Home Historical Novel Mohana Silai Ch 14 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 14 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

67
0
Mohana Silai Ch 14 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 14 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 14 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 14. சேரன் கேள்விகள்

Mohana Silai Ch 14 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

எந்த ஆபத்தையும், எந்த சமயத்திலும் எதிர்பார்க்கும் சுபாவமுள்ளவனும், எதையும் எந்த விநாடியிலும் சமாளிக்கும் சாமர்த்தியசாலியுமான இதயகுமாரனுக்கு திருமுக்கூடலின் விருந்து மாளிகையில் கிடைத்த வரவேற்பு எந்தவித
வியப்பையும் அளிக்கவில்லை. அவன் ஏற்கனவே அதற்குச் சித்தமாயிருந்த காரணத்தால் முக்கூடலின் முதல் தெருவான அரச வீதியில் தான் விருந்து மாளிகையைப் பற்றி விசாரித்ததும், அடுத்த தெருவிலிருப்பதாகச் சொன்ன காவலன்
திடீரெனப் போக்கை மாற்றிக்கொண்டு தானே இதைக் காட்டுவதாக அறிவித்ததும், அறிவித்த சமயத்தில் அவன் குரலில் தொனித்த வியப்பும், முகத்தில் பளிச்சிட்டு மறைந்த அதிசயச் சாயையும், இதயகுமாரனின் பார்வையிலிருந்து
இம்மியளவும் தப்பவில்லை. தன்னை விருந்து மாளிகையில் விட்டுவிட்டு அவன் நகர முயன்றதும் சந்தேகம் உறுதிப் படவே, காவலனைக் கதவைத் தட்டி உள்ளே முழையுமாறு கட்டளையிட்டான். காவலனும், அவனைக்குறுவாளுடன்
பின்பற்றி தானும் நுழைந்ததும் அவன் திடீரென்று விளக்கைப் பற்றிக் கூச்ச லிட்டதும் உண்மை சட்டென்று இதயகுமாரனுக்குப் புலனாகியும் அவன் எந்தவித அவசர நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
தனது வாள் உறையிலிருந்து உருவப்பட்ட போதும், குறுவாளை ஏந்திய வலது கரம் இரும்புக் கையொன்றால் பிடிக்கப்பட்ட போதும், எந்தவித படபடப்பையும் காட்டவில்லை சோழ நாட்டு வாலிபன். “சேரன் வரவேற்பு
விசித்திரமாயிருக்கிறது” என்ற சொற்களை உதிர்த்தபோதும், சர்வ சாதாரணமாகவே பேசினான்; நகைக்கவும் செய்தான். “உள்ளே சென்ற தும் இன்னும் சில விசித்திரங்களைக் காணலாம்” என்ற தனது கையைப் பிடித்தவன் இகழ்ச்சியாகச்
சொன்னதையும் பொருட்படுத்தாத இதயகுமாரன். தனக்கு முன்னிருந்த காவலனை, “நண்பனே! இந்த இல்லத்தைக் காட்டிய உனக்கு மிக்க நன்றி, போய்வா” என்று கூறிவிட்டு குறுவாள் பிடிக்காத இடது கையால் அவனை முன்னே
தள்ளினான் திடீரென்று. அந்த உந்துதலால் அவன் உருண்டதும், குறுவாளைப் பிடித்த கையைச் சரேலென்று எதிரியிடமிருந்து திமிறி விடுவித்துக் கொண்டு பக்கத்திலிருந்தவன் மார்பின்மீது குறுவாளால் சற்றே அழுத்திக் கொண்டு
“காவலனைப் போல் நடிக்காதே இளையவேள். சீக்கிரம் விளக்கைக் கொண்டு வரச்சொல்” என்று உத்தரவிட்டான் இதயகுமாரன். பெரும் படைத்தலைவன் பணியாளனுக்கு உத்தரவிடுவதைப் போல்.
இதற்கு மேல் ஏதும் செய்ய இயலாத இளையவேள், “யாரங்கே? விளக்கு கொண்டு வாருங்கள்” என்று உத்தரவிட, விளக்கும் வந்தது. விளக்கு வெளிச்சத்தில் தன்னெதிரே வாளை உருவிய சுமார் பத்து வீரர்கள் நிற்பதையும், பக்கவாட்டில்
மார்பில் அழுந்திய தனது குறுவாள் ஊன்றியிருக்க, ஒரு கையில் தன்னிடமிருந்து பெருவாளுடன் இளையவேள் நின்றிருந்ததையும், தனது காலடியில் கால்களை நீட்டிக்கொண்டும், எதிரே நின்ற வீரர்கள் கால்களுக்கருகில் தலையை
வைத்துக்கொண்டும் தனது வழிகாட்டி குப்புற விழுந்திருந்ததையும் கண்ட இதய குமாரன் குறுநகை கொண்டான்.
