Home Historical Novel Raja Muthirai Part 1 Ch26 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch26 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

78
0
Raja Muthirai Part 1 Ch26 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch26 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch26 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 26 புரவி சோதனை, இளவரசி வேதனை

Raja Muthirai Part 1 Ch26 |Raja Muthirai Part1|TamilNovel.in

பாண்டிய நாட்டு மக்கள் குடும்பங்களுக்கும் தன் சொந்தக் குடும்பத்துக்கும் எந்த விதமான வித்தியாசத்தையும் கற்பிக்காதவனும், சமநோக்குள்ளவனும், எம்மண்டலமும் கொண்டருளப் போகின்றவனுமான சுந்தரபாண்டியத் தேவனை இரண்டாம் முறையாகச் சந்தித்துப் பேசியதிலிருந்து சரியாக மூன்றாவது நாள் மாலை இளநங்கையின் பல கேள்விகளுக்கு விடை கிடைத்ததானாலும், அந்த விடை அத்தகைய மனிதன் மூலம் அத்தகைய சூழ்நிலையில் இடைக்குமென்பதை எதிர்பார்க்கவேயில்லை. கோட்டைக் காவலன் மகன் மலைச்சரிவிலிருந்த விடுதித் தாழ்வரையிலிருந்து வழக்கம் போல அன்றும் அவள் சுற்றிலும் எழுத்திருந்த மலைப்பிராந்திய எழிலைப் பருகிக்கொண்டிருந்தாள். கிருஷ்ணபட்சம் நன்றாக ஏறி விட்டதன் விளைவாகச் சுற்றிலுமிருந்த மலையெழுச்சிகள் கன்னங்கரேலேன்றும், பயங்கரமாகவும் காட்சியளித்தன. சந்திரனில்லாத வானமும் தான் மலைகளின் கருமைக்குக் குறையவில்லை யென்பதைச் சுட்டிக்காட்டக் கருமை தட்ட முயன்றும் நட்சத்திரங்கள் பல ஒளி விட்டதன் காரணமாக அந்த முயற்சியில் தோல்வியே அடைந்து கொண்டிருந்தது. அதன் தோல்வியைக் குறைத்துக் காட்டவோ என்னவோ அடிக்கடி இரண்டொரு மேகங்கள் குறுக்கே ஓடிச் சில நட்சத்திரங்களை மறைத்தன. இன்னும் சில மேகங்கள் மலையுச்சியில் தொக்கி தின்று விண்ணை வேடிக்கை பார்த்தன.

சுற்றிலும் இருள் விளைவித்த பயங்கரச் சூழ் நிலையைச் சிறிதும் லட்சியம் செய்யாத அந்தச் சிறுகோட்டை, பந்தங்கள் பலவற்றையும் விளக்குகள் பலவற்றையும் தாங்கிக்கொண்டு, எந்தச் சூழ்நிலையிலும் அச்சமெய்தாத சுந்தரபாண்டியனைப் போலவே ஜொலித்துக் கொண்டிருந்தது. மாலை நெருங்கியதுமே கொளுத்தப்பட்ட பந்தங்கள் இரவு மூண்டதும் அதிக வெளிச்சத்தைப் பெற்றதைக் கண்ட இளநங்கை, இந்த கோட்டையை அதோ அந்த மலையுச்சியிலிருந்து பார்த்தால் இதுவே இந்த மலைகளுக்கு நடுவே ஒரு தனி விளக்குப்போல் தெரியுமே,” என்று அந்தக் காட்சியைத் தன் அகக்கண்களால் கண்டாள். இளவேனிற் காலத்தின் அந்த இரவு, மலை சூழ்ந்த அந்தப் பகுதியில் சின்னஞ்சிறு தென்றலையும் கிளப்பிப் பேரின்பத்தை அளித்துக் கொண்டிருந்ததை அனுபவித்த இளநங்கை, தானிருக்கும் நிலை, நாட்டு நிலை, அனைத்தையுமே மறந்து இன்பப் பெருமூச்சு விட்டாள். அந்த இன்பப் பெருமூச்சை அவள் இருமுறை விட்டு வாங்கிய. தேரத்தில் எங்கிருந்தோ முரசுகள் மெள்ள முழங்கின.

