொன்னேன்.”

கரிகாலன் அநுதாபத்தால் பெருமூச்சு விட்டான். “செல்வி! விதி உன் வாழ்க்கையில் இப்படியா விளையாட வேண்டும்?” என்றும் மெள்ளக் கேட்டான்.

“விளையாடுவது விதியின் இஷ்டம்; அதற்கு உட் பட்டுத்தானே ஆகவேண்டும் பிரபு.”

“என்னை ஏன் பிரபு பிரபு என்றழைக்கிறாய்?” எரிச்சலுடன் எழுந்தது அவன் கேள்வி.

“பின் எப்படி அழைக்கட்டும்? மன்னா என்றழைக் கட்டுமா?”

“நான் எப்படி மன்னனாவேன்?”

“மன்னன் மகளின் பிற்காலக் கணவன் மன்னனாவது சகஜம்தானே?” இதைச் சொல்லிய செல்வி, மீண்டும் துக்க நகை நகைத்தாள்.

கரிகாலன் அவள் மன வேதனையை நன்றாகப் புரிந்து கொண்டானாகையால், பதிலேதும் சொல்லாமல் எழுந்து சாளரத்தருகே சென்று நின்றுகொண்டான். செல்வியும் பஞ்சணையிலிருந்து எழுந்து சென்று அவனருகே நின்றாள். இரண்டு பைங்கிளிகளுக்கிடையே சிக்கிய கரிகாலன் ஏதேதோ எண்ணங்கள் உள்ளத்தில் அலைமோத வெகு நேரம் யோசனையிலாழ்ந்திருந்தான்.

அவள் அவன் தோள் மீது தலையைச் சாய்த்துக் கொண்டாள். பிறகு கேட்டாள்: “என்ன யோசிக்கிறீர்கள்?” என்று.

“உன் வாழ்வைப் பற்றி.”

“அதைப்பற்றி இப்பொழுது கவலைப்படாதீர்கள்.”

“ஏன்?”

“வாழ்வு நிலைக்கட்டும்.”

“நிலைக்காமலென்ன?”

“பிரபு! நீங்கள் வந்தியத்தேவர் முன்பாகச் சுட்டிக் காட்டிய ஆறு சுவர்களில் ஒன்றுதானே தகர்ந்திருக்கிறது?”

ஆறு சுவர்களா?”

“அதற்குள் மறந்துவிட்டீர்களா? வங்கத்தையும் சோழ நாட்டையும் தடுத்து நிற்கும் ஆறு அரசுகளைப் பற்றி நீங்கள் சொல்லவில்லையா?”

“ஆம், சொன்னேன்.”

“அந்தச் சுவர்களிலே ஒன்றுதானே இடிந்திருக்கிறது. சக்கரக் கோட்டத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு நாம் சமாளிக்க வேண்டிய இந்திரதத்தன் முதலியோர் எங்கே போனார்கள்?”

“எங்கும் போகவில்லை.”

“ஆம் பிரபு! எங்கும் போகவில்லை. மீதியிருக்கின்றன. பலமான போர்கள். அந்தப் போர்களில் முன்னணியில் நான் நிற்பேன். மரணத்தை எதிர்நோக்குவேன். வேல், அம்பு, வாள் இவற்றில் எது பாய்ந்து இறந்தாலும், உங்கள் மடியில் இறப்பேன். அப்பொழுதாவது மனப்பூர்வமாக என்னை மடியில் வைத்துக் கொள்வீர்களல்லவா?”

கரிகாலன் பதில் சொல்லவில்லை. அவன் கரங்கள் அவளை மெல்ல அணைத்தன. அந்த அணைப்பில் சுழன்று கொண்டே, “ஆகட்டும் என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள்” என்று கெஞ்சினாள் செங்கமலச் செல்வி. அந்த கெஞ்சல் அவன் பலத்தை அடியோடு உடைத் தெறிந்தது. அடுத்த விநாடி அவன் பலமான பிணைப்பில் சிக்கிக்கொண்டாள் அவள்.

ஆண் மகன் உறுதி இதுதானா?’ என்று நினைத்த செல்வி மதுரமாக நகைத்தாள்; அவனும் நகைத்தான். ஆனால் அதேசமயத்தில் அவர்கள் நகைப்பையெல்லாம் உடைத்து அவர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கக்கூடிய இரண்டு ஓலைகளில் ராஜ முத்திரைகளை வைத்துக் கொண்டிருந்தான் விக்கிரமச் சோழ வரையனான அரையன் ராஜராஜன்.

Previous articleMannan Magal Part 2 Ch 24 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 26 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here