Home Historical Novel Mohana Silai Ch 19 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 19 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

75
0
Mohana Silai Ch 19 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 19 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 19 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 19. “….கண்ணில்லை”

Mohana Silai Ch 19 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

நீளக் கருங்குழலை எடுத்து பெருமுடிப்பாக முடித்து அதன்மீது செண்பக மலரையும் சூடியிருந்த சோழ மகள், மலரை முகரப்போன தன்னை “வேண்டாம்” என்ற ஒரு சொல்லால் தடுத்து விடவே, மலருக்கு அருகில் சென்ற
இதயகுமாரன் முகத்தில் பேரதிர்ச்சியும் பெரு ஏமாற்றமும் தெரியவே, அதைக் கண்டு வாவியின் சிற்றலைகள் நந்தவனத்தின் பூங்காற்றினால் சிறிது அதிகமாகவே அசைக்கப்பெற்று பளிங்குப் படிகளில் களுக் களுக்கென்று தாக்கி
நகைத்தன. செண்பக மரத்தின் இலைகள் மட்டுமின்றி மற்ற மரங்களின் இலைகளுங்கூட காற்றில் சலசலத்து லேசாகச் சிரித்தன, சோழ வாலிபனின் திகைப்பையும் குழப்பத்தையும் கண்டு.
சேலையை இழுத்து மார்புப்புறம் கட்டியிருந்ததால் அந்த நந்தவன மோகினியின் வழவழத்த பாதி முதுகுப் புறத்தின் காட்சியும், தனது இருகைகளிலும் அப்பொழுதும் பிடிபட்டுக் கன்னிக்கொண்டிருந்த தோள்கள் தனது உடல்
பூராவும் சுழல விட்ட உணர்ச்சி வேகமும், அவள் உடலிலிருந்தும் தலையிலிருந்தும் அந்த சமயத்திலும் கிளம்பி தனக்கு மயக்கத்தை விளைவித்துக்கொண்டிருந்த நீராட்டப் பொடியின் நறுமணமும், கிட்டே நெருங்கியும் கிட்டாது போன
செண்பகமலரின் விரிந்த இதழ்களிலிருந்து நாசிகளில் புகுந்த சுகந்தமும், அவனை ஏதோ மற்றொரு உலகத்துக்குக் கொண்டு சென்றதால் நிலைகுலைந்து தடுமாறினான் சோழவாலிபன்.
இரவு ஏறிவிட்ட அந்த சமயத்தில் தனக்கருகே உட்கார்ந்து முதுகை அரையும் குறையுமாகக் காட்டி தன் உணர்ச்சிகளை முழுக அடித்த கண்ணழகி திரும்பி தன் அழகிய கண்களைத் தர்ன் காட்டவில்லை, மலரை அணுகுவதை ஏன்
தடுத்தாள், என்று தனக்குத்தானே கேள்வியை எழுப்பிக்கொண்ட சோழ வாலிபன் தோளிலிருந்த ஒரு கையை எடுத்து அவள் முதுகின் மேற்புறத்தில் வைத்தான். அந்த சமயத்தில் காற்றில் சிறிது ஆடிய செண்பக மரத்தின் உயரத்திலிருந்து
முதல் நாளே பூத்திருந்த ஒரு மலர் தனது இதழ்களில் இரண்டை அவள் முதுகின் மீது சிந்திடவே, முதுகின் அழகையும் மலரிதழின் அழகையும் ஒப்பிட்டுப் பார்த்தான் இதயகுமாரன்.
