Home Historical Novel Moongil Kottai Ch21 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch21 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

100
0
Moongil Kottai Ch21 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch21 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

Moongil Kottai Ch21 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 21 வீரனின் காதலி

Moongil Kottai Ch21 | Moongil Kottai Sandilyan|TamilNovel.in

புலவர் பெருமானான குறுங்கோழியூர்க்கிழாருக்கும் சித்தருக்கும் இடையே நடந்த உரையாடலைக் கேட்ட இமயவல்லி ஏதும் புரியாமல் நிலை கலங்கி நின்றாளானலும் அந்த இருவர் பேச்சில் அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த
பெரும் ரகசியம் ஏதோ புதைந்திருக்கிற தென்பதை மட்டும் மேலெழுந்தவாரியாக அறிந்து கொண்டாள். யாருக்கும் எதற்கும் அஞ்சாத புலவர் பெருமான் எழுந்து கம்பீரமாக மிக உயரமாகச் சீற்றம் நிறைந்த கண்களுடன் நின்ற சித்தர் முன்பு
ஓரளவு திகிலுடன் உட்கார்ந்திருந்ததும் வியப்பாயிருந்தது.
பாண்டியன் நெடுஞ்செழியன் சகோதரிக்கு. அந்த வியப்பு அவர்கள் மேற்கொண்டு பேசப் பேச அவளுக்கு எல்லை மீறி விரிந்தது. “என் குடும்பத்தில் கைவைக்கு முன்பு நீர் தீர யோசித்திருக்க வேண்டும் புலவரே” என்று சித்தர்
கோபத்துடன் கூறியதும் அதிலிருந்து தப்பவோ என்னவோ, புலவர் பெருமான் இமயவல்லியை நோக்கித் திரும்பி, “மகளே! இவர் யார் என்பதை நீ அறியமாட்டாய்…” என்று துவங்கினார்.
அதைக் கேட்ட இமயவல்லி, “சித்தரை எனக்குத் தெரியும்” என்றாள் ஏதோ பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக.
“இவரைச் சித்தராகத்தான் உனக்குத் தெரியும். இவர் சித்தர் ஆவதற்கு முன்பு இருந்த நிலையை நீ உணரமாட்டாய்” என்றார் புலவர்.
“இவருடைய பூர்வ வாழ்க்கை எனக்குத் தெரியாதது உண்மைதான்…” என்று மேலும் ஏதோ சொல்லப்போன இமயவல்லியை இடைமறித்த குறுங்கோழியூர்க்கிழார், பெரும் வெடி ஒன்றை எடுத்து வீச முற்பட்டு, “இமயவல்லி! பல
நாள்களாகப் புரியாத மர்மம் நேற்றிரவுதான் எனக்குப் புரிந்தது. பாண்டி மன்னன் வில்லாசிரியரும் போர்த் தந்திரங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தவருமான சித்தர் தமிழகத்தின் மாபெரும் தளபதியென்பதை நான் முன்பே
அறிந்திருந்தால் நான் நடந்து கொண்டிருக்கக் கூடிய முறை வேறு. இவர் சேர மன்னனின் பழைய தளபதி விஜயமார்த்தாண்டன். படைகளை இயக்குவதிலும் முன்னேறித் தாக்குவதிலும் இணையற்றவர்” என்று கூறினார்.
இமயவல்லி பல விநாடி திக்பிரமை பிடித்து சித்தரையே பார்த்துக் கொண்டு நின்றாள். விஜயமார்த்தாண்டன் கதை தமிழகம் அறிந்தது. யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை அவருக்கு இழைத்த அநீதியை மக்கள் சமீபகாலம்
வரை பேசிக் கொண்டிருந்தார்கள். அவருக்குச் சேரன் இழைத்த அநீதியே அவன் வீழ்ச்சிக்கு அடிகோலியது என்பதையும் மக்கள் வாய்விட்டுப் பேசியதுண்டு. அந்த விவரங்களை அறிந்த இமயவல்லி நீண்ட நேரத்துக்குப் பிறகு, “இவரா
அவர்!” என்று விசாரித்தாள் வியப்பு குரலில் எல்லை மீறி ஒலிக்க.
