Home Historical Novel Nagadevi Ch 13 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 13 | Nagadevi Sandilyan | TamilNovel.in

69
0
Nagadevi Ch 13 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 13 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 13 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 13. புரிந்த நிலை

Nagadevi Ch 13 | Nagadevi Sandilyan | TamilNovel.in

முக்கால்வாசி கட்டப்பட்டு நின்றிருந்த சூடாமணி விஹாரத்தின் தூண்களுக்கு நடுவில் பரஸ்பர அணைப்பிலிருந்த அந்த இருவரில் உபேந்திரனே சற்று தலையை எட்டிச் சாய்த்துப் பக்கத்துத் தூணிலிருந்த விளக்கை ஊதிவிட்டபடியால்
பெரும் அந்தகாரம் சூழ்ந்து நின்றது. அந்த அந்தகாரத்தில், அணைத்த அணங்கின் இடையைச் சுற்றியிருந்த இரு கைகளில் வலது கையைத் தூக்கி அவள் தலைக் குழலைக் கோதிவிட்ட உபேந்திரன், அதில் சூடப்பட்டிருந்த நாகாபரணத்தை
எடுத்துத் தனது அங்கியில் வைத்துக் கொண்டான்.”ஏன் அதை எடுத்து விட்டீர்கள்?’ என்று அவள் மெதுவாகக் கேட்டாள்.
“தற்சமயம் அவசியமில்லை. திரும்பவும் நீ நாக தேவியாகும்போது அதை அணிந்து கொள்ளலாம்” என்ற உபேந்திரன், ‘மருதி’ உனது இணையற்ற எழிலை எத்தனை நாள் தூரத்திலிருந்தே கண்டு ஏங்கியிருக்கிறேன் தெரியுமா? உன்னை
அறியாதது போல் நடித்திருக்கிறேன் தெரியுமா?” என்று வினவியதன்றி அவள் கன்னமொன்றை கையால் தடவியும் கொடுத்தான்.
அதுவரை எந்த ஆண்மகனாலும் தொடப்படாத மருதியின் உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. “அப்படியா!” என்று ஏதோ கேட்க வேண்டு மென்பதற்காகக் கேட்டாள் மருதி.
“ஆம் மருதி! நீ நாகலிங்கக் காட்டில் செல்லும் போதெல்லாம் அசையும் உன் பின்னெழில்களைக் கண்டிருக்கிறேன் பலமுறை. ஆனால் உன்னை அணுகவோ பேசவோ பயமாயிருந்தது” என்ற உபேந்திரன், இடையைத் தழுவி நின்ற இடது
கையைச் சற்றே இறக்க முற்பட்டான். அவள் தனது கையொன்றால் அதை விலக்கி, “ இந்த விஷமமெல்லாம் என்னிடம் வேண்டாம்” என்று கடுமையாகச் சொன்னாளே தவிர, விலக்கிய கையின் விரல்களோடு தன் கைவிரல்களைப்
பின்னவும் செய்தாள். ஆனால் அந்த பின்னியகைகள் இரண்டுமே ஒன்று சேர்ந்து கீழே இறங்கிய தன்றி, பின் னெழில் ஒன்றில் தேங்கி நிற்கவும் செய்யவே “மருதி!” என்று மெள்ள அழைத்தான் உபேந்திரன்.
“உம். மருதியின் குரல் குழைந்து கிடந்தது.
“நாம் ஏன் முன்னமே ஒருவரை யொருவர் சந்திக்கவில்லை?” என்ற உபேந்திரன் அவள் கன்னத்தை லேசாகத் தனது இதழ்களால் தடவினான். வலது கையும் அவள் விலாவில் பதிந்து அதை இறுகப்
“சந்திக்காததால் இப்போது என்ன குறைந்து விட்டது?” என்று கேட்ட மருதியின் உடல் அவன்மீது சற்று அதிகமாகவே அழுந்தியது.
