Home Historical Novel Nagadevi Ch 16 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 16 | Nagadevi Sandilyan | TamilNovel.in

88
0
Nagadevi Ch 16 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 16 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 16 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 16. இன்னும் மூன்று நாள்கள்

Nagadevi Ch 16 | Nagadevi Sandilyan | TamilNovel.in

உபேந்திரன் மரக்கலத்தின் தளத்துக்கு வந்த போது கதிரவன் நன்றாகக் கிளம்பிவிட்டதையும், நாகப்பட்டினத்தின் கரையிலிருந்து மரக்கலம் நீண்ட தூரம் வந்து விட்டதையும், ஓரளவு கரை தெரிந்தாலும் மரக்கலத்திலிருந்து சைகை
காட்டுவதோ துணைக்கு அழைப்பதோ முடியாத காரியமென்பதையும் உணர்ந்து கொண்டதால் என்ன செய்வதென்று அறியாமல் சில விநாடிகள் திகைத்து நின்று விட்டான்.
அமைதியில்லாத அவன் மனத்துக்கு நேர் விரோத மாக அன்று காலை கடல் மிகுந்த அமைதியுடனிருந்தது. கதிரவன் அதன் சிற்றலைகள் மீது தனது கிரணங்களைப் பாய்ச்சி அவற்றின் அழகையும் அசைவையும் பன்மடங்கு ஒளிபெறச்
செய்திருந்ததாலும், அவை கண்ணாடிபோல் பளபளத்தாலும் நன்றாக இணைக்கப்பட்ட கண்ணாடிகள் மீது மிதந்து செல்லும் பிரமையை அடைந்தான் உபேந்திரன். வானும் கடலும் இணைந்து சிருஷ்டித்த இயற்கையின் இந்திர ஜாலத்தைக்
கண்டு சாதாரணமாகத் துள்ளும் மனத்தை உடைய சோழர் படைத்தலைவன் அன்று எதையும் ரசிக்கும் நிலையில் இல்லாததால் ஆசுவாசப் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான். காரணமின்றித் தளத்தைச் சுற்றி நடந்தான் இருமுறை. பிறகு
நடுவிலிருந்த பாய் மரத்தண்டில் ஏற முயன்றபோது மட்டும் ஒரு மாலுமி அருகில் வந்து அவனைத் தடுத்து, “படைத் தலைவரே! பாய்மரத்தண்டில் ஏற மட்டும் தங்களுக்கு அனுமதியில்லை. மற்றபடி இந்த மரக்கலம் தங்களுக்குச் சொந்தம்.
தாங்கள் எதைச் சொன்னாலும் செய்ய தலைவி உத்தரவிட்டிருக்கிறார்கள்” என்று வணக்கத்துடன் தெரிவித்துக் கொண்டான். விடியற்காலையில் தான் தளமேறி வந்தபோது போர் சன்னதத்துடன் நின்றிருந்த மாலுமிகள், இப்போது
தங்கள் ஆயுதங்களில் ஓரிரண்டைத் தவிர மற்றவற்றைத் துறந்து நிற்பதைக் கண்ட உபேந்திரன் அந்த மாலுமிக்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு அந்த மாலுமியை நோக்கி, “சுத்ததத்தர் எங்கே?” என்று
வினவினான்.
விசித்திரமான பதில் வந்தது மாலுமியிடமிருந்து, “உறங்கிக் கொண்டிருக்கிறார்” என்று கூறினான் மாலுமி.
இதைக் கேட்டதும் வியப்பெய்திய படைத்தலைவன், “உறங்கிக் கொண்டிருக்கிறாரா? இத்தனை நேரத்துக்குப் பிறகுமா? நான் வந்தபோது இங்கு அவரைப் பார்த்தேனே” என்றான்.
“குருநாதர் இரவு முழுவதும் விழித்திருந்ததால் காலையில் உறங்கிவிட்டார்’ என்றான் மாலுமி.
உபேந்திரன் நகைத்தான். சித்தம் மிகுந்த துயரத்திலிருந்தபோது கூட, “குருநாதர் நேற்று நள்ளிரவில் தானே இங்கு வந்திருப்பார்” என்றான் நகைப்பின் ஊடே.
