Home Historical Novel Raja Muthirai Part 1 Ch12 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch12 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

70
0
Raja Muthirai Part 1 Ch12 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch12 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch12 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 12 முத்தும் பாண்டி நாடும்

Raja Muthirai Part 1 Ch12 |Raja Muthirai Part1|TamilNovel.in

இரவின் இரண்டாம் ஜாமம் அப்பொழுது முற்றி விட்ட காரணத்தால், பரஸ்பரம் உணர்ச்சிகளைப் பற்றி கொடுத்து பொருநையின் படித்துறையில் உட்கார்ந்திருந்த அவ்விருவரையும் அதிக சப்தமேதுமற்ற சூழ்நிலையே கவ்விக் கிடந்தது. படித்துறையின் கடைசிப் படியில் இருவரும் உட்கார்ந்திருந்ததால் அவர்கள் கால்களைப் பொருநையின் நீர்க்கரம், கல்யாண மணைமீதிருக்கும் மகளுக்கும், மருமகனுக்கும் பால் தொட்டு ஒற்றும் தாயைப் போல் சில்வென்று தொட்டுச் சென்றாலும், அந்தத் தாயின் நிலைபோவவே பொருநையும் சலசலப்பைச் சிறிதும் காட்டாமல் மௌனமாகவும் அமைதியுடனும் படிக்கடியில் ஓடினாள். படித்துறையைத் தொட்டுக் கொண்டு ஓரத்தில் ஓடியதாலும், ஓரத்தில் ஆழமும் முழங்காலிலிருந்து இடுப்பு வரையிலுமிருந்தாலும் அந்த இடத்தில் நீரின் சப்தமில்லையே தவிர, ஆற்றின் நடுவில் அரித்து ஓடிக் கொண்டிருந்த சிறுகால் மட்டும் சலசலவென்று சிறு சப்தத்தைக் கிளப்பி, மணப்பந்தலின் ஓரங்களில் நின்று வெட்கநகை நகைக்கும் சிறு பெண்ணின் மகிழ்ச்சியொலியை நினைவூட்டியது. ஆற்றின் படித்துறைக்கு மேலேயிருந்த தோப்புகூட நிசப்தமாயிருந்தாலும் இடை யிடைவே மெல்லிய காற்று கிளம்பி இலைகளை அசைத்ததால் சிறிது சப்தம் சிறிது நேரத்துக்கொரு முறை ஏற்படவே செய்தது. ஆற்றுக்கு அக்கரையிலிருந்த முத்தங்காடியில் மட்டும் பேரொலி அப்பொழுதுமிருந்து கொண்டிருந்தாலும் அந்த ஒலி பொருதையின் பெரிய அகலத்தைத் தாண்டி இக்கரை மட்டும் வராததால் பொருநைப் படியில் உடகார்ந்திருந்த இருவரையும் ஏதும் பாதிக்கவில்லை.

ஒலி அதிகமாயிருந்தாலே அதிகமாகப் பாதிக்காத வேளை அது. உணர்ச்சிகள் எழுப்பிய பேரொலிகள் மற்ற ஒலிகள் புலனுக்குள் புகமுடியாத பொன்னான நேரம் அது. வாலிப வயதில் எல்லோருமே அனுபவிக்கும் அத்தகைய அபூர்வ நேரத்தில் பருவ வயதினரான அந்த இருவருமே அந்தச் சமயத்தில் தங்களை அணுகியிருந்த ஆபத்தை மறந்திருந்தார்கள். ஆகவே வீரரவியால் ஏற்பட்ட நஷ்டத் தையும் லாபத்தையும் வீரரபாண்டியன் விளக்க முற்பட்ட போது பெரும் சங்கடமே அடைந்தாள் இளநங்கை.

“வீரரவியால் உங்களுக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம்?” என்று கேட்ட இளநங்கையின் இடையைத் தனது இடது கையால் அணைத்தவண்ணம், “எதை முன்னால் சொல்ல? லாபத்தைச் சொல்லவா? நஷ்டத்தைச் சொல்லவா?” என்று பதில் கேள்வி கேட்டான் இளவரசன்.

