Home Historical Novel Raja Muthirai Part 1 Ch19 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch19 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

64
0
Raja Muthirai Part 1 Ch19 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch19 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch19 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 19 சீலை கனத்தது, சிந்தையும் கனத்தது

Raja Muthirai Part 1 Ch19 |Raja Muthirai Part1|TamilNovel.in

சொன்னபடி பின்தொடராவிட்டால் தங்களிரு வரையும் பலவந்தமாகத் தூக்கிவர உத்தரவாயிருக்கிறதென்றும், அந்த உத்தரவு தங்களுக்குத் துணைவந்திருக்கும் இந்திரபானுவுக்கும் தெரியுமென்றும், அகத்தீகவரர் கோவில் படிகளின் உச்சியில் நின்ற வீரர்கள் தலைவன் கூறியதும் பெரும் திகைப்பு, ஏமாற்றம், கோபம் ஆகிய உணர்ச்சிகளால் பீடிக்கப்பட்ட முத்துக்குமரியின் முகம் நன்றாக விசிறப்பட்ட நெருப்புத் துண்டம்போல் ஒளி விட்டது.

விளையாட்டு முகத்தாலும், தனது சிறிய தந்தையின் நம்பிக்கைக்குரியவனென்ற காரணத்தாலும், யாரும் உட்கார முடியாத அந்தச் சாம்பல் நிறப் புரவியில் திடமாக உட்கார்ந்து வந்ததாலேயே தன்னால் வீரரென்று நிர்ணயிக்கப் பட்டதாலும், தன் நெஞ்சத்தில் ஒரே நாளில் மெல்ல மெல்லப் புகுந்து கொண்ட இந்திரபானு, தங்களை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கும் புல்லனாயிருக்க முடியுமென்று நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை முத்துக்குமரியால், கொட்டுத் தளத்துக்கும் அகத்தியர் குடிலுக்கும் இடையே உள்ள மலைப்பகுதியில் ஆபத்து அதிகமென்று தங்களை எச்சரிக்கை செய்த அந்த வாலிபன், எதிரிகள் கருத்து என்னவென்று தெரிந்ததும் ஏன் தங்களைக் காக்க ஓடிவரவில்லையென்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் முத்துக்குமரி. எதிரே நின்ற நான்கு வீரர்களைப் பற்றியோ, அவர்களால் விளைந்துள்ள அபாயத்தைப் பற்றியோ சிறிதும் அஞ்சவில்லை சுந்தரபாண்டியன் மகள். சேர வீரர்கள் உலாவியதால் பெருத்த அபாயத்திற்குள்ளாயிருந்த கொற்கையின் முத்தங்காடியிலேயே சிறிதளவும் பயமின்றி உட்கார்ந்திருந்தவளும், அபாயமிருப்பது தெரித்தே பாண்டிய மன்னனால் கொற்கைக்கு அனுப்பப் பட்டவளுமான பாண்டியன் பைங்கிளிக்குப் பயமென்ற அச்சம் சற்றும் இதயத்துக்குள் துழையவில்லையானாலும், இந்திரபானுவின் துரோகச் செயல் மட்டும் அவன் இதயத் தைப் பெரிதும் உருக்கவே செய்தது.