முதலில் ஒற்றை முரசு கிளப்பிய மெல்லிய ஒலியுடன் வேறு மூன்று முரசுகள் ஒலியும் ஒவ்வொன்றாகக் கிளம்பிச் சேர்ந்துகொண்டன. முதலில் ஒற்றை முரசும் பிறகு இரண்டு முரசுகளும் அடுத்தபடி மூன்றும் கடைசியாக நான்கு முரசுகளும் ஒலிக்க முற்பட்டதன்றி, ஒலியில்கூட அத்தகைய தொடர்ச்சியான ஓர் அபிவிருத்தி இருக்கவே செய்தது. ஆரம்பத்தில் ஒலிகள் மெல்ல மெல்லக் கேட்டாலும் பிறகு அவை பெரிதும் கனத்து அந்த மலைப்பகுதியை ஊடுருவி வந்தன. அந்த விந்தையைக் கண்ட இளநங்கை பெரிதும் வியந்தாள். அவை கொட்டுத்தளத்தின் முரசுகள் என்பதில் அவளுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் இரு மலை எழுச்சிகளுக்கு அப்பாலிருக்கும் கொட்டுந்தனமுரசுகள் எப்படி அத்தனை திட்டமாக, பெரிதாக, விவரமாக அவ்வளவு தூரத்துக்குக் கேட்கின்றன என்பது மட்டும் புரியவில்லை அவளுக்கு, ஆனால் ஒன்று மட்டும் புரிந்து கொண்டாள் கோட்டைக் காவலன் மகள். கொட்டுந்தள முரசுகனை அமைத்தவன் எவனானாலும் அவன் மலைகளின் நுணுக்கங்களையும், பூதத்துவ சாத்திரத்தையும், ஒலிவீச்சு நுட்பங்களையும் உணர்ந்தவனாயிருக்க வேண்டு மென்ற உண்மைதான் அது. தமிழர்கள் எப்படி அந்த நுட்பக் கலைகளில் சிறந்து விளங்குகிறார்களென்பதைக் கண்டும் நினைத்தும் பரவசப்பட்ட இளநங்கை, தனது இனத்தைப் பற்றிப் பெருமிதம் கொண்டாள்.

அந்தப் பெருமிதத்துக்குச் சுருதி கூட்டுவதுபோல் கொட்டுத்தளமுரசுகளின் ஒலி வரவரப் பலப்பட்டது. அந்த ஒலி வந்த திசையில் கண்களைத் திருப்பி தின்ற இளநங்கை திடீரென்று அந்தத் திசையில் வேறு ஒர் ஒலியும் கேட்டதைக் கண்டு திகைப்புற்று தின்ற இடத்திலேயே தின்று விட்டாள். சில விநாடிகள் நின்றதும் அந்த ஒலி பலப்படவே, “குமரி! இங்கு வா! இங்கு வா,” என்று உள்ளேயிருந்த முத்துக்குமரியையும் வெளியே அழைத்தாள். இளநங்கை அப்படிப் பதற்றத்துடன் அழைத்ததால், உள்ளேயிருந்து விடுவிடுவென்று வெனித் தாழ்வரைக்கு வந்த முத்துக்குமரி, “என்ன இளநங்கை! ஏன் அழைத்தாய்?” என்று வினவினாள்.

இளநங்கையின் கண்கள் எச்சரிக்கையுடன் அவளை நோக்கித் திரும்பின. “உஷ்! சத்தம் போடாதே, உற்றுக் கேள்,” என்றாள்.

முத்துக்குமரியின் செவிகளில் அப்பொழுது முரசொலிகள் நன்றாக விழுந்ததால், “உற்று எதற்காகக் கேட்கவேண்டும், முரசொலிதான் நன்றாகக் கேட்கிறதே,” என்றாள் இளநங்கையை நோக்கி.

“முரசொலிகளையல்ல நான் சொல்வது. அதோ அந்த் திசையில் சுவனத்தைத் திருப்பிக் கேள்,” என்ற இளநங்கை, சொன்னதோடு நில்லாமல், அவள் தோளைப் படித்தும் அந்தத் திசையை நோக்கித் திருப்பினாள்.

முத்துக்குமரி அவள் சுட்டிக் காட்டிய மலைப்பகுதியை நோக்கிக்கொண்டு நின்றிருந்தாள். சில விநாடிகளில் அவன் காதிலும் அந்த ஒலி விழவே அவள் வியப்புடன் இளநங்கையை நோக்கித் திரும்பி, “ஆமாம் இளநங்கை! அதே ஒலிதான்,” என்று கூறினாள் குரலிலும் வியப்பு மிதமிஞ்சி ஒலிக்க.

