Home Historical Novel Raja Muthirai Part 1 Ch17 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch17 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

66
0
Raja Muthirai Part 1 Ch17 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch17 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch17 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 17 போதாத சீலையும் போதாத காலமும்

Raja Muthirai Part 1 Ch17 |Raja Muthirai Part1|TamilNovel.in

முழுமதி கழிந்து முழு நாட்கள் இரண்டு ஓடிவிட்ட தாலும், நான்கு நாழிகைகட்குப் பிறகே தேய்மதி தோன்ற வேண்டியிருந்ததாலும், ஆரம்ப இரவு அதிகக் கருமையிட்டுப் புகுந்து, தமிழளித்த அகத்தியருக்குக் கல்யாணக் கோலத்துடன் காட்சியளித்த அகத்தீசுவரர் கொலுவிருந்த அந்தச் சிறு குடிலுக்கும் குடிலைச் சுற்றியிருந்த பொதிய மலை உச்சிகளுக்கும் ஒரு பெரும் கம்பீரத்தையும் அச்சுறுத்தும் தன்மையையும் அளித்திருந்தது. அக்கம் பக்கத்திலும் பின் புறத்திலும் ஆகாயத்தை அளாவி எழுத்திருந்த பெரும் மலைகளின் மடியில் ஒரு பெரும் பாறையின் மீது நிர்மாணிக்கப்பட்டிருந்த சிறு பிரகாரமும் வெளிமண்டபமும் பத்துப் பன்னிரண்டு பேர் தங்குவதற்கான வசதியுடனிருந்தன.

வெளி மண்டபத்தைத் தாண்டியதும் உள்ளிருந்த சிறு பிராகாரம் பக்கங்களிலும் பெரும் பாறைகளால் மூடப் பட்டிருந்ததன் விளைவாக, அப்பிராகராத்தில் மையிருட்டுக் கவிந்து அக்கம்பக்கத்தில் நிற்பவர்கள் ஒருவரையொருவர் அறியமுடியாத நிலையைச் சிருஷ்டித் இருந்தது. அத்தனை கடுமையான இருள் குடில் பிராகராத்தின் பக்கங்களில் அதிகமிருந்தாலும் கர்ப்பக்கிரகத்தில் மூல விக்கிரத்தின் பக்கத்திலிருந்த ஒற்றைச் சிறு விளக்கு வீசிய லேசான ஒளி மட்டும், பிற்காலத்தில் மக்களின் மயர்வு எனும் இருளைக் கிழித்த தமிழ்ப் பீர பந்தங்களின் கருவூல அறிவொனியைப் போல, முன் மண்டபத்தின் இருட்டைக் கிழித்துக் கொண்டிருந்தது.

பாறை மீதிருந்த அச்சிறு குடிலில் முன்புறத்திலும் எழுந்த மலைப் பகுதிகள் அக்காரிருளில் கன்னங்கரேலென்று காட்சியளித்ததால் ஏற்பட்ட பயங்கரத்தை தவிர, அவ்வப்பொழுது மலைக் காடுகளிலிருந்து வந்து கொண்டிருந்த புலிகளின் உறுமலும், பல்வேறு பட்சிகள் கிளப்பிய சப்தங்களும், மலைக்காட்டு மரங்களை ஊடுருவி அசைந்த காற்றின், உச், உச் என்ற கோரக் கூச்சலும் செவி புகுந்ததால், அந்தச் சூழ்நிலை திடமான இதயத்துக்கு கூடப் பெரும் ஆட்டங் கொடுக்கக் கூடியதாய் அமைந்திருந்தது. இத்தகைய சூழ்நிலையில் அக்குடிலுக்குச் சில அடிகள் தள்ளியிருந்த அகத்தியர் அருவி வேறு “சோ வென்ற பேரொலி கிளப்பி, உள்ள பயங்கரத்தை உச்சாணிக்குக் கொண்டு போவதில் முனைத்திருந்தது.

