Home Historical Novel Raja Muthirai Part 1 Ch21 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch21 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

59
0
Raja Muthirai Part 1 Ch21 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch21 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch21 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 21 முத்திரை மோதிரம்

Raja Muthirai Part 1 Ch21 |Raja Muthirai Part1|TamilNovel.in

சுந்தரபாண்டியன் மகளின் சூடுவிழி நோக்கையோ அவள் சுந்தர உதடுகள் உதிர்த்த சுடுசொற்களையோ சிறிதும் லட்சியம் செய்யாமலும் எள்ளி நகையாடியும் இந்திரபானு சென்றுவிட்டதும், அந்தப் பாண்டிய ராஜபுத்திரி மட்டுமின்றிக் கோட்டைக் காவலன் செல்வியும் கூட திகைப்பும் வியப்பும் ஒருங்கே இதயத்தைக் கவ்வ நின்றனர். இந்திரபாலுவின் எதிர்பாராத விபரீதத் திருப்பத்துக்கு அவ்விரு பெண்களுக்கும் காரணம் ஏதும் புரியாததால், அவன் சென்ற பிறகும் அவ்விருவரும் பல வினாடிகள் பேசாமல் நின்ற இடத்திலேயே நின்றுவிட்டதால், அந்த விடுதியின் வாயிற் கதவை வீரனொருவன் சாத்தி வெளியில் தாளிட்டதைக்கூட அவர்கள் கவனிக்கும் நிலையில் இல்லை. பல வினாடிகளுக்குப் பிறகே ஓரளவு சுரணையை முதலில் வரவழைத்துக்கொண்ட இளநங்கை, முத்துக்குமரியின் மனோ வேதனையின் தன்மைவையும் வேகத்தையும் புரிந்து கொண்டாளாதலால், அவளை அணுகி அவள் தோள்மீது கையை வைத்து, “முத்துக்குமரி இப்படி வா. மஞ்சத்தில் உட்கார்”, என்று கூறி அனைத்து அழைத்துச் சென்று சற்றுத் தள்ளியிருந்த மஞ்சத்தில் உட்கார வைத்தாள். பிறகு வாயிலை நோக்கிச் சென்று கதவை உட்புறம் தாளிட்டு விட்டுத் தானும் இனலரசியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். தனது வலது கையை அவள் தோள் மீது செலுத்திக் கழுத்தைச் சுற்றி வளைத்து ஆதரவுடன் அணைக்கவும் செய்தான்,

இளநங்கை காட்டும் பரிவுக்குக் காரணம் முத்துக் குமரிக்கு நன்றாகப் புரிந்தே இருந்தது. தன் மனத்தைத் தொட்ட இந்திரபானு பாண்டிய நாட்டுத் துரோகியாகத் திரும்பிவிட்டதால் தன் மனம் சுக்கு நூறாக உடைந்து கொண்டிருப்பதை இளநங்கை உணருவது பிரமாதமல்ல வென்பதை அவள் அறிந்து கொண்டிருந்தாலும், தன் எண்ணங்களை வாய்விட்டுச் சொல்லத் திராணியின்றி மௌனமே சாதித்தான். இளநங்கையும் நொந்த அவள் மனத்தை மேலும் நோகச் செய்ய இஷ்டப்படாததால் இந்திரபானுவைப் பற்றியோ கொட்டுத்தள விவகாரங்களைப் பற்றியோ ஏதும் பேசாமல், “முத்துக்குமரி! அப்படியே சற்று நேரம் மஞ்சத்தில் படுத்துக் கொள். இரவின் மூன்றாம் ஜாமம் துவங்கிவிட்டது,” என்று கூறினாள்.

முத்துக்குமரி அந்த உபசரணைக்கு உடனே பதில் சொல்லவில்லை. சற்றுப் பொறுத்துக் குனிந்த தலை நிமிராமலே கூறினாள். இளநங்கை! எனக்கு உறக்கம் வர வில்லை.” என்று.

