Home Historical Novel Raja Muthirai Part 1 Ch2 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch2 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

80
0
Raja Muthirai Part 1 Ch2 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch2 |Raja Muthirai Part 1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch2 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 2 இளநங்கை நீரோட்டம்!

Raja Muthirai Part 1 Ch2 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

இளங்காளை கண்ணோட்டம்!
முத்து வாங்க முயன்று, அந்த முயற்சிக்கு முடிவு காணாமல் கையில் வாங்கிய முத்துச் சரத்தையும் முத்துக் கடைப்பெண்ணிடமே கொடுத்துவிட்டு, எதிர்சாரியிலிருந்து தன்னை உற்று நோக்கிய உருவத்திடமிருந்து தப்ப, முத்தங்காடிக் கும்பலில் மறைந்து முழுவேகத்துடன் நடந்து விட்ட இளநங்கை, அங்காடி வளைவுகளில் பலவிடங்களில் புகுந்தும், திரும்பியும் சென்று, கடைசியாகப் பொருதையாற்றின் பெருங்கரை மீதும் ஏறி, அவ்வாற்றுக்குள் இறங்கவும் செய்தாள். இருபெருங்கரைகளுக்கிடையே மணல் திட்டுகளையும், சமமணற்பரப்பையும் ஆங்காங்கு காட்டிக்கொண்டும், இருகரைகளின் ஓரத்திலும் நட்டநடுவிலும் மூன்றாகப் பிரித்து நீரோட்டத்தைச் செலுத்திக் கொண்டும், சந்திர வெளிச்சத்தில் பளபளத்த பொருதையாறு, அழகையெல்லாம் அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தது. கடலை அணைய ஒரு காத தூரமேயிருந்த காரணத்தால், பொருதையாற்றின் நீரோட்டமும் கணவனைக் கண்டதும் வெட்க தடை போடும் இன மனைவிமார்களின் மந்தகதியைப் போலத் தாறுமாறாகவும் இருந்ததால், நீர்க்கால்கள் சில இடங்களில் வளைந்தும் சில இடங்களில் நேராகவும் ஓடிக் கொண்டிருந்தன. முழுமதி வெளிச்சத்தில் தெரிந்த மணற்பரப்பும், முத்தங்காடியின் முத்துக்களின் இயல்பைப் பெற்றது போலும், ஒரு வேளை இந்த மணலைத்தான் பொருதை வாரிக்கொண்டு போய்க் கடலில் சேர்த்து முத்தாக அடிக்கிறாளோ என்பது போலும், இந்த முத்துச் சீர்வரிசையைக் கொண்டுசென்றும், திருப்தியில்லாததால்தான் கடவரசன் பொருதையின் மீது அலைகளைக் கோபத்துடன் அவள் கொண்டுவந்த சீரைத் திருப்பி, மணலை வாரியடித்து அவள் வேகத்தைத் தடைசெய்து விட்டானோ என நினைக்கத் தூண்டுவது போலுமிருந்தது, பொருநையின் அந்த இராக்காலத் தோற்றம். கணவன் சீற்றப்படும்போது ஏதும் செய்ய வகையறியாது திணறி முகம் கறுக்கும் பிறந்த வீட்டு உறவினர்களைப் போல, முத்தங்காடியிலிருந்த கரைக்கு எதிர்க்கரையிலிருந்த அடர்த்தியான தோப்பு இருட்டித்துக் கிடந்ததன்றி, அக்கரையிலிருந்த படித்துறையும் இரு சிறு மண்டபங்களும் கூடச் சந்திர வெளிச்சத்தில் அகப்பட்டுக் கொள்ளாமல் பரிதாபமாகக் காட்சியளித்தன. அந்தத் தோப்பையும் தாண்டி மேட்டுப்பாங்கான நிலத்தில் தெரிந்த கொற்கையின் கோட்டை மட்டும் நிலவில் வெளேரெனத் தெரிந்ததல்லாமல், அதன் இரண்டு மகுடங்களில் ஒளிவிட்ட இரு பெரும் தீபஜ்வாலைகள் செக்கச் செவேலென்று ஒளி வீசி, பொருதையை அனாதரவு செய்யும் கடலரசனை நோக்கித் தீவிழி விழிப்பது போலவும். அதர்மம் எதுவாயினும், செய்வது யாராயிருந்தாலும், கொற்கை அரசில் அனுமதிக்கப்பட மாட்டாது என வலியுறுத்துவது போலவும் இருந்தது.

