Home Historical Novel Raja Muthirai Part 1 Ch3 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch3 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

74
0
Raja Muthirai Part 1 Ch3 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch3 |Raja Muthirai Part 1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch3 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 3 அவன் அளித்த பொருள்

Raja Muthirai Part 1 Ch3 |Raja Muthirai Part 1|TamilNovel.in

மரங்களின் இருளில் மறைந்து நின்ற கொடியவர்களைப் பற்றியோ, அவர்கள் விளைவிக்கவிருந்த கொடுமையைப் பற்றியோ, கடுகளவும் அறியாமல் நிதான நடை போட்டு வந்து கொண்டிருந்த அந்த வாலிபனுக்கு, ஏற்படவிருந்த விபரீதத்தை தினைத்துக கூவ முயன்ற கொற்கைக் கோட்டைக் காவலன் மகளின் வாயையும், பின்னாலிருந்தவன் கடுமையுடன் மூடியதன்றி, அவளைத் தோப்பின் விளிம்பிலிருந்து பின்னுக்கும் இழுத்துச் சென்றான். கால்களை மாற்றி மாற்றிச் சுமார் பத்துப் பதினைத்து அடிகள் வைத்து மரக்கூட்டத்தின் காரிருளுக்கு வந்தவுடன், இனநங்கையை நிறுத்திய அந்த மனிதன் அவள் வாயிலிருந்தும் கழுத்திலிருந்தும் கைகளை எடுக்காமலே, “இன்னொரு முறை நீ கூவமுயன்றால் அவன் பிணத்துடன் உன் பிணமும் இந்தத் தோப்பில் கிடக்கும்; நினைப்பில் வைத்துக்கொள்!” என்று அவள் காதுக்கருகில் மெல்லவும் கடுமையுடன் சொல்லிவிட்டு, வாயிலிருந்த கையை அகற்றினாலும் அவள் கழுத்தைச் சுற்றிய கையை மட்டும் அழுத்தி வைத்துக்கொண்டான். “இனி அவள் கைகளை விட்டு விடலாம். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்த மற்ற இருவருக்கும் அவன் உத்தரவிடவே, அவர்கள் இருவரும் அவள் கைகளுக்கு விடுதலையளித்துச் சற்று விலகி நின்றார்கள். அவள் கழுத்தை அழுத்திப் பிடித்த வண்ணம் பின்னால் நின்ற மனிதன் மீண்டும் சொன்னான் இளநங்கையிடம், “சொல்லதை நன்றாகக் கேட்டுக்கொள். உன்னை இப்பொழுது விடுதலை செய்யப்போகிறேன். நீ மெல்ல நடந்து தோப்பின் விளிம்பைத் தாண்டி, கோட்டைக்கும் தோப்புக்குமுள்ள இடைவெளி மேட்டில் முழு நிலவில் கோட்டையைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிரு உன்னைத் தொடர்ந்து வருபவன் உன்மீதே கண்ணாகத் தோப்பின் எல்லையை அணுக முயல்வான். எல்லையை அணுக முயல்வானே தவிர எல்லையைத் தாண்ட மாட்டான். அவனைத் தோப்புக்குள்ளேயே நாங்கள் முடித்ததும், இரண்டு வாட்கள் ஒன்றுடன் ஒன்று தட்டப்படும். அந்த ஒலி கேட்டதும் நீ கோட்டையை நோக்கிச் சென்று விடலாம்” என்று இதைச் சொல்லிவிட்டு அவள் கழுத்திலிருந்த கையையும் எடுத்த அந்த மனிதன். “சரி நட. தோப்பைத் தாண்டியதும் சொன்னபடி செய். நான் சொன்னதில் சிறிது நீ தவறினாலும், உன்னைத் தொடர்த்து வருபவனை எச்சரிக்கச் சிறிது அசைந்தாலும், உன் உயிர் அடுத்த வினாடி பெண்கள் மகிழ்ந்து பார்க்கும் சந்திரன் இருக்கும் வானை நோக்கிப் பறந்துவிடும். முழு நிலவு என்னதான் அழகுடையதானாலும் முதுகில் குறுவான் பாய்ந்து குருதியோடிக் கிடக்கும் பெண்ணை அழகாகக் காட்டாது, புரிகிறதா?” என்று எச்சரித்துத் தனது நகைச்சுவையை நினைத்துச் சிறிது மெல்லவும் நகைத்தான். அது மட்டுமின்றி அவளை நடக்கச் செய்யத் தோப்பின் விளிம்பை நோக்கித் தள்ளியும்லிட்டான்.

