Home Historical Novel Nagadevi Ch 18 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 18 | Nagadevi Sandilyan | TamilNovel.in

104
0
Nagadevi Ch 18 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 18 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 18 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 18. வலையில் சிக்குண்ட விலங்கு

Nagadevi Ch 18 | Nagadevi Sandilyan | TamilNovel.in

கதவை அவன் உத்தரவுக்கு மாறாக அடைத்ததால் ஏற்பட்ட அவன் சீற்றத்தைத் தனது மலர்க்கைகளைக் கொண்டு அவள் அணைத்துத் தீர்த்துவிட்டாலுங்கூட அவன் அதைப்பற்றியே பேச்சுக் கொடுத்தான், அவள் கைகள் அவன்
இடுப்பைச் சுற்றி வளைத்ததை நீக்கி அவற்றைத் தன் மார்புக்காக ஏற்றிவைத்துக் கொண்டு அவள் இடையில் தனது இரு கைகளையும் கொடுத்து அவள் பூவுடலை வளைத்து இறுக்கினான். அந்த நிலையில் “மருதி…!” என்று மெல்ல
அழைக்கவும் செய்தான்.
“உம்…!”‘ இந்த ஒரு சத்தந்தான் அவளிடமிருந்து வந்தது. “கதவை ஏன் அடைத்தாய்?” என்று அவன் வினவினான். அவன் கைகள் அவளை மேலும் இறுக்கின.
“பயமாயிருந்தது” அவள் அவன் பிடிப்பில் துவண்டாள்.
“என்ன பயம் நானிருக்கும்போது?” அவன் ஒரு கை எழுந்த அவள் முதுகை அணைத்த நிலையிலேயே தடவியது.
“வேறு யாராவது கதவைத் திறந்து…” வாசகத்தை அவள் முடிக்கவில்லை. ஆனால் அவள் தலை அவன் மார்பு மீது படுத்தது. கால்கள் அவனை நோக்கி அழுந்தின.
“யார் அப்படிக் கதவை திறப்பார்கள்? என்ன தான் செய்வார்கள்?” என்று அவன் கேட்டான். பயத்தால் எழுந்து தன் மீது அழுந்திக் கொண்டிருந்த மார்பின் மீது தனது கையை வைத்து அவளுக்கு அமைதியளிக்க முயன்றான். அவன்
கைப்பட்டது, அந்த மார்புக்கு அமைதியளிக்கவில்லை! சீற்றத்தையே அளித்ததால் அவை மேலும் அதிகமாக எழுந்து தாழ்ந்தன. அந்த எழுச்சியும் தாழ்ச்சியும் அழுத்தமும் பிரிவும் அவன் உணர்ச்சிகளைக் கட்டுக்கடங்காமல் செய்யவே
அவன் கதவைத் தாழிட்டுவிட்டு அவளை அப்படியே நகர்த்திக் கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைத்துத் தானும் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.
பஞ்சணையில் அவள் லேசாகப் புரண்டாள். அவன் கைகளிலொன்றை எடுத்துத் தனது மார்பின் மீது வைத்துக் கொண்டாள். “தலைவரே!” என்று மெதுவாக அழைத்தாள்.
அவன் அவள் மார்பிலிருந்த கையை எடுக்காமலே “தலைவரா! இம்…என்ன புதுப்பட்டம்?” என்று கேட்டான்.
“காதல் பட்டம்!” என்று அவள் பதில் சொன்னாள்.
காதல் பட்டமா?” வியப்புடன் வினவினான் அவன்.
“நமது தமிழ்க் கவிஞர்கள் அளித்த பட்டப் பெயர்… காதலைப் பற்றிப் பேசும்போதெல்லாம் தலைவன் தலைவி என்று பேசுவார்கள்.”
“அதைச் சொல்கிறாயா?” என்று விசாரித்த அவன் கட்டிலின் முகப்பிலிருந்து சிறிது நகர்ந்து அவளை நோக்கிச் சாய்ந்து, அடுத்து தலைவன் என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினான்.
அவள் ஒருகணம் மௌனம் சாதித்தாள். பிறகு “அதை யாரும் இதுவரை யாருக்கும் சொல்லிக் கொடுத்ததில்லை” என்று சொல்லிவிட்டு அவன் கழுத்தில் தனது இரு கைகளையும் போட்டுப் பின்னினாள்.
அவன் மெல்ல நகைத்தான். “சொல்லிக் கொடுப்பதில்லையென்று சொல்லிவிட்டுச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டாயே” என்று கூறினான் நகைப்பின் ஊடே.
