Home Historical Novel Mohana Silai Ch 54 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 54 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

80
0
Mohana Silai Ch 54 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 54 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 54 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 54 மோகக் கோட்டை

Mohana Silai Ch 54 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

சந்தலையை வெற்றிகொண்ட பிறகும் விஜயாலயன் அந்த நகருக்குள் நுழையவுமில்லை, வெற்றி விழா கொண்டாடவுமில்லை. தனது பாசறையிலேயே தங்கிவிட்டான். பெரும்பிடுகரின் சடலத்தை எடுத்துச் சென்ற ஆதித்தன் அதை
அவரது பெருமாளிகையில் அவரது பஞ்சணையிலேயே கிடத்தினான். மூன்று நாட்கள் முத்தரையரைத் துக்கம் கொண்டாட விட்டு நான்காவது நாள் தேவியை பெரும்பிடுகரின் அறையில் சந்தித்து, “தேவி, நான் புறப்பட வேண்டும்” என்று
அனுமதி கோரினான்.
தேவி தலைகுனிந்து நின்றாள் ஆதித்தன் முன்பு. அவள் இதழ்கள் சற்றே அசைந்தன, தென்றலில் அசையும் செந்தாமரை மலரின் இதழ்களைப்போல. ஆனால், அவற்றிலிருந்து சொற்களேதும் வரவில்லை. சென்று வரலாம் என்பதற்கு
அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தாள். அப்படி அனுமதி கொடுத்த நேரத்திலும் சுரணையற்ற சிலையாக நின்றிருந்தாள் தேவி.
அவள் நிலை ஆதித்தன் மனதைச்சுக்குச் சுக்காக உடைத்தது. அனாதை போல் நின்றிருந்த தேவிக்கு ஆறுதல் சொல்ல அவளை நெருங்கினான். அவள் சற்றுப் பின்னடைந்தாள். “பதினைந்து நாள் கழித்து வாருங்கள்” என்று மட்டும்
முணு முணுத்தாள்.
ஆறுதல் சொல்ல நெருங்க முற்பட்டு முடியாததால் சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றான் ஆதித்தன். பிறகு தானும் பின்னடைந்து “பதினைந்து நாள் கழித்து வருகிறேன். ஆனால் நீ வீரன் மகள் என்பதை மறவாதே. வீரன் மருமகளாகப்
போகிறவள் என்பதையும் மறவாதே” என்று கூறிவிட்டுச் சட்டென்று திரும்பி நடந்த ஆதித்தன், முத்தரைய பூபதியின் மாளிகைப் படிகளில் வெகுவேகமாக இறங்கித் தனது புரவியில் தாவி தந்தையின் பாசறைக்கு வந்து சேர்ந்தான்.
அவன் வந்த சமயத்தில் விஜயாலயன் புரவி பயணத்துக்குச் சித்தமாக நின்றிருந்தது. படைத் தலைவர்களில் இருவரும் காலாட் படையும் தேர்ப்படையும் புறப்பட அணி வகுத்து நின்றிருந்தன. பயண ஏற்பாடுகளைக் கண்ட ஆதித்தன்
கண்களில் வியப்பு தெரிந்தது. நீங்கள் இன்று புறப்படுவதாக அறிவிக்கவில்லையே!” என்று வினவினான் வியப்புடன்.
விஜயாலயன் தனது வீர மைந்தனை உற்று நோக்கினான். “போர் முடிந்து விட்டது. இனி இங்கு அலுவல் ஏதும் இல்லை” என்று சொன்னான்.
ஆதித்தன் தனது கண்களைத் தனது தந்தையின் கண்களுடன் கலக்கவிட்டான். “எனக்குச் சொல்லியனுப்பவில்லையே!” என்று வினவினான்.
“இல்லை.” சர்வ சாதாரணமாகச் சொன்னான் விஜயாலயன்.
“ஏன்?” ஆதித்தன் வியப்பு அதிகமாயிற்று.
“இங்கு என் அலுவல் முடிந்துவிட்டது. உன் அலுவல் பாக்கியிருக்கிறது” என்றான் விஜயாலயன்.