உபேந்திரன் தனது இடது கையைத் தூக்கி அவள் முதுகில் வைத்து அழுந்திய அவள் பூவுடலை மேலும் அதிகமாகத் தனது மார்புடன் அழுத்திக் கொண்டான். அத்துடன் அவள் கன்னத்தில் உதடுகளைப் புதைத்த வண்ணம்,
சந்திக்காததால் பல தொந்தரவுகள் மருதி” என்று கூறினான்.
“என்னவோ?” உணர்ச்சிப் பெருக்கால் அதிகமாக பேச முடியாத மருதி இந்த ஒரு வார்த்தையை மட்டும் சொன்னாள்.
“இந்த நாகதேவியுடன் நான் சிக்கியிருக்கமாட்டேன்” என்ற உபேந்திரன் தனது இதழ்களை மெள்ள கன்னத்திலிருந்து அகற்றி அவள் மார்புக்குச் சிறிது மேலே புதைத்தான்.
மருதி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. அந்த ஆண் மகன் உதடுகள் தனது இரட்டை எழில்களைத் தொடாவிட்டாலும் அவற்றின் விளிம்பில் பதிந்து கிடந்த தால் உணர்ச்சியின் எல்லையைத் தொட்டுக் கொண் டிருந்தாள். அவள்
உடல் அந்த நேரத்தில் லேசாக நடுங்கவும் செய்தது. அடுத்த கணம் அந்த நடுக்கலை நிறுத்தவோ என்னவோ அவள் கைகள் இரண்டும் அவன் குழல்களைப் பிடித்து அவன் முகத்தை மார்பை நோக்கி நகர்த்தி அழுத்தவே, உபேந்திரன்
இந்திர போகத்திலிருநதான்; “மருதி! மருதி!” என்று முணு முணுக்கவும் செய்தான்.
மருதி சிறிது துணிவு கொண்டாள். முடிந்திருந்த தனது குழல்களை இடது கையால் அவிழ்த்து அவன் தலைக்குழலுடன் தனது குழலைப் புரளவிட்டாள். நீண்ட அவள் குழல் அவன் குழல்களை மட்டுமின்றி முகத்தையும்
மறைத்துவிடவே உபேந்திரன் அவள் மார்புமீது தனது தலையைப் புரட்டினான். அடுத்து இரு மார்புகளுக்கிடையிலிருந்த சிறுவெளியில் இதழ்களைப் புதைக்கவும் செய்தான். அவன் கைகளின் சேஷ்டையும் அத்துடன் இணையவே
சுயநிலையை அடியோடு இழந்த மருதி அவன்மீது இழைந்தாள்.
இழைந்த உடல்களால் இருவர் சிந்தையும் எங்கோ பறந்தது. தங்களுக்கென தனி உலகம் சிருஷ்டிக்கப்பட்டு விட்டதை இருவருமே உணர்ந்தார்கள்.
நின்ற நிலையில் இரு சர்ப்பங்கள் போல இழைந்த இருவரும் தாங்கள் நாகஜாதி என்பதை சந்தேகமற உணர்ந்தார்கள். ஏகபோகத்திலும் அந்த நாகபோகம் இருவருக்குமிடையே அதுவரையிலிருந்த வித்தியாசங்கள், சங்கடங்கள், வெட்கம்
அனைத்தையும் விலக்கிவிட்டதால் உபேந்திரன் சட்டென்று பிரிந்து அவளைத் தூக்கிக்கொண்டு விஹாரத்தின் ஒரு மூலைக்குச் சென்றான். அவன் தூக்கியபோது அவன் மார்புமீது சாய்ந்து விட்ட மருதி அவன் மேல் அங்கியின்
கயிறுகளை அவிழ்த்து மார்பின் ரோமங்களைக் கையால் தடவி, “அப்பா என்ன முரட்டு உடல்” என்றும் முணுமுணுத்தாள் அங்கு சாய்த்த தலையை எடுக்காமலே.
அதைக் கேட்ட உபேந்திரன் அவளைத் தூக்கி நடந்தபடியே, “இந்த முரட்டு உடல் உனக்குப் பிடிக்க வில்லையா மருதி?” என்று வினவினான்.
