Home Historical Novel Raja Muthirai Part 1 Ch22 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch22 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

74
0
Raja Muthirai Part 1 Ch22 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch22 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch22 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 22 வேறு பாதை

Raja Muthirai Part 1 Ch22 |Raja Muthirai Part1|TamilNovel.in

மூன்றாம் ஜாமத்தில் முத்திரை மோதிரம் தரித்த அந்தக் கரம் முழு வேகத்துடன் உள்ளே ஓலையொன்றை வீசி எறிந்துவிட்டுச் சாளரத்தையும் மூடிவிட்டுச் சென்றதும், ஓலையை எடுத்ததுக்கொண்ட இளதங்கை உடனடியாக அந்த ஓலையைப் பிரித்துப் படிக்காமல் கன வேகத்துடன் மீண்டும் சாளரக் கதவைத் திறந்து வெளியே கண்களை ஓட்டி, அத்தனை மர்மமாக வந்து சென்றது யாரென்பதை அறிய முயன்றாள். அவள் காட்டிய ஆர்வத்தையும் பரபரப்பையும் முத்துக்குமரியும் காட்டி, அவள் தோளுடன் தனது முக வாய்க்கட்டையை இணைத்துக் கன்னத்துடன் கன்னமிழைத்து வெளியே நோக்கினாள். இருப்பினும் இருவரும் ஏதும் கண்டறிய இயலாது போயிற்று.

கிருஷ்ணபட்சத்து மூன்றாம் ஜாம சந்திரன் பொதிய மலைப் பிராந்தியமெங்கும் பேரொளி பரப்பிக்கொண்டிருந் தானானாலும், கொட்டுந்தளத்தின் அமைப்பின் காரணமாக அவன் எல்லா இடங்களிலும் தனது அரசைச் செலுத்துவது சாத்தியமில்லாது போகவே, அந்தப் பீடபூமியில் சில இடங்களில் அதிக வெளிச்சமும் சில இடங்களில் அதிக இருட்டுமே நிலவி, நல்லதும் பொல்லாததும் கலந்த மனித வாழ்க்கை போலிருந்தது அந்த மலைச்சமவெளிப்பகுதி. மலைச்சரிவுகளில் அடர்த்தியான காடுகளிருந்ததால் அங்கெல்லாம் இருட்டியிருந்தது. இடையே இயற்கை விட்டுக் கொடுத்த நாலும், மனித செயற்கை வெட்டி வீழ்த்தியதாலும் மரங்களேதுமில்லாத காரணத்தால் நல்ல வெளிச்சமிருந்தது. அந்தப் பீடபூமியின் விடுதிகள் பெரும் பாலும்மலைச்சரிவுகளிலேயே கட்டப்பட்டிருந்ததால் விடுதி களுக்கு முன்பக்கம் வெளிச்சமும் பின்பக்கம் பெரும் இருட்டுமிருந்தது. அத்தகைய பின்புறப் பகுதியை நோக்கி இள நங்கையின் திறந்த சாளரமும் இருந்ததால் அவளாலோ அவள் தோளில் முகத்தைத் தாங்கி நின் முத்துக்குமரியாலோ எதையும் சரியாகக் காணமுடிய வில்லை.

சாளரம் திறந்த பகுதியில் காட்டு மரங்கள் மிக அடர்த்தியாக வானத்தை அளாவி நின்றமையால் கொட்டுத்தளத்தின் அந்தப் பகுதியை அவை நிலவிலிருந்து குடை பிடித்துத் தடுத்துவிட்டதன் காரணமாக இருட்டே அங்கு அதிகமாயிருந்தது. அந்த மரங்களின் இலைகளின் இடுக்குகளில் நுழைத்து அடிப்பகுதியின் ஒவ்வோரிடங்களில் சிறுசிறு வெள்ளி நாணயங்களாக விழுந்திருந்த நிலவுத் திட்டுக்கள்கூட அந்த இருநங்கையரின் பார்வைக்கு எந்த வித உதவியும் செய்ய இயலவில்லை. கண் எனும் இந்திரியத்தின் உபயோகமற்ற தன்மையை அவ்விருவருமே அந்தச் சில நிமிடங்களில் உணர்ந்து கொண்டார்கள், செவி மட்டுமே அவர்களுக்கு உதவியது. ‘டக்டக்’ என்று ஒரே சீராகப் பின்னாலிருந்த மலைச்சரிவுக் காட்டில் ஏறிக் கொண்டிருந்த புரவியின் குளம்பொலி மட்டும் அவர் களுக்குத் திட்டமாகக் கேட்டது.