“என்ன மகாராஜா?” என்று கேட்டான் ஆதித்தன.
தனது மன நிலையை மகன் புரிந்து விட்டதைக் கண்டு இதழ்களில் புன்முறுவலைப் படரவிட்டுக் கொண்டான் விஜயாலயன். தன்னை மகாராஜா என்று அழைத்தது, மகன்- தந்தை உறவை மறைத்து அரசன் – வீரன் உறவை ஆதித்தன்
சுட்டிக் காட்டியதால் அவனும் அரச தோரணையில் உத்தரவிட்டான்.
“இளவரசனே! போருக்குப் பின்பு பொறுப்புக்களைக் கவனிக்க வேண்டிய நமது படைத்தலைவன் வஞ்சி சென்று விட்டதால் நீ அந்தப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள். செந்தலை இளவரசி சோழ தேவியாகும் வரை இங்கேயே இரு.
இந்தப் போரில் தோல்வியடைந்த முத்தரைய வீரர்களில் நமது படையில் சேர யார் விரும்புகிறார்களோ அவர்களைச் சேர்த்துக் கொள். இனிமேல் பெரிதாக விரியும் சோழ சாம்ராஜ்யப் பணியில் ஏற்படக்கூடிய போர்களில் முத்தரையர்
பிரிவு பெரும் பலமுள்ளதாக இருக்கும்” என்று ஆணையிட்டான்.
ஆதித்தன் பிரமிப்படைந்து நின்றான். “தாங்கள் உடனிருந்து நடத்த வேண்டிய…” என்று ஏதோ சொல்ல முயன்றான்.
“திருமணமல்ல இது. வீரர்களுக்குக் காந்தருவம் சாஸ்திர சம்மதம். தவிர, நினைப்பிருக்கிறதா உனக்கு?” என்று இடைமறித்துப் பேசினான் விஜயாலயன்.
ஆதித்தனுக்கு ஏதும் புரியவில்லை. “எது?” என்று மட்டும் சொல்லை உதிர்த்தான், குழப்பத்துடன்.
விஜயாலயன் தனது புரவியில் அனாயாசமாக ஏறி பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தனது மகனை நோக்கினான். “சென்ற முறை தேவி உறையூருக்கு வந்தபோது என்ன சொன்னாள்?” என்று வினவினான்.
“நினைப்பில்லை.”
“உறையூருக்குள் இன்னொரு முறை நுழைவதானால் சோழநாட்டு மகாராணியாகத்தான் நுழைவேனென்று சொல்லவில்லையா?”
“ஆம், ஆம், சொன்னாள்.”
“அவள் சபதத்தை நிறைவேற்றுவோம். மகாராணியை எதிர்கொள்ள உறையூர் தயாராயிருக்கும்” என்று கூறிய விஜயாலயன், தனது வலது கையை ஆதரவாக மைந்தன் தோளின்மீது வைத்தான். பிறகு புரவியை சேணத்தை இழுத்து
நகர்த்தினான். அவனுடன் படையின் பெரும் பகுதி நகர்ந்தது.
விஜயாலயன் சென்றதும் அங்கிருந்த பாசறையிலேயே தங்கினான் ஆதித்தன். அடுத்த ஒரு வாரத்தில் முத்தரையர் படைப்பிரிவு சோழர் படையுடன் இணைக்கப்பட்டது. அதன் அணிவகுப்பு முறைகளை ஆதித்தனே மாற்றினான். அந்த
ஏற்பாடுகளை முடித்துக்கொண்டு சரியாக தேவி சொன்ன இரண்டு வாரக் கெடு முடிந்ததும் முத்தரையர் மாளிகைக்குச் சென்ற ஆதித்தன் நேராக தேவியிருந்த அறைக்குச் சென்றான். முத்தரைய பூபதியின் பஞ்சணையிலேயே
அமர்ந்திருந்தாள் தேவி. அவளைக் கண்ட ஆதித்தன் அதிர்ச்சியடைந்தான் ஒரு விநாடி, மகிழ்ச்சியடைத்தான் மறுவிநாடி.
