Home Historical Novel Mohini Vanam Ch 27 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 27 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

66
0
Mohini Vanam Ch 27 Mohini Vanam Sandilyan, Mohini Vanam Online Free, Mohini Vanam PDF, Download Mohini Vanam novel, Mohini Vanam book, Mohini Vanam free, Mohini Vanam,Mohini Vanam story in tamil,Mohini Vanam story,Mohini Vanam novel in tamil,Mohini Vanam novel,Mohini Vanam book,Mohini Vanam book review,மோகினி வனம்,மோகினி வனம் கதை,Mohini Vanam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam ,Mohini Vanam full story,Mohini Vanam novel full story,Mohini Vanam audiobook,Mohini Vanam audio book,Mohini Vanam full audiobook,Mohini Vanam full audio book,
Mohini Vanam Ch 27 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

Mohini Vanam Ch 27 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

மோகினி வனம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 27 அழகுக் கைதி

Mohini Vanam Ch 27 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

எந்த ஒரு நாட்டு மன்னன் கேவலம் காமுகனாக இருக்கிறானோ, எந்த மன்னன் ஆட்சி மண்டபத்தை அலட்சியம் செய்து அந்தப்புர ஆட்சியிலேயே மூழ்கிக் கிடக்கிறானோ, அவனால் நாடு நாசப்படுகிறது என்ற பழைய கொள்கைக்கு
உதாரணமாக விளங்கினான் ராணா பீம்சிங்.
ராஜபுதனத்தில் மிகப் பழைய அனுல்வாரா அரசர்களின் வழிவந்தவளும் சாவரா இன அழகியுமான ரகசிய ராணி பகிரங்க ராணியாக தனது மூன்று வயது மகளுடன் உதயபூர் அரண்மனைக்கு வந்த நாளாக மகாராணா
அந்தப்புரத்திலேயே ஆட்சி செலுத்திக்கொண்டார்.
பஞ்சணையை விட்டு அவரைக் கிளப்புவதே பிரும்மப் பிரயத்தனமாக இருந்ததால் மேவாரில் ஏற்பட்டிருக்கும் பயங்கர நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்று ஏங்கிய பிரதான மந்திரி சோம்ஜி, மகாராணியிடம் இதைப்பற்றி
முறையிட்டார். “மகாராணி! நான் மகாராஜாவைப் பார்ப்பது கூட துர்பலமாகிவிட்டதால் அரசாங்க அலுவல்களுக்கு அவரது ஆணைபைப் பெறுவதும் முடியாதிருக்கிறதே?” என்று கேட்டார்.
ராஜமாதா சிறிது நேரம் சிந்தித்தாள். “சோம்ஜி! அவனை இப்பொழுது திருப்ப முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இல்லை. மகாராணாவுக்குப் பதிலாக நீரே முடிவு எடுத்துவிடும்” என்றாள் ராஜமாதா சிறிது சிந்தனைக்குப் பிறகு.
“இது எனக்கு பல எதிரிகளைக் கிளப்பிவிடும்.” என்று சுட்டிக்காட்டினார் சோம்ஜி.
“அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் யாருக்கும் இந்த நிலை தான் ஏற்படும். ஆனால் நாட்டுக்கு நல்லது செய்வதில் ஆபத்துகள் இருக்கத்தான் செய்யும். அதை நாம் பொருட்படுத்தலாகாது” என்றாள் மகாராணி.
“என் உயிர் போனால்?”
“அரச சேவையில் போகும். சரித்திரத்தில் நிரந்தரமான இடத்தைப் பெறுவீர்.”
“எனக்கு சரித்திரத்தில் நிரந்தரமான இடம் வேண்டாமென்று என் பதவியை விட்டுவிட்டால்?”
“அப்பொழுதும் சரித்திரத்தில் நிரந்தரமான இடம் கிடைக்கும். நெருக்கடி சமயத்தில் ஓடிவிட்ட கோழை என்று வரலாற்றில் இடம் பெறுவீர்.” இதைச் சொன்ன ராஜமாதா புன்முறுவல் செய்தாள்.
அந்தப் புன்முறுவலைக் கவனித்த சோம்ஜி, “அரசைப் புறக்கணித்த ராணாவுக்கு மட்டும் அந்தப் பெயர் கிடைக்காதே?” என்று கேட்டார்.