இந்தச் சூழ்நிலையில் அமைந்திருந்த அக் குடிலை அடைந்ததும் சுற்றும் முற்றும் பார்த்த அம்மங்கையரிருவரையும் நோக்கிய அந்த வாலிபன் அவர்களைப் புரவியை விட்டு இறங்கச் சொல்லித் தானும் இறங்கினான். அவர்கள் புரவியைப் பக்கத்திலிருந்த இரண்டு பாறைகளில் கட்டி விட்டுத் தன் புரவியை மட்டும் கட்டாமல் அதன் முதுகைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்துவிட்டு, “இப்படி வாருங்கள்” என்று அகத்தியர் குடிலின் படிகளிருக்குமிடத்தைக் காட்டி மிகுந்த ஜாக்கிரதையுடன் அவர்களை அழைத்துச் சென்றான். குடிலின் முன்மண்டபத்தை அடைந்ததும் உள்ளே கர்ப்பக்கிரகத்தில் காட்சியளித்த அகத்தியர் மூல விக்கிரகத்துக்குத் தெண்டனிட்டு எழுந்திருந்த அந்த வாலிபன், மங்கையரிருவரையும் நோக்கி, “இங்கு புலி, பாம்பு இவற்றின் பயம்தான் உண்டு. வேறு பயமில்லை. புலியும் பாம்புங்கூட அகத்தியர் மண்டபத்துக்குள் வருவதில்லை. நீங்கள் ஏறிவந்த படிகளில்தான் படுத்திருக்கும், நீங்களாக அவற்றைத் தொந்தரவு செய்யாத வரை அவை ஏதும் உங்களைத் தொந்தரவு செய்யாது. இங்கேயே தங்கியிருங்கள். நான் கூடிய சீக்கிரம் வந்து விடுகிறேன். எதற்கும் இந்த இடத்தைவிட்டு வெளியே செல்ல வேண்டாம்,” என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து செல்லக் கிளம்பினான்.

அந்த இருட்டுக்கோ, அந்த மலைகள் விரித்த பேரச் சத்துக்கோ, தனித்து இருப்பதற்கோ, அந்த மங்கையரிருவரும் அஞ்சவில்லையென்றாலும் ஏதோ ஒரு தனித்த இடத்தில் தங்களைத் தங்கவிட்டு அவன் ஏன் செல்கிறான், செல்லுமிடம் எது, என்ற விவரங்களைப் புரிந்து கொள்ள விரும்பினார்களாதலால், அவ்விருவரில் இளநங்கையே அவனை நோக்கி, “வீரரே! நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? எதற்குச் செல்கிறீர்கள்? எப்பொழுது வருவீர்கள்? இவை பற்றி ஏதும் சொல்லவில்லையே…” என்று மெல்லக் கேட்டாள்.

“கொட்டுந்தளம் வரை சென்று வருகிறேன்; அதைப் பற்றி இளவரசர் உங்களிடம் சொல்லவில்லையா?” என்று வினவினான் அந்த வாலிபன்.

இந்த இடத்தில் முத்துக்குமரி சற்றுக் கோபத்தைக் காட்டினாள். “இல்லை, இளவரசர் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. உங்கள் பெயரைக்கூடச் சொல்லவில்லை, உங்களுடன் போகச் சொன்னார். வந்தோம். அவ்வளவு தான்,” என்று கோபம் ஒலித்த குரலில் கூறவும் செய்தாள்.

இதைக் கேட்ட அந்த வாலிபன் சிறிது சங்கடத்துக் குள்ளானான். பாண்டிய நாட்டு இளவரசியிடமோ அல்லது கோட்டைக் காவலர் மகளிடமோ எதையுமே சொல்லாமல் தன்னுடன் அனுப்பிவிட்டதைப்பற்றி, அவ்விருவரும் சினங்கொண்டால் அதில் தவறேதுமில்லையென்று நினைத்ததால், அந்தச் சினத்தை ஆற்றும் வகையில் பேசத் தொடங்கி, “என் பெயர் அப்படியொன்றும் பிரமாதமானதல்ல. சுத்தமான தமிழ்ப் பெயரும் அல்ல,” என்றான் குழப்பத்துடன்.

