Home Historical Novel Naga Deepam Ch11 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch11 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

56
0
Naga Deepam Ch11 Naga Deepam Sandilyan, Naga Deepam Online Free, Naga Deepam PDF, Download Naga Deepam novel, Naga Deepam book, Naga Deepam free, Naga Deepam,Naga Deepam story in tamil,Naga Deepam story,Naga Deepam novel in tamil,Naga Deepam novel,Naga Deepam book,Naga Deepam book review,நாகதீபம்,நாகதீபம் கதை,Naga Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam ,Naga Deepam full story,Naga Deepam novel full story,Naga Deepam audiobook,Naga Deepam audio book,Naga Deepam full audiobook,Naga Deepam full audio book,
Naga Deepam Ch11 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

Naga Deepam Ch11 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

நாகதீபம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 11. பின்னாலும் கண் உண்டு

Naga Deepam Ch11 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

இரவின் நான்காம் ஜாமத்தின் ஆரம்பத்தில் ஒண்டாலா சமவெளித் தோப்பின் இறுதிப் பகுதியில் வீரர்கள் கூடாரத்தை அமைத்துக் கொடுத்ததும் உள்ளே சென்று படுத்து உறங்கும்படி ஹரிதாஸ் ஜாலா உத்தரவிட்டதைக் கேட்ட
ராஜபுத்திரி, சீற்றம் மிகுந்த விழிகளை அவன் மீது திருப்பினாளென்றால், அதற்குக் காரணம் பலமாக இருக்கத்தான் செய்தது. அவன் எதிரியின் கையாள் என்ற காரணம் மட்டுமல்ல அவள் இதயத்தில் கோபக் கனலை மூட்டியது. அவன்
எதிரியின் கையாள் என்பதை அறிந்த பின்பும் தனது பாட்டனார் நடந்து கொண்ட முறையும் அவனிடம் வழி பூராவும் பேசிக் கொண்டு வந்த தோரணையும் கடைசியில் தன் பாதுகாப்பையே அவனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்று
விட்ட வகையும் எல்லாமே அவளை அளவுக்கதிகமாகக் கொதிக்க வைத்தன. தவிர ராஜபுதனத்தின் பிதாமஹர் எதிரியின் படை பலத்தைப் பற்றி விசாரித்தபோது அவன் அதைப் பற்றியும் விவரமாக அவரிடம் கூறியதும் அவளுக்குப்
பெரும் வெறுப்பை அளித்திருந்தது. “இவர் ராஜபுதனத்தைக் காட்டிக் கொடுக்க மொகலாயர் பக்கம் சேர்ந் திருக்கிறார். அப்படியிருக்க அவர்கள் படைபலத்தையும் பாட்டனாரிடம் சொல்கிறாரே. எந்தப் பக்கத்துக்கும் உண்மையாயிருக்க
இவரால் முடியாது போல் இருக்கிறது! சந்தர்ப்பத்தையொட்டி யாரையும் காட்டிக் கொடுத்து விடும் இவரை நம்பிப் பாட்டனார் என்னை எப்படி இவர் வசம் ஒப்புவித்துப் போனார் என்று எண்ணி, வெறுப்பும் கோபமும் கலந்த
உணர்ச்சிகளுக்கு உட்பட்டிருந்தாள் ராஜபுத்திரி. கடைசியில் தூது வந்த காரணத்தை மட்டும் அவன் பாட்டானா ரிடம் கூறாமல் மறுத்து விட்டதும் அவளுக்கு அவனிடம் வெறுப்பையும் கோபத்தையும் அளித்திருந்தது. இத்
தனையையும் மீறி அவளை வாட்டி வதைத்தது இத்தகைய ஒரு மனிதனுக்குத் தான் சம்பிரதாயப்படி மனைவி என்ற எண்ணம். அந்த எண்ணம் உள்ளூரப் புகைந்து கொண்டிருந்ததால், கூடாரத்துக்குள்ளே சென்று உறங்கும்படி
ஹரிதாஸ் ஜாலா உத்தரவிட்டதும் அவள் கடுங்கோபத்திற்குள்ளாகி, அவனைத் திருப்பிச் சுட்டுவிடுவது போல் நோக்கிக் கூடாரத்துக்குள் செல்லாமல் நின்ற இடத்திலேயே சில விநாடி கள் நின்றாள்.