இளநங்கைக்கு அவன் கை தனது இடையில் அழுத்திக் கிடந்தது பெரும் சங்கடமாயிருந்தபடியால் அவள் உடனே பதில் சொல்ல சக்தியற்றவனானாள். இரண்டு விநாடி கழித்து, “ஏன் நஷ்டத்தைத்தான் சொல்லுங்களேன்” என்றான்.

“பாண்டிய நாட்டின் பெரும் முத்துக்கள் இருக்குமிடம் தெரியவில்லை. வீரரவி சொல்ல மறுத்துவிட்டான். தற்சமயம் முத்து கையைவிட்டுப் போய்விட்டதென்று நினைக்கிறேன். இந்த நஷ்டத்தைப் பாண்டிநாடு தாங்குவது மிகவும் கஷ்டம்” என்றான் வீரபாண்டியன்.

அந்த நஷ்டத்தைச் சொன்னபோதுகூட அவன் குரலில் அதிகத் துன்பம் தெரியவில்லை. அதைச் சாதாரண நஷ்டத்தை விளக்குபவன் போலவே விளக்கினான். ஆனால், அதைக் கேட்ட இளநங்கையின் இதயத்தில் மட்டும் பெரும் துன்பம் ஏற்பட்டது. அந்த முத்துக்களைக் கண்டுபிடிக்கத் தானே பாண்டிய மன்னர் உங்களை இங்கு அனுப்பியதாகச் சொன்னீர்கள்!” என்று வினவினாள் துன்பம் கலந்த குரலில்.

“ஆம், அதற்காகத்தான் அனுப்பினார்” என்றான் வீர பாண்டியன்.

“அதை இனிமேல்…” என்று துவங்கிய இளநங்கையை இடைமறித்த இளவரசன், “கண்டுபிடிக்காத நிலை ஏதும் ஏற்படவில்லை. வீரரவி இன்னும் கொற்கையில் தானே இருக்கிறான்?” என்று கூறினான். எப்படியும் முத்துக்களைக் கண்டுபிடித்து விடலாம் என்ற உறுதி அவன் சொற்களிலும் குரலிலும் ஊறியிருந்ததை இளநங்கை கவனித்தான். மேற்கொண்டு அவள் ஏதும் கேள்வி கேட்காவிட்டாலும் இளவரசனே கூறினான். “இன்று அவனை அவனது மாளிகையில் சந்திக்கும் வரையில் கொற்கையைப் பிடிக்கவும், முத்தங்காடியைச் சூறையாடவும் ஏற்பாட்டோடு அவன் வந்திருப்பானென்று எனக்குத் தெரியாது ஆகையால்தான் அவனை உயிருடன் விட்டேன். இல்லையேல் இத்தனை நேரம் சேரநாடு மன்னலை இழந்திருக்கும்” என்று.

இளவரசனின் இந்தச் சொற்களைக் கேட்ட இளநங்கை வியப்பின் எல்லையை அடைந்தான். விஷயத்தை அடியோடு தலைகீழாக மாற்றி இளவரசன் சொன்னதாகப்பட்டது அவளுக்கு. முத்தங்காடியைச் சூறையாட வீரரவி செய்திருக்கும் ஏற்பாட்டைத் தான் ஏற்கனவே அறிந்திருப்ப தாகவும், முத்தங்காடியில் தானும் யவன வீரர்களையும் பாண்டிய வீரர்களையும் பாதுகாப்புக்கு வைத்திருப்பதாகவும் இளவரசன் சற்று முன்பு மண்டபத்தில் கூறியதை எண்ணிப் பார்த்தாள் இளநங்கை. தவிர மாடிக் கைப்பிடிக்கு அருகில் ஒரு கையில் விளக்கும் ஒரு கையில் வேலு மேந்தி வீரரவி நின்றதும், வாளைக் கீழே போடும்படி அவன் இளவரசனுக்கு உத்தரவிட, இளவரசன் வாளை எறிந்து விட்டதும், பிறகு வீரனொருவனை வேலெறிந்து இளவரசனைக் கொன்றுவிட வீரரவி கட்டளையிட்டதும் அவள் மனக்கண் முன்பு தத்ரூபமாக எழுந்திருக்கவே ‘வீரரவியை இவர் ஏதோ மாதிரிப் பேசுகிறாரே;’ என்றும் தினைத்தாள் அவள்.

