Home Raja Muthirai Raja Muthirai Part 1 Ch1 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch1 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

94
0
Raja Muthirai Part 1 Ch1 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch1 |Raja Muthirai Part 1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch1 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 1 இளநங்கை

Raja Muthirai Part 1 Ch1 |Raja Muthirai Part 1|TamilNovel.in

இளவேனிற் காலத்தின் இளமதி இரண்டே வாரங்களில் முழுமை பெற்று, கொற்கை மாநகரத்தின் முத்தங் காடியை மிகுந்த குளிர்ச்சியுடன் நோக்கினாலும், அவன் உள்ளத்தில் குளிர்ச்சியோ மகிழ்ச்சியோ இருக்கமுடியா தென்றும் முகத்திலுள்ள களங்கம் உள்ளத்திலும் கண்டிப்பாய் உறைந்திருக்குமென்றும், அந்த அங்காடியின் இடைவழியில் நிதானமாக நடந்து கொண்டே வானத்தை நோக்கி, கடைவீதியையும் நோக்கிய இளநங்கை திடமாக தம்பினாள், வானத்திலோடிய அந்த முழுமதி என்னதான் தண்ணொளி பெற்றிருந்தாலும் கொற்கையின் முத்தொளியின் எல்லையருகில்கூட அவன் வரமுடியாதா கையால், அவன் எப்படிப் பொறாமையின்றி, அந்த அங்காடியை உண்மைக் குளிர்ச்சியுடன் நோக்கமுடியும் என்று தன்னைக் கேட்டுக்கொண்ட இளநங்கை, முழுமதியின் கள்ளத்தனத்தைப் புரிந்து கொண்டுவிட்ட காரணத்தினாலோ என்னவோ கடையிதழ்களில் சற்று இளநசையையும் படரவிட்டுக் கொண்டான். இயற்கை வளித்த வாய்ப்பால் மேலிருந்து இந்த மண்ணுலகத்தைப் பார்க்கும் வசதி பெற்ற வான்மதி, மேற்கே யவன நாட்டிலிருந்து கிழக்கே சீன நாடு வரை தினமொருமுறை பார்க்கிறானாகையால் அந்த நாடுகளில் எல்லாம் தன்னை நாடுபவர்களைவிடக் கொற்கை முத்தைத் தேடுபவர்கள் தான் அதிகம் என்பதை உணர்ந்திருப்பானென்பதும், அப்படி உணர்ந்தவன் கொற்கையின் முத்தங்காடியை முழு உள்ளத்துடன் பார்க்கமுடியாதென்பதும் சந்தேகமறத் தெரிந்திருந்தது இளநங்கைக்கு.

முழுமதி முழு உள்ளத்துடன்தான் அந்த மாநகரைப் பார்க்க முடியாதே தவிர, வேறு ஒருவித விபரீத மகிழ்ச்சி மட்டும் அவனுக்கிருக்குமென்று அந்த ஏந்திழை நம்பினாள். அநேக ஆண்டுகளுக்கு முன்னர், அந்த மாநகரத்தில் கடல் வாசலிலே மரக்கலங்கள் பலவும் ஆடி நின்று, உலகமே திரண்டு வாணிபம் நடத்திய காட்சியையும், பாண்டிய தாட்டு இளவரசன் தலைநகராக அது துலங்கிய மாட்சியையும், பின்பு பொருநையாற்றில் முகத்துவாரம் மண்ணடித்துப் போனதும், அந்த சிறப்பிலும் சிறிது மண்ணடித்து விட்டதையும் இணைத்துப் பார்த்து, அந்த முழுமதி மெல்ல உள்ளுக்குள் நகைத்துக் கொள்வானென்றும், பெரியவர்கள் மெலிந்தால் குதூகலிக்கும் சிற்றறிவாளர்களைப் போல, கொற்கை சளைத்தது கண்டு அவனும் மகிழ்ச்சியடைவானென்றும் எண்ணியதால் இளதங்கையின் வதனத்தில் சிறிது கோபத்தின் சாயையும் வளர்ந்தது. ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ என்பதைப் போல, துறைமுக ஸ்திதியை இழந்து, நதியின் கீழோட்டத்தில் தள்ளியிருந்த காயல் பட்டணத்தின் தயவை எதிர்பார்த்திருந்த அந்தச் சமயத்திலும் கொற்கையின் வனப்பும், அங்காடிச் சிறப்பும் அதிசம் குறைத்துவிடவில்லையென நினைத்த இளநங்கை, ஆற்றில் மண்ணடித்து மரக்கலங்கள் உட்புகாவிட்டாலும், காயலில் இறங்கியவர்கள் கொற்கைக்கு வரத் தவறுவதில்லையென்ற காரணத்தால், எந்தப் புதுப்பட்டணம் வந்தாலும் இந்தப் பழைய மாநகரின் சக்தியை முழுவதும் உறிஞ்சமுடியாது என்று தனக்குள் சொல்லியும் கொண்டான்.