இத்தகைய உணர்ச்சியால் முத்துக்குமரி பீடிக்கப் பட்டதை, அவள் கால்களின் பெருவிரல்கள் கீழிருந்த பாறையில் கோடுகளை இழுக்க முயன்றதிலிருந்தும், உடல் லேசாகத் துடித்ததிலிருந்தும் புரிந்து கொண்ட இளநங்கை, அந்த உணர்ச்சிகளின் காரணத்தையும் எத்தகைய கஷ்டமு மின்றிப் புரிந்துகொண்டாள். பயத்தையும் அழகையும் நில வொனியில் ஒருங்கே விசிறி நின்ற அந்தப் பொதியமலைப் பிராந்தியத்தில்கூட, வீரபாண்டியனின் அலட்சிய முகமும், விஷமச் சிரிப்பைச் சதா உதிர்க்கும் விழிகளும் தன் இதயத்தில் புகுந்து தன்னை அலட்டுவதை நினைத்துப் பார்த்த இளநங்கைக்கு, முத்துக்குமரியின் மனோநிலையைப் புரிந்து கொள்வது பெரும் கஷ்டமாயில்லாததால், அவள் கையை, தன் கையுடன் சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அவள் விரல்களுடன் தன் விரல்களையும் பின்னி நெறித்து, அதிகப் பதட்டமெதையும் காட்ட வேண்டாமென்று சாடையாக எச்சரிக்கையும் விடுத்தாள்.

இப்படிச் சில வினாடிகள் அக்கம் பக்கத்தில் மௌனமாக நின்ற அவ்விருவரையும் படிகளின் உச்சியில் நின்ற வீரர்களின் தலைவன் உற்று நோக்கிவிட்டு, “கிளம்பலாமா?” என்று மரியாதைக்கு ஒரு கேள்வியும் விடுத்து, மற்ற வீரர்கள் தொடர அவர்களை நோக்கி இறங்கவும் செய்தான்.

அடுத்த வினாடி மேலிருந்து வந்த வீரர்கள் அவர் களைச் சூழ்ந்து வர, மங்கையரிருவரும் அகத்தீசவரர் கோயிலின் கடைசிப் படியிலிருந்து திரும்பி இறங்கி நடக்க முற்பட்டனர். நடக்க முற்பட்ட சில வினாடிகளுக்குள் தங்களைச் சிறை செய்ய வந்திருப்பவர்கள் அந்த நான்கு வீரர்கள் மட்டுமல்லவென்பதையும் புரிந்து கொண்டனர்.

அவர்கள் படிகளை விட்டு இறங்கிப் பத்தடிகள் நடந்த உடனேயே, அகத்தீசுவரர் கோயிலுக்கு மறுபுறம் மறைத்து வைக்கப்பட்ட புரவியைப் பிடித்துக்கொண்டு மற்றுமிருவர் அவர்களுக்குச் சற்றுத் தூரத்தில் நடக்க முற்பட்டதை அந்த இருவரும் கண்டார்கள். அவர்களை மட்டுமல்ல அவர்கள் கண்டது. சற்றுத் தூரத்திற்கொருமுறை பெரிதாக எழுந்திருந்த பெரும் பாறைகளின் மறைவில் இரண்டிரண்டு பேர்களாக மறைந்திருந்த சுமார் பத்துப் பன்னிரண்டு வீரர்கள், திடீர் திடீரென்று வெளிப்போந்து, தங்களைச் சிறை செய்த வீரர்களுக்கு உதவும் வகையில் கூட்டத்துடன் கலந்து கொண்டதைக் கவனித்த பெண்களிருவரும் அந்த வீரர்களிடமிருந்து தப்ப வழியேதுமில்லை என்பதையும் அறிந்து கொண்டனர். வீரர்கள் மரியாதைக்காக நாலடி தள்ளி நடந்தாலும், தங்களை ஓரளவு சூழ்ந்தே வந்ததால், தங்களுக்குள் எந்தவித உரையாடலும் சாத்திய மில்லையென்பதையும் புரிந்து கொண்டதால் மௌனமாகவே நடந்து சென்றனர். பாண்டியர் மரபில் பிறந்த காரணத்தால் அச்சமென்பதை முத்துக்குமரி அறியவில்லையானாலும், அதிகமாக அரண்மனையை விட்டு வெளிவராமலேயே காலங் கழித்ததன் காரணமாக, இந்த வெளிநடப்பும் அனாதரவான நிவையும் பெரும் கசப்பைத் தந்ததால், சுற்றிலும் எழுந்த பொதிய மலையின் பேரழகை அவளால் ரசிக்க முடியவில்லை.