அவன் அத்தகைய அபாயமான நிலையிலும் குறுநகை கொண்டதைக் கண்ட இளைவேள் வியப்பு குரலில் விரியச் சொன்னான், “இதயகுமாரா! உன் மனத்திடம் பாராட்டத் தக்கது. வீரனான உன்னைக் கொல்ல எனக்கு விருப்பமில்லை”
என்று.
இதயகுமாரன் இதழ்களிலிருந்து இளநகை முழுநகையாக முதிர்ந்ததால் அவன் முகம் பூராவும் பொலிவுற்றது உவகையால். “உனக்கு முதுகை காட்ட எனக்கும் விருப்பமில்லை” என்று பதில் சொன்னான் இதயகுமாரன், எதிரி மார்பில்
அழுந்திய குறுவாளை எடுக்காமலும், சோழ நாட்டுக் குறும்பை சொற்களில் ஊடுருவ விட்டும்.
இந்தப் பதிலைக் கேட்டதும் இளையவேளின் முகத்தில் சினம் துளிர்ந்தது. என்னைக் கொல்ல முயன்றவனைக் கொன்றேன். அதில் என்ன தவறு?” என்று வினவினான் இளையவேள்.
“தவறுகள் நான்கு” என்றான் இதயகுமாரன்.
“நான்கா!”-இளைய வேளின் கேள்வியில் அதிர்ச்சியிருந்தது.
“ஆம். வயோதிகனைக் கொல்ல முயன்றது முதல் தவறு. உன்னை எழுப்ப முற்பட்டவரை முதுகில் குத்தியது இரண்டாவது தவறு. அவரைக் கொன்றுவிட்டதாக நினைத்து ஓடி விட்டது மூன்றாவது தவறு. அவர் யார் என்பதை
அறியாதது நான்காவது தவறு” என்று தவறுகளை அடுக்கினான் இதயகுமாரன்.
இதைக் கேட்ட இளையவேள் இடிந்துபோனான். “மாரவேள் இறக்கவில்லையா!” என்ற அவன் கேள்வியில் அச்சமிருந்தது.
“இல்லை” என்றான் சோழ நாட்டு வீரன்.
“உனக்கு எப்படித் தெரியும்?”
“நேரில் பார்த்தேன்.”
“மீண்டும் நிலவறைக்குச் சென்றாயா?”
“இல்லை”
“வேறெங்கு கண்டாய்?”
“சேர மன்னர் அரண்மனையில். அதாவது இப்பொழுது சோழ மன்னர் அரண்மனையில் அதாவது இப்பொழுது சோழ மன்னர் வசமிருக்கும் அரண்மனையில். அரசகுமாரியின் அறையில்
“அங்கு எப்படி வந்தார் அவர்?”
“நடந்தது”
“அரசகுமாரியின் அறைக்கு நீ எதற்குச் சென்றாய்?”
“அவரைக் காண.”
இளையவேள் சில விநாடிகள் மௌனம் சாதித்தான். ‘மாரவேளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” என்று வினவினான் சில விநாடிகளுக்குப் பிறகு.
“சம்பந்தம் எனக்கில்லை.”
“வேறு யாருக்கு?”
“உனக்கும் அவருக்கும்.”
“என்ன உளறுகிறாய்?”
“நான் உளறவில்லை. அவர் சொன்னதைச் சொன்னேன்.”
“என்ன சொன்னார்?”
பதில் சொல்லச் சிறிது தாமதித்தான் இதயகுமாரன். “கேட்டுக் கொண்டார்” என்று முடிவில் துயரத்துடன் சொன்னான்.
“என்ன கேட்டுக் கொண்டார்?”-இளையவேளின் குரலில் லேசாக அச்சம் தெரிந்தது.
“எந்தக் காரணத்தை முன்னிட்டும் உன்னைக் கொல்லக் கூடாதென்று எனக்கு ஆணையிட்டிருக்கிறார். இல்லையேல் உன் மார்பில் அழுந்தியிருக்கும் எனது குறுவாள் இத்தனை நேரம் உன் உயிரைக்குடித்திருக்கும்” என்று கூறினான்
சோழநாட்டு வாலிபன்.
இந்த விளக்கம் இளையவேளை அடியோடு நிலைகுலையச் செய்யவே “எதற்காக அப்படிக் கேட்டுக்கொண்டார், ஆணையிட்டார்?” என்று வினவினான் குரல் லேசாக நடுங்க.
“நீ அவர் பேரன் என்பதால்”-இந்தச் சொற்களை மிக நிதானமாகக் கூறினான் இதயகுமாரன்.