அவன் பதில் இரு மங்கையருக்கும் வியப்பை அளித்த தால் இளநங்கையே கேட்டாள். “நீங்கள் தமிழரல்லவா!” என்று, வியப்பு குரலில் ஒலிக்க.

“ஒருவகையில் தமிழன்தான்” என்றான் அந்த வாலிபன் மெல்ல நகைத்து.

“ஒருவகையில் தமிழன் என்பது பெரிய விசித்திர என்றாள் முத்துக்குமரி.

இதில் விசித்திரமேதுமில்லை, நான் தமிழ் நாட்டில் பிறக்கவில்லை. பிறந்தது சிங்களம், இருந்தது கடாரம் இருப்பது தமிழகம், மூதாதையர் தமிழர்” என்று விவரித் தான் அந்த வாலிபன்.

அவன் விசித்திர வாழ்க்கையைக் கேட்ட முத்துக்குமரி பிரமித்தாள். “உங்கள் பெயர்?” என்று வினவினாள்.

அந்த வாலிபன் சற்றுச் சிந்தித்தான். அவன் முகத்தில் விளையாட்டுக் களையும், சிறுபிள்ளைத்தனமும் பெரிதும் சுடர்விட்டன. கடைசியாகச் சொன்னான், “இத்திரபானு என்னு.
அப் பெயரை கேட்ட இளநங்கை வியப்பைக் காட்ட வில்லை. ஆனால் முத்துக்குமரியின் இதயத்தில் பெரும் பிரமிப்பு மட்டுமின்றி வியப்பும் படர்ந்தது. நடுக்கத்துடன் அவள் நாவிலிருந்து சொற்கள் உதிர்ந்தன. “அப்படியானால் நீங்கள் சந்திரபானுவின் ” என்று இழுத்தாள்.

“மகன்” என்று முத்துக்குமாரியின் வாசகத்தை முடித்த அந்த வாலிபன், “நான் யார் என்பது அத்தனை முக்கியமல்ல. தற்சமயம் தான் வீரபாண்டியத் தேவரின் அடிமை அவர் சொற்படி கேட்கவேண்டியவன். உங்களைக் கொட்டுந்தளத்துக்கு அழைத்துச் செல்ல எனக்கு உத்தரவு கொட்டுத்தளத்தைப்பற்றி உங்களுக்கு இளவரசர் சொன்னாரோ என்னவோ எனக்குத் தெரியாது. இந்தப் பொதிய மலைக் கூட்டத்துக்கு இடையேயுள்ளது சிறு சமவெளித் தட்டு, பீடபூமி. அதற்கு இப்பொழுது கொட்டுத்தனம் என்று பெயரிட்டிருக்கிறோம். அந்தக் கொட்டுந்தனத்தில் பெரும் முரசுகள் நான்கு இருக்கின்றன. சிறு காவல் படையும் இருக்கிறது. ஆனால் அந்தக் காவல்படை பெரும் எதிர்ப்புகளைச் சமானிக்க வல்லமையுள்ளதல்ல. கொட்டுந்தனத்லிருந்து மேற்கே எழும்பும் மலையின் அடுத்த பகுதியில் பாண்டியர்களின் கோட்டையொன்று இருக்கிறது. படையெடுப்புக் காலங்களில் இங்குள்ள முரசுகளைக் கொட்டி னால் அங்குள்ள பாண்டியர் கோட்டையில் கேட்கும். உடனே கோட்டை எச்சரிக்கை அடைந்துவிடும். அந்த முரசுகளைப் பாண்டிய மன்னர் சுந்தர பாண்டியத் தேவர் அமைந்திருக்கிறார். பழுதடைந்த அந்தப் பழைய கோட்டையையும் புதுப்பித்திருக்கிறார். அங்கும் ஒரு சிறு படை இருக்கிறது. சேரநாட்டின் இந்த எல்லை மிக ரகசிமாகப் பலப்படுத்தப்படுகிறது. இன்னும் கொட்டுத் தளமும் சரி, மேலேயுள்ள பாண்டியர் கோட்டையும் சரி பூரணவலுவுள்ளவையல்ல. இந்த இரண்டு இடங்களிலும் இன்னும் சேரர்படையின் ஆபத்து இருந்து கொண்டிருக்கிறது. மலைப்பகுதிகளில் வரப் பல குறுக்குவழிகளைச் சேரர் கையாளுகிறார்கள். இத்தகைய அபாய இடத்துக்கு உங்களை ஏன் அனுப்பியிருக்கிறார் இளவரசர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களை ஜாக்கிரதையாகக் கொட்டுந்தளக் காவற்படைத் தலைவனிடம் அழைத்துச் செல்லும்படி மட்டும் உத்தரவிட்டிருக்கிறார். முதலில் இங்கிருந்து கொட்டுந்தளம் செல்லும் பாதையில் எதிரி நடமாட்டம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்த்து வருகிறேன், எக்காரணத்தை முன்னிட்டும் இந்தக் கோவிலிலிருந்து நகராதீர்கள்,” என்று எச்சரித்துவிட்டு, கோவிலின் படிகளில் இறங்கித் தனது புரவிமீது தாவி மலைச் சரிவில் ஏறிச் சென்றுவிட்டான்.

