Home Historical Novel Moongil Kottai Ch11 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch11 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

98
0
Moongil Kottai Ch11 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch11 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

Moongil Kottai Ch11 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 11 மந்திரச் சொல்

Moongil Kottai Ch11 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

சித்தர் மடம் என்றதும் வீரர்கள் ஏன் தலை வணங்கினார்கள் என்று கேட்டவுடன் இமயவல்லியின் கோபம் பீறிட்டெழுந்ததையும், நிறுத்துங்கள் உங்கள் கேள்விகளை’ என்று அவள் சீறியதையும் கண்ட இளமாறனுக்கு அவள் சீற்றத்தின்
காரணம் புரியவில்லையே தவிர சித்தர் மடத்துக்கும் தாங்கள் உத்தே சித்துச் செல்லும் அலுவலுக்கும் நிரம்ப தொடர்பிருக்க வேண்டும் என்பதை மட்டும் திட்டவட்டமாகப் புரிந்து கொண்டான். இமயவல்லி தன்னைச் சீறி விழுந்து விட்ட
பிறகு தனக்குப் பக்கத்திலிருந்து எழுந்து விட்டதைக் கண்ட இளமாறன், அவள் மேற்கொண்டு சம்பாஷணையையும் விரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்டான். ஆகையால் அவனும் தன் கண்களை அவளிடமிருந்து நீக்கித்
தனக்குப் பின்னால் கிடத்தப்பட்டிருந்த பாண்டிய சேனாதிபதியை நோக்கித் திருப்பினான். பாண்டிய சேனாதிபதியின் காயமிருந்த இடத்தைச் சிறிது அழுத்திப் பார்த்துப் பிறகு அவன் நாடியையும் பரிசோதித்த சேர நாட்டு வாலிபன்,
“பாதகமில்லை. பிரயாணத்தை நன்றாகவே தாங்குகிறார்” என்று இரைந்தே பேசினான்.
அந்தப் பேச்சு தன்னை உத்தேசித்துப் பேசப் பட்டது என்பதை அறிந்து கொண்டதனால் அத்தனை கோபத்திலும் சற்றுப் புன்முறுவல் கொண்டான் இமயவல்லி. அத்துடன் எதிரே உட்கார்ந்திருந்த அந்த வீரனைக் கடைக்கண்ணால்
பார்த்து அவன் இருந்த நிலைமையைக் கண்டதால் அந்த புன்முறுவல் சிரிப்பாக மாறும் நிலைக்கு வரவே வாயைக் கையால் பொத்திக் கொள்ளவும் செய்தாள். அவளுக்குச் சிரிப்பு வந்த காரணத்தை அவன் நன்றாக அறிந்தே இருந்தான்.
தன் அங்கியில் முக்கால்வாசிக் கிழிக்கப்பட்டு, பாண்டிய சேனாதிபதியின் காயத்தை மறைக்கப்போய் விட்டதால் கால் அங்கி மட்டும் இடது தோளில் தொங்க இடுப்புக் கச்சம் தவிர மற்றபடி தனது உடல் திறந்து கிடந்ததால் தான்
பார்வைக்கு விநோதமாயிருப்பதையும், அந்த விநோத சேவையே அவள் நகைப்புக்குக் காரணம் என்பதையும் புரிந்து கொண்டான் அந்த எண்ணத்துடன் எதிரே உட்கார்ந்திருந்த அழகியையும் அவன் கண்கள் அளவெடுத்தன,
மூடுதேருக்கு வெளிப்பக்கத்தில் செருகப்பட்டிருந்த பந்தத்தின் வெளிச்சம் உள்ளேயும் சிறிது அடித்ததால் இமயவல்லி இரவில் திடீரெனத் தோன்றிய அப்சர மங்கை போல் காட்சியளித்தாள். காற்றின் சலனத்தால் பட்பட்டென்று மாறி மாறி
உள்ளே வந்த பிரகாசம் அவ்வப்பொழுது அவள் கன்னத்தைத் தாக்கிச் சென்றதால் அவளைக் காட்டிக் காட்டி மறைப்பது போன்ற பிரமையே அளித்தது. நன்றாக வழவழத்துக் கவிழ்க்கப்பட்ட அரைமதியென வளைந்து கிடந்த அந்தக்
கன்னமும் வளையாமல் அடங்காமல் நிமிர்ந்து சீலையையும் திமிறிய மார்பகமும் அந்த ஒளியில் மாறி மாறித் திடும் திடுமெனத் தெரிந்ததால் சில விநாடிகள் நிலை குலைந்தான் இளமாறன். அந்த நிலைகுலைந்த சமயத்திலும் கிழிந்த
உடையுடனிருப்பது தானல்லவென்பதையும் அவள் சீலை முந்தானைகூட கிழிந்து தொங்கிக் கொண்டிருந்ததையும் கண்டு அவனும் களுக்கென்று சிரித்தான்.