அச்சம் உச்சநிலைக்குச் சென்றது இளையவேளுக்கு, வியப்பு விண்ணை எட்டியது. “நான்… நான்…” என்று தடுமாறினான் பதில் சொல்ல முடியாமல்.
“நீ அவர் பேரன்; அவர் பெண் வயிற்றில் பிறந்தவன்” என்று சொற்களை மேலும் அழுத்தி உச்சரித்தான் இதயகுமாரன், இளையவேளின் மனத்தில் நன்றாகப் பதியட்டும் என்ற நோக்கத்தால்.
இளைவேளின் மனநிலை விவரிக்க இயலாததாயிருந்தது. எண்ணங்கள் பல உள்ளத்தில் ஓடியதை முகச்சாயை தெள்ளெனக் காட்டியது. “சுத்தப் பொய். கட்டுக்கதை” என்று கூவினான் இளையவேள் உணர்ச்சிமிகுதியால்.
அவன் அப்படிப் பதற்றப்பட்டு நிலைகுலைந்த சமயத்தில் அவன்கையிலிருந்த தனது வாளை சரெலெனப் பிடுங்கிக்கொண்ட இதயகுமாரன், தேவையானால் வாள்களால் தீர்த்துக் கொள்வோம் சந்தேகத்தை. அப்படியும் நான்
உன்னைக் கொல்ல முடியாது. அது உன்னால் முடியலாம் இவர்கள் துணையுடன்” என்று எதிரே நின்ற பத்து வீரர்களைக் கண்ணசைப்பால் காட்டினான். அத்துடன் தனது கால் அருகே விழுந்துகிடந்த காவலனைக் காலால் ஒரு
உதைவிட்டு, “டேய்! அவர்களைத் தண்டனிட வேண்டாம். எழுந்திரு” என்று அதட்டினான். “யாராவது ஒருவர் சென்று இளையவேளின் வாளைக் கொண்டு வாருங்கள்” என்று உத்தரவும் இட்டான் எதிரே நின்ற வீரர்களுக்கு.
வீரர்களில் ஒருவன் அந்தப் பணியைச் செய்ய விரைந்தான். மற்றும் சிலர் முன்னேற முயற்சி செய்யவே “எனது குறுவாள் உங்கள் தலைவனின் மார்பில் அழுந்தியிருக்கிறது” என்று நினைவூட்டினான் சோழநாட்டு வீரன்.
அதனால் மீண்டு வீரர் பின்னடையவே விநாடிகளில் இளையவேளின் வாள் கொண்டுவரப்பட்டது. அதை இளையவேள் வாங்கிக் கொண்டதும் தனது வாளை உருவிக் கொண்டு சற்று இடம் விட்டு நகர்ந்து நின்ற இதயகுமாரன்,
கையிலிருந்த தனது வாளை ஒரு முறை சுழற்றினான்.
இளையவேளும் தனது வாளை உறையினின்றும் உருவிக் கொண்டு உறையை எட்ட இருந்த வீரனிடம் விட்டெறிந்தான். வீரன் அதைப் பிடித்துக் கொண்டதும் வாளை இருமுறை விர் விர்ரென்று ஆட்டிப் பார்த்தான் இளையவேள்.
அந்த வாள் ஆடிய விதத்திலிருந்து வாட்போரில் நிகரற்ற பயிற்சி இளையவேளுக்கு இருக்கிறதென்பதைப் புரிந்து கொண்ட இதயகுமாரன் “இப்பேர்ப்பட்ட வீரன் அற்ப புத்தியால் கெட்டுப்போகிறானே” என்று உள்ளூர வருத்தப்பட்டு
அந்த வருத்தத்துடன் சொன்னான் “உம், ஆகட்டும்” என்று.
அடுத்த விநாடி இருவர் வாட்களும் சந்தித்து பயங்கர ஒலிகளைக் கிளப்பின அந்த விருந்து மாளிகைக் கூடத்தில். கூடத்தின் அவர்கள் அந்த ஒலிகளை வாங்கி எதிரொலி செய்வதற்கும், வெளியே பொழுது விடிய முற்பட்டதற்கு
அறிகுறியாக திருமுக்கடலின் அரண்மனை வாத்தியங்கள் முழங்குவதற்கும் நேரம் சரியாயிருந்தாலும், அந்த வாத்திய இசையைவிட வாட்கள் மோதிய இசை மிக இன்பமாக இருந்தது, இதயகுமாரன் செவிகளுக்கு. வாட்கள் மீண்டும் மீண்டும்
சந்தித்தன. மோதின, உராய்ந்தன. சண்டை மும்முரமாகிக் கொண்டிருந்த சமயத்தில் விருந்து மண்டபத்தின் மற்றொரு பகுதியில் ஒரு பெருங்கதவு திறக்கப்பட்ட சப்தம் அனைவர் செவிகளிலும் கேட்டது. அதைத் தொடர்ந்து இன்பமான
குரலில் பாடப்பட்ட ‘* குஷ்யதேயத்ர நகரே ரங்க யாத்ராதினேதினே, தமஹம் சிரஸா வந்தே ராஜானம் குலசேகரம்” என்ற சுலோகமும் மண்டபத்தை ஊடுருவியது. பூபாள ராகத்தில் இசைக்கப்பட்ட அல்லது சுலோகம் மண்டபம்
முழுவதையுமே நிரப்பியதாலோ அல்லது வேறெந்தக் காரணத்தாலோ வாட்களை உருவி நின்ற வீரர்கள் வாட்களை உறையில் போட்டனர். இளையவேளும் சட்டென்று போரை நிறுத்தினான்.