அவன் விவரித்துச் சொன்ன விஷயங்களைக் கேட்ட இரு மங்கையரும் வெவ்வேறு உணர்ச்சியால் பீடிக்கப் பட்டிருந்தனர். கொட்டுத்தளம் என்ற பெயர் ஏற்பட்ட காரணத்தையும், அங்குள்ள அபாயத்தையும் ஏற்கனவே இளவரசன் குறிப்பிட்டிருந்தாலும், இத்தனை தீவிர அபாயம் சூழ்ந்த இடம் அது என்பது அப்பொழுதுதான் புரிந்தது இளநங்கைக்கு அதைப் பாண்டியன் மகளும் புரிந்து கொண்டுதானிருந்தாள். இருப்பினும் முத்துக் குமரிக்குப் பேராச்சரியத்தை அளித்தது ஆபத்தைப்பற்றி அவனளித்த விவரங்களல்ல, அவன் பெயரைப்பற்றித்தான் அவள் பெரு வியப்புக் கொண்டிருந்தாள். ஆகையால், அவன் சென்றதும் இளதங்கை அங்கியிருந்த ஆபத்தைப் பற்றி விவரிக்க முற்பட்ட போது, முத்துக்குமரி மட்டும் அந்த வாலிபனைப் பற்றியே பேச முற்பட்டாள்.
“இளவரசி ” என்று துவக்கிய இளநங்கைக்குப் பதில் சொல்லவில்லை முத்துக்குமரி, மௌனமாகவே இருந்தாள்.

“ஏன் கோபமா? பேசமாட்டேனென்கிறீர்களே?” என்று மீண்டும் வினவினாள் இளநங்கை.

“ஆம்.” கோபத்துடன் வந்தது பதில் முத்துக்குமரி யிடமிருந்து.

“என்ன கோபமோ?”

“நீ இளவரசி என்றழைத்தால் பதில் சொல்ல மாட்டேன் இனிமேல்.”

“பின் எப்படி அழைப்பதாம்?”

*உனக்கொரு தங்கையிருந்தால் எப்படி அழைப்பாய்?”

“முத்துக்குமரி என்றழைப்பேன். அல்லது முத்து என்று அழைப்பேன்; குமரி என்றுகூட அழைப்பேன்.

“அப்படி அழை என்னையும்.”

“அது சரியா?”