பொருதையின் கரையில் வேகத்துடன் சரசரவென்று இறங்கிய இளநங்கை மட்டும் அன்று சாதாரண மன உணர்ச்சியுடனிருந்தால், மேற்சொன்னபடியெல்லாம் அவளும் கற்பனை செய்து பார்த்திருப்பாள். கரைமீது நாழிகைக் கணக்கில் நின்று எதிரே விரிந்த காட்சியில் கண்ணையும் மனத்தையும் பறிகொடுத்துமிருப்பாள். ஆனால் அவளுடைய இள இதயத்தில் அச்சம் புகுந்திருந்ததால், புத்தியில் கற்பனைக்கு இடமில்லாதிருந்தது. கற்பனைக்குத்தான் இடமில்லையே தவிர, கடிதில் இருப்பிடத்தை அடைய வேண்டுமென்ற அவசரத்துக்கு இடமிருந்ததால், கால்களின் வேகம் கடுமையாயிருந்தது. வெகு வேகமாக ஆற்றின் மேட்டிலேறி இறங்கி, ஓரமாக ஓடிக்கொண்டிருந்த நீர் அருகே வந்ததும், சேலையை இரு கைகளாலும் தூக்கிப் பிடித்துக் கொண்டு இறங்கி, அந்த நீர் மாலையைத் தாண்டி நடந்தாள். இரண்டு ஓரங்களிலும் சரி, நட்ட நடுவிலும் சரி, நீரோட்டத்தின் ஆழம் முழங்காலளவே யென்பதை அவள் உணர்ந்தே இருந்தா ளாதலால், அலட்சியமாக அளவுக்கு மேற்படாமல் வெகு பக்குவமாகச் சேலையை எடுத்துப் பிடித்துக் கொண்டு ஆற்று மணலில் நடத்தாள். கரையோரத்து நீர் அவள் காலில் நனைந்ததால் நட்டாற்று நீர் மாலைக்குச் செல்லு முன்பு இடையிலிருந்த வெண்மணல் உட்காலில் மட்டுமின்றிப் பாத விளிம்பிலும் பரவி அவள் அழகிய பாதங்களுக்கு முத்துச் சரங்களைப் போட்டது. அவ்வப்பொழுது எழும்பி, தோப்பிலிருந்து வந்த காற்றில் விர்ரென்று மணல் முத்துக்கள் கிளம்பி மேற்காலில் மட்டுமின்றிக் கைகளிலும் சுள்ளென்று தெறித்தன. சாதாரண சமயத்தில் அந்தக் காற்றளித்த இம்சைகூட இளநங்கைக்கு இன்பமாகவே இருந்திருக்கும். ஆனால் அந்த இரவில் பயந்து இல்லமோடும் அந்த வேளையில் அம் மணல் வீச்சு மட்டுமல்ல. காலில் ஒட்டிக்கொண்ட மலகாலுங்கூட பெரும் வேதனையையே தந்தன. அகம் புறம் இரண்டிலும் வேதனையுடன் மணலில் வெகு வேகமாக ஓடிய இளதங்கை, ஆற்றின் மத்தியிலிருந்த நீரோட்டத்துக்கு வந்ததும் மீண்டும் சேலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு முத்தங்காடியிலிருந்த கரையைத் திரும்பியொரு முறை நோக்கினாள். ஒரு வினாடி அவள் மனம் குதூகலித்தது. எதிர்க்கரையில் அந்த உருவத்தைக் காணாததால் சாந்திப் பெருமூச்சொன்றும் அவளிடமிருந்து வெளிவந்தது. ஆனால் அடுத்த வினாடி குதூகலமும், சாந்தியும் பெரும் பீதிக்கே இடம் கொடுத்தன. அந்தக்கரை மீதேறிய அந்த உருவம் வெகு நிதானமாக ஆற்றில் இறங்கவும் தொடங்கியது.