இளநங்கை அவள் முதுகைத் தடவிக் கொடுத்தாள். பிறகு தைரியம் ததும்பிய குரலில், “முத்துக்குமரி! அரச மகளிர் தைரியத்தைக் கைவிடுவது விரும்பத்தக்கதல்ல. இங்கு நாம் எதிர்பார்த்து வந்தது அபாயத்தைத்தானே?” என்று வாதிக்கவும் முயன்றான்.

அத்தனை ஆபத்திலும் இளநங்கை காட்டிய உறுதி, அரச மகளும் அச்சத்தை அதிகமாக அறியாதவளும், ஆபத்தை முன்னிட்டே தந்தையால் கொற்கை முத்தங்காடிக்கு அனுப்பப்பட்டவளுமான முத்துக்குமரியைப் பெரும் வியப்பிலாழ்த்தியபடியால் அவன் சொன்னாள், “இளநங்கை! நான் கைவிட்டது தைரியமல்ல,” என்று
“வேறென்ன முத்துக்குமரி?” என்று வினவினாள் இளநங்கை, இதயம் குழைந்ததால் குரலும் குழைய.

“மனம்.” முத்துக்குமரியின் பதில் வேதனையுடன் வந்தது.

“மனமா?” தெரிந்தும் தெரியாததுபோல் கேட்டாள் இளநங்கை,

“தெரியாததுபோல் ஏன் பாசாங்கு செய்கிறாய்? காதலெனும் பித்தைப்பற்றி அகத்தியர் அருவிக்கருகில் நீ சொல்லவில்லையா?” இதையும் நிலத்தை நோக்கிய வண்ணமே கூறினாள் முத்துக்குமரி.

“பொதுப்படையாகச் சொன்னேன்”, என்றாள் இளதங்கை.

“இல்லை, இல்லை, பொய் சொல்லாதே. புரிந்து தான் சொன்னாய்.”

“சரி. அதற்கு இப்பொழுது என்ன செய்யவேண்டு மென்கிறாய்?”

“ஒன்றும் செய்ய வேண்டாம். நீ படுத்துக்கொள். எனக்கு உறக்கம் வராது. உறக்கம் மனநிம்மதியில் வருவது, எனக்கு மனநிம்மதியில்லை.

“எனக்கு மட்டும் இருக்கிறதா?”

“உன் நிலை வேறு.”

“என்ன வேறு?”

“உன் நிலை எதிரிகள் செய்யக்கூடிய தீங்கைப் பற்றியது. என் கவலை அதுவல்ல.”

வேறெது?”

“நமக்கு வேண்டியவர்கள் என்று நினைத்தவர்கள் செய்துள்ள தீங்கைப் பற்றியது.” இதைச் சொன்ன முத்துக் குமரி மேலே பேசவில்லை.

இளநங்கை சில விநாடிகள் மௌனமாயிருந்தாள். பிறகு முத்துக்குமரியின் தோள்களைப் பிடித்துப் பலவந்தமாக மஞ்சத்தில் படுக்கவைத்துத் தானும் படுத்துக் கொண்டாள். இப்படி அக்கம்பக்கத்தில் படுத்துக் கிடந்த அவ்விருவர் எண்ணங்களும் கொற்கையிலிருந்து கொட்டுத் தளத்துக்கும், கொட்டுத் தளத்திலிருந்து கொற்கைக்குமாக மாறிமாறி வட்டமிட்டு வியக்கத்தக்க விதம் வெகு துரிதமாகத் தொடர்ந்துவிட்ட நிகழ்ச்சிகளை அலசிக் கொண்டிருந்தன. அந்த அலசல் மேலும் மேலும் குழப்பத்தையே விளைவித்ததன்றித் தெளிவைச் சிறிதும் அவளுக்குக் காட்டவே இல்லை. மனம் அலசிய அந்த அலசலை முதன் முதலாகப் பகிரங்கமாகவும் அலசத் தொடங்கிய இளநங்கை, முத்துக்குமரி?” என்று அழைத்துப் பக்கத்தில் படுத்திருந்த அந்தப் பாண்டியன் பைங்கிளியின் மீது கையை வைத்தாள்.

“ஏன் இளநங்கை!” அசையாமல் மல்லாந்து படுத்த படியே கேட்டாள் முத்துக்குமரி.
“எனக்குப் பல விஷயங்கள் புரியவில்லை, என்றாள் இளநங்கை.

