Home Historical Novel Raja Muthirai Part 1 Ch18 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch18 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

59
0
Raja Muthirai Part 1 Ch18 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch18 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch18 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 18 காதலெனும் பித்து!

Raja Muthirai Part 1 Ch18 |Raja Muthirai Part1|TamilNovel.in

அகத்தியர் அருவி விழும் இடத்தின் மேலே சற்றுத் தள்ளி எழுந்திருந்த பெரும் பாறையில் தொக்கி நின்ற அபாயத்தைப் பற்றிச் சிறிதும் அறியாமலே வெண்மதியின் கண்ணொளியில் தகளி காட்டிய அருவியின் அழகில் மயங்கி, நின்றவண்ணமே தங்கள் சேலைகளைக் களைய முற்பட்ட அந்தப் பெண்களிருவரையும் சுற்றுப்புறமிருந்த பெரும் மலைகள் அனுதாபத்துடன் பார்த்தன எங்கிருந்தோ உறுமிய ஓரிரு புலிகளும் காட்டுக்கிடாவும் கூட அந்தச் சமயத்தில் மிக ஈனசுரத்தைக் கிளப்பிய தல்லாமல் ஆந்தையொன்றும் அப சகுனத்துடன் அலறியது. இருக்கும் அபாயத்தைப் பற்றிச் சிந்திப்பது மனித இதயத்தின் சுபாவமில்லையாகையால், இளநங்கையும் முத்துக்குமரியும் தங்கள் ஆடைகளைக் களைவதிலும் அருவி நீருக்குள் நுச்ழைந்து பயண அலுப்பைத் தீர்த்துக் கொள்வதிலுமே முனைந்திருந்ததன்றி, அந்த சில விநாடி களில் அனைத்தையும் மறந்து, மெல்ல ஒருவரை யொருவர் பார்த்து நகைத்துக்கொள்ளவும் செய்தனர்.

அந்த இருவர் நகைப்பிலும் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. இளநங்கை தனது நீராட்டச் சீலையை உடலைச் சுற்றி வளைத்து, உட்புறத்தில் இடது கையிட்டுச் சேலையின் இடை முடிச்சை அவிழ்த்து, அதை நெகிழவிட்ட லாவகத்தைப் பார்த்த முத்துக்குமரி, “யாருமில்லாத இடத்திலும் எச்சரிக்கை பலமாகத்தானிக்கிறது,” என்று கூறி இளநங்கையை நோக்கி நகைத்தாளானாலும், அவளும் அத்தனை எச்சரிக்கையுடனேயே தனது சேலையையும் நீக்கினாள். இப்படி நீராட்டச் சிறு சீலைகளால் தங்கள் உடல்களைப் போர்த்து மறைத்து, ḥஉட்புறமாகச் சேலையை நெகிழவிட்ட இரு கால்களாலும் திரட்டி எடுத்து ஒருபுறம் ஒதுக்கிவிட்ட அவ்விருவரும், முகவாய்க் கட்டையைத் தாழ்த்தி மார்புக்கும் முகவாய்க் கட்டைக்குமிடையே நீராட்டச் சீலையின் ஒரு பகுதியை இடுக்கிக்கொண்டு, இருகைகளால் கச்சைகளையும் நீக்கிக் கொண்டனர். பிறகு உடுத்திய அந்தச் சிறு சிலையை மார்பைச் சுற்றி பிணைத்துக் கொண்டு தலையையும் அவிழ்த்து விட்டுக் கொண்டு அருவியை நோக்கிச் சென்றனர். அருவியும் அவர்கள் தன்னை அணுகுமுன்பே நீர்த்திவலைகளை அவர்கள் மீது சுள்சுள்ளென்று வீசி, ‘வராதீர்கள்! போய் விடுங்கள், மேலே ஆபத்திருக்கிறது!’ என்று எச்சரித்தும் கூட, அதைப் பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாமல் இருவரும் ஒருவர் கையை இன்னொருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அருவிக்குள் நுழைந்தனர்.