புதிதாகக் கடையப்பட்ட புத்தம் புது தந்தம் போன்ற வெண்மையான அந்த முதுகில் மஞ்சள் நிற செண்பக இதழ்கள் இரண்டும் பதிந்திருந்ததைக் கண்ட சோழ நாட்டு வாலிபன், இயற்கை அவள் முதுக்கும் ஏதாவது ஒரு அணியைச்
செய்து போட ஆசைப்படுகிறது என்று நினைத்தான். ஆனால், அந்த அணி முதுகு அழகின் முழுமையை மறைப்பதைக் கண்டதாலும், அது இருக்க வேண்டிய இடம் முதுகல்ல என்ற நினைப்பாலும், தோளின் மீதிருந்த தனது இன்னொரு
கையையும் எடுத்து முதுகில் பதிந்த மலர் இதழ்களிரண்டையும் அகற்றினான். இதழ்களை அகற்றியவன் கையை அகற்றாததால், அவள் திறந்த முதுகின் இது புறத்திலும் அவன் இரு கைகளும் பதிந்து கிடந்ததன் விளைவாகவும், அந்தக்
கைகள் முதுகின் திறந்த கோடிகளில் பதிந்து விரல்கள் கௌவிய காரணத்தாலும், உணர்ச்சிகளின் புரட்சிக்கு இலக்கான அரச மகளும் சிறிது சங்கடத்துடன் அசைந்தாள்.
அப்படி அவள் அசைந்ததால் சிறிது அருகே வந்த அவள் பூவுடலை உற்று நோக்கிய இதயகுமாரன், அவள் கழுத்தில் நீராடிய பின்பும் அகலாத ஸ்நானப் பொடித்தூள்களைக் கண்டு, மலர்க்கழுத்துக்கும் மகரந்தம் உண்டு என்ற
முடிவுக்கு வந்ததால் அந்த மகரந்தத்தையாவது அனுபவிக்க எண்ணி அவற்றுக்கருகே தன் முகத்தைக் கொண்டு போனான். இம்முறை அவள் எந்த ஆட்சேபணையையும் கிளப்பாததால் கழுத்தில் லேசாக உதடுகளைப் புதைக்கவும்
செய்தான். அப்படிப் புதைந்த உதடுகள் அளித்த இன்ப வேதனையாலோ என்னவோ அவள் கழுத்தைச் சிறிது அசைக்கவே அவன் உதடுகளும் அசைந்து அவனுக்கு மேலும் இடம் கொடுக்கவே, அவன் இதழ்களை கழுத்திலிருந்து
விலக்கிக் காதுக்கருகே கொண்டு போய் மெல்ல “அரசகுமாரி” என்று அழைத்தான்.
அந்த அழைப்புக்கு அந்த அழகி பதிலேதும் சொல்லவில்லையென்றாலும் இதழ்களில் புன்முறுவலை மட்டும் படரவிட்டுக்கொண்டாள். “அன்று பாதங்களை முத்தமிட்டு ஓடினார். இன்று சற்று அதிக தைரியம் வந்திருக்கிறது
போலிருக்கிறது! இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவது ஆண்மகன் சுபாவம் போலிருக்கிறது!” என்று முன்பு தனது அறையில் நடந்த நிகழ்ச்சியையும் நந்தவனத்தின் இந்த நிகழ்ச்சியையும் தனக்குள்ளேயே ஒப்பிட்டுப் பார்த்துக்
கேள்வியும் கேட்டுக்கொண்டாள். அப்பொழுதுதான் தான் சற்றுப் பின்னுக்கு இழுக்கப்படுவதையும், இதயகுமாரன் இரு கைகளும் சற்று அதிகத் துணிவைக் காட்டுவதையும் உணர்ந்தாள். அந்த உணர்வினால் அவள் தத்தளித்தபோது
மீண்டும் அழைப்பை அவள் காதில் விடுத்தான் சோழவாலிபன் “அரசகுமாரி” என்று. இரண்டாம் முறை அழைப்பின் போது அவன் இதழ்கள் காதுக்கு வெகு அருகில் வந்துவிட்டதால் காதையும் காதுக்குக் கீழிருந்த வழவழத்த
கன்னத்தையுங்கூட பட்டும் படாததுமாகத் தடவியதாகத் தோன்றியது அவளுக்கு. அதன் விளைவாக “உம்!” என்று ஒரு பதிலையும் மிக மெதுவாக வெளிவிட்டாள் சோழன் மகள்.