அவள் அப்படிச் சொல்லி நின்ற சமயத்திலும் பிறகு கொட்டுந்தள விடுதிக்குப் பின்புறமும் கேட்ட அதே புரவியின் குளம்பொலி திட்டமாகவும், டக்டக்’ என்று ஒரே சீராகவும் கேட்கலாயிற்று. அதிலேயே மனதையும் காதையும் கொடுத்து நின்ற மங்கையரிருவரும் அந்த ஒலி வரவரக் கிட்டே நெருங்குவதையும், துரிதப்பட்டு விட்டதையும் உணர்ந்து கொண்டதால், அந்தக் குதிரையை நடத்து பவன் யாராயிருந்தாலும், அவன் புரவி வேகத்தை அதிகப் படுத்தி விட்டானென்பதையும் அத்தகைய இருட்டில் மலைக்காட்டுப் பாதையில் குதிரையைச் செலுத்தக் கூடியவன் அசாதாரண மனிதனாக இருக்க வேண்டுமென் பதையும் தீர்மானித்துக் கொண்டார்கள்.

அவர்கள் அதைப்பற்றிச் சிந்தனைகளைப் பலபடி எழுப்பிக் கொண்டிருந்த சமயத்தில், அந்தப் புரவியின் குளம்படி வேறு பல புரவிக் குளம்படிகளுடன் கலந்து விட்டதை உணர்ந்தார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் புரவிகளின் குளம்பொலிகள் மிக வலுத்து விட்டதன்றி அத்தனை இருட்டிலும் மலைப்பாதையில் புரவிகள் பல பாய்ந்து வருவதும் புலனாயிற்று. அடுத்த சில நிமிடங்களில் கோட்டைக் கதவுகள் பலமாகத் திறக்கப் படப் புரவிகள் பல வெகு வேகத்துடன் கோட்டைக்குள் பாய்ந்து வந்தன. அதிலிருந்த தலையாய புரவி மன்னனின் சாம்பல் நிறப் புரவிதானென்பதை உணர்ந்த மங்கையரிருவரும் பிரமித்தார்களென்றால், அதில் வந்த வீரனைக் கண்டதும் இருவரும் பேரதிர்ச்சி மட்டுமல்ல பெருங்குழப்பமும் அடைந்தனர். அந்தப் புரவி மீது ஆரோகணித்து, மற்ற வீரர்களுக்கெல்லாம் முன்பாகக் காற்றைப்போல் கோட்டைக்குள் பாய்ந்து வந்த வாலிபனின் முகத்தை முதலில் இளநங்கையே கண்டாள். கோட்டைப் பந்தங்க ளொன்றின் வெளிச்சம் அந்த வாலிபனின் முகத்தில் விழவே முத்துக்குமரியின் கையைச் சற்று வலிக்கவே பிடித்த இளநங்கை, “குமரி! அதோ பார்! அதோ பார்! பார்! பார்” என்று கையால் அவனைச் சுட்டிக் காட்டினாள்.

முத்துக்குமரியின் அழகிய விழிகள் அவனை உற்று நோக்கின. விரிந்தது வியப்பா, மகிழ்ச்சியோ, வெறுப்பா என்று தீர்மானிக்க முடியாத உணர்ச்சிச் சாயையொன்று அவள் முகத்தில் விரிந்தது. புரவியிலிருந்து கீழே அநாயாசமாகக் குதித்த அந்த வாலிபன், புரவிக் கடிவாளக் கயிறுகளைப் பக்கத்திலிருந்த வீரனிடம் எறிந்துவிட்டுச் சுற்றுமுற்றும் ஒரு விநாடி நோக்கினான். மலைச் சரிவிலிருந்த மங்கையர் மீது அவன் திருஷ்டி விழவே, விடுவிடு என்று அந்த விடுதியை நோக்கி அதி உல்லாசமாக நடந்தும் வந்தான். அவன் வருகையைக் கவனித்த முத்துக்குமரி சட்டென்று தன் உடலைத் திருப்பிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள். துரிதமாக விடுதிக்கும் கோட்டை நடுப்பகுதிக்கும் உள்ள இடைவெளியைத் தாண்டி விடுதியின் படிகளில் ஏறி வந்த வாலிபனை இனதங்கையே எதிர்கொண்டாள். “வாருங்கள்! இப்பொழுது எங்களை எங்கு கொண்டு செல்ல வந்திருக்கிறீர்கள்?” என்று வினவினாள் சினத்துடன்.