அவள் கோபவிழிகளை ஹரிதாஸ் ஜாலா கண்டான். கோபத்துக்குக் காரணமும் அவனுக்குச் சந்தேகமறப் புரிந்திருந்தது. ஆகவே அதைப்பற்றி அவன் அதிகமாக லட்சியம் செய்யாமலே, “இரவின் நான்காம் ஜாமம் தொடங்கிவிட்டது
ராஜபுத்திரி” என்று சுட்டிக் காட்டினான்.
“அது தெரியும் எனக்கு” என்றாள் ராஜபுத்திரி உள்ளேயிருந்த கோபம் குரலிலும் பரிமளிக்க,
“படுத்து உறங்க ஏழெட்டு நாழிகைகளே உள்ளன” என்றான் மீண்டும் ஹரிதாஸ் ஜாலா.
“அதுவும் எனக்குத் தெரியும்” என்றாள் ராஜ புத்திரி.
“அப்படியானால் கூடாரத்துக்குள் செல்லலாம்” இந்தச் சொற்களைச் சற்று உஷ்ணத்துடனேயே உதிர்த்தான் ஹரிதாஸ் ஜாலா.
கோபத்தால் நிதானத்தை இழந்திருந்த ராஜபுத்திரி எதைப் பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்பதை அறியாமலே, “எனக்கு உத்தரவிட நீ யார்?” என்று ஏக வசனத்தில் கேள்வியை வீசினாள்.
கோபத்துடன் இகழ்ச்சியும் கலந்த இளநகை யொன்று ஹரிதாஸின் இதழ்களில் தவழ்ந்தது. “தங்கள் பாட்டனாரே அதை விளக்கியிருக்கிறார்” என்றான் அந்த ராஜபுத்திரன்.
‘தங்கள்’ என்ற மரியாதைச் சொல்லைக் கவனிக்கும் சக்தி ராஜபுத்திரிக்கு இருந்திருந்தால் அவள் பேச்சு சுவடு மாறியிருக்கும். கோபத்தின் விளைவாக அதைக் கவனிக்காத ராஜபுத்திரி, “என் பாட்டனார் எதை விளக்கினார்?” என்று
கேட்டாள்.
“உங்களுக்கு உத்தரவிடும் உரிமை எனக்கு உண்டு என்பதை” என்ற ஹரிதாஸ் ஜாலாவின் இதழ்களில் விஷமச் சிரிப்பு மேலும் வளர்ந்தது.
“என்ன சொல்கிறாய்?” என்று சீறினாள் ராஜ புத்திரி.
இதுவரை அடக்கத்துடன் பேசிவந்த ஹரிதாஸ் ஜாலா, “ராஜபுத்திரி! முறை தவறிப் பேச வேண்டாம். சொற்களை அளந்து உபயோகிப்பது நல்லது!” என்று சுட்டிக் காட்டினான்.
“என்ன முறை தவறி விட்டேன் நான்?”
“இருவருமே முறை தவறிப் பேசுகிறோம்.”
“எனக்கு விளங்கவில்லை.”