“அந்தப் பெயர் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. புதிதாக ஏற்படாது.” என்றாள் ராஜமாதா. “சோம்ஜி உமக்கு முன்னால் இருந்த மந்திரி இந்த ராஜ்ஜியத்தைக் காப்பாற்றினார், தமது சொத்தையெல்லாம் விற்று. அவர் இறந்தபோது அவரது
ஈமக்கிரியைகளுக்குக்கூட பணமில்லாமல் பொது மக்களிடம் பணம் வசூலித்தார்கள். ஆனால் அவர் பெயர் சரித்திரத்தில் நிலைத்துவிட்டது. சாவு எல்லாருக்கும் வருகிறது சோம்ஜி. சாவு எப்படி வருகிறது என்பதுதான் நினைக்கத்
தகுந்தது.” என்ற ராஜமாதா “சோம்ஜி! மேவார் உம்மைத்தான் நம்பியிருக்கிறது” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
சோம்ஜி நின்ற இடத்திலேயே சிலையென நின்றார் பல விநாடிகள். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து தமது மாளிகைக்குத் திரும்பிப் பல ஓலைகளை எழுதினார். ஜெய்பூர் கோட்டா சமஸ்தானங்களை மேவாருடன் இணைந்து,
ராஜஸ்தானத்துக்குள் புகுந்துவிட்ட மகாராஷ் டிரர்களை வெளியேற்ற அவர்கள் முனைய வேண்டுமென்றும், இல்லாவிட்டால் மேவாரைப்போலவே அவர்கள் ராஜ்ஜியங்களும் அழியும் என்றும் ஓலைகளில் குறிப்பிட்டார். அந்த ஓலைகள்
அந்தந்த ராஜ்ஜியங் களுக்குப் போய்ச் சேரும் முன்பாகவே ஒரு தனிச் செய்தி வந்தது அவருக்கு.
அவசர ஓலை ஒன்றைத தாங்கி வந்த ஒரு வீரன் சோம்ஜியைச் சந்தித்தான்.
ஓலையை வாங்கிப் படித்த சோம்ஜியின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. மகாராஷ்டிரர்கள் முற்று கையைப் பிளந்து தீப்சந்த் ஜாவுத் கோட்டையைக் கைப்பற்றிவிட்டான் என்ற செய்திதான் அது.
மாவநாடிகள். இடத்திலே ஜெய்பூர் இத் திரும் பசியாக ஒயே சிலை
அந்தச் செய்தி தீயைப்போல் ராஜபுதனம் முழுவதும் பரவவே கோட்டா சமஸ்தானத்தின் ஜலீம்சிங்கும் ஜெய்ப்பூர் சமஸ்தானப் படைகளும் போரில் இறங்கிவிட்ட செய்தியும் சோம்ஜிக்குக் கிடைத்தது. ஏற்கெனவே மகாராஷ்டிரர்களிடம்
சிக்கியிருந்த நீம்பாஹீரா, லால்ஸாந்த், ராம்புரா முதலிய கோட்டைகள் அனைத்தும் மீட்கப்பட்ட செய்தி மேவாரின் அந்தஸ்தைப் பழைய நிலைக்குக் கொண்டு சென்றது.
ராஜஸ்தான் மீண்டும் துளிர்த்துவிட்ட செய்தி மகாராஷ்டிரத்திலும் பரவியதால் மாதாஜி சிந்தியாவின் வலுவைப்பற்றி மகாராஷ்டிரத்தில் சந்தேகம் பலமாக ஏற்படவே அவர் பெரிதும் கலங்கினார். கடைசியாக அவருக்குக் கிடைத்த செய்தி
ஜாவுத் கோட்டையின் வீழ்ச்சிதான் “அதைக் காத்து வந்த சேவாஜி நானாராவ் அத்தனை சாதாரணமானவரல்லவே? அவர் எப்படி தோல்வியடைந்தார்?” என்று தம்மைத்தாமே கேட்டுக் கொண்டார் சிந்தியா
இப்படி அவர் சிந்தனையிலிருக்கையில் “நானாராவ் வந்திருக்கிறார்” என்று வீரன் ஒருவன் அறிவித்தான்.