அப்படித் திடீரென்று அவன் தள்ளவே இளநங்கையின் முத்துப் பரல்கள் உள்ள காற்சிலம்பு சற்றே சுவசுவவெனச் சப்தித்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும் அவள் உள்ளத்தில் ஏதோ புது எண்ணம் உதித்ததை முகம் காட்டியதானாலும், அதை எந்தவிதத்திலும் மறைந்திருந்த கொடியவர்களுக்குக் காட்டாமலே மெல்லடி எடுத்து வைத்த கோட்டைக் காவலனின் மகள் தோட்டத்தின் விளிம்பை தாடிச்சென்றாள். விளிம்பைத் தாண்டி முழுநிலவு காய்ந்து கொண்டிருந்த மேட்டு நிலத்துக்கு வந்ததும், கொடியவர் தலைவன் கூறியபடி நிற்கவும் செய்தாள் கோட்டைக்கெதிரேயிருந்த அந்த மேட்டு நிலத்தில் மேலிருந்து இறங்கிய மேனகைபோல் அழகெல்லாம் பொலிவுற முழுநிலவில் நின்ற இளநங்கையின் புறக்கண்கள் கோட்டை முன்னிலையில் உலாவிய முழு நிலவில் நின்ற இளநங்கையின் புறக்கண்கள் கோட்டை முன்னிலையில் உலாவிய பந்தங்களையும், அகக்கண்கள் பின்புறத் தோப்பில் நிகழவிருந்த கொடிய செயலையும் கண்டு கொண்டிருந்தாலும், பிற்பகுதியில் எந்த விநாடியிலும் ஏற்படவிருந்த திகழ்ச்சியைப் பற்றியே மனம் எண்ணித் துடித்துக்கொண்டிருந்தது. அவள் அந்த நிலத்தில், திலவில், நின்ற விநாடிகள் அதிகமில்லையா னாலும், அந்த விநாடி ஒவ்வொன்றும் அவளுக்குப் பெரும் வேதனையை அளித்துக் கொண்டிருந்ததால் அவள் சத்தம் வெகு வேகமாக சுழன்றதன்றி இருதயமும் அளவுக்கு மீறிப் ‘படக்படக்’கென்று அடித்துக்கொண்டது. இப்படி, விநாடிகள் சில ஓடிய உடனேயே, திடீரென்று குனிந்து நோக்கிய இளநங்கை கால்களைத் தடவிவிட்டு ஒரு காலை நிலத்தில் சட்டென்று உதைக்கவும் செய்தாள். அவள் காற்சிலம்பு முத்துப்பரல்கள் திடீரெனச் சப்தித்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டும் நிமிர்ந்து பழையபடி நின்றாள் அவள். அவள் குனிந்ததையும், காவைத் தடவினதையும் தட்டியதையும் பிறகு நிமிர்ந்து விட்டதையும் தோப்பிலிருந்தவர்கள் காணத்தான் செய்தார்கள். அவர்களில் ஒருவன் குறுவாளை எடுத்து வீசவும் முயன்றான். ஆனால் இளநங்கையின். வாயைப் பொத்தியவனும், அவள் செய்யவேண்டுவது என்ன வென்பதை விளக்கியவனுமான அவர்கள் தலைவன் கையமர்த்தித் தடுத்து, “காலில் எறும்போ வேறு பூச்சியோ ஏறியிருக்க வேண்டும். வேறு எதுவுமிருக்காது. எச்சரிககை செய்பவள் அத்தனை மெல்லக் காலைத் தட்ட மாட்டாள், நீ அரவம் செய்யாதே” என்று கடிந்து கொண்டான். அதே சமயத்தில் சற்றுத் தூரத்தில் அந்த வாலிபன் நடந்து வரும் அரவம் கேட்கவே “உம், தயாராயிருங்கள், அதோ அந்த மரங்களுக்கிடையில் திட்டாக வெளிச்சம் இருக்குமிடத்திறகு அவன் வந்ததும் குறுவாளை எறியுங்கள். ஒருவர்தான் எறிய வேண்டுமென்ப தில்லை. நாலைந்து பேர் எறியலாம். நாலைத்து குறுவாளைத் தாங்கக்கூடியவன்தான் அவன் உம்! பிரிந்து மறைந்து நில்லுங்கள்” என்ற உத்தரவு இட்டான். அந்தக் கொடியவர்கள் தலைவன் சொற்படி பிரித்தும், ஓரிருவர் மரக்கிளைகளில் ஏறி உட்கார்ந்தும் வெளிச்சம் விழுந்திருந்த இடத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார்கள். விநாடிகள் பறந்தன. அந்த வாலிபன் மட்டும் அந்த இடத்தை அவர்கள் எதிர்பார்த்த துரிதத்தில் அடையவில்லை. மெல்ல மெல்லவே அந்தத் திட்டை நோக்கி வந்தான். அந்த இடத்திற்குள் காலை வைப்பதற்கு முன்பு அவன் முகத்தில் சிறிது புன்முறுவலும் உதயமாயிற்று. சரேலென்று திட்டாக இருந்த அந்த நிலவு இடத்தைச் சுற்றி வந்து இருளிலேயே மிண்டும் நடந்தான்.

