Home Historical Novel Mohana Silai Ch 39 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 39 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

83
0
Mohana Silai Ch 39 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 39 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 39 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 39. பூஞ்சோலை

Mohana Silai Ch 39 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

விஜயாலயன்! சோழதேவன், மகா வீரனான கரிகாலன் பரம்பரையைச் சேர்ந்தவன். பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவ கனவுகொண்டிருப்பவன். முத்தரையரிடம் போரிட சன்னத்தம் செய்து கொண்டிருப்பவன். அப்பேர்பட்டவன் தன்னைப்
பார்த்துக் கேட்ட கேள்வியைக் காதில் வாங்கியதும் அச்சுதப் பேரறையர் பேயறைந்தது போல் நின்றார் சில விநாடிகள். மன்னனுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள கண்களை ஒருமுறை கசக்கிக்கொண்டு
விஜயாலயனை உற்றுப்பார்க்கவும் செய்தார். “குதிரையை விசாரிக்கத் தெரியுமா உமக்கு?” என்று கேட்ட கேள்வி அவரைத் திக்குமுக்காடச் செய்திருந்த சமயத்தில் ஆதித்தனும் தந்தையுடன் சேர்ந்து கொண்டு, “தந்தையின் கேள்வியில்
தவறொன்றுமில்லை. முடிந்தால் குதிரையை விசாரிக்கலாம்” என்றான்.
வீரக் குடும்பம் என்று தான் நினைத்திருந்தது சுத்தப் பைத்தியக்காரக் குடும்பமாகிவிட்டதை எண்ணிப் பார்த்த அச்சுதர் ஒருவேளை அவர்கள் தன்னைக் கேலி செய்கிறார்களோ என்ற எண்ணத்தில், “குதிரையை எதற்காக விசாரிக்க
வேண்டும்?” என்ற வினவினார் வியப்பை எரிச்சலாக மாற்றிக்கொண்டு.
விஜயாலயன் முகத்தில் ஆச்சரியக் குறி பெரிதும் படர்ந்தது. “அச்சுதரே! வழக்கில் முதலில் யாரை விசாரிக்க வேண்டும்?” என்று வினவினான்.
“வாதியை” என்றார் அச்சுதர் சிறிதளவும் தயங்காமல்.
“இங்கு குதிரைதான் வாதி” என்றான் மன்னன்.
“அதன் தலையீடுதான் இங்கு நடந்த விபரீதங்களுக்கும் காரணம்” என்றான் ஆதித்தன்.
அமைச்சரின் பெருவிழிகள் ஆதித்தனை ஆராய்ந்தன. “இங்கு என்ன அப்படி விசித்திரம் நடந்துவிட்டது?” என்று வினவினார் வெறுப்பு கலந்த குரலில்.
ஆதித்தன் புன்முறுவல் கொண்டு நோக்கினான் அமைச்சரை. “நானும் படைத்தலைவனும் இந்தத் தோட்டத்தில் ஓடியதைப் பார்த்தீரா?” என்று கேட்டான்.
“பார்க்கவில்லை. வீரர்களான நீங்கள் ஏன் ஓட வேண்டும்?”- அமைச்சர் கேள்வி திட்டமாயிருந்தது.
“அப்படிக் கேளுங்கள். இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒரு பெண் எங்களைத் துரத்தினாள்” என்று இன்னொரு வெடியை வீசினான் ஆதித்தன்.
அச்சுதப்பேரறையர் தமது கண்களை அரசகுமாரிமீது ஓடவிட்டார். அவள் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தாள். “அரசகுமாரி! விளையாட்டுக்கு இது சமயமல்ல. உறையூரில் படை திரள்கிறது போருக்கு” என்றார் விஷயத்தைப் புரிந்து
கொண்டு.
“அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்ட அரசகுமாரி சட்டென்று எழுந்தாள்.
அச்சுதப்பேரறையர் கண்ணழகியை நன்றாக நோக்கினார். “போர்களுக்கு முக்கால் காரணம் பெண்கள்தான். வீட்டிலும் சரி, நாட்டிலும் சரி, நீ சேர நாட்டில் இருந்ததால் கருவூரைப் பிடித்தோம். இப்பொழுது போரைத் தூண்ட,
துரிதப்படுத்த, செந்தலையிலும் ஒருத்தி முளைத்திருக்கிறாள்” என்று விளக்கவும் செய்தார் புன்முறுவலின் ஊடே.