“நல்ல கேள்வி” என்று அவன் மார்பில் பதிந்த வண்ணம் சொன்னாள் அவள்.
அதற்கு அவன் வெளிப்படையாகப் பேசி பதிலேதும் சொல்லாமலும் நடந்தாலும் அவன் வாய் சொல்லியது பதிலை. அலள் மேலாடையைக் கவ்விய அவன் வாய் அதைத் தோளிலிருந்து நெகிழச் செய்துவிட்டதை உணர்ந்த மருதி, “சரி சரி”
என்றாள்.
அவன் மெதுவாக நகைத்தான். “ஒப்புதலுக்கு நன்றி” என்று சொன்னான் நகைப்பின் ஊடே.
“என்ன ஒப்புதல் தந்துவிட்டேன்?” அவள் வாய் முணுமுணுத்தது. அந்த முணுமுணுப்பில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்தன.
“சரி சரி என்றாயே”
“அது ஒப்புதலா?”
“அப்படித்தான் தமிழில் பொருள்.”
“தமிழறிவு இதற்கும் உபயோகப்படுகிறது.”
“அதனால் லாபமே தவிர நஷ்டமில்லை “
“அது புரிகிறது.”
“எதையும் புரியவைக்கும் மொழி தமிழ்தான்.”
இப்படிப் பேசிக்கொண்டே அவளைத் தூக்கி வந்த உபேந்திரன் சூடாமணி விஹாரத்தின் மூலைக்கு வந்ததும் அங்கிருந்த சார்புத் திண்ணையில் அவளைப் படுக்க வைத்தான், தானும் அருகில் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரம்
அவன் பேசவில்லை. பேச்சை அவளே துவக்கினாள். “இந்தத் திண்ணையை எதற்காகக் கட்டியிருக்கிறார்கள்?” என்று.
“துறவிகள் உட்கார்ந்து ஜபம் செய்ய. இதே மாதிரி நான்கு திண்ணைகள் இருக்கின்றன” என்று சொன்ன உபேந்திரன் சற்றே சாய்ந்த அவள் உடலின் மீது வலது கையை வைத்தான்.
அவள் லேசாக நகைத்தாள். “ஜபம் செய்வதற்கா” என்று கேட்டாள்.
“ஆம்” என்றான் உபேந்திரன் அவளை நோக்கி குனிந்து.
“ஆம் என்று சொல்லாதீர்கள்” என்றாள் மருதி மிக மிருதுவாக.
“வேறு என்ன சொல்லவேண்டும் மருதி?” என்று வினவிய அவன் அவள் கையொன்றை எடுத்து அதில் இதழ்களைப் பதித்து மீண்டான்.
“ஓம் என்று சொல்லுங்கள்” என்ற மருதி நன்றாக மல்லாந்து படுத்தாள். இருட்டிலும் லேசாகத் தெரிந்த விகசித்த அந்தப் பூவுடலைப் பார்த்த உபேந்திரன், “ஓம் என்று சொல்ல வேண்டுமா?” என்று வினவினான்.
“ஜபத்திற்கு அது தான் மூலாதாரம், பிரணவம்” என்றாள் மருதி மிக இன்பமான குரலில்.
“சரி சொல்கிறேன். ஜபம் என்ன? தவம் வேண்டுமானாலும் செய்கிறேன். அப்பொழுது நீ என்ன செய்வாய்?” என்று கேட்ட அவன், “எதற்கும் உன் இதயத்தைக் கேள்” என்று இதயமிருந்த இடத்தில் கையை வைத்தான்.
இதய பீடத்தின் மீது அழுந்திய அவன் கையைத் தன் கையால் பற்றினாள் மருதி. “ இதயமிருக்குமிடம் எனக்கே தெரியும், தொட்டுக் காட்ட வேண்டாம்” என்று வெட்கம் தழுவிய சொற்களால் கூறினாள். அது
“நீ என்ன தொட்டால் சிணுங்கியா?” உபேந்திரன் கை உலாவியது.