பொருதையாற்றின் கரைமீதே வைக்கப்பட்டிருந்த முத்தங்காடியின் இடைவெளிகள் ஆங்காங்கு இருந்ததால், அந்த இடைவெளிகளிலொன்றில் வந்த இளநங்கை, சந்திர வெளிச்சத்தில் பளபளத்து அருவி போல் ஓரத்திலும் நடுவிலும் ஓடிய அப்புண்ணிய ஆற்று நீரிலும் கண்களை ஓட்டினாள். இளவேனிற் காலத்தில் சற்றே வற்றத் தொடங்கி விட்ட அந்த ஆறு மணவறையில் முதல் நானன்று கணவனை நெருங்கும் மணமகளைப் போலவே, வெட்கத்துடன் தனது நீராடையை மெல்லமெல்ல விலக்கி விட்டதால், மணல் திட்டுக்கள் ஆங்காங்கு புலனாகத் தொடங்கியதைக் கண்ட இளநங்கை அந்த அற்புதக் காட்சியில் தன் மனதைப் பறிகொடுத்தாள். தாரையின் கற்பைக் கெடுத்த கள்வன் வானக் கூரையிலிருக்கும் போதே பொருதை நீராடையை நீக்கிவிட்டாளே என்ற நினைப்பாலோ என்னவோ, சட்டென்று தனது முகத்தைத் திருப்பி அங்காடியைப் பார்த்துக்கொண்டே நடக்கத் தொடங்கினாள் அந்த அழகி.

இரவு இரண்டாம் சாமத்தையும் தாண்டிவிட்ட சமயம் அது. இருப்பினும் கொற்கை மாதகர் உறங்க மறுத்து இரவைப் பகலைப் போலவே அடித்துக் கொண்டிருந்தது. பொருதையின் கரையோரத்திலே பற்பல சதுரங்களாகவும் வளைவுகளாகவும் அமைக்கப்பட்டிருந்த அந்த முத்தங்காடியில், இரவு ஏறிவிட்ட அந்த நேரத்திலும், கும்பல் தாங்க முடியாததாயிருந்ததால் பல இடங்களில் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு செல்ல வேண்டியதாயிருந்தது. அதன் பெயர் முத்தங்காடியே தவிர, அதில் முத்து மட்டுமல்ல விற்பனைக்கு வந்திருந்தது மாணிக்கமும் மரகதமும். வைரமும் வைடூரியமும், வண்ண மலர்களும், மெல்லிய ஆடைகளும், அனைத்துமே பற்பலவிடங்களில் விற்பனையாகிக் கொண்டிருந்தன. விற்பனைப் பொருள்கள் மட்டுமல்ல பலதரப்பட்டுக் கிடந்தது. கடை வீதியில் உலாவிய மாந்தரும் பலதரப்பட்டுக் காட்சியளித்தார்கள். வைரம் போன்ற வெள்ளை யாவனர்கள், மாணிக்கங்களைப் போலவே சிவந்து கிடந்த நாகர்கள், ஏதோ ஓரிரு கடைகளில் மட்டும் அபூர்வமாகக் கிடைத்த கருமாணிக்கம் போன்ற எகிப்தியர், கோமேதகத்தின் மஞ்சளை எப்படியோ சருமத்தில் பெற்றுவிட்ட சோனகர் என்ற சீன நாட்டவர், தங்கள் கடலில் கிடைக்கும் கருமாணிக்கம், முத்து. கோமேதகம், மலைகளில் கிடைக்கும் வைரம் ஆகிய பலவித மணிகளைப் போலவே பலவித வர்ணங்களைப் பெற்ற பாரத நாட்டவர். இப்படிப் பலபடி கலந்து கிடந்த அந்த அங்காடிக் கூட்டம் உலகத்தின் பிரதிபிம்பம் போலத் திகழ்ந்தது.