இந்த சமயத்தில் ஆதித்தனும் துள்ளி எழுந்தான். “தேவி இந்தப் போரைத் தூண்டவில்லை” என்றான்.
அமைச்சர் மெள்ள நகைத்தார். “தூண்டவில்லை, துரிதப்படுத்துகிறாள்” என்றார்.
இளவரசன் முகத்தில் சினம் அதிகமாயிற்று. “துரிதப்படுத்துவது உமக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினான் சினத்தைக் குரலிலும் காட்டி.
அச்சுதர் அரசனை நோக்கிவிட்டு இளவரசனை நோக்கினார். “படைகளைச் சீரமைப்பதிலும் சித்தம் செய்வதிலும் இப்பொழுதுள்ள துரிதத்தை நீங்கள் வேறு எப்பொழுதும் காட்டியது கிடையாதென்பது தங்கள் தந்தையாருக்கே
தெரியும்” என்று குத்தலாகப் பேசினார் அச்சுதப்பேரறையர். “காரணம் எதுவானாலும், யாரானாலும், சோழ ராஜ்ய விஸ்தரிப்புக்குத் தங்கள் வேகம் பெரிதும் உதவுகிறது” என்று கூறிவிட்டு மன்னனுக்குத் தலை வணங்கித் திரும்பினார்
அரண்மனை நோக்கி.
விஜயாலயன் தனது மக்கள் இருவரையும் இதயகுமாரனையும் நோக்கினான். “இன்று விசாரணை நடக்காது போலிருக்கிறது. வாதி மேயத் துவங்கிவிட்டார். உங்களுக்கும் வேலையிருக்கும்” என்று கூறிவிட்டு எழுந்து
அச்சுதப்பேரறையர் சென்ற திக்கை நோக்கி நடந்தான்.
ஆதித்தன் தனது பக்கத்தில் நின்ற சகோதரியையும், தரையில் குனிந்த வண்ணம் உட்கார்ந்திருந்த படைத் தலைவனையும் மாறி மாறிப் பார்த்தான். “கண்ணழகி! நானும் வருகிறேன். படைத்தலைவன் தலைநிமிர வழிசெய். தலை
குனியும்படியாக உன் அஸ்திரங்களைத் தொடுக்காதே” என்று சிரித்துக் கூறிவிட்டு மாளிகையை நோக்கி நடந்தான்.
அவன் அகன்றதும் இதயகுமாரனும் எழுந்தான். “அரசகுமாரி! எல்லோரும் போனபின்பு நாம் இங்கிருப்பது சரியல்ல” என்றான்.
அரசகுமாரி திரும்பி பக்கவாட்டில் கடைக்கண்ணால் இதயகுமாரனை நோக்கினாள். “அது நியாயந்தான். நான் போகிறேன்” என்று ஒரு அடி எடுத்து வைத்தாள்.
அவள் கையை இறுகப்பற்றிய இதயகுமாரன் “கண்ணழகி!” என்று அழைத்தான்.
கண்ணழகி அவன் கரஸ்பரிசத்தில் உணர்ச்சி அலைகளுக்கு இலக்காகி முகம் சிவந்தாள். “கையை விடுங்கள். தோழிகள் பார்ப்பார்கள் உப்பரிகையிலிருந்து” என்றாள் தலை குனிந்த வண்ணம்.
இதயகுமாரன் சிறிது சிந்திப்பதுபோல் நடித்தான். அது நியாந்தான்” என்று அரசகுமாரி முன்பு சொன்ன வார்த்தையைத் திருப்பிச் சொன்னான். “அப்படியானால் அந்த பவழமல்லி மரத்துக்குப் பின்னால் போய்விடுவோம்” என்று
செடிகளாலும் கொடிகளாலும் மறைக்கப்பட்ட ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினான்.
கண்ணழகியின் உடல் லேசாகத் துடித்தது. “நீங்கள் காட்டுவது அரசர் கொடி வீடு” என்று குறிப்பிட்டாள்.
“அதனாலென்ன?” என்று கேட்டான் இதயகுமாரன்.
“அது மறைவிடம்.”
“ஆமாம்.”
“அங்கு உங்களுடன் நான் வந்தால்…?”