“நீ என்றும், ‘சொல்கிறாய்’ என்றும் உங்கள் வாயிலிருந்து சொற்கள் வருகின்றன. நானோ ‘தாங்கள்’ என்கிறேன். இரண்டும் மாறியிருப்பதுதான் முறை,”
ஹரிதாஸ் ஜாலா எதைப் பற்றிக் குறிப்பிடுகிறானென்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்ட ராஜ புத்திரியின் கோபம் முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாகவே, அவள் பேசும் சக்தியை அறவே இழந்தாள். தங்களிருவருக்குமுள்ள
கண்வன் மனைவி முறையையே அவன் குறிப்பிடுவதையும், தான் மரியாதையின்றி அவனை அழைத்ததையே அவன் சுட்டிக் காட்டுவதையும் உணர்ந்த ராஜபுத்திரியின் இதயம் பலமாக அடித்துக் கொண்டது. அவள் உடலும் லேசாக
நடுங்கியது. அந்த நடுக்கத்தையும், முகம் சந்தேகமின்றி எடுத்துக் காட்டிய அவள் சஞ்சலத் தையும் விநாடி நேரத்தில் கவனித்த ஹரிதாஸ் ஜாலாவின் இதயத்தில் அவளைப் பற்றிய அனுதாபம் பலமாக எழுந்தது. அதன் விளைவாக அவன்
சொன்னான். “ராஜபுத்திரி! நீங்கள் என் மனைவி. கணவனுக்குச் சொந்தமான உரிமைகளை உங்களிடம் பெற நான் முயன்றால் அது தவறும் ஆகாது. ஆனால் அந்த உறவை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை, உங்களுக்கு
என் மீது ஏற்பட்டிருக்கும் கசப்பும் அதற்குக் காரணமும் எனக்குத் தெரியும். பெண் குணத்தையும் குரோதத்தையும் காட்டி என்னைத் துன்புறுத்த மட்டும் முயலாதீர்கள். நான் அளிக்கும் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
உள்ளே சென்று உறங்குங்கள்.’“
அவன் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளில் கண்டிப்பு இருந்தது. குரலில் கடுமை அதிகமாக இருந்தது. அவன் கண்கள் சிறிதும் சலனமின்றி அவளை உறுதியுடன் பார்த்தன. அந்தப் பார்வையைச் சந்திக்க சக்தியில்லாமல் கண்களை
நிலத்தில் தாழ்த்தினாள் ராஜபுத்திரி. பிறகு சரேலென்று தலையை ஒரு திருப்பு திருப்பிக் கொண்டு கூடாரத்துக்குள் நுழைந்து திரையை அதிவேகமாக அவிழ்த்துவிட்டு கூடார வாயிலை மறைத்தாள். அந்தத் திரையைச் சில விநாடிகள்
நின்ற படியே கவனித்த ஹரிதாஸ் ஜாலா, தனது புரவியை இழுத்துக் கொண்டு மரத்தடிக்குச் சென்று மரத்தில் அதைப் பிணைத்தான். பிறகு வீரர்களை ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்துவிட்டுத் தோப்பின் முனைக்குச் சென்று
எதிரேயிருந்த மணற் பரப்பை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே நின்றான்.
நான்காம் ஜாமம் மிகவும் மெள்ள மெள்ள வே நகர்ந்து கொண்டிருந்தது. உதயமாக அப்பொழுதும் நாழிகைகள் பல இருந்ததால் சந்திரன் சிறிதும் ஒளி குன்றாமலே அந்தப் பாலைவனத்தை மிக ரம்மியமாக அடித்துக் கொண்டிருந்தான்.