புலவர் வருத்தத்துடன் தலையை அசைத்து, “ஆம் இமயவல்லி! இவர் தான் விஜய மார்த்தாண்டன். சேரக் குடும்பத்தில் இணையிலாப் பற்றும் பக்தியும் கொண்ட இவர் மீது தான் வீணர்கள் பேச்சைக் கேட்டு யானைக் கண்சேய் ராஜத்
துரோகக் குற்றஞ்சாட்டினான். நாட்டை விட்டும் கடத்தினான். விஜய மார்த்தாண்டன் அன்று சேரன் அவையில் சீறிச் சென்றதை இன்றும் மக்கள் பேசுகிறார்கள் அல்லவா?” என்றார்.
விஜய மார்ததாண்டன் சுமார் பதினெட்டு வருஷங்களுக்கு முன்பு சேரன் அவையில் பேசிய சொற்கள் அவை. அவற்றை மக்கள் வேதம் போல ஓதிக் கொண்டிருந்தார்கள் பல நாள்கள் வரை. “நீ விஜயமார்த் தாண்டனைப்
புறக்கணிக்கவில்லை மன்னா! உன் நாட்டைப் புறக்கணிக்கின்றாய். உன் நாட்டை விட்டுச் செல்வது உன் தளபதியல்ல. சேர நாட்டு வாளொன்றும் செல்கின்றது இப்பொழுது. இனி இது காப்பாரற்ற நாடு. உன் காதில் பொய்களை ஓதி
என்னிடம் உனக்கு விரோதத்தை ஏற்படுத்திய வீணர்கள் உன்னையும் காக்க மாட்டார்கள். இந்நாட்டையும் காக்க மாட்டார்கள். வீணர்கள் சொல்லுக்குச் செவி சாய்த்த மன்னன் எவனும் வாழ்ந்ததில்லை!” என்ற சொற்களைக்
கர்ஜித்துவிட்டு விஜயமார்த்தாண்டன் சேரன் அரசவையிலிருந்து மறைந்தார்.
எங்கு போனார், என்ன ஆனார் என்பதை யாரும் அறியவில்லை. சேரமான் விடுதலைக்குப் பிறகு அந்த மகர மாளிகையில் தான் புலவரும் இமயவல்லியுங்கூட அறிந்தார்கள். சித்தர் மர்மத்தை அறிந்த இமயவல்லி அவர் சேரன் அவையில்
சொன்ன வீரச் சொற்களை மீண்டும் புலவர் முன்னிலையில் ஓதினாள்.
அதைக் கேட்டதும் சித்தர் கோபம் ஓரளவு குறைந்தது. இமயவல்லியை நோக்கிய அவர் மெள்ளப் புன்முறுவலும் செய்தார். “குழந்தாய்! நான் கூட மறந்து விட்டேன் அந்தப் பேச்சை. நீ நன்றாக நினைப்பில் வைத்துக்
கொண்டிருக்கிறாயே?” என்று கூறினார்.
“நான் மட்டுமென்ன! உங்கள் வீரச் சொற்களைத் தமிழகமே மறக்கவில்லை” என்றாள் இமயவல்லி.
இந்த இருவர் பேச்சுக்குமிடையே புகாதிருந்த புலவர் அப்பொழுது தான் மெள்ளப் புகுந்து, “விஜய மார்த்தாண்ட தளபதி தமது சொற்களைத்தான் மறந்தார் இமயவல்லி…” என்றார்.
“வேறெதை மறக்கவில்லை!” சித்தரின் குரல் கோபத்துடன் ஒலித்தது.
“கோபத்தை மறக்கவில்லை. பிறந்த நாட்டுக்கும் மன்னனுக்கும் பெரும் துரோகம் செய்திருக்கிறீர் சித்தரே” என்றார் புலவரும் மெள்ள வெறுப்பைக் காட்டி.
