Home Historical Novel Moongil Kottai Ch3 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

Moongil Kottai Ch3 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

89
0
Moongil Kottai Ch3 Moongil Kottai Sandilyan, Moongil Kottai Online Free, Moongil Kottai PDF, Download Moongil Kottai novel, Moongil Kottai book, Moongil Kottai free, Moongil Kottai,Moongil Kottai story in tamil,Moongil Kottai story,Moongil Kottai novel in tamil,Moongil Kottai novel,Moongil Kottai book,Moongil Kottai book review,மூங்கில் கோட்டை,மூங்கில் கோட்டை கதை,Moongil Kottai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai ,Moongil Kottai full story,Moongil Kottai novel full story,Moongil Kottai audiobook,Moongil Kottai audio book,Moongil Kottai full audiobook,Moongil Kottai full audio book,
Moongil Kottai Ch3 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

Moongil Kottai Ch3 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

மூங்கில் கோட்டை – சாண்டில்யன்

அத்தியாயம் – 3 பயங்கரத் திட்டம்

Moongil Kottai Ch3 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in

மர்ம மாளிகையின் கதவைத் திறந்த கட்டழகி மாடித் தாழ்வாரக் கோடியறை வாயிலில் நின்ற முதியவரைக் கண்டதும் அச்சமுற்றுப் படிகளில் இறங்கிக் கீழே ஓடிவிட்டதற்கு ஆரம்பத்தில் காரணம் புரியாத வீரனான இளமாறனுக்கு
அறைக்குள்ளே அவனைப் பெரியவர் அழைத்துச் சென்று தமது பெயர் இன்னதென்று சொன்னதும், காரணம் தெள்ளென விளங்கிய தன்றி அவன் இதயத்தில் அச்சமும் ஏற்படவே, பேச முயன்ற அவன் இதழ்கள் அடைத்தே போயின. அந்த
இடத்தில் அவன் சற்றும் எதிர்பாராத பெயர் அது. அந்தப் பெயரால் ஏற்பட்ட பயமும் திகிலும் கோழைத்தனத்தால் ஏற்பட்டவை அல்ல. நெறி, நிர்ணயமுள்ள பெரியவர்களைப் பார்க்கும் போது ஏற்படும் அச்சம் அது. அந்தப் பெயர் அந்த
நாளில் வாழ்ந்த தமிழரெல்லாம் காதில் கேட்ட மாத்திரத்தில் தலை வணங்கிய பெயர். அப்பேர்ப்பட்ட பெயரை அந்தப் பெயருக்குரியவர் சாதாரணமாக உச்சரித்தாலும் பெரும் மந்திரம்போல் அச்சொற்கள் இளமாறன் காதுகளில் ஒலித்ததால்
பெருமதிப்பு உள்ளத்தில் எழ அச்சமுற்று நின்றான் அவன்.
அவன் கைகள் தாமாகவே மார்பில் சென்று கட்டி அடக்கத்தைக் காட்டின. நீண்ட நேரம் பிரமை பிடித்து எதிரே மஞ்சத்திலமர்ந்திருந்த பெரியவரைப் பார்த்துக் கொண்டே நின்ற இளமாறன் காதுகளில் ‘குறுங்கோழியூர்க்கிழார்’ என்ற
சொற்கள் மிக ரகசியமாகத் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன.
பண்பாட்டின் சிகரமென்று தமிழகத்தின் மூவேந்தராலும் கொண்டாடப்பட்ட புலவர் பெருமானான குறுங்கோழியூர்க்கிழாரின் அருள் விழிகள் அந்த வாலிபன் அச்சமுற்று நிற்பதைக் கண்டு பரிதாபப் பார்வை ஒன்றை வீசின. அவன்
அழகையும் கம்பீரத்தையும், இடையே அவன் கட்டியிருந்த நீண்ட வாளையும்கூட அவர் கண்கள் ஆராய்ந்தன. எடை போட்டன.