“சரிதான். சம வயதினரே அப்படி அழைத்துக் கொள்ளலாம். நான் உனக்கு ஓரிரண்டு வயது சிறியவளா யிருப்பேன். தவிர சிற்றன்னை…” என்று இழுத்தாள் முத்துக்குமரி.
“உம் உம்.” எச்சரிக்கையுடன் எழுந்தது இளநங்கையின் குரல். அதிலிருந்தது கடுமையா வெட்கமா என்பது புரியவில்லை முத்துக்குமாரிக்கு.

“அப்படியானால் சொல்கிறபடி கேள்” என்றாள் இளவரசி.

“சரி, சொல்,”

“அப்படி வா வழிக்கு. இனி அழைக்க வேண்டிய முறை ..?”

“முத்துக்குமரி.”

“அது சரி.”

“முத்துக்குமரி!”

“உம்.”

“இந்த வாலிபர் சொன்ன விஷயங்களைக் கேட்டாயா?”

“கேட்டேன்.”

“நிலைமை பயங்கரமாயிருக்கிறதே.”

“இருந்தாலும் பரவாயில்லை “

“ஏன்?”

“சிறிய தந்தை பலமான துணையையும் அனுப்பிருக் கிறாரே!”

இளநங்கை விந்தைக் கண்களைத் திருப்பினார்கள் முத்துக்குமரி மீது. “என்ன! பலமான துணையா!” என்று கேட்கவும் செய்தாள் வியப்புடன்.

“ஆம்!” என்றாள் முத்துக்குமரி உறுதியுடன்.

“இந்த வாலிபரா பலமான துணை?” இளநங்கையின் கேள்வியில் நம்பிக்கையின்மை ஒலித்தது.

*ஆம்!”

“எப்படி?”

“அவர் பெயர் என்ன சொன்னார் கவனித்தாயா?”

“கவனித்தேன்.”

“என்ன கவனித்தாய்? சொல் பார்ப்போம். அவர் பெயர்…?” என்று முத்துக்குமரி, என்ன காரணத்தாவோ அந்தப் பெயரை உச்சரிக்க மறுத்தான்.

இள்நங்கையின் முகத்தில் வியப்புக் குறி படர்ந்தது. உள்ளே ஏதோ ஓர் எண்ணம் எழுந்தது. அதை வெளிக்குக் காட்டாமல் சொன்னான், “இந்திரபானு” என்று.
“அது மட்டுமல்ல இளநங்கை, அவர் தந்தையின் பெயர் சந்திரபானு என்றும் சொன்னார்.” என்று குறிப் பிட்டாள் முத்துக்குமரி.

“ஆமாம். அதற்கென்ன?

“அதற்கென்னவா? சந்திரபானு. பார் என்று தெரியாது உனக்கு? கேள்விப்பட்டதில்லை?”

“இல்லை.”

“கடார தீபகற்பத்தின் கடைப் பகுதியை ஆளும் சிற்றரசர். அவர் மகனொருவன் பெருவீரனென்று நமது அரண்மனை வட்டாரங்களில் வதந்தி உலாவுகிறது.”

இதைச் சொன்ன முத்துக்குமரி மேற்கொண்டு பேசாமல் மௌனம் சாதித்தான். இளநங்கைக்குச் சந்திர பானுவைப் பற்றியோ இந்திரபானுவைப் பற்றியோ ஏதும் தெரியாததால் அவளும் மௌனமாகவே இருந்தாள், அவர்கள் மௌனத்தைக் கிழிக்கவோ என்னவோ நான்கு நாழிகைகள் கழிந்ததும் வானத்தில் சந்திரன் முக்காலே அரைக்கால் உருக்கொண்டு உதயமானான்.