“நீர் என்ன செய்திருப்பீர் புலவரே! சேரர் குடும்பத்துக்காகத் தலைமுறை தலைமுறையாகப் போரிட்ட என் குடும்பத்துக்கு மாசு கற்பிக்கிறான் சேரன். என்னையும் அவை நடுவே அவமானப்படுத்துகிறான் நாட்டை விட்டுக்
கடத்துகிறான். நான் ஊர் ஊராது அலைகிறேன். என் மனைவி அநாதையாக இருக்கிறாள். என் மகன் பிச்சைக்காரன் போல் வளர்கிரதை என் வீரன் ஒருவனைத் துணை கொண்டு. இந்த யில் நீர் என்ன செய்திருப்பீர்?” என்று கர்ஜித்தார்
சித்தர்!
அவருடைய கண்களில் கண்ட சீற்றத்தைத் தாள முடியாமல் தலையைக் கீழே குனிந்து கொண்டார் புலவர் பெருமான். சித்தரே மேற்கொண்டு பேசினார்: “ஏன் புலவரே மௌனம்? சேரனின் வீரத்தைப் பாடிய உமது நாவு ஏன்
பேசவில்லை? யானைக் கண்சேயின் அநீதியை நீர் ஏன் எதிர்க்கவில்லை? விஜய மார்த் தாண்டன் ஒழிந்தான் என்று நினைத்தீரல்லவா? அவன் ஒழியவில்லை; துறவியானான். பாண்டியன் தலை நகரில் மடம் அமைத்தான் என்பதை நீர்
உணரவில்லை புலவரே! அன்று நான் சேர அவையில் தனித்து நின்றேன். இங்கு மடம் அமைத்தும் அவனையும் தனியாக நிற்க வைக்கத் தீர்மானித்தேன். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு விற்போரும் மற்போரும் வாட்போரும் சொல்லி
வைத்தேன். பாண்டிய நெடுஞ்செழியன் சிறுவன் தான். ஆனால் வீரன். நெறி தவறாதவன். அறிவுமிக்கவன். அந்தச் சிறுவனைத் தாக்கிவிடலாம் என்று சேரனும் சோழனும் நினைத்தார்கள். ஐந்து வேளிர்களையும் துணை கொண்டார்கள்.
இது அநீதியல்லவா? இதை ஏன் நீர் தடுக்கவில்லை? புலவரே! சிறுவனை நசுக்க எழுவர் எழுந்தார்கள். ஏழு யானைகள் எழுந்தன. யானைகளின் தலைவனும் ஒரு யானைக்கண் சேய்தான். ஆனால் அவர்களை எதிர்க்கச் சென்றது
இளஞ்சிங்கம் என்பதை அவர்கள் உணரவில்லை.
இந்தச் சொற்களைக் கடுஞ்சினத்துடன் உதிர்த்த கர்தர், “காரணமாகவே நான் பகல் வேளைகளில் வருவதில்லை புலவரே! என் சஞ்சாரமெல்லாம் இரவில் தான். ஆகையால்தான் நான் யாரென்பதை யாராலும் ஊகிக்க முடியவில்லை. நான்
யாரையும் கவனிக்கவில்லை. உம்மை மட்டும் கவனித்து வந்தேன். என் மகனை நீர் அழைதத அன்றே புரிந்து கொண்டேன் உமது திட்டத்தை. என் மகன் அழிந்தால் என் குடும்பம் அழிந்திருக்குமே, அதை யோசித்தீரா?” என்று கூறினார்…
இமயவல்லிக்கு மெள்ள மெள்ள விஷயங்கள் புரியலாயின. ‘இளமாறன் சேரர் தளபதியும் இணையற்ற வீரருமான விஜய மார்த்தாண்டனின் குமாரன்! அந்த வீரர் குடும்பத்தில் பிறந்தவன் தான் சேர மன்னனைக் காக்க முடியும் என்பதை
உணர்ந்ததால் தான் புலவரே அவனை வரவழைத்திருக்கிறார்” என்று தனக்குள்ளேயே இருமுறை சொல்லிக்கொண்டு வியப்பின் வசப்பட்டு வாயடைத்து நின்றாள்.
அதுவரை சித்தரின் சினத்தைக் கண்டு பேசாதிருந்த புலவரும் தமது பெரும் ஆசனத்தை விட்டு எழுந்து சித்தரை நிமிர்ந்து நோக்கினார். அவர் கண்களில் ஒளி வீசியது. சொற்களும் திடமாக வெளிவந்தன. அவர் உதடுகளிலிருந்து,
“விஜயமார்த்தாண்டா! இந்த விஷயங்களில் உன் பார்வை வேறு, என் பார்வை வேறு” என்றார் மிகவும் உறுதியாக.