வந்தவன் தன் காரியத்துக்கு உதவுவான் என்ற திருப்தி அந்தப் பெரியவர் முகத்தில் நன்றாகப் படர்ந்தது. இருப்பினும் ஏதோ காரணத்தினால் அவர் முகத்தில் துயரத்தின் சாயை திடீரென பரவியது. அந்தத் துயரத்தின் சாயையை
இளமாறனும் கவனிக்கவே செய்தானானாலும் பரிதாபப் பார்வையின் காரணம் அவனுக்குப் புரியாதது போல துயரத்தின் காரணமும் அவனுக்குச் சற்றும் புரியவில்லை. என்றாலும் எதையும் கேட்கத் திறனற்ற அவன் ஏதும் பேசாமலே
அடக்கத்துடன் கைகட்டி அந்தப் பெரியவரின் முன்பு நின்று கொண்டிருந்தான்.
அவன் நிலையை ஆமோதிப்பது போல், திடீரென குறுங்கோழியூர்க்கிழாரின் தலை ஒருமுறை அசைந்தது. தாடியைக்கூட யோசனையுடன் ஒரு விநாடி’ தடவி விட்டுக் கொண்டார் அவர். பிறகு அவர் கேட்டார். “இளமாறா! என்
பெயரை நீ ஏற்கெனவே கேட்டிருப்பதாகத் தெரிகிறது” என்று.
இளமாறன் கண்கள் பெரியவரை ஏறெடுத்து நோக்கின. “தமிழகத்தின் தலைசிறந்த புலவர் பெருமான் பெயரை அறியாதவர்கள் தமிழகத்தில் இருக்கத் தகுதியற்றவர்கள்” என்றும் அவன் உதடுகள் பயபக்தியுடன் சொற்களை உதிர்த்தன.
புலவர் பெருமானின் இதழ்களில் வருத்தம் கலந்த புன்னகையொன்று விரிந்தது. அந்தப் புன்னகையைத் தொடர்ந்து உதிர்ந்த அவர் சொற்களிலும் வருத்தத்தின் சாயை பூரணமாகப் பரவிக் கிடந்தது. பெயரின் உயர்வு எனக்கு
மகிழ்ச்சியளிக்கவில்லை இளமாறா?” என்று அவர் மெல்லக் கூறினார்.
இளமாறன் அடக்கத்துடன் பதில் சொன்னான் : “பெயரின் உயர்வு புலவர் பெருமானுக்கு மகிழ்ச்சியை தராதது இயல்பு. ஆனால் அது எப்படி மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தராமலிருக்க முடியும்?”
பெரியவரின் கண்கள் அவன் கண்களைச் சந்தித்தன. “மகிழ்ச்சி தர அதில் என்ன இருக்கிறது இளமாறா?” என்று உதடுகள் கேள்வியொன்றைத் தொடுத்தன.
“பெருமானின் பாடல்களால் தமிழகத்தின் சிறப்பு எங்கும் பரவி இருக்கிறது. அது தமிழ் மொழிக்குச் சிறப்பல்லவா? அந்த மொழி பேசும் தமிழர்களுக்குச் சிறப்பல்லவா?” என்று சற்றுத் தைரியத்துடன் இளமாறனும் வினவினான்.
“இல்லை. சிறப்பில்லை” என்று பெரியவர் திட்டமாகப் பதில் சொன்னார்.
“ஏனில்லை!”
“பாடல்களுக்குப் பயனில்லை.”
“என்ன பயனை எதிர்பார்க்கிறீர்கள் கிழாரே?”
“நற்பயனை.”
“நற்பயனென்றால்?”
குறுங்கோழியூர்க்கிழாரின் கூரிய விழிகள் ஈட்டிகள் போல் ஒளி வீசின.
“நாட்டில் போரின்மை, அமைதி, மக்களின் நல் வாழ்வு, அறிவின் வளர்ச்சி, வெற்றியின் வீழ்ச்சி இவை நற்பயன். இவற்றை எதிர்பார்க்கிறேன்” என்று ஒவ்வொரு சொல்லையும் அழுத்தி அழுத்திச் சொன்னார் புலவர் பெருந்தகை.
