Home Historical Novel Raja Muthirai Part 1 Ch10 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch10 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

67
0
Raja Muthirai Part 1 Ch10 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch10|Raja Muthirai Part 1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch10 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 10 மண்டபப் போர்

Raja Muthirai Part 1 Ch10|Raja Muthirai Part 1|TamilNovel.in

வீரரவியின் கோபாவேசத்தையும், அவன் வீரர்க துவங்கிய போராட்டத்தையும் கிளறிவிட்ட அந்தக் கேள்விகள் கணீரென்றும் நிதானமாகவுமே இளவரசனிடமிருந்து எழுந்தாவென்றாலும், அவை சேரமன்னன்மீது சாட்டிய குற்றங்கள் பயங்கரமானவையாகவே இருந்தன சேர மன்னரே! நீங்கள் இதுவரை கடத்திவிட்ட பாண்டிய நாட்டின் பெருமுத்துக்கள் எங்கே இருக்கின்றன? உமக்கு அந்தக் கடத்தலில் துணை செய்த சிங்கள மன்னனும் உம்மைப்போல் இங்குதான் மறைந்து திரிகின்றானா? சிங்களம் சென்றுவிட்டானா?” என்ற கேள்விகளைக் கேட்டான் இளவரசன் மிக நிதானமாகக் குற்றவாளியை விசாரிக்கும் நீதிபதியைப் போல. இதைவிட, “நீதான் கள்வன்! உன் கூட்டாளி எங்கே?” என்று கேட்டிருந்தாலும் ஒன்றுதான். இப்படி ஒரு மன்னனைப் பார்த்துத் திருட்டுப் பட்டம் கட்டுவதே குற்றமாயிருக்க, அவனுக்கு ஒரு சகாவையும் நியமித்து வீரபாண்டியன் பேசியதைச் சாதாரண மனிதர்களே பொறுக்க முடியாதென்றால், சேர நாட்டு மன்னன் எப்படிப் பொறுக்க முடியும்?

ஆகவே, அதுவரை காட்டியிருந்த திதானத்தை வீரரவி அடியோடு காற்றில் பறக்கவிட்டுத் தனது வீரர்களை விளித்து, “இவளை வெட்டிப் போடுங்கள்,” என்று உத்தரவிட்டதைப் பெரும் விந்தையென்றோ, அடுத்து அவன் வீரர்கள் தடதடவென ஆயுதங்களை இளவரசன் மீது வீசிவிட்டதை அவசரச் செய்கையென்றோ கூற முடியாதல்லவா?

அந்த மண்டபத்திலிருந்த வீரர்களும், மண்டபத்தின் மேலே சுற்றிலும் வளைந்தோடிய உப்பரிகைத் தாழ்வாரத்தி லிருந்த வீரர்களும் வாட்களை உருவிக்கொண்டு வீரபாண்டியன்மீது பாய்ந்துவிட்டதையும், சிலர் அவன்மீது குறுவாள்களை எறிந்துவிட்டதையும் கண்டதும் இளநங்கை பெரிதாக அலறியது ஒரு வினாடியேயானாலும், அந்த ஒரு வினாடியில் பிரமிக்கத்தக்க நிகழ்ச்சிகள் நடந்தேறின. தூணில் சாய்ந்து கொண்டிருந்த வீரபாண்டியன் தன் முகத்தின்மீதும் மார்புகளின்மீதும் சீறி வந்த குறுவாள்களிலிருந்து சட்டென்று உட்கார்ந்து தப்பியதன்றி, உட்கார்ந்தபடியே வெகு வேகமாகத் தூணைச் சுற்று மறுபக்கம் சென்று மறைந்துவிட்டானாகையால், அவன் மீது குறிவைக்கப்பட்ட குறுவாள்கள் தூணின்மீது கணகணவென்று ஒலிகளுடன் மோதித் தரையில் நாலா பக்கமும் விழுந்து எங்கும் இரும்பொலிகளைக் கிளப்பின.