இளநங்கையின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. சேலையை ஒரு கை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்க இன்னொரு கை அவள் இடையைத் தடவிப் பார்த்தது. வழக்கமாகத் தற்காப்புக்காக அவள் இடையில் செருகிக் கிடக்கும் சிறு கத்திகூட அங்கு இல்லை. அன்று முத்து வாங்குவதிலும், முத்தங்காடியின் பயமற்ற சூழ்நிலை யிலும் மனத்தை ஆழவிட்டிருந்த காரணத்தால்தான் தனது கத்தியைக் கொண்டுவரத் தவறிவிட்டதை உணர்ந்த இளதங்கை, தனது அறிவீனத்தை நினைந்து தன்னையே கண்டித்துக் கொண்டாள். அவள் உதடுகள் கோபத்தாலும், அச்சத்தாலும் லேசாகத் துடித்தன. ஒரு விநாடி பிறகு வெகு வேகமாக நீரில் இறங்கி, அந்த நீரோட்டத்தையும் தாண்டித் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே துரிதமாக ஓடினாள் அவள். அப்படி ஓடியபோதும் அவளுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியாத புதிராயிருந்தது.

பின்னால் தன்னைத் தொடர்ந்து வந்த இனங் காளைக்குத் தன்னைப் பிடிப்பது நோக்கமாயிருந்தால் அதற்கு தேவையான துரிதத்தை அவன் காட்டாததையும், வெகு நிதானமாகவே அவன் நீரில் இறங்கி நடந்ததையும், நீரைத் தாண்டி மணற் பரப்புக்கு வந்த பின்னும் ஒரே சீராகவும் சாவதானமாகவும் நடந்து வந்ததையும் கவனித்த இளநங்கை, ‘என்னைப் பிடிப்பது நோக்கமில்லா விட்டால் இவன் ஏன் என்னைப் பின்பற்றி வருகிறான்?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு, அதற்கு விடை காணாமல் தவித்தாள். நின்று விடை காணத் துணிவு மில்லாததால், விடுவிடு எனக் கடுகிச் செல்லுவதிலேயே நாட்டத்தைக் காட்டினான் அவள்.

இத்தனைக்கும் இளநங்கை அத்தனை அஞ்சும் சுபாவம் உள்ளவளும் அல்ல. அவள் துணிவைப் பற்றிக் கொற்கையில் அறியாதவர்கள் யாருமேயில்லை. கொற்கைக் கோட்டைக் காவலன் மகள் இளநங்கைக்கும், அச்சத்துக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாதென்பதைக் கொற்கை நகர மக்கள் சந்தேகத்துக்கிடமின்றி அறிந்திருந்தார்கள். அவள் துணையேதுமின்றியும் தந்தையிடம்கூடச் சொல்லாமலும் இராக்காலங்களில் கடைவீதிக்குச் செல்வதும், காலங்கடந்து கோட்டைக்குத் திரும்புவதும் தகர மாந்தர் பலர் மட்டுமன்றிக் கோட்டைக் காவலரும் அறிந்தேயிருந்தார்கள்.