அதைக் கேட்டதும் அவர் மனத்துயரத்தின் காரணத்தை ஓரளவு புரிந்துகொண்ட இளமாறன் மேற்கொண்டு பேசாமல் மௌனம் சாதித்தானானாலும் கிழார் மட்டும் நிறுத்தாமல் சொன்னார்:
“இளமாறா! ஒரு புலவன், இயல் வல்லன், இவர்கள் பெருமை அவர்கள் நாவினால் வகுக்கும் சொற்றொடரில் இல்லை. அந்தச் சொற்கள் மக்களுக்கு என்ன பயனை விளைவித்திருக்கின்றன என்பதில் தானிருக்கிறது. என் பாடல்களை
மூவேந்தரும் பாராட்டுகிறார்கள். மக்கள் புகழ்ந்து பேசுகிறார்கள். தமிழக மக்களில் பலபேர் பாடுகிறார்கள். என் பாடல் நுழையாத இடமில்லை. ஆனால் நுழைந்தும் பயனென்ன? அவை மக்கள் மனத்தையோ மூவேந்தர் மனத்தையோ
ஆழ்ந்து தொடவில்லை. தொட்டிருந்தால் பொன்னித் தாய் உரமூட்டிய பெருநகரான தலையாலங்கானத்தில் பயங்கரப் போர் தான் நிகழ்ந்திருக்குமா! அல்லது வீரர்கள் அநியாயமாக அழிந்திருப்பார்களா? சேரமான் யானைக் கண்சேய்
மாந்திரன் சேரல் இரும்பொறை இன்று பாண்டியன் நெடுஞ்செழியனிடம் சிறைப்பட்டிருப்பானா? தமிழகம் இப்படிப் பிரிந்து தான் இருக்குமா? இராது இளமாறா, இராது. என் பாட்டுகள் நாட்டுக்கு நற்பயனை அளிக்கவில்லை, அவை
பயனற்றவை.”
மிகுந்த பொறுப்பு புலவர் பெருமான் தலையிலிருந்ததாலேயே அவர் தமது பாடல்களைப் பற்றி அப்படி வெறுப்புடன் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட இளமாறன், ‘புலவர் பெருமான் நோக்கின் விசாலம் மற்றவர்களிடம்
இருக்கமுடியாது. நாட்டு அமைதியையும் மக்களின் வாழ்வையும் புலவர்கள் எதிர்பார்த்தது சரி. தோள் வலிமையுள்ள அரசர்களிடம் எதிர்பார்ப்பது முறையல்ல” என்று கூறினான்.
“ஏன் எதிர்பார்க்கக் கூடாது?” என்று வினவினார் புலவர் பெருமான்.
“தோள் தினவு அரசர் குருதியில் பாய்ந்தோடுகிறது. ஆகவே போர் தவிர்க்க முடியாதது” என்றான் இளமாறன்.
“போருக்கென்றே தோள் தினவு கொள்பவன் அறவழி தந்த அரசனாக மாட்டான். அறத்தின் அடிப்படையல்லாத போர் அவனுக்குப் புகழையோ மக்களுக்கு நலனையோ அளிக்காது.”
“அப்படியானால் போர் எதற்கு நடக்க வேண்டும்?”
“மக்களைப் பாதுகாக்க!”
“மன்னன் புகழுக்காக அல்லவா?”
“அல்லவே அல்ல. மக்களை அமைதியிலும் ஆனந்தத்திலும் வைத்திருக்கும் மன்னனே சிறந்தவன். மக்களைப் பண்பாட்டுக்கும் அறவழிக்கும் தகுதி யாக்கும் மன்னனே சிறப்புடையவன். போருக்குப் படை திரட்டி வீண் சண்டை இழுத்து
மக்களைப் பலி கொடுக்கும் மன்னன் மாநிலத்துக்குத் தேவையில்லை.”