அவள் அவனைப் பார்க்க மறுத்தாள். தனது தலையை ஒருபுறம் திருப்பிக்கொண்டாள். வளைத்த அவன் கழுத்தை இழுத்து அவன் தலையைத் தனது மார்பின்மீது புதைத்துக் கொண்டாள். அதன் விளை வாக அவன் கைகள் அவள்
முதுகில் ஊர்ந்தன. அவள் பூவுடலை அப்படியே தூக்கிக் கொண்டன. அவன் முகம் மார்பில் அழுந்திப் புரண்டது. அந்த நிலையில் அவன் மெல்ல “மருதி…” என்று அழைத்தான்.
“உம்…”
“தலையைத் திருப்பு.”
“எதற்கு?”
“திருப்புச் சொல்கிறேன்.”
“பேசிக் காலத்தைக் கழிக்காதீர்கள்.”
இதைச் சொன்னதும் அவள் முகத்தை அவனே திருப்பினான் தனது கையொன்றை விடுவித்துக் கொண்டு. கமலக் கண்கள் மூடிக் கிடந்தன. அவன் மீண்டும் சொன்னான் அவள் காதுக் கருகில் தனது மூகத்தைக் கொண்டுபோய்,
“மருதி… கண்களைத் திற” என்று.
“மாட்டேன்” என்றாள் மருதி.
“ஏன் மருதி?”
“எனக்கு வெட்கமாய் இருக்கிறது.”
“வெட்கமென்ன இதில்?”
“நல்ல கேள்வி”
“மருதி!…”
“ஏன்?”
“இப்பொழுது வெட்கத்தை மீறும் காலம் வந்து விட்டது.”
அவளிடமிருந்து பதில் இல்லை. “மருதி” என்று மீண்டும் அழைத்தான் அவன், அதற்கும் பதிலில்லை. “ஏன் பேசமாட்டாயா?” என்று அவன் அதட்டினான். அதட்டியதோடு நில்லாமல் கையை அவள் இடைக்கும் கீழே கொண்டு போனான்.
“உம்?” அவளிடமிருந்து எச்சரிக்கைக் குரல் வந்தது. அதனால் புன்முறுவல் கொண்ட உபேந்திரன், “என்ன இருந்தாலும் சமயம் வரும்போது எந்தப் பெண்ணும் தனது பண்பாட்டைக் காட்டுகிறாள்” என்று சிலாகித்தான்.
“பேசியது போதுமா?” அவள் எரிச்சலைக் காட்டினாள்.
“இதில் போதும் என்பதில்லை மருதி” என்றான் உபேந்திரன்.
“பேச்சு அவசியமில்லாத சமயமும் உண்டு “ என்றாள் அவள்.
“ஆம் ஆம்” என்ற உபேந்திரன் பஞ்சணையில் அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டு கப்பலின் தளத்துப் பலகையை நோக்கினான். நோக்கியவன் கண்கள் மலைத்து நின்றன. அந்தப் பலகையில் நாக தேவியின் உருவம்
தீட்டப்பட்டிருந்தது. மோகனாகாரமான உருவம், ‘அழகில் மருதிக்கு அவன் எந்தவிதத்திலும் குறைந்தவள் இல்லை’ என்று தீர்மானித்தான். இந்த எண்ணங்களில் ஈடுபட்டிருந்த உபேந்திரன் மீது தனது கையொன்றைப் போட்டாள் மருதி!
அத்துடன் வினவினாள் “ஏன் உயரப் பார்க்கிறீர்கள்?” என்று!
“நீயும் பார் தெரியும்” என்றான் உபேந்திரன்.
அவள் பார்க்கவில்லை. “அவளையே தினம் பார்க்கிறேன். அவள் சித்திரத்தைப் பார்ப்பானேன்?” என்று அவள் கேட்டாள்.
“அவளைப் பார்த்தாலும் அவள் சித்திரத்தைப் பார்த்தாலும் என் உணர்ச்சிகள் தடுமாறுகின்றன மருதி” என்று உபேந்திரன் சொன்னான். ஒருக்களித்து அவள் உடலை அணைக்கவும் செய்தான்.
“அவளைப் பார்த்தால் உங்களுக்கு நிலை கொள்ளவில்லை?” என்று கேட்டு சற்று அதிகமாக நெருங்கினாள் மருதி. அவள் கேள்வியில் வெறுப்புக்குப் பதில் ஆனந்தம் இருந்தது.