இந்திரபானுவின் விளையாட்டு முகத்தின் கண்களும் விளையாட்டு நகைப்பை உதிர்த்தன. ஒரு விநாடி இனநங்கையையும் நோக்கி உட்புறத்தையும் நோக்கிவிட்டு, “முறை சரிதான்,” என்றும் கூறி விஷமப் புன்முறுவலும் செய்தான்.

இளநங்கைக்கு அவன் விளையாட்டு வேப்பங்காயா விரும்பிய அவள், “எந்த முறையைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று உணர்ச்சிகளை உள்ளடக்கிக்கொண்டு வினவினாள். கொட்டுந்தளத்திலேயே அவன் குற்றமற்றவனென்று நினைத்த இளதங்கைக்கு, அப்பொழுதும் அந்த நினைப்பு மாறாததால் அவனைத் தாழ்வரையின் கட்டையில் உட்காரும்படி சைகை செய்து, தானும் ஒருபுறம் அமர்ந்து தூணொன்றில் சாய்ந்துகொண்டாள்.

இந்திரபானு உட்காராமல் அவளை நோக்கி நின்று கொண்டே சொன்னான், “அரண்மனை முறையைச் சொன்னேன்,” என்று.

“அரண்மனை முறையா எனக்கு விளங்கவில்லை. என்றாள் இளநங்கை,
“அரண்மனையில் அரசகுமரிகளைப் பார்ப்பது பெரும் கஷ்டம். அப்படிப் பார்க்க வாய்ப்பிருந்தாலும், முதலில் அவர்கள் தோழிகளைச் சந்தித்து அவர்கள் அனுமதி பெற்றுப் பிறகுதான் பார்க்கமுடியும்,” என்று கூறிய இந்திரபானு மெல்ல நகைத்தான்.

அவன் துடுக்குத்தனம் இளநங்கையைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. முத்துக்குமரி உள்ளே சென்று விட்டதையே அவன் குறிப்பிடுகிறானென்பதைப் புரிந்துகொண்டாலும், புரியாதது போல் பாசாங்கு செய்த இளநங்கை, “விளக்கமாகச் சொல்லுங்கள்,” என்று உத்தரவிட்டாள்.

புரவியிலிருந்து இறங்கியபோது, இந்தத் தாழ்வரையில் தங்களை மட்டுமின்றிப் பாண்டிய குமாரியையும் பார்த்தேன். நான் வருவதற்குள் உள்ளே மறைந்துவிட்டார்கள். இனி நீங்கள் அனுமதித்தால்தான் நான் அவர்களைப் பார்க்கமுடியும்,” என்றான் இந்திரபானு.

அவன் குரலில் பெரும் விஷமம் இருந்ததையும் மேலுக்கு அதில் மரியாதை தொனித்தாலும், உண்மையில் உள்ளூர அவன் தங்களைப் பார்த்து நகைக்கிறானென்பதையும் புரிந்துகொண்ட இளநங்கை, “அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்கள் வீரரே! உங்களுக்கு அரசகுமாரியைப் பார்க்க அவசியம் இருக்கிறதா?” என்று வினவினாள் உஷ்ணத்துடன்.

“இல்லை, எந்த அவசியமுமில்லை. உங்களைத்தான் பார்க்கச் சொன்னார் மன்னர்,” என்றான் இந்திரபானு.

இளநங்கையின் விழிகளில் பெருவியப்பு விரிந்தது. “என்ன மன்னரா!” என்று வினவினான், வியப்பு குரல்லும் ஒலிக்க.

“ஆம்!” இந்திரபானு விளையாட்டாகவே பதில் சொன்னான்.

“உண்மையாக மன்னரைச் சந்தித்தீர்களா?” என்று வினவினாள் இளநங்கை.

“சந்திக்காவிட்டால் அந்தப் புரவி எனக்கேது?” என்று கேட்டான் இந்திரபானு, சற்றுத் தூரத்தில் வீரனொருவன் பிணைத்திருந்த சாம்பல் நிறப் புரவியைச் சுட்டிக்காட்டி.

தானும் முத்துக்குமரியும் வந்த நாளன்று சாம்பல் நிறப்புரவி கோட்டையிலிருந்தது நினைவுக்கு வரவே, ஆம்! ஆம் இந்தப் புரவி இங்குதானிருந்தது.” என்றும் கூறினாள்.

