Home Historical Novel Raja Muthirai Part 1 Ch23 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch23 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

69
0
Raja Muthirai Part 1 Ch23 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch23 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch23 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 23 காட்டுக் கோட்டை அதிசயம்

Raja Muthirai Part 1 Ch23 |Raja Muthirai Part1|TamilNovel.in

பொதியமலைக் கூட்டத்துக்கிடையேயிருந்த குறுகிய பாதையில் சிவிகைகளிரண்டும் இறக்கப்பட்டவுடன், அவற்றிலிருந்து வெளிப்போந்த இளதங்கையும் முத்துக் குமரியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடந்த மலைகளையும் வனாந்தரங்களையும் பார்த்துப் பிரமித்தனர். மலையுச்சிகள் தெரிந்தன. மலைகள் மீது ஏதோ இரண்டோர் இடங்களில், படுத்திருக்கும் பெரும் பாம்புகள் போல் வளைந்து கிடந்த பாதைகளைத் தவிர வேறு பயண மார்க்கங்கள் எதுவும் காணப்படவில்லை.

அடர்த்தியான காடுகள் எங்குமிருந்தாலும், பகல் நேரமாதலால் துஷ்டமிருகங்களின் அரவமேதும் காதில் விழவில்லை. இருப்பினும் வழிநெடுக அபாயமிருப்பது மட்டும் நிச்சயமென்பதற்கு நிரம்ப அறிகுறிகள் இருந்தன. சிவிகைகள் இறக்கப்பட்ட இடத்திலிருந்து சற்றுத் தூரத்தில் தெரிந்த ஒரு பாதையில் தொங்கிக் கிடந்த காட்டாட்டு எலும்புக்கூடு ஒன்று துஷ்ட மிருகங்களின் அருகாமையைச் கட்டிக் காட்டியது. சிவிகையிலிருந்து சற்றுத் தள்ளி, பாதைக்கருகிலிருந்த பொடியான கூழாங்கற்கள் அகன்றிருந்த மாதிரியிலிருந்து அங்கு பெரும் புலியொன்று அடியெடுத்து வைத்திருக்கிறதென்பதும் சந்தேகமறத் தெரிந்தது. சுற்றுப் புறமிருந்த நிலையைக் கண்டதுமே, தாங்கள் செல்லும் பாதை சாதாரண மனித சஞ்சாரத்துக்காக ஏற்பட்ட, பாதையல்லவென்பதை உணர்ந்து கொண்டாள் இளநங்கை. அத்தகைய உணர்வின் வினைவாக மீண்டும் தன் கண்கனை ஒருமுறை சுற்றவிட்டாள். கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகம் விலகிடவே சரேலென்று அவள் தனது பின்புறமிருந்த பாறையில் லேசாக ஒரு காலை வைத்து ஏறிப் பின்புறத்தின் நிலையைக் கவனித்தாள். பிறகு எதிரேயிருந்த பெரும் மலையுச்சியொன்றையும் கவனித்தாள்.

உச்சிவேளை நெருங்கிவிட்டதால், அந்த மலையுச்சி கதிரவனொளியால் தாக்கப்பட்டு வெள்ளை வெளேரென்று கண்ணாடி காட்டவே, இளதங்கையின் கண்கள் ஓரளவு கூசவும் தொடங்கின. நெற்றியின் நடுப்பாகத்துக்கு தனது இடது கையை உயர்த்திக் கண்களுக்கு வெளிச்சத்திலிருந்து பாதுகாப்பளிக்கக் கூரையிட்டு, மீண்டும் அந்தப் பெரும் மலையுச்சியை ஆராய்ந்தான் அந்த ஆராய்ச்சியின் பயனாகப் பெரிதும் குழம்பிய மனத்துடன் பாறையிலிருந்து காலை எடுத்துவிட்டு முத்துக்குமரியை நோக்கினான்.