இந்தப் பதிலுக்குப் பிறகு அடுத்த கேள்வி எழவில்லை. செயல் தொடர்ந்தது. சற்றே இழுக்கப்பட்ட தனது உடல் பின்னாலிருந்த வாலிபன்மீது லேசாகப் படுவதை உணர்ந்தாள் அரசகுமாரி. அப்படிப்பட்டபோது முதுகு மட்டுமின்றி, கீழே
தரையில் பதிந்திருந்த அழகின் திண்மையான எழுச்சியும் அவன் காலில்படுவதையும், காலும் சங்கடப்பட்டு அசைவதையும், அந்த அசைவு தன்மீது பதிந்து இல்லாத இன்ப ஜாலங்களை அள்ளித் தெளிப்பதையும் உணர்ந்த அரசகுமாரி
மெல்ல மெல்ல சுதந்திரத்தை இழக்கலானாள். அந்த சுதந்திரத்தை மீண்டும் பெறும் நோக்கத்துடன் கைகளிலிருந்த மோகனச்சிலையை மார்புடன் இறுக அணைத்துக்கொண்டாள்.
கட்டழகி கண்ணழகியின் முன்புறம் கண்களுக்குத் தெரியவில்லையென்றாலும், அவள் உடல் அசைவிலிருந்தே அவள் அடைந்த விவரிக்க இயலாத இன்ப உபத்திரவ நிலையை இதயகுமாரன் ஊகித்துக்கொண்டான். அவள் கைகள் சிறிது
முன்னே சென்று பின்னுக்கு வந்தததால் அவள் மோகனச்சிலையை மார்பில் அணைத்து விட்டாளென்பதையும் அறிந்து கொண்ட சோழ வாலிபன் அந்த சிலைக்கு அடித்த யோகத்தை நினைத்துப் பெருமூச்சும் விட்டான். அந்தப்
பெருமூச்சு அவள் வலது கன்னத்தில் தான் விசிறியதென்றாலும், உணர்ச்சிகள் உடல் முழுதுமே விசிறியதால், வழவழத்துப் புடைத்த கன்னங்களிரண்டுமே குங்குமச் சிவப்பாகச் சிவந்தன.
இருந்த இடம் அந்தப்புர அறையாயிருந்தால், சுடர்விளக்கின் ஒளியில் மஞ்சளும் குங்குமமும் கலந்துவிட்ட காட்சியில் இதயத்தைப் பறிகொடுத்திருப்பான் இதயகுமாரன். ஆனால், இடம் விளக்கேதுமில்லாத செண்பகமரத்து
அடியானதாலும், விண்மீன்கள் அளித்த வெளிச்சமும் போதாதிருந்ததாலும், அழகை முழுதும் அள்ளிப் பருகும் அதிர்ஷ்டம் தனக்குக் கிட்டவில்லையென்பதை சோழ வாலிபன் உணர்ந்தான். அப்படிக் கிட்டாத காரணத்தினாலேயே இல்லாத
ஊகங்களுக்கு இதயம் இடங்கொடுத்தது. அதன் விளைவாக அவன் அரசகுமாரியின் கன்னச் சிவப்பைப் பற்றி எண்ணாமல் இதழ்களின் நீரோட்டமுள்ள கெம்புச் சிவப்பைப் பற்றி எண்ணினான், அவள் அழகிய மார்புடன் பிணைந்து
கிடந்த மோகனச்சிலையைப் பற்றி எண்ணினான். எண்ணியதுடன் இல்லாமல் “அரசகுமாரி” என்று அழைத்து தனது வலது கையை முன்புறம் கொண்டு சென்று மோகனச்சிலைமீது கையை வைத்தான்.
“உம்!” எச்சரிக்கைக் குரல் எழுந்தது கண்ணழகியிடமிருந்து.
“இந்தச் சிலையை நான் பார்க்கலாமா?” என்று கேட்டு அதை அவளிடமிருந்து பிரிக்க முயன்றான். அதனால் கை அவள் மார்புமீதும் வேகமாகப் படவே வெகு வேகமாகப் புரண்ட உணர்ச்சிகளால் மௌனமே சாதித்தாள் சோழன் மகள்.
