Home Historical Novel Raja Muthirai Part 1 Ch25 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch25 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

80
0
Raja Muthirai Part 1 Ch25 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch25 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch25 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 25 முழங்கிய முரசுகள்

Raja Muthirai Part 1 Ch25 |Raja Muthirai Part1|TamilNovel.in

சித்திரைத் திங்கள், மூலநட்சத்திரத்தில் பிறந்தவனும் சிங்கப்பார்வை உள்ளவனும், சித்தத்தில் அச்சத்தைச் சிறிதனவும் அறியாதவனுமான சுந்தரபாண்டியன், சேரநாடு அழிக்கப்படும்,” என்ற சொற்களை வேகத்துடனும், கனல் விரிந்த கண்களுடனும் சொல்லி முடித்த மாத்திரத்தில், ‘நீங்கள் செல்லலாம்’, என்பதற்கு அறிகுறியாக முத்துக்குமரியையும் இளநங்கையையும் நோக்கித் தனது வலது கையை அசைத்தான்.

நீண்ட நாட்கள் காணாத, பல அபாயங்களுக்குள் பான சொந்தப் பெண்ணை ஏதோ சாதாரணப் படைவீரனைப் போகச் சொல்வதைப் போல் சுந்தர பாண்டியன் ஜாடை காட்டியதைக் கண்டு வியப்பதா அல்லது அவனை வெறுப்பதா என்று புரியாமல் அவனை மீண்டும் நோக்கிய இளநங்கை தலையில் கலைந்து கிடந்த அவன் குழலையும், முரட்டுப்போர் ஆடையையும் கனவுப் பார்வைவையும் கண்டதும், குடும்பம் சம்பந்தப்பட்ட வரையில் மன்னன் வெறும் மரம் என்று முடிவு செய்து கொண்டாள். ஆனால் தந்தையை நன்றாக உணர்ந்திருந்தவளும், அவன் மனப் போக்கு அவ்வப்போது எப்படித் திரும்பும் என்பதை அறிந்திருந்தவளுமான முத்துக்குமரி மட்டும் தந்தை நிலையையும், அவன் கையசைத்ததையும் கண்டதும் வேறு வார்த்தையேதும் பேசாமல் வாயிற்படியை நோக்கித் திரும்பி நடந்தாள். இளநங்கை மௌனமாக அவளைப் பின் தொடர்ந்தாள்,

வாயிற்படியை அவ்விருவரும் தாண்டியதும், பெரும் முன்னேற்பாடு செய்யப்பட்டது போலக் காரியங்கள் நடந்தன. இரண்டு வீரர்கள் அவர்களை எதிர்கொண்டு “இப்படி வரவேண்டும்” என்று கூறி வழிகாட்டி அந்த விடுதியிலிருந்து சற்றுத் தள்ளியிருந்த வேறொரு விடுதிக்கு அவ்விருவரையும் அழைத்துச் சென்றார்கள்.

அந்த விடுதியில் அதிக சௌகரியங்கள் இல்லை யென்றாலும், தாங்கள் தங்குவதற்கு வேண்டிய வசதிகள் செய்யப் பட்டிருப்பதையும், தங்களுடைய கூடைகளும் பைகளும் முன்னதாகவே அந்த விடுதியின் அறையில் வைக்கப்பட்டிருந்ததையும், பயண அலுப்புத் தீரத் தாங்கள் நீராடக்கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததையும் கவனித்த இளநங்கை, பெரும் போர்களில் ஈடுபட்டுள்ள பாண்டிய மன்னன் சின்னஞ்சிறு காரியங்களில் கூட நுட்பமான கவனம் செலுத்தும் திறனுடையவரென்பதைப் புரிந்து கொண்டாள். அவர்களை அழைத்துச் சென்று அந்த விடுதியில் விட்ட வீரன் நீராட்ட அறையில் அண்டாக்களில் நீர் நிரப்பப்பட்டிப்பதாகவும், நீராட்டத்தை முடித்துக் கொண்டால் வெகு சீக்கிரம் உணவு வருமென்றும் கூறிச் சென்றான்.