நீண்ட நேரமாக அந்த ஒலியைக் கேட்டுக்கொண்டே சாளரத்தருகில் இருவரும் தின்றிருந்தார்கள். அந்தக் குளம் பொலிகளிலிருந்து அந்தப் புரவி வளைந்து வளைந்து செல் வதும், சிக்கலான இடங்களில் சற்று நின்று விடுவதும்கூட அவர்களால் தன்றாக உணரமுடிந்தது. அந்தப் பகுதியிலிருந்த இருட்டையும், அடர்ந்த மரங்களையும், பாறைகள் குத்துக் குத்தாக இருந்த மலைச்சரிவையும் சிறிதளவு அவர்களால் பார்க்க முடிந்ததன் காரணமாக அத்தகைய பிராந்தியத்தில் புரவிமீது செல்லக் கூடியவன் சாதாரண வீரனாயிருக்க முடியாதென்றும், சதா அந்த மலைப்பகுதி பில் பயணம் செய்து பழகியவனாயிருக்க வேண்டுமென்றும் அவ்விருவரும் தீர்மானித்த படியால், அவன் யாரென்றும் அறியக் கண்களால் முடியாதபடியால் சித்தத்தால் முயன்று பார்க்க முற்பட்டனர்.

அத்தகைய சிந்தனையிலாழ்ந்த இளநங்கை ஏதேதோ சிந்தித்தும் ஒரு முடிவுக்கு வரமுடியாததால், “முத்துக்குமரி! உன்முகத்தை என் தோளிலிருந்து எடு, சாளரத்தைச் சாத்துகிறேன்,” என்று சொல்லிக்கொண்டே, ஆதரவுடன் அவள் முகவாய்க் கட்டையைத் தன்கையால் அகற்றி விட்டுச் சாளரத்தை மீண்டும் நன்றாகத் தாளிட்டாள்.

பிறகு அந்த வீரனெறிந்த ஓலையை எடுத்துக் கொண்டு விளக்கடிக்காகச் சென்று இழித்திருந்த விளக்கை மீண்டும் தூண்டிவிட்டு ஓலையைப் பிரித்துக் கண்களை அதில் ஓட்டினாள். முத்துக்குமரியின் அழகிய விழிகளும் இலையை ஆராய்ந்தன. நான்கே வரிகள் தானிருந்தன.

“நாளைக்கு நீங்கள் சேரநாடு செல்ல
அவசியமிருக்காது. ஆகவே தைரியமா
விருங்கள். எந்தக் காரணத்தை முன்னிட்டும்
தப்ப முயலாதீர்கள். அதற்காக யார்
உதவியையும் நாடாதீர்கள். படித்தவுடன் இதை
எரித்துவிடுங்கள்.’
இவ்வளவுதான் ஓலையிலிருந்தது. அடியில் ராஜ முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. கையொப்பம், ஊர் பெயர் எதுவுமே இல்லை.

அச் சிறுவோலையை இரண்டு மூன்று முறைகள் திரும்பத் திரும்பப் படித்த இளநங்கை முத்துக்குமரியை ஏதிட்டு நோக்கிவிட்டுக் கேட்டான், “முத்துக்குமரி! இதை யார் எழுதியிருக்க முடியும்? கையெழுத்திலிருந்து உனக்கு ஏதாவது தெரிகிறதா?”

முத்துக்குமரி குழப்பம் நிறைந்த கண்களை இளநங்கையை நோக்கி உயர்த்தி, “எனக்கு மட்டும் எப்படித் தெரியும்? உன்னைப் போல்தானே நானும்?” என்று பதில் கூறினாள்.

“இல்லை முத்துக்குமரி. எனக்கும் உனக்கும் வித்தி யாசம் உண்டு. நீ பாண்டியத் தலைநகரில் இருந்தவள்…” என்று இழுத்தான் இளநங்கை.

“தலைநகரில் இருந்தாலென்ன?” என்று வினவினாள் முத்துக்குமரி.

“உன் தந்தை, சிறிய தந்தை இவர்கள் கையெழுத்து உனக்குத் தெரியுமல்லவா?” என்று கேட்டாள் இளநங்கை.

