Home Historical Novel Moongil Kottai Ch15 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch15 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

82
0
Moongil Kottai Ch15 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch15 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

Moongil Kottai Ch15 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 15 கடமையும் உடைமையும்

Moongil Kottai Ch15 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

சித்தர் மடத்தின் தனி விடுதியில் உறங்கி, முன்பின் அறியாத வேறோர் இடத்தில் எழுந்த இளமாறன் பல விநாடி பிரமை பிடித்துக் கண்களுக்கெதிரே விரிந்த அற்புதக் காட்சியைக் கண்டுகொண்டே இருந்தான். அவனிருந்த இடம் ஒரு
காட்டின் முகப்பு. எதிரே தெரிந்தது வெறும் பொட்டல் வெளிக்கிடையே ஒரு சிறு கோட்டை. இமயவல்லி புலவர் இல்லத்தில் செய்த விவரணத்திலிருந்து அது தான் மூங்கில் கோட்டையாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்தான்
இளமாறன்.
கோட்டை அப்படியொன்றும் பெரிய கோட்டையாயில்லாவிட்டாலும் அதன் சுவர்கள் பெரும் கோட்டைச் சுவர்களின் கனத்துக்கு அமைக்கப்பட்டிருப்பதைத் தூரத்திலிருந்தே புரிந்து கொண்ட அவன், அது உண்மையில்
பழங்காலத்துக் கோட்டை என்பதையும், சமீபத்தில் பழுது பார்க்கப்பட்டிருக்கிறதென்பதையும், சுவரிலும் உட்கோட்டைச் சிகரங்களிலுமிருந்த புது ஒடுகளிலிருந்து ஊகித்துக் கொண்டான். பழங்கோட்டையைப் பாண்டிய மன்னன்
சமீபத்தில் புதுப்பித்த தற்குக் காரணமும் நன்றாகப் புரிந்திருந்தது அவனுக்கு. மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கு அதை வாசஸ்தல மாக்கவே அக்கோட்டையை நெடுஞ்செழியன் பழுது பார்த்திருக்கிறானென்பதை அறிந்து கொண்ட
அந்தச் சேரநாட்டு வீரன், அதை வளைத்து நின்ற கட்டாந்தரையை உற்று நோக்கினான். அதில் லேசாக முளைக்கத் தொடங்கிய புற்களின் நுனிகளும், ஆங்காங்கு தெரிந்த பெரும் மரங்களின் அடிக்கட்டைகளும் அந்தப் பகுதி
கட்டாந்தரையாகி அதிக நாள் ஆகவில்லை என்பதையும், காட்டுக்கு நடுவிலிருந்த அந்தப் பழங்கோட்டையைச் சுற்றிலும் காடு அப்பொழுது தான் வெட்டப்பட்டிருக்கிறதென்பதையும் அறிந்து கொண்ட இளமாறன், அந்தத் தரையின்
கீழ் இமயவல்லி கூறிய பெரும் அகழிகள் இருக்க முடியுமா என்றும் சிந்தித்தான். அப்படிச் சிந்தித்த அவன், அந்தத் தரையின் கீழ் அத்தகைய அகழிகள் இருக்கும் பட்சத்தில் அது விந்தைதான் என்பதை உணர்ந்து கொண்டான்.
காட்டின் முகப்பிலிருந்து இத்தனையும் பார்த்த இளமாறன் அந்தக் கோட்டையை நடை மூலம் அணுகுவதில் ஆபத்து ஏதுமில்லை என்பதை மட்டும் தரையின் கெட்டியைப் பார்த்துத் தீர்மானித்துக் கொண்டான். சாதாரண வீரர்கள்
கோட்டையை நோக்கி நடந்து விடலாம் மெதுவாக. ஆனால் சுற்றுமுற்றும் பொட்டல் வெளியாயிருப்பதால் கோட்டைக் காவலர் கண்களில் அகப்படாமல் கோட்டையை அணுக முடியாது’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்
இளமாறன். இப்படிப் பல சிந்தனைகளில் ஈடுபட்டு நின்ற அவன் அப்பொழுது பொழுது விடிந்து பல நாழிகைகள் ஆகிவிட்டதன் அடையாளமாக நன்றாக எழுந்து கோட்டைக்குப் பின்னிருந்து காட்சியளித்த பகலவன் கோட்டை
பிரதேசத்துக்குத் தனியொரு மெருகைக் கொடுத்துக் கொண்டிருப்பதையும் கவனித்தான். கோட்டை மேற்பார்வைக்கு அழகாக இருந்தது. ஆனால் அந்த அழகைச் சுற்றி எத்தனை பயங்கரம் இருந்தது?