இரண்டொரு சமயங்களில் அவளிடம் விளையாட முயன்ற வீரவாலிபர் இருவரில் ஒருவனுக்குக் காலில் கத்திக் காயமும் இன்னொருவனுக்கு மண்டையில் சிலம்பக் காயமும் ஏற்பட்டதைக் கண்டபின்பு அவளிடம் யாரும் அனாவசிய விளையாட்டு எதையும் வைத்துக் கொள்வது கிடையாதென்பதும் அம்மாநகர் அறிந்த உண்மை. இந்தப் பெண்ணை ஏன் தகப்பன் கண்டபடி இராக்காலங்களில் உலாவ விடுகிறானென்று ஆரம்பத்தில் கேட்டவர்கள். இந்த இரு சம்பவங்களுக்குப் பிறகு அதைக் கேட்பதையும் நிறுத்திக் கொண்டார்கள். இவள் அழகிய பெண்ணுருவத்தில் வந்த ஆண் மகன்தானென்பதும் கோட்டைக் காவலனுக்கு ஆண் மகனில்லாத குறையை இளதங்கை கண்டிப்பாய்த் தீர்த்து விட்டாளென்பதும் கோட்டையிலிருந்த வீரர்கள் கருத்தாகவுமிருந்தது; மாநகர மக்கள் கருத்தாகவுமிருந்தது.
இப்படி அச்சத்தை லவலேசமும் அறியாத இளநங்கையின் இதயத்தில் இளவேனிற் காலத்தின் இளமதி தோன்றத் துவங்கிய நாளிலிருந்து அச்சம் உதயமானதன்றி, அந்த அச்சமும் சந்திரன் வளர்ச்சிக்கயப் போலவே தினசரி வளரவும் துவங்கியது. அந்த அச்சத்தைத் துவக்கியவனும் அவளை அன்று தொடர்ந்து வந்த இளங்காளைதான், அதை வளர்த்தவனும் அவனேதான். இளமதி கண்ணுக்குத் தெரிந்த மூன்றாம் பிறையன்றுதான் அந்த வாலிபனும் அவள் கண்ணுக்குத் தெரிந்தான். சந்திரனுக்கு அவள் கற்பித்த அத்தனை மாசுபெற்ற நடத்தையை அவனுக்கும் கற்பித்தாள் அவள், சந்திரன் எப்படி நீராடை நீக்கிய பொருதையைக் கள்ளக் கண்னுடன் பார்த்தானோ, அப்படியே அந்த வாலிபனும் தன்கைள அன்று பார்த்த தாகத் தோன்றியது.

இக் கதை துவங்கும் இரவில், எந்தப் படித்துறையை நோக்கி இளநங்கை ஓடிக்கொண்டிருந்தாளோ அதே படித்துறையைத் தாக்கியோடிய நீரில் அவள் அன்று துளைந்து கொண்டிருந்தாள். பௌர்ணமியன்று வடிந்த அளவுக்கு பொருதை பதினொரு நாட்களுக்கு முன்பு வடியாததால் ஆற்றோரங்களில் கொஞ்சம் அதிகமாகவே நீராழம் இருந்ததன் விளைவாகச் சற்று நீந்தவும் முடிந்தது. இளநங்கையால் அப்படி மூழ்கி நீந்தித் தலைநிமிர்ந்த ஒரு சமயத்தில் தான் இனங்காளையொருவன் படித்துறைமிலிருந்து சிறிது தூரத்திலிருந்த மண்டபத்தில் உட்கார்ந்து தன்னைக் கண கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். அவள் முதலில் அவன் தன்னைத்தான் பார்க்கிறானா அல்லது வேறு யாரையாவது பார்க்கிறானா என்று சந்தேகப்பட்ட இளநங்கை மீண்டும் மூழ்கி நீந்திக் கரைக்கு வந்து படித்துறையில் உட்கார்ந்து கொண்டு மண்டபத்தை நோக்கினாள். அப்பொழுதும் அவன் அந்த இடத்தை விட்டு அகலவுமில்லை; அவளை விட்டுக் கண்ணை எடுக்கவுமில்லை .