இந்தச் சொற்களைச் சற்றுச் சீற்றத்துடன் சொன்னார் பெரியவர். அத்துடன் நில்லாமல் இளமாறன் கேட்காமல் மேலும் தொடர்ந்த அவர், “இளமாறா! இன்றைய தமிழகத்தின் நிலை கண்டு நாம் தலைகுனிய வேண்டும். இன்று
மதுரையையாளும் பாண்டியன் நெடுஞ்செழியன் பதினேழு வயதில் பட்டத்துக்கு வந்தான். சிறு பிராயத்தில் பாண்டிய அரியணையில் சிறப்பு முடிசூடிய அவனைச் சோழனும் சேரனும் காத்து நிற்கவேண்டும். அதற்குமாறாக அவன் சிறு
பிராயத்தை எண்ணி அவனுடன் போரிட்டு அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணினர். சோழனும், சேரமானும் ஐந்து வேளிர்களையும் சேர்த்துக் கொண்டு இந்தச் சிறுவனை அழிக்கத் தீர்மானித்தனர். இந்த எழுவரையும் சென்ற ஆண்டு
பாண்டியன் நெடுஞ்செழியள் பொன்னி நாட்டிலுள்ள தலையாலங்கானத்தில் சந்தித்தான். ஏழு களிறுகளை எதிர்க்கும் சிங்கக்குட்டிபோல எழுவரையும் எதிர்த்தான். சோழன் புறமுதுகிட்டு ஓடினான். வேளிர் ஐவர் ஓட்டத்தில் காட்டிய
வேகம் இனித் தமிழக மக்கள் மனத்திலிருந்து மறையாது. நமது நாட்டு மன்னன் சேரமானைப்பற்றி என் சொல்ல இளமாறா! என் சொல்ல!” என்று சொல்லிப் பெருமூச்சும் விட்டார்.
புலவர் பெருமான் கூறிய வரலாற்று விவரங்களை மக்கள் அனைவரும் அறிந்திருந்ததால் அதை ஏன் புலவர் மீண்டும் எடுத்துச் சொல்கிறார் என்பது புரியவில்லை இளமாறனுக்கு. வெகு சுலபமாகச் சிறுவனான பாண்டிய
மன்னனை வெற்றி கொண்டுவிடலாமென மனப்பால் குடித்து இணைந்த எழுவரையும், தானாகவே சோழ நாட்டில் புகுந்து தலையாலங்கானத்தில் சந்தித்துக் கடுமையாக முறியடித்து ‘தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன்
நெடுஞ்செழியன்’ என்ற சிறப்புப் பெயரையும் தாங்கிக் கொண்ட மதுரை மள்னனின் வீரத்னதத் தமிழ்நாடே போற்றிக் கொண்டிருந்தது. அந்தப் போரில், யானையின் சிறு கண்களைப் போல் கண்ணைப் படைத்தவனும் ஆனால் யானை
பலத்தையும் கூரிய பார்வையையும் பெற்றவனும் அத்தகைய கண் சிறப்பால் யானைக்கண் சேய் மாந்திரன் சேரல் இரும்பொறை” என்று புகழ் பெற்றவனுமான சேரமன்னனைப் பாண்டியன் நெடுஞ்செழியன் சிறை பிடித்துச்
சென்றுவிட்டது பாண்டிய நாட்டுப் புலவர்கள் பாடல்களுக்கு அஸ்திவாரமாகவும் அமைந்திருந்தது. ‘இதெல்லாம் நாடறிந்த விவரம். இவற்றை ஏன் புலவர் எனக்குத் திருப்பிச் சொல்லுகிறார்?” என்று தன்னைத் தானே கேட்டுக்
கொண்டான் இளமாறன். அவன் உள்ளத்திலோடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட குறுங்கோழியூர்க்கிழார், “தெரிந்த விவரங்களை ஏன் நான் திருப்பிச் சொல்கிறேனென்று நீ நினைக்கலாம் இளமாறா? ஆனால் அதற்குக் காரணம்
இருக்கிறது. வரலாறு குறிக்கப்போகும் தலையாலங்கானத்துப் பெரும் போரின் விளைவுகளில் பங்கு கொள்ளவே உன்னை இங்கு வர வழைத்து இருக்கிறேன்” என்றார்.
இளமாறனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. பெரு மன்னர்கள் மோதலில் தனக்கு என்ன பங்கிருக்க முடியுமென்று அவன் எண்ணினான். ஆகையால் வியப்பு விரவிய பார்வையை அவர் மீது வீசவும் செய்தான். அந்தப் பார்வையில்
தொக்கி நின்ற கேள்வியைப் புரிந்து கொண்ட குறுங்கோழியூர்க்கிழார் கூறினார் : “ இளமாறா! தமிழகத்தின் பெருமை, பிற்காலம் இரண்டும் உன் கையிலிருக்கிறது’ என்று.
