Home Historical Novel Raja Muthirai Part 1 Ch20 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch20 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

70
0
Raja Muthirai Part 1 Ch20 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch20 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch20 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 20 துரோகி

Raja Muthirai Part 1 Ch20 |Raja Muthirai Part1|TamilNovel.in

அகத்தீசுவரர் கோயிலிலிருந்து தங்களைச் சிதை செய்து அழைத்து வந்த வீரர்கள் தலைவன் கொடுத்த சீலைச்சுருளைக் கையில் வாங்கியதும் அது கனத்ததிலிருந்தே அதன் உள்ளிருந்த பொருள் என்னவென்பதை ஊகித்துக் கொண்ட இளநங்கையின் சிந்தையும் கனத்த தென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. சீலையால் மூடப் பட்டிருந்தபோதிலும், அது கையில் கனத்ததைக் கண்ட இளநங்கை கையினால் அதைத் தடவிப் பார்த்ததுமே உள்ளிருப்பது என்னவென்பதை நிர்ணயித்துக் கொண்டாள். அந்த நிர்ணயத்தின் விளைவாகப் பெருமூச்சும் விட்டாள். ஆனால் அந்தப் பெருமூச்சு ஆசுவாசப் பெரு மூச்சல்ல; வேதனையிலிருந்து விளைந்த பெருமூச்சு. துக்கத்திலிருந்து எழுந்த சோக சுவாசம் ஆகும்.

சீலை பிரிக்கப்பட்டதால் பகிரங்கப்பட்டு மடியில் கிடந்த அந்தப் பொருளைப் பார்த்த இளநங்கை ஆரம்பத்தில் விடுத்த பெருமூச்சைக் கூட உணர்ச்சிப் பெருக்கால் சில விநாடிகளில் அடக்கிக்கொண்டான். அவள் மடியில் கிடந்தது. வீரபாண்டியன் இடைக்கச்சையில் காட்சியளித்த தங்கக் கோடரி. எந்தத் தங்கக் கோடரியைக் கொற்கையின் சேரர் மாளிகை மண்டபப் போரில் வீசியெறிந்து, வீரரவியிடமிருந்து தன்னை இளவரசன் காப் பாற்றினானோ, எந்தக் கோடரி வீரரவியின் தோளில் புதைந்து தங்கிவிட்டதால் தனது கோடரி நஷ்டமாகி விட்டதென்று பொருதைப் படித்துறையில் தனக்கு வீர பாண்டியன் விளக்கினானோ, அந்தக் கோடரி தன் மடியிலிருந்து தன்னை நோக்கி விழிப்பதைக் கண்டான் இளநங்கை. அது மட்டுமல்ல, அந்தக் கோடரியின் பட்டையில் செதுக்கப்படிருந்த யானையும், மீனுங்கூட தன்னை நோக்கிப் பரிதாபத்துடன் பார்ப்பதாகப் பட்டது அந்தப் பைங்கிளிக்கு. பாண்டிய நாட்டு இளவரசர்களின் ஆதி முத்திரையின் அம்சங்களான கோடரியும் யானையும் பிற்கால முத்திரையான மீனும் தன்மடியில் இணைந்து இடப்பதைக் கண்ட இளநங்கையின் எண்ணங்கள் பலபடி விரிந்தன. அந்தக் கோடரி மடியில் விழுந்து கிடந்தது, ராஜமுத்திரையே தனது மடியில் விழுந்து கிடப்பதாகத் தோன்றியதா, அல்லது அந்த முத்திரையினால் அதிகாரம் செலுத்தபவனும் முத்திரைக்கு உரியவனுமான வீரபாண்டியனே விழுந்து கிடப்பதாகத் தோன்றியதா என்றுகூட திர்ணயிக்க முடியவில்லை கோட்டைச் காவலன் மகளுக்கு.

அந்த ராஜமுத்திரையைக் கண்டதால் ஏற்பட்ட பெரும் பீதி அவளைச் சற்றுக் குழப்பத்திலேயே ஆழ்ந்தியிருந்தது. மண்டபப்போரில் வீரபாண்டியன் வீசிய கோடரி கொட்டுந்தளத்துக்கு வந்திருக்க வேண்டுமானால் வீரரவியும் கொட்டுந்தலம் வந்திருக்க வேண்டுமென்று நினைத்தாள் இளநங்கை. ‘அப்படியானால் கொட்டுத்தளத்திலிருந்த பாண்டியர் காவல் படை என்னவாயிற்று? அந்தப் படையின் தலைவனிடம் ஓலை கொடுக்கச் சொன்னாரே, இளவரசர்! அதையாரிடம் கொடுப்பது?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொள்ளவும் செய்தாள். தன் மடியில் பத்திரப் படுத்தியிருந்த இளவரசன் ஓலை இருக்கிறதா என்று மடியைத் தடவியும் பார்த்துக்கொண்டாள். ஓலை பத்திரமாயிருந்தது. ஆனால் பயன்? பயனேதுமில்லை என்பதைப் புரிந்துகொண்ட இளநங்கை மீண்டும் பெருமூச் செறிந்தான்.