அந்த ஒலிகள் எத்தனை சீக்கிரம் கிளம்பி மறைத் தனவோ, அத்தனை சீக்கிரத்தில் தூணை ஒருமுறை சுற்றி உருவிய வாளுடன் எழுந்துவிட்ட பாண்டிய நாட்டு இளவரசன் தூணின் முன்பகுதிக்கு வந்து தனது நீண்ட வாளை இடது கையிலும், இடுப்பிலிருந்த கட்டாரியை வலது கையிலும் பிடித்துக் கொண்டு, அவனது கண்ணெதிரே கோடியிலிருந்தும் மாடிப் படியிலிருந்தும் ஓடி வந்துகொண்டிருந்த வீரர்களை ஒருமுறை நோக்கினான். அந்தச் சமயத்தில் அவன் முகத்தைப் பார்த்த இளநங்கை மட்டுமல்ல, வீரரவிகூட ஓரளவு அச்சம் கொண்டான். அந்த முகத்திலும் கண்களிலுமிருந்த அழகு அடியோடு மறைந்து, அழகின் இடத்தைப் பெரும் பயங்கரச் சாயை மறைத்துக் கொண்டது. எப்பொழுதும் நிதானத்தையும், லேசான நகைப்பையும் காட்டிய கண்கள் ஆடுகளை விழுங்க வரும் புலியின் கண்களைப்போல் பளிச்சிட்டன. இதுவரை சாதாரணமாக ஆடிக்கொண்டிருந்த கைகள் விறைத்து விட்டன போலிருந்தாக பார்க்கவைக்கு. உடம்பே உணர்ச்சியற்றதாகவும் இரும்பாக மாறி விட்டதைப் போலும் தெரிந்தது. அகற்றி வைக்கப்பட அவன் கால்கள் மெல்லியதாக இருந்தாலும் இருப்பு வார்ப்படங்களைப் போல் வளைவு ஏதுமின்றிக் காணப்பட்டன.

ஏதோ எமதூதன் நிற்பது போன்ற பிரமை ஏற்பட்டது வீரரவிக்கு. அச்சத்தை அறவே அறியாத வீரரவியின் உள்ளத்திலேயே அச்சமேற்படுத்தக்கூடிய அந்தப் பயங்கரப் பார்வையும் தோற்றமும் அவன் வீரர்களின் வேகத்தையும் ஒரு வினாடி தடுத்தது. அந்த ஒரு வினாடியில் சுரணை ஏதுமின்றி வெளிவந்தன வீரபாண்டியனின் சொற்கள். “யார் ஓர் அடி முன்னெடுத்து வைத்தாலும் சேர மன்னர் அதோ நிற்கும் இடத்திலேயே பிணமாகி விடுவார்,” என்று மனிதன் பேசுவது போலல்லாமல், பிசாசு பேசுவதுபோல் பேசினான் இளவரசன்.

அந்தக் குரலைக் கேட்டே அச்சமுற்ற சேர வீரர்கள் மன்னனை நோக்கினார்கள். மன்னனுக்குப் பதில் வீரபாண்டியனே பதில் கூறினான்: “எனது இடது கையில்தான் வாளிருக்கிறது. வலது கையிலிருப்பது பொற்கோடரி, எந்த ஒரு வீரன் முன்னேறினாலும் உங்கள் மன்னன் கழுத்தில் அது பாய்ந்துவிடும். எனது நாட்டில் தனித்து அகப்பட்ட மன்னனைக் கொல்ல நான் இஷ்டப்படவில்லை ,” என்ற வீரபாண்டியன், சேர மன்னரே! என் இரண்டு கேள்விகளுக்கு நீங்கள் கூதக்கூடிய பதில் உங்களையும் காப்பாற்றும்; உங்கள் நாட்டையும் காப்பாற்றும். இல்லையேல் பாண்டிய நாட்டு ராஜ முத்திரைமீது ஆணையாக உங்களையும் அழித்துளிடுவேன்; உங்கள் நாட்டையும் அழித்துவிடுவேன்” என்றான்.

பாண்டிய இளவரசனின் சொற்கள் வேகமாகவும் விபரீதக் குரலிலும் வெளிவந்து எதற்கும் எதிரொலி செய்யும் அந்த மண்டபத்தில் நாலா பக்கங்களிலும் எதிரொலி செய்ததால் ஏற்பட்ட பயங்கரச் சூழ்நிலையில் சேர மன்னனும் கூவினான்: “வெட்டுங்கள் அவனை கையில் வாட்களை எதற்கு வைத்திருக்கிறீர்கள் அழகுக்கா?”