“என்ன கெட்டுப் போய்விடும்? தோழிகள் நம்மைப் பார்க்க முடியாது.”
“பார்ப்பதைவிட பார்க்காதிருப்பது மிகக்கேவலம்.”
“என்ன கேவலம்?”
“தவறான எண்ணத்துக்கு இடங்கொடுக்கும்.” அரசகுமாரியின் உள்ளத்தில் பூரிப்பிருந்தது, உதட்டில் நடுக்கமிருந்தது. சித்தத்தில் வேட்கையிருந்தது. இருப்பினும் நாணம் என்னும் நாகபாசம் அனைத்தையும் கட்டியிருந்தது.
தடுமாறி, நிலைகுலைந்து, கண்களை அரண்மனை உப்பரிகைக்கு ஓடவிட்டு, தத்தளித்து, இடையொடிய நின்ற கண்ணழகியின் கோலம் இதயகுமாரன் உணர்ச்சிகளைப் பெரிதும் தூண்டியதென்றாலும் அவனால் எதுவும் செய்ய
முடியவில்லை. ஏதோ நினைத்துக்கொண்டு கண்ணழகியை விட்டுத் தனது புரவி புல் மேய்ந்த இடத்தை நோக்கிச் சென்று அதன்மீது மெதுவாக ஏறினான். மெதுவாக அதை நடத்திக் கொடிவீடிருந்த மறைவிடத்துக்குள் அதைச்
செலுத்தினான்.
புரவியும் படைத்தலைவனும் கண்ணுக்கு மறைந்ததும் கண்ணழகி எங்கு போவதென்று தெரியாமல் திண்டாடித் திகைத்து நின்றாள். பிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவள் போல் நிலத்தில் எதையோ தேடினாள். அப்படித் தேடிக்
கொண்டே பவழமல்லி மரத்தடிக்கு வந்து சிறிது நேரம் அதன்மீது சாய்ந்து நின்றாள். பின்னாலிருப்பது பூஞ்செடிகள் கொண்ட மறைவிடம். அடுத்திருப்பது அரசன் ஒரு காலத்தில் தன் அன்னையுடன் சரசமாடிய லதாக்கிருகம். “அங்கு
அவர் காத்திருக்கிறார். கள்ளனைப்போல் மறைந்திருக்கிறார்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் கண்ணழகி. “காலை நேர வெயில் நன்றாக ஏறிய பட்டப்பகலில் இது என்ன கேவலம்?” என்றும் ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டாள்.
ஆனால், இதயம் விவாதத்துக்கோ ஆராய்ச்சிக்கோ இடம் கொடுக்கவில்லை. வேட்கை மற்ற உணர்ச்சிகளை அர்த்தமற்றதாக அடித்தது. இளமை அந்த சமயத்தில் குளுமையைக் கொடுப்பதற்குப் பதில் வெயிலுடன் போட்டி போட்டுக்
கொண்டு அவளைத் தகிக்க ஆரம்பித்தது. எதையோ தேடுவது போல பூஞ்செடிக்கூட்டத்தில் நுழைந்தாள் அவள் மெதுவாக.
கொடிவீட்டின் மறைவுவரைகூட அவள் வரவில்லை. திடீரென இரு கைகளால் தூக்கப்பட்டாள் அனாயாசமாக இதயகுமாரன் இரும்புக் கைகள், அந்தப் பூங்கொடியைப் பந்தலின் குறுக்கு மரக்கிளைகள் போல் உறுதியாகத் தூக்கிப்
பிடித்தன.
“விடுங்கள்” என்று சீறினாள் அரச மகள்.
“எங்கே?” என்ற இதயகுமாரன் நகைத்தான்.
“தரையில்” என்றாள் அரசகுமாரி கோபத்துடன்.
“அதுவும் சரிதான்” என்ற இதயகுமாரன் அவளைத் தனது கைகளிலிருந்து கீழேயிருந்த புல்தரையில் கிடத்தினான். “விஜயா? நீ சென்று சிறிது நேரம் காவல் இரு” என்று கூற, அவன் பின்னாலிருந்த புரவி மறைவிடத்தை விட்டு வெளியே
சென்றது.