முத்துக்குமரி பெருமூச்செறியவுமில்லை: வேறு உணர்ச்சி எதையும் காட்டவுமில்லை. கோடரியைப் பார்த்த வுடனேயே அவளுக்கு விஷயம் ஓரளவு புரிந்துவிட்டது. மண்டபப் போரின் விவரங்கள் அவளுக்கு முழுவதும் தெரியா தென்றாலும், தெரிந்து கொள்ள அவகாசமில்லை யென்றாலும், ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்த அவளுக்கு. இளவரசன் கோடரியை வேறு ஒருவன் அனுப்வதானால், அதில் ஏதோ மோசம் இருக்கிறதென்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது அவளுக்கு. ‘விரோதிகளிடம் ராஜ முத்திரை சிக்கிவிட்டது. அதை அவர்கள் உபயோகப் படுத்தப் பார்க்கிறார்கள்’ என்று தீர்மானித்துக் கொண்ட அவள், இளநங்கையை தோக்கி, கோடரியைச் சுட்டி காட்டிக் கேட்டாள், “இதற்கு என்ன அர்த்தம்?” என்று.

இனநங்கை தன் சோகக் கண்களை மூத்துக்குமரி மீது திருப்பினாள். “இளவரசர் கட்டளையை நாம் திறைவேற்ற முடியாதென்று அர்த்தம்!” என்றாள் இதய சோகம் உதடுகள் உதிர்த்த சொற்களிலும் தொனிக்க.

“ஏன் முடியாது?” என்று கேட்டாள் முத்துக்குமரி.

“இளவரசர் கொட்டுத்தளக் காவற்படைத் தலைவனிடம் ஓலையைக் கொடுக்கச் சொன்னார். இங்கிருப்பது பாண்டியர் காவற்படையல்ல; எதிரிகள் காவற்படை, என்றாள் இனநங்கை.

அது முத்துக்குமரிக்கும் தெரிந்தே இருந்தது. அவர்கள் கொட்டுந்தளத்தில் நுழைந்தபோது அவள் அதைப் புரிந்து கொண்டாள். கொட்டுந்தனத்தில் அவளும் இளநங்கையும் நுழைந்தபோது நள்ளிரவிருக்கும். அந்த நள்ளிரவில் அந்த மலைச் சமவெளி அற்புதமாகக் காட்சியளித்தது. நாற்புறமும் மலைகள் சூழ இடையேயிருந்த சமவெளியின் பரப்பு அதிகமில்லாவிட்டாலும், ஒரு சாதாரணப் படைப் பிரிவு தங்குவதற்கு வேண்டிய நிலப்பரப்பு இருக்கவே செய்தது. அந்த நிலப்பரப்பில் கட்டியிருந்த சிறுசிறு விடுதிகளும் ஓரிரு பெரு விடுதிகளும் நீண்ட தூரம் விட்டுவிட்டு மலைச்சரிவில் சிலவும், சமபூமியில் சிலவுமாகக் கட்டப்பட்டிருந்த படியால் சில கண்களுக்குத் தென்பட்டன. சில தென்படவில்லை. ஆனால் எங்கும் வீரர்கள் உலாவிச் கொண்டிருந்ததையும், கொட்டுத்தளக் காவல் பலமாகவே இருந்ததையும், மலைச்சரிவில் இறங்கி பீடபூமிக்குள் வந்த இளநங்கையும் முத்துக்குமரியும் கண்டதால், அங்கு பாண்டியர் படை இல்லை என்பதையும், நடமாடியவர்கள் எதிரி வீரர்கள் என்பதையும் புரிந்து கொண்டார்கள்.