அவள் மனத்திலோடிய எண்ணங்களை இளவரசன் சந்தேகமறப் புரிந்து கொண்டிருக்கிறான் என்பதை அவன் அடுத்த சொற்கள் நிரூபித்தன. அவன் இதழ்களில் அந்த நேரத்தில் சிறிது புன்முறுவலும் அரும்பியது. அவள் இடையை அவன் கை அளவுக்கு மீறியே அழுத்தியது, அந்த நிலையில் அவன் பழைய மரியாதைச் சொற்களையும் கைவிட்டுச் சொந்தத்துடன் பேசவும் முற்பட்டு, இளநங்கை! உன் சந்தேகம் சரியானதுதான். உண்மையில் முத்தங்காடியைப் பாதுகாக்க தான் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சாதாரணக் காவலைத் தவிர அதிகக் காவல் ஏதுமில்லை. இங்கே வீரரவியின் உள்ளத்தில் சற்று பயத்தை விதைக்கவும். அவன் சூறையாடுவதை முடிந்தால் தேக்கவுமே மண்டபத்தில் உண்மையைத் திரித்துக் கூறினேன். ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் முத்தங்காடிக்கான பாதுகாப்பைச் செய்துவிடுவேன். அதற்கான அவகாசத்தைப் பெறவே அங்கு ஒரு பொய்யைச் சொன்னேன். ஒன்று மட்டும் நிச்சயம். வீரரவி என்னைக் கொன்றாலொழிய இந்த முத்தங்காடியையும் சூறையாட முடியாது, கொற்கைக் கோட்டையையும் பிடிக்க முடியாது,” என்று உறுதியுடன் கூறினான். மேலும் கேட்டான். அவன் என்னைக் கொன்றுவிட முயன்றதும் உனக்குத் தெரியுமல்லவா?” என்று.

“ஆம், ஆம். உங்களை வாளைக் கீழே எறியச்செய்து திராயுதபாணியிருக்கும் போது வேலெறிய உத்தரவிட்டான்,” என்ற இளநங்கையின் பதிலில் ஆத்திரம் ஒலித்தது.

ஆனால் அவன் ஆத்திரத்தைக் கவனிக்காமலே சொன்னான் வீரபாண்டியன், “அதிலும் வீரரவி ஒரே ஒரு தவறு செய்தான்,” என்று.

“என்ன தவறு?” இளநங்கையின் கேள்வியில் மண்டபப் போரின் முடிவு மாறியதற்குக் காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் இருந்தது.

“என்னை வாளைக் கீழே எறியச் சொன்னான், உன் மார்புக்கு வேலைக் குறிவைத்து…” என்று இழுத்தான் இளவரசன்.

“ஆம். அதுதான் எனக்குத் தெரியுமே,” என்றான் இளநங்கை.

“வாளைத்தான் எறியச் சொன்னான்,” என்று “வாளைத்தான்’ என்ற சொல்லில் அந்த ‘தான்’ பகுதியை நன்றாக அழுத்தி உச்சரித்தான் இளவரசன்.

இனநங்கை மௌனமாக இருந்தாள் ஒரு கணம். பிறகு கேட்டாள். வேறு எதை எறியச் சொல்லவில்லை?” என்று

“வாளைவிட அபாயமானதை.”

“வாளைவிட அபாயமானதா?”

“ஆம்”

“எது அது?”