இளமாறன் வியப்பு பன்மடங்கு அதிகமாயிற்று. “குருவியின் தலையில் பனங்காயை வைக்க முயல் கிறீர் குறுங்கோழியூர்க்கிழாரே! நான் சிறுவன்…” என்று மேலும் ஏதோ சொல்லப்போன இளமாறனை இடைமறித்த புலவர்,
“நெடுஞ்செழியன் உன்னைவிடச் சிறியவன்” என்று சுட்டிக் காட்டினார்.
“அவர் மன்னர்; படை பலமுள்ளவர்” என்றான் இளமாறன்.
“தலையாலங்கானத்தில் வெற்றி கொண்டது படைபலமல்ல.”
“வேறு எது?”
“நெடுஞ்செழியனின் வீரம், அவன் நெஞ்சுத் துணிவு, புத்தியின் கூர்மை.
குறுங்கோழியூர்க்கிழாரின் சொற்கள் எந்தத் திசையில் செல்கின்றன என்பதைப் புரிந்து கொண்ட இளமாறன் மௌனம் சாதித்தான். புலவர் சற்று நிதானித்துவிட்டுச் சொன்னார்: “இளமாறா! நீ பிறந்த குடியை நான் அறிவேன். நான்
நினைத்திருக்கும் பணிக்கு வேண்டிய துணிவும் தகுதியும் உனக்கிருக்கிறது என்பதை அறியாவிட்டால் உன்னை இங்கு அழைத்தே இருக்கமாட்டேன். நீ நெடுஞ்செழியனுக்கு எவ்விதத்திலும் குறைந்தவனல்லன். உங்களுக்குள்
வித்தியாசம் ஒன்று தான். அவன் மன்னன், நீ மன்னனில்லை.”
“என்ன பணியை முன்னிட்டு வரவழைத்தீர்கள் கிழாரே?” என்று வினவினான் இளமாறன். புலவர் செய்த புகழ்ச்சியால் சற்று சங்கடத்துக்குள்ளாகி,
அவன் சங்கடத்தைக் கவனித்த கிழாரின் இதழ்களில் இளநகை விரிந்தது, ‘புகழ்வது புலவர்கள் குணந்தான் இளமாறா! ஆனால் உன்னை நான் இப்பொழுது புகழ நேரமில்லை. அதற்கு அவசியமுமில்லை, உண்மையைக் கூறினால் நான்
உன்னை வர வழைத்த காரியம் தொல்லை தருவது. ஆனால், நாட்டுக்கு அத்தியாவசியமானது” என்று கூறினார்.
“பணியைக் குறிப்பிடுங்கள் கிழாரே” என்று மீண்டும் கூறினான் இளமாறன்.
குறுங்கோழியூர்க்கிழார் சில நொடிகள் யோசித்தார். சில விநாடிகள் அந்த வாலிப வீரனை உற்று நோக்கினார். பிறகு ஏதோ பெரும் ரகசியத்தைச் சொல்வது போல், “உன் மன்னனைச் சிறை மீட்கும் பணி” என்று சொன்னார்.
அடுத்த பல விநாடிகள் பெரு மௌனம் நிலவியது அந்த அறையில். இளமாறனும் பேசவில்லை. புலவரும் பேசவில்லை. அந்தப் பயங்கரப் பணியைக் கேட்ட இளமாறன் பயத்துக்குப் பதில் ஆச்சரியமே பட்டான். படைகள் சாதிக்க
முடியாததை, தான் எப்படிச் சாதிக்க மூடியும் என்று எண்ணிப் பார்த்தான். பாண்டி நாட்டில் எங்கோ ஓர் இடத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் யானைக் கண் சேய் மாந்திரனைச் சிறை மீட்கப்போன இரு பெரும் யானைப் படைகள்.
நாசமாகிவிட்டதையும், தகவல் சொல்லக்கூட யாருமே திரும்பி வராததையும் பற்றிச் சேர நாடே பேசிக் கொண்டிருந்ததை அறிந்திருந்த இளமாறன், உண்மையில் புலவர் ‘என் குறுந்தலையில் மலையைத்தான் வைக்கப் பார்க்கிறார்’ என்று
தனக்குள் சொல்லிக் கொண்டான். பிறகு அதை வெளிப்படையாகவும் கேட்க முற்பட்டு, “புலவரே! இது என்னால் முடிகிற காரியமா?” என்றான்.
