Home Historical Novel Raja Muthirai Part 1 Ch11 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch11 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

70
0
Raja Muthirai Part 1 Ch11 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch11 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch11 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 11 லாபமும் நஷ்டமும்

Raja Muthirai Part 1 Ch11 |Raja Muthirai Part1|TamilNovel.in

வீரரவியின் உத்தரவுப்படி வீரனொருவன் எய்த வேலால் வீரபாண்டியன் மடிந்தே விடுவானென்ற அதிர்ச்சியில் மயக்கமுற்று மண்டபத்தின் தரையில் சாய்ந்து விட்ட இளநங்கையின் காதுகளில்தான் விழுந்தனவா அல்லது அவை நிதானமிழந்துவிட்ட புத்தியில் உதித்த கற்பனை ஒலிகளா என்பதைக் கூட உணரமுடியாத மயக்கத்திலிருந்தான் கோட்டைக் காவலன் மகள். திடீரென யாரோ அலறிய குரல், வேல்கள் எங்கோ மோதியதால் கணீர் கணீரென ஏற்பட்ட ஒலிகள், பிறகு தடாலென்று பெரும் உலோகத் தண்டங்கள் தரையில் விழுந்துவிட்டது போன்ற டணார் டணார் என்ற வெண்கலச் சத்தங்கள், தடதடவென் நாற்புறமும் யார் யாரோ ஒடும் சாலடிச் சத்தங்கள், இவையனைத்தும் கேட்கவே செய்தன இளநங்கையின் புத்தியில், மயக்கமடைந்த திலையில், மயக்கத்திலிருந்து விடுபடவும். கண்களைத் திறக்கவும்கூட முயன்று அவள் ஒரு பக்கம் புரள முற்பட்டதாகவும், ஆனால் கண்கள் விழிக்க மறுத்துவிட்டதாகவும் தோன்றியது அவளுக்கு. இந்த நிலையில்தான் அவளை யாரோ ஒருவர் பலவந்தமாகத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வெளியே நடக்கத் தொடங்கினார்.

யார் அது. அத்தனை ராட்சதத்தனமாக அவளைத் தாக்கி ஆட்டுக்குட்டி போல் தோளில் போட்டுக் கொண்டு நடப்பது? சுரணையிழந்த அவளுக்கு அதை மட்டும் புரிந்து கொள்ளப் புத்தி இடங்கொடுக்கவில்லை. சில விநாடிகள் இப்படிக் கழிந்த பிறகு அவள் புலன்கள் ஓரளவு புலப்படத் துவங்கியதால் தான் எங்கோ வெகுவேகமாகக் கொண்டு செல்லப்படுவது மட்டும் புரிந்தாலும் கண்ணை விழித்துப் பார்க்கும் அளவுக்குச் சுயஉணர்வு வராததால் அவன் அந்தத் தோளின்மீது செயலின்றிக் கிடந்தாள். ஒருமுறை அவள் கால்களிலொன்று ஏதோ மரத்தின் மீது இடறிய தாகவும், யாரோ கதவை மூடும் சத்தம் கேட்டதாகவும் தெரிந்தது அவளுக்கு. அதற்கு மேல் ஏதும் உணர முடியததால் அவள் உடலும் உணர்வும் மீண்டும் துவண்டுபோயின. இப்படி எத்தனை நேரம் சென்றிருக்குமென்பது அவளுக்கே தெரியாது. ஆனால் மீண்டும் அரைவாசி சுரணை வந்த போது தன்னைச் சுமந்து செல்லும் மனிதன் பெரும் ராட்சதனாயிருக்க வேண்டுமென்று அவள் நினைத்தார், அவன் தன்னை மிக அனாயாசமாகத் தோளில் போட்டுக் கொண்டிருந்ததும், அவனது ஒரு கை மட்டும் தனது இரு கால்களையும் சேர்த்துப் பலமாகப் பிடித்தக் கொண்டிருந்ததும், அந்தக் கைகள் இருந்த இடத்திலிருந்து அவற்றை விட்டு விலகுவது சாத்தியமல்லவென்பதும் ஓரளவு புரிந்தது அவளுக்கு. இப்படிப் படிப்படியாகச் சுரணை வரப் பெற்ற அவன் தன் கண்களில் திடீரென ஏதோ சில்லென்று படவே சரேலென்று கண்ணைத் திறந்தாள். வீரபாண்டியனின் நகைக்கும் விழிகள் அவள் விழிகளைச் சந்தித்தன.