அரசகுமாரி கீழே இயற்கை விரித்திருந்த பச்சைப் பாயில் படுத்துக்கிடந்தாள். அந்த இடம் சிறிது திறந்த வெளியாயினும் சுற்றிலும் வட்டமாக. இருந்த செடி கொடிகளும், அடுத்திருந்த கொடிவீடும் அவசியமான மறைவைச்
சிருஷ்டிக்கவே செய்தன. காவிரிக் காற்றால் லேசாக அசைந்த எட்ட இருந்த மரமல்லி மரம் தனது மலர்களில் சிலவற்றை மல்லாந்து கிடந்த அவள் மீது பல இடங்களில் உதிர்த்தது. அவள் படுத்திருந்த நிலை கண்ட இதயகுமாரன் அவள்
பக்கத்தில் உட்கார்ந்தானானாலும் அவளைத் தொடவும் முயலவில்லை, ஏதோ சிந்தனையிலிருந்தான்.
“எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசனை?” என்று மெதுவாகக் கேட்டாள் கண்ணழகி.
இதயகுமாரன் அவள் உடலை உற்று நோக்கினான். “கோட்டையை அல்ல, பூஞ்சோலையை” என்று மெதுவாகச் சொன்னான். “பூஞ்சோலைக்குப் பூ எதற்கு?” என்றும் கேட்டான்.
“பூஞ்சோலையா?” என்று வியப்புடன் கேட்டாள் அரசகுமாரி.
“ஆம், கண்ணழகி. அதோ முகபத்மம், அரவிந்த விழிகள், செம்பருத்தி அதரம், எழுந்து நிற்கும் தாமரை மொட்டுகள் இரண்டு, இணைந்துவிட்ட தண்டுகளில் மறைந்த வாழைப்பூ, பாத பங்கஜங்கள், இன்னும் எனக்குப் புலனாகாத
எத்தனையோ மலர்கள். நீ ஒரு பூஞ்சோலை. உன்மீது எதற்கு மரமல்லிதன் மலர்களைத் தூவுகிறது? அர்த்தமற்ற செய்கை” என்று கூறிச் சற்று அவளை நெருங்கி அவள் உடலிலிருந்து மரமல்லி மலர்களைப் பொறுக்கினான்.
பொறுக்கலில் நிதானமிருந்தது. மலர்களை எடுத்த கை ஆங்காங்கு அழுந்தவும் செய்ததால் “உம்” என்று எச்சரிக்கைக் குரல் கொடுத்தாள் கண்ணழகி. அடுத்து அவன் கைகள் பொறுக்கிய பூக்களை அவள் பூவுடல் மீது தூவவில்லை.
ஆங்காங்கு வைத்து அழகு செய்தன.
“என்ன செய்கிறீர்கள்?” என்று முணுமுணுத்தாள் கண்ணழகி.
“நீயே பாரேன்” என்று கூறிய இதயகுமாரன் அவள் உடலுக்குக் கீழே கையைக் கொடுத்து தலையை மட்டும் சிறிதளவு தூக்கினான்.
குனிந்து நோக்கினாள் கண்ணழகி. அவள் மார்பில் சூரியனைப் போல் மலர்களை அடுக்கியிருந்தான் இதயகுமாரன்.
கண்ணழகியின் இதழ்களில் புன்முறுவல் தவழ்ந்தது. “இதென்ன சித்திரம்? சூரியன் போலிருக்கிறதே?” என்று ரகசியமாகக் கேட்டாள்.
“போல் என்ன? சூரியன்தான். நீ சூரியகுலமல்லவா?” என்று இதயகுமாரன் அந்தச் சூரியனை நோக்கிக் குனிந்தான்.

.
கண்ணழகியின் பூவுடலில் உணர்ச்சிகள் பலமாகச் சுழன்றன. அதுவரை இருந்த நாணமெனும் கரை உடைந்தது. அந்த முரடன். தலையை மார்பில் இறுக அணைத்துக் கொண்டான் அரச மகள்.
இதயகுமாரன் சுயநிலையை அடியோடு மறந்ததால் தலையைப் புரட்டினான் தான் சிருஷ்டித்த மலர்ச் சித்திரத்தின் மீது. சித்திரமும் கைப்பழக்கம் என்ற பழமொழி அவன் நினைவுக்கு வந்தது. ஆதலால் கைகள் அவள் உடலைச் சற்றே
தூக்கி நெரித்தன.

Previous articleMohana Silai Ch 38 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 40 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here