அதைக் கவனித்த உபேந்திரன் சிந்தனையில் இறங்கினான். “மருதி! அவளிடம் உனக்குப் பொறாமையில்லையா?” என்று வினவினான். அவன் குரலில் சந்தேகம் ஒலித்தது.
“இல்லை “ என்றாள் அவள் திட்டமாக.
“பெண் குணத்துக்கு மாறுபட்டது நீ சொல்லுவது.”
“நீங்கள் எனக்குச் சொந்தமாயிருக்கும் வரையில் அவளிடம் பொறாமை எதற்கு எனக்கு?”
இந்தக் கேள்வி உபேந்திரனுக்கு நியாயமாகவே பட்டாலும் அவன் மனத்தில் சந்தேகம் அடியோடு நீங்காததால் அவன் எந்தச் செயலிலும் இறங்காமல் மரக்கட்டைபோல் அவள் பக்கத்தில் கிடந்தான், அவள் அவனைத் திருப்பி இழுக்க
முயன்றது பலிக்கவில்லை. மேட்டு வளையில் தீட்டப்பட்டிருந்த சித்திரத்தை மேலும் ஆராய்ந்தான். அதன் வசீகர சக்தி அதிகமாயிருந்தாலும் அந்தக் கண்கள் மட்டும் மருதியின் கண் களிலிருந்து சிறிது மாறுபட்டிருந்ததைக் கவளித்தான்.
திடீரென எதையோ நினைத்துக் கொண்டு திரும்பிப் படுத்து மூடிக்கிடந்த அவள் கண்களைத் தனது கை விரல்களால் திறக்க முயன்றான். திறக்க அவள் விட வில்லை. ஓர் இரப்பையைத் திறந்ததும் மற்றொன்றை மூடிக்கொண்டாள்.
“கண் களைத் திற மருதி” என்று அவளை மிரட்டினான் உபேந்திரன்.
“என்னை யாராலும் பலவந்தப்படுத்த முடியாது” என்று கண்களை மூடியவண்ணமே சொன்ன அவள் பரீட்சைக்கோ சந்தேகத்துக்கோ சமயமல்ல” என்றும் கூறினாள்.
“பரீட்சை வேண்டாமோ?”‘ உக்கிரத்துடன் கேட்டான் அவன்.
“வேண்டாம்.”
“உண்மைதானே!”
“முற்றும் உண்மை !”
“அப்படியானால் நான் வருகிறேன்” என்று கூறிய அவன் கட்டிலில் எழுந்து உட் கார்ந்தான்.
“போகாதீர்கள். இதைவிட்டால் இன்னொரு சமயம் வராது!” என்றாள் மருதி.
“வராவிட்டால் போகிறது. முதலில் நான் நாகதேவி யைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கூறிக் கட்டிலிலிருந்து இறங்கவும் முற்பட்டான்.
“வேண்டாம். போகாதீர்கள்” என்று கெஞ்சிப்படுத்தவண்ணம் அவனை நோக்கித் தனது கைகளை உயர்த்தினாள் அவள்.
பிடிவாதம் வந்துவிட்டால் யார் சொல்வதையும் கேட்டுப் பழக்கமில்லாத உபேந்திரன் கட்டிலிலிருந்து இறங்கி நின்று தனது ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றான். சென்றவன் நேராக
நாகதேவியின் அறைக்குச் சென்று அந்தக் கதவைத் தட்டினான். தட்டியதும் கதவு திறந்தது, தாழிடாத காரணத்தால். ஆனால் பஞ்சணையில் நாகதேவி காணவில்லை. இரவில் அவள் அதில் படுத்ததற்கான அறிகுறிகள் ஏதுமேயில்லை.
விரிப்புகள் சிறிதும் கலையாமல் விரித்தபடி இருந்தன. அதனால் சிந்தனை வசப்பட்ட உபேந்திரன் மனத்தில் ஏதோ சந்தேகம் விளையவே அவன் வேகமாகத் தளத்துக்கு ஓடினான். தளத்தில் இரண்டு மூன்று மாலுமிகளே இருந்தனர்.
பாய்விரித்து நன்றாக மரக்கலம் ஓடிக்கொண்டிருந்ததால் சுக்கான் பிடிப்ப வன் மட்டும் தனது இடத்தில் அமர்ந்து ஏதோ மெதுவாகப் பாடிக் கொண்டிருந்தான். இன்னொரு மாலுமி கரையிலிருந்த திசையை நோக்கிக் கொண்டிருந்தான்.