“பின்?”
“அவை?”
“எவை?”
“நல்ல லட்சணம்” என்று கூறிய அவன் சற்றே புரளவே அவன் கை அவள் உடலுக்கும் தரைக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டது. அந்த நிலையில், நீ என்ன செய்வாய்?” என்று பழைய கேள்வியைத் திருப்பினான்.
“என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்று அவள் கேட்டாள்.
“நான் தவம் செய்தால் அதை மேனகை, ரம்பை, யாராவது கெடுக்க வேண்டாமா?” என்ற உபேந்திரன் தனது வலது கையை எடுத்து அவளைத் தன்னை நோக்கி நன்றாக இழுத்தான்.
“தவத்தைக் கெடுக்க உங்களுக்கு ஒரு பெண் அவசியம்?” என்று கேட்டுக் கொண்ட அவள் அவன் மடிமீது தலையை வைத்தாள். –
“இல்லாவிட்டால்! தவம் செய்து என்ன பயன்?” என்று கேட்ட அவன் கை பயன் தரும் இடங்களை நாடிச் செல்லத் துவங்கியது…
அவள் தலையைச் சற்று நிமிர்த்தி சற்று அவன் மடியில் நெகிழ்ந்து ஏறியபடி, “தவம் முடிந்துவிட்டது போலிருக்கிறது?” என்று வினவினாள்.
“எப்படித் தெரியும்?” அவன் குரல் வேகத்துடன் ஒலித்தது.
“அடுத்த கட்டம் துவங்கிவிட்டதே” என்று அவள் குரலிலும் லேசாக வேட்கை தெரிந்தது.
அவன் வெறி மெதுவாக ஏறிக் கொண்டிருந்தது. பல பெண்களைப் பார்க்காத அவன் அன்றுவரை கட்டி வைத்திருந்த உணர்ச்சிகளையெல்லாம் உடைத்துக் கொண்டான். மடியிலிருந்த அவள் தலையை எடுத்து அவன் மீண்டும்
திண்ணையில் அவளை நன்றாகக் கிடத்தினான். அவன் வலிய இதழ்கள் அவள் மெல்லிய செவ்விய இதழ்கள் மீது வேகத்துடன் பதிந்தன. கைகள் அவளைச் சுற்றின. உடல் தாழ்ந்தது
அவள் மீது வேகமாக. உணர்ச்சிகள் அலைக்கழித்ததால் அவள் கால்களில் கையொன்றை வைத்தான் உபேந்திரன். அவனது இன்னொரு கை அவள் கழுத்துக்குப் பின்புறம் சென்று அவள் தலையில் லேசாகத் தூக்கியதால் பதிந்த
இதழ்கள் மேலும் பதிந்தன. இழைந்தன. மார்பில் இழைந்த மொட்டுகள் விகசித்தன. இருவரும் உணர்ச்சி வசப்பட்ட நேரம் அது. உலகை மறந்த நிலை! உவகை துள்ளிய நிலை! வேட்கை மிகுதியால் கனவுகளெல்லாம் நனவாகப் புகுந்த நிலை!
அந்த நிலையில் அவள் லேசாக முனகினாள். “இத்தனை நாள்…” என்று ஏதோ முணு முணுத்தாள் இதழ்களை விலக்கிக் கொண்டு.
“உன்னைப் புரிந்து கொள்ளவில்லை. ஏன்? உலகத்தையே புரிந்து கொள்ள வில்லை. என்னையும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் மருதி…” என்று இழுத்தான் உபேந்திரன்.
“என்ன?” கேள்வியில் தொனித்த குரலில் ஜாலமிருந்தது.
“இப்பொழுது தான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்” என்று அவனும் முணுமுணுத்தான்.
இருவரும் உலகை மறந்த நிலையில் அவர்களைப் புரிந்து கொண்டிருந்த வேறோர் உருவம் சற்று எட்ட இருந்த தோப்பில் இருந்து மெள்ள கிளம்பி விஹா ரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.

Previous articleNagadevi Ch 12 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 14 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here