கொற்கையின் அந்த முத்தங்காடியில் அதிக வாணிபத்தின் காரணமாகக் கூச்சல் பலமாகவும், நானாவிதமாகவும் இருந்தது. சீரிய குரலில் களத்துப் பேசிய யவனர்களும், கரகரத்த மத்த ஸ்தாயியில் பேசிய எகிப்தியரும், அராபியரும், கிள்ளை மொழியில் ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்த யவன மாதர்களும், அடக்கத்தாலும் தாணத்தாலும் கடைக்காரன் காதுக்கே சரியாகக் கேட்காதபடி விலைபேசி ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்ட தமிழகப் பெண்களும், திருட்டு எதுவும் போகாதபடி பார்த்துக் கொள்ளச் சதா அப்படியும் இப்படியும் பாதக்குறடுகளும் காவல் ஆயுதங்களும் ஒலிக்க உலவிக்கொண்டிருந்த யவன பாண்டிய வீரர்களும், அனைவருமாகச் சேர்ந்து எழுப்பிய தானாவித ஒலிகள் ஆங்காங்கு எழுந்து, ஏதேதோ பலதரப்பட்ட முரட்டு வாத்தியங்களும் மென்மை இசைக் கருவிகளும் கலந்து சப்திப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தின.

அந்தப் பிரமை இளநங்கையையும் ஆட்கொண்டிருக்க வேண்டும். பிரமை மட்டுமல்ல – பெருமையும் அவளை ஆட்கொண்டிருக்க வேண்டும். பாண்டிய நாட்டில் எது சீரழிந்தாலும் அறம் மட்டும் சீரழியாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் அவள், அதற்கு அந்த அங்காடியே அத்தாட்சியென்பதில் சந்தேகமில்லையென்று நினைக்கவும் செய்தாள். ‘இராமன் அரசாண்ட அயோத்தியில் எந்த நேரத்திலும் நன்றாக நகைகள் அணிந்த யௌவனப் பெண்கள் நடமாட முடியும்’ என்று புராணம் சொல்லுவோர் சொல்லக் கேட்டிருந்த இளநங்கை, ‘அந்த நகரை நான் பார்த்ததில்லை; ஆனால் கொற்கையைப் பார்க்கிறேன். இந்த அங்காடியில் நள்ளிரவு தாண்டிவிட்ட இந்தச் சமயத்தில் எத்தனை யௌவனப் பெண்கள், என்னென்ன நகைகளை அணிந்து உலாவுகிறார்கள்! எத்தனை பயமற்ற, அறம் மிகுந்த மாநகர் இது! அயோத்தி இப்படித்தான் அந்தக் காலத்தில் இருந்திருக்க வேண்டும்!’ என்று பலபலபடி தனக்குள் சிந்தித்துப் பெருமிதத்துடன் கடைவீதியிலே நடந்தாள் அவள். அந்தச் சமயத்தில் வெண்ணிற மேகமானது சந்திரனை மறைத்ததைப் பார்த்த இளநங்கை, பொருதையின் நீராடை நீக்கிய காட்சியைக் கண்டால், அறம் வளர்த்த பாண்டிய நாட்டில் தனது பதினான்கு கலைகளையும் அடியோடு ஒழித்துவிடும் தண்டனை கிடைக்குமென்று திகில்பட்டுத் தான் சந்திரன் அந்தத் திரையால் தனது வதனத்தை மூடிக்கொள்கிறானென்று நினைத்தாள்.