ஆனால் இளநங்கையின் மனோநிலை நேர்மாறாயிருந் தது. இரவிலும் பகலிலும் அநாயாசமாக முத்தங்காடியையும் கொற்கை மாநகரையும் சுற்றிப் பழக்கமுள்ளவளும், இயற்கையின் அழகை நுகர்வதிலும், அதைக் கவிநோக்குடன் காணக்கூடிய கண்களைப் படைத்தவளுமான கோட்டைக் காவலன் மகள், பயணம் துவங்கிய சில நிமிடங்களில் ஆபத்தையும் தான் சிறைப்பட்டவள் என்பதையும் அறவே மறந்தான். மலையின் அழகை, சுற்றிலும் அடர்ந்திருந்த காடுகளில் வனப்பை, எட்டச் சத்தம் போட்டுப் பளபளத்த அருவியின் எழிலைக் கண்டு பிரமை கொண்டாள். வானத்தில் உலாவிய சந்திரனை விட்டு அவனை அடுத்திருந்த மலையுச்சியின்மீது தவழ்ந்த வெண்ணிற மேகமும், காட்டு முகப்புகளில் அதிமாக உருத்தெரியாமல் வெண்மதி பின் நிலவு காரணமாக வெளுத்தவைபோல் கிடந்த வண்ண மலர்களும் அவள் மனத்தை இன்ப உலகத்துக்குக் கொண்டுபோயின. அந்த எண்ணங்களுடன் நடந்து சென்றவள், சட்சட்டென்று நின்று, வழியில் உதிர்ந்திருந்த மலர்களில் சிலவற்றை எடுத்துத் தானும் கூந்தலில் செருகிக் கொண்டு முத்துக்குமரியின் கூந்தலிலும் செருகினாள். ஒரு மலரை முகர்ந்து பார்த்து, “அப்பாடி! என்ன மணம்!” என்று உணர்ச்சி வசப்படவும் செய்தாள்.

அந்த மலை, அந்தக் காடு, மலர்கள், ஏன் வழியில் உதிர்ந்த தழைகள்கூட அவளுக்குப் பேரின்பமளித்தன. காடுகள் பார்வைக்கு அடர்த்தியே தவிர, கொற்கையின் தென்கரைத் தோப்பின் அடர்த்தி, பொதியமலைக் காடுகளில் இல்லையென்று தன்னுள் சொல்லிக்கொள்ளவும் செய்தாள். கொற்கைத் தோப்பை நினைத்ததால் பற்பல இன்ப நினைவுகள் அவள் உள்ளத்தில் புகுந்தன. பொருதையில் தான் நீராடியது. நீர்க்கரை மண்டபத்தில் உட்கார்ந்து இளவரசன் தன்னை வெறித்து வெறித்துப் பார்த்தது, முத்தங்காடியிலிருந்து தன்னைத் தொடர்ந்து வந்து தோப்பு விளிம்பில் தான் சுரணைகெட்டுக் கிடந்த போது தனக்குச் சிகிச்சை செய்தது எல்லாம் அவன் மனக்கண் முன்பு எழுந்து அவளுக்குச் சொல்லவொண்ணா இன்ப வேதனையை அளித்தன. இரு முறை அவர் என்னைத் தொட்டார்; இரண்டு முறையும் சிகிச்சை செய்யத்தான் தொட்டார்; இரண்டு முறையும் அவர் மடியில் கிடந்தேன். சுரணை வந்தபோது சிகிச்சை செய்தது தினைவிருக்கிறது. சுரணை இல்லாதபோது…” என்று எண்ணமிட்ட இளநங்கையின் உடலில் பெரும் இன்ப வேதனை ஊடுருவிச் சென்றது. “சே சே! இருக்காது. அவர் மிகவும் பண்புள்ளவர். நிராதரவாகக் கிடப்பவளிடம் அவருக்கு அனுதாப உணர்ச்சி மட்டும் தான் இருந்திருக்கும். வேறு உணர்ச்சி இருந்திருக்காது. அவர் பண்பாடு வேறு உணர்ச்சிகளுக்கு இடம் தராது, என்று இளவரசனுக்குப் பரிந்து பேசுவது போல் தன் எண்ணங்களில் எழுந்த வினாக்களுக்குத் தானே பதில் கூறிக் கொண்டாள்.