“அவர்கள் கையெழுத்து மட்டுமென்ன? அரண்மனையின் ஓலையெழுதுவோர் குறிப்புகளைக் கூடப் பார்த்திருக்கிறேன். மிகவும் அந்தரங்கமான ஓலைகள் சில வற்றை நானும் எழுதியதுண்டு,” என்று கூறிய முத்துக்குமரி, “இதோ பார்,” என்று தன் வலது கைக் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் இளநங்கையின் கண்களுக்கு முன்பாக நீட்டினாள்.

அடிக்கடி எழுத்தாணியைப் பிடித்ததால் சற்றே காய்த்துப் போயிருந்த அந்த இரு விரல்களின் நுனிகளைப் பார்த்துத் தலையசைத்த இளநங்கை, “அப்படியானால் இந்த ஓலையிலுள்ள எழுந்து பார் எழுதியதென்று தெரியவில்லையா உனக்கு?” என்று வினவினாள்.

முத்துக்குமரி மீண்டும் ஓலையை ஊன்றிக் கவனித்தாள், பிறகு, தெரியவில்லை, என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தாள். அப்பொழுதும் திருப்தியடையாத இளநங்கை, “இது உன் சிறிய தந்தையின் கையெழுத்து இல்லையே?” என்று வினவினாள்.

“இல்லை, அவர் எழுத்துப் பெரியதாயிருக்கும். உறுதி யாகவும் இல்லை. ஓலையில் எழுத்தாணி பலமாகப் புதைத் திருக்கும். அதோ அந்தக் கீறல்கள் இருக்காது,” என்று ஓலையில் இடையே எழுத்தாணி கீறியிருந்த இரண்டு இடங் களைச் சுட்டிக் காட்டினாள் முத்துக்குமரி.

“சரி. உன் தந்தையின் கையெழுத்தாயிருக்குமா?”

“இருக்காது. அவர் எப்பொழுதாவது எழுதுவார். அதுவும் அவசரமாக எழுதுவார். எந்த எழுத்தும் நேராக இருக்காது. அவரே சொல்வார், எழுத்தாணிக்கும் எனக்கும் ராசி இல்லை. வாளுக்கும் எனக்கும்தான் ராசி என்று.”

இளநங்கை ஒரு முடிவுக்கு வந்தவள் போல் முத்துக் குமரியைப் பார்த்தாள். “முத்துக்குமரி! இப்பொழுது புரிந்து விட்டது எனக்கு,” என்று சொல்லவும் செய்தான்.

“என்ன புரிந்து விட்டது?” ஆவலுடன் சேட்டாள் முத்துக்குமாரி.

“இந்த ஓலையிலுள்ளது.”

“உம்.

“அவர் கையெழுத்து.”

“எவர் கையெழுத்து!”

“உன்னுடையவர் கையெழுத்து.”

முத்துக்குமரியின் முத்து விழிகள் அந்தச் சிறு விளக்கிலும் பளபளத்தன. “என்ன உண்மையாகவா?” என்று வினவினாள், குரலில் அன்பு பெருக.

“ஆமாம்,” என்று திட்டமாகக் கூறினாள் இளநங்கை “வேறு யாரும் இருக்கமுடியாது முத்துக்குமரி. நம் நலனில் அக்கறையுள்ளவர்கள் உன் தந்தை, சிறிய தந்தை, இந்திர பானு இம்மூவர். இம் மூவரில் இருவர் கையெழுத்தல்ல ஓலையில் கண்டது. ஆகவே இது இத்திரபானுவின் எழுத்துத்தான்…” என்று சொல்லிக்கொண்டு போன இளநங்கையை முத்துக்குமரி இடைமறிக்க முயன்றாள். “இரு இரு குறுக்கிடாதே, துரோகியான இந்திரபானு இதை எப்படி எழுதியிருக்க முடியும் என்று நினைக்கிறாய். அவர் துரோகியல்ல வென்று நினைக்கிறேன். ஏதோ சந்தர்ப்பத்தை முன்னிட்டுத் துரோகியாக நடிக்கிறார். அவர் கையிலிருந்த முத்திரை மோதிரம், ஒன்று அரசுக்குச் சொந்தம். அல்லது சிற்றரசருக்குச் சொந்தம். மூன்றாமவரிடத்தில் இத்தகைய மோதிரம் இருப்பது அசாத்தியம். அப்படியிருக்குமானால் அவ்விருவரில் ஒருவர் கொடுத் திருக்கவேண்டும். இளவரசரே கொற்கையில் என்னிடம் சொன்னார் இத்தகைய ராஜமுத்திரை முக்கியமான தளபதிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக, இங்கு இந்திர பானுவைத் தவிர இளவரசருக்கு அந்தரங்கத் தளபதி யாரிருக்கிறார்கள்?” என்றாள் இளநங்கை,