அந்த நிலவுத் திட்டைச் சுற்றித் தாண்டியதும், அது வரை காட்டி வந்த நிதானமும், அலட்சியமும் அவனிடமிருந்து பறந்து, அவற்றினிடத்தை எச்சரிக்கையும் துரிதமும் ஆட்கொண்டுவிட்டதை, முகத்தில் சுருங்கிய புருவங்களும், திடீரெனப் பளிச்சிட்ட விழிகளும் நிரூபித்தன. அதுவரை அழகாகச் சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருந்த அவன் விழிகள் திடீரென மிகப் பயங்கரமாகி அந்த முகத்துக்கும் ஒரு பயங்கரத்தை அளித்தன. அலட்சியமாக ஆடிய கைகள் இருப்புச் சலாகைகள் போல் திமிர்ந்தன. துவண்டு உல்லாசமாக வந்த இடையும் இரும்புத் தசுடென உரம் பெற்றது. அவள் உடல் முழுவதும் விறுவிறுப்பும் கெட்டியும் பெற்றதாய் ஏதோ ஓர் உருவம் நடந்து வருவது போல் அவன் நடக்கத் துவங்கிச் சில அடிகள் எடுத்து வைத்தான். அடுத்த விநாடி அந்தத் தோப்பில் இருவர், மார்புகளில் குறுவாள்கள் பாய்ந்ததால் எந்தவித ஓசையும் செய்யாமல் தட்தட்டென்று விழுந்தார்கள். மறுவிநாடி கத்திகள் உராயும் அரவம் அந்தத் தோப்பில் வலுத்தது. அந்த அரவத்தைக் கேட்டதும் மேட்டு நிலத்தில் நின்ற இளநங்கையின இதயம் ஒருவிதாடி மகிழ்ச்சியடைந்தாலும், மறுவிநாடி பயப்படவே செய்தது. தன்னைத் தொடர்ந்து வந்த இளங்காளையை அந்தக் கொடியவர்கள் எதிர்பார்த்தபடி கொலை செய்ய முடிய வில்லையென்பதால், ஒரு மகிழ்ச்சியும், ஆனால் பலபேர் இருட்டில் வளைத்துக் கொண்டால் ஒருவன் என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தால் திகைப்பும் கொண்ட இளநங்கை தோப்பில் நடப்பதென்னவென்பதைப் பார்க்கச் சற்றே திரும்பினாள். அடுத்த விநாடி, அவள் இடையில் குறுவாளொன்று கனவேகமாகப் பறந்து வந்து பாய்ந்தது. தின்ற நிலையில் ஒரு வியாடி ஆடினாள் அவள். பிறகு நடக்க முயன்றபோது கால்கள் துவண்டன; கண்கள் இருண்டன. முழுநிலவொளியை ஏதோ திடீரெனப் பெரிய இருட்டு மூடியது போன்ற பிரமை ஏற்பட்டது அவளுக்கு, வேரில் கத்தரிக்கப்பட்ட பங்கொடி போல் கண்களை மூடி மண்ணில் வீழ்த்தாள் அவள், கண்கள் மூடியதும், அவள் புத்தியில் ஏதேதோ ஒளிகள் சில தென்பட்டுக் கொண்டிருந்தன; ஏதேதோ ஒலிகளும் கேட்டன. தலையில் மத்தளம் அடிப்பது போலும், வாட்கள் தாக்குவது போலும் பல சப்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. நிலத்தில் விழுந்து நினைவு அரைவாசியிருக்கும் போது. சற்றே இரண்டொரு முறை அசைந்த இனதங்கையின் உடல் கடைசியில் அசைவற்றுக் கிடந்தது; சுரணை அடியோடு பறந்துவிட்டது.