தேவி பரிபூர்ண அலங்காரத்துடன் அமர்ந்திருந்தாள் பஞ்சணையில். சற்று எட்ட இருந்த மஞ்சத்தில் தட்டில் பால் இருந்தது. அது முத்தரைய பூபதியின் மதுக்குவளை என்பதை உணர்ந்த ஆதித்தன் தேவியை நோக்கினான்.
அவள் கமலக் கண்கள் அவனை ஏறெடுத்து நோக்கின. செம்பருத்தி இதழ்கள் லேசாக விரிந்தன. சற்று எட்ட இருந்த தூங்காவிளக்கு காற்றில் கண்ணைச் சிமிட்டியது. இந்த சூசகங்களின் பொருளைப் புரிந்து கொண்ட ஆதித்தன்
உணர்ச்சிகள் எல்லை கடந்தன. தேவியின் பஞ்சணையை அணுகி அவளை வாரி எடுத்து அணைத்தான். பிறகு மெதுவாக அவளைப் பஞ்சணையில் கிடத்தி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.
“முதலில் அதை அருந்தி விட்டு வாருங்கள்” என்று தேவி குவளையைக் காட்டினாள்.
“மதுவா?” என்று வினவினான்.
“இல்லை, பால்.”
“அது மதுக்குவளையாயிருந்ததே!”
“இருந்தது.”
“இப்பொழுது?”
“புது எஜமானருக்குத் தகுந்தபடி மாறுகிறது.”
ஆதித்தன் அவள் பக்கத்திலிருந்து எழுந்திருந்து சென்று பாலை அருந்தினான் சிறிது. பிறகு தனது வாளைக் கழற்றில் பஞ்சணையில் தேவியின் பக்கத்தில் எறிந்தான். பிறகு அவளை நோக்கிக் குனிந்தான். அவள் கண்கள் அவனைப்
பார்க்கதன. “தேவி! அந்தக் குவளையில் பால் இல்லை. மது இருக்கிறது. இல்லையேல் எனக்கு ஏன் இத்தனை ஏற்பட வேண்டும்?” என்று அவள் காதுக்கருகில் சொன்னயே.
“காரணம் காந்தருவம்” என்று முணுமுணுத்தாள்
“என்ன!” வியப்புடன் கேட்டான் ஆதித்தன்.
“உங்கள் தந்தையின் உத்தரவு.”
“அதெப்படி உனக்குத் தெரியும்?”
“என்னை அறியாமல் எதுவும் நடக்க முடியாது.”
“நீ வேவுகாரியா?”
“ஆம். உங்களை வேவு பார்ப்பேன். என்னை விட்டு நீங்கள் வேறு எந்தப் பெண்ணையும் தொட முடியாது” இதைச் சொன்ன தேவி கலகலவென் நகைத்தாள்.
ஆதித்தன் நகைக்கவில்லை. நகைத்த அவள் இதழ்களை அடக்கினான் தனது இதழ்களால். காந்தருவத்துக்குச் சாட்சியாகத் தூங்கா விளக்கு நிலைக்குத்தாக எரிந்தது. வெட்கங் கெட்ட பிறைமதியும் வானவெளியிலிருந்து பஞ்சணையை
நோக்கினான். அவன் தேய்ந்த பார்வைக்கு ஆதித்தன் தெரிந்தான்; தேவி தெரியவில்லை.
இரண்டு நாளில் உறையூர், இளவரசனையும் இளைய ராணியையும் குதூகலமாக வரவேற்றது. சங்கரநாராயணனே
நேரில் வந்து அவர்கள் திருமணத்தைச் சாஸ்திரப்படி நடத்தி வைத்தார். அத்துடன் தான் ஏற்கனவே பிரதிஷ்டை செய்திருந்தமாகனச் சிலையைக் கையில் எடுத்துக்கொண்டார். “விஜயா பா! சோழர்கள் சாம்ராஜ்யத்துக்கு மோகனச்
சிலைவித்திட்டுட்டது. இது இனிமேல் நாகப்பட்டினத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். இன்னொரு காலத்தில் இன்னொரு சோழன் கையில் அகப்படும். அப்பொழுது சோழ சாம்ராஜ்யம் கமலுக்கு அப்பாலும் விரியும்” என்று கூறினார்.