அத்தனையிலும் அவள் உள்ளூர இன்னொரு எண்ணமும் ஓடியது. ‘இவர் பண்புகெட்ட தனமாக நடந்து கொண்டிருந்தாலும், தனக்கு ஆட்சேபணைவிருக்காது என்பது போன்ற ஒரு கள்ள எண்ணமும் அவள் கருத்தில் உலாவியது. கருத்தில் உலாவியதே தவிர, அதை மனம் ஒப்புக்கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அப்படியே மனமும் ஒப்புக்கொண்டாலும் உதடு உரைக்காது என்பதை அவள் உணர்ந்து கொண்டாள்..

இப்படி நினைத்த அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. ‘சே சே! நான் என்ன இப்படி மாறிவிட்டேன். நான் மாறிவிட்டேனா அல்லது அவர் என்னை மாற்றிவிட்டாரா? மனம் விரும்பும் புருஷனுடைய ஸ்பரிசத்துக்கு இத்தனை பலமா? என்று தனக்குள் கேள்வியும் கேட்டுக் கொண்டாள். கடைசியில் ஒரு முடிவுக்கும் வந்தாள். “எப்படியும் பெண் ஜன்மம் பலவீனமான ஜன்மம்தான். அதன் காரணமாகத்தான் வாலைப்பருவத்தில் பெற்றோர் பாதுகாப்பு வைக்கப்பட்டிருக்கிறது. கொற்கையில் இஷ்டப்படி என்னைச் சுற்றவிட்டது தந்தையின் தவறு’ என்றும் முடிவு செய்தாள். ஆனால் அந்த முடிவும் அவளுக்குத் திருப்தியாய் இல்லை. பெற்றோர் கட்டுப்பாடு தன்னைக் கோட்டைக்குள் அடைத்திருந்தால், இளவரசனைத் தான் எப்படிச் சந்தித்திருக்க முடியும் என்று நினைத்தான் இள நங்கை.

‘கோட்டைக்குள் நான் அடைந்திருந்தால் இளவரசர் என்னைப் பார்த்திருக்க மாட்டார்; பார்த்திராவிட்டால் தொடர்ந்திருக்க மாட்டார்; தொடர்ந்திராவிட்டால் வீரரவியின் எண்ணங்கள், ஏற்பாடுகள், கொற்கையின் ஆபத்து, எதுவும் அவருக்குத் தெரிய நியாயமில்லை. இவை தெரியாவிட்டால், பாண்டிய நாட்டின் கதி அதோகதிதானே?’ என்று கேட்டுக்கொண்டு, பாண்டிய நாட்டின் நலனுக்காகவாவது தாங்கள் சந்தித்ததும், தங்களுக்குள் ஏற்பட்ட இதர நிகழ்ச்சிகளும் நியாயம் என்று சொல்லிக்கொண்டான். ஆனால் இத்தனை நியாயம் கற்பித்ததற்கு உண்மைக் காரணம் பாண்டிய நாட்டு நலனோ, சேரநாட்டு நலனோ, ஏன் உலகத்தின் நலனோகூடக் காரணமில்லையென்பதைப் புரிந்துகொண்டாள், இருந்தாலும் புரியாதது போல் பாசாங்கு செய்தாள். காதலின் சக்தி அவளுக்கு நன்றாகப் புரிந்தது. பற்பல பாசாங்குகளும், பொய்யும், சுய எண்ணங்களையே ஏமாற்றிக் கொள்வதும் ஆகிய இத்தனையும் சேர்ந்த பெரும் மர்மம் இந்தக் காதல்,” என்று காதலைக் கடிந்து கொள்ளவும் செய்தாள்.