நள்ளிரவு தாண்டியும், அங்கு நிரம்பிய கூட்டம் கலைவதற்கான அத்தாட்சி எதுவும் காணாதது மட்டுமல்ல, மேலும் மேலும் மக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையே ஏற்பட்டுக் கொண்டிருந்தது. காயல் துறைமுகத்திலிருந்து மென்மேலும் பண்டங்கள் கொண்டுவரும் வண்டிகளின் சக்கரங்கள் உருளும் சப்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்ததன்றி, கிட்டத்தட்ட கூப்பிடு தூரத்துக்கப்பால் நின்ற வண்டிகளிலிருந்து பண்டங்களிறக்கும் பணிமக்கள் போட்ட கூச்சலும், அவர்கள் வேகநடை போட்டு வரும் போது கிளப்பிய ‘உம்,’ ‘உம்’ என்ற ஆயாச ஒலிகளும் அதிகப்பட்டுக் கொண்டிருந்தன. கடை வீதியிலிருந்த யவன தீபங்களுக்குக் கடைக்காரர்கள் மேலும் மேலும் எண்ணெய் விட்டுத் தூண்டிக் கொண்டிருந்ததாலும், ஆங்காங்கு பலவிடங்களில் பந்தங்கள் வேல்களுக்கிடையில் கட்டப்பட்டிருந்ததாலும், அவற்றுக்கு எண்ணெய் ஊற்றுவோரும் பக்கத்தில் எண்ணெய்க் கலங்களுடன் நின்று கடற்பஞ்சில் எண்ணெய் தோய்த்துத் தோய்த்து எடுத்துப் பிழிந்ததாலும், ஒளி அதிகமாகிக் கொண்டிருந்ததேயொழியக் குறையவில்லை.

இந்த நிலையைக் காண்ட இளநங்கை, சாதாரணமாக மூன்றாம் ஜாமத்தில் மூடப்படும் கடைவிதி அன்று நான்காம் ஜாமம் வரை கண்டிப்பாய் நீடிக்குமென்பதைப் புரிந்து கொண்டான். ஏதோ புது மரக்கலங்கள் நாலைந்து வந்திருந்தால்தான் நள்ளிரவுக்குப் பின்பும் கூட்டம் வந்து கொண்டிருக்குமென்பதை அவள் உணர்த்திருத்தாளாதலால், சீக்கிரம் தான் வாங்க வந்திருந்த இரண்டொரு பொருள்களை வாங்கிக் கொண்டு இல்லம் திரும்பத் தீர்மானித்து, முத்து விற்கும் கடைகளை மட்டுமே பார்வை விட்டு நடந்தாள். எத்தனை நேரம் அங்காடியில் இருந்தாலும் அவளுக்குச் சலிப்பில்லாதது மட்டுமல்ல, மகிழ்ச்சியும் கூடத்தான். கொற்கை மாதகரையும் அந்த அங்காடியையும் அத்தனை தூரம் நேசித்தாள் அவள்.

இப்படிப் பலவகை எண்ணங்களுடனும் பெருமை யுடனும் மகிழ்ச்சிநடை நடந்த இளநங்கை, முத்தங்காடியின் மூன்று வளைவுகளைத் தாண்டியதும் பெரிதாக இருந்த கடையொன்றில் நின்று, அங்கிருந்த முத்துக் கூடைகளைக் கவனித்தாள். நீண்ட நேரம் அக்கூடையிலிருந்த முத்துக் களைப் பிடிப்பிடியாக எடுத்துத் துழாவித் துழாவிப் பார்த்தவள், தன்னைப் பல பெண்கள் இருபுறத்திலும் நெருக்கியும் தன் கைகளுக்குக் குறுக்கே கைகளை நீட்டிப் போட்டியிட்டும் முத்துக்களைப் பொறுக்கியும்கூட, அந்த இடித்தலுக்கும், இம்சைக்கும் சிறிதும் சளைக்காமல் முத்துக் கூடைகளைத் துருவித் துருவிப் பார்த்தாள். அவள் அப்படி முத்துக்களையெல்லாம் கிளறுவதைப் பார்த்த அங்காடிச் சொந்தக்காரியான பெண்ணும், “என்னம்மா! என்ன வேண்டும் உனக்கு? ஏன் எல்லாவற்றையும் கிளறுகிறாய்?” என்று வினவினாள் பொறுமை இழந்து.