கைபட்டதால், அவள் மார்பு சிலையைவிட கடினப்பட்டதால் எது சிலை எது மார்பு என்பதை உணரமுடியாது போனாலும், அப்படி உணரமுடியாத நிலையிலேயே சுயஉணர்வைப் பெரிதும் பறிகொடுத்துவிட்ட இதயகுமாரன் இந்தச்
சிலை… இது…” என்று ஏதோ சொல்ல முயன்று தடுமாறினான்.
அந்த வாலிபனின் தடுமாற்றம், கலக்கம், மார்பு மீது லேசாகப்பட்ட சமயத்திலும் நடுங்கிய கரம் காட்டிய பயம் இவையெல்லாம் கண்ணிழகிக்குப் பேரின்பமாயிருந்ததால் அவள் இதழ்களில் ஏற்கனவே இருந்த புன்முறுவலைப் பெரிதும்
விரித்துக் கொண்டாள் “சமயத்தில் புருஷர்கள் எத்தனை கோழைகள்” என்று உள்ளூர சொல்லி நகைத்துக் கொண்டாள்.
“நான் கேட்டேன்… இந்த…” மேலும் தடுமாறினான் அவள் காதுக்கருகில் இதயகுமாரன்.
“உம்… உம்…” இத்தனைதான் பதிலாக வந்தது அந்தக் கட்டழகியிடமிருந்து. மீதி பதிலை அவன் மீது பட்ட கட்டழகு அம்சங்கள் சொல்லின.
அவள் முதுகு அவன் மீது லேசாகச் சாய்ந்ததால் குழலிலிருந்த செண்பகம் அவன் கன்னத்தில் உராய்ந்தது. அவன் கண்ணெதிரே மோகனச்சிலையும் அது பதிந்து கிடந்த எழுச்சிகளுங்கூட அரைகுறையாகத் தெரிந்தன. தெரிந்தது
மட்டுமல்லாமல் கையிலும் சிறிது அதிகமாகப் பட்டன. கையில் பட்டது ஒன்று, கண்களில் பட்டவை பல. அவள் மோகன உருவத்தின் முன் பகுதி ழுமுவதும் அவன் கண்களுக்குப் புலனாயின. தன் தோள்மீது அவள் தலை அழுந்தி
விட்டதாலும், அவள் தலைக்குழல் சிறிது அவிழ்ந்து மார்பில் புரண்டு அதன் ஈரம் நனைத்ததாலும் திக்குமுக்காடிய அவன் சித்தம், கண்களுக்கு முன்பே விரிந்த விந்தையால் உன்மத்தம் பிடிக்கும் நிலையை வெகு துரிதமாக
எய்திக்கொண்டிருந்தது.
அவள் நீராடி மார்பில் இழுத்துக் கட்டியிருந்த சீலை மார்பை முழுதும் மறைக்காமல் மேல் விளிம்புகளை எழுப்பிக் காட்டியதாலும், கழுத்தின் பதக்கம் உள்ளே மறைந்து கிடந்தாலும் கழுத்தை வளைத்த சங்கிலி அந்த விளிம்புகளுக்கு
இருபுறமும் அணைப்புக்கொடுத்ததாலும், கழுத்துக்கும் மார்புக்குமிருந்த இடைப் பகுதியை ஏதோ தந்தப்பலகை மாதிரி இயற்கை கடைந்திருந்ததாலும், அவன் கண்கள் பிரமையடைந்து உலாவின. கண்ணழகியின் நுதலும் செழித்த
கன்னங்களும், அந்தப் பிரமைக் கண்களுக்குப் பல விந்தைகளைக் காட்டின. இவை எல்லாவற்றையும்விட அவன் பார்க்க விரும்பிய புலி மச்சத்தின்மீது மோகனச்சிலை படுத்திருந்ததால் அவன் கண்கள் சிறிது ஏமாற்றத்தையும்
அடைந்தன. ஆனால், நன்றாக இழுத்துக் கட்டப்படாததன் காரணமாகவும், இருமுறை கண்ணழகி அசைந்ததாலும் வயிற்றின்மீது தவழ்ந்து இடையைத் தாண்டி அவள் அழகிய பருத்த தொடைகளைத் தழுவி கால்களுக்கிடையே
இணைந்துவிட்ட சேலை, வேண்டுமென்றே தன்னை இம்சைப்படுத்துவதை உணர்ந்தான் இதயகுமாரன்.