அவள் கண் விழித்தபோது அந்த இளங்கானை அவள் பக்கத்தில் ஒரு காலைக் குத்திட்டு ஒரு காலை மடித்து உட்கார்ந்து கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். மடித்துக் கிடந்த அவன் தொடையில் தன் தலை இருந்ததை உணர்ந்த இளதங்கை எழுந்திருக்க முயன்றாளானாலும், இடையில் எடுத்த பெருவலி மீண்டும் அவன் தொடையிலேயே அவளைத் தள்ளிவிட்டது. அவள் கண் விழித்தது, எழுந்திருக்க முயன்றது. பிறகு வீழ்ந்தது. அனைத்தையும் கண்ட அந்த வாலிபன் அவளை நோக்கி, “அசங்க வேண்டாம். இன்னும் சில விநாடிகளில் நீங்கள் எழுந்திருக்கலாம்” என்று கூறினான்.

அவள் தனது கண்களை மீண்டும் உயர்த்தி அவனை நோக்கினாள். அவன் கண்களில் ஒரு விஷமச் சிரிப்பு இருந்தது. தவிர அவள் கண்களைக் கவர்ந்து நிற்கும் ஆற்றலும் இருந்தது அவற்றுக்கு. அந்தக் கண்களுக்குடைய வனைக் கண்டு அத்தனை நாள் தான் அஞ்சி ஒட்டிய காரணம் இளநங்கைக்கு விளங்கவில்லை. அந்தச் சில விநாடிகளில் கண்களை மீண்டும் தாழ்த்திக்கொண்டான் அவள். கண்களைத்தான் தாழ்த்திக்கொண்டானே தவிர, உணர்ச்சிகளை அவளால் கட்டுப்படுத்த முடியாததால் பெரிதும் சங்கடத்தில் அகப்பட்டுத் தத்தளிக்கவே செய்தான். அவன் தொடை இருந்த கடினத்தைத் தலையின் ஸ்பரிசத்திலிருந்தே அறிந்து அவன், உண்மையில் அவன் கால்கள் இரும்பினால்தான் செய்யப்பட்டிருக்க வேண்டு மென்று நினைத்தாளானாலும், அவள் இடையை அழுத்திக் கொண்டிருந்த அவன் கரம் மட்டும் மிகமிருதுவாக இருந்ததை எண்ணிப் பார்த்து இந்தக் கரம் எப்படி வாளைப் பிடிக்கும் என்று வியந்தும் போனாள் இருப்பினும் இடுப்பை அழுத்திய அந்தக் கை அங்கிருந்த காயத்துக்கு மிகவும் ஆதரவளித்ததால், ‘நல்ல வேளை! கையும் இவர் கால் போலிருந்தால் நான் ஒழிந்திருப்பேன்’ என்று சொல்விக் கொண்டாள் உள்ளூர.