அந்தக் காலை நேரத்தில், அந்தப் படித்துறையில் அவள் மட்டும் தனிப்பட தீராடவில்லை. கோட்டையிலிருந்து வந்திருந்த பல பெண்களும் நீராடிக் கொண்டு தானிருந்தார்கள். அப்படியிருக்க, அவன் தன்னைத் தான் பார்க்கிறானென்று நினைப்பது பிரமையாகக் கூட இருக்கலாமென்று நினைத்தாள் அவள். அவன் ஏன் பொருதையின் அந்தக் காலையழகைப் பருகியிருக்கக்கூடாது என்றுகூட நினைத்தாள் முதலில். அன்று பொருதையின் அழகு அத்தனை சிறப்பாயிருந்தது.

அகத்தியர் தவங்கிடந்து, தமிழ்வடித்த பொதியமலையில் தோன்றி, பொருநையென்றும், தாமிரபரணியென்றும் பெயர் பெற்று கொடி போன்ற துடியிடை துவள மலைப் பாறைகளில் இறங்கி ஓடிவந்து, வளர்ந்து மரக்கலங்களையும் தாங்கும் மகோன்னத ஆழமும் அழகும் பெற்றதன்றி முத்தங்காடியைக் கரையில் தாங்கும் கீர்த்தியும் பெற்ற அந்த மகாந்தி, அன்று காலை வெய்யிலில் செந்நிறத்துடன் பளபளத்துத் தனது தாமிரபரணியென்ற சிறப்புப் பெயருக்குச் சான்று கூறிக்கொண்டிருந்தது, பொதியமலையில் இருந்து அது அடித்துக் கொண்டு வந்த சில காட்டுப் பூக்களும் பச்சிலைகளும் நீரோட்டத்தில் மிதந்தும் சுழன்றும் அதில் நீராடுவோருக்கு நோய் அண்டக் காரணம் இல்லை யென்பதை நிரூபித்துக்கொண்டிருந்தன. அதற்கு வேறு நிரூபணம் தேவையானால் செழுமைகொண்ட மேனிகளுடன் படித்துறையில் நீராடிய பாவையர் அதை அளிக்கத் தவறவில்லை. தாமிரபரணி அவர்கள் மேனியையும் நன்றாகத் துலக்கிய தாமிரம் போலும் தாமிரம் கலந்த வெண்கலம் போலும் அடித்திருந்தது. அந்தச் சிவப்பையும் வெண்கல வெளுப்பையும் திருஷ்டியிலிருந்து மறைக்கவோ என்னவோ படித்துறைப் பாவையர் மேற்படியில் மஞ்சளரைத்துப் பூசிக் கொண்டி ருந்தார்கள்.

அந்த பொதுவெளியில் நீராடிய அந்த மங்கையர்கள் தான் எத்தனை கெட்டிக்காரர்கள்! இடுப்பளவு நீரில் நின்று எப்படி ஒரு கால் மாற்றி ஒரு காலை எடுத்து மேற்படி வைத்து மஞ்சள் பூசிக்கொண்டார்கள்; எப்படி இடுப்பளவு ஆழத்தில் இறங்கியதும் சேலையின் ஒரு பகுதியை எடுத்துக் கழுத்தை வளைத்துச் சுற்றிக்கொண்டு, மீதிச் சேலையை நீரில் நெகிழ விட்டு அழகெதுவும் வெளித் துலங்காமல் சமாளித்துக்கொண்டு ஆடை தோய்த்து நீராடவும் செய்தார்கள்! அமுத கலசங்களை மூடி மறைக்கும் ஆற்றல் நூலில் இழையும் சேலைக்கும் காரில் பிறக்கும் நீருக்கும் மட்டுமன்றி நாணத்துக்கும் உண்டு என்பதை என்ன அற்புதமாகக் காட்டினார்கள் அந்தத் தமிழகத்து அழகிகள், அவர்கள் கழுத்துக்கும் முதுகுக்கும்தான் மஞ்சளை லாவகமாகப் பூசி விட்டார்கள். ஆனால் மார்புக்கு எப்படிப் பூசுவார்கன், அடேடே! கையில் கரையாத கெட்டி மஞ்சளுடன் நீருக்குள் கழுத்தளவு மறைந்துவிட்டது இதற்குத்தானா?