“என்ன பார்வை உமது?” என்று வினவினார் சித்தர்.
“நீ உன் குடும்பத்தை மட்டும் பார்க்கிறாய், நான் தமிழகத்தைப் பார்க்கிறேன். இருக்கும் மன்னர் மூவர் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகத்தில். இவர்களிடம் அடிக்கடி ஏற்படும் அகாரணச் சண்டையால் பொரு வாரியான மக்கள் சாகிறார்கள்.
பாண்டியன் நெடுசெழியன் வீரம் மகத்தானது. அத்துடன் உமது போனி தந்திரமும் சேர்ந்து சேரனன மூங்கில் கோட்டைதை சிறைப்படுத்தி விட்டது. ஒரு யானையைப் பிடித்தடைப்பதுபோல் பாண்டியன் நெடுஞ்செழியன் சேரனை
அடைத்து வைத்தான். அந்த அவமானத்தைச் சேர மக்கள் தங்கள் சொந்த அவமானமாக நினைக்கிறார்கள். இப்பொழுது சென்று பார் விஜய மார்த்தாண்டா உன் நாட்டுக்கு. சேர மக்கள் பாண்டியனை விஷம் போல் வெறுக்கிறார்கள்.
இதுவரை அரசரிருவருக்கும் இருந்த விரோதம் இப்பொழுது பாண்டிய சேர மக்களிடம் பரவி இருக்கிறது. இது தமிழகத்திற்கு நல்லதல்ல. பிற்கால போர்களுக்குத்தான் வித்து இது. அந்த வித்தை நாசப்படுத்த, மக்களிடை விரோதத்தை
அகற்ற, சேரனை விடுவிப்பது தான் ஒரே வழி. என் ஒரு சொல்லுக்குப் பாண்டியன் பணிந்திருப்பான் சேரனை விடுதலையும் செய்திருப்பான். ஆனால் அத்தகைய விடுதலையை சேரன் விரும்பமாட்டான். ஆகவே அந்த நாட்டு வீரன்
கையாலேயே செய்து முடிக்க எண்ணினேன்; ஆகையால் உன் மகனைத் தேர்ந்தெடுத்தேன். சேர நாட்டைப் பலமுறை காத்திருக்கும் விஜயமார்த்தாண்டன் மகனைவிட இதற்குத் தகுதியுள்ளவன் யார்?” என்று புலவர் அழுத்தந் திருத்தமாகப்
பேசினார்.
“என் மகன்தான் இளமாறன் என்பது உமக்கு எப்படி தெரியும்?” சித்தர் கேட்டார் வெறுப்புடன்.
“உன் குடும்பத்தில் அக்கறையுடையவன் நான் என்பது உனக்குத் தெரியாதா? உன் மகன் வளர்ச்சி மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருந்தேன். சமயம் வந்து பலபேரை மூங்கில் கோட்டைக்கு ஏவிப்பார்த்து தோல்வியடைந்தேன்.
கடைசியாகத்தான் உன் மகனை தர்ந்தெடுத்தேன்!” என்றார் புலவர்.
அவன் இந்த முயற்சியில் இறந்திருந்தால்…?” கர்ஜியின் கேள்வி கடுமையுடன் எழுந்தது.
புலவர் அச்சமின்றி ஏறிட்டு நோக்கினார் சேர நாட்டுப் பழைய தளபதியை. “நீ இன்னும் சேர நாட்டுத் தளபதியாயிருந்து உன் மகன் ராஜ சேவைக்குத் தேவையாயிருந்தால் என்ன செய்வாய்?” என்று வினவவும் செய்தார்.
சித்தர் தலை குனிந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் சந்தோஷமாக என் மகனைப் பணிக்கு அனுப்பிப் பலியும் கொடுப்பேன்” என்று உள்ளூர சொல்லிக் கொண்டார்.