அத்தகைய ஒரு விபாதம் விளைந்த சமயத்தில் கூட அந்த மலைப் பூமியும், விடுதிகளும், எங்கோ ஓரிரு இடங்களில் எரித்து கொண்டிருந்த பந்தங்களும், பார்ப்பதற்குப் பெரும் ரம்மியமாக இருந்தன. மனிதக் கூட்டங்களுள்ள நகரங்களிலிருந்து பெரிதும் எட்டி நின்ற பீடபூமியின் கம்பீரம் பெரும் அச்சத்தையும் அதனிடம் ஒரு கௌரவத்தையும் அளிப்பதாயிருந்தது. அடிக்கடி சுற்றுப் புறக்காடுகளிலிருந்து கேட்ட புலிகளின் உறுமல், மனிதன் மனிதனைப் பயமுறுத்தினாலும் மனிதனையும் பயமுறுத்தும் ஜீவராசிகளைக் காரணமாகவே கடவுள் படைத்திருக்கிறார் என்பதை நிரூபித்தன. இப்படி அழகையும் அச்சத்தையும் அள்ளிக் கொட்டிய பீடபூமியில் நுழைந்த பின்பும் ஏதோ ஒரு நம்பிக்கை இளநங்கைக்கும் இருந்தது. முத்துக்குமரிக்கும் இருந்தது. எத்தனை துரிதமாக வீரரவி கொற்கையிலிருந்து கிளம்பியிருந்தாலும் அது வீர பாண்டியனுக்குத் தெரியாமலிருக்காது என்ற எண்ணம் இளநங்கைக்குத் திடமாயிருந்ததால், ‘அது தெரிந்தவுடன் அவரும் பயணமாகிவிடுவார். பயணப்பட்டு இங்கு வந்து விட்டால் அப்புறம் வீரரவி பெரும் படை வைத்திருந்தாலும் பயனில்லை’ என்று தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள்.

ஆனால், முத்துக்குமரியின் எண்ணம் இந்திர பானுவை நாடி நின்றது. தாங்கள் சிறைப்படப் போவது இந்திரபானுவுக்குத் தெரியும் என்று தங்களைச் சிறை செய்த வீரர்களின் தலைவன் சொன்னதை அவள் நம்பவேவில்லை. விளையாட்டு முகமுள்ளவனும், வீர பாண்டியன் நம்பிக்கைக்குப் பெரிதும் பாத்திரமானவனு மான இந்திரபானு எதிரிகளிடம் தங்களைக் காட்டிக் கொடுக்கும் இழிகுணம் உள்ளவனல்ல என்று தீர்மான மாயிருந்தாள் அவள். அது மட்டுமல்ல; தாங்கள் மலைமீது ஏறி வந்தபோது காட்டுக்குள் கேட்டது உண்மையில் புரவியின் குளம்புச் சத்தமேயென்றும், வீரர்கள் தலைவன் நினைத்தது போல் காட்டு ஆட்டின் காலடிச் சத்தமில்லை என்றும் திடமாக நம்பினாள் அவள். ‘அப்படி அது புரவியின் குளம்புச் சத்தமானால் அந்தப் புரவி சிறி தந்தையின் சாம்பல் நிறப்புரவிதான். அதில் இந்து விளையாட்டுப் பிள்ளைதான் வந்திருப்பார்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் அவள்.

இரு மங்கையரும் இப்படித் தங்கள் அபிமான வீரர்களை எண்ணித் திடப்பட்டுக் கொண்டிருந்ததால் எப்படியும் தப்பி விடலாமென்ற துணிவுடனிருந்தார்கள், அந்த நினைப்பை இளநங்கையே முதலில் வெளியிட்டான “எப்படியும் கொட்டுந்தள நிலை இளவரசருக்குத் தெரிந்து விடும், தெரிந்தபின் அவர் வாளாவிருக்க மாட்டார். என்று.
“ஏன்?” முத்துக்குமரி ஏதோ கேட்க வேண்டுமென்ப தற்காகக் கேட்டாள்.

“மேலுள்ள பாண்டியர் கோட்டைக்கு முரசு கொட்டி எச்சரிக்கை கொடுக்கும் தளமல்லவா இது?” என்றாள் இள நங்கை .

“ஆம், ஆம்,” என்று எங்கோ நினைத்துக்கொண்டு முத்துக்குமரி ஆமோதித்தாள்.

இளநங்கை கையிலிருந்த பொற்கோடரியை எடுத்துக் கொண்டு, வீரன் கொடுத்த சீலைச்சுருளைத் தூர எறிந்தாள் பிறகு அதை ஒரு கையில் வைத்துக்கொண்டு இன்னொரு கையால் அதன் கூர்மையைப் பரிசோதித்து, “அப்பாடி என்ன கூர்மை.. என்று வியக்கவும் செய்தாள்.