இளதங்கையின் மனத்திலேற்பட்ட சந்தேகம் முத்துக் குமரிக்கும் ஏற்பட்டுத்தானிருந்து. இத்தனைக்கும் அவள் அந்த மலைப் பகுதியைப் பார்த்ததே கிடையாது அரண்மனைச் செல்வியாக வளர்ந்துவிட்ட காரணத்தால் அவள் பாண்டிய அரசின் கோட்டைகளைப் பற்றி ஓரளவு தந்தை சொல்ல அறிந்ததுண்டே யொழிய, நேரிடையாக இத்தகைய இடங்களைக் காணும் வாய்ப்பை அடைந்ததில்லை. அப்படியில்லாதிருந்தபோதிலும் தங்களை வீரர்கள் கொண்டு வந்திருக்கும் பாதை வேட்டுவரும், இதர காட்டு வாசிகளும் செல்லும் காட்டுக் குறுக்குப் பாதைகளிலொன்றே தவிர, சேர நாட்டுக்குச் செல்லும் பழக்கமான பாதையாயிருக்க முடியாதென்ற தீர்மானத்துக்கு முத்துக்குமரி வர அதிக நேரம் பிடிக்கவில்லை அந்தப் பாறையில் புரவிகள் செல்வதோ ஆயுதவண்டிகளைக் கொண்டு போவதோ சிறிதும் சாத்தியமில்லை யென்பதைச் சிவிகையிலிருந்து இறங்கியவுடனே அவள் புரிந்து கொண்டாள். சிவிகைகளைத் தாங்கி வந்தவர்களும் காவல் வீரர்களுமாகச் சேர்ந்து சுமார் இருபது பேரும் கூட அந்த மலைப் பாதையின் முரட்டுத் தனத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தூரத்தில் உட்கார்ந்துவிட்டதைக் கவனித்த முத்துக்குமரி, தாங்கள் செல்வது சேர நாட்டுப் பாதையல்லவென்பதை உணர்த்து கொண்டதும், அதைத் இடப்படுத்திக் கொள்ள இனநங்கையை ஏறெடுத்து நோக்கி, இது. ” என்று துவங்கினான். “சேர நாட்டுப் பாதையல்ல; வெறு பாதை” என்று இளநங்கையின் பதில் தயக்கமின்றி வந்ததும், முத்துக்குமரியின் இதயத்தில் பிரமிப்பு அதிகமாயிற்று.

அந்தப் பிரமிப்பின் விளைவாகச் சிறிது நேரம் பேசாமல் நின்றுவிட்ட முத்துக்குமரி, “அப்படியானால் இது எங்கு செல்கிறது?” என்று தாங்கள் வந்த பாதையைக் கன்களால் சுட்டிக் காட்டிக் கேட்டாள்.

இளநங்கை அவளுக்கு உடனே பதில் சொல்ல வில்லை. அவள் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு, பாதையிலிருந்து சற்று விலகி நடந்து காட்டு மரங்களின் நிழலுக்குள் சென்று அங்கிருந்து பாறையொன்றில் உட்கார்ந்து, முத்துக்குமரியையும் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டாள். பிறகு சொன்னாள், “முத்துக்குமரி! இந்தப் பாதை எங்கு போகிறதென்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை என்னால். ஆனால் ஒன்று நிச்சயம். இது சேர நாட்டுக்குப் போகாது” என்று.

“அது மட்டும் எப்படி நிச்சயமாகத் தெரியும்?” என்று வினவினாள் முத்துக்குமாரி.
இளநங்கை சொன்னான், “முத்துக்குமரி! பொதிய மலைப் பிராந்தியம் எனக்குப் புதிதல்ல. கொட்டுத்தளம் என்ற புதிய பெயரை இப்பொழுது உன் தந்தை சூட்டியிருக்கலாம். அங்கு முரசுகளையும் வைத்திருக்கலாம். ஆனால் அந்தப் பீடபூமி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. எத்தனையோ முறை தானும் என் தந்தையும் என் பணி மக்களும் இந்தப் பகுதிகளுக்கு வேட்டையாடவும் வனபோஜனத்துக்கும் வந்திருக்கிறோம். அகத்தியர் மலைத் தட்டான கொட்டுத்தளத்திலும் தங்கியிருக்கிறோம். இந்த மலைக்கூட்டங்களிடையே இருக்கும் சந்தனக் காட்டிலும் தங்கியிருக்கிறோம் இந்த மலைப்பகுதியில் சேரநாடு செல்லப் பத்திரமான வழி ஒன்றுதானுண்டு, அது நாமிருக்கும் இடத்துக்குப் பின்புறமிருக்கிறது.”