அந்தப் பாலைவனத்தை அப்படியே விழுங்கி விடுபவன் போல் பார்த்துக் கொண்டிருந்த ஹரிதாஸ் ஜாலா, வளமற்ற அந்தப் பாலை வனத்தைக் காக்க எத்தனை ராஜபுத்திரத் தலை முறைகள் அந்த மணலில் தங்கள் இரத்தத்தைப்
பாய்ச்சியிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்து பெருமூச்செறிந்தான். அத்தனை இரத்தத்தைக் குடித்தும் செந்நிறம் படர்ந்திருந்த அந்தப் பாலை வனத்தின் நன்றிகெட்ட நிலையையும் எண்ணித் தன்னையும் எண்ணி, தனக்கும் அதற்கும்
அதிக வித்தியாசமில்லையென்றே தீர்மானித்தான். ‘பாலை வனம் ராஜபுதனத்தின் இரத்தத்தை உறிஞ்சியிருக்கிறது. நானும் ராஜபுதனத்தின் உணவால் வளர்ந்திருக்கிறேன். அந்த உணவை அருந்தியும் நான் ஜஹாங்கீரின் தூதுப்
பொறுப்பை ஏற்கவில்லையா? இந்தப் பாலை வனத்துக்கும் எனக்கும் இரண்டு பேருக்குமே நன்றியில்லை. உணர்ச்சிகள் வறண்டுவிட்டன’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். இருப்பினும் அந்தப் பாலைவனத்தின் இயற்கை
எழிலைக் கண்டு வியந் தான் ஹரிதாஸ் ஜாலா. “இதன் கவர்ச்சிக்கும் மதியின் ஒளிதான் காரணம்; என் சக்திக்கும் பெருமைக்கும் தற்சமயம் நான் ஜஹாங்கீரின் தூதனாயிருப்பது காரணம். வறண்டு போனவர்கள் பிறர் சக்தியால்
பரிமளிக்கிறார்கள். இது வரலாறு காட்டும் உண்மை” என்று தன்னையும் அதையும் சேர்த்து கடிந்து கொண்டான் ஹரிதாஸ் ஜாலா. இருப்பினும் பிறந்த நாட்டின் அந்த மணலை ஆசையுடனேயே பார்த்தான். குனிந்து ஒரு பிடி மணலைக்
கையில் அள்ளியும் பார்த்தான். அந்த மணலின் ஸ்பரிசம் அவனுக்குப் பேரானந்தத்தைக் கொடுத்தது. அந்த ஆனந்தத்துக்குக் காரணம் அவனுக்குத் தெரிந்தது. “என் மூதாதையர் நடந்த மண் இது. பெரும் போர்களையும் தீரச்
செயல்களையும் இது கண்டிருக்கிறது. வீரர்கள் குருதியும் தியாகத்தின் குருதியும் இதன் கர்ப்பத்தில் இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டு, அதை ஆனந்தத்துடன் நெருடிக் கீழே உதிர்த்தான். இந்த மண்ணில் தான் ராஜபுத்திரியும்
பிறந்தாள என்ற எண்ணமும் அவனை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. அவள் நினைப்பு அவனை மனக்கண்ணில் எழச் செய்தது. ராஜபுத்திரியின் எழிலை, உடலசைவை, கண்களின் கோபப் பார் வையை, சரேலென அவள்
கூடாரத்துக்குள் சென்ற வேகத்தை, அனைத்தையும் மனக்கண்ணில் கண்டான் அவன். அத்தகைய மனைவியிருந்தும் அவளுடன் கூடாரத்துக்குள் நுழைய உரிமையிருந்தும், அவள் தனித்திருந்ததால் வசதியிருந்தும் அவற்றைத் தான்
பயன்படுத்த முடியாமலிருப்பதை எண்ணிய ஹரிதாஸ் ஜாலா பெருமூச்செறிந்தான்.
இந்தப் பாலைவனத்துக்கு அருகில்தானிருக்கிறது புஷ்பங்களும் கனிகளும் நிறைந்த இந்தச் சோலையும், ஆனால் பாலைவனத்தால் சோலையை அனுபவிக்க முடிகிறதா என்ன? நான் மாத்திரம் விதிவிலக்கா? நானும் இந்தப்
பாலைவனத்தைப் போலத்தான் அருகில்தா னிருக்கிறாள் அந்த அழகுச் சோலை. அங்கும் கனிகள் இருக்கின்றன. அண்ட யோக்கியதை இல்லையே எனக்கு. நான் போயும் போயும் மொகலாயர் தூதன், என தன்னையே வெறுத்துக்
கொண்ட ஹரிதாஸ் ஜாலா, மீண்டும் சோலைக்குள் நுழையாமல் அதன் முகப்பில் பாலைவன மணலிலேயே உட்கார்ந்து கொண்டான்.