புன்முறுவல் கொண்டிருந்த இமயவல்லி அந்த புன்முறுவலை மறைத்து மீண்டும் கோபச் சாயையை முகத்தில் படரவிட்டுக் கொண்டு, “எதற்காகச் சிரிக்கிறீர்கள்?” என்று வினவினாள்.
“நீ எதற்காகச் சிரித்தாய் இமயவல்லி” என்று பதிலுக்கு வினவினான் இளமாறன்.
அந்த இரவின் ஆரம்பத்தில் அவன் காட்டி வந்த மரியாதையும் நீங்கள் போங்கள்’ என்ற சொற்களையும் அடியோடு கைவிட்டதையும் மிகவும் சொந்தத்துடன் பெயர் சொல்லி அழைப்பதையும் கண்ட அவள் மனத்தில் உணர்ச்சிகள்
புரண்டன. அந்த உணர்ச்சிகளின் புரட்சி கோபத்தினால் ஏற்பட்டதா என்பதை ஆராய்ந்த அவளுக்கு விடை தெளிவாகக் கிடைக்கவில்லை. அவன் பேச்சு விளைவித்தது கோபமில்லை என்பதை மட்டும் தீவிர ஆராய்ச்சிக்குப்பின்
அறிந்தாள். அதுமட்டுமல்ல, அப்படி அவன் மரியாதையின்றியும் பெயர் சொல்லி அழைத்ததில் தனக்கு ஓரளவு இன்பம்கூட இருந்ததை உணர்ந்தாள். அந்த இன்பம்கூட அவள் கோபத்தை மீண்டும் கிளறவே அவள் சொன்னாள்: “நான்
சிரித்த காரணத்தை நீங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை” என்று.
அர்த்தமற்ற அந்தப் பதில் அவன் சிரிப்பை உள்ளுர அதிகப்படுத்தியதானாலும் அதை வெளிக்குக் காட்டாமல் ‘நான் சிரித்த காரணத்தை மட்டும் நீங்கள் கேட்க வேண்டியது அவசியம் போலிருக்கிறது” என்றான் மேலுக்கு சர்வ சகஜமாக.
அந்தப் பதிலில் ஏளனமிருப்பதை அவள் விநாடி நேரத்தில் புரிந்து கொண்டாள். ஆகவே சொற்களில் சூடு பறக்க, “ஆம் அவசியந்தான்” என்றாள்.
“ஏன் அவசியமோ?” என்று வினவினான் அவன்.
“உங்கள் மேலங்கி…” என்று அவள் இழுத்தாள்.
“ஆம், அதற்கென்ன?”
“பெயருக்குத்தான் மேலே இருக்கிறது.”
“ஆமாம்.’“
“முக்கால்வாசி கிழித்துக் கட்டியாகிவிட்டது படைத் தலைவர் காயத்தில்.”
“ஆமாம்.”
“என்ன ஆமாம்? நான் சொல்வது புரியவில்லையா உங்களுக்கு…”
“புரியவில்லையே.”