அவர் எண்ணங்களை அறிந்த புலவர் சொன்னார் : “ஆம் விஜய மார்த்தாண்டா, அரச வேலைக்கு நீ கண்டிப்பாய் மகனைப் பலி கொடுத்திருப்பாய். அதையேதான் நானும் செய்தேன். ஆனால், அவன் பலியாகாதிருப்பதற்காக வேண்டிய
அனைத்தையும் செய்தேன்” என்று.
‘என்ன செய்தீர்?”
“இமயவல்லியை அவனுடன் துணைக்கு அனுப்பினேன்.”
“மற்றவர்களுக்கும்தான் துணை அனுப்பினீர்.”
“மற்றவர்களுடன் தனியாக அனுப்பவில்லை” என்று சுட்டிக் காட்டினார் புலவர்.
அதன் உட்கருத்தைப் புரிந்து கொண்ட இமயவல்லி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டாள். புலவரும் விஜய மார்த்தாண்டனும். தங்கள் பரஸ்பர சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளப் பேசினார்கள். “ஆமாம்! இவர்களுக்கு
எதற்காக மயக்க மருந்து கொடுத்தாய்?” என்று கேட்டார் புலவர்.
“என் மகனை இந்தப் பணிக்கு நீர் ஏவியது தெரிந்ததும் வழியில் இவர்கள் ரதத்தை மடக்கி என்னிடம் அழைத்துச் சென்றேன். இவர்கள் புறப்பட்டதை நெடுஞ்செழியன் உடனே உணர்ந்திருப்பானென்பது. எனக்குத் தெரியும். ஆகையால்
அவன் ஒற்றர்களை ஏமாற்ற என் இருப்பிடம் அழைத்துச் சென்றேன். மயக்கம கொடுத்து இருவரையும் உமது வனவாசிகள் கண்டுபிடிக்கும் இடத்தில் படுக்க வைத்தேன். ரதத்தை அச்சு முறித்து ஓரிடத்தில் போட்டேன். சாரதியை
மண்டையிலடித்துக் காயப்படுத்தி என்னிடம் அழைத்துச் சென்றேன். அடுத்த இரண்டு நாள்கள் இளமாறனையும் இமயவல்லியையும் பாண்டிய வீரர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். இமயவல்லி மட்டும் மகரமாளிகை திரும்பிவிட்டதாக
அறிந்தேன். ஆனால் என் மகன் உமது பணியை மேற்கொண்டுவிட்டான் என்பதையும் உணர்ந்தேன். ஆகவே என் மகன் உதவிக்கு விரைந்தேன்” என்றார் சித்தர்.
“உமது உதவியால் தான் இளமாறன் தப்பினானா?” என்று விசாரித்தார் புலவர்.
“இல்லை புலவரே! என் மகன் தானாகவே தனது திட்டத்தை வகுத்துக்கொண்டான். வீரமார்த்தாண்டன் அவனை அந்தப் பாழடைந்த மண்டபச் சுரங்கத்தில் இறங்கவிட்டானல்லவா?”
“ஆம்.”
“இளமாறன் அந்த வழி செல்லவில்லை.”
“ஏன்?”
“அந்த வழியில் போனவர்கள் யாரும் மீளாததால் அவ்வழியை நிராகரித்துவிட்டதாக அவனே சொன்னான் என்னிடம்.”.
“பின் எப்படிச் சென்றான்?”
“வீரமார்த்தாண்டன் சென்றதும் அவன் மீண்டும் பாறையை நகர்த்தி வெளியே வந்தான். பிறகு அன்று இரவு கோட்டைக்கு வெளியிலிருந்த பொட்டல் வெளியில் நடந்து பார்த்தான். சில இடங்களில் மூங்கில் மளுக் மளுக்கென்ற தாம்.
பிறகு தவழ்ந்து பார்த்திருக்கிறான். அப்பொழுது கீழ்த்தரையில் மூங்கிலும் தாங்கின. ஆகவே இரு முறை அந்தப் பொட்டல் வெளியில் தவழ்ந்து கோட்டை வரையில் வந்திருக்கிறான். பிறகு தன்னைத் திடப்படுத்திக்கொண்டு அடுத்த
நாளிரவு இரண்டாம் ஜாமத்தில் முழங்கால்களால் தவழ்ந்து வந்து கோட்டைச் சுவரில் ஏறி உள்ளே குதித்திருக்கிறான். அவன் தீர யோசித்துச் செய்திருக்கிறான், இந்த சாகசப் பணியைப் புலவரே! பொட்டல் வெளியில் பாண்டிய வீரர்,
யாரையும் எதிர்பார்க்கமாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஆகவே அந்தப் பகுதியில் அதிக காவலும் கோட்டைக்குள் இருக்காது என்பது அவனுக்குத் தெரியும்.”