அகத்தியர் அருவியென்ற பெயரில் பெருவேகத்துடன் வீழ்ந்து கொண்டிருந்த பொருதையின் அந்த நீர்வீழ்ச்சி அந்த இரு மங்கையர்மீதும் வெகு வேகத்துடன் பிர வாகித்து அவர்களின் அழகிய உடல்களை ஆசையுடன் தழுவிச் சென்றமுறை, பொருதை அன்னை தனது மகளிர் இருவரைக் குளிப்பாட்டுவதில் எத்தனை ஆனந்தப்படுகிறாள் என்பதை நிரூபித்தது. சற்றே பரந்து வீழ்ந்த அந்த அருவியின் அகன்ற கரங்கள் அவ்விருவரையும் முழுவதும் தழுவ முடியவில்லையானாலும், அவர்கள் நின்றிருந்த பகுதியில் பிரித்து வீழ்ந்த பகுதியில் நன்றாகத் தவழச் செய்தன. வழுவழுத்த அவ்விரு பெண்களின் உடலைத் தழுவிய ஆனந்தத்தால் பிரிந்த அந்தப் பகுதியை நோக்கி, அவ்விடத்துக்கு வரமுடியாத பகுதி சர்ரென்று கரகரப்புக் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தது. சற்று நேரத்துக்கொரு முறை லேசாகப் பரந்து அவர்கள் இருக்குமிடத்தை எட்டிப் பிடிக்கவும் முயன்று தோல்வியடைந்து கொண்டிருந்தது. அவ்விரு மங்கையரின் குழல்களைத் தடவி அகற்றிவிட்டு பொருதை யன்னை தனது குழந்தைகளின் உடல்கள் பூராவையும் ஆதரவுடன் தழுவினாள். அருவியின் வேகமான நீர்க்கால்கள் பிடிவாதம் செய்யும் குழந்தையின் ஆடைகளைக் கழற்றி நீராட வைக்க முனையும் அன்னையின் விரல்களைப்போல் அந்த இருவர் மார்புகள் மீதிருந்த சீலைமுடிச்சுக்களையும் அவிழ்க்க முனைந்தனவென்றாலும், தீராடிய அந்த இரு பெண்களும் அன்னைக்குச் சிறிதும் இடம் கொடாமல் முடிச்சுக்களை இறுகப் பிடித்துக்கொள்ளவே செய்தனர். இடைக்குக் கீழிருந்த ஆடைகளையும் இறுகப் பிடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் பரஸ்பரம் அணைத்துக்கொண்டும் நீராடிய அந்தப் பெண்களின் இயற்கை உடல்களைத் தொட்டுத் தேய்த்து நீராட்டப் பொருதை முயன்று இறுதியில் வெற்றி பெற்றாளானாலும், அந்த வெற்றிக்குச் செயற்கைச் சிலைகள் பெரும் தடங்கலாகவே இருந்தன. இப்படி அருவி நீக்க முயன்றும், கரங்கள் மறைக்க முயன்றும் நீண்ட நேரம் அருவியில் பரஸ்பர அணைப்பில் நீராடிய அந்த மங்கையரிருவரும் கடைசியில் தீரைவிட்டு வெளிவர மனமில்லாமலே வந்தனர். வெளியே வந்தபோதும் பரஸ்பர அணைப்பிலேயே வந்த அந்த இருவரில் முதலில் தன்னை விடுவித்துக்கொள்ள முயன்ற முத்துக்குமார், “விடு இளநங்கை! இன்னும் எதற்கு நான்!” என்றாள்.

போதாத சீலை உடலை அரைகுறையாய் மறைக்க சொட்டச் சொட்ட ஒட்டி நின்ற அழகுகளை நன்றாக எடுத்துக்காட்ட வெண்ணிலவில் அப்சரஸ் போல் நின்ற முத்துக்குமரியை நோக்கிய இளநங்கை புன்முறுவல் கொண்டாள். அத்துடன் கேட்டாள், “என்ன கேட்டாய் முத்துக்குமரி!” என்று.

“இன்னும் நானெதற்கு? விட்டுவிடலாமே என்றேன்” என்றாள் முத்துக்குமரியும் சிரித்துக்கொண்டு.

இளநங்கை அந்த அழகியின்மீது மீண்டும் கண்களை திலைக்க விட்டுக்கொண்டு, “உன்னை விட மனமில்லை! மறுபடியும் அணைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.” என்றாள்.

“ஏன் இளநங்கை?”

“அத்தனை அழகாயிருக்கிறாய் முத்துக்குமாரி.”