இளவரசன் அவள் இடையிலிருந்த தனது இடது சையை எடுத்து அவள் வலது கையை இழுத்துத் தனது வலது கையால் பிடித்துக் கொண்டான். பிறகு மிகவும் நிதானமும் பெருமையும் ஒலித்த குரலில் சொன்னான், “ராஜமுத்திரையை” என்று, அதைச் சொல்லி முடித்த சமயத்தில், நல்ல வேனை இளநங்கை அவன் முகத்தைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் பேயின் முகத்தைவிட அது பயங்கரமாக மாறியிருப்பதைக் கவனித்திருப்பாள். அந்தப் பயங்கர முகத்தைப் பார்க்காமல் அவள் பொருதையின் படித்துரையோர மந்தகதியைப் பார்த்துக் கொண்டிருந்ததால் மீண்டும் கேட்டாள், “ராஜமுத்திரையையா? என்று.

“ஆம்.” இளவரசன் குரல் மிகக் கடினமாயிருந்தது அந்தப் பதிலைச் சொன்னபோது.

“ராஜமுத்திரையைத்தான் நீங்கள் என்னிடம் கொடுத்துத் தந்தையிடம் கொடுக்கச் சொன்னீர்களே?” என்று வினவினாள் அவள்.

“ஆம்”

“அதை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லையே?

“இல்லையே”

“அப்படியானால்!” இளநங்கையின் கேள்வியில் சந்தேகம் ஒலித்தது.

வீரபாண்டியன் அவள் சந்தேகத்தை விளக்கினான். விளக்கியபோது அவன் குரல் மிகவும் கடுமையாயிருந்தது. பெண்ணே! உன்னிடம் கொடுத்த ஆபரணத்தில் மட்டும் எனது முத்திரை இல்லை. அந்தப் பாண்டிய நாட்டு முத்திரை இப்பொழுது கொற்கையின் முத்திரை. பழைய வரலாறு காட்டும் குறிப்புப்படி பாண்டிய நாட்டு இளவரசனுக்கு ஏற்பட்ட தனி ராஜமுத்திரை அது. அதை நான் அந்தப் பொன்னும் முத்தும் கலந்த அந்தச் சின்னஞ்சிறு அடையாளத்தில் மட்டும் பொறித்தேனென்று நினைக்கிறாயா? இல்லை, இல்லை. என் கச்சையில் சதா நான் செருகியிருக்கும் கோடரியை நீ பார்த்திருக்கிறாயல்லவா? அதிலும் பொறித்திருக்கிறேன். அந்தத் தங்கக் கோடரியில் பானையும் செதுக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு அது சிறு கோடரிதான். ஆனால் உயிரை மாய்க்க அதைவிடச் சிறந்த சாதனம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. என் கை வேகத்தின் வீச்சுக்கெட்டும் எந்தத் திசையில் யாரிருந்தாலும் அவன் உயிரை உறிஞ்சக் கூடியது என் முத்திரை பொறித்த அந்தப் பொற்கோடரி, வீரரவி புத்திசாலியாயிருந்தால் முதலில் என் வாளைக் கீழே போடச் சொன்னதைவிட அந்தப் பொற்கோடரியை, என் ராஜமுத்திரையை, போடச் சொல்லியிருக்கவேண்டும்.” என்ற வீரபாண்டியன் சொற்களில் வேகம் மிதமிஞ்சிக்கிடந்தது.

அவன் பொற்கோடரியைப் பற்றிப் பேசியபோது இருந்த வேகத்தைக் கண்டு நடந்திருக்கக்கூடியது என்ன வென்பதை ஓரளவு உணர்ந்துகொண்ட இளநங்கை, “அப்படியானால் கோடரி…” என்று தயங்கிச் சொன்னாள் அந்த இரண்டு சொற்களையும்.

“வீரரவியின் தோளிவிருக்கிறது” என்று பதிலி அத்தான் இளவரசன்.

“தோளிலா!” இளநங்கை புரிந்தும் புரியாததுபோல் கேட்டாள்.