அடுத்த வினாடி அந்த அழகிய மண்டபம் பிரளயமாயிற்று. வீரபாண்டியன் மீது எறியப்பட்ட குறுவாள்களில் பல அவன் திாரெனச் சுழன்றமையால் பயனற்றுப்போனாலும். ஒன்று மட்டும் அவன் இடது தோளில் ஆழமாகப் பாய்ந்து விட்டது. அரியணைக்குப் பின்னால் வீரரவி மறைந்து விட்டானாதலால் பொற் கோடரியை உபயோகப்படுத்த முடியாமல் போயிற்று வீரபாண்டியனுக்கு. ஆகவே கோடரியை இடுப்பில் பழையபடி செருகிக்கொண்டு இடது கை வாளை வலது கைக்கு மாற்றிக்கொண்டு தான் சாய்ந்திருந்த தூணைவிட்டு எதிரே ஓடிவந்து வீரர்களை நோக்கி வாளை ஓங்கினான். அவன் வாள் சுமார் நாலைந்து வாள்களை ஏககாலத்தில் தடுத்தது. திடீரெனக் கீழிறங்கிப் பாய்ந்த அந்த வாளுக்கு இலக்காகி ஒரு வீரன் பெரிதாக அலறித் தரையில் சட்டென்று சாய்ந்தான்.

அந்தக் காட்சியைக் கண்ட இளநங்கையின் முகத்தில் வியப்பும் பயமும் ஒருங்கே உலாவின. தன்னைச் சிறை செய்து வீரரவியுடன் அழைத்து வந்த நான்கு வீரர்களைத் தவிர மாடித் தாழ்வரையிலிருந்து படிகளில் இறங்கி ஓடி வந்த வீரர்களையும் ஏசுகாலத்தில் சந்தித்து அவர்கள் வாட்களையெல்லாம் ஒரே சமயத்தில் தன் நீண்ட வாளால் வீரபாண்டியன் சந்தித்துவிட்டதையும், திடீரென்று அவன் வாளிறங்கி வீரனொருவன் மார்பில் பாய்ந்துவிட்டதால் ஒருவன் அலறி விழுந்துவிட்டதையும் பார்த்த இளநங்கை அந்தச் சமயத்தில் வீரபாண்டியன் பார்வையிலிருந்த கொடூரத்தைக் கண்டு வியந்தாள். அவள் வியப்பதற்கோ பயப்படுவதற்கோ அவகாசமேயில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் வீரபாண்டியன் பின்வாங்கி மீண்டும் தன் வாளைப் பயங்கரமாகச் சுழற்றி எதிரி வீரர்கள் வாட்களைத் தடுத்தும், சீவியும் போரிட்டான். எதிரி வீராகளின் வாட்கள் இரண்டு திடீரென ஆகாயத்தில் பறந்தன. மற்றுமிருவர் இளவரசன் வாள்பட்டுக் கதறினர். ஒருவனுடைய வலது கை சுரணையற்றுத் திடீரெனத் தொங்கி விட்டது. இரண்டு மூன்று வினாடிகளுக்குள், வீர பாண்டியன் போர்முறை இன்னதென்று புரிந்துகொள்வதற்குள், நாலைந்து வீரர்கள் காயப்பட்டுவிட்டதால் அச்சமுற்ற வீரர்கள் மீண்டும் தங்கள் மன்னனை நோக்கினார்கள். மன்னன் மண்டபத்தில் காணப்படாததால் சற்று சிந்தித்த சேர வீரர்கள் ஐந்தாறு பேர் மீண்டும் வீரபாண்டியனை நோக்கி விரைந்தனர் உருவிய வாட்களுடன்.

அவர்கள் சிந்தித்த இரண்டு வினாடிகளில் வீர பாண்டியன் இளநங்கையிருந்த இடத்தை அணுகி அவள் கையைப் பிடித்துக் கரகரவென்று இழுத்துக்கொண்டு மண்டபத்தின் வேறொரு தூணுக்காகச் சென்று மறைந்து கொண்டான்.

அந்தத் தூணை நோக்கியும் சேர வீரர்கள் ஐந்தாறு பேர் விரைந்தனர். அதே சமயத்தில் வாயிற்கதவு திறக்க பட்டு மற்றும் நான்கு வீரர்கள் வேல்களைத் தாங்கி நுழைந்தனர். தூணுக்குப் பின்பு மறைந்து நின்ற இளநங்கை வாயிலின்மூலம் வந்த வீரர்களை நோக்கினாள். அவர்கள் வந்ததும் தூணை நோக்கி வந்த வீரர்கள் சிறிது தாமதித்தனர். பிறகு அவ் வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி ஏதோ பேசிக்கொண்டார்கள். பிறகு ஒரு முடிவுக்கு வந்ததும் வாயில் கதவை இருவர் தாளிட்டு அங்கு வேல்களுடன் நின்றார்கள். வேல்களைத் தாங்கிய மற்றுமிருவர் மண்டபத்தின் மற்ற இரு கோடிகளில் வேல்களைத் துரக்கி எய்வதற்குப் பிடித்தவண்ணம் நின்றார்கள். மற்றவாகள் தூணை நாலா பக்கத்திலும் நெருங்க முற்பட்டார்கள்.