“இன்றைக்கு என்ன திடீரென்று அழகு வந்துவிட்டது எனக்கு? நீ ஏற்கெனவே பார்த்த அழகுதானே!”

“ஒருமுறை பார்த்து அலுத்துவிடுவதல்ல அழகு முத்துக்குமரி. நாளுக்கு நாள், நிமிஷத்துக்கு நிமிஷம், விநாடிக்கு விநாடி, புதுப்புதுத் தோற்றங்களை, கற்பனைகளைத் தருவதுதான் அழகு.

“இப்பொழுது புதுப்புதுக் கற்பனை தோன்றுகிறதாக்கும் உனக்கு.’

“ஆம் முத்துக்குமாரி. உன்னை முதல் முதல் முத்துக் கடையில் பார்த்துக் கேட்டபோது உன் அழகை அனுபவிக்கும் ஆற்றல் என் கண்களுக்கு இல்லை. அப்பொழுது..” என்று இளநங்கை சற்றுப் பேச்சை நிறுத்தினாள். அவள் போசனை அந்த நிகழ்ச்சியை நோக்கி ஓடியது. அன்று அவன் மனத்தை அச்சம் கவ்வி நின்றதால் அழகைக் கவனிக்கக் கண்களுக்குத் திராணியில்லை என்பதைப் புரிந்து கொண்டாள். அச்சுறுத்தியவனைப் பற்றியும் தினைத்தாள் அவன். அந்தத் தருணத்தில் அந்த அச்சுறுத்தியவன் பிறகு எப்படி அமுதமானான் தன் சிந்தைக்கும் மனத்துக்கும் என்று எண்ணிய, அவன் “இப்பொழுது ஆடை உடலைச் சரியாக மறைக்க முடியாமல் ஒட்டி நின்று உள்ளதைக் கள்ளத் தனமாகக் காட்டும் இந்த நிலையில், அவர் பார்த்தால் என்ன நினைப்பார்?” என்றும் எண்ணிப் பார்த்தாள். அவள் அழகிய முகத்தில் வெட்கத்தின் ரேகை சற்றே படிந்தது.

இளநங்கை திடீரென்று பேச்சைப் பாதியில் நிறுத்தி விட்டதையும், யோசனையில் ஆழ்ந்துவிட்டதையும் கவனித்த முத்துக்குமரி அதற்குக் காரணத்தையும், ஊகித்துக் கொண்டாள். இளநங்கையின் வதனத்தில் திடீரெனப் படர்ந்த வெட்கத்தின் சாலையைக் கண்டதும் அந்த அகம் உறுதிப்பட்டுவிடவே, “சரிதான். நான் நினைத்தது சரியாகப் போய்விட்டது,” என்றாள் தனது இதழ்களைத் திறந்து முத்துக்களை காட்டி நகைத்து.

முத்துக்குமரியின் நகைப்பினாலும் சொற்களாலும் சுய நிலை அடைந்து இளநங்கை கேட்டாள், “எது சரியாகப் போய்விட்டது?” என்று. அவன் குரலில் சற்றுக் கோபம் ஒலித்தது.

முத்துக்குமரிக்கு அந்தக் கோபத்துக்குக் காரணம் தெரிந்திருக்கவே, அவள் அதைச் சிறிதும் லட்சியம் செய்யா மலே, “நான் நினைத்தது சரியாகப் போய்விட்டது!” என்று கூறினாள் மீண்டும் நகைத்து.

“என்னை நினைத்தாய்? என்ன புரிந்துவிட்டது உனக்கு?” என்று சீறினாள் இளதங்கை.

“முத்துக் கடையைப் பற்றிச் சொல்லவில்லையா நீ?” முத்துக்குமரியின் கேள்வியில் ஏளனம் ஒலித்தது.

“சொன்னேன்”.

“முத்துக் கடையைப் பற்றி நினைத்ததும் என்னை நினைத்தாய்.”

“ஆமாம்.”

“பிறகு உனக்கேற்பட்ட அச்சத்தைப் பற்றி தினைத்தாய்..”

“நினைத்தேன். அதில் என்ன தவறு?”

“அதிலும் தவறில்லை. அச்சத்தை உண்டாக்கிய வரைப் பற்றி நினைத்ததிலும் தவறில்லை.” இதைச் சொன்ன முத்துக்குமரி பெரிதாக நகைத்தாள்.

