Home Historical Novel Nagadevi Ch 17 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 17 | Nagadevi Sandilyan | TamilNovel.in

87
0
Nagadevi Ch 17 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 17 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 17 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 17. அடைத்த கதவு! அணைத்த கைகள்!

Nagadevi Ch 17 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி அளித்த மூன்று நாள்களுக்குள் தான் ஏதாவது திட்டமான முடிவுக்கு வராவிட்டால் மருதியின் நிலை பேராபத்தில் வந்து முடியுமென்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரிந்துகொண்ட உபேந்திரன் அன்று முழுவதும்
தீர்க்காலோசனையில் இருந்தான். எந்தவிதமாக நோக்கினாலும் தானோ மருதியோ நாகதேவியின் விஷப்பிடியிலிருந்து தப்புவது குதிரைக் கொம்பு தான் என்பது தெளிவாகப் புலப்பட்டது சோழர் படைத்தலைவன் சித்தத்துக்கு.
நாகதேவி தனது அறையில் பஞ்சணையில் சயனித்தவண்ணம் கொடுத்த மூன்று நாள் தவணையை எண்ணிப் பார்த்தபோது சினம் முதலில் அவன் சித்தத்தை ஆட்கொண்டாலும், சினத் தால் எதையும் சாதிக்க முடியா தென்ற உணர்வால்
மெள்ள தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அன்றைய தினத்தை சிந்தனையிலேயே கழித்தான். அதிகப்படியான சிந்தனையால் ஏற்பட்ட குழப்பத்தை மாற்றிக் கொள்ள அடிக்கடி மேல் தளத்துக்குச் சென்று தமிழ கத்தின் கரை இருந்த
திசையை நோக்கிக் கொண்டு காலத்தைக் கழித்தான்.
அன்று சூரியன் இருந்த நிலையைக் கண்டு நாகர்களின் மரக்கலம் நேராக வடக்கு நோக்கிச் செல்வதைக் கண்டு ‘இவர்கள் சாவகத்திற்குச் செல்லவில்லை. ஏதோ எனக்கு ஜாடை காட்டுவதற்காகப் பாய் விரித்து ஒடுகிறார்கள்’ என்று
தனக்குள் சொல்லிக் கொண்டான், அன்று காற்றும் அனுகூலமாயிருந்ததால் பாய்கள் விரித்து விடப்பட்டு துடுப்புகளைத் துழாவுவதும் நிறுத்தப்பட்டதன் விளைவாகக் கீழ்த்தரை மாலுமிகளும் மேல்தளத்துக்கு வந்து உலாவ
முற்பட்டார்கள். அவர்கள் உலாவிய முறையிலிருந்தும் அவர்கள் தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் கூச்சல் போட்டுக் கொம்மாள மடித்ததையும் கண்ட உபேந்திரன் நாகதேவி அவர்களை அடிமைகள் போல் நடத்த
வில்லையென்பதையும் எல்லா உரிமைகளையும் அவர்களுக்கு அளித்திருக்கிறாள் என்பதையும் உபேந்திரன் புரிந்து கொண்டான். பகலில் அந்த மரக்கலத்தில் காணப்பட்ட கோலாகலம் மாலையில் அதிகமாகி இரவில் உச்ச ஸ்தாயிக்குச்
சென்றது.
அன்று மாலைக் காட்சி மிக அற்புதமாயிருந்தது. செவ்விய கிரணங்களுடன் மறைய முற்பட்ட சூரியன் அந்த மரக்கலத்துக்குச் செஞ்சாந்து பூசினான். மேலே விரிக்கப்பட்ட பாய்களும் சாவகத்தின் கொடியுங்கூட அந்தச் செந்நிறக்
கிரணங்களில் மூழ்கிப் பிரமிக்கும்படி யான அழகைப் பெற்றிருந்தன. எங்கிருந்தோ பறந்து வந்த கடல் பறவைகள் பல பாய்மரங்களின் குறுக்குக் கயிறுகளின் மீது உட்கார்ந்து கூவிய இன்பமற்ற கூச்ச லும் காதுக்கு இனிமையாகவே
தோன்றியது.