உண்மையில் முத்துக்குமரிக்கும் பல விஷயங்கள் புரியவில்லைதான். இருப்பினும் தன் குழப்பத்தைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டாள் இளநங்கை, “உன் சிறிய தந்தை தானே நம்மை இங்கு அனுப்பினார்?” என்று.

“அதிலென்ன சந்தேகம்? புரியாததற்கு அதில் என்ன இருக்கிறது? உன்னிடம்தானே ஓலையைக் கொடுத்தார்?”

“ஆம், முத்துக்குமரி! ஆனால் அவர் ஓலை கொடுத்த போது கொட்டுத்தள நிலைமை தெரியாமலா கொடுத்திருப்பார்?” என்று வினவினான் இளநங்கை.

“தெரிந்து நம்மை வீரரவியின் கைகளில் பிடித்துக் கொடுக்க ஏற்பாடு செய்திருப்பாரென்று எண்ணுகிறாயா?” முத்துக்குமரியின் இக் கேள்வியில் வெறுப்பு எழுந்தது.

அந்த வெறுப்பைக் கவனித்தும் லட்சியம் செய்ய வில்லை இளநங்கை. அவன் உன்ள நிலையைப் புரிந்து கொள்ள இஷ்டப்பட்டாள். “வீரரவி நமக்கு முன்னால் இங்கு வந்திருக்கக்கூடுமென்று அவருக்குத் தெரிந்திருக்க முடியாது. வீரரவியின் தோளில் கோடரி எறிந்த வீர பாண்டியர் என்னைத் தூக்கிக் கொண்டுவந்து பொருதைப் படிகளில் மறைந்த பிறகுதான் உன் முத்துக்கடைக்கு வந்திருக்கிறார். படுகாயப்பட்டு மாடித் தாழ்வாரத்திலிருந்து மண்டபத்துக்குள் விழுந்த சேர மன்னன் நமக்கு முன்பு கொட்டுத்தளம் சேர்வானென்று அவர் ஊகித்திருக்க முடியாது. ஏனென்றால், கொற்கைக் கோட்டையைப் பிடிக்கவும், முத்தங்காடியைச் சூறையாடவும், தான் ஏற்பாடு செய்துவிட்டதாக அவரிடம் சேர மன்னனே சொன்னான். ஆகவே, அவர் பயணத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார் இளவரசர். ஆனால்…”

இளநங்கை சொல்லை முடிக்குமுன்பு முத்துக்குமரி குறுக்கிட்டு, வேறு எதை எதிர்பார்க்கவேண்டும்?” என்று கேட்டாள்.

“கொட்டுத்தளம் பாண்டியர் வசமில்லையென்பதை எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர் கொற்கை வந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகிறது. ஒரு நாள் பயணத்தில் இருக்கும் கொட்டுத்தள நிலைமை மாறியிருந்தால் அவருக்குத் தெரிந்திருக்கவேண்டும். அக்கம்பக்கத்தில் ஏன் தங்கள் எல்லையில் நடக்கும் விவகாரங்களை அறிய ஒற்றர்கள் கூடவா இல்லை பாண்டிய நாட்டில்?” என்று வினவினான் இளநங்கை.

பாண்டிய ஆட்சி முறையை இனநங்கை கடிந்து கொண்டதாகப்பட்டது முத்துக்குமரிக்கு. ஆகவே உஷ்ணத் துடன் பதில் சொன்னாள் அவன் “ஏன் இல்லை? ஒற்றர்கள் திரம்ப இருக்கிறார்கள். அரசர் மகளான நானும், தம்பியான வீரபாண்டியரும்கூடக் கொற்கையில் வேவு பார்க்க வரவில்லையா?” என்று.

“ஆம், ஆம். வந்திருக்கிறீர்கள். நீங்கள் வேவுபார்த்த பயன் சேர மன்னனே தாடுவிட்டுக் கொற்கைக்கு வந்து அதைப் பிடிக்க ஏற்பாடு செய்கிறான். ஏற்கெனவே தன் நாட்டு எல்லைவிலுள்ள கொட்டுந்தனத்தையும் பிடித்துக் கொள்கிறான். முக்கிய செய்தி கொண்டு வந்த நம்மையும் சிறை செய்கிறான். இதெல்லாம் விசித்திரமாயில்லை?