“உன்னால் முடிந்தால்தான் உண்டு” என்றார் புலவர்.
“இரு யானைப் படைகள் சிறை மீட்கச் சென்று அழிந்து விட்டனவே” என்று குறிப்பிட்டான் சேர நாட்டு வீரன்.
“ஆம்!”
“படைகளால் முடியாதது தனி ஒருவனால் முடியுமா?”
“முடியும்!”
“எப்படி?”
“படைகள் வருவதைக் காவலர் அறிவது சுலபம். தனி மனிதன் வருவதைப் புரிந்து கொள்ள முடியாது. படை பலத்தைவிட தனி மனிதனின் புத்தி பலம், பல விஷயங்களைச் சாதிக்க முடியும்.”
இதற்கு இளமாறன் சில விநாடிகள் பதில் சொல்லவில்லை. பதில் சொன்னபோது அவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டான் என்பதைப் புரிந்து கொண்டார் புலவர்.
“உத்தரவிடுங்கள் புலவர் பிரானே” என்றான் இளமாறன்.
உத்தரவிட முற்பட்ட புலவர் மெள்ள மெள்ளச் சொன்னார் : “இளமாறா! தமிழகம் செழிக்கத் தமிழகம் ஒன்றுபட வேண்டும். தமிழகம் ஒன்றுபட தமிழ் மன்னர்களிடையுள்ள விரோதம் அகல வேண்டும் மாந்திரன் சேரன் இரும்பொறை
சிறையிலிருக்கும்வரை விரோதம் அகலாது. போர் நெருப்பு அடியில் இருந்து கொண்டே இருக்கும். ஆகவே முதலில் சேர மன்னனை விடுவிக்க வேண்டும்” என்றார்.
“நீங்கள் சொன்னால் பாண்டியன் நெடுஞ்செழியனே விடுதலை செய்வாரே.”
“மாட்டான்.”
“ஏன் புலவரே?”
“ஒருமுறை மாந்திரன் சேரன் இரும்பொறை தனது சபை நடுவே நெடுஞ்செழியனைச் சிறுவனென்றும் அறிவற்றவனென்றும் பேசியிருக்கிறான். அந்தப் பழம் பகையை நெடுஞ்செழியன் மறக்கவில்லை. அதுமட்டு மல்ல, பாண்டியன்
கருணை காட்டி விடுதலை செய்வதை சேரனும் விரும்பமாட்டான். தந்திரத்தால் பாண்டியனையும் மீறி அவனை விடுவிப்பதே வழி. அதற்குத் திட்டம் தயாரித்து இருக்கிறேன்” என்று புலவர் கூறினார்.
“அந்தத் திட்டத்தைச் சென்ற ஓராண்டாக ஏன் நிறைவேற்ற முடியவில்லை?” என்று இளமாறன் வினவினான்.
“முயன்றேன் இளமாறா!”
“முயன்றும் பயனில்லையா?”
“இல்லை.”
“ஏன்?”
“நான் ஒவ்வொருவராக நான்கு வீரர்களை அனுப்பினேன், திட்டத்தை நிறைவேற்ற.”
“அவர்கள் என்ன ஆனார்கள்?”
“போய்விட்டார்கள், நமனுலகுக்கு.”
“நான்…”
“ஐந்தாவது.”
“நமனுலகு செல்லவா?”
“இல்லை; நீ மாளமாட்டாய் இதில்.”
“யார் சொன்னது?”
“என் மனம் சொல்லுகிறது!”
“நால்வர் ஏன் மாண்டார்கள்? திட்டம் பலவீனமானதா?” என்று சற்று உணர்ச்சியுடன் வினவினான் இளமாறன்.
குறுங்கோழியூர்க்கிழார் இளமாறனை உற்று நோக்கினார்.
‘இல்லை இளமாறா! பலவீனத் திட்டமல்ல அது பயங்கரத் திட்டம். அந்தத் திட்டத்தில் உயிர்ப்பலி எந்த விநாடியிலும் நேரலாம். கேள் விவரிக்கிறேன்” என்று தமது திட்டத்தை விவரிக்கத் தொடங்கினார் புலவர் பெருமான்…

Previous articleMoongil Kottai Ch2 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMoongil Kottai Ch4 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here