“சிறிது மேலங்கி மட்டும் கிழிந்து தொங்க உடலைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது பண்பாடா? அதுவும் ஒரு…”மேலே பேச வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு. வெட்கம் ஆட்கொண்டது அவளை.
இளமாறன் வார்த்தையை முடித்தான். “அதுவும் ஒரு பெண் முன்பாக” என்று. பிறகு பதிலேதும் சொல்லாமல் அவளைக் கூர்ந்து நோக்கினான். தன் கையால் கிழித்த முந்தானை பட்டையாகவும் தாறுமாறாகவும் அவள் மார்பைத்
தொட்டுக் கொண்டிருந்தது. இழுத்து இடுப்பில் செருகக்கூடிய பாகத்தைத் தான் கிழித்து விட்டதே அதற்குக் காரணமென்பதைப் புரிந்து கொண்ட இளமாறன், தனது அந்த அவசரச் செய்கையால் மார்பகத்தை இழுத்து மூட முடியாத
அவள் எத்தனை அவஸ்தைப்படுகிறாள் என்பதைக் கவனித்தான். அந்த அவஸ்தைக்குத் தான் காரணமென்பதும் அவனுக்குத தெரிந்திருந்தது. அந்த அவஸ்தையை அவள் படுவதில், அவள் படும் அவஸ்தைக்குத் தான்
காரணமாயிருந்ததில் அவனுக்குப் பெரும் ஆனந்தமிருந்தது. அப்படி ஆனந்தப்படுவது தவறு, பண்பாட்டுக்கு விரோதமானது என்பதை அந்த வாலிபன் அறிந்தே இருந்தான். அவளிருந்த நிலையில் அவள் மார்புப் பிரதேசங்களில்
கண்களை ஓட்டுவதும் நாணயமான வீரன் செய்யக்கூடிய காரியமல்லவென்பதும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. இருப்பினும் அந்தப் பண்பாட்டுக்கு விரோதமான வழியில் நாணயத்துக்குப் புறம்பான மார்க்கத்தில், தன்
எண்ணங்களும் புலன்களும் செல்வதை உணர்ந்தான். அவற்றால் இழுக்கப்பட்ட அவன் மெள்ள, “நீ சொல்லலாம் இமயவல்லி, நான் சொல்லக்கூடாது” என்று ஆரம்பித்தான்.
“எதை நீங்கள் சொல்லக்கூடாது, நான் சொல்லலாம்” என்று சீறினாள் அவள்.
“எதையுந்தான்” என்றான் அவன்.
அவன் குரலிலிருந்த ஏதோ ஓர் ஒலி அவள் சந்தேகத்தைக் கிளப்பவே கேட்டாள் அவள். “எதையுந்தானென்றால்…?” என்று.
“உதாரணமாக…”
“உம் சொல்லுங்கள்.”
“நானிருக்கும் நிலை கண்டு நீ நகைத்தாய்?”
“ஆம், நகைத்தேன்.” திட்டமாகச் சொன்னாள் இமயவல்லி. ‘இன்னுங்கூட நகைப்பேன்’ என்று சொல்வது போலிருந்தது அவள் குரல்.
“அந்த உரிமை உனக்கு மட்டும் தானா?” என்றான் இளமாறன்.
“எந்த உரிமை?”
“என் ஆடை கிழிந்து கிடப்பதைச் சுட்டிக் காட்டும் உரிமை.”
இளமாறன் எங்கு பேச்சைக் கொண்டு போகிறான் என்பதைப் புரிந்து கொண்ட இமயவல்லி, திடீரென முந்தானையை இழுத்துப் போர்த்திக்கொள்ள முயன்றாள். அப்பொழுதுதான் முந்தானையை இளமாறன் கிழித்துவிட்டது
அவளுக்கு நினைவு வந்தது. சட்டென்று கால்களிரண்டையும் தூக்கி ஆசனத்தில் வைத்துக்கொண்டு குறுகி உட்கார்ந்து கைகளைக் கட்டி மார்பகத்தை மூடிக்கொண்டு, “நீ நீ” என்று பேச முயன்று உணர்ச்சி மிகுதியால் திணறினாள்.