இதைச் சொல்லிச் சற்று நிதானித்த இளநங்கை, தனது தலையை லேசாகப் பின்புறம் திருப்பி எதையோ உற்றுக் கேட்டாள். “ஆம்! ஆம்! பின்புறம் தானிருக்கிறது” என்று மீண்டும் சொன்னாள்..

முத்துக்குமரிக்கு இனநங்கை எப்படி அத்தனைத் திட்ட மாகச் சொல்கிறாள் என்பது புரியாமல் போகவே, “எதை உற்றுக் கேட்டாய் இளநங்கை? எந்த ஆதாரத்தின் மேல் அத்தனைத் திட்டமாகச் சொல்கிறாய்?” என்று வினவினாள்.

“உன் தலையை லேசாகப் பின்புறம் திருப்பி உற்றுக் கேள்!” என்றாள் இளநங்கை பதிலுக்கு.

முத்துக்குமரி தனது தலையைத் திருப்பிக் காதை நன்றாகத் தீட்டிக்கொண்டு கேட்டாள். பிறகு இளநங்கையைப் பார்த்து, “ஏதோ நீர் விழுவதுபோல் ஒலிக்கிறது காதில்,” என்றாள்.

“ஆம். நமக்குப் பின்புறம் சுமார் கால் காதத்தில் நீர் வீழ்ச்சியொன்று இருக்கிறது,” என்றாள் இளநங்கை.

“கால் காத தூரத்திலா?” முத்துக்குமரியின் சொற்களில் வியப்பு ஒலித்தது.

“ஆம். முத்துக்குமரி,”

“அத்தனை தூரத்திலிருக்கும் தீர்விழ்ச்சியின் ஓசை இங்கு கேட்குமா?

“கேட்கும். இங்கு மனித அரவமில்லை. சுற்றிலும் நிசப்தமான காடு, தவிர மலைப் பாறைகளும் ஒலியைத் தாங்கித் தூக்கிக் கொடுக்கும்.”

“அது அத்தனை பெரிய நீர்வீழ்ச்சியா?”

“இல்லை. சுமாரான தீர்விழ்ச்சிதான். பாணர் அருவி யென்று அதை அழைக்கிறார்கள். அதன் பக்கத்தில்தான் சேரநாட்டுப் பாதை போகிறது. பாதையின் ஒருபுறத்தில் சந்தனக் காடு. இன்னொரு புறத்தில் தேவதாரு மரங்கள் நிரம்ப உண்டு. ஏலச் செடிகளும் மண்டிக் கிடக்கும்.”

பாணர் வீழ்ச்சியைப்பற்றியோ சந்தனக் காட்டைப் பற்றியோ அந்தச் சமயத்தில் முத்துக்குமரிக்குச் சிரத்தை யில்லையாகையால், “அப்படியானால் நம்மை இப்பொழுது பங்கு கொண்டு போகிறார்கள்?” என்று வினவினான்.

“அதை விசாரிப்போம்” என்று இளநங்கை தங்களைத் தூக்கிவந்த சிவிகையாள் ஒருவனைச் சைகை செய்து தனக் கருகாமையில் வரவழைத்தான். “மீண்டும் எப்பொழுது புறப்படுவீர்கள்?” என்று விசாரிக்கவும் செய்தாள்.

“இளைப்பாறக் கொஞ்சம் அவகாசம் தேவை. மலைப் பாதை மிக முரடாயிருக்கிறது. சிவிகையைத் தாங்கிச் செல்வது கஷ்டமாயிருக்கிறது,” என்றான்ச் சிவிகை ஆள்.

“ஏன் வேறு நல்ல பாதை இல்லையா?” என்று வினவினாாள் இளநங்கை.

“இருக்கிறது. காவலர் இந்தப் பகுதியில் தான் அழைத்து வந்தார்கள்,” என்றான் சிவிகைக்காரன்.

“இது எந்தப் பாதை? எங்கு செல்கிறது?” என்று விசாரித்தான் இளநங்கை.

“எனக்குத் தெரியாது தேவி. இந்தப் பாதையில் நான் வருவது இதுதான் முதல் தடவை,” என்றான் அந்த ஆள்.

தெரிந்த யாரையாவது கூப்பிடு,” என்று உத்தர விட்டாள் இளநங்கை.