எதிரிகள் வசம் சிக்கிவிட்டோம் என்ற சமயத்திலும் அந்த இரண்டு பெண்களும் அந்தக் கோடரியை அழகு பார்த்தனர். முதலிலிருந்த அச்சம் தீரவே அதைப்பற்றி விவாதிக்கவும் முற்பட்டார்கள். அந்தத் தர்க்கத்தைத் துவக்கிய இளநங்கை, “முத்துக்குமரி! இதை இளவரசர் உபயோகித்துப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.

“இல்லை,” என்றாள் முத்துக்குமரி.

“நானும் பார்த்ததில்லை. ஆனால் இதில் இளவரசருக்குள்ள நம்பிக்கை மிக அதிகம். இதைக் கொண்டுதான் வீரரவியை வீழ்த்தினார். என்றாள் இளநங்கை.
“இல்லை. வீழ்த்தவில்லை,” என்ற சொற்கள் இளநங்கையின் சொற்களைத் தடை செய்தன. இரு பெண்களின் கண்களும் கோடரியிலிருந்து அச்சொற்கள் வந்த திசைக்குத் திரும்பின.

வாயிற்படியில் நின்ற வீரரவி அவர்களைச் சில விநாடிகள் பார்த்தான். பார்த்தது மட்டுமல்ல, ரசித்தான் என்பதையும் அவன் கண்கள் காட்டின. பிறகு அவன் அழகிய முகத்தில் சற்றே துயரச் சாயை படர்ந்தது. அந்தச் சாயையை அகற்றாமலே அறைக்குள் வந்த வீரரவி மங்கையரிருவரையும் நோக்கி, “தான் உட்காரலாமா? தோளில் காயம் ஆறவில்லை இன்னும். ரத்தம் சேதப்பட்ட தால் பலவீனமுமிருக்கிறது.” என்றான்.

இளநங்கை அவன் போர் அங்கிக்கள் வலது தோள் சற்றே உயர்ந்திருந்ததைக் கண்டு அதற்குப் பலமான கட்டு போடப்பட்டிருந்ததை உணர்ந்து கொண்டாள். அவள் கண் சென்ற திசைவைக் கவனித்துப் புன்முறுவல் கொண்ட வீரரவி, “கோடரி விளைவித்த காயம் ஆழந்தான். ஆகவே கட்டு பலமாகப் போட வேண்டியதாயிற்று,” என்று கூறிக் கொண்டே எட்ட இருந்த ஒரு மஞ்சத்தில் உட்கார்ந்து கால்களை நன்றாக நீட்டியும் கொண்டான். பிறகு இளநங்கையை நோக்கிச் சொன்னாள்: “கோட்டைக் காவலர் மகனே! இது எதிர்பாராத சந்திப்புதான் உனக்கு அது மட்டுமல்ல, இங்குள்ள நிலையும் பாண்டிய நாட்டு இளவரசனும் எதிர்பாராத திலைதான். இந்தக் கொட்டுந்தளம் இப்பொழுது என் கைவசமிருக்கிறது. இதற்கு நான் தான் தற்சமயம் தலைவன். ஆகையால் நீ என்னிடம் எதையும் ஒளிக்கவேண்டாம்.”

“எதைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று அலட்சியமாகக் கேட்டாள் இளநங்கை வீரரவியை நோக்கி.

“உதாரணமாக….” வீரரவியின் அழகிய உதடுகள் சற்று நிதானித்தன.

“உம் சொல்லுங்கள்…” என்றாள் இளநங்கை.

வீரரவி அவளை எந்தவித உணர்ச்சியுமின்றி ஏறிட்டு நோக்கிவிட்டு, “உதாரணமாக, இளவரசன் கொடுத்த ஓலையை ஒளிக்க வேண்டாம். என்னிடம் கொடுத்து விடலாம்,” என்றான்.

இதைக் கேட்ட இளநங்கைக்கு மட்டுமல்ல, முத்துக் குமரிக்கும் தூக்கி வாரிப் போட்டது. ‘வீரரவி என்ன மந்திர வாதியா?” என்று நினைத்தன்றி, பரஸ்பரம் பார்த்துக் கொள்ளவும் செய்தனர்.