கூடாரத்துக்குள் சென்ற ராஜபுத்திரியின் நிலையும் கிட்டத்தட்ட ஹரிதாஸ் – ஜாலாவின் நிலையைப் போலவே இருந்தது. அவன் உத்தரவின் விளைவாலும் பேச்சின் கடுமையாலும் கூடாரத்துக்குள் நுழைந்த ராஜபுத்திரி திரையை
விட்டுத் தரையில் விரித்திருந்த பஞ்சணையில் வெகுவேகத்துடன் படுத்தாள். உடனே பலவந்தமாகக் கண்களையும் மூடிக் கொண்டாள். புற உலகத்தினின்று உள்ளத்தை மறைக்கவே கண்ணை மூடிய பின்பு அவள் மனதில் புற உலகம்
பெரிதாகவும் வேகமாகவும் விரிந்தது. அதில் ஹரிதாஸ் ஜாலாவின் உருவம் பெரிதாக எழுந்தது. அவன் கோபக் கண்கள் அவளை உற்றுப் பார்த்தன. அவனது உறுதியான உதடுகள் அவளை நோக்கி நகை புரிந்தன. அந்தச் சிரிப்பே
அவனுக்குத் தன்னிடமுள்ள உரிமையை வலியுறுத்துவதாகத் தோன்றியது. அவளுக்கு அந்தச் சமயத்தில் அவன் தன் பக்கத்தில் வந்து படுத்தாலும் தடுக்கத் தனக்கு உரிமையில்லை என்பதை உணர்ந்தாள் ராஜ புத்திரி. அந்த உணர்ச்சி
அவளுக்குப் பெரும் வேதனையை அளித்தது. அது இன்பமளித்த வேதனையா துன்பமளித்த வேதனையா என்பதை அவளால் உணர முடியவில்லை. அதுவரை தான் வாழ்வில் காணாத பெரும் சங்கடம் தன்னை வளைத்துக்கொண்டதை
மட்டும் அவள் உணர்ந்து கொண்டாள். ஹரிதாஸ் ஜாலாவின் நினைப்பு தன் தைரியத்தையெல்லாம் எங்கோ ஓட்டி விட்டதை அவள் உணர்ந்து கொண்டாள். ஆண் மகன் அருகிலில்லாதபோதுகூட அவன் எண்ணம் விளைவிக்கும்
வேதனையின் சக்தி இத்தன்மையதா என்று வியக்கவும் செய்தாள் ராஜ புத்திரி. அந்த வியப்புடன் அவன் ஏதோ பக்கத்திலிருப்பது போன்ற பிரமையும் ஏற்படவே அவள் பஞ்சணையிலிருந்து சற்றுத் தள்ளியும் படுத்தாள். ஏதோ விவரிக்க
இயலாத பயமும் அவள் உள்ளத்தில் குடி கொண்டிருந்தது. அது ஹரிதாஸ் ஜாலாவைப் பற்றிய பயந்தான் என்பதை ராஜபுத்திரி சந்தேகமற உணர்ந்து கொண்டாள். அது என்ன பயம்? கணவன் என்ற நினைப்பால் ஏற்பட்ட பயமா?
‘கணவனிடம் மனைவி எதற்காகப் பயப்பட வேண்டும்? உலகத்தில் மனைவி மார் பயப்படத்தான் செய்கிறார்கள். அதுவும் இயற்கையின் நியதியா என்ன? இல்லை இல்லை அந்த நியதி இல்லை. இருந்தாலும் நான் அஞ்சப் போவதில்லை’
என்று உறுதியுடன் சொல்லிக் கொண்டாள் அவள். அந்த உறுதி உண்மை உறுதியல்ல, வீண் வம்பு என்பதை அவள் மனம் எடுத்துச் சொல்லியது. மனம் மட்டுமல்ல, உடலும் உணர்ச்சிகளும் அதை எடுத்துக் கூறின. திரும்ப திரும்ப
அவள் மனம் அவனையே நினைத்துக் கொண்டிருந்தது. அந்த நினைப்பை அகற்ற அவள் பஞ்சணையில் புரண்டு புரண்டு படுத்தாள். உடல் புரண்டது. ஆனால் உள்ளம் நிலை கொள்ள வில்லை. சிந்தை சாந்தி குலைந்து கிடந்தது.