இளநங்கையின் பேச்சு முத்துக்குமரியின் மனதில் பாலெனப் பாய்ந்தது. ‘எப்படியாவது இந்திரபானு துரோகியாயிருக்கக் கூடாது’ என்றே விரும்பினாள் பாண்டியகுமாரி. இளநங்கை காட்டிய காரணங்கள் சரியாக இருக்குமென்றே பட்டது அவளுக்கு. இருப்பினும் சந்தேகத்துடன் கேட்டான், “இளநங்கை! அப்படியானால் அவர் நம்மிடம் பேசிய முறை, நடந்து கொண்ட முறை எதுவுமே சரியாயில்லையே?” என்று.

“வீரரலியின் கண்கள் அங்கிருக்குமென்று அவர் எச்சரிக்கையாயிருந்திருக்கலாம்.” என்றாள் இளநங்கை.

“சரி! இப்பொழுது சாளரம் வரை வந்தவர் தன் முகத்தைக்காட்டி இந்த ஓலையைக் கேட்டிருக்கலாமே? எச்சரிக்கையாயிருக்கும்படி ஜாடை காட்டினால் நாம் வாயைத் திறக்கவா போகிறோம்?” என்று வினவினாள் முத்துக்குமரி.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல இயலவில்லை இளநங்கையால். ஆனால் அவள் மனம் மட்டும் சொல்லிற்று, இந்திரபானு குற்றவாளியல்லவென்று, ஆனால் திடுதிப்பென்று வீரரலி இந்திரபானுவை நம்புவதெப்படி யென்பதும் வியப்பாயிருந்தது கோட்டைக் காவலன் மகளுக்கு. அதனால் அவள் மௌனமே சாதித்தாள். “எதற்கும் காலை நேரம் விடை தரும்.” என்று மட்டும் கூறிவிட்டு ஓலையில் கண்டபடி அதை விளக்கின் சுடரில் எரித்தாள்.

எரித்த சாம்பலை நன்றாகக் கையில் வைத்துப் பொடி செய்து விளக்கின் எண்ணெயில் கலந்து உருத்தெரியாமலும் அடித்தாள். பிறகு முத்துக்குமரியை அழைத்துக்கொண்டு மஞ்சத்தில் படுத்தாள். எத்தனை ஆபத்தாயிருந்தாலும் அலுப்பு விளைவிக்கும் உறக்கம் அந்த இருவரையும் ஆட்கொண்டது. விடிந்தது தெரியாமல் இருவரும் உறங்கினார்கள்.

கொட்டுத்தளத்தின் உதயகாலம் வெகு இன்பமா யிருந்தது. இரவின் துஷ்ட மிருகங்களின் உறுமல்கள் மறைந்து, காட்டுப் பட்சிகளின் இன்ப ஒலிகள் அந்தப் பீடபூமிப் பிரதேசத்தை ஆட்கொண்டன. வெளியே ஏற்பட்டுக் கொண்டிருந்த அதிகப்படி மனித அரவம் பொருதையின் இராக்கால ஓசையை சிறிதே மந்தமாக்கியிருந்ததால் அதன் ஓட்டம் கட இன்பச் சுருதி கூட்டியது. இத்தனை இன்ப ஜாலங்களும் அசைக்க முடியாத அந்த இரு மங்கையரின் உறக்கத்தை, வாயிற்கதவில் ஏற்பட்ட இரண்டு தட்டல்கள் அசைக்கவே இளநங்கை முதலில் சாளரங்களைத் திறந்து விட்டுப் பிறகு வாயில் கதவையும் திறந்தான்.