அவள் மனத்திலோடிய எண்ணங்களைப் புரிந்து கொண்டாதனாலோ, என்னவோ அவன் சொன்னான் “உங்கள் இடையிலிருந்த குறுவாளை எடுத்துவிட்டேன், காயத்தைக் கட்டிக் குருதியையும் நிறுத்திவிட்டேன். இன்னும் சில விநாடிகள் அழுத்திப் பிடித்தால் வெளியில் வந்த ரத்தம் காய்ந்து காயம் மூடிக்கொள்ளும். அப்புறம் நீங்கள் நடந்தாலும் எதுவும் ஆகாது” என்று.

இந்தச் சொற்களை அவன் வெகு சாதாரணமாகச் சொன்னாலும், அதில் அன்பு கனிந்து கிடந்ததை உணர்ந்தாள் இளநங்கை, ‘இப்பேர்ப்பட்டவர் எதற்காகப் பெண்கள் நீராடும் துறைக்கு தினந்தோறும் வந்தார்? எதற்காக என்னை உற்று உற்றுப் பார்த்தார்? ஏன் என்னை அங்காடியிலிருந்து தொடர்ந்தார்?” என்று பல கேள்வி களைத் தன்னுள் எழுப்பிக்கொண்டாள். மடியிலே தன்னைத் தாங்கிய அந்த வாலிபன் நடத்தை கெட்டவனாயிருந்தால், தான் திர்க்கதியாக நினைவிழந்திருந்த நேரத்தில் பல விபரீதங்கள் நேர்ந்திருக்கலா மென்றும் நினைத்ததால் அவனைப் பற்றித் தான் கொண்ட தவறான கருத்துக்கு வருந்தவும் செய்தாள். அந்தச் சமயத்தில் அந்த வாலிபன் அவளை மெல்லத் தன் தொடையில் லேசாகத் திருப்பி, “சற்று இருங்கள், காயத்தைக் கவனிக்கிறேன்” என்று அவள் இடையிலிருந்த கையை எடுத்துக் காயத்தைப் பரிசோதிக்க முற்பட்டான்.

அவன் காலில் லேசாகத் திருப்பப் பட்டதால் இளநங்கையின் முகம் கோட்டையை தோக்கிக் கிடந்தது. பின்புறத்தில் அவள் இடையை அவன் பரிசோதித்துக் கொண்டிருந்தான். இடையிலிருந்த தனது சேலை தயவு தாட்சண்யமின்றி இடைக்குக் கீழே நன்றாக இறக்கப் பட்டதையும், இடைக்கு மேல்புறத்து விலாவில் ஒரு கையையும் கீழே ஒரு கையையும் அந்த வாலிபன் வைத்துக் காயத்தின் கட்டைப் பரிசோதித்ததையும் உணர்ந்த இளநங்கையின் உயிர் வெட்க அலைகளில் அகப்பட்டுத்தத்தளித்தது. அவன் உள்ளங்கைகள் இரண்டும் இடைக்கு மேலும் கீழுமிருந்த மலர்ச்சதையில் நன்றாக ஒரு விநாடி பதிந்தன. பிறகு இருபுறமும் சதையை லேசாக அசைத்துப் பார்த்தன. விரல்கள் சதைகளில் அசைந்தும் பரவியும் ஏதேதோ பரீட்சைகளில் இறங்கின. பிறகு வயிற்றுப்புறம் ஒரு கையும் முதுகுப்புறம் ஒரு கையும் பதித்து பரிசோதனை நடத்தின. கடைசியில் இடையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியை இரு கைகளும் சற்று இறுக்கின. இதை அடுத்து நிம்மதிப் பெருமூச்சொன்று அந்த வாலிபனிடமிருந்து வெளி வந்தது “காயம் கட்டுப்பட்டு விட்டது? இனிப்பயமில்லை எழுந்திருங்கள்” என்று உத்தரவிட்ட அந்த வாலிபன் அவள் கைகளுக்கிடையில் தன் கைகளைக் கொடுத்து மெல்ல தூக்கியும் நிற்கவைத்தான்.