“ஆம் படைத்தலைவரே! தாங்களும் நாகதேவியும் உத்தரவிட்டதால் குருநாதர் நமது மாலுமிகளால் கட்டிக் கொண்டு வரப்பட்டார். இங்கு வந்ததும் கூவினார். எங்களையெல்லாம் ஒழித்து விடுவதாகக் கூச்ச லிட்டார். நாங்கள்
மசியவில்லை. அவரை ஓர் அறையில் அடைத்துப் பூட்டினோம். ஆனால் அடுத்த ஜாமத்தில் நாகதேவியின் உத்தரவின் மேல் இன்னொரு நாகதேவியும் இங்கு பலவந்தமாகக் கொண்டு வரப்பட்டாள். குருநாதரை மரியாதையுடன்
நடத்தவும் உத்தரவு வந்தது. எங்களுக்கு ஒரே பிரமையாகப் போய் விட்டது. இருப்பினும் நாகதேவியின் உத்தரவுப்படி அந்த இரண்டாவது நாகதேவியையும் ஓர் அறையில் வைத்துப் பூட்டினோம். ஆனால் அவளைச் சகல
மரியாதைகளுடன் நடத்தினோம். குருநாதரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டோம். அவரே தங்களையும் எங்கள் தலைவியையும் இங்கு வரவேற்றது நினைப் பிருக்கும்” என்று விளக்கினான் மாலுமி.
உபேந்திரனுக்கு ஒரே ஒரு சந்தேகம் மட்டும் வந்தது. “ ஆமாம் இரண்டாவது தேவியை யார் தூக்கி வந்தார்கள்? யார் உத்தரவுமீது” என்று வினவினான்.
மாலுமி சிறிது நிதானித்துவிட்டுச் சொன்னான். “படைத்தலைவரே! நாகதேவி நாகர்கள் குலத்துக்கும் முக்கியமானவர். அவரைப் பார்த்து நாங்கள் திரும்ப அழைத்துச் செல்லாவிடில் சாவகத்தின் நாகர்கள் எங்களைத் தீ வைத்துக்
கொன்றுவிடுவார்கள். ஆகவே எப்பொழுதும் இந்த மரக்கலத்தின் பத்து மாலுமிகள் நாகதேவி தங்கும் இடத்தில் இருந்து சற்று எட்ட மறைந்திருந்து கண்காணிப்போம். காவல் செய்வோம். நேற்றிரவின் ஆரம்பத்தில் நீங்களும் நாகதேவியும்
உங்கள் மாளிகையிலிருந்து வெளி வந்ததும் உங்களை எதிர் கொண்டோம். உங்கள் கட்டளைப்படி குருநாதரைக் கட்டி இங்கு கொண்டு வந்தோம். பிறகு அடுத்து வேறிருவர் நாகதேவியைப்போல இருந்த பெண்ணை மயக்கத்துடன்
தூக்கி வந்தார்கள். அவர்களை விசாரித்ததில் அதுவும் தலைவியின் ஆணைதான் என்றார்கள். இப்பொழுது கூட நேற்றிரவு நிகழ்ச்சிகளை நினைத்தால் ஒரே குழப்பமாயிருக்கின்றன” என்று.
அவன் விளக்கத்தைக் கேட்டதும் நடந்த தெல்லாம் மிகத் தெளிவாயிற்று உபேந்திரனுக்கு. நாகதேவியை மயக்கத் துளிகளால் மயக்கித் தனது அறையில் விட்டு மருதியை நாகதேவியாக்கி விஹாரத்துக்கு அழைத்து வந்ததும், இடையில்
வந்த நாகர்களைக் குருநாதரைக் கட்டிச் செல்ல மருதி பணித்ததும் அம்மாதிரியே அவர்கள் செய்து முடித்ததையும் புரிந்து கொண்ட உபேந்திரன் உண்மை நாகதேவி சீக்கிரமாகவே மயக்கத்தி லிருந்து விழித்துக் கொண்டிருக்க
வேண்டுமென்றும் அவளும் வெளி வந்து வேறு இரு நாகர்களுடன் விஹாரத்துக்கு வந்து மண்டபத் தூணில் ஒலி எழுப்பித் தன்னை சார்பு மணையிலிருந்து மண்டப முன்பகுதிக்கு வரவழைத்து அதே சமயத்தில் மருதியைத் தூக்கிச்
செல்ல உத்தரவிட்டிருக்க வேண்டுமென்றும் பிறகு மருதியின் இடத்தில் அவள் படுத்திருக்க வேண்டுமென்றும் தீர்மானித்தான். நாகதேவியின் அபாரமான புத்தி சூட்சுமத்தையும், நடவடிக்கைகளைச் சிறப்பாக நிறை வேற்றும்
சாமர்த்தியத்தையும் வியந்தான். நாகதேவி மட்டும் கொடியவளாக இல்லாதிருந்து நாகப்பட்டினத்தைக் கைப்பற்றும் எண்ணம் இல்லா தவளாயுமிருந்தால் நாகதேவிகூட தனது உள்ளத்தைக் கொள்ளை கொண் டிருப்பாள் என்று
நினைக்கவும் செய்தான்.