சிவிகை ஆள் மற்ற ஆட்கள் உட்கார்ந்திருந்த இடத் துக்குச் சென்று ஏதோ விசாரித்துவிட்டுத் திரும்பி வந்து, “அவர்கள் யாருக்கும் தெரியவில்லை தேவி!” என்று கூறினான்.

இளநங்கையின் கண்களில் கோபம் உதயமாயிற்று. “யாருக்கும் தெரியாவிட்டால் எதற்காக இங்கு தூக்கி வந்தீர்கள்?” என்று சீறினாள் சொற்களில் கனல் தெறிக்க.

சிவிகை ஆள் மௌனமாகி நின்றான். நாங்கள் பாரென்றாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று மீண்டும் சிறினாள் இளநங்கை.

“தெரியாது தேவி,” மிகப் பணிவுடன் வந்தது அந்த ஆளின் பதில்.

“ஏன் தூக்கி வந்தீர்களென்பது தெரியாது; எங்கு தூக்கிச் செல்கிறீர்களென்று தெரியாது. யாரைத் தூக்கிச் செல்கிறீர்கள் என்று தெரியாது. பின் என்னதான் தெரியும் உங்களுக்கு!” என்று இரைந்தாள் கோட்டைக் காவலன் மகள்.

சிவிகை ஆள் பதிலேதும் சொல்ல முடியாமல் திருதிரு வென்று விழித்துக்கொண்டு நின்றான். சிவிகை தூக்குவோனை இளநங்கை விசாரித்ததைத் தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த காவலரிலொருவன் அவளை அணுகி வந்து தலைவணங்கி, “தேவிக்கு ஏதாவது தேவையானால் என்னைக் கேளுங்கள். சிவிகை ஆன் விஷயமறியாதவன்,” என்று கூறினான்.

அவனை ஏறிட்டு நோக்கிய இளநங்கை, அவன் உடையிலிருந்தே அவன் சேரநாட்டவன் என்பதை உணர்ந்து கொண்டதால் மிக வெறுப்புடன் அவனை நோக்கினாள், “நாம் எங்கு செல்கிறோம் என்பது தெரிய வேண்டும்,” என்று கூறவும் செய்தால் உஷ்ணத்துடன்.

சேரநாடு அழைத்துச் செல்லும்படி உத்தரவு, அது உங்களுக்கும் தெரியுமென்று படைத்தலைவர் சொன்னார்,” என்றான் சேரவீரன் மிகுந்த பணிவுடன்.

அதுவரை வாளாலிருந்த முத்துக்குமரி கேட்டாள் சினத்துடன், “எந்தப் படைத்தலைவர்?” என்று.

“கொட்டுத்தளப் படைத்தலைவர்,” என்றான் சேர வீரன்.

“யாரவர்?” என்றாள் முத்துக்குமரி சந்தேகத்துடன்.

“இந்திரபானு, புதிதாக வந்தவர். ஆனால் சேர மன்னரால் நன்கு மதிக்கப் பெற்றவர்,” என்றான் சேரவீரன்.

“எத்தனை நாளாக அவர் கொட்டுத்தளத்துக்குத் தலைவரானார்?” என்று சீறினாள் முத்துக்குமாரி..

“எனக்குத் தெரியாது தேவி; இன்று காலையில் தான் மன்னர் என்னை அழைத்து, “இதோ இந்த இந்திரபானு நான் இங்கு உங்கள் தலைவர். அவர் உத்தரவுப்படி தடவுங்கள்” என்று கூறினார். அடுத்த ஒரு நாழிகைக்குள் புதுப்படைத் தலைவரின் உத்தரவு வந்தது. சிவிகைகளுடன் தாங்கள் கிளம்பினோம்.” என்றான் சேரவீரன்.
அவன் உண்மையைச் சொல்வதாகவே தோன்றியது இருமங்கையருக்கும். அத்துடன் முத்துக்குமரி தனது கேள்வியினை நிறுத்திக்கொண்டாள். ஆனால் இளநங்கை மட்டும் கேட்டாள். “இது சேரதாடு செல்லும் பாதையா?” என்று.

சேர வீரன் பதில் வித்தையாயிருந்தது. “தெரியாது?” என்றான் அவன்.
“தெரியாதா?” இளநங்கையின் கேள்வியில் வியப்பு மிதமிஞ்சிக் கிடந்தது.