இத்தகைய நினைப்புகளுடன் அவன் நடந்து சென்ற தால் தானும் பாண்டியன் மகளும் மெள்ள மலைச்சரி வொன்றில் ஏறிச் செல்வதையோ, அப்படி ஏற வேண்டிருந்ததால் பெருமூச்சு விட வேண்டிருந்ததையோ இளநங்கை உணரவில்லை. தங்கள் புரவிகளிரண்டையும் பிடித்துக்கொண்டு இரு வீரர்கள் முன்பு சென்றதால் அந்தப் புரவிகளின் குளம்புகள் இடறிவிட்ட சிறுகற்கன் சரிவில் ஓடிவந்து தங்கள் கால்களில் பட்டதையும்கூட அவள் கவனிக்கவில்லை. தாங்கள் மலையின்மீது ஏறஏற, மலைப் பாதை குறுகுவதையும், நான்கு நான்கு பேராகச் சென்ற வீரர்கள் இருவர் இருவராக வரிசையாகச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதையும்கூட அவள் உணரவில்லை. முத்துக்குமரி அதைப்பற்றித் தெரிவித்தபின்பு தான் அவள் சுயநினைப்புக்கு வந்தான். முத்துக்குமரியும் அப்படித் தீவிர சுயநினைப்புக்களுடன் நடக்கவில்லையென்றாலும், இந்திர பானு மீதிருந்த அவள் சீற்றம் காதல் உணர்ச்சிகளை அடக்கியிருந்ததால் மலை ஏறஏறப் பாதை குறுகுவதையும் காடு நன்றாகத் தங்களை நெருங்குவதையும் அவளால் உணரமுடிந்தது. அதை அறிவிக்க அவன் இளதங்கையின் கையை அழுத்திக் கொடுக்கவே, சுரணை பெற்ற இளநங்கை சுற்றும் முற்றும் பார்த்து, “பாதை மிக நெருக்க மாயிருக்கிறதே. என்றான் சற்று உரக்க.
அவர்களுக்கு முன்பு நடத்த காவலர் தலைவன் சற்றுத் திரும்பி, “ஆம் இன்னும் கால்காதம் இப்படி இருக்கும். பிறகு சமவெளி வந்துவிடும். இதில் வருவது கொஞ்சம் கஷ்டம்தான்,” என்றான்.

“ஏன், வேறு பாதையில்லையா நீங்கள் செல்லுமிடத் திற்கு?” என்று வினவினாள் இளதங்கை.

“இருக்கிறது,” என்றார் வீரர் தலைவன்.

“பின், ஏன் அந்தப் பாதையில் போகவில்லை?” என்று வினவினாள் இளநங்கை, அதிகாரம் தொனித்த குரலில்.

வீரர்கள் தலைவன் முகத்தில் வியப்புக் குறி விரிந்தது. அவன் திரும்பியவண்ணம் முன்னேறிக் கொண்டே சொன் னான்; “இது குறுக்குப் பாதை, சீக்கிரம் போய்ச் சேரலாம்” என்று.

“சீக்கிரம் எங்கு போய்ச் சேரவேண்டும்?” என்று மீண்டும் கேட்டாள், இளநங்கையும் மலைச்சரிவில் அநாயசமாக ஏறிக்கொண்டே.

“அதுதான் முன்பே சொன்னனே?” தலையை முன் புறம் திரும்பிக்கொண்டு, இளநங்கையைப் பாராமலே பதில் சொல்லிக்கொண்டு, முன்னேறினான் வீரர்கள் தலைவன்.

“என்ன சொன்னீர்கள்!” என்று இளநங்கை கேட்டாள்.