அப்படி நிறுத்தப்பட்ட இளநங்கை கீழிறங்கியிருந்த இடைச்சேலையைச் சரிப்படுத்திக்கொண்டாள். பிறகு அவனை ஒருமுறை ஏறெடுத்து நோக்கினாள். அவன் பார்வையில் எந்தவித மாறுதலுமில்லை. ஒரு பருவப் பெண்ணைத் தொட்டுச் சிகிச்சை செய்து தூக்கி நிறுத்தியதால் ஏற்பட்டிருக்க வேண்டிய பதற்றமேதும் அவன் வதனத்தில் இல்லை. படித்துறையில் பார்த்த அதே பார்வை தானிருந்தது கண்களில். முகமும் சர்வசாதாரணமாகவேயிருந்தது. ‘இவர் என்ன மரமா, கல்லா! இல்லை ஏற்காகவே மணமானவரா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். பிறகு, நிலத்தில் கண்களை ஓட்டி வினவினாள், “நீங்கள் அவர்களிடமிருந்து எப்படித் தப்பினீர்கள்?” என்று,

அந்த வாலிபன், சற்று யோசித்துவிட்டு, “பறவைகள் உதவின.” என்று பதில் சொன்னான்.

மீண்டும் அவள் கால் கட்டை விரலால் தரையைக் கீறிக் கொண்டே , “பறவைகளா?” என்று வியப்புடன் வினவினாள்.

“ஆம்,” என்றான் அந்த வாலிபன்.

“பறவைகள் பேசுமா?” என்று வினவினாள் இளநங்கை.

“அந்தத் துர்க்குணம் மனிதனுக்குத்தானிருக்கிறது. பறவைகளுக்கில்லை. ஆனால் அவை செய்தி சொல்லும்” என்று கூறினான் அவன்.

அவள் பேச்சு மேலும் மேலும் வியப்பை அளித்தது அவளுக்கு. “எப்படி?” என்று வினவினாள், வியப்பு குரலிலும் ஒலிக்க.

“தங்களுக்கு எதிரி மணிதன்தானென்பது பறவைகளுக்குத் தெரியும். விலங்குகளுக்குத் தெரியும். ஆனால் அவற்றுக்குத் தெரியாததும் ஒன்று உண்டு. மனிதர்களே மனிதர்களுக்கு எதிரி என்பதுதான் அது.” என்று கூறிய அந்த வாலிபன், மேலும் தொடர்ந்து, “மனிதன் சமீபத்திலிருக்கும் போது பறவைகள் சங்கடப்படுகின்றன. மரங்களிலிருந்து சப்திக்கின்றன. இராக் காலங்களில் சிறகடித்து அவை கினைகளிலிருந்து கிளைகளுக்குத் தாவுவதும் உண்டு. பட்சி சாத்திரம் அறிந்தவர்களுக்கு அவற்றின் சலசலப்பு இயற்கையானதா, பயத்தினாலுண்டானதா என்பது தெரியும்” என்றும் சொன்னான்,

“நீங்கள் வந்தபோது…?” என்று இழுத்தாள் இளநங்கை.

“பட்சிகள் பயந்த ஒலிகள் கேட்டன. முதலில் நீங்கள் ஓடியதால் அந்த ஒலிகள் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் நீங்கள் நிலவில் சென்று நின்றபோது அந்த ஒலிகள் நிற்கவில்லை, வேறு சிலர் தோப்பிலிருக் கிறர்களென்று தீர்மானித்துக்கொண்டேன். அந்தத் தீர்மானத்துக்கு வேறு அத்தாட்சியும் கிட்டியது.”

“என்ன அது?”

“முத்துப் பரல்களின் ஒலி கேட்டது பறவைகளோடு ஒரு பாவையும் எச்சரித்ததால், அந்த நிலவுத் திட்டில் நுழையவில்லை. அதைச் சுற்றி வளைத்துப் பின்புறம் வந்தேன். ஒருவனைத் திருப்பி என் குறுவாளால் குத்தினேன். பிறகு என் குறுவாளை மட்டுமின்றி அவன் குறுவாளையும் எடுத்துக் கொண்டேன்.”

“அப்படியானால்.?”

“சத்தம் செய்யாமல் மறைந்திருந்தவர்கள் ஐந்து பேர் தோப்பில் கிடக்கிறார்கள். இனி அவர்களுக்குச் சத்தம் செய்யும் உத்தேசம் இல்லை.”