இந்தக் காட்சியைக் கண்டு கொண்டே தளத்தில் நடந்த உபேந்திரன் மெள்ள அந்த நாவாயின் பக்கப் பலகையில் சாய்ந்தவண்ணம் சூரியாஸ்தமனத்தை நோக்கினான். பிறகு கேலே இருந்த ஆகாயத்தையும் தூரத்தே கண்ணுக்குப்
புலப்படாத கூரையையும் இணைத்து கரை சுமார் எத்தனை தூரத்திலிருக்கும் என்பதை நிர்ணயிக்க முயன்றான். அப்படி அவன் எண் ணங்களைப் பலபடி ஓடவிட்டுக் கொண்டு நின்ற சமயத்தில் அவன் பக்கத்தில் ஒரு பூவுடல்
நின்றது, அவன் உடலுடன் உராய்ந்தது.
அது நாகதேவியாகத்தான் இருக்க முடியும் என்ற சிந்தனையால் அவன் திரும்பிப் பார்க் காதிருந்த தருணத்தில் பக்கத்தில் நின்றவள் சோகப் பெருமூச்சும் விட்டாள். அதனால் சட்டென்று திரும்பிய உபேந்திரன் தனது பக்கத்தில் நின்ற
பெண்ணைத் திரும்பிப் பார்த்து, “யார்? மருதியா?” என்று வியக்கும் குரலில் வினவினான்.
பதிலுக்கு மீண்டுமொரு பெருமூச்சு வந்தது அவளிடமிருந்து. “ஏன்? அதற்குள் மறந்துவிட்டீர்களா?” என்ற சொற்களும் சோக நிலையிலேயே உதிர்ந்தன.
அவள் மருதிதான், கிரீடத்தைக் கழற்றிவிட்ட நாகதேவி அல்லவென்பதை தீர்மானித்துக் கொள்ள அவளை நன்றாக மீண்டும் உற்று நோக்கிய உபேந் திரன், “ஆம். நீ மருதிதான்” என்று சொன்னான்.
“அதிலும் சந்தேகமா?’ என்று அவள் மீண்டும் கேட்டாள்.
“சந்தேகத்துக்குக் காரணங்கள் இல்லையா மருதி?” என்று வினவினான் சோழர் படைத்தலைவன்.
“இருக்கின்றன. நானும் அவளும் ஒரே அச்சில் வார்த்தவர்கள் போல் இருக்கிறோம்” என்ற மருதி மீண்டும் பெருமூச்சு விட்டாள்.
உபேந்திரனுக்கு அப்பொழுதும் அவள் தான் மருதி யென்ற நிச்சயமில்லாததால், இதுவும் நாகதேவியின் நாடகங்களில் ஒன்றாயிருந்தால் என்ன செய்வது’ என்று எண்ணி, “மருதி! என்னை உன் கண்களால் உற்றுப் பார்” என்று கூறி
அவளைத் திரும்பி நோக்கினான்.
மருதி தனது இரு விழிகளையும் அவன் விழிகளுடன் கலந்தாள். நீண்டநேரம் அந்த விழிகளைத் தன் விழிகளால் கவ்வி நின்ற உபேந்திரன், “நீ மருதிதான். சந்தேகமிலலை. உன் கண்களில் அவள் விஷப்பார்வை இல்லை” என்று கூறிவிட்டு,
“உன்னைத் தளத்துக்கு வர நாகதேவி அனுமதித்தாளா?” என்று வினவினான்.
“எனக்கு எந்தவித தடையும் அவள் விதிக்க வில்லை. நான் சுதந்தரமாக உலாவலாம், இருப்பினும் என் மனத்தில் ஏதோ ஒரு பயம் இருக்கிறது. அவள் கண்கள் சதா என்னுடைய ஒவ்வோர் அசைவையும் கவனிப்பதாக ஒரு பிரமை
இருக்கிறது எனக்கு” என்று கூறினாள் மருதி.
மாலைக் கதிரவன் மெள்ள மெள்ள கடல் நீருக்குள் மூழ்கிடவே, வெண்மதியும் மெள்ள வானத்தில் தோன்றினான். பிறைகள் ஒன்பதே ஓடியிருந்ததால் அரையே அரைக்கால்வாசி மட்டும் தோன்றிய வெண் மதியின் நிலவு
சுமாராகத்தானிருந்தது. சுமாராக இருந்த காரணத்தினாலேயே அதன் பந்தமும் மயக்கத்தைத் தந்தது.
மந்த மதியின் கிரணங்களில் குளித்து நின்ற மருதி மிக அழகாகக் காணப்பட்டாள் அன்றிரவு. அவள் முகங்கூட அந்த மந்த மதியின் கிரணங்களுக்கு அசாத்திய மெருகு கூட்டியது. காற்றில் அலைந்த அவள் தலைக்குழலின் முன்னுச்சி
மயிர்கள் கூட வெள்ளிக்கிரணங்களின் ஒளி பெற்று பளபளத்தன. அவள் கண்கள் முன்னை விட அதிகமாக ஜொலித்தன.