ஒரு காலை மடித்து உயர்த்தி ஒரு காலை நீட்டிக் கொண்டு, மடித்து உயர்த்திய முழங்காலின்மீது தனது இடது கையை வைத்து அக்கையின் குறுக்கே இளவரசன் தன்னைத் தாங்கிக் கொண்டிருந்ததையும், தனது கண்களில் குளிர்ந்த தீர் அடிக்கப்பட்டிருந்ததையும் கண்ட இளநங்கை அவன் கையிலிருந்து சரேலென எழுந்திருக்க முயன்று முடியாமல் மீண்டும் சாய்ந்துவிட்டாள். வீரபாண்டியன் முகத்தில் ஏற்கனவேயிருந்த கவலையில் புன்முறுவலின் சாயையும் சிறிது ஓடியது. “அவசரப்பட வேண்டாம் இன்னும் சிறிது பொறுங்கள்” என்ற அவன் குரல் அனுதாபம் மண்டிக் கிடந்தது.

அயல் ஆடவன் ஒருவனின் கைக்கும் மாடிக்கு குறுக்கே கிடப்பது பெரும் சங்கடமாயிருந்தது

இளநங்கைக்கு, ‘இவர் நாட்டைக் காக்கும் காவலர்தான். நாட்டின் குடிமகனான என்னைக் காக்கும் உரிமையும் இவருக்கு உண்டு. புரவலனாயிருந்தாலும் ஆண ஆண் தானே?’ என்று நினைத்த அவள் மனத்தில் பெருங் குழப்பம் ஏற்பட்டது. அந்தக் குழப்பம் எதனால் விளைந்தது? இன்பத்தாலா துன்பத்தாலா, ஆசையினாலா, அவமானத்தாலா, இஷ்டத்தாலா, கஷ்டத்தாலா? எதுவுமே திட்டமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை அவளால், இளவரசன் மடியில் தான் கிடப்பது சரியல்லவென்று மட்டும் தெரிந்தது அவளுக்கு சரியில்லாததைத் தான் என் சதிக்கவேண்டும்? அதுவும் சுரணை வந்த பிறகு ஏன் சகிக்க வேண்டும்? தரையில் கிடத்தச் சொல்லி ஏன் கேட்கக் கூடாது என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்தாளேயொழிய அதற்கான செயலெதிலும் இறங்கவில்லை அவள். செயலெதிலும் இறங்காத அவள் சித்தை வேறு பல விஷயங்களைச் சிந்திக்க ஆரம்பித்தது.

“இவர் என்னைத் தூக்கித் தோள்மீது போட்டுக் கொண்டு வந்தபோது வழியில் யாராவது பார்த்திருப்பார்களா? தோப்பின் முகப்பில் நிறுத்தப்பட்ட நான்கு கோட்டை வீரர்களும் பார்த்திருந்தால் என்ன செய்வது? இது தந்தையின் காதுக்கு எட்டிவிட்டாள் என்று இந்த வழிகளில் நினைத்த அவள் சிறிது அச்சத்துக்கு உள்ளானாள். மறுவிநாடி அந்த அச்சம் மறைந்து வெட்கமும் இன்பமும் தலைதூக்கின. ‘ஆமாம்! இப்படி அவர் தோளில் ஒரு பெண்ணை எப்படித் தூக்கிப் போட்டுக்கொண்டார் தைரியமாக? அதுவும் நான் அவர் தோளில் குப்புறத்தானே கிடந்திருப்பேன்? என் கழுத்து, உடல்… சேசே! இப்படி இரண்டொரு விநாடிகள் நிக்கனத்து அவள் இன்பத்துக்கும் வெட்கத்துக்கும் உள்ளானதால் அவள் முகம் சற்றே சிவந்தது. அதுவரை வீரபாண்டியன் விழிகளைச் சந்தித்து நின்ற அவள் விழிகள் சட்டென்று மூடிக்கொண்டன.

வீரபாண்டியன் மனோநிலையும் சிறிது சங்கடத்தில் தானிருந்தது. அப்பொழுதும் இளவேனில் வெண்மதி தன் கதிர்கள் முழுவதையும் அவள் முகத்தின் மீது பாச்சியிருந்ததால் வெட்கத்தால் அவள் முகம் சிவந்ததுகூடப் புரியவில்லை இளவரசனுக்கு. அவள் விழிகள் தன் விழிகளைச் சந்தித்ததும் அதுவரை ஏற்பட்ட சண்டை நிகழ்ச்சிகள், ஆபத்து அனைத்தும் அவன் புத்தியிலிருந்து மறைந்துவிட்டதன் விளைவாக அவன் மெள்ள மெள்ளத் தனது கையில் இருப்பது ஒரு பருவப் பெண் என்பதை உணரவும் முற்பட்டான். அன்றுவரை எந்தப் பெண்ணையும் தொட்டறியாத காரணத்தால் அன்றுவரை எதற்கும் நடுங்காத அவன் கைகளில் லேசான நடுக்கமொன்று கண்டு மறைந்தது. அதுகூட அவனுக்குப் பெரும் விந்தையாயிருந்தது. எத்தனையோ வீரர்களின் வேல்களுக்கு அஞ்சாத அவன் சித்தம் இளநங்கையின் முகத்தின் இரு கூர் வேல்களுக்கும், முழு நிலவுக்கும் அஞ்சிவிட்டதை நினைத்துப் பார்த்த அந்தப் பாண்டியவீரன், பெண்ணொருத்தி கிட்டி வந்துவிட்டால் வீரம் என்ற சொல்லுக்குப் பொருளில்லையென்றே முடிவு செய்தான்.