எதிரிகளின் இந்தத் தாக்குதல் ஏற்பாட்டைக் கவனித்த இளநங்கை அச்சமுற்றாள். அவள் கையொன்று. வீரபாண்டியனுடைய இடையைச் சுற்றிச் சென்று காயமடைந்த கையைப் பயத்துடன் பற்றியது. அந்த மலர்க்கை பற்றியதால் அவள் உள்ளத்திலிருந்து அச்சத்தை அறிந்த இளவரசன் மனம் ஒரு வினாடி இளகியதால், அவன் அஞ்ச வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில் அவள் கையை அழுத்திக்கொடுத்தான். அந்தக் கணத்தில் அவன் கை மிகவும் மிருதுவாக இருந்ததனாலும், அடுத்த கணத்தில் அது இரும்பாகிவிட்டதை இளநங்கை உணர்ந்துகொண்டாள். அபாயம் சூழ்ந்திருந்தச் அந்தச் சமயத்தில் கூட அந்த இரும்புக் கரத்தை அவளால் ரசிக்க முடிந்தது, அந்த ரசனையின் காரணமாக அவள் சற்று ஆறுதலடைந்திருந்த விநாடியில் வீரபாண்டியன் குரல் பெரிதாக ஒலித்தது மீண்டும். “இந்தத் தூணைச் சூழ யாரும் முயல வேண்டாம். நேராகப் போருக்கு வாருங்கள். பக்க வாட்டில் வரும் எவன் உயிரும் கண் சிமிட்டும் நேரத்தில் பறந்துவிடும்” என்ற சொற்கள் மண்டபத்தை மிகப் பயங்கரமாக ஊடுருவின.

அந்தப் பயங்கர ஒலியால் சற்றே மருண்ட வீரர்களை மண்டபத்தில் எங்கிருந்தோ எழுந்த இன்னொரு ஒலி மாக்கியது. “வீண் மிரட்டலைக் கண்டு அஞ்சாதீர்கள். ஒருவனை எதிர்க்க இத்தனை வீரர்கள் தேவையில்லை. எல்லோரும் சூழ்ந்து செல்லுங்கள். அவன் வெளியில் வந்ததும் ஒருவர் வேலெறிந்து கொன்றுவிடுங்கள்,” என்று வீரரவியின் குரல் மிகுந்த அதிகாரத் தோரணையுடன் எங்கிருந்தோ அசரீரிபோல் வரவே, வீரர்கள் மீண்டும் செயல்பட முற்பட்டனர்.

தங்கள் அரசன் எங்கும் ஓடவில்லை. மண்டபத்தில் தானிருக்கிறான் என்ற துணிவும், ஆகவே தங்களுக்கு எப்படியும் மேற்கொண்டு உதவிவரும் என்ற நினைப்பும், அவர்களுக்கு வெறியை ஊட்டவே அவர்கள் தூணைச் சுற்றி அவனைச் சூழவே முற்பட்டார்கள். வீரரவியின் சொற்களைக் கேட்டு அவர்கள் முன்னேற முற்பட்டவுடன் இளநங்கையின் காதில் ஏதோ வார்த்தைகளைச் சொன்ன இளவரசன், அவளைவிட்டுத் தூணின் மறைவிலிருந்து வெளிவந்தான். ஒரு கோடரியுடனும், ஒரு வாளுடனும் தூணில் மறைந்தபோது காணப்பட்ட அவன் இடது கையில் இரண்டு குறுவான்களிருந்ததைக் கண்டு பிரமித்த சேர வீரர்கள் அவன் உத்தேசம் என்னவென்பதைத் தீர்மானிக்கு முன்பாகவே தூணைச் சூழ முற்பட்ட நான்கு வீரர்களில் இருவர்மீது அந்தக் குறுவாள்கள் பாய்ந்து விட்டன. இடது கையாலேயே வலப்புறமும், இடப்புறமும் குறுவாள்களை ஒன்றன்பின் ஒன்றாக வீசி இருவரை இளவரசன் மாய்த்து விட்டதாலும் அப்பொழுதுகூட அவன் அந்த இடது தோளில் பாய்ந்து பதிந்து கிடந்த தங்கள் குறுவாளை அகற்றாமல் குருதி தோளிலிருந்து வரையில் பாய்ந்து நனைந்துவிட்டதையோ, அந்தக் கைக் காயம் விளைத்த வலியையோ லட்சியம் செய்யாமல், அதே கையைக் குறுவாளெறிய உபயோகப்படுத்தியதையும் கண்ட சேரநாட்டு வீரர்கள் பேரச்சமுற்றனர். இருப்பினும் வீரரவியின் உத்தரவை மீறமுடியாத காரணத்தால் தூணை நெருங்கி விட்டனர்.