அந்தப் பயங்கர த்தை ஏற்கெனவே இமயவல்லி விவரித்திருந்தாளாகையால் அதைப் பற்றி அதிகச் சிந்தனையை ஓட்டாத இளமாறன் தாங்கள் கிடத்தப்பட்டிருந்த இடத்தைக் கவனித்தான். அந்த இடத்தில் இலைச்சருகுகள் அழகாகப்
பரப்பப்பட்டிருந்தன. சுற்றிலும் முட்கள் முதலியன விலக்கப்பட்டுச் சுத்தமும் செய்யப்பட்டிருந்தது. அங்கு வந்த விதம் அவனுக்குச் சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிந்திருந்தது. இரவில் சித்தர் கொடுத்த பாலில் மயக்க மருந்து கலந்திருக்க
வேண்டுமென்பதிலோ, மயக்கம் கொடுத்த சித்தர் தான் தங்களை அங்கு கொண்டு வந்து கிடத்தி விட்டுப் போயிருக்கிறார் என்பதிலோ சிறிதும் சந்தேகமில்லை சேர நாட்டு வீரனுக்கு. தாங்கள் படுத்திருந்த இடத்தைச் சுற்றுமுற்றும்
கவனித்த இளமாறன் அங்கு சில காலடிகளே இருப்பதைக் கவனித்ததும் தங்களிருவரையும் யாரோ தூக்கி வந்து கிடத்தி விட்டுப் போயிருக்க வேண்டுமென்று தீர்மானித்தான்.
ஆயுத வண்டிகள் நெருங்காமலிருப்பதற்காகப் பழைய காலத் தமிழகக் கோட்டைகளைச் சுற்றிலும் அடர்ந்த காடுகளை வளர்ப்பது வழக்கமாதலால் அந்த வழக்கத்தையொட்டியே அந்தச் சிறு கோட்டைகளைச் சுற்றிலும் காடு
வளர்க்கப்பட்டிருப்பதால், ரதம் வர இயலாமல் சித்தர் ஆட்களைவிட்டுத் தங்களைத் தூக்கி வரச் செய்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட இளமாறன் மேற்கொண்டு என்ன செய்வது, எங்கு போவது என்பதை அறியாமல்
இமயவல்லியை நோக்கினான். இமயவல்லியின் முகம் பிரமிப்பில் ஆழ்ந்திருந்தது. அவளுக்குப் புரியாத பல விஷயங்கள் நிகழ்ந்திருப்பதையும் அவள் முகக்குறி உணர்த்தியது. ஆகவே இளமாறன் அவளை நோக்கி, “இமயவல்லி! இது
தானே, மூங்கில் கோட்டை?” என்று கேட்டான்.
‘ஆம்’ என்பதற்கு அறிகுறியாக அவள் தலையை மட்டுமே அசைத்தாள்.
“நாம் இருக்கும் இந்தக் காடுதான் நாம் அடைய வேண்டிய இடமா?” என்று மீண்டும் வினவினான் இளமாறன்.
ஆமோதிப்பதற்கு அறிகுறியாக மறுபடியும் தலையையே அசைத்தாள் இமயவல்லி.
இளமாறன் அவள் மௌனத்தினால் சற்றே சினமடைந்தாலும் அதைக் காட்டாமலே கேட்டான் :
“அடுத்து நாம் என்ன செய்யவேண்டும்?” என்று.
இமயவல்லி மெல்ல அவனை நோக்கிக் கண்களை உயர்த்தினாள். பிறகு மிகவும் அவநம்பிக்கை உதிர்த்த குரலில், “இந்தக் காட்டில் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க வேண்டும்” என்றாள்.