அந்தச் சிறு விடுதியின் முகப்பு அறையையும் மற்ற இரண்டு தாழ்வரைகளையும் பார்வையிட்ட இளநங்கை, அது வீரர்கள் தங்குவதற்காக ஏற்பட்ட விடுதியே தவிர, நீண்ட காலத்துக்குக் குடும்பங்கள் தங்குவதற்காக ஏற்பட்ட விடுதியல்லவென்பதை உணர்ந்து கொண்டாள். பிறகு முத்துக்குமரியுடன் நீராட்டத்தை முடித்துக்கொண்டு விடுதியின் வாயிலுக்கு வந்தாள். அந்த விடுதி மலைச் சரிவின் மேற்பகுதியில் கட்டப்பட்டிருந்ததால், கோட்டை பூராவையுமே பார்க்க முடிந்தது அவளால்.

அந்தக் கோட்டை அப்படியொன்றும் பெரிதல்ல அதனுள்ளே ஐம்பதுக்குக் குறைந்த வீடுகளே இருந்ததைக் கவனித்த இளநங்கை, அது ஓர் எல்லைப்புறப் பாதுகாப்புத் தளமே தவிர, நீண்ட போரையோ, முற்றுகையையோ தாங்கவல்லதல்ல வென்பதையும் புரிந்து கொண்டாள். கோட்டை மதில் பெரிதாகவும், உள்ளிருந்த சுமார் ஐம்பது வீடுகளையும் புரவிக் கூடங்களையும் வளைத்து ஓடியதானாலும் பெரும்படை ஏதாவதொன்று அதைச் சூழ்ந்து கொண்டால் உள்ளிருக்கும் படை பதினைந்து நாட்களுக்கு மேல் சமாளிக்க முடியாதென்பதை புரிந்து கொண்டாள். ஆனால் அந்தக் கோட்டை மலைச்சரிவில் கட்டப்பட்டிருந்ததாலும், அதைச் சுற்றிலும் காடு அடர்த்தியாயிருந்ததாலும் அதைச் சூழ்வது மட்டும் அதனை சுலபமல்லவென்பதை உணர்த்துக்கொண்ட இளநங்கை, “எப்படியும் இந்தக் கோட்டை அதிக வலுவுள்ளதல்ல. இங்கு எதற்காகப் பாண்டிய மன்னர் உறைகின்றார்? அதிகப்படியாக இங்கிருந்தால் அயிரம் வீரர்களுக்கு மேல் இருக்கமுடியாது. அந்த அயிரம் வீரர்களைக் கொண்டு சேர நாட்டை எப்படி அழிப்பார்?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். மன்னன் அதிகப்படியாகக் கனவு காண்பதாகவே பட்டது. அவளுக்கு. ஆனால், கடைசியில், “கனவு காண்பதற்குத் இருந்த இடம்தான் இது,” என்று மட்டும் சொல்லிக் கொண்டாள் கொற்கைக் கோட்டைக் காவலன் மகள்.

விடுதியின் முகப்பில் நின்ற அவள் கண்கள் முன்பு பெரும் கனவுலகமாகவே அக்கோட்டை விரிந்தது. இரவில் கோட்டையின் மூலைகளிலும் நடுவிலும் தெரிந்த பெரும் பந்தங்கள் காற்றில் அசைந்து அசைந்து எதிரிகளை விழுங்கத்துடிக்கும் தீ நாக்குகளெனத் துடித்தன. அவளிருந்த விடுதிக்குப் பின்புறத்தில் ஓர் அருவி சலசல வென்று ஓடிக்கொண்டிருந்ததுகூடக் கொற்கைக் கொட்டைக் காவலர் மகளின் காதில் விழுந்தது. கொட்டையை அணைத்துப் பிறர் கண்களிலிருந்து பாதுகாப்பது போல் பெரிதாக எழுந்து கோட்டையை நோக்கித் தலைகளைக் கவித்துக் கொண்டிருந்த மரங்களி விருந்த மலர்கள் ஒன்றிரண்டு மட்டும் கண்ணுக்குப் புலனாயின. அப்பொழுதே வானத்தில் உதயமாகிய நான்காம் தேய்பிறை மதி, தனது வெண்மைக் இரணங்களால் அந்தக் கோட்டையை முழுதுமே ஆக்கிரமித்து அக்கோட்டை தன் வமிசத்தைச் சேர்ந்தது என்று உரிமை கொண்டாடியது. சொத்து தனது என் காரணத்தால் அந்த பழுதுபட்டுப் போன கோட்டை விடுதியின் பூச்சு சரிந்த இடங்களையும் தடவிக்கொடுத்து அவற்றுக்கும் மெருகு கொடுத்துக் கொண்டிருந்தது. சுற்றிலுமிருந்த மலைகளும், எதிரே மிக உயர எழுந்து வெண்மதிக் கிரணத்தில் பளபளத்த அகத்தியர் பேருச்சியும் இன நங்கையின் கண்களுக்கு மட்டுமல்லாமல், இதயத்துக்கும் பேரின்பத்தை ஊட்டின.