“ஆம்.” இந்த ஒரு வார்த்தைக்குமேல் பதில் சொல்ல வில்லை இளவரசன்.

அந்த மண்டபத்தில் நடந்த விபரங்களைச் சொல்ல மறுக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்திருந்தும் அவற்றை அறிந்துகொள்ளத் துடித்தான் அவள். பத்துப் பன்னிரண்டு வீரர்களையும் அவர்கள் மன்னனையும் சமாளித்து அந்த மண்டபத்திலிருந்து மீள்வது சாதாரண மனிதன் செய்யக் கூடிய காரியமல்ல என்பதை அவள் சந்தேகமற உணர்ந்திருந்தாள். தவிர வீரரவி தனது வீரனை வேலெறிய உத்தரவிட்ட பின்பு இளவரசனுக்குக் கிடைத்திருக்கக் கூடியது ஒரு விநாடியே என்பதிலும் அந்த ஒரு விநாடிய இளவரசன் ஏதும் செய்ய முடியாதென்பதிலும் சந்தேகமில்லை அவளுக்கு. ஆகவே இளவரசனும் தப்பி, தன்னையும் தப்பவைத்த விந்தையை அறிய விரும்பிய இளநங்கை, “நடத்ததை விளக்கமாகச் சொல்லுங்கள்,” என்று கேட்டான், கேட்டது மட்டுமல்ல, அவன் கையில் சிறைப்பட்டு கிடந்த தனது கையைச் சிறிது சுழற்றவு செய்தாள்.

வீரரவியையும் அவன் வீரர்களையும் சமாளித்த வாலிபனான வீரபாண்டியனுக்கு அந்த மலர்க் கையின் சுழற்சியிலிருந்து விடுபட முடியாததால் அவன் மெள்ள விவரித்தான்: “அங்கு நடந்ததில் சொல்வதற்கு அதிகமில்லை. உண்மையில் அந்த மாளிகை நிகழ்ச்சி எனக்குத் தோல்விதான். அங்கிருந்த நிலையில் என் உயிரையும் உன் உயிரையும் காப்பாற்றுவதுதான் எனக்கு முக்கியமாயிருந்தது. ஆகவே வாளைக் கீழே போட்டவுடன் வீரரவியின் வீரன் வேலெறிவதற்கு முந்தியே என் இடையிலிருந்த கோடரியை எடுத்து வீரரவியின் வேல் பிடித்த தோளை நோக்கி எறிந்து விட்டேன். தோளில் கோடரி ஆழப்பாய்ந்துவிட்டால் எந்த வீரன்தான் என்ன செய்ய முடியும்? வீரனான வீரரவியின் வேல் தானாகக் கீழே வீழ்ந்தது. அடுத்தபடி குனிந்து வாளை நான் எடுத்துக் கொண்டேன். வீரரவி அதே சமயத்தில் கோடரி பாய்ந்த வேகத்தில் கைப்பிடியிலிருந்து விளக்குடன் குப்புற விழுந் தானாகையால் அவனைப் பிடிக்கவும் காக்கவும் வீரர்கள் ஓடினர். இடையில் கிடைத்த சில விநாடிகள் எனக்கும் பெரும் அவகாசமளித்தபடியால் என்னை நோக்கி வந்த வீரர்களிருவரை மலைநாடு அனுப்பாமல் மேல்நாடு அனுப்ப முடிந்தது. மண்டபத்தில் மூலைகளிலிருந்த இரு வெண்கல விளக்குகளை அணைத்து அவற்றைக் கீழே தள்ளவும் முடிந்தது. இதனால் சாளரத்தின் மூலம் பட்டை பட்டையாக இரண்டொரு இடங்களில் விழுந்த நிலவைத் தவிர மண்டபத்தில் இருள் கவித்துவிட்டபடியால் உன்னை தாக்கிக்கொண்டு தப்பி வருவது பெரும் விந்தையல்ல கோட்டைக் காவலர் மகனே! அந்தச் சண்டையில் உன்னைக் காப்பாற்றியதைத் தவிர, வேறு குறிப்பாகக் கூறக் கூடிய செயல் ஏதுமில்லை. உன்னைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தேன், கோழையைப்போல தோப்பின் விளிம்புக்கு அங்கு நின்றிருக்க வேண்டிய நமது நான்கு வீரர்களும் இல்லை. இருவர் மாண்டு கிடந்தார்கள், வீரரவியின் ஆட்கள்தான் அவர்களைக் கொன்றிருக்க வேண்டும்! மற்ற இருவர் காணவில்லை. ஆகவே உன்னைத் தூக்கிக் கொண்டு தோப்பில் புகுந்து ஒளித்து மறைந்து இங்கு வந்து சேர்ந்தேன். இந்தச் சண்டையில் முத்துக்களைக் கண்டு பிடிக்காதது ஒரு நஷ்டம், என் ராஜமுத்திரை சேரமன்னன் தோளில் தங்கிவிட்டது இன்னொரு நஷ்டம்.” இப்படி மண்டப நிகழ்ச்சிகளை விவரித்த வீரபாண்டியன் பிறகு பெரு மௌனத்தில் இறங்கினான்.