“அப்படியானால் வழியைக் காட்டிச் செல்” என்று இளமாறன் சற்றுக் கடினமாகக் கூறினான்.
அவள் பேசாமல் வழிகாட்டி, காட்டுக்குள் நடந்தாள். இளமாறனும் மௌனமாகப் பின் தொடர்ந்தான். உள்ளே செல்லச் செல்லக் காடு மிகவும் அடர்த்தியாகவும், ரமணீயமாகவும் இருந்தது. புஷ்பக் கொடிகள் மரங்கள் மீது தாவிச்
சென்று கொத்துக்களைக் கீழே தொங்கவிட்டு அவ்விருவர் முகங்களையும் தடவித் தடவி வழி விட்டன. சற்று தூரத்துக்குப் பின் வந்ததும் அடர்ந்திருந்த ஒரு கொடிக்கூடத்தை விலக்கிக் காட்டினாள் இமயவல்லி. எதிரே எழுந்தது ஓர்
அற்புதப் பூம்பொழில். அந்தக் காடும் கோட்டையும் இருந்தது ஒரு மலைச் சரிவாதலால் பூம்பொழிலிலிருந்தது சுனை நீர் என்பதைப் புரிந்து கொண்ட இளமாறன், அதை விடுவிடென்று நாடிச் சென்று பக்கத்திலிருந்த விழு
தொன்றை வெட்டிப் பல் துலக்கி முகம் கழுவிச் சுனை நீரை எடுத்து இரண்டு மூன்று கைகள் பருகி எழுந்தான்.
தன்னைப் போலவே பல் துலக்கி முகம் கழுவி எழுந்த இமயவல்லி தனக்கு முன்பு கரைசேர்ந்து கொடிகளுக்கு அருகில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு கண்களால் அவளை அப்படியே விழுங்கினான் இளமாறன். இமயவல்லியின்
அழகு அந்தக் காலை நேரத்தில் பன்மடங்கு அதிகமாகத் தெரிந்தது. கொண்டையில் முன்னாளிட்ட மல்லிகைச் சரத்தை அவள் எடுத்து எறிந்து விட்டதால் அவள் கொண்டையைக் கொடிகளிலிருந்த பூங்கொத்துக்கள் தடவிக்
கொண்டிருந்தன. பக்கவாட்டில் இருந்த ஒரு பூங்கொத்து அவள் கன்னத்தை தடவியது. மரங்களை ஊடுருவி வந்த கதிரவனின் இரண்டொரு கதிர்கள் அவள் கண்களைக் கூசச் செய்ததால் கண்களை மூடினாள். அவள் கண் கூச்சம்
நிற்கவே மெல்லக் கண்களைத் திறந்தாள். அவள் கூச்சம் மறைந்த காரணம் அப்பொழுது தான் புரிந்தது கதிரவன் கண்களை மறைத்து நின்றான். அவளெதிரே சேரநாட்டுக் கட்டழகன், கதிரவன் கண்களைத்தான் அவன் மறைத்துத் தடுக்க
முடிந்தது; மாறன் கணைகளையல்ல.
தனித்த காடு, தருண வயதுள்ள இருவர், தடுக்க யாரும் இல்லையென்ற துணிவு. பஞ்சும் நெருப்பும் சேர்ந்த கதை, பற்றிக் கொண்டதில் வியப்பென்ன இருக்கிறது? இயற்கையின் வேகம் அவ்விருவரையும் ஆட்கொண்டது. அவன்
அவளை உடனே இறுகத் தழுவவில்லை மெள்ள மெள்ள அவள் மலர்க் கன்னங்களை வருடினான். அந்தக் கன்னங்களுக்கு அருகேயிருந்த புஷ்பக் கொத்துக்களைக் கன்னங்களோடு சேர்த்துத் தன் கைகளால் அழுத்தினான். மலர்கள்
மென்மையாயிருந்தன. மலர்களைத் தாங்கிய காம்புகள் கடினமாயிருந்தன. மலர்கள் வழவழத்தன. கன்னங்களில் காம்புகள் உறுத்தி இம்மைப்படுத்தி நீளச் சிவப்புக் கோடுகளை உற்பத்தி செய்தன.