“போனதும் புரிந்து கொள்வீர்களென்று” எனக் கூறிய வீரர் தலைவன் லேசாக நகைத்தான்.
அவன் நகைப்பு இளநங்கைக்கு மட்டுமின்றி முத்துக் குமரிக்கும் ஆத்திரமூட்டியதென்றாலும், அவ்விருவரும் ஏதும் செய்யக்கூடிய நிலையில் இல்லாததால், அகத்தில் எரிச்சலுடனும், புறத்தில் மௌனத்துடனும் மலைச்சரிவில் ஏறினார்கள். அதற்குப் பிறகு அவ்விருவரும் யாருடனும் பேசவில்லை. அவர்கள் முன்னும் பின்னும் இருவர் இருவ ராகச் சாரியாக வந்த வீரர்களும் அந்தப் பாதையில் ஏறுவதையே குறிக்கோளாகக் கொண்டு துரிதத்தைக் காட்டினார்கள். அவர்கள் தாமதப்பட்ட சமயங்களில் வீரர் தலைவன், “உம் உம்…சீக்கிரம்…” என்று இரைந்து துரிதப் படுத்தினான்.

அவன் துரிதப்படுத்தியபோது அவன் குரலில் லேசாகப் பயம் தொனித்ததை இளநங்கை கவனித்தாள். ஆனால் அதற்குக் காரணம் மட்டும் விளங்கவில்லை அவளுக்கு. அவன் அனாவசியமாகக் கிலியடைவதாகவே தோன்றியது அவளுக்கு. அந்த ஒற்றையடி மலைப் பாதையில் சுற்றிலும் காடுகளடர்ந்த பாதுகாப்பில், யாரும் அவர்களை அணுகுவது சாத்தியமில்லையென்பதையும், அணுகுவதானால் சமவெளியில் அணுகினால்தான் பயனுண்டு என்பதையும் புரிந்து கொண்ட அவள், வீரர்கள் தலைவன் ஏன் அச்சப்படுகிறான் என்பதை உணர முயன்று முடியாமல் தவித்த சமயத்தில் அவன், “சற்று நில்!” என்று கூறி வீரர்களைச் சட்டென்று நிற்கவைத்தான். பிறகு எதையோ சில வினாடிகள் உற்றுக் கேட்டான். துஷ்ட மிருகங்களின் உறுமல்களைத் தவிர வேறெதுவும் காதில் விழாததால், “சரி, நடவுங்கள்” என்று உத்தரவிட்டான்.

வீரர்கள் நடந்தனர். அடுத்த நாலைந்து திமிடங்களில் அவன் மீண்டும் வீரர்களை நிற்கச் சொன்னான். பிறகு இரு புறங்களிலுமிருந்த காடுகளில் வலதுபுறக் காட்டை உற்று நோக்கினான். சிறிது நேரம் எதையோ உற்றுக்கேட்டான். “எனக்கு என்ன மனப்பிரமையா?” என்றும் இரைந்து கேட்டான்.

“என்ன கேட்கிறீர்கள்?” என்று வினவினான் பக்கத்தி லிருந்த வீரன்.

“குதிரைக் காலடிச் சத்தம் ஏதாவது கேட்டதா உனக்கு?” என்று வினவினான் வீரர் தலைவன்.

“இல்லை,” என்ற வீரன், “உங்களுக்குக் கேட்டதா?” என்று வியப்புடன் பதிலுக்கு ஒரு கேள்வியையும் போட்டான்.

“ஆம், கேட்டது,” என்தான் வீரர் தலைவன்.

பக்கத்திலிருந்து வீரன் மெல்ல நகைத்தான். அதைக் கண்ட வீரர்கள் தலைவன் குரல் கடுமையுடன் எழுந்தது. “என்ன நகைக்கிறாய்?” என்று.

“நீங்கள் நோக்கிய பகுதியில் புரவி ஏறமுடியுமா?” என்று மரியாதை நிரம்பிய குரலில் வினவினான் வீரன்.