இந்திரபானுவின் கண்கள் திடீரெனப் பளிச்சிட்டன. “அப்படி சகஜமாக நினைக்கவேண்டாம் தேவி. இதன்மீது எல்லோரும் ஆரோகணிக்க முடியாது. மன்னர், இளவரசர் நான் மூவர்தான் இதன்மீது அமர முடியும். அதுவும் புரவியை எனக்கு இளவரசர் அறிமுகப்படுத்தியிருப்பதால் தான் நான் ஏறவும் அது அனுமதிக்கிறது” என்ற இந்திரபானு பெருமையுடன்.

“புரவி அனுமதிக்கிறதா?” என்று கேட்டான் இளநங்கை.

“ஆம் தேவி! அது அரபு நாட்டு சாதிப் புரவி. ஒரே மனிதனுக்குத்தான் அடிமையாயிருக்கும். அவன் அனுமந்த தால்தான் பிறரை ஏறவிடும். முதலில் மன்னர் இதை ஆண்டுவந்தார். பிறகு இளவரசருக்கு அறிமுகப்படுத்தப் பரிசாகக் கொடுத்தார். இளவரசர் எனக்கு அறிமுகப்படுத்தினார்” என்றான் இந்திரபானு. அத்துடன் மேலும் சொன்னான். இல்லையெனில், கொட்டுத்தளத்தில் நானும் மன்னரும் இதை மாறி மாறி உபயோகித்திருக்க முடியாது. உங்களை வீரரவியின் வீரர்கள் சிறை செய்து வந்தபோது உங்களுக்குத் தீங்கு எதுவும் நேராதிருக்க உங்கள் மீது ஒரு கண்ணை வைத்துக்கொண்டு மன்னர் மலைக்காட்டில் வந்திருக்க முடியாது. பிறகு உங்களை விடுதியின் இரவில் சந்தித்து, தான் ஓலை வாங்கியிருக்கவும் முடியாது.”

இதைக் கேட்ட இளநங்கை நீண்ட நேரம் அவனைப் பிரமித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு சொன்னாள் “நீங்கள் சொல்வதெல்லாம் விசித்திரமாயிருக்கிறது. வீரரே! உங்கள் செய்கைகளும் விசித்திரமாயிருக்கின்றன உங்களை இளவரசருடன் முதலில் பார்க்கிறேன். பிறகு வீரரவியுடன் பார்க்கிறேன். இப்பொழுது மன்னர் கோட்டையில் பார்க்கிறேன். நீங்கள் நண்பரா, துரோகியா? நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள்? ஏதும் புரியவில்லை எனக்கு” என்று.

இந்திரபானுவின் விளையாட்டு முகத்தில் அனுதாபம் லேசாகத் துளிர்விட்டது. “என்னைத் துரோகியென்று இளவரசி சொன்னது உங்களுக்கு நினைப்பில்லையா?” என்று வினவினான் கடைசியில்.

“ஆம் நினைப்பிருக்கிறது.”

“அதுதான் உண்மை.

“எப்படி?”

“நான் கொற்கையில் புறப்படும்போது சேர மன்னனுக்குத் துரோகி, கொட்டுத்தளம் வந்தவுடன் பாண்டிய நாட்டுக்குத் துரோகி. இப்பொழுது கொட்டுந்தளம் பாண்டியர் வசமாகிவிட்டதால், தான் மீண்டும் சேரனுக்கே துரோகியாகிவிட்டேன்” என்றான் இந்திரபானு.

இளநங்கை அவனைக் கூர்ந்து நோக்கினாள். சந்தர்ப்பவாதியென்று ஒரு வீரன் தன்னைச் சொல்லிக் கொள்வது பெருவியப்பாயிருந்தது அவளுக்கு. “சமயோசிதப்படி நடப்பீர்களா நீங்கள்?” என்று வினவவும் செய்தாள் அவள்.

“முன்னேற இஷ்டப்படுபவனுக்கு அதுதான் முக்கிய லட்சணம் தேவி,” என்றான் இந்திரபானு. அவன் விளையாட்டு முகத்தில் எந்தவித வெட்கமோ, பயமோ தெரியவில்லை, இதைச் சொன்னபோது.

“பல விஷயங்களை நான் உங்களைக் கேட்கவேண்டி இருக்கிறது” என்று துவங்கிய இளநங்கையை இடையில் வெட்டிய இந்திரபானு “தேவி நாலைந்து நாழிகைக்கு என்னை மன்னியுங்கள். நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருக்கிறேன், நீராடி வேற்றுடை உடுத்து வருகிறேன்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டு சென்றான்.