அவனை நோக்கிய உபேந்திரன், “மாலுமி! நாகதேவி இங்கு வந்தார்களா?” என்று கேட்டான்.
“சற்று மன்ப வந்தார்கள்.”
“இப்பொழுது எங்கிருப்பார்கள்!”
“கீழே துடுப்புத் துழாவும் இடத்துக்குச் சென்றார்கள்.”
“தனியாகவா!”
“ஆம். ஆனால் பின்னால் வந்த குருதேவரும் தலைவியைத் தேடிக்கொண்டு சென்றார்” என்று மாலுமி சொன்ன பதிலைக் கேட்டு மீண்டும் சிந்தனை வசப்பட்ட உபேந்திரன், சட்டென்று திரும்பி தளத்தின் கோடியில் இருந்த படிகளில்

.
இறங்கி அடித்தளத்துக்குச் சென்றான். அடித்தளத்தின் நுழைவுக் கதவு அடைக்கப்பட்டிருந்தது. உள்ளே மாலுமிகள் துடுப்புகளைத் துழாவும் சத்தம் கேட்கவில்லை. சாதாரணமாக அவர்கள் இசைக்கும் பாட்டும் காதில் விழவில்லை,
எல்லாம் சர்வ மௌனமாயிருக்கவே மெல்ல கதவைத் கட்டினான் உபேந்திரன்
கதவைத் திறந்த மாலுமி மீண்டும் அவசரமாகக் கதவை மூட முற்பட்டபோது அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த உபேந்திரன் அங்கு கண்ட காட்சியினால் பேரதிர்ச்சிக்கு உள்ளானான்.
அதுவரை விளங்காத பல விஷயங்கள் அப்பொழுது விளங்கின அவனுக்கு. உள்ளே நாகதேவி முத்தலை நாக மகுடமணிந்து நின்றிருந்தாள். அவள் கைகளை இரு மாலுமிகள் பற்றி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கெதிரே
நின்ற குருநாதர், “அடி கள்ளி! உன் சாயம் வெளுத்து விட்டது. எடு மகுடத்தை” என்று கூறிக்கொண்டே அவள் தலையிலிருந்த மகுடத்தை எடுத்தார். “இவளை அவள் அறையில் வைத்துப் பூட்டுங்கள். நான் அந்தப் பைத்தியக்கார
உபேந்திரனைக் கவனித்துவிட்டு வருகிறேன்” என்று பேசிக் கொண்டிருந்தவர் சட்டென்று பின்னால் திரும்பிக் கதவைத் திறந்ததும் வாயடைத்து நின்றார்.
உபேந்திரன் இதழ்களில் கடுமையான புன்னகை விரிந்தது. “குருநாதரே! உமது மூளை பிசகிவிட்டது. மருதியின் அறையிலிருந்து இப்பொழுது தான் நான் வருகிறேன். உமது முட்டாள் தனத்தால் நாகதேவி மீது மாலுமிகள் கை வைக்கும்
அளவுக்கு அவர்களைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள். அவர்கள் நாளைக்குக் கடலில் எறியப்படுவார்கள்” என்று கூறிவிட்டு நாக தேவியை அணுகி தலை வணங்கினான். தனது கண்களால் ஏதோ சமிக்ஞையும் செய்தான்.
மாலுமிகள் அவள் கைகளை விட்டு விலகி நின்றார்கள். நாகதேவி உபேந்திரனை நோக்கி “சோழர்படைத் தலைவரே” இந்த இரு மாலுமிகளுடன் குருநாதரையும் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள்” என்று உத்தர விட்டுக் கதவைத்
திறந்து கொண்டு படிகளில் ஏறிச் சென்றாள். படைத்தலைவன் சைகைக்கு இணங்க இரு மாலுமிகள் அவர் கைகளைப் பிடித்தனர். “முட்டாள்களா? இவன் உங்கனை ஏமாற்றுகிறான்? வந்த வள் நாகதேவியல்ல, மருதி” என்று கூவினார்.
மாலுமிகள் அவர் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை தர தரவென்று இழுத்துக்கொண்டு சென்றார்கள். காட்டு வலையில் சிக்குண்ட விலங்கு போல் துள்ளிக்கொண்டும் திமிறிக் கொண்டும் உறுமிக் கொண்டும்
சென்றார் குருநாதர்.

Previous articleNagadevi Ch 17 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 19 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here