“வரச்சொல்.” என்றார் சிந்தியா.
நானாராவ் உள்ளே வந்தார். அவர் உடலில் காயம் எதுமில்லாததைக் கவனித்த சிந்தியா “நானா! நீர் போர்க்களத்திலிருந்துதானே வருகிறீர்?” என்று விசாரித்தார்.
அந்த விசாரணையிலிருந்த இகழ்ச்சியைப் புரிந்து கொண்ட நானாராவ், “போர் என்பது புஷ்கரத்தின் நீராட்டமல்ல” என்று நானாவும் தமது இகழ்ச்சியைக் காட்டினார்.
அப்பொழுது புஷ்கரத்தில் புனித நீராட தாம் வந்திருந்ததை மறைமுகமாக நானா உணர்த்துகிறார் என்பதைப் புரிந்துகொண்ட ‘மாதாஜி சிந்தியா, “ஆம், புஷ்கரத்தில் நீராட வந்தேன். ஆனால், ஆடிய நீர் என் உடலிலிருந்து உலர்ந்து
மறைந்துவிட்டது. போர்க்களத்தில் இருந்து வரும் உமது உடலின் இரத்தமும் காயங்களும் எப்படி உலர்ந்தன? ஒருவேளை உமது உடலில் இரத்தத்துக்குப் பதில் நீர் ஓடுகிறதா?” என்று வினவினார்.
“நானாராவ் தலைகுனிந்து நின்றார். சிந்தியா நான் யாரோடு போரிட்டேனோ அவன் சாதாரண மனிதனல்ல. மகாவீரன், மகாதந்திரசாலி. அவன் வந்தது பத்தாயிரம் வீரர்களுடன். சுமார் நூறு பீரங்கிகளைக் கொண்டு வந்தான். சில
வாணவெடிகளையும் கொண்டு வந்தான். நானும் கோட்டைப் பீரங்கிகளை இயக்கி, அவை குண்டுகளை வீசுமுன்னே, அந்த வாலிப வீரனின் குண்டுகள் தமது பீரங்கிகளைக் கோட்டைச் சுவர்களிடமிருந்து வீழ்த்தின. அவன் விடுத்த
வாணவெடிகள் கோட்டைக்குள் பல இடங்களில் விழுந்து பல இல்லங்களையும் போர்க் கூடாரங்களையும் கொளுத்தி விட்டன.
நான் எனது புரவிப் படையை வெளியே அனுப்பினேன். அவன் புரவிப்படை பக்கங்களில் நகர்ந்து எனது புரவிப்படை உள்ளே புகுந்தாலும் மறுபடியும் அவன் புரவிப்படைகள் சேர்ந்து எனது புரவிப் படையை நெருங்கி
அழித்துவிட்டன. மேலும் சேதம் ஏற்படும் முன்பு சரணடைவதாகச் செய்தி அனுப்பினேன். அவன் ஒப்புக் கொண்டான். கோட்டையை விட்டு நான் படைகளுடன் வெளியேறியபோது அவன் படைகளால் எந்த விதத் தடையும் இல்லை.
பெரிய புரவியொன்றில் அமர்ந்திருந்த அவன் எனக்குத் தலை வணங்கினான். மகாவீரன், நாணயமுள்ளவன், அழகாகவும் இருக்கிறான்.” இப்படிச் சொல்லி முடித்தார் நானாராவ்.
மகாவீரனான நானாராவ், பல போர்களில் வெற்றி வாகை சூடியிருக்கும் நானாராவ், இப்படி ஒருவனைப் புகழவேண்டுமென்றால் அதற்குக் காரணம் இருக்க வேண்டும் என்று சிந்தியா தீர்மானித்தார். எதிரியின் அழகைப்பற்றி நானாராவ்
பாராட்டியதும் சிந்தியா அத்தனைக் கஷ்டத்திலும் புன்னகை செய்தார். “எதிரி மிகவும் அழகனோ?” என்று விசாரித்தார்.
“ஆம்.”
“வயதானவனா?”
“இல்லை வாலிபன்.”
“பெயர்?”
“தீப்சந்த்.”
“பெயரும் அழகாகத்தான் இருக்கிறது.”
“ஆம்.” என்றார் சிந்தியா.