“ஆம் தேவி, இந்தப் பாதையில் இதுவரை நான் வந்த தில்லை ” என்றான் சேரவீரன்.

“மற்ற யாருக்காவது தெரியுமா?” என்று வினவினான் இளநங்கை.

“யாருக்கும் தெரியாது?”

“அப்படியானால் கண்மூடித்தனமாக அழைத்துப் போகிறீர்களா?”

“இல்லை புதுப்படைத் தலைவர் உத்தரவு திடமாயிருக்கிறது. இந்தப் பாதையில் சென்றால் வடக்கே வேறொரு பாதை திரும்புமாம். அதைப் பற்றிச் செல்லும்படி உத்தரவு.”

சென்றால்?
“நாம் போய்ச் சேரவேண்டிய இடம் வரும்,” என்ற சேரவீரன், மேற்கொண்டு எதுவும் சொல்லாமல், “நீங்கள் இளைப்பாறியது போதுமென்றால் கிளம்புவோம்.” என்றான்.

“எங்களுக்கு அசதி எதுவுமில்லை. சிவிகை ஆட்கள் வேண்டுமானால் இளைப்பாறட்டும்,” என்றாள் இளநங்கை.

சேரநாட்டு வீரன் அதற்குமேல் சிவிகை ஆட்களை உட்கார விடவில்லை. சிவிகைகளில் மங்கையரிருவரையும் ஏறச்சொல்லி, சிவிகைகளை எடுக்கச் சொன்னான் ஆங்காங்கு உட்கார்ந்த மற்ற வீரர்களையும் கிளப்பி புறப்பட உத்தரவிட்டான்.

அந்த மலைப்பாதையில் சிவிகைகள் மீண்டும் ஊர்த்தன. முக்கியும் முனகியும் சிவிகையாட்கள் சிவிகைகளைத் தூக்கிச் சென்றார்கள். மலை ஏற்றம் அதிகமாக அதிகமாகக் காடும் நெருக்கமாயிற்று. சிவிகைச் சீலையை நீக்கிப் பார்த்த இளநங்கை பாணா அருவியிலிருந்து விலகி நீண்ட தூரம் தாங்கள் வடக்கே வந்து விட்டதை உணர்ந்தாள். சுமார் ஒரு ஜாமப் பயணத்துக்குப் பிறகு மலைப்பாதை மீண்டும் ஏதோ பள்ளத்தாக்கில் இறங்கிச் சென்றது. அந்தப் பாதையில் இறங்கிப் பக்கத்திலிருந்து சிறு சுனையருகில் வந்ததும் சிவிகைகளை இறக்கி, உணவருந்த ஆட்களுக்கும் மற்றக் காவலருக்கும் அவகாசமளித்த சேரவீரன் இளநங்கையை அணுகி தேவி நீங்களும் உணவருந்தலாம். இந்தச் சுனையை விட்டால் இனி சனை ஏதாவது உண்டோ இல்லையோ தெரியாது. நேரமும் ஏறிவிட்டது,” என்றான்.

உணவருந்தும் நிலையில் இரு மங்கையரும் இல்லை எதுவும் தேவையில்லையென்று கூறிவிட்டு, சிவிகையி லிருந்து சற்றுத் தள்ளி இருவரும் உட்கார்ந்தனர். ஆட்கள் உணவருந்தியதும் மீண்டும் பயணம் துவங்கியது மெள்ள மெள்ள மாலைப் பொழுதும் நெருங்கியது. சிவிகைகள் பள்ளத்தாக்கு ஒன்றில் இறங்கி இன்னொரு மலையில் ஏறுவதாகத் தோன்றியது இளநங்கைக்கு இரவு மூள்வதற்கான அறிகுறிகள் எங்கும் தோன்றின. மாலை நேரத்திலேயே சிவிகைச் சீலையைத் தள்ளிப் பார்த்த இளநங்கை, அகத்தியர் உச்சிவென அழைக்கப்பட்ட பொதியமலைப் பேருச்சி சிவிகைகளுக்குப் பின்புறத்தில் இருப்பதைக் கண்டாள். “அப்படி யானால் திரும்பவும் கொட்டுந்தளமா போகிறோம்!” என்று தன்னைத்தானே இருமுறை கேட்டுக் கொண்டு விடைகாணாமல் தவித்தாள். மேற்கொண்டு சித்திக்கவும் முயலாமல் சிவிகைத் தலையணையில் சாய்ந்து கொண்டாள்.