அந்த இம்சையைவிட அதிக இம்சையும் இன்பமுமிருந்தன அந்த வாலிபன் கரங்களில், கன்னத்தை வருடினானா கிள்ளினானா என்று அவளுக்குத் தெரியவில்லை. அடுத்த விநாடி அவள் உடல் பலமாக இழுக்கப்பட்டது.
இரும்புக்கரங்கள் புஷ்ப உடலை வளைத்துக் கொண்டன. இதழ்கள் இரண்டு அவளைப் பேசவிடாமல் தடுத்தன. பக்கத்திலிருந்த மலர்க்கொடிகள் ஆடிப் பரிகசித்துப் பல் இளித்தன. சற்று அங்கே யிருந்த மரக்கிளையிலிருந்த ஒரு மைனா
தனது மஞ்சள் நிற மூக்குடன் தலையைத் தாழ்த்திக் கீழே நடப்பதை உற்றுப் பார்த்தது. காட்டு மான்களின் காலடி அரவமும் இதர பட்சி ஜாலங்களின் கூச்சலும் கேட்டன. ஆனால் இருவரும் செவி இழந்தனர், பார்வையிழந்தனர். உணர்ச்சிகள்
பெருக்கெடுத்தோடிக் கொண்டிருந்தன. அந்த நிலையில் மெள்ளக் கொடிகளின் மறைவுக்கு நகர்ந்துவிட்ட இருவரும் சற்று நேரங்கழித்து ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர். இமயவல்லி ஒரு மூறையே கண்களைத் திறந்தாள்.
பிறகு மூடிவிட்டாள். இளமாறன் அவள் முகத்தைச் சில விநாடி உற்றுப் பார்த்தான். பிறகு மெள்ளத் தன் கைகளை நீக்கிப் பெருமூச்செறிந்தான். நீக்கிய கைகளை அவள் கைகள் எடுத்து உடலைப் பலவந்தமாக வளைத்துக் கொண்டன.
“வேண்டாம் இமயவல்லி! ஆபத்தான கட்டத்தி லிருக்கிறோம்” என்றான் இளமாறன்.
அவள் கண்களை அரைவாசித் திறந்து, “ஆம்” என்றாள்.
அந்த ஆமில், அர்த்தங்கள் ஆயிரம் இருந்தன. “நீ நினைக்கும் ஆபத்தைச் சொல்லவில்லை இமயவல்லி” என்று குளறினான் இளமாறன்.
இமயவல்லி காமப் புன்முறுவல் கொட்டினாள். “நான் நினைக்கும் ஆபத்து என்ன?” என்று கேட்டாள்
மெல்லிய குரலில்.
“என் வாயால் சொல்லமாட்டேன்.”
“பயமாயிருக்கிறதா?”
“ஆம்.”
“ஆண்மகன் பயப்படலாமா?”
“பயப்படலாம்!”
“பயப்படுபவர் மூங்கில் கோட்டைக்குள் எப்படி நுழையப் போகிறீர்கள்?”
“உயிரைத் துறப்பதற்கு நான் என்றும் பயப்பட்டதில்லை.”
“வேறு எதற்குப் பயப்படுகிறீர்கள்?”
“உணர்ச்சிகளைத் துறப்பதற்கு. கடமையைத் துறப்பதற்கு.”
இமயவல்லி இன்பமாக நகைத்தாள். “உணர்ச்சிக் கரை உடைந்துவிட்டது வீரரே! இனி கடமையை நிறை வேற்றுவது உமது பொறுப்பு” என்றாள் அவள்.”
‘என்ன. கடமையா?”
“அணைத்தவளை ஏற்பது வீரர் கடமை.”
இளமாறன் மீண்டும் பெருமூச்செறிந்தான். “நீ சொல்வது புரிகிறது இமயவல்லி. கந்தர்வ மணம் போர் இனத்தினருக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. உன்னிடம் மனத்தைப் பறிகொடுத்தேன். பார்த்த விநாடியே உணர்ச்சிகளை சற்றுத்
துறந்தேன் மூடுதேரில். அடியோடு உதறிவிட்டேன் இப்பொழுது. இருப்பினும் உன்னை நான் இப்பொழுது ஏற்க முடியாது” என்றான் இளமாறன்.