“இதையும் அவன் சொன்னானா?”
“ஆம். கோட்டைக்குள் நான் அவனைச் சந்தித்தேன். இரவில் நான் புலவர் ஒற்றனென்று கூறினேன். நம்பினான். ஆனால், நான் சொன்ன எதையும் அவன் கேட்கவில்லையே! அவனிஷ்டப்படியே திட்டமிட்டுச் சேர மன்னனை
விடுவித்தான். சேர மன்னன் சிறை அறையைக் காத்து நின்ற இரு வீரர்களை வெட்டியும் போட்டுவிட்டான்.” இதைச் சொன்ன சித்தர் பெரு மூச்சுவிட்டார் சோகத்துடன்.
புலவர் முகத்திலும் கவலையின் சாயை படர்ந்தது. “இப்பொழுது அவன் பாண்டியன் வசம் சிக்கியிருக்கிறானே விஜய மார்த்தாண்டா!” என்றார் புலவர் மிதமிஞ்சிய கவலையுடன்.
“ஆம். புலவரே!” என்றான் விஜய மார்த்தாண்டன் சோகத்தால் சற்றே உடல் நடுங்க. “இத்துடன் என் மகன் ஆயுளும் முடிந்தது” என்றும் கூறினார் சித்தர்.
“இல்லை முடியவில்லை. இந்தப் புலவன் இருக்கும் வரை முடியாது” என்றார் புலவர்.
“ஒற்றர்களுக்குக் கிடைக்கக்கூடிய தண்டனை உமக்குத் தெரியுமல்லவா?” என்று கேட்டான் விஜய மார்த்தாண்டன் புலவரை நோக்கி.
“தெரியும் மரண தண்டனை” என்றார் புலவர்.
“அது தான் கிடைக்கும் என் மகனுக்கு. என் மகன் அழிந்தான் புலவரே. என் குடும்பம் நசிந்தது. உமது மனோரதம் நிறைவேறியது” என்ற சித்தரின் கண்களில் நீர் சுரந்தது.
புலவர் சில விநாடி சித்தரையும் இமயவல்லியையும் உற்றுப் பார்த்தார். பிறகு அறையின் ஒரு மூலைக்கு சென்று இரண்டு ஓலை நறுக்குகளை எடுத்து எழுத்தாணியால் ஏதோ கிறுகிறுவென்று எழுதினார். பிறகு பெரும்
சால்வையொன்றை எடுத்துப் போர்த்திக் கொண்டார், “வாரும் சித்தரே! நெடுஞ்செழியனிடம் போவோம். என்று கூறிக்கொண்டு கிளம்பினார். சித்தர் எதிரேயிருந்த இமயவல்லியை நோக்கினார். அவள் அவ்விருவரையும் வெறித்துப்
பார்த்தாள். “நீயும் வருகிறாயா பாண்டிய சகோதரி?” என்று கேட்டார் சித்தர்.
“நான் வரவில்லை. நீங்கள் செல்லுங்கள்” என்றாள் இமயவல்லி பெரு வெறுப்புடன் இருவரையும் நோக்கி.
“ஏன்?”“ என்று புலவர் வினவினார்.
“என் காதலர் வீரர். பிறர் அவருக்கு உயிர்ப்பிச்சை கேட்பதை விரும்பமாட்டார். வீரன் அன்பைப் பெற்ற நானும் விரும்பவில்லை அதை. பிச்சைக்காரர்களாகிய நீங்களே செல்லுங்கள்” என்று கூறிய இமயவல்லி திடீரென எழுந்து
அவர்களிருவரையும் தள்ளிக்கொண்டு அறைக்கு வெளியே சென்று படிகளில் இறங்கி தடதடவென்று ஓடினாள்.

Previous articleMoongil Kottai Ch20 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch22 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here