இருள் மூள அறிகுறிகள் தோன்றியதுமே காட்டுக் குச்சிகளைக் கொண்டு பந்தங்கனைத் தயார் செய்தான் சேர வீரன். முன்னும் பின்னும் பந்தங்கள் எரிய, பயணம் மறு படியும் அரைஜாமம் நடந்தது. அந்த அரை ஜாம முடிவில் நிலைமை திடீரென மாறியதை இளநங்கை, முத்துக்குமரி இருவருமே உணர்ந்தார்கள். திடீரென எங்கிருந்தோ ஒரு புரவி வீரர் வரும் ஒலிகள் கேட்டன. அடுத்த சில நிமிஷங்களில் சிவிகைகளை எதிர்கொண்ட புரவி வீரர்கள் நால்வருடன் சேரவீரன் ஏதோ பேசினான். மீண்டும் பயணம் துவங்கியது.

இம்முறை சற்றுத் துரிதமாகவே பயணம் நடந்தது. சிவிகை ஆட்கள் முழுமூச்சுப் பிடித்தும் ஹூங்காரத்தைப் பலமாகப் போட்டும் ஓடினார்கள். இப்படி அரை ஜாமம் சென்றதும் எங்கும் மனிதநடமாட்டமும் அரவமும் கேட்டது. திடீரெனப் பலமாக சுவர்களுக்குள் சிவிகைகள் நுழைந்தன. அடுத்த இருண்டொரு விநாடிகளில் கீழே சிவிகைகள் இறக்கவும் பட்டன. சிவிகைகளிலிருந்து வெளிவந்த இருவரும் ஒரு பலமான கோட்டைக்குள் தாங்கள் கொண்டுவரப் பட்டிருப்பதை உணர்ந்தார்கள், அவர்களைத் தொடர்ந்து வரச் சொல்லி சைகை செய்து சேரவீரன் கோட்டை நடுவிலிருந்து பெருவிடுதிக்கு அவர்களை அழைத்துச் சென்றான்.

அந்த வாயிலைக் கண்டதும் இளநங்கை, முத்துக் குமரி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள், வாயிலில் கட்டியிருந்தது இந்திரபானுவுக்கு வீரபாண்டியனால் அனிக்கப்பட்ட சாம்பல் நிறப்பெரும் புரவி. “தான் என்ன சொன்னேன்? இந்திரபாலு துரோகியா யிருக்க முடியாதென்று சொல்லவில்லையா?” என்று இளநங்கை வாய் விட்டுக் கேட்கவில்லை முத்துக்குமரியிடம். ஆனால் அவள் அழகிய விழிகளில் விரிந்த மகிழ்ச்சியில் அந்தக் கேள்வி தொக்கி நின்றது இந்திரபானுவைக் காணப்போகிறோம். என்ற மகிழ்ச்சியால் உள்ளம் குதூகலிக்க அந்த விடுதி வாயிற்படியைச் சற்று முன்னதாகவே கடத்தாள் முத்துக்குமரி ஆனாள் வாயிற்படியைத் தாண்டியதும் கற்சிலையென நின்றாள் இளநங்கையும் பேசும் சக்தியை, ஏன் காலை எடுத்து மற்றோர் அடி எடுத்து வைக்கும் சக்தியைக்கூட இழந்தாள் உள்ளே இருந்தது இந்திரபானுவல்ல. வீர பாண்டியனு மல்ல. இரு மங்கையரும் முத்னும் எதிர்பாராத மூன்றாவது மனிதனொருவன் உள்ளிருந்த மஞ்சத்திலிருந்து எழுந்து அவர்களை வரவேற்றான். தாங்கள் காண்பது கனவல்ல வென்பதை நிர்ணயித்துக் கொள்ளவோ என்னவோ இளநங்கையும், முத்துக்குமரியும் ஒருவர் கையை ஒருவர் இறுகப் பிடித்துக் கொண்டனர். அந்த காட்டுக் கோட்டை யில் விரிந்தது அத்தனை பெரிய அதிசயம்.

Previous articleRaja Muthirai Part 1 Ch22 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch24 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here