கொற்கையின் முத்தங்காடியிலும், பொருதையின் கரையிலும் இரவில் நிலவில் உலவும் பழக்கமுள்ள இளநங்கைக்கு அந்தக் காட்சி பேரின்பத்தை அளித்ததானாலும் அவள் பக்கத்தில் நின்றிருந்த முத்துக்குமரியால் அதை அதிகம் ரசிக்க முடியவில்லை. அடுத்து வரப்போகும் போர்களைப் பற்றியும், இந்திரபானுவைப் பற்றியுமே அவன் நினைத்துக் கொண்டிருந்தாள். தந்தையிடம் பேசிய குறுகிய காலத்தில் இந்திரபானு யார் என்னவென்பதைப் பற்றி விசாரிக்கத் துடித்தாளானாலும், அவளுக்கு என்ன காரணத்தாலோ நா எழவில்லை. மறுநாளாவது அதற் கடுத்த நாளாவது தந்தையை அதைப்பற்றித் துணிந்து கேட்டுவிடுவதென்று தீர்மானித்த முத்துக்குமரிக்கு அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

அடுத்த இரண்டு நாட்கள் இளநங்கை அந்தக் கோட்டைப் பகுதியையும் சுற்றுப்புறத்தையும் நன்றாக சுற்றிப் பார்த்தாளானாலும், முத்துக்குமரி அவளுடன் செல்லாமல் தனக்களிக்கப்பட்ட விடுதியிலேயே தங்கினாள் விடுதிக்குப் பின்னால் ஓடிய அருவியில் இளநங்கை நீராட அழைத்தும் அவள் செல்லவில்லை. அவள் மனசு சலனத்தை இளநங்கை அறிந்தேயிருந்தபடியால் முத்துக்குமரியை அவள் வற்புறுத்தவில்லை. இரண்டு நாட்களாக முத்துக்குமரியின் சார்பாக இளநங்கையே முயன்று பார்த்து மன்னனைச் சந்திக்க முடியவில்லை. அவனிருந்த விடுதிக்கு மறுநாள் சென்ற முத்துக்குமரியிடம் மன்னர் அவசர அலுவலாகக் கோட்டையிலிருந்து வெளியே சென்றுவிட்டதாகக் கறினார்கள்.

“எங்கு சென்றார்?” என்று வினவினாள் பாண்டியன் மகள்.

“தெரியாது தேவி, ” என்று பதில் வந்தது வீரர்களிட மிருந்து.

அதனால் வெகுண்டு திரும்பிய முத்துக்குமரிக்கு ஆறுதல் கூறிவிட்டு, அன்று மாலை இளநங்கையே சென்று மன்னன் எங்கு சென்றானென்று சாமர்த்தியமாக விசாரித்தாள். ஆனால் அவள் சாமர்த்தியம் வீரர்களிடம் பலிக்கவில்லை.
“தெரியாது தேவி, ” என்ற பதிலை ஒரே சீராக எல்லா வீரர்களும் கிளிப்பிள்ளை போலவே கூறினார்கள்.