“முத்துக்குமரி!” இளநங்கையின் குரல் மிகக்கடுமை யாயிருந்தது.

முத்துக்குமரி அதற்குச் சிறிதும் அடங்காமலே “அவரைப்பற்றி நினைத்ததும் இப்பொழுது இருக்கும் நிலை சிந்தனையில் புகுந்துவிட்டது. அவர் இந்தக் கோலத்தில் பார்த்தால் என்ன நினைப்பார்? என்ன சொல்வார்? இப்படியெல்லாம் கற்பனை ஓடுகிறது…” என்று சொல்லிக் கொண்டு போனாள். அவள் வாசகத்தை முடிக்கு முன் பாகவே அவளைத் தாவிப் பிடிக்க முயன்ற இளநங்கை, இப்படி வா உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்று அவள் கையை இறுகப் பிடித்தாள்.

“என்ன செய்வாய்? ஏதோ செய் பார்ப்போம்.” என்று முத்துக்குமரி, கையைத் திமிறிக் கொண்டு ஓட முயன்று தன்னைத் துரத்திய இளநங்கையிடமிருந்து தப்பி தாவித் தாவிப் பாறைகளில் குதித்தாள். கொற்கையைச் சதா கற்றியவளும், ஓட்டம் பிடிகளில் நிகரற்றவளுமான இளநங்கையும் அவளைப் பிடிக்கப் பாறைகளில் தாவிச் சென்றான். கடைசியில் பிடிக்கப் போகையில் முத்துக்குமரி காலிடறிக் கீழே விழப்போகவே அவளைத் தன் இரு கைகளாலும் தழுவிப் பிடித்தாள். பிடித்த வேகத்தில் அவளும் பாறையில் விழுந்தாள். தன்னை அணைத்துப் பாறையில் தன் பக்கத்தில் விழுந்த இளநங்கையைக் கண்ட முத்துக்குமரி, – அப்பப்பா! இத்தனை முரட்டுப் பிடியைச் சிற்றப்பா எப்படிச் சகிப்பார்?” என்று சொற்களைச் சிரிப்புக்கும், ஓடியதால் ஏற்பட்ட பெரு மூச்சுக்கும் இடையே உதிர்த்தாள்.

இன்னொரு தடவை உன் சிறிய தந்தையின் பேச்சை எடுத்தாயோ…?” என்று எச்சரித்த இளநங்கை முத்துக்குமரியைச் சுட்டுவிடுவது போல் பார்த்தாள்.

“என்ன செய்வாய்?” என்று கேட்டாள் முத்துக்குமரி.

“என்ன செய்வேனோ எனக்கே தெரியாது,” என்றாள் இளநங்கை கோபத்துடன்.

“எனக்குத் தெரியும்.” முத்துக்குமரியின் பேச்சில் ஏளனம் தொனித்தது.

தெரிந்தால் சொல்லேன்.”

“சிறிய தந்தையிடம் ஓடிவிடுவாய்”.

“உம் உம்.”

“என்னைப் பார்த்து உறுமிப் பயனில்லை. உண்மையின் சக்தி மகத்தானது.”

“அது எனக்குத் தெரியும்.”

“என்ன தெரியும்?

“உண்மையின் சக்தி.”

“எங்கே அந்தச் சக்தியைக் காட்டு பார்க்கலாம்.”

இதைக் கேட்ட இளநங்கை, அந்தப் பாறையின் முத்துக் குமாயை அணைத்தபடி படுத்தவன், அவள் காதுக்கருகில் சென்று இரண்டொரு வார்த்தைகளைக் கூறினாள் அந்தச் சொற்களைக் கேட்ட முத்துக்குமரி இளநங்கையை நோக்கி மிரள மிரள விழித்தாள். அவள் முகம் பெரிதும் சிவந்தது. “சேசே! இது பைத்தியக்காரத்தனம். நான் அவரை..” என்ற அவள், மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தாள். இனநங்கையைத் திமிறிக்கொண்டு எழுந்தும் உட்கார்ந்தாள்.

இளநங்கையும் அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“ஆம் முத்துக்குமரி! அது பைத்தியக்காரத்தனம் தான்” என்று கூறினாள் ஆழ்ந்த குரலில்.