இப்படி நடந்ததை இளவரசன் சொல்லக் கேட்ட இளநங்கையோ வியப்பின் ஆழத்தில் மூழ்கினாள். அவன் சொன்னதைவிடச் சொல்லாதது அதிகமென்பதை அவள் உணர்ந்தான். ஒரே மனிதன், எதிரியின் பல வீரர்களுக் கிடையில் நின்று சமாளித்து, அவர்கள் வலையிலிருந்து தானும் மீண்டு, இன்னொரு பெண்ணையும் காப்பது சுலப மல்லவென்பதும், மின்னல் வேகத்தில் மண்டபத்தின் நிகழ்ச்சிகள் நடத்தேறியிருக்க வேண்டுமென்பதும் நன்றாகப் புரிந்தது இளநங்கைக்கு, மண்டபத்தில் நடந்தது அவன் மனக்கண்முன்பு விவரமாக எழுந்தது. வீரபாண்டியன் வாளைக் கீழே போட்ட மறுவிநாடி இடையிலிருந்த பொற் கோடரியை எடுத்து மின்னல் வேகத்தில் வீசிவிட்டது, வீர ரவி அலறி வீழ்ந்தது, வீரர்கள் அவனைத் தாங்க ஓடியது, வீரபாண்டியன் வாளெடுத்து வீரரை வெட்டி, வென்கல விளக்குகளைச் சாய்த்து உருட்டி, தன்னை தூக்கிக்கொண்டு ஓடியது, அனைத்தும் அவளுக்கு விளங்கவே, மயக்கமாயிருந்த சமயத்தில் அவள் காதுகளில் விழுந்த பல ஒலிகளுக்குக் காரணமும் புரிந்தது அவளுக்கு. அத்துடன் இத்தகைய அசாதாரணச் செயலைச் செய்த இளவரசன் தனக்கு ஏற்பட்டதாகச் சொன்ன இருவித நஷ்டத்தைப்பற்றி அவன் துன்பப்படுவது எத்தனைப் பொருத்தம் என்பதையும் எண்ணியதால் பெருமூச்சு விட்டாள் அவள். ஆகவே அவளும் சிறிது மௌனம் சாதித்துவிட்டுக் கேட்டாள், “நஷ்டத்தைச் சொன்னீர்கள், லாபத்தைச் சொல்லவில்லையே!” என்று.

வீரபாண்டியன் இரு கைகளும் அவளைத் திடீரென்று சுற்றி வளைத்து அவள் உடலைத் தன்னை நோக்கித் திருப்பின.