வாயிற்படியில் தயாராக நின்ற இரண்டு பணிப்பெண்கள் இளநங்கைக்கும், முத்துக்குமரிக்கும் தலை தாழ்த்தினர். அவர்கள் இருவர் கைகளிலும் சகோட யாழும், மகர யாழும் இருந்ததைக் கண்டு வியந்த இளநங்கை, அவர்கள் மீது வியப்பு விரிந்த தனது விழிகளை ஓட விட்டாள். “மன்னிக்க வேண்டும். உங்களிருவரையெழுப்ப உதயராகங்களை இசைத்துப் பார்த்தோம். நீங்கள் துயிலெழாதிருக்கவே கதவைத் தட்டினோம்,” என்று ஒரு பணிப்பெண் சொல்ல இன்னொருத்தி அதை ஆமோதித்துத் தலையை மட்டும் ஆட்டினாள்.

இளநங்கைக்கு அதுமட்டும் விந்தையாவில்லை. அந்த முதற்படியிலிருந்து அடுத்தடுத்து நடந்த எல்லா அலுவல்களும் விந்தையாகவே இருந்தன. அரச மகளிருக்கு நடக்க வேண்டிய அத்தனை உபசரணைகளும் நடந்தன. அன்று காலைப் பொழுது பூராவும் வந்த இருபணி மக்களும் மஞ்சங்களைத் தட்டினார்கள், அறைகளைச் சுத்தம் செய்தார்கள். நீராட்டத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். புதுப்புதுப் பட்டாடைகளையும் கொண்டு வந்திருந்தார்கள், ஸ்நானத்துக்கு இரண்டு வீரர்களை விட்டுப் பொருதை நீரை அண்டாக்களில் திரப்பச் சொன்னதும், அவற்றில் வாசனைக் கலவைகளைத் தெளித்த பணிமகளில் ஒருத்தி, “தேவி! உன்னே நீராட்டத் துக்கு எல்லாம் சித்தம், வருகிறீர்களா?” என்றாள்.

இன்னொருத்தி இளநங்கையையும் முத்துக்குமரியையும் அந்த விடுதியின் பின்புறமிருந்த நீராட்ட அறையில் நீராடச் செய்து, பொன் தட்டுகளில் பழங்களும் ஒட்டக் காய்ச்சிய ஆவின் பாலும் பரிமாறினாள். பிறகு அவர்கள் இருமங்கையர்களின் குழல்களையும் காற்றில் உலர்த்தி, சிக்கெடுத்து வாசனைத் தைலம் தடவி வாரியும் விட்டார்கள்.
முத்துக்குமரி அரண்மனையிலிருந்தால் எத்தனை ராஜோபசாரம் நடக்குமோ, அத்தனை உபசாரம் அவளுக்கு மட்டுமன்றி, அந்த உபசரணைகளை அதிகமாக அனுபவித் தறியாத இளநங்கைக்கும் நடந்தது. இருமங்கையரும் முதலில் இந்த உபசரணைகளை ஏற்க மறுத்தாலும் பணிமகளிருவரும் அவர்கள் முன்பு தலைவணங்கி, “நீங்கள் மறுத்தால் எங்கள் தலை போய்விடும்,” என்று பயத்துடன் கூறியதால், அவர்கள் இஷ்டப்படியெல்லாம் அந்த இருமங்கையரும் ஆடவேண்டியதாயிற்று.

இப்படி நீராட்டம், காலை உணவு முதலியன முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் இரண்டு சிவிகைகள் வாயிலில் வந்து நின்றன. அந்தச் சிவிகைகள் வந்ததும், உள்ளே நுழைந்த இந்திரபானு இளநங்கையை நோக்கி, “அம்மா! சிவிகைகள் வந்து விட்டன கிளம்புங்கள்,” என்றான்.

“எங்கு?” என்று வினவினாள் இளநங்கை.

முத்துக்குமரி வாய்விட்டு ஏதும் கேட்கவில்லை. ஆனால் அவனை நோக்கிய அவள் கண்கள் மட்டும் பல கேள்விகளைக் கேட்டன. அவற்றுக்கெல்லாம் அவன் விடை சொல்லவில்லையே தவிர ஒன்றுமட்டும் சொன்னான், “உங்களைச் சேர நாடு அழைத்துச் செல்ல சேர மன்னர் உத்தரவிட்டிருக்கிறார். அங்குதான் அழைத்துச் செல்கிறேன். இதை நேற்றிரரே உங்களுக்குத் தெரிவித்தேனல்லவா!” என்று சற்று இரைந்தும் கடுமையுடனும் கூறினான்.