“முடியாது,” வீரர் தலைவன் பதிலில் குழப்பமிருந்தது.

மிகவும் கரடுமுரடான பாறைகள் குத்துக் குத்தாகவுள்ள மலைக்காட்டுப் பகுதியில் மனிதர்களே தொற்றிக் கொண்டு ஏறவேண்டியிருக்க, அதில் புரவியில் யாரும் வர முடியாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இருப்பினும் ஏதோ ஒருவகைச் சந்தேகம், அச்சம் அவன் இதயத்தைச் சூழ்ந்திருக்க வேண்டும். ஆகவே, அடுத்தபடி பயணத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் நடத்தினான், அப்படி நடத்திக்கொண்டேயிருக்கையில் சட்டென்று பக்கத்துக் காட்டுக்குள் ஓடினான். அவன் நிற்க உத்தரவிடாததால் முன்னால் சென்ற வீரர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவன் பக்கத்திலிருந்த வீரனும் மற்றவர்களும் நின்றார்கள். பக்கத்துக் காட்டில் ‘டக் டக் டக்’ என்ற குதிரைக் குளம்படி ஒலிகள் இப்பொழுது சற்றுத் தெளிவாகவே கேட்டன. ஆனால் திடீரென்று நின்று விட்டன.

அந்த ஒலிகள் முத்துக்குமரியின் காதிலும் இளநங்கை யின் காதுகளிலும்கூடத் தெளிவாக விழுந்தன. அவை நின்றதையும் அவர்கள் கவனித்தார்கள். அந்த இரவில் மனிதரே நடக்கமுடியாத அந்தக் காட்டு இருட்டுக்குள் புரவிமீது யார் வரமுடியும் என்று அவர்களும் தங்களைக் கேட்டுக்கொண்டனர்.

சற்று நேரத்தில் காட்டுக்குள்ளிருந்து வந்த வீரர்கள் தலைவன், “சரி சரி நடவுங்கள். புரவிக் குளம்படியல்ல அது. பெரும் காட்டு ஆடு ஒன்றின் குளம்பு ஒலி, எட்டித் துரத்தி விட்டேன்,” என்றான்.

அவன் சொன்னது சரியாக இருக்க வேண்டுமென்றே பலப்பட்டது இளநங்கைக்கும். பிறகு புரவிக் குளம்பு ஒலி எதுவும் கேட்கவில்லை. அடுத்த இரண்டு நாழிகைக்குள் வீரர் கூட்டம் அந்த மங்கையர் இருவருடன் அந்த மலையிலிருந்த பீடபூமியை அடைந்தது. வீரர்கள் தலைவன் அவர்களை அந்தப் பீடபூமியிருந்த விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று ஓர் அறையில் தங்க வைத்ததன்றி, இப்படி அமருங்கள்,” என்று அங்கிருந்த இரு ஆசனங்கனை கட்டியும் காட்டி விட்டு வெளியேறினான். சில வினாடிகளில் திரும்பி வந்து, “தங்களில் யார் இளநங்கை என்பது?” என விசாரித்தான்.

“நான்தான்,” என்றாள் இளநங்கை.

“தலைவர் இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார். இன்னும் சற்று நேரத்தில் இங்கு வந்து உங்களைச் சந்திப்ப தாகச் சொன்னார்,” என்று கூறி, அவளிடம் பட்டுச் சீலையில் சுற்றியிருந்த ஏதோ ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.

அவன் தந்த அந்தப் பட்டுச் சீலை கனத்தது. சீலை பட்டுமல்ல, கையில் வாங்கியதும் அவன் சிந்தையும் கனத்தது. வெகு வேகமாகப் பிரித்தான் அந்தச் சீலையை, உள்ளிருந்த பொருளைப் பார்த்தாள். பிரமித்தாள். ஆபத்து எல்லை மீறி விட்டதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டாள்.

Previous articleRaja Muthirai Part 1 Ch18 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch20 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here