அகத்தியர் குடிலிலிருந்து அந்த நிலவுக் காட்சியைக் கண்ட மங்கையரிருவரின் பிரமிப்பு எல்லை கடந்தது. எந்தத் தீமையிலும் ஒரு நன்மையுண்டு என்பதுபோல எந்த அபாயத்திலும் ஓர் அழகும் இன்பமும் உண்டு என்பதற்கு அறிகுறியாகத் திகழ்ந்தது சுற்றுப்புறமும். காட்டர்த்து மேலெழுந்த மலைப் பகுதிகளுக்கு வினோதமான ஒரு மெருகை அளித்தது அந்த வெண்ணிலவு. அந்த நிலவு அழைக்கவே உள்ளிடத்தை விட்டு வெளி மண்டபத்துக்கு வந்த அந்த மங்கையரிருவரும் கண்ணெதிரே விரிந்த சுற்றுப் புறத்தின் பயங்கரம் கலந்த அழகைக் கண்டு சிருஷ்டி விசித்திரம் எத்தனை மகத்தானது, அதில் மனிதன் பங்கு எத்தனை குறைந்தது என்பதைப் புரிந்து கொண்டனர்.

வானக்கூரை மலையுச்சிகளைத் தொட்டுக்கொண் டிருந்ததால் சத்திர வெளிச்சத்தில் உச்சிகள் மயக்கத் தரும் வெண்மை பெற்றன. உச்சிப் பாறைகளை அணைத்துக் கீழி றங்கிய சரிவிலிருந்த பெரும் காட்டு மரங்களின் பசுந்தழைத் தலைகள் பகற் காலத்தில் காட்டும் நல்ல பச்சையைக் காட்டாமல் வெண்மை கலந்த பச்சையைக் காட்டின. சற்றுத் தூரத்தே தெரிந்த அகத்தியர் அருவி அந்த இரு மங்கையருக்கும் தகளி காட்டியது; பளபளத்தது.

இக் காட்சியைக் கண்ட இருமங்கையரும் நீண்ட தேரம் பிரமித்து நின்றார்கள். இருவரையும் அந்த அருவி பலமுறை கண் சிமிட்டி அழைக்கவே அம்மங்கையர் பேசாமல் படிகளில் இறங்கி நடந்து தங்கள் புரவிகளின் அருகில் வந்து, புரவிகளில் தொங்கிய தோற்பைகளிலிருந்து ஆளுக்கொரு நீராடும் சீலையை எடுக்கவும் செய்தார்கள். அதன் பின்னர் இருவரும் கைகோத்துக் கொண்டு அருகில் இருந்த இடத்தை நோக்கி நடந்தார்கள்.

அருவி அவர்களைப் பார்த்து நகைத்தது; வாவென்று அழைத்தது. இருவரும் தங்கள் சேலைகளை நெகிழவிட்டு நீராடும் சீலைகளை அணிந்தார்கள். நீராடும் சீலை போதாத சீலைகள் தான். அத்துடன்தான் நீராடச் சென்றனர் அந்த இரு பெண்களும், போதாத சீலைகளை அணிந்த அந்த அணங்குகளிருவரையும் போதாத காலமும் வெகு துரிதமாக அணுகிக் கொண்டிருந்தது. ஆகவே அவர்கள் அருவிக்கு வந்ததையும், மாற்றுடையணிந்து அவர்கள் நீரில் புகுந்ததையும் கவனித்தது மேலே பாறையிலிருந்த ஓர் உருவம். அந்த இரு மங்கையரும் அருவி நீரில் மறைந்ததும் அந்த உருவம் பாறையில் எழுந்து நின்று பின்பகுதியை நோக்கி வலது கையை மும்முறை விசிறியது. மற்றும் நால்வர் மறைவிலிருந்து வெளிவந்தார்கள். பாறைமீது முதலில் படுத்திருந்த உருவம் அருவியில் நீராடிக் கொண்டிருந்த இரு மங்கையரையும் சுட்டிக்காட்டி, சற்து தூரத்தே இருந்த அகத்தியர் குடிலையும் சுட்டிக்காட்டியது.

Previous articleRaja Muthirai Part 1 Ch16 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch18 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here