இப்படிப் பரமபக்குவமாக அழகை மறைத்தும் பிரித்துப் பேசியும் ஜாடையாகப் பரஸ்பரம் பார்த்துக் கொண்டும் நீராடிய அந்த பாவையரை ஆதரவுடன் அணைத்துச் சென்ற பொருநையுங்கூடப் படித்துறை கரைகளில் தாக்கித் தாக்கிக் களுக் களுக்கென்று சிரித்தாள், காலையில் படித்துறைக் கரைமீதிருந்த தோப்பிலிருந்து சிவ்வென்று ஆகாயத்தில் பறந்த பட்சி ஜாலங்களும், மேலிருந்து அவர்கள் அழகைப் பார்த்தன.

இத்தகைய பொருதையின் மகோன்னதக் காட்சியில் அந்த வாலிபன் தன்னைத்தான் பார்க்கிறானென்று தான் என் நினைக்க வேண்டுமென்று முதலில் எண்ணித் தான் பார்த்தாள் இளநங்கை. ஆனால் ஏதோ மனத்தில் சந்தேகம் விழுந்துவிட்டால் மஞ்சள் பூசக் காலை எடுத்துப் படியில் வைத்தபோதும், நெற்றியிலும் கழுத்திலும் மஞ்சளணிய இரு கைகளையும் சற்றே தூக்கியபோதுங் கூடத் திரும்பத் திரும்ப இரு முறை அவனை நோக்கினாள். அந்த இரு முறையும் அவன் அவளை ஊன்றிப்பார்த்துக் கொண்டே உட்கார்ந் திருந்ததைக் கவனித்ததால் சீக்கிரம் நீராட்டத்தை முடித்துக் கொண்டு கோட்டையை நோக்கி மற்றப் பெண்களுடன் புறப்பட்டாள். சற்று தூரம் சென்றதும் திரும்பவும் ஒரு முறை மண்டபத்தை நோக்கினாள். அவன் எழுந்து அவளைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான், ஆனால் தொடர முற்படவில்லை.

மறுநாள் அவள் படித்துறைக்கு இதனாலேயே நீராட வரவில்லை. அதற்கு மறுநாள் பேந்தபோதும் பழைய நிலைதாள். அவள் வந்து படியிலிறங்கி நீரில் முழ்குவது வரையில் மண்டபம் காலியாகக் கிடந்தது. சேலை நனைந்து அவள் கலந்த வாசப்பொடியைப் பூச முற்பட்டபோது அவன் அதே இடத்தில் அமர்ந்திருந்தான். அன்றும் கால்களை எதிரே நீட்டி, பாதி மடித்துக் கைகளால் சுற்றி அவற்றைக் கட்டிக் கொண்டு அலட்சியமாக அமர்ந்து, அவளையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அன்று அவளுக்கு முதல் நாள் இருந்த நாகனத்துக்குப் பதில் கோபமே ஏற்பட்டதால் அவனை அலட்சியம் செய்து துளைந்து துளைந்து நீந்தி நீந்தி தீரில் விளையாடினாள். நல்ல வானைமீன் போலவே வழவழத்து வளைந்து கொடுத்த அவள் சாரமும் கால்களும் அந்தக் காலை நேர நீரில் பளபளத்தன. நீச்சலில் நீருக்குள் மாறி மாறி எழுந்த இரு கால்களும், உருண்டு சுழன்ற இடையும், மேல பகுதிகளும், மலர் மாலைகள் போலும், சிறு தங்கக் கட்டி போலும் மலர்ச் செண்டுகள் போலும் யார் மனத்தையும் அள்ளும்படியான பிரமையை ஊட்டின. அப்படிச் சுழன்று காலடித்து நீந்தி விளையாடி மல்லாந்த நேரங்களில், இடையிடையே இளநங்கை அந்த இனங்காளை மீது மலர்க்கண்களை வீசினாள்; மலர்க்கண்களைத்தான் வீசினாளா? அல்லது மலர்க்கணைகளை வீசினாளா என்பது விளங்க வில்லை அவனுக்கு, வீசியது எதுவாயினும் சரி. அவன் அதே இடத்தில் அதே நிலையில் அமர்ந்திருந்தான். அன்று அவள் கோபத்துடன் கரையேறிக் கோட்டைக்குச் சென்றாள். ஆனால் கோட்டை வரையில்தான் கோபம் இருந்தது. பிறகு மெல்ல ஓர் அச்சம் இதயத்தில் புகுந்தது. அடுத்து பத்து நாட்களில் அச்சம் பலமடங்கு அதிகரித்து விட்ட து .