முகமும் முகமும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில் அவன் கண்கள், அவள் கண்களைக் கூர்ந்து நோக்கின, அவன் உதடுகள், அவள் உதடுகளுக்கு வெகு அருகில் வந்து, “லாபம் இது” என்ற சொற்களை வெகு வேசாக உதிர்த்தன. அவன் முகத்தில் அந்தப் பயங்கரப் பேய்ப் பார்வை மறைந் திருந்தது, பழைய நிதானமான சாதாரணப் பார்வைகூட அப்பொழுதில்லை. இரவும் நிலவும் இளநங்கையுமாகச் சேர்ந்ததால், அவன் பார்வையில், செயலில், எண்ணத்தில் எல்லாவற்றிலுமே பெரும் மாறுதல் விளைந்திருந்து. அவன் கைகள் அவளைச் சுற்றி இரும்பு வளையங்கள்போல் சென்றன. இளதங்கையின் உணர்ச்சிகளும் கொந்தளித்துக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து விடுபட அவள் சட்டென்று திமிறிக்கொண்டு எழுந்திருந்து ஓட முயன்றாள். அந்தச் சமயத்தில்தான் இளவரசன் அவள் கையைப் பிடித்து இழுத்து, “உம்…மேலே ஆபத்து இருக்கிறது!” என்று எச்சரித்ததல்லாமல், அவளைப் பலவந்தமாக இழுத்துத் தன் அருகில் உட்கார வைக்கவும் செய்தான்.

அடுத்த விதாடி வீரபாண்டியன் நிலை அடியோடு மாறிவிட்டதை உணர்ந்தான் இளநங்கை, இளவரசன் எதையோ உற்றுக் கேட்பதைப் போல் தோன்றியது கோட்டைக் காவலன் மகளுக்கு. அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை அவன் தீர்மானிக்கும் முன்பே அவளைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பொருநை நீரில் இறங்கி விட்டான் இளவரசன். அடுத்த சில விநாடிகளில் தோப்பில் பேரரவம் கேட்டது. அவளுடன் இளவரசன் துரிதமாக நடந்தான், பொருதை ஓடிக் கொண்டிருந்த கிழக்குத் திசையை நோக்கி இப்படிப் போய்க் கொண்டிருக்கும் போதே படித்துறை மீது தோப்பின் ஓரமாகப் பந்தங்கள் உலாவ ஆரம்பித்து விட்டதைக் கவனித்தாள் இளநங்கை. இளவரசன் சிறிது தூரம் கரையோரமிருந்த நீரிலேயே நடந்து சென்று, பிறகு திடீரென ஆற்றின் குறுக்கே அவளை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான். “அதோ அதோ!” என்ற சொற்கள் ஆற்றின் கரையிலிருந்து எழுந்தன. பந்தங்கள் ஆற்றுக்குள் இறங்கவும் ஆரம்பித்தன.

இளவரசன் எதையும் கவனிக்காமல் இளநங்கையுடன் ஓடியவன் வெகு துரிதத்தில் எதிர்க்கரையை அடைந்து, அங்கிருந்த முத்தங்காடியின் கடைப் பகுதிகளின் பின்புறத்தட்டிகளின் வழியாகப் பதுங்கிப் பதுங்கிச் சென்றான். திடீரென ஒரு தட்டியின் முன்பு வந்ததும் அதைத் தன் கையால் பிரித்து அகற்றி இளநங்கையை உள்ளே செல்லச் சொல்லித் தானும் நுழைந்து, தட்டியைப் பழையபடி சரியாக அமைத்தான். உள்ளே முதலில் சென்ற இளநங்கை தலையை நிமிர்த்தினான், அவ்வளவுதான்! செயலற்று நின்றுவிட்டாள். அவளை நோக்கிப் புன்முறுவல் செய்த முகத்தைப் பார்த்ததும், “நீயா நீயா!” என்று நிலை தடுமாறிச் சொற்களையும் உதிர்த்தான். முத்துக்கும் பாண்டி நாட்டுக்கும், எத்தனை சம்பந்தமென்பது அப்பொழுதுதான் பாத்தது அவளுக்கு.

Previous articleRaja Muthirai Part 1 Ch11 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch13 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here