சிந்தியா லேசாக நகைத்தார். “அப்படியானால் உமது பெண்ணை அவனுக்குக் கொடுக்கலாமே?” என்றார் நகைப்பின் ஊடே.
நானாராவ் அந்தச் சிரிப்புக்கு மசியவில்லை. தாமும் புன்முறுவல் செய்து, “முடியாது.” என்றார்.
“ஏன்? என்ன ஆட்சேபணை?” என்று சிந்தியா கேட்டார்.
“அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள்” என்று ஒரு அதிர்வேட்டைத் தூக்கிப் போட்டார் நானாராவ்,
சிந்தியா நகைத்தார் பெரிதாக. “அவளை நீர் பார்த்திருக்கிறீரா?” என்று வினவினார்.
“பார்த்திருக்கிறேன்.”
“ரொம்ப அழகோ?”
“இணையில்லா அழகு” என்று சொன்ன நானாராவ் சிந்தியா முற்றும் எதிர்பாராத இரண்டாவது வெடி குண்டை எடுத்து வீசினார். “தாங்கள் வேண்டுமானாலும் பார்க்கலாம்” என்று.
சிந்தியாவின் முகத்தில் அதிர்ச்சி பெரிதும் விரிந்தது. “என்ன உளறுகிறீர்?” என்று கேட்டார்.
“உளறவில்லை. இப்பொழுது வெளியே நிற்கிறாள். உத்தரவிட்டால் உள்ளே அழைக்கிறேன்” என்றார். நானாராவ்.
அந்த உத்தரவுக்கு அவசியமில்லாது போயிற்று. உடையில் தலைக்குழல் விரிந்து கிடக்க உள்ளே நுழைந்தாள் புஷ்பாவதி. இங்கு யார் சிந்தியா என்பது?” என்று சீற்றத்துடன் வினவவும் செய்தாள்.
சிந்தியா அவள் அழகைக் கண்டு பேரதிர்ச்சியடைந்தார். அவள் கண்களில் இருந்து பறந்த சினத்தின் பொறிகளே அவள் அழகைக் கண்களின் அழகைப் பன்மடங்கு அதிகப்படுத்தியது. சினத்தால் துடித்த செவ்விய அதரங்கள் பனி வீழ்ந்த
செம்பருத்திபோல் காட்சியளித்தன. ஆண் உடையிலும் அவள் மிக அழகாயிருந்தாள். விரிந்த அவள் குழல்களில் சில அவள் தோள்களில் தொங்கியது கூட ஒரு புதுமையை சிருஷ்டித்தன.
அவளை நீண்ட நேரம் உற்று நோக்கிய சிந்தியா நானாராவைப் பார்த்து, “ஒரு பெண்ணைத்தான் உம்மால் பிடிக்க முடிந்தது?” என்று கேட்டார். –
“இவள் பெண்ணல்ல ராட்சசி. என் வீரர்களில் நான்குபேரைக் கொன்ற பிறகே பிடிபட்டாள்.” என்றார் நானாராவ்.
சிந்தியா தனது பணியாட்களை அழைத்து, “இவளை அழைத்துப்போய் என் மனைவியிடம் விடுங்கள்” என்று கூறி, “பெண்ணே! கவலைப்படாதே. என் மனைவி உன்னை எங்கள் பெண்போல் நடத்துவாள்.” என்றும் கூறினார்.
இரு காவலரிடையே புஷ்பாவதி உள்ளே சென்றாள். “அப்பொழுது ஒரு யோசனை தோன்றுகிறது” என்றார் சிந்தியா.
“என்ன யோசனை?”
“நீர் மீண்டும் தூது போக வேண்டும்.”
“எங்கு?”
“நாளை சொல்கிறேன்” என்று அத்துடன் பேட்டி முடிந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாக ஆசனத்தில் இருந்து எழுந்து உள்ளே சென்றார்.
மறுநாள் அவர் அளித்த உத்தரவைக் கேட்டதும் நானாராவுக்குப் பிராணனே போய்விட்டது. “நீங்களே என்னைக் கொன்றுவிடலாமே!” என்றார், நானாராவ்.

Previous articleMohini Vanam Ch 26 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
Next articleMohini Vanam Ch 28 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here