தாங்களிலிருந்த விடுதியிலிருந்து மன்னன் விடுதியைப் பார்ப்பது எளிதாகையால், அதன்மீது கண் வைத்தால் மன்னன் வரும்போதோ, போகும்போதோ கண்டு பிடித்து விடலாமென நினைத்தாள் இளநங்கை ஆனால், அவள் நீண்ட நேரம் இரவில் கூட கண் விழித்துப் பார்த்தாள். சுந்தரபாண்டியன் வருவதோ, போவதோ தெரியவில்லை. கோட்டைக் கதவு அடிக்கடி கிரீச்சிட்டுத் திறந்து இரவிலும், பகலிலும் பலரை உள்ளேயும் வெளியேயும் விட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கிரீச்சுச் சத்தம் கேட்டபோதெல்லாம் இளநங்கை வெளியே ஓடிப்போய்ப் பார்த்தாள். பலர் வந்தார்கள். பலர் போனார்கள். ஆனால் சுந்தரபாண்டியன் மட்டும் அவள் கண்களில் தென்படவில்லை. மூன்று நாட்கள் கழித்தே அவர்களிருவரும் மன்னனைச் சந்திக்க முடிந்தது. அப்பொழுதும் மன்னன் அவர்களிலிருந்த விடுதிக்கு வரவில்லை. தானிருந்த விடுதிக்கே கூப்பிட்டனுப்பினான்.

அவன் விடுதிக்குச் சென்ற இளநங்கையும். முத்துக்குமரியும் முகப்பு மண்டபத்தில், ஆயுதங்கள் நிரம்பிய அதே சூழ்நிலையில் அவனைச் சந்தித்தார்கள். அன்று மன்னன் முகத்தில் சிந்தனை பெரிதும் படர்ந்து கிடந்தது. அத்தனை சிந்தனையிலும் அவன் இதழ்களில் லேசாகப் புன்முறுவல் துளிர்த்திருந்தது.

அவன் அருகில் அழைத்தும்கூடச் சற்றுத் தள்ளியிருந்த மஞ்சத்தில் உட்கார்ந்த முத்துக்குமரியை நோக்கிய சுந்தரபாண்டியன் சிங்கக் கண்களில் சிந்தனை அகன்று சிரிப்பு லேசாக உதிர்ந்தது. “கோபமா குமரி?” என்ற அரசன் தனது மஞ்சத்திலிருந்து எழுந்து இரண்டடி நடந்து அவன் அமர்ந்திருந்த மஞ்சத்தை தனது இருகைகளாலும் சரசர வென்று இழுத்துத் தனது மஞ்சத்தருகில் கொண்டுவந்தான்.

அப்பொழுதும் முத்துக்குமரி பேசவில்லை. மன்னன் இளநங்கையை நோக்கிக் கேட்டான். “இளநங்கை! முத்துக் குமரிக்கு என்ன கோபம்?” என்று.

இளநங்கை மெள்ளப் புன்முறுவல் காட்டினான். “தந்தையைக் காணவில்லையே என்ற கோபம்,” என்றும் கூறினாள்.

“இங்கிருப்பவன் தத்தையல்லவே,” என்றான் சுந்தரபாண்டியன், துன்பப் புன்முறுவலுடன்.

“வேறு யார்?”

“பாண்டிய நாட்டு அரசன்,” என்றான் சுந்தர பாண்டியன்.

இளநங்கையின் கண்கள் மன்னனைக் கூர்ந்து நோக்கின. அவன் உண்மையைச் சொல்வதாகவே தோன்றியது அவளுக்கு, இருப்பினும் கேட்டாள் இளநங்கை, “அரசனுக்கும் குடும்பம் உண்டல்லவா? மனைவி மக்கள் உண்டல்லவா? பாசம் உண்டல்லவா? என்று .

சுந்தரபாண்டியனின் சிங்க விழிகளும் அவளைப் பதி லுக்குக் கூர்ந்து நோக்கின. அவன் பதிலும் திட்டவட்டமாகவும், விரிவாகவும் வந்தது. “உண்டு இளநங்கை! குடும்பமல்ல குடும்பங்கள் உண்டு, மனைவிமார்கள் அதிகமில்லையானாலும், மக்கள் நிரம்ப உண்டு. பாண்டிய நாட்டிலுள்ள அத்தனை குடும்பங்களும், என் குடும்பங்கள் அத்தனை மக்களும் என் மக்கள். அவர்களுக்கு உணவு, உடை, பாதுகாப்பு அத்தனையும் அளிக்கும் தத்தை நான், எனக்கென்று தனிக்குடும்பம் கிடையாது. நாட்டிலுள்ள மக்களுக்கு உழைக்கும் அளவுக்கு அரண்மனை தலனுக்கும் உழைக்க முடியும். ஆனால் இப்பொழுது அது சாத்தியமில்லை,” என்ற சுந்தரபாண்டியன், “உங்களுக்கு இங்கு வாதி ஏதும் குறைவில்லையே?” என்று வினவினான்.