அந்த நினைப்புடன் சிறிது நேரம் மரக்கலத்தை அளப்பவன் போல் நடைபோட்ட உபேந்திரன் அந்த மரக்கலத்தின் அமைப்பைக் கவனிக்கலானான். அது மிகவும் திடமுள்ள போர்க்கலமென்பது சந்தேகமறத் தெரிந்தது, அவனுக்கு.
அதன் பக்கப் பலகைகளின் கனம் அதிகமாய் இருந்தாலும் மற்ற இடங்கள் மெல்லியதாயிருந்தனவாகையால் கீழ்த்தளத்தின் தளம் அதன் வேகத்தைத் தடைப்படுத்த முடியாதென்பதை உணர்ந்து கொண்டே உபேந்திரன் பக்கப் பலகையின் ஒரு
பகுதியிலிருந்து தலையை நீட்டி அடிப் பலகையை நோக்கினான். அதனுடைய துவாரத்திலிருந்து சுமார் எண்பது பெரும் துடுப்புகள் துழாவப்படுவதைப் பார்த்த உபேந்திரன் “அவர்களை நான் பார்க்க முடிந்தால்…” என்று
எண்ணினான்.
அவன் அப்படி எண்ணி ஏதோ மனத்தில் திட்டம் போட்டிருந்த சமயத்தில் அவன் பின்னால் மூன்று முறை சிரிப்பு கேட்கவே சட்டென்று திரும்பினான். நாகதேவி அவனுக்குப் பின்னால் புன்முறுவல் செய்து கொண்டு நின்றிருந்தாள்.
அவள் கண்களில் விஷமம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. “படைத்தலைவரே! நீங்கள் பார்த்தது எண்பது துடுப்புகள் தான். இன்னொரு பக்கம் எண்பது மட்டும் இருக்குமென்றால் நூற்று அறுபது அடிமைகள் மட்டும்
இருப்பார்களென்று நீங்கள் கணக்குப் போடலாம். ஆனால் தவறு படைத்தலைவரே, உண்மை தெரிய வேண்டுமானால் கீழ்த்தளத்துக்கு வாரும் பார்க்கலாம்” என்றாள் நாக தேவி விஷமமும் ஏளனமும் நிரம்பிய குரலில்.
உபேந்திரன் கண்கள் அவளை சுட்டு விடுவதைப் போல் பார்த்தன. “உன்னிடம் எத்தனை அடிமைகளிருந்தால் எனக்கென்ன?” என்று வினவினான்.
“உங்களுக்குத் தெரிந்து கொள்ள ஆவலிருந்ததால் சொன்னேன். ஆவலில்லாவிட்டால் பக்கப் பலகையில் குனிந்து கீழ்த்தளத் துடுப்புகளை எண்ணுவானேன்?” என்று நாகதேவி வினவியதல்லாமல் அவன் பக்கத்தில் வந்து நின்றும்
கொண்டாள். தளத்திலிருந்த எல்லா மாலுமிகளும் பார்க்கும்படியாக அவன் தோள் மீது கையையும் போட்டுக் கொண்டாள்.
அந்தக் கையை அவன் அகற்றவில்லை. மரம்போல் நின்றிருந்தான். அவள் அவன் தோளைச் சிறிது அழுத்தி, “வாருங்கள், இந்த மரக்கலம் முழுவதையும் சரியாகப் பாருங்கள். உங்களிடம் எதையும் ரகசியமாக வைத்திருக்க எனக்கு
இஷ்டமில்லை” என்று கூறி அவனை லேசாக இழுத்தாள். உபேத்திரன் அவளுடன் மெல்ல நடந்தான். நாகதேவி அவனை அழைத்துக் கொண்டு தளத்திலிருந்து கீழே செல்லும் படிகளில் இறங்கினாள். அங்கிருந்து அந்தத் தளத்துக்கும்
அடியில் ஓடிய படிகளில் இறங்கியதும் துடுப்புகள் துழா வப்படும் இடத்துக்கு வந்து சேர்ந்தாள்.