*மொத்தம் ஐவர்தானா…?”

“இல்லை. வேறு சிலர் ஓடி விட்டார்கள். மூவராவது தப்பியிருக்க வேண்டுமென்பது எனது ஊகம்.”

இளநங்கை அவனை வியப்புடன் நோக்கினாள். அவன் இடையில் அப்பொழுதும் அவள் பல முறை பார்த்த நீண்ட வாளிருந்தது. இடுப்பில் ஓர் அழகிய கோடாரி இருந்தது. அந்தக் கோடாரியை வியப்புடன் பார்த்த இளநங்கை “இதுதான் உங்கள் குறுவாளா?” என்று வினவினாள்.

“இல்லை, குறுவாள் அங்கு கிடப்பவனொருவன் மார்பிலிருக்கிறது. இது கோடாரி” என்றான் அந்த வாலிபன்.

“விநோதமான ஆயுதம்” என்றாள் இளநங்கை.

“ஆம். கட்டைகளை வெட்ட உதவும்” என்றால், புன்முறுவலுடன்.

“மிகச் சிறியதாயிருக்கிறதே!” என்றாள் அவள் இளநகை புரிந்து.

“கட்டை என்றால் மரக்கட்டையல்ல”

“மனித உடலுக்கும் கட்டை என்று பெயர் வேதாந்தத்தில்!”

“நீங்கள் வேதாந்தியா?”

“ஆம்”

“எப்படி?”

“என் உயிரையோ பிறர் உயிரையோ பெரிதாக மதிப்பதில்லை.”

இதைக் கேட்ட அவள் நகைத்தாள். “தல்ல வேதாந்தம்” என்று கூறிவிட்டு, “வாருங்கள் கோட்டைக்குப் போகலாம், அங்கு சென்று பேசிக்கொள்ளலாம்” என்று அழைப்பும் விடுத்தாள்.

“இல்லை, இப்போது வருவதற்கில்லை. நீங்கள் செல்லுங்கள். நாளை உங்களைச் சந்திக்கிறேன்” என்றான் அந்த வாலிபன்.

“எங்கு? படித்துறையிலா?” என்று விஷமத்துடன் கேட்டான் அவள்.

அவன் பதிலுக்கு தகைக்கவில்லை. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான். “இல்லை, கோட்டைக்கே வருகிறேன்” என்றான் முடிவில்.

“உங்கள் பெயர். என் தந்தையிடம் சொல்ல வேண்டுமே” என்று கேட்டாள் அவள்.

அவன் சிறிது யோசித்துவிட்டு, இடைக் கச்சையி விருந்து ஒரு பொருளை எடுத்து அவள் கையில் கொடுத்தான். “இதை உங்கள் தந்தையிடம் கொடுங்கள். அவர் புரிந்து கொள்வார்” என்று கூறிவிட்டு, விடுவிடுயென்று தோப்புக்குள் சென்று மறைந்து விட்டான் அந்த வாலிபன்.

உாரமான அவன் சரீரத்தையும், கால்கள் பாவிப் பாலிச் சென்ற திதானமான கம்பீரமான நடையையும் அவன் தோப்பில் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த இளநங்கை, பிறகு மெல்ல மெல்லக் கோட்டையை நோக்கி நடந்தாள். கோட்டையை அடைந்ததும் அந்த வாலிபன் கூறியபடி அவன் தந்த பொருளைத் தந்தையிடம் கொடுத்தாள். அதை கையில் வாங்கிப் பார்த்த அவள் தந்தையின் முகத்தில் மிதமிஞ்சிய பிரமிப்புப் படர்ந்தது. விழிகள் வியப்பால் வெளியே விழுந்து விடுவது போலிருந்தன. “எங்கே அவர்? எங்கே அவர்?” என்று இரைத்து வினவினார் கோட்டைக் காவவர். வினவினாரா கூவினாரா என்பதை இளநங்கையால் நிர்ணயிக்க முடிய வில்லை.

Previous articleRaja Muthirai Part 1 Ch2 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch4 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here