“நான், நான், நான், என்ன? வாய்விட்டுச் சொல்லி விடு.”
“அயோக்கியர்.”
“இல்லை இல்லை.”
“வேறென்ன?”
“பரம அயோக்கியன்’ என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்ட இளமாறன் எழுந்திருந்து எதிராசனம் சென்று குறுகிக் கிடந்த அவள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு தன் கைகளிரண்டையும் அவள் தோளில் வைத்தான். அவள்
கண்கள் நெருப்பைக் கக்கின. “எழுந்து போய்விடு…” என்றாள் அவள்.
“இல்லாவிட்டால்?” இளமாறன் நகைத்தான்.
“வண்டியிலிருந்து கீழே தள்ளிவிடுவேன்” என்றாள் அவள்.
“தள்ளிவிடு” என்று அவனும் பதில் கூறினான்.
அவள் தள்ளவில்லை. மார்பகத்தை மூடியிருந்த கைகளையும் எடுக்கவில்லை. ‘கைகளை எடுத்துத் தான் தள்ள வேண்டும்; எடுத்தால் இவன் கண்கள்…’ அதற்கு மேல் நினைக்க முடியவில்லை அவளால். முகத்தை அவள் குவிந்து
கிடந்த முழந்தாளில் புதைத்துக் கொண்டாள். அவள் தலையை மெள்ள வருடினான் இளமாறன். அவன் இடது கை அவள் முதுகில் தவழ்ந்து சென்றது. திடீர் திடீரென்று சாலைப் பள்ளங்கள் மூடுதேரைத் தூக்கி தூக்கியெறிந்ததால் அவள்
விழவொட்டாமல் தடுக்க அவன் இடது கையை அவள் இடையில் இறுக்கி அழுத்திப் பிடித்தான். இது
பிறகு, அவள் காதுக்கருகில் குனிந்து, “இமயவல்லி” என்று மெல்ல அழைத்தான்.
அவள் பதில் சொல்லவில்லை இடையில் அழுந்திக் கிடந்த அந்த ஆண் மகனின் கரம் அவளுக்கே ஏதோ வேதனைகளை விளைவித்துக் கொண்டிருந்தது. குழலைக் கோதிய அவன் வலது கைவிரல்கள் தலையின் நரம்புகளில் விவரிக்க
முடியாத உணர்ச்சிகளைக் கிளப்பி விட்டன. உணர்ச்சிகளின் இந்தக் கொந்தளிப் பின் காரணம் அவளுக்கே புரியவில்லை. இதே மாதிரிப் பயணங்களை அவள் ஏற்கனவே நான்கு முறை மேற்கொண்டிருக்கிறாள். ஆனால்கூட வந்த வீரன்
எவனும் தன்னை நெருங்கக்கூடத் துணிவில்லாதிருந்ததை நினைத்துப் பார்த்த அவள், ‘இவருக்கு மட்டும் எப்படி வந்தது இந்தத் துணிச்சல்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
இத்தனையிலும் அவன் துணிச்சல் தனக்கு வெறுப்பை அளிக்கவில்லை என்பதை உணர்ந்து அவள் திகைத்தாள். அவன் பண்பற்ற பேச்சும் குதர்க்கமும் தனக்கு வெறுப்பை அளிப்பதற்குப் பதில் இன்பத்தையே அளித்ததையும் தான்
மேலுக்குக் காட்டிய வெறுப்பு சக்தியில்லாததென்பதையும் உணர்ந்த அவள் பிரமித்தாள். அந்தத் திகைப்பினாலும் பிரமிப்பினாலும் இளமாறன் கைகளிரண்டையும் ஒதுக்கிக்கூடத் தள்ளாமல் உட்கார்ந்திருந்தாள். அவள் இடுப்பு
ஒருமுறை வளைந்து கொடுத்தது. கிடைத்த இடைவெளியில் ஊர்ந்தது அவன் இடது கை. தலை ஒரு முறை அசைந்தது. அவன் வலது கைவிரல்கள் கழுத்தின் பின்புறம் இறங்கின.