“ஆம், ஆம்!”

“அது மட்டுமல்ல. இங்கில்லாத படைத் தலைவனுக்கு ஓலை தருகிறார் இளவரசர், உயிர் நண்பரென்று. இல்லை இல்லை, அவர் என்ன சொன்னார், ‘என் ஆயுதம், அம்பு’ என்று சொன்னாரல்லவா? அந்த ஆயுதம் எதிரியின் ஆயுதமாகிறது. இது…”

“விசித்திரமானதுதான்.”

“அது மட்டுமல்ல முத்துக்குமரி! அகத்தியர் குடிலுக்கும் கொட்டுத்தளத்துக்கும் இடையே உள்ள தூரம் அதிக மில்லையானாலும், ஆபத்து அதிகமென்று கூறி நம்மை அங்கு தங்க வைத்துச் சென்ற இளவரசரின் உயிர் நண்பர் உண்மையில் கொட்டுந்தள நிலைமையை எப்பொழுது அறிந்தார்? அப்பொழுது அறிந்திருக்க முடியாது. கொற்கையில் இளவரசரே அறியாததை அங்கிருந்த இவர் மட்டும் எப்படி அறிவார்? இல்லை, இங்கு வந்தபின் அறிந்திருக்கிறார், அறிந்ததும் உடனே ஒருவர் மாறிவிட முடியுமா?”

இதைக் கேட்ட முத்துக்குமரி மஞ்சத்தில் எழுந்து உட்கார்ந்து சந்தேகப் பார்வையொன்றை இளநங்கைமீது வீசினாள். “இருப்பினும் மாறியிருப்பதை நாமே பார்க்கிறோமே,” என்றாள் அந்தச் சந்தேகம் குரலிலும் தொனிக்க
இளநங்கையின் கண்கள் முத்துக்குமரியின் கண்களைச் சந்தித்தன. “நாம் பார்ப்பதெல்லாம், நேரில் கேட்டதெல்லாம் உண்மைதானா?” என்று சொற்களையும் உதிர்த்தாள்.

“இதில் நாம் அறியாதது ஏதோ இருக்கிறது என்று நினைக்கிறாயா இளநங்கை? ஒருவேளை இந்திரபானு சந்தர்ப்பத்தை முன்னிட்டு மாறியதாக நடிக்கிறாரா?” என்று கேட்டாள் முத்துக்குமரி. அவன் சொற்களில் நம்பிக்கை ஒலித்தது.

“நடிக்கலாம். நடிக்காமலுமிருக்கலாம். ஆனால் இளவரசரையும் மீறிய நிகழ்ச்சிகள் கொற்கையிலும் கொட்டுந் தளத்திலும் ஏற்பட்டிருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்,” என்று கூறிய இளநங்கை, மஞ்சத்திலிருந்து எழுத்து சென்று அறை மூலையில் எரிந்து கொண்டிருந்த விளக்கைச் சிறிது இழியவைத்துவிட்டுப் படுத்துக் கொண்டாள். முதல் ஜாமமும் முடியும் சமயம் நெருங்கிக் கொண்டிருந்தது. வெளியே காவல்காரர்கள் நடமாட்டமும், சற்றுத் தூரத்தில் பாறைகளில் துள்ளி ஓடிய பொருதையின் இரைச்சலும் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குப் பின்புறத்தில் பெரிதாகக் கிளம்பியிருந்த மலைச் சரிவுக் காடுகூட அமைதியாயிருந்தது. அவ்விருவர் மனம் நட்டுமே அமைதியாயில்லை.

இருவரும் அக்கம்பக்கத்தில் மௌனமாகப் படுத்துக் கிடந்தனர். எப்படியும் காலையில் பயணம் துவங்குமென் பதையும், தாங்கள் பொதியமலையின் காட்டுப் பாதையில் சேரநாடு கடத்தப்படுவது திண்ணமென்பதையும் எண்ண மிட்டு, எண்ணமிட்டு வேதனைப்பட்டுக்கொண்டே மெள்ள நகரும் நேரத்தை எண்ணிக்கொண்டிருந்தனர்.