அவளின் செவ்விய இதழ்களுக்கு வெள்ளிக் கிரணங்கள் பூசிய சாந்து அவற்றை மாணிக்கக் கட்டிகளாக அடித்திருந்தன. அவள் அழகையெல்லாம் அள்ளிப் பருகிய உபேந்திரன் அவளைத் தன்னுடன் குனியும்படியும் கூறிப் பக்கப்
பலகையில் சாய்ந்தான். அவளும் சாயவே அக்கம் பக்கத்தில் நின்று உராய்ந்து கொண்டு கீழ்க் கடல் நீரை நோக்கியவண்ணம் இருவரும் உரையாடத் தொடங்கினார்கள்.
“மருதி! நாகதேவியை அற்பமாக நினைக்காதே! நம்மை சுதந்தரமாக அவள் உலாவவிட்டிருப்பதிலும் ஏதோ மர்மமிருக்கிறது; நமக்குப் புரியாத திட்டமிருக்கிறது” என்று எச்சரித்தான் உபேந்திரன்.
“ஆம். அது எனக்குத் தெரிகிறது” என்றாள் மருதி.
“ஆகவே அவள் அளிக்கும் சுதந்தரத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதே. உன் அறையிலேயே இரு. தேவையானால் நானே உன்னை வந்து சந்திக்கிறேன்” என்று யோசனை சொன்னான் படைத்தலைவன்.
புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையசைத்த மருதி, “ஆமாம், அவள் அறியாமல் நீங்கள் எப்படிச் சந்திக்க முடியும்?” என்று கேட்டாள்.
“எப்படியென்று சொல்ல முடியாது மருதி. ஆனால் உன்னைப் பார்க்காதிருக்கவும் என்னால் முடியாதே” என்று கூறிய படைத்தலைவன் தனது முழங்கையை மெள்ள பக்கவாட்டில் நகர்த்தினான்.
அவளுடைய எழுச்சி அது பட்டதாலேயே உணர்ச்சி வசப்பட்டதால் மருதி நாசியிலிருந்து உணர்ச்சிப் பெருமூச்சொன்றை வெளியிட்டாள். தவிர சிறிது நகர்ந்து அவன் முழங்கை தன் மீது அழுந்தவும் உதவினாள்.
லேசாகப்பட்ட அழகுதான். இருப்பினும் அதனால் ஏற்பட்ட தனது மன நெகிழ்ச்சி அபரிமிதமாயிருந்ததை எண்ணிய உபேந்திரன் பெண் சிருஷ்டியின் சக்தியை எண்ணி வியந்தான். “இதனால் தான் உலகத்தில் பல நிகழ்ச்சிகள், நல்லவை,
பொல்லாதவை எல்லாமே ஏற்படுகின்றன” என்று தனக்குள் சொல்லிக் கொண்டிருக்கையில் அவள் மலர்ப்பா தமொன்று அவன் பாதத்தின் மீது மெதுவாக ஏறி மிதிக்கவே உணர்ச்சிகள் நிலைகுலைய நின்ற உபேந்திரன் எதற்கும் துணிந்த
உணர்ச்சியுடன் அவள் உடலுடன் தனது உடலை நன்றாகவே இழையவிட்டான்.
இத்தனைக்கும் அவர்கள் இருவரும் சாதாரணமாகவே நின்றிருந்தாகத் தோன்றியதால் தளத்தில் அங்குமிங்கும் நடமாடிய மாலுமிகள் அவர்களைக் கவனித்தார்களில்லை. கீழே துடுப்புத் துழாவிய முன்னூறு மாலுமிகளும் மேல் தளத்து
மாலுமிகளும் கூட்டமாக நின்றும் நடந்து கொண்டுமிருந்ததால் அந்தக் கும்பலில் இந்த இருவரையும் கவனிப்பாருமில்லை. தவிர நடமாடிய மாலுமிகள் ஓரிருவர் மருதியின் மீதும் படைத்தலைவன் மீதும் இடித்துக்கொண்டு சென்றதை
இருவருமே கவனிக்கவில்லையாதலால் மற்றவர்களும் அவர்களைக் கவனிக்காமல் நடமாடிக் கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் குருநாதரோ நாகதேவியோ தளத்துக்கு வராதது உபேந்திரன் சந்தேகத்தைக் கிளறவே அவன் கேட்டான்.