“இல்லை,” என்றாள் இளநங்கை. அதற்குமேல் மன்னன் முன்பு ஏதும் பேசச் சக்தியற்றான் இளநங்கை.

மன்னனே அவள் கருத்தை அறிந்திருக்க வேண்டும். ஆகவே கேட்டான் இளநங்கையை நோக்கி, “ஏதோ என்னைக் கேட்க விருப்பம் போலிருக்கிறது உங்களுக்கு என்று.

இளதங்கை சற்றை துணிவு கொண்டு, “ஆம், பல விஷயங்களைப்பற்றிக் கேட்கவேண்டும்” என்றாள்.

அதற்கு மன்னனிடமிருந்து வந்த பதில் விசித்திரமாய் இருந்தது. “இன்னும் இரண்டே நான் பொறுக்கமுடியுமா? என்று வினவினான் மன்னன்.

“முடியும்” என்றாள் இளநங்கை.

“இன்றிலிருந்து முன்றாம் நாள் மாலை கதிரவன் மலை வாயிலில் வீழ்ந்ததும் உங்கள் சந்தேகங்கள் அனைத்தும் நீங்கும், அத்தனைக்கும் பதில் கிடைக்கும், என்ற மன்னன், காவலரை விளித்து உணவு கொண்டுவரச் சொல்லி அவர்களுடன் அருந்தினான்.

பிறகு அவர்கள் விடைப் பெற்றுக் கொண்டபோது மட்டும் மகளின் தோன்மீது கையை வைத்தவண்ணம் வாயிற்படி வரையில் நடந்துவந்து, “குமரி!” என்றான ஆசையுடன்.

அந்தக் குமரியென்ற வார்த்தையைச் சொன்னபோது, அவன் கண்களில் பேரானந்தம் விரிந்ததைக் கண்ட இள நங்கை, உண்மையில் மகனிடம் மன்னனுக்கு மிகுந்த ஆசை இருப்பதாக நினைத்தான். அதைப்பற்றி மீண்டும் தங்கள் விடுதியில் பிரஸ்தாபித்து, “குமரி என்று கூறப்பிடும் போது உன்னை எத்தனை ஆசையாகக் கூப்பிடுகிறார் தந்தை என்று முத்துக்குமரியிடம் கூறினாள்.

“உனக்கு மன்னரைப் புரியாது!” என்றாள் முத்துக் குமரி கோபத்துடன்.

“இதில் புரியாததற்கு என்ன இருக்கிறது?”

“அவர் குமரி என்னும்போது குமரிமுனையை நினைக்கிறார். முத்து என்னும்போது கொற்கை முத்தை நினைக்கிறார். அந்த இரண்டையும் இணைத்துத்தான் எனக்குப் பெயரையும் சூட்டியிருக்கிறார். அந்த இரண்டையும் நினைத்துத்தான் ஆனந்தப்படுகிறார், என்றாள் முத்துக்குமரி,

இளநங்கை வியப்பின் எல்லையை அடைந்தான் மன்னன் வேறு, பாண்டியநாடு வேறு அல்ல என்பதை உணர்ந்தாள் அவள். ஆகவே தங்கள் கேள்விக்கு மன்னன் மூன்றாவது நாள் மாலையில் பதில் சொல்வதாகக் கூறினானே? எப்படிக் கூறுவான், என்ன கூதுவான என்றும் எண்ணி வியந்தாள் அவள்.

மூன்றாம் நாள் மாலை பதில் கிடைத்தது குறித்து நேரத்தில், மன்னனிடமிருந்தல்ல. மற்றொருவன் பதிலைக் கொண்டுவந்தான். அவன் பதிலைக் கொண்டு வந்த சமயது! தில் கோட்டைக்கப்பால் தொலைவிலிருந்து பெரும் முரசுகள் சப்தித்தன. அடுத்த அரை ஜாமத்தில் கோட்டைக் கதவு திறக்கப்பட்டது; புரவிகள் பல பேரொலி கினப்பில் கொண்டு கோட்டைக்குள் பாய்ந்து வந்தன.

Previous articleRaja Muthirai Part 1 Ch24 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch26 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here