அவள் இதயத்தில் இன்ப வேதனை விளையாடிக் கொண்டிருந்தது. இளமாறனும் அவள் உடலின் ஸ்பரிசத்தால் தலை குனிந்தான். இருவரும் அதுவரை அறியாத நிலை அது. அறிந்தபோது உணர்ச்சிகள் வெள்ளமெடுத்து
அவ்விருவரையும் இன்பலோகத்துக்கு அடித்துக் கொண்டு போயின. அந்த இன்ப வெள்ளத்தின் ஊடே ஒலித்தது இளமாறன் இன்பநாதம், “இமயவல்லி’“ என்று.
அப்போதும் அவள் பதில் சொல்லாது இருக்கத்தான் முயன்றான். அவளையும் மீறி எழுந்தது ஓர் ‘உம்.’
“இமயவல்லி… நான்… தான்” என்று இளமாறன் அவள் காதுக்கருகில் தடுமாறினான்.
“நீங்கள்?” தலையை முழந்தாள்களில் புதைத்த படியே கேட்டாள் அவள்.
“தவறுதான்… செய்துவிட்டேன்” ரகசியம் சொன்னான் இளமாறன்..
“தவறா! என்ன தவறு?” அவள் கேட்டாள் தழுதழுத்த சொற்களால்.
“உன்னைப் பார்த்து…!”
“உம்.”
“நகைத்திருக்கக் கூடாது.”
“ஆம்! ஆம்.”
“மன்னித்து விடு. இமயவல்லி இனிமேல்…”
“நகைக்க மாட்டீர்களே?”
“மாட்டேன்”
மீண்டும் இருவரிடையே மௌனம் நிலவியது. கழுத்திலிருந்து இறங்கிய வலது கை விரல்கள் முதுகை மெல்ல வருடிவிட்டு அவள் தோள்பட்டையைத் தொட்டன. அவன் இடது கைவிரல்கள் அவள் இடுப்பில் விரிந்தன. அவள் மெள்ள
நெளிந்தாள். அத்துடன், “நானும்” என்று ஏதோ துவங்கினாள்.
“நீ” என்று கேட்டான் இளமாறன்.
“தவறுதான் செய்துவிட்டேன்.”
“இல்லை இல்லை, நீ எந்தத் தவறும் செய்யவில்லை.”
“இல்லை செய்திருக்கிறேன்.”
“என்ன தவறு?”
“நீங்களே சுட்டிக் காட்டினீர்களே?”
“எதைச் சுட்டிக் காட்டினேன்?”
“நான் நகைத்தது தவறென்பதை!”
“தவறென்று நான் சொல்லவில்லையே.”
“வாயால் சொல்லவில்லை. பொருள் அது தானே.”
“எது பொருள்?”
அவளுக்குப் பதில் சொல்லத் தெரிந்தது. ஆனால் சொல்லவில்லை. அந்தச் சமயத்தில் அவ்விருவருக்கும் எதற்கும் எந்தப் பொருளும் புரியாத நிலை இருந்ததால் அவள் மௌனமானாள். அவன் அவளை உந்திக் கேட்டான், “எது
பொருள்?” என்று மீண்டும்.
“புரியவில்லை?” என்றாள் அவள்.
“எது புரியவில்லை?”
“பொருள் எதுவென்று?”
“புரிந்தது போல் தோன்றுவதெல்லாம் புரியவில்லை. புரிவதும் தவறாக இருக்கிறது.” அவள் மனம் ஓடும் திக்கை அவன் புரிந்து கொண்டான். இருப்பினும் அவள் வாயால் வரட்டும் என்று கேட்டான், “எது புரியவில்லை, எது
தவறாகப் புரிந்தது?” என்று.