முத்துக்குமரி நிலத்தை நோக்கியவண்ணமே கேட்டான், “எது பைத்தியக்காரத்தனம்?” என்று. அவள் சூரல் மிக மிருதுவாக இருந்தது.

“காதல்!” என்றாள் இளநங்கை.

“காதலா!” முத்துக்குமரி வியந்தது போல தடித்தாள். ஆனால் குரலில் வியப்புத் தெரியவில்லை. வெட்கம் கலந்த மகிழ்ச்சிதான் தெரிந்தது.

“ஆம் காதல்தான். அது எப்பொழுது வருகிறது, ஏன் வருகிறது என்பது தெரிவதில்லை. திடீரென்று வருகிறது. எதிர்பாராத இடத்திலிருந்து, எதிர்பாராத காலத்தில் எதிர் பாராத முறையில் வருகிறது. சிலருக்குக் கைகூடுகிறது. சிலருக்குக் கைகூடுவதுமில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அது வந்தபின் பெண்களைச் சுயநிலை இழக்கச் செய்து பைத்தியமாக அடித்துவிடுகிறது.” என்றாள் இளநங்கை.

முத்துக்குமரி பதிலேதும் சொல்லவில்லை. மௌன மாகவே உட்கார்ந்திருந்தாள். இளநங்கையே மேற்கொண்டு சொன்னாள். “முத்துக்குமரி! அந்தப் பைத்தியம் பற்பட்டவுடன் பெண்களின் நிலையிலும் செயலிலும் கூட வாய்விட்டுச் சொல்ல முடியாத எண்ணங்களை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஒன்று மட்டும் இதிலெல்லாம் வெளிச்சம். காதலை மறைத்துவிடப் பெண்கள் பார்க்கிறார்கள், அது முடிவதில்லை. அவர்கள் முகத்தில் உண்மையை எழுதிப் பட்டம் கட்டி விடுகிறது. ஊருக்கெல்லாம் அவர்கள் ரகசியம் புரிந்து விடுகிறது. முத்துக்குமரி! இந்த நிலையிலிருந்து நான்தான் விடுபட முடியுமா? நீதான் விடுபட முடியுமா?

இதைச் சொன்ன இளநங்கையின் முகத்தில் ஆழ்ந்த சிந்தனை படர்ந்து நின்றது. உதடுகள், லேசாகப் புன் முறுவல் காட்டின. முத்துக்குமரி மௌனத்தின் உருவாக விளங்கினாள். அவன் உன்னம் மட்டும் ஆசைக் கனலைக் கக்கிக் கொண்டிருந்தது. விளையாட்டு முகமொன்று அதில் எழுந்து எழுந்து அவளை நிலைகுலையச் செய்தது. -சே! சே! இருக்காது ஒருகாலும் இருக்காது. பார்த்து ஒருநாள் ஆகவில்லை. அதற்குள் காதலாவது!” என்று தன்னைத் இருத்திக்கொள்ள முயன்றான். அந்தத் திருத்தம் வெறும் ஏமாற்றம் என்பது அவளுக்கே புரிந்துவிட்டதால், ‘காதல் என்பது வெறும் பைத்தியக்காரத்தனம். சந்தேகமில்லை. பித்துத்தான். சமய சந்தர்ப்பம் இல்லாமல் திடீரென மனிதனைப் பற்ற வல்லது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள், அந்த எண்ணத்தை அதிகம் ஊன்றவிடக் கூடாதென்ற நினைப்பால் எழுந்திருக்கவும் செய்தாள். “நாம் வந்து தேரமாகிறது. அகத்தியர் குடிலுக்குப் போவோம். அவர் வத்து காத்திருக்கப் போகிறார்,” என்று சொல்லவும் செய்தாள்.

இந்திரபானுவின் பெயரைச் சொல்லாமல் முத்துக் குமரி ‘அவர்’ என்று குறிப்பிட்டதை எண்ணி உள்ளூர நகைத்துக் கொண்ட இளநங்கையும் எழுந்திருந்தாள். இருவரும் சேலைகளை முறைப்படி அணிந்து கூந்தலைத் துவட்டி உதறி நுகரி முடிப்புப் போட்டு, நீராட்டச் சீலைகளைப் பிழிந்து கையில் எடுத்துக்கொண்டு அகத்தியர் குடிலுக்கு வந்து சேர்ந்ததும் அதன் படிமுகப்பில் திகைப்படைந்து நின்றார்கள். அங்கிருந்த அவர்கள் புரவி களிரண்டும் காணவில்லை. “எங்கே நமது புரவிகள் முத்துக் குமரி?” என்று வினவினாள் இளநங்கை.