“மருதி! இத்தனை அமர்க் களத்திலும் நாகதேவி இங்கு தலை காட்டாதது உனக்கு விசித்திரமாயில்லையா?” என்று.
“ஆம். விசித்திரமாகத் தானிருக்கிறது. ஆனால் அவள் போக்கே விசித்திரந்தானே” என்றான் மருதி.
“இரவு ஏறிக் கொண்டிருக்கிறது மருதி” என்று சுட்டிக் காட்டினான் உபேந்திரன்.
“ஆம்.”
“நீ உன் அறைக்குப் போ.”
“நீங்கள்?”
“நாகதேவியைப் பார்க்கப் போகிறேன் “
மருதி உடனே தன் பெண்மைக் குணத்தைக் காட்டினாள். சட்டென்று திரும்பி, “எதற்கோ?” என்று வினவினாள்.
“அவளைச் சந்தேகப்படும்படி விடக்கூடாது” என்றான் உபேந்திரன்.
“எப்படி அவள் சந்தேகத்தைத் தீர்க்கப் போகி றீர்கள்?” மருதியின் குரலில் பொறாமை தெரிந்தது.
“வழி இருக்கிறது.”
“வழியை என்னிடம் சொல்லலாமா?”
“சொல்லலாம். ஆனால் இப்பொழுதல்ல.”
“வேறு எப்பொழுது?”
உபேந்திரன் சொன்னான்: “பக்கப் பலகையில் சாய்ந்து நன்றாகக் குனி” என்று.
அவள் அப்படியே குனிய மருதி” என்று மெள்ள அழைத்தான் உபேந்திரன்.
“உம்.”
“இன்றிரவு நள்ளிரவுக்குப் பிறகு மூன்றாம் ஜாமத்தில்…”
“உம்…”
“உன் அறைக்கு வருகிறேன்.”
“எப்படி முடியும்?”
“எப்படியோ வருகிறேன். நீ கதவைத் தாளிடாமல் வைத்திரு.”
மருதியின் கண்களில் ஆசை தெரிந்தது. “வந்து…?” என்று துஷ்டத்தனமாக வினவினாள்.
“வந்து உனக்குத் தகுந்த புத்தி கற்பிக்கிறேன்” என்ற உபேந்திரன் அவளை விட்டுச் சிறிது நகர்ந்தான்.
அவளும் ஆகாயத்தை நோக்கிவிட்டு, “படைத்தலைவரே, நான் வருகிறேன்” என்று இரைந்து கூறி விட்டுச் சென்றாள்.
அன்றிரவு எட்டு நாழிகைக்குப் பிறகு மாலுமிகன் தவிர மற்ற எல்லோருக்கும் நாகதேவியின் அறையிலேயே உணவு படைக்கப்பட்டது. நாகதேவி என்ன காரணத்தினாலோ அன்று மிகுந்த உற்சாகத்தோடு இருந்தாள். மிகவும்
கலகலப்பாகப் பேசினாள். பிறகு அவரவர் அறைக்குச் சென்றதும் தானும் பஞ்சணையில் படுத்தாள். அவள் படுத்ததை கதவிடுக்கின் மூலம் கவனித்த உபேந்திரனும் தனது அறைக்குச் சென்று சயனித்தான். உறக்கம் வராமல் நாழிகைகளை

.
எண்ணிக் கொண்டிருந்தான். தனது வேட்கைக்குத் தகுந்தபடி நாழிகைகள் நகராததால் அவற்றைச் சபித்தான்.
இரண்டொரு தடவை சாளரத்தின் மூலமாக விண்மீன்களைப் பார்த்து நாழிகைகளைக் கணக்குப் போட்டான் மூன்றாம் ஜாமம் புகுந்ததும் மெதுவாக அறையை விட்டுக் கிளம்பி மருதியின் அறையை நோக்கிச் சென்று கதவைத் திறக்க
முயன்றான். கதவு அடைத்திருந்தது. இருமுறை மெதுவாகத் தட்டினான். மருதி எழுந்து வந்து ஓசைப்படாமல் கதவைத் திறந்தாள். அவளையும் தள்ளிக்கொண்டு அறைக்குள் புகுந்தான்.
“உன்னை யார் கதவைத் தாளிடச் சொன்னது?’, என்று எரிந்து விழுந்தான். அந்தக் கோபத்தை அவள் கைகளின் அணைப்பு அணைத்துவிட்டது.

Previous articleNagadevi Ch 16 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 18 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here