இதற்கெல்லாம் காரணமான சேரச்சக்கரவர்த்தி தாணு ரவி மந்தகாச வதனத்துடன் அந்த மண்டபத்தில் நுழைந்தான் சுலோகத்தைப் பாடிக்கொண்டே. பக்கத்தில் இரண்டு பேர் பந்தம் ஏந்தி வர பக்திப்பரவசத்துடன் பாடிக்கொண்டே
உள்ளே நுழைந்த தாணு ரவி, அங்கிருந்த நிலையைக் கண்டதும் பாட்டை நிறுத்தினான். “உங்கள் விளையாட்டை நான் நிறுத்திவிட்டேனா?” என்ற அவன் கேள்வியில் அனுதாபமிருந்தது. “நீதான் இதயகுமாரனாயிருக்க வேண்டும்” என்றும்
சொன்னான் இதயகுமாரனை நோக்கி.
இதயகுமாரன் தலைதாழ்த்தி வணங்கினான் சேரமானை நோக்கி. அதைப் புன்முறுவல் இதழ்களில் கூட்டி ஏற்றுக்கொண்ட சேரச் சக்கரவர்த்தி, என்ன காரணத்தினாலோ தமது மார்பில் தொங்கிய சங்கிலிப் பதக்கத்தை நோக்கினார்.
பிறகு இதயகுமாரனை நோக்கிக் கையை நீட்டினார்.
இதயகுமாரன் பெரும் பிரமிப்புக்கு உள்ளானான். தாணு ரவியின் அகன்ற சிவந்த மார்பில் காட்சியளித்த பதக்கத்தின் ஜோடி தான் தன்கச்சையிலிருப்பது என்பதை உணர்ந்ததால் சிலையென சில விநாடிகள் நின்ற இதயகுமாரன், தனது
கச்சையிலிருந்த பதக்கத்தை எடுத்து சேரச் சக்கரவர்த்தியிடம் கொடுத்தான். அவர் முன்பு மண்டியிட்டு வணங்கவும் செய்தான். தாணு ரவி அதைக் கையில் வாங்கிப் பார்த்துவிட்டு கச்சையில் செருகிக் கொண்டார். “இப்பொழுது
மாரவேள் உயிருடனிக்கிறாரா இல்லையா?” என்று வினவினார் இதயகுமாரனை நோக்கி.
பிரமிப்பு என்ற சொல்லுக்கு ஏதாவது உவமை சொல்ல வேண்டுமானால் அதற்கு இதயகுமாரன் முகத்தைச் சொல்லலாம். சேரச் சக்கரவர்த்தி கேள்வியால் அசந்து போன இதயகுமாரன் “இருக்கிறார்” என்ற சொல்லை மிகப்பலஹீனமாக
உதிர்த்தான் உதடுகளிலிருந்து.

.
இதனால் சேரன் சிறிது திருப்தியடைந்திருக்க வேண்டும். “உடல் நலத்துடன் இருக்கிறாரா?” என்று இரண்டாவது கேள்வி பிறந்தது.
இந்தக் கேள்வி முதல் கேள்வியின் பலத்தை மட்டுமல்ல, இதயகுமாரன் மன வலுவையும் அழித்துவிடவே இதயகுமாரன் விழித்தான்.
“அவருக்குத் தீங்கு விளைவித்தவன் யார்” – மூன்றாவது கேள்வி சற்றுக்கடினமான குரலில் உதிர்ந்தது தாணுரவியிடமிருந்து. “அப்படி யாராவது தீங்கு விளைவித்திருந்தால் சொல், அவனைத் தீர்த்துக்கட்டிவிடுகிறேன்” என்று
சக்கரவர்த்தி மிக உக்கிரமாக அறிவித்தார்.

Previous articleMohana Silai Ch 13 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 15 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here