முத்துக்குமரி அவனை எரித்து விடுபவள் போல் பார்த்தாள். அதைக் கண்ட அவன் இதழ்களில் இகழ்ச்சி

நகை விரிந்தது. “நான் பாண்டியர் பக்கமிருந்து சேரர் பக்கம் மாறிவிட்ட துரோகியென்று நீங்கள் கருதினால் அதில் தவறில்லை அரசகுமாரி. ராஜதந்திரம், அரசியல் அவசியம். இவை இரண்டும் இத்தகைய புரட்டுக்களை அனுமதிக்கிறது. பாண்டியர்கள் சிங்களத்தில் விளைவித்திருக்கும் தீமைகளைப் பற்றிய வரலாற்றை நீங்கள் உணர்ந்திருந்தால்- நீங்கனென்ன, வீரபாண்டியனாவது உணர்ந்திருந்தால்- சிங்களத்தின் வட எல்லையை ஆன்பவன் பரம விரோதிகளான பாண்டியர்களின் நண்பனாயிருக்க முடியாதென்று தெளிவுற்றிருக்கலாம். அத்தனை தெளிவு வீரபாண்டியனுக்கு இருந்திருந்தால் நீங்கள் இன்று என் கையில் சிக்கியிருக்க மாட்டீர்கள்” என்று சீறிவிட்டு, “இப்படி வா,” என்று வெளியிலிருந்த காவலர்கள் இருவரை விளித்து, இவர்கள் கூடைகளையும், பைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

இரு வீரர்கள் பைகளையும் கூடைகளையும் எடுத்துக் கொள்ள, வேறு வழியின்றி வாயிலில் தயாராயிருந்த சிவிகைகளில் இளநங்கையும், முத்துக்குமரியும் ஏறவே, சிவிகைகள் மலைப்பாதையை நோக்கிப் புறப்பட்டன. அந்தச் சிவிகைகள் சென்றதைச் சற்று தூரத்திலிருந்து பார்த்த வீரரவி பெரு மகிழ்ச்சியடைந்தது மட்டுமல்ல, சிவிகைகளை அனுப்பிவிட்டுத் தன்னை அணுகி வந்த இத்திரபானுவை நோக்கி, “இந்திரபானு! இனிச் சேர நாட்டில் மன்னனுக்கும் அடுத்தபடி ஒருவன் உண்டென்றால் அவன் நீதான். உன் தன்னலமற்ற சேவையை நான் பாராட்டுகிறேன்,” என்று கூறி, மிகுந்த குதூகலத்துடன் அவன் முதுகில் தட்டியும் கொடுத்தான்.

வீரரவியின் இதயத்தில் எத்தனை மகிழ்ச்சி இருந்ததோ, அத்தனை வேதனையுடன் சேரநாடு பயணப்பட்ட இரு மங்கையரும் தனித்தனிச் சிவிகைகளில் இருந்தபடியால் சிற்சில சமயங்களில் சிவிகைகளின் திரைகளை விலக்கி எட்டிப் பார்த்துக்கொள்ள முடிந்தாலும், பரஸ்பரம் பேசும் வசதி சிறிதும் இல்லாததால், மௌனத்துடன் இதயத்தில் பற்பல எண்ணங்கள் அலைமோதவும் சென்று கொண்டிருந்தார்கள்.

சிவிகைகளைத் தூக்கிவந்த ஆட்களுக்கிடையே ஹூங்காரச் சப்தங்களைத் தவிர வேறெந்தச் சப்தமும் காதில் விழாததால் அந்த ஹூங்காரங்கள் தங்கள் மனத் துன்பங்களையே பிரதிபலிப்பதாக அந்த இரு மங்கையரும் எண்ணினார்கள். சுமார் ஒரு ஜாமம் இப்படிக் காடடர்ந்த மலைப்பாதையில் மேற்கு நோக்கிப் பயணம் நடந்ததும், சட்டென்று சிவிகையாட்கன் சிவிகைகளைக் கீழே வைத்துச் சிறிது சிரமபரிகாரம் செய்து கொள்ளவே, இரு மங்கையரும் சிவிகைகளிலிருந்து கீழே இறங்கிச் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். இருவர் பார்வையிலும் வியப்பு விரிந்தது. முத்துக்குமரி வியப்புடன் சந்தேகமும் கலந்த குரலில், “இது..” என்று துவங்கினாள்.

சேரநாட்டுப் பாதையல்ல. வேறு பாதை,” என்று முடித்தாள் இளநங்கை,

Previous articleRaja Muthirai Part 1 Ch21 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch23 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here