முத்துக்குமரி சுற்றும் முற்றும் பார்த்தாள். “எங்கும் பார்க்க வேண்டாம். இங்கு பாருங்கள் தேவி” என்ற மரியாதைக் குரலைக் கேட்டு நிமிர்ந்து படிகளில் உச்சிகளைப் பார்த்த முத்துக்கு.மரி மட்டுமின்றி இளநங்கையும் திக் பிரமை அடைந்தாள். படிகளில் உச்சியில் திடமான நான்கு பேர் தின்று கொண்டிருந்தார்கள். அவர்களிருவர் கைகளில் தங்கள் புரவிகளிலிருந்த பைகளிலிருந்ததை மங்கையரிவரும் கவனித்தார்கள்.

அவர்கள் கண்கள் சென்ற திசையைப் பார்த்த அந்த நால்வரில் தலைவனாகக் காணப்பட்டவன் சொன்னான்; “உங்கள் பைகளை நாங்கள்தான் சுமந்து வரவேண்டும். நாம் செல்லுமிடத்திற்குப் புரவிகள் தேவையில்லை. புரவிகள் செல்வது கடினம்,” என்று, அவன் குரலில் அதிகாரம் தொனிக்கவில்லை. ஆனாலும் கண்டிப்பு இருந்ததைக் கவனித்தாள் முத்துக்குமரி. ஆகவே “எங்கனை எங்கு அழைத்துச் செல்ல உத்தேசம்?” என்று வினவினாள் சீற்றத்துடன்.

“சொல்ல அனுமதியில்லை.” சர்வசாதாரணமாக வத்தது தலைவன் பதில்,
“நாங்கள் வர மறுத்தால்?” என்று கேட்டான் இளநங்கை கோபத்துடன்.

“விருப்பமில்லாத பணியைச் செய்ய வேண்டும்” என்றான் தலைவன்.

“என்ன பணி அது.” என்று கேட்டாள் இளநங்கை.

“உங்களைப் பலவந்தமாகத் தூக்கிச் செல்லும் பணி.” என்றான் அந்தத் தலைவன்.

முத்துக்குமரியின் இதயத்தில் இளநங்கை சற்று முன்பு விளக்கிய காதலெனும் பித்து தலைதூக்கவே, “எங்கள் துணைவருக்கு இது தெரிந்தால் உங்கள் கதி என்னவாகும் தெரியுமா?” என்று சீறினாள் முத்துக்குமரி.

பதிலுக்கு நகைத்தான் அந்தத் தலைவன். அத்துடன் சொன்னான், “உங்கள் துணைவருக்கும் தெரியும்,” என்று.

இளநங்கை, முத்துக்குமரி இருவரும் பேரதிர்ச்சி படைந்தார்கள். “என்ன அவருக்கும் தெரியுமா! நம்பமுடிய வில்லை ” என்றார்கள் இருவரும் ஏககாலத்தில்.

“நீங்களும் அவரிருக்குமிடம்தான் போகிறீர்கள். அவரையே நேரில் கேட்டுக் கொள்ளலாம்,” என்றான் தலைவன்.

இதைக் கேட்ட இளநங்கையின் இதயத்தில் கோபச் சூறாவளி எழுந்தது. முத்துக்குமரியின் இதயத்தின் நிலை அவளுக்கே புரியவில்லை. வெடித்துவிடும் நிலைக்கு வந்து கொண்டிருந்தது. ‘காதல் பித்துத்தான். அதைவிடச் சாதல் மேலானதுதான்’ என்று தனக்குள் அலறிக் கொண்டாள் பாண்டியநாட்டு இனவரசி. எதிரியிடம் தன்னைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு இந்திரபானு மோசக்காரனாக இருப் பான் என்பதை அவளால் தம்பவே முடியவில்லை.

Previous articleRaja Muthirai Part 1 Ch17 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch19 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here