வான சாஸ்திரிக்கு விஜயாலயன் குடும்பம் தலை வணங்கியது. அவர்களை ஆசீர்வதித்த சங்கரநாராயணன், விஜயாலயா! தஞ்சைக்குச் செல். சோழர்களின் அந்த மூன்றாவது தலைநகரம் பெரும் சரித்திரத்தைச் சிருஷ்டிக்கப் போகிறது
வரலாற்றில். உன் படைத்தலைவன் இதயகுமாரன் இத்தனை நேரம் அங்கு வந்திருப்பான்” என்றார். காலம்
“இதயகுமாரனா?” என்று வினவினான் சோழ தேவன்.
“ஆம். அவன் காலில் சூர்ய சக்கரம் இருக்கிறது. அவனை முதலில் அங்கு காலெடுத்து வைக்கும்படி நான்தான் கூறினேன். அவனுடன் உன் மகள் கண்ணழகியும் இருக்கிறாள். அவள் தான் அந்த மோகனச் சிலையின் பிரதிபிம்பம். இந்தச்
சிலை போகிறதே என்று கவலைப்படாதே. உயிர்ச்சிலை துடிப்புடனிருக்கிறது தஞ்சையில்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
தஞ்சையின் சிறிய மாளிகையில் நின்றிருந்த மோகனச் சிலை உணர்ச்சித்துடிப்புடன் இருந்தது. இதயகுமாரன் கைகள் அவளைச் சுற்றிக் கொண்டிருந்தன. சாளரத்தின் மூலம் வெளியே பார்த்த கண்ணழகி, ‘இது அப்படி
உறையூரைவிடப் பெரிய நகரமல்லவே? இதை ஏன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்தார் தந்தை?” என்று வினவினாள்.
“பெரிய சாம்ராஜ்யங்கள் சிறிய நகரங்களிலிருந்துதான் விரிந்திருக்கின்றன. சிறிய அணுவிலிருந்துதான் பிரும்மாண்டம் உற்பத்தியாகிறது. சிறிய மனிதர்கள் பெரிய மனிதர்களாகிறார்கள். உதாரணமாக என்னைப் பார். நான் சில நாட்கள்
முன்பு குறுகிய சோழநாட்டின் படைத்தலைவன். இப்பொழுது உறையூரிலிருந்து வஞ்சிவரையும், இந்தத் தஞ்சை வரையும் விரிந்துள்ள சாம்ராஜ்யத்தின் படைத்தலைவன்…” என்றான் இதயகுமாரன்.
“ஒன்றை மறந்துவிட்டீர்கள்” என்று அரசகுமாரி புன்னகை கோட்டினாள்.
“எதை?”
“நீங்கள் சாம்ராஜ்யாதிபதியின் மருமகன் என்பதை.”
சற்று எட்ட விலகி நின்று இதயகுமாரன் கண்ணழகியைக் கவனித்தான். இரு கைகளையும் நீட்டினான். அந்தக் கைகளை நோக்கி நடந்து வந்தாள் கண்ணழகி மெதுவாக. மோகனச் சிலை உயிர்ப்பெற்று நடந்து வருவது போன்ற
பிரமையில் அவன் கைகளை நீட்டியபடியே நின்றான், கண்ணழகி அவன் கைகளில் அடைக்கலம் புகுந்த பின்பும். அவள் அவன் பிரமிப்பைக் கவனித்தாள். “எந்தக் கோட்டையைப் பிடிக்கப்போகிறீர்கள்?” என்று அவன் தோளில் சாய்ந்து
காதில் முணு முணுத்தாள்.
அவன் கைகள் மெதுவாக அவள் மீது தவழ்ந்தன. “மோகனக் கோட்டையை” என்று இதயகுமாரன் இதழ்கள் முணுமுணுத்தன. கோட்டையும் அவன் இஷ்டப்படி அவன் கைகளில் வளைந்தது.

.
(முற்றும்)

Previous articleMohana Silai Ch 53 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch1 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here