அவளுக்குப் பின்னால் இறங்கிய உபேந்திரன் அந்த நீண்ட அடித்தளத்தைக் கண்டு பெரு வியப்படைந்தான். சுமார் முன்னூறு துடுப்புத் துழாவுவோர் வேகமாகத் தங்கள் கடமைகளைச் செய்து கொண்டிருந்தார் கள். சில
துடுப்புகளை இருவர் இயக்கினர். சிலவற்றை ஒவ் வொருவரே இயக்கினர். பலதரப்பட்ட கனமும் நீளமுமுள்ள துடுப்புகளைப் பார்த்த உபேந்திரன் அந்த மரக்கலத்தின் வேகத்தைப் பிடிப்பது சாதாரண கப்பல்களால் முடியாதென்பதை
உணர்ந்து கொண்டான். தவிர வேறொன்றையும் உணர்ந்தான். அவன் சித்தத்தில் நாகதேவியைப் பற்றிய மதிப்பு மிக அதிகமாயிற்று. தான் நின்றிருந்த முகப்புப் படியிலிருந்து கீழே இறங்கி துடுப்பு தள்ளுவோரின் இடையே நாகதேவியும்
நடந்து சென்றாள். ஒவ்வொரு துடுப்பு தள்ளும் மாலுமியும் அவளை அன்புடன் நோக்கினார் கள். அவள் தங்களிடை நடக்க முற்பட்டதும் அத்தனை மாலுமிகளும் மகிழ்ச்சி கோஷம் கிளப்பினார்கள். சிலர் கையைப் பிடித்து
முத்தமிட்டார்கள். சிலர் தலைகளில் அவள் கையை வைத்து அழுத்தியபோது அவர்கள் பெரிதாக நகைத்தார்கள். அந்த நகைப்பில் நன்றி உணர்ச்சி பெரிதாக இருந்ததை உபேந்திரன் கவனித்தான்.
இந்த ஒவ்வொரு மாலுமியும் அவளுக்காக உயிர்விடச் சித்தமாய் இருக்கிறான் என்பதை உபேந்திரன் உணர்ந்து கொண்டான். அவர்கள் உண்மையில் அடிமைகள் அல்ல என்பதும் புரிந்தது சோழர் படைத் தலைவனுக்கு. அதனால்
சோகமடைந்த முகத்துடன் நின்றிருந்த உபேந்திரனை சுட்டிக்காட்டிய நாகதேவி அவர்களை நோக்கிக் கேட்டாள், “ இவரை உங்களுக்குத் தலைவராக நியமிக்கட்டுமா?” என்று.
மாலுமிகள் துடுப்புகளைத் துழாவுவதைச் சட்டென்று நிறுத்தி வேண்டாம்’ என்பதற்கு அறிகுறியாக தலையை வேகமாக அசைத்தார்கள். அதனால் புன் முறுவல் கொண்ட நாகதேவி, உபேந்திரனை அழைத்துக்கொண்டு
இடைத்தளத்திலிருந்த தனது அறைக்கு வந்து பழையபடி தனது மஞ்சத்தில் ஒருக்களித்துச் சாய்ந்து கொண்டாள். அந்த நிலையில் புன்முறுவல் செய்து வினவினாள். “படைத்தலைவரே! இந்த மரக் கலத்தின் மாலுமிகள் யாரையும் நீங்கள்
உங்கள் வசப்படுத்தமுடியாது. நான் நினைத்தால் இந்த மரக்கலத்தை உங்களுக்கு இரும்புக் கிராதிகளுள்ள சிறைச்சாலையாக்கவும் முடியும். சொர்க்கமாகவும் ஆக்க முடியும். உங்களுக்குத் தேவை எது?” என்று வினவினாள். “அதைத்
தீர்மானிக்க உங்களுக்கு மூன்று நாள் அவகாசம் தருகிறேன். அதற்குள் நீங்கள் சரியான முடிவுக்கு வராவிட்டால் மருதி இப்பொழுதுள்ள நிலையில் இருக்கமாட்டாள்” என்றும் சொன்னாள் நாகதேவி.
அவள் சொற்கள் விஷமென உதிர்ந்தன. அவற்றை அடுத்து அவள் மும்முறை நகைத்தாள். மருதி பேராபத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை சந்தேகமறப் புரிந்து கொண்டான் உபேந்திரன்.

Previous articleNagadevi Ch 15 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 17 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here