ஆகவே சாந்தியை நாடி அவள் எழுந்து கூடாரத்தின் வாயிலை நாடி திரையை அகற்றி மெள்ள வெளியே தலையை நீட்டினாள். அங்கு எங்காவது ஹரிதாஸ் ஜாலா இருப்பானோ என்ற பயம் அவளைச் சில விநாடிகள் தாமதிக்கச் செய்தது.
பயத்துடன் திரையை அகற்றி வெளியே பார்த்து யாருமில்லாதது போகவே தைரியத்துடன் வெளியே வந்தாள் அவள். வெளியே சோலைக்குள் நடந்தாள்.
சோலைச் செடி கொடிகளின் வாசமலர்கள் அவள் தலையையும் கன்னங்களையும் தடவிக் கொடுத்தன… ஓரிரண்டு கொடிகள் மார்பின் குறுக்கேயும் பாய்ந்து நடையைத் தடை செய்தன. அந்தக் கொடி களை விலக்கிக் கொண்டு
அவள் சோலையின் எல்லையை நாடினாள். நாடினவள் பிரமித்து நின்றாள். பாலைவன மணலை வெறித்துப் பார்த்துக் கொண்டு ஹரிதாஸ் ஜாலா உட்கார்ந்திருந்ததைக் கவனித்த ராஜபுத்திரி அந்த இடத்தைவிட்டு நகரப் பின்புறம்
மெள்ள ஓரு காலை எடுத்து வைத்தாள்.
“நில் அப்படியே!” என்ற ஹரிதாஸ் ஜாலாவின் குரல் அவள் நடையைச் சரேலெனத் தேக்கியது. அவன் திரும்பிப் பார்க்காமலே இருக்க, தான் வந்தது அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று வியந்தாள்.
“இப்படி வந்து உட்கார்” ஹரிதாஸ் ஜாலா தலையைத் திருப்பாமல் கூறினான். அவள் உட்கார வேண்டிய இடத்தையும் கையால் சுட்டிக் காட்டினான்.
அவன் குரலிலிருந்த அதிகாரத்தின் காரணத்தாலோ என்னவோ அவள் மெல்ல நடந்து அவன் காட்டிய இடத்தில் உட்கார்ந்தாள். உட்கார்ந்தவள், “நான் வந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றும் கேட்டாள்.
“பார்த்தேன்.”
“தலையைத் திருப்பவில்லையே.”
“இல்லை.”
“பின் எப்படிப் பார்க்க முடிந்தது? பின்னால் கண் உண்டா!”

.
“என் உடலின் ஒவ்வோரிடத்திலும் கண் உண்டு.”
அதற்கு மேல் பேசத் தெரியாமல் விழித்தாள் அவள். அவன் பலமாக நகைத்தான். எதற்கு நகைக்கிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை. “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டாள் அவள்.
“கண்களை நினைத்து நகைத்தேன்.”
“நகைப்பதற்கு என்ன இருக்கிறது இதில்?”
“வாழ்வும் இருக்கிறது. நாசமும் இருக்கிறது.”
“இரண்டும் கலப்பதுண்டா?”
“சிலர் வாழ்வில் கலப்பதுண்டு.”
“உங்கள் வாழ்வு…” அவள் பேச்சை முடிக்க வில்லை.
“அத்தன்மையது.” என்று முடித்த அவன், தன் பேச்சின் பொருளை விவரித்தான். அவன் வரிக்க விவரிக்க அவள் மனம் இளகியது. கண்களில் நீர் சுரந்தது. தூர உட்கார்ந்தவள் அவனை நெருங்கினாள். மலர்க்கை ஒன்றையும் எடுத்து
அவன் தோளில் வைத்தாள்.

Previous articleNaga Deepam Ch10 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
Next articleNaga Deepam Ch12 | Naga Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here