இமயவல்லி கவிழ்ந்த தலை கவிழ்ந்தபடியே, “முதலில் உங்கள் மீது ஏற்பட்டது கோபம் என்று நினைத்தேன்” என்றாள்.
“அது தவறாகப் போய்விட்டதா?” என்று வினவினான் இளமாறன்.
“ஆம்” என்றாள் அவள்.
“தவறாகப் போய்விட்டால், சரி எது?”
அவள் ஏதோ சொல்ல வாயெடுத்திருக்க வேண்டும் பிறகு சொல்ல முடியாதென்பதற்கு அறிகுறியாக அவள் தலையை ஆட்டியதிலிருந்து அவள் உண்மை நிலையைப் புரிந்துகொண்டான் இளமாறன். ஆகவே அவள் காதில் தன்
இதழ்களைப் புதைத்து, “நான் சொல்லட்டுமா?” என்றான்.
“சொல்லுங்கள்” என்பதற்கு அறிகுறியாக அவள் தலையை அசைத்தாள். அப்படி அசைத்ததால் அவள் கன்னம் இருமுறை வந்து காதுக்கருகிலிருந்த அந்த வாலிபன் உதடுகளைத் தடவிச் சென்றது. அவன் உணர்ச்சிகள் கொந்தளித்தன.
அவன் மனம் சொர்க்க லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அந்த உலகத்தில் இருந்தே இன்ப மொழிகளை உதிர்க்கத்
தொடங்கி, “சொல்லட்டுமா? சொல்லி விடட்டுமா?” என்றான்.
“உம்… உம்.”
“நீ சொல்ல முற்பட்ட வார்த்தை எனக்குத் தெரியும்.”
“ஊஹும்.”
“ஆமாம்.”
“என்னவாம்?”
“நேசம்.”
இந்த வார்த்தையை மிக இன்பமாக உதிர்த்தான் அவள் காதில் இளமாறன். அவள் உடல் புல்லரித்தது. அவள் தலை மீண்டும் ஆடியது இல்லையென்பதற்கு அறிகுறியாக. அவன் இதழ்கள் அந்தச் சாக்கை முன்னிட்டு அவள் கன்னத்தை
நாடித் தைரியத்துடன் சென்றன. சென்ற அலுவலை முடித்துத் திரும்பிக் காதுக்கருகில் சொன்னான் : “நீ கொண்டது கோபமல்ல, நேசம் என்றேன், அதுவும் அல்லவா?” இந்தத் தடவை அவன் சொற்கள் தைரியமாக வெளிவந்தன.
அவள் தலை நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவள் கண்களில் புதிய ஒளி இருந்தது! “வேறொரு சொல்லும் இருக்கிறது” என்றாள் அவள் அவனை நோக்கி.
“நேசத்தை விடவா!”
“ஆம்.”
“என்ன சொல்லோ அது?”
அவள் அவன் காதுக்கருகில் சென்று சொன்னாள். அந்த மர்மச் சொல்லால் பிரமை பிடித்த அவன் அவள் கழுத்தில் தன் தலையைப் புதைத்தான். அவள் அசையவில்லை. எதிர்க்கவில்லை. இருவரும் உலகை மறந்தார்கள். நேரம் போனது
அவ்விருவருக்குமே தெரியவில்லை, அப்பேர்ப்பட்ட மந்திரச் சொல்லை அவள் சொல்லியிருந்தாள்! மந்திரச் சொல் நேரத்தை நீண்ட அளவுக்கு ஓட்டியது.
யாரோ ஒருவர், “மன்னிக்க வேண்டும்; மன்னிக்க வேண்டும்” என்று இருமுறை சொன்ன பிறகுதான் இருவருக்கும் சுரணை வந்தது. சங்கடப்பட்டுப் பிரிந்து உட்கார்ந்தார்கள் இருவரும். வண்டியின் திரைச் சீலையை நீக்கி உள்ளே தலை
நீட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

Previous articleMoongil Kottai Ch10 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch12 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here