“காரணம்?” இமயவல்லியின் குரல் வருத்தந் தோய்ந்து கிடந்தது.
“இமயவல்லி! நீமட்டும் பாண்டியமன்னன் சகோதரி என்று அறிந்திருந்தால் உன்னிடமிருந்து விலகி நின்றிருப்பேன். தெரியாமல் மனத்தைப் பறிகொடுத்தேன். தெரிந்த பின்பு எச்சரிக்கையாயிருந்திருப்பேன். ஆனால், அது விஷயத்தில்
எச்சரிக்கை செய்த சித்தர் எந்தக் காரணத்தாலோ நம்மிருவரையும் இங்கு கொண்டு தள்ளிவிட்டார். உன் அருகாமை என் உணர்ச்சிகளை அலைமோதச் செய்துவிட்டது” என்று சொன்ன இளமாறன் அங்கிருந்த மரத்தடியில் உட்கார்ந்து
விட்டான்.
இமயவல்லி அவனுக்கு அருகில் உடலோடு உடல் உராய உட்கார்ந்து கொண்டாள்; அவன் கையை எடுத்துக் கொண்டு தலையை அவன் தோள் மீது சாய்த்தாள். அப்படியே தலையை மெள்ளத் திருப்பி அவன் காதுக்கருகில்
சொன்னாள் : “வீரரே! அதையெல்லாம் அலசிப் பார்க்க இப்பொழுது சமயமில்லை” என்று.
“வேறெதை அலசிப் பார்க்க வேண்டும்” என்று வினவினான் இளமாறன்.
“காலம் ஓடுவதை.”
“எதற்காக எண்ணிப் பார்க்க வேண்டும்?”
“இன்றிரவு நீங்கள் அநேகமாக எதிரே தெரியும் அந்தப் பயங்கரக் கோட்டைக்குள் இருப்பீர்கள். உயிருடன் திரும்பி வருவீர்களோ என்னவோ தெரியாது…”

.
“அதனால்?”
“உயிர் இருக்கும்போதே…”
“என்ன இமயவல்லி?”
“உடைமையை ஏற்றுக் கொண்டு விடுங்கள்.”
“நான் உயிரிழந்தால் உடைமை என்ன ஆவது?”
“அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.”
இளமாறன் அவளை உற்று நோக்கினான். “தவறு இமயவல்லி” என்றான்.
“எது தவறு?” என்று கேட்டாள்.
“நாளை உயிர் துறக்கக்கூடியவன் இன்று ஒரு பெண்ணை ஏற்பது” என்று திட்டமாகக் கூறினான்.
“நாளை உயிர் துறக்கப் போகிறவர் இன்னொரு பெண்ணைத் தழுவலாம் போலிருக்கிறது.”
“தவறுதான்.”
“தவறு என்று சொல்லிவிட்டால் சரியாகிவிடுமா வீரரே! சில தவறுகளைத் திருத்த முடியாது. என்மேல் இதுவரை எந்த ஆடவன் கரமும் பட்டது கிடையாது. இனிமேலும் படாது. எதற்கும் பூர்த்தி என்பது ஒன்று உண்டு. காலத்துக்கோ
வேளைக்கோ அது காத்திருப்பதில்லை.”
இமயவல்லி இதைச் சொல்லித் தலையை அவன் தோளிலிருந்து எடுத்து மரத்தில் நன்றாகச் சாய்த்து கால்களை நெடுக நீட்டினாள் அந்த மலர்க் கால்களை உற்று நோக்கிய இளமாறன், மெள்ள அவளை நோக்கி மீண்டும் தலை
தாழ்த்தினான். அதே சமயத்தில் பக்கத்தில் கொடிகளின் சலசலப்பு ஏற்பட்டது. மனிதர் நடமாடும் அரவம் கேட்டது. இளமாறன் திடீரென எழுந்து கச்சையிலிருந்து வாளை இழுத்துக்கொண்டு கொடியை விலக்கினான்.

Previous articleMoongil Kottai Ch14 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch16 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here