அப்பொழுது அவள் கால்களிரண்டையும் மடித்து உட்கார்ந்திருந்ததால் முழுந்தாளுக்குக் கீழிருந்த பாதங்கள் தெரியவில்லையென்றாலும் கவலைப்படவில்லை அந்த இளங்காளை, மற்ற மனோகர இடங்கள் இந்திரியங்களை வசீகரித்து
விட்டதன் விளைவாக.
மற்ற அழகுகளைப் பார்த்ததாலும், அவையே புலன்களைப் புரட்டியதாலும் ‘எதற்கும் மார்பு மச்சத்தைப் பார்க்கலாம்’ என்று தன்னை ஏமாற்றிக்கொண்ட இதயகுமாரன், மோகனச்சிலையை நீக்க அதை அணைத்த கைகளைத் தனது
வலது கையால் பிடித்தான். பிடித்த கை சிறைப்பட்டது. அரச குமாரியின் விரல்கள் அதன்மீது பதிந்தன. அவன் விரல்களுடன் பின்னிக்கொண்டன. பின்னிய விரல்கள் அளித்த செய்தியால் மோகனச்சிலையைப் பற்றி எண்ணியதை
நிறுத்திய சோழ வாலிபன் அவள் விரல்களை நெரித்தான்.
அந்த நெரிப்பினால் அவள் இன்பப் புன்முறுவல் கோட்டினாள். நெரிப்பின் துன்பமும் உணர்ச்சியின் இன்பமும் இணைந்து தெரிந்தது அவள் முகத்தில்.
“இந்தச் சிலை…” என்று ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காகத் துவங்கினான் அவன்.
அவள் கண்கள் அவன் கண்களைக் கவர்ந்து நின்றன ஒரு விநாடி. பிறகு உதடுகள் அசைந்து “எந்தச் சிலை?” என்று விஷமத்துடன் மிக மெதுவாகக் கேள்வியை எழுப்பின.
“இதுதான் மோகனச்சிலை…” – மென்று விழுங்கினான் அவன்.
“எந்த மோகனச்சிலை?”- இதைக் கேட்டு அரசகுமாரி நகைத்தாள் மெல்ல.
அந்த நகைப்பில் அவன் சொர்க்கத்தைக் கண்டான். அப்பொழுதுதான் தன் கண் முன்பு இரண்டு மோகனச்சிலைகள் இருப்பதைக் கண்டான். ஒன்று பெரியது, உயிர்த்துடிப்புள்ளது, அசையும் சிலை. இன்னொன்று சிறியது, பெரிய
சிலையைத் தன்னுடன் முதல் நாளே இணைத்தது, அசையாச்சிலை. இதை நினைத்த இதயகுமாரன் அவளை நோக்கிக் குனிந்து “நான் குருடன்கண்ணழகி…” என்று ரகசியமாகச் சொற்களை உதிர்த்தான்.
“உம்…?”
“இரண்டு சிலைகள் இருப்பதை உணரவில்லை.”
“ஏன்?”
“ஒரு சிலை மயக்கியதால்.”
“எது?”
“பெரியது”
“இன்னொன்று?”
“வியாஜம், ஏதோ காரணம்…” என்ற வாலிபன் “கண்ணழகி!” என்று அழைத்தான் மீண்டும்.
“உம்…” என்று உம் கொட்டினாள் அரசகுமரி. மேலே அவன் ஏதும் சொல்லாததால், “நீங்கள் குருடர்தான்” என்று அவள் முணுமுணுத்தாள்.
“கண்ணழகி!” என்று அவனும் முணுமுணுத்தான்.
“நாம் இருவருமே குருடர்கள். எதற்கோ கண்ணில்லை என்று சொல்லுவார்கள்…” அவள் குரல் பலஹீனமாயிருந்தது. உதடுகள் உட்புறமாக மடிந்து மலர்ந்து வெளிவந்தன. மலர்ந்த இதழ்களை நோக்கிக் குனிந்தான் இதயகுமாரன்.

Previous articleMohana Silai Ch 18 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 20 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here