வெண்மதி ஆகாயத்திலிருந்தும் மூடிக் கிடந்த அவள் விழிகளைக் கண்ட இளவரசன், “கதிரவனைக் கண்டு மலரும் கமலங்கள் வெண்மதியைக் கண்டதும் மூடிக் கொள்வது இயற்கைதானே” என்று சொல்லிக்கொண்டு, “மூடியிருந்தாலென்ன திறந்திருந்தாலென்ன? தாமரையின் அழகு அழகுதான், அது கெடுவது இல்லை” என்று நெஞ்சத்தில் நினைத்தவண்ணம் தன் கையில் கிடந்த அவன் மீது கண்களை நன்றாக ஓட்டினான். வெண்மதியின் ஒளியில் அதிக வெண்மையாகிவிட்ட அவள் நுதலில் விளையாடிய இரண்டொரு குழலிழைகள் அந்த நுதலுக்கு எத்தனை அழகைக் கொடுத்தன என்பதைப் பார்த்த அவன் முகத்தில் இன்ப ரேகை விரிந்தது. அந்த நுதலை அடுத்து வளைந்து கிடத்த புருவங்கள், அவற்றுக்கும் கீழே இரண்டு கிளிஞ்சல்கள் போல் மூடிக்கிடத்த கண் இரப்பைகள், அளவோடு இருந்த நாசி இவையெல்லாம் அழகுதானென்றாலும், செழுமிய அவள் கண்களும், செக்கச் செவேலென்று தெள்ள அவிழ்ந்து அழைப்பன போலிருந்த அந்த உதடுகளும் அவனை அப்படியே பிரமிக்கச் செய்தன. அந்த உதடுகளும் அவனது நிதானத்தையும் உதறியிருக்க வேண்டும். சுவாதீனமாயிருந்த அவன் வலது கை அவள் மயக்கத்தைத் தீர்க்க முற்பட்டது போல், மறுபடியும் இழேயிருந்து நீரை எடுத்து, அவள் முகத்தில் மெல்ல அவன் விரல்கள் தடவின.

அவன் கை குவித்து மீண்டும் நீரை எடுத்து வாயில் புகட்டிய பின்பும் மீளாமல் உதடுகளிலேயே இரண்டு விரல்கள் தங்கிவிட்டதை உணர்ந்த இளநங்கை எது செய்வதென்று அறியாமல் தத்தளித்தாள். அவளுக்கு அப்பொழுது முழு சுரனை வந்துவிட்டதால், அவள் உடலில் ஏதேதோ உணாச்சிகள் மின்னல்போல் பாய்ந்து சென்றன.