இளதங்கை சற்றே கனிந்த முகத்துடன் அங்காடிப் பெண்ணை ஏறெடுத்து நோக்கி, “ஒற்றை முத்து வேண்டும்” என்று கேட்டாள்.

“இவற்றிவொன்றை எடுத்துக் கொள்வதுதானே?” என்று வினவினான் அங்காடிப் பெண்.

“இவையெல்லாம் சிறுமீன் வயிற்று முத்துக்கள். இவை இரண்டாகவும் மூன்றாகவும் விளைபவை. ஒரே வயிற்றில் ஒரே முத்தாக விளைந்த பெருமுத்து வேண்டும்” என்றாள் இளநங்கை.

அங்காடிப் பெண் அவளை வியப்புடன் ஏறெடுத்து நோக்கினாள். “அதை உன்னால் வாங்க முடியுமா?” என்றும் வினவினாள் சந்தேகத்துடன்.

இளநங்கை அதற்கும் பதில் நேரடியாகச் சொல்ல வில்லை. “இருந்தால் காட்டு பார்ப்போம்” என்றாள்.

அங்காடிப் பெண் பின்னாலிருந்த திரைக்குள் சென்று ஒரு முத்துச் சரத்தை எடுத்துவந்தாள். “இருப்பது இது தான். இதை வாங்க உன்னால் முடியாது, அரச குலத்தாரால் தான் முடியும். எதற்கும் இந்தா பார்த்து விட்டுப் போ” என்று இகழ்ச்சியுடன் கூறி, அந்தச் சரத்தை இளநங்கையிடம் நீட்டினாள்.

இளநங்கை அதைக் கையில் வாங்கி, சற்றே பின்னால் திரும்பி விளக்கொளியில் அதைப் பார்த்தாள். முத்துச் சரம், விளக்கொளியில் பளபளத்து அவள் கண்களுக்குப் பிரமை காட்டியதால், அதையே பார்த்துக் கொண்டிருந்தாள், பல விநாடிகள், பார்வை முத்துச் சரத்துடன் தின்றிருந்தால் இந்தக் கதை நிகழ அவசியம் இருந்திராது. அவள் கண்கள் முத்துச் சரத்துக்கு அப்பாலும் சென்றது. நேர் எதிர் சாரியிலிருந்த ஓர் உருவம் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டாள். அவ்வளவு தான். இளநங்கையின் கண்களில் விவரிக்க இயலாத அச்சம் சூழ்ந்தது. ‘இந்தா முத்துமாலை’ என்று சரேலென அங்காடிப் பெண்ணிடம் மாலையைக் கொடுத்துவிட்டு, வெகு துரிதமாகக் கும்பலில் மறைந்து நடந்தாள்.

அந்த உருவம் சற்று முறுவலித்தது. பிறகு அந்தக் கடைக்கு வந்தது. அடுத்த சில விநாடிகளில் இளநங்கை சென்ற திக்கை ஆராய்ந்தது தூரத்தே கும்பலைத் தாண்டித் துரித நடைபோட்டுச் சென்றுகொண்டிருந்தாள் இளநங்கை. அந்த உருவத்தின் உதடுகளில் இளநகை அரும்பியது. அவளைத் தன் திருஷ்டியை விட்டு விலகாமல் வைத்துக் கொண்டே அவளைப் பின் தொடரவும் முற்பட்டது.

Previous articleJala Deepam Part 3 Ch53 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch2 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here