அந்த வாலிபன் கேவலம் காமுகனல்ல என்பதைப் புரிந்து கொண்டாள் அவள். அவன் பார்வை திடமாயிருந்தது. உற்று மட்டும் பார்த்துக்கொண்டிருந்தானே யொழிய ஒரு தாளும் அவளருகே வரவோ பேசவோ முயலவில்லை அவன். மண்டபத்தில் உட்கார்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்ததைத் தவிர வேறு குற்றமெதையும் செய்யவில்லை. பெண்களைத் துன்புறுத்துவதற்குத் தண்டனை இருந்தது பாண்டி நாட்டில். ஆனால் பார்ப்பதற்குத் தண்டனை இல்லை. பார்ப்பதிலும் கெடுதல் இருக்கத்தான் செய்கிறது. எப்படிப் பார்க்கிறான், ஏன் பார்க்கிறான் என்பதிலும் விஷயம் இருக்கிறது. ஆனால் பார்வையின் கருத்துக்கு நிரூபணம் வேண்டுமே, அது சுலபமா?

ஆகையால்தான் இளநங்கைக்கு அவன் போக்கு பெரும் அச்சத்தையும் சங்கடத்தையும் விளைவித்தது. பெண்கள் குளிப்பதைப் பார்ப்பது பண்பாடல்லவென்பது அறிவீனனுக்குக் கூடத் தெரியும். அப்படியிருக்கப் பெண்களின் நீராட்டத் துறையில் தினம் உட்கார்ந்து உற்று உற்றுப் பார்ப்பவன் பண்பாடு கெட்டவனாகத்தான் இருக்கவேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டாள் இளநங்கை. அதைப் பற்றித் தந்தையிடம் சொல்லலாமென்று முதலில் யோசித்தாளானாலும், பிறகு வாயை அடக்கியே கொண்டாள். ‘அவன் பார்ப்பது உனக் கெப்படித் தெரியும்?” என்று அவர் கேட்டால் என்ன பதில் சொல்வது? என்று யோசித்து அதை மனத்திற்குள்ளேயே அடக்கிவிட்டாள்.

அடுத்த சில தினங்களில் தொடர்ந்து நீராடிய அவள் அந்த வாலிபன் தன்னைத்தான் கவனிக்கிறானென்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்டதால், அந்தப் பௌர்ணமியன்று காலை கோட்டையிலிருந்த தனது நீராட்ட அறையிலேயே குளித்துவிட்டாள். அன்று முத்தங்காடி கூடும் நாளாகையாலும், அன்றே விற்பனை அதிகப்படு மாகையாலும் தான் நீண்ட நாளாக விரும்பிவந்த பெருமுத்து வாங்க அங்காடிக்குச் சென்றாள். அங்காடியில் அந்த வாலிபனை அவள் எதிர்பார்க்கவில்லை. எதிர் பார்க்காததற்குக் காரணம் உண்டு. அவன் அத்தனை நாளும் நீராடும் படித்துறை மண்டபத்தில் தென்பட்டானேயொழிய மாலையில் அவள் கொற்கையின் சாதாரணக் கடைவீதியில் உலாவியபோதெல்லாம் தென்படவே வில்லை. ஆகவே அச்சத்தை உதறி முத்து வாங்கும் ஆசையை மேற்கொண்டு முத்துச் சந்தைக்கு இரவில் வந்தாள். அங்கு அவனைக் கண்டதும் ஏற்பட்ட அச்சம் ஆற்றிலிறங்கிய பின்பும் அதிகப்பட்டதால் வெகு வேகமாக ஆற்றைக் கடந்து எதிர்ப்படிகளில் ஏறித் தோப்புக்குள் மறைந்தாள்.