அவன் களைத்திருக்கிறானென்பதை அவன் முகத்தில் கொட்டிய வியர்வையிலிருந்தே புரிந்து கொண்ட இளநங்கை அவனுக்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை. அவன் போக்கு ஏதும் அவளுக்குப் புரியவில்லையே தவிர அவன் துரோகியாகப் புலப்படவில்லை அவளுக்கு. ஆனால் முத்துக்குமரி அப்படி நினைக்கவில்லை. “இங்கு பாரையோ காட்டிக் கொடுக்கத்தான் வந்திருக்கிறார் இவர். இவர் சொன்னதெல்லாம் பொய்!” என்றாள் இளநங்கை பிடம்.

“அப்படியா!” என்று கேட்டான் இளநங்கை, முத்துக் குமரியின் ஆவேசத்தைத் தடுக்கமுடியாமல்.

“ஆம். புரவியைப்பற்றிச் சொன்னதிலிருந்து அத்தனை யும் பொய். புரவியை அறிமுகம் செய்துவைக்க வேண்டுமாம். மூன்று பேர்தான் ஏற முடியுமாம்,” என்று ஏறிய முத்துக்குமரி மேலே எதுவும் பேசவில்லை.

நாழிகைகள் ஓடின.

இந்திரபானு சொன்னபடி ஐந்து நாழிகையில் வர வில்லை.

“நான் என்ன சொன்னேன்? அவர் வர மாட்டார். சொல்வதெல்லாம் பொய். இங்கு வா. முதலில் பொய்யை திரூபிக்கிறேன்,” என்று இளநங்கையின் கையைப் பிடித்து இழுத்து வந்து வெளித்தாழ்வரையில் நிற்கவைத்தாள் முத்துக்குமாரி.

“இங்கேயே இரு இளநங்கை. அந்த மூன்று பேரைத் தவிர யாரும் ஏற முடியாத புரவியை நான் ஏறிக் காட்டு இறேன். இந்தக் கோட்டையின் நடுவிடத்தில் எத்தனை முறை வலம் வருகிறேன் பார்” என்று கூறிவிட்டு விடுவிடு என்று படிகளில் இறங்கி ஓடினாள்.
தூரத்தில் வெளியிடத்துப் புல்லில் கட்டப்பட்டிருந்த சாம்பல் நிறப் புரவியை நடுவெளிக்கு இழுத்து வந்தாள் பிறகு கடிவாளக் கயிற்றைப் பிடித்து ஒரே தாவில் அதன் மீது ஏறினாள். அவ்வளவுதான் அந்தப் புரவி திடீரென்ற துள்ளி எழுந்தது. உடலை இருமுறை பேயாட்டமாக ஆட்டியது.

இருமுறை பெரிதாகக் கனைத்து, மூன்றாம் முறை ஆகாயத்தை நோக்கித் துள்ளி விர்ரென்று சுழன்று உடலை ஒருமுறை உலுக்கவே, முத்துக்குமரி பலமாக அதன் முதும் லிருந்து வீசியெறியப்பட்டாள்.

அது இருமுறை சுழன்றபோது பயத்தின் வசப்பட்ட அவள் தன்னைக் குதிரை விசிறியதும் தரையைத் தொட்டால் தனது எலும்புகளின் இரண்டு மூன்றாவது உடைந்துபோகும் என்று தீர்மானித்து அச்சத்துடன் புரவி முதுகிலிருந்து தரையை நோக்கிப் பறந்தாள்.

ஆனால், அடுத்த வினாடி அவளை இரு வலிய கரங்கள் தாங்கிக்கொண்டன. இந்திரபானுவின் வினையாட்டுவிழிகள் அவள் விழிகளைச் சந்திக்கவும் செய்தன.

மன்னனைச் சேர்ந்த யாரையும் சோதிக்க முயல்வது ஆபத்து தேவி” என்ற அவன் சொற்கள் அவளை நோக்கி குற்றம் சாட்டின. அப்படி குற்றம் சாட்டிய பின்பும் திமித முயன்ற இளவரசியை அசையவிடாமல், கேவலம் ஆட்டுக் குட்டியைத் தூக்குவது போல் தூக்கிக்கொண்டு மலைச் சரிவிலிருந்து விடுதியை நோக்கி வேகமாக நடந்தான் அந்த விளையாட்டுப் பிள்ளை.

Previous articleRaja Muthirai Part 1 Ch25 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch27 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here