அதைக் கண்ட வீரரவி மெல்ல தகைத்தான். “இதில் மந்திரமெதுவும் இல்லை இளநங்கை, அரசாங்க விஷயங்களை மத்திரத்தால் தீர்க்க முடியாது. அவற்றுக்குத் தேவை ஆராயும் அறிவு, சிறிது முன்னோக்கு, சற்றே தந்திரம் இவைதான்” என்று சுட்டிக் காட்டினான். அத்துடன் நிற்காமல் மேலும் சொன்னான் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன். “மண்டபத்திலிருந்து வீரபாண்டியன் தப்பியதும், அவன் அடுத்தபடி கொட்டுத்தளத்தைக் கெட்டிப்படுத்தி நான் மலைநாடு செல்வதைத் தடுக்க முயல்வானென்று ஆராய்ந்து கூறியது என் அறிவு. அவனுக்கு முன் இதை நான் கைப்பற்றுவதுதான் முறைவென்பதைச் சுட்டிக் காட்டியது எனது முன்னோக்கு. அதுபற்றி தான் கையாண்ட தந்திரம் மித்திர பேதம். மீதியை அது விளைவித்தது.”

இதைச் சொல்லிய வீரரவி சற்றுப் புன்முறுவல் கொண்டான், “நான் சொன்னதில் மற்றதெல்லாம் புரிந்திருக்கும் உங்களுக்கு. ஆனால் புரியாதது ஒன்று. அதாவது என் தந்திரம் மித்திர பேதம் புரியவில்லை, உங்களுக்கு” என்ற வீரரவி “அதையும் பாருங்கள்”, என்று தனது இரு கைகளையும் இலேசாகத் தட்டினான். உள்ளே நுழைந்து தலை வணங்கிய இந்திரபானு, “மன்னவா! அடுத்து என்ன கட்டளை!’ என்று வினவினான்.

வீரரவி இந்திரபானுவையும் பார்த்து. அவன் வரவால் அதிர்ச்சியடைந்து ஆசனத்தை விட்டு எழுந்து விட்ட இரு பெண்களையும் ஒரு விநாடி பார்த்தான். பிறகு, “இந்திர பானு: நாளைக் காலையில் நாம் இங்கிருந்து பயணமாகிறோம் சேர நாட்டுக்கு; இவர்களிருவருக்கும் வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்துப் பயணத்துக்குத் தயார் செய். முடிந்தால் இவர்களிடமுள்ள ஓலையை வாங்கி வா,” என்று உத்தரவிட்டு வெளியே சென்றான். எத்தனை சாதாரணமாக வந்தானோ, அத்தனை சாதாரணமாக நிதானமாக வெளியே சென்றான்.

அவன் சென்றதும், இந்திரபானுவை மங்கையரிவரும் சுட்டுவிடுவதுபோல் பார்த்தனர். ஆனால் இந்திரபானுவின் முகத்தில் எந்தக் குழப்பமோ பயமோ இல்லை. அந்தப் பழைய விளையாட்டுக் குறியே இருந்தது. “உணவுக்கு நேரமாகிவிட்டது. சிறிது பால் வேண்டுமானால் வரவழைக்கட்டுமா? அருந்திவிட்டு நீங்கள் சயனிக்கலாம்.” என்றான் இந்திரபானு.
அவன் குரலில் மாறுதலில்லை: கண்களில் கள்ளப் பார்வைவில்லை. வீரபாண்டியனிடம் எத்தனை அடக்கமாக நடந்து கொண்டானோ, அத்தனை அடக்கமாக கடமையைச் செய்பவனாக, அவன் வீரரவியின் ஆதிக்கத்திலும் நடந்துகொண்டதைக் காண இரு மங்கையருக்கும் ஏற்பட்டது வியப்பா, எரிச்சலா? அவர்களுக்கே விளங்கவில்லை. ஆனால் ஆரம்பத் திகைப்பு நீங்கியதும் முத்துக் குமரியின் வாயிலிருந்து, அட துரோகி!” என்ற சொற்கள் சீறி வந்தன.

அதை இந்திரபானு ஆட்சேபிக்கவில்லை. பதிலுக்குக் கடிந்து கொள்ளவுமில்லை. “பால்…” என்று மீண்டும் துவங்கினான்.

“உன் கையால் பால் அருந்துவதைவிட விஷம் அருந்துவேன்” என்றாள் முத்துக்குமரி மிகுந்த சீற்றத்துடன்.

“அது இங்கு சுலபத்தில் கிடைக்காது. எதற்கும் முயன்று பார்க்கிறேன்,” என்று கூறி நகைத்துவிட்டு வெளியே சென்றான் இந்திரபானு.

முத்துக்குமரி இளநங்கையை நோக்கினாள். இளநங்கை கற்சிலையென நின்றிருந்தாள்.

Previous articleRaja Muthirai Part 1 Ch19 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch21 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here