இடது தோளில் குத்தியவண்ணம் தொங்கிக் குருதியை ஓடவிட்ட குறுவாளைச் சிறிதும் பொருட்படுத்தாமலும், அந்த வலிக்காக முகத்தைச் சிறிதளவுகூடச் சுளிக்காமலும், பயங்கர விழிகளுடன் வலது கைப் பெருவாளைச் சுழற்றிக் கொண்டு வீரபாண்டியன் தங்களை நோக்கி வந்ததைப் பார்த்த வீரர்கள் அவன் முகத்தில் இரக்கக்களை ஏதுமின்றி அரக்கக்களை மூண்டு விட்டதையும் அவன் வாள் தங்கள் பலர் காண்கள் முன்பு திடீர் திடீரெனத் தோன்றுவதையும் கண்டு, அதிகநேரம் தாமதித்தால் விளைவு விபரீதமென்பதையும் புரிந்து கொண்டு, அவன்மீது வாட்களை ஓங்கிக் கொண்டு பாய்ந்தார்கள், சிலர் இரு புறங்களிலும் அவனைச் சூழவும் முயன்தார்கள், வீரபாண்டியனின் நீண்ட வாள் எதிரே போரிட்டவர்களை அப்புறம் இப்புறம் அகலவிடாமல் பல பகுதிகளில் திரும்பத் திரும்பப் பாய்ந்தது. இருபுறமும் சூழ முற்பட்டவர்கள் திரும்பப் பழைய நிலைக்குத் துரத்தப்பட்டார்கள். அவன் கையின் சுழற்சி ஏதோ யந்திரம் சுழல்வது போலிருந்ததேயொழிய மானிடனின் கரமொன்று இயங்குவதாகத் தெரியவில்லை அந்த வீரர்களுக்கு. சேர வீரர்கள் அதுவரை அறியாத போர்முறை அது. கால்களை லேசாகக் கூட வளைக்காமலும், பார்வையை ஒவ்வொரு வீரன்மீதும் ஓட்டியும், வாளால் நான்காகவும் இரண்டாகவும் எதிரிகளின் வாள்களைத் தடுத்த வீர பாண்டியன் போர்முறையின் கை லாவகமும் புதுமாதிரியாயிருந்தது அவர்களுக்கு, அத்தகைய வாட்போர் முறைகளை அவர்கள் அதுவரை பார்த்த தில்லையாகையால் பிரமை தட்டி, சித்தம் தளர்ந்தே போரிட்டார்கள்.

எத்தனை வீரனாயிருந்தாலும் பத்துப் பன்னிரண்டு வீரர்களை ஒரே காலத்தில் எப்படி சமாளிக்க முடியும்? அவன் வாள் பாய்ந்து நாலைந்து பேர் தரையில் சாய்ந்து விட்டாலும் மீதி எண்மர் இருப்பதைக் கவனித்த இளநங்கை எந்த வினாடியிலும் இளவரசன் கொல்லப்படுவானென்பதை உணர்ந்திருந்ததால் அவன் சொன்னபடி தூணுக்கு மறைவிலிருக்க இஷ்டப்படாமல் தூணைச் சூழ வந்து இளவரசன் குறுவாளால் மடிந்து கிடந்த ஒரு வீரனை மெள்ள அணுகி அவன் வாளை எடுக்கக் குனிந்தாள்.