திடீரென்று இளநங்கை கேட்டாள், “முத்துக்குமரி! என்னிடம் உன் சிறிய தந்தை கொடுத்த ஓலையிருக்கிற நல்லவா!” என்ற.

“ஆமாம்,” என்றான் முத்துக்குமாரி, இதை எதற்காகக் கேட்கிறாள் இளநங்கை என்பது புரியாமல்.

“அதை வாங்கிவரச் சேரமன்னன் இந்திரபானுவுக்கு உத்தரவிட்டதைக் கவனித்தாயா?”

“கவனித்தேன்.”

“முடிந்தால் வாங்கி வா என்றான் சேரமன்னன்.”

“ஆமாம்”

“இத்திரபானுவும் என்னிடம் ஓலையைக் கேட்க வில்லை.”
“ஆம்”

“இருவருக்கும் ஓலையில் சிரத்தையிருப்பதாகத் தெரியவில்லை.”

“ஆமாம்.”
“இளநங்கை மீண்டும் மௌனம் சாதித்தாள். பிறகு சட்டென்று முத்துக்குமரியைப் பலவந்தமாகப் படுக்க வைத்து, “சற்று இரு,” என்று ரகசியமாகச் சொன்னாள்.

தாங்களிருவரும் தனித்திருந்த அந்த நேரத்தில் ரகசியமென்ன வேண்டிருக்கிறது என்று சினந்து கொண்ட முத்துக்குமரியை அசக்கிய இளநங்கை, “முத்துக்குமரி! உற்ற கேள்,” என்றாள்.

முத்துக்குமரி உற்றுக் கேட்டாள். பின்னே இருந்த மலைச்சரிவில் காட்டுப் பாதையில் கேட்பது போல் குதிரைக் குளம்படி ஒலி ‘டக்டக்’ என்று ஒரே சீராகக் கேட்டது. இருமங்கையரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு உற்றுக் கேட்டனர். அந்தக் குளம்படி ஒலி அவர்கள் விடுதிக்குப் பின்புறமிருந்த சாளரத்தருகில் வந்ததும் நின்றது. பிறகு சானரம் மெல்ல இருமுறை தட்டப் பட்டது. இளநங்கை ஒரு கணம் மௌனம் சாதித்தாள் மீண்டும் சாளரம் மெல்லத் தட்டப்பட்டது. இம்முறை சற்றுத்தைரியத்துடன் சாளரத்தை அரைவாசி திறந்த இளநங்கையின் காதில், “அந்த ஓலையைக் கொடுங்கள்,” என் சொற்கள் விழுந்தன.

அந்தச் சொற்களைக் கேட்பது யாரானாலும் சாளரத்தின் பின்புறத்தில் மறைந்து நின்றதால் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆகவே இளநங்கை கேட்டாள், “யார் நீங்கள்?” என்று.

பதிலுக்கு ஒரு கை மட்டும் உள்ளே வந்தது, அதன் கையில் ராஜமுத்திரை பொறித்த ஒரு மோதிரம் பளபளத்தது. “நேரமில்லை! ஓலையைக் கொடுங்கள்,” என்றது மறைந்து நின்ற உருவம்.

ராஜமுத்திரைக்குப் பணிந்தாள் இளநங்கை. மடியிலிருந்த ஓலைச்சுருளை எடுத்துக் கொடுத்தாள். அதை வாங்கிய கரம் ஒருவிநாடி மறைந்தது. பதிலுக்கு வேறொரு ஓலைச்சுருளைச் சாளரத்தின் மூலம் உள்ளே எறிந்தது. பிறகு சாளரம் சாத்தப்பட்டது. டக்டக்’ என்ற புரவி குளம்படிகளிலிருந்து, வந்த மனிதன் மலைச்சரிவில் ஏறி செல்வதை உணர்ந்தாள் இளநங்கை.

Previous articleRaja Muthirai Part 1 Ch20 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch22 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here