தோப்பின் மறைவு அவளுக்கு ஓரளவு துணிவைக் கொடுத்ததால் தோப்பின் டே மெல்லவே நடந்தாள் தோப்பின் விளிம்பை அணுகிய சமயத்தில் தூரத்தே இருந்த கோட்டையை ஏறெடுத்து நோக்கினாள். கோட்டைக்கு வெளியே பந்தங்கள் உலாவிக்கொண்டிருந்தன. புரவி வீரர் தடமாட்டம் அதிகமாயிருந்தது. அந்த நிலைக்குக் காரணம் என்னவென்று அறியாமல் அவள் திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் மேலும் திகைப்பூட்டும் சம்பவமொன்றும் திகழ்ந்தது. அவள் கரங்களை இரு பக்கத்திலிருந்து இருவர் பிடித்தனர். இன்னொருவன் பின்னாலிருந்து அவள் வாயை இறுகப் பொத்தினான். பொத்தியவன் அவள் காதுக்கருகில் குனிந்து மெல்லச் சொன்னான். “சத்தம் போடாதே, உனக்கு எந்தத் தொந்தரவும் வராது, எங்களுக்கு உதவினால்” என்று.

அவள் பதில் சொல்ல அவள் வாயிலிருந்த கையை மெல்ல விலக்கவும் செய்தான் பின்னாலிருந்தவள்.

“எதற்கு உதவி?” என்று வினவினாள் அவள்.

“உன்னைப் பின்பற்றி வருகிறவனைப் பிடிக்க” என்றான் பின்னால் நின்றவன்.

முத்து வாங்க வந்த மோகனப்பாவை தன்னை உதறிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். தன்னைப்பற்றிய மூவர் தவிர வேறு சிலரும் தோப்பில் இருளில் மறைந்திருப்பதை அவர்கள் கைகால்கள் அசைந்த அரவத்திலிருந்து தெரிந்து கொண்டாள் அவள். ‘ஒருவனைப் பிடிக்க இத்தனை பேர் எதற்கு?’ என்று எண்ணி வியக்கவும் செய்தாள். படித்துறையில் அந்த இளங்காளையைக் கவர்ந்த அந்தப் பாவையின் இதயம் அவனை அணுகிக் கொண்டிருந்த ஆபத்தை நினைத்து ஒரு விநாடி அனுதாபப்பட்டது. ஒரு வினாடி அந்த அனுதாபம் மறைந்தது. அந்தக் கள்ளனுக்கு இந்தத் தண்டனை தேவைதான் என்று நினைத்த அவள், “சரி நான் என்ன செய்யவேண்டும்?” என்று வினவினாள், பின்னால் தின்றவனை நோக்கி.

அவன் அவள் காதில் சில வார்த்தைகளைச் சொன்னான். “பயங்கரம் பயங்கரம்! அவரைக் கொல்லவா போகிறீர்கள்?” என்று கூச்சலிட்ட அவள் வாய் மீண்டும் பலமாகப் பொத்தப்பட்டது. அதே சமயத்தில் தன்னை எதிர் நோக்கியிருந்த ஆபத்தை உணராமல், அந்த இளங்காளை மிக நிதானமாக அந்த இடத்தை அணுகிக் கொண்டிருந்தான்.

Previous articleRaja Muthirai Part 1 Ch1 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch3 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here