வெகு ஜாக்கிரதையாகவே அவள் அக்காரியத்தைச் செய்வதில் முனைந்தாள். கூடத்தின் மாடிச் சாளரத்திலிருந்து நிலவொளி சிறிது உள்ளே பாய்ந்திருந்ததாலும், மண்டபத்தின் இரு விளக்குகளின் ஒளியும் விசிறிக் கிடந்ததாலும், அவற்றின் காரணமாகவே விழுந்த தூண் நிழல் வீச்சிருந்த இருட்டில் பதுங்கிச் சென்றாள் இளநங்கை விழுந்த வீரனை நோக்கி. வீரபாண்டின் சேர வீரர்களைத் தாக்கியதால் வாட்களின் ஒலிகள் எங்கும் பரவி நின்றதால், அவள் நடந்தபோது ஏற்பட்ட முத்துப்பரல் ஒலிகள் யார்காதிலும் விழவில்லை. மற்றவர்கள் போராடிக் கொண்டிருந்ததாலும், அவர்கள் வேறெதையும் கவனிக்க வாய்ப்பில்லையாகையாலும். தூண் நிழலில் அவள் சென்றதாலும், விழுந்து கிடந்த வீரனை யார் கண்ணிலும் படாமல் அவள் நெருங்கவும் முடிந்தது. நெருங்கிக் குனிந்து அவன் இடையிலிருந்த வாளையும் எடுத்துக் கொண்டாள். மிக மெதுவாக எடுத்து வாளை உருவி நிமிர்ந்ததும் விளக்கொன்றின் வெளிச்சம் திடீரென அவள்மீது பூராவாக விழுந்தது. “வாளைக் கீழே போடு, உன் மார்புக்கு நேரில் எனது வேல் குறி வைக்கப்பட்டிருக்கிறது,” என்று எச்சரித்தது வீரரவியின் குரல். “வீரபாண்டியா! இளநங்கையைப் பலி கொடுத்து உன் உயிரை மீட்கும் அற்ப புத்தி உனக்கில்லையானாலும் உன் வாளை நீயும் கீழே எறிந்து விடு. இல்லையேல் உன் காதலியின் பிணத்தின் மீது நீ கதற வேண்டியிருக்கும்,” என்றும் எழுந்தது வீரரவியின் குரல்.

மண்டபத்தை விஷம் போல் ஊடுருவிய அந்தச் சொற்கள் வந்த திசையை இளநங்கை இளவரசன் இருவருமே நோக்கினர். மண்டபத்தின் தூண்களுக்கு மேலேயிருந்த மாடித் தாழ்வரைக் கைப்பிடியின் அருகில் இடதுகையில் ஒரு விளக்கையும் வலது கையில் ஓங்கிய வேலையும் தாங்கி நின்றான் சேரமன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன். வீரபாண்டியன் அந்தக் கூர் வேலையும் நோக்கி இளநங்கை இருந்த இடத்தையும் நோக்கினான். வீரரவியின் வேல் நேராக இளநங்கை மார்பை நோக்கி இருந்தது. வீரரவியை மேற்கொண்டு எதிர்ப்பதில் அர்த்தமில்லையென்று புரிந்து கொண்ட வீரபாண்டியன் தனது வாளைக் கீழே எறிந்தான். “மன்னர் சொற்படி செய் என்று இளநங்கைக்கும் உத்தரவிட்டான்.

இளதங்கையும் வாளைக் கீழே எறிந்தாள் வேறு வழியின்றி. அடுத்த வினாடி உத்தரவிட்டான் வீரரவி, “இனி அவன்மீது வேலெறிந்து கொன்றுவிடு” என்று மூலை யிலிருந்த ஒரு வீரனை நோக்கி.

வீரன் தனது வேலை உயர்த்தி, வீரபாண்டியனின் மார்பைக் குறித்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் எறிந்து விட்டான். வீரபாண்டியன் தீர்ந்தானென்றே இளங்கை நதினைத்தாள். மிகுந்த அதிர்ச்சியால் அவள் தலை சுழன்றது மயக்கமுற்று விழப் போனாள் அவள். இந்தச் சமயத்தில் அவள் சித்தத்தில் ஏதேதோ ஒலிகள் எழுந்தன, காதுகளில் ஏதேதோ ஒலிகள் விழுந்தன. என்ன ஒலிகள் அவை அவளுக்குப் புரியவில்லை. ஆனால் தன்னை யாரே: பலவந்தமாகத் தூக்கிச்செல்வது மட்டும் அவளுக்கும் புரிந்தது.

Previous articleRaja Muthirai Part 1 Ch9 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch11 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here