இளநங்கையின் சங்கடத்தை நிவர்த்திக்க முயன்ற இளவரசனின் செயல்கள் அவள் சங்கடத்தை உச்ச நிலைக்கே கொண்டுபோயின. முதுகுக்குக் குறுக்கே விழுந்து கழுத்துப் புறம் தவழ்ந்து தலையைத் தாங்கிய உறுதியான கையின் ஸ்பரிசமே அவளுக்கு வேதனையைத் தந்தது. அவள் கண்கள் மூடிக்கிடந்ததை எண்ணி அவன் நீரை எடுத்து உதடுகளில் புகட்டிய போதே நிதானத்துக்கு வந்திருந்தாள் இளநங்கை, “நீரைப் புகட்டியயின் கைக்கு என் உதடுகளின் மீது என்ன வேலை? விரல்களை அகற்றுவது தானே? ஆண் பிள்ளைகளை நம்பக்கூடாது. பெரும் திருடர்கள்,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் கொற்கையின் அழகி. அந்தச் சமயத்தில் அதரங்களை அசைப்பதற்கும் பயமாயிருந்தது அவளுக்கு. அதரங்களை அசைத்தால் அவை அந்த வாலிபன் விரல்களில் தவழுமே என்ற நினைப்பால் அப்படியே சுரணையற்றது போல் இருந்தாள் அவள், மீண்டும் அவன் இரண்டாம் முறை நீரை தெளித்தபோது புதிதாகக் கண் விழித்தது போல் நாற்புறமும் பார்த்தாள். அவளுக்குத் தான் இருக்குமிடம் புரிந்தது. தூரத்தில் தெரிந்த சிறு மண்டபமும் சற்றுத் தூரத்தே கேட்ட தோப்பு இலைகளின் சலசல வென்ற சத்தமும் பொருதையாற்றங்கரையில் இருப்பதை வலியுறுத்தின அவள் சித்தத்துக்கு, அதுவும் அவன் படித்துறையின் அடிப்படையில் உட்கார்ந்திருப்பதையும் புரிந்து கொண்டாள் இந்தச் சமயத்தில் பொருதையின்பீதுகூடப் பெரும் கோபமேற்பட்டது. கோட்டைக் காவலன் மகளுக்கு “பொருதை! எதற்காக இப்படிச் சத்தம் செய்யாமல் ஓடுகிறாய் தீ: இலருக்கு நீயும் உடந்தையா?” என்று சீற்றத்துடன் கேட்பது போல் மனத்திற்குள் மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டாள். இதே படித்துறையில் இறங்கித் தான் நீராடியபோதெல்லாம் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டு இளவரசன், உட்கார்ந்திருந்ததையும், காலை எடுத்து வைத்து மஞ்சள் பூசியபோது அவன் நோக்கியதையும் தினைத்துப் பார்த்த இளநங்கை, “பொருநையும் இவருக்குக் காகயாள்தான். சந்தேகமில்லை,” என்று ஊர்ஜிதம் செய்து கொண்டாள். அப்பொழுதெல்லாம் இளவரசனைப் பார்த்து அச்சமுற்று ஓடியவள் இப்பொழுது எப்படி வீண் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு அவன் காலில் படுத்துக் கிடக்கிறாள் என்று கேட்டு நகைப்பது போல் பொருநைக் கரையிலிருந்த தோப்பு மரங்கள் காற்றில் இலைகளை அடிக்கடி சத்தப்படுத்திக் கலகலவென நகைத்தன.

அந்த நகைப்பின் விளைவாகவோ என்னவோ இள நங்கை இளவரசனிடமிருந்து எழுந்திருக்க முயன்றாள் ஆனால் இளவரசன் அவளை எழுந்திருக்கவிடவில்லை “மெல்ல எழுந்திருங்கள். அதிர்ச்சியில் வரும் மயக்கம் எளிதில் விலகுவதில்லை ” என்று கூறி அவள் இடையில் தன் கையைச் செலுத்திப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டான்.

அந்தப் போலி ஜாக்கிரதை அவளுக்கு நன்றாகப் புரிந்தது. அவள் பொருதையின் அழகைப் பார்ப்பது போல் நீரோட்டத்தை நோக்கிப் புன்னகை கொண்டாள். சிறிது நேரம் இருவரும் மௌனம் சாதித்தார்கள், அபாயம் நிச்சயமாக அதற்குள் தீர்ந்துவிடவில்லையென்ற பயம் அவள் உள்ளத்தை ஆட்கொள்ளவே இளவரசனை நோக்கித் திரும்பி “வீராவி?” என்று ஏதோ கேட்க முற்பட்டாள்.

இளவரசன் இதழ்களில் புன்முறுவல் தவழ்ந்தது. “தற்சமயம் இங்கு வரமாட்டான். நம்மைத் தொந்தரவு செய்யமாட்டான்” என்றான்.

இளநங்கை பொருதையிடமிருந்து தன் பெருவிழி களைத் திருப்பினாள். “ஏன் வரமாட்டான்? வீரரவியால் உங்களுக்கு….?” என்று வினவியவளை இடைமறித்த இளவரசன், “வீரரவியால் எனக்கு எந்தக் கஷ்டமுமில்லை; ஆனால் சிறு நஷ்டம் உண்டு, பெரும் லாபம் உண்டு” என்று கூறினான். அவன் குரலில் அந்தப் பழைய நிதானம், உறுதி இரண்டும் திரும்பிவிட்டன.

“என்ன நஷ்டம்? என்ன லாபம்?” என்று வினவினாள் இளநங்கை.

இளவரசன் அந்தப் பழைய நிதானமான உறுதியான குரலில் லாபத்தையும் விளக்கினான், நஷ்டத்தையும் விளக்கினான்.

அந்த விளக்கத்தைக் கேட்ட இளநங்கை அப்படியே பொருநையின் படியில் செயலற்று உட்கார்ந்து விட்டாள். பிறகு திடீரென்று எழுத்து ஓட முற்பட்டாள், இளவரசனின் இரும்புக்கை அவளை இழுத்து நிறுத்தியது. கையைப் பிடித்து இழுத்த இளவரசனை நோக்கித் திரும்பிய இள நங்கையை, “பேசாமல் உட்கார். மேலே ஆபத்திருக்கிறது. உம்!” என்று அதட்டியது அவன் குரல்.

Previous articleRaja Muthirai Part 1 Ch10 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch12 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here