Home Historical Novel Raja Muthirai Part 1 Ch30 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch30 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

70
0
Raja Muthirai Part 1 Ch30 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch30 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch30 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 30 மறுநாள் இரவில்

Raja Muthirai Part 1 Ch30 |Raja Muthirai Part1|TamilNovel.in

ஆசையால் உள்ளம் உந்த, ஆனந்த தடை போட்டு அருவிக்கரைப் பாறைக்கருகில் வந்த அழகி முத்துக்குமரி அங்கு தனக்காகக் காத்திருப்பவனைக் கண்டதும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் ஒருங்கே கொண்டாள். விளையாட்டுப் பிள்ளையும் வீரனுமான இந்திரபானுவுக்குப் பதில் சாதாரண வீரனொருவன் அவ்விடத்தில் தின்று கொண்டிருந்தான். அவள் எதிர்பார்த்த வாலிபனுக்குப் பதில் சற்றும் எதிர்பாராத வயோதிகனொருவன் நின்று கொண்டிருந்தான். பளிச்சிடும் கண்களுக்குப்பதில் பஞ்சடைந்த கண்கள் அவனை நோக்கின. அங்கிருந்த மனிதனைக் கண்டதும் முத்துக்குமரியின் கண்களும் மனமும் பஞ்சடைந்துவிடும் நிலைமையை எய்தின.

எத்தனையோ கஷ்டப்பட்டு, எத்தனையோ பொய் சொல்லி அவள் இடத்தை அன்றிரவு அடைய வேண்டி யிருந்ததால் அவள் ஏமாற்றம் எல்லை மீறியிருந்தது. முந்திய நாளிரவு நேரங்கெட்ட வேளையில் மலைச்சரிவு விடுதிக்குத் திரும்பியதுமே அவள் இல்லாத பொய்யெல்லாம் சொல்லி இளநங்கையைத் திருப்தி செய்ய வேண்டியிருந்தது. இந்திர பானுவிடமிருந்து பிரியா விடை பெற்று அவள் விடுதியை அடைந்ததும் இளநங்கை உறங்கியிருப்பான் என்று சிறிது நேரம் வெளித்தாழ்வாரத்திலேயே நின்று கதவையும் பார்த்துக் கோட்டைப்புறத்தையும் பார்த்தாள், கோட்டைப்புறக் காவலர் தடமாட்டத்தாலும் எச்சரிப்பு ஒலிகளாலும் உயிர்த் துடிப்புடன் இருந்தாலும் விடுதி மட்டும் நிசப்தமாயிருப்பதைக் கண்டு சற்றுத் துணிவுடனே கதவை மெள்ளத் திறந்து உள்ளே நுழைந்த முத்துக்குமரி திகைத்துப் பல விநாடிகள் நின்றுவிட்டான். உள்ளே விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தாலும் பளிச்சிடும் கண்களுடன் ஆசன மொன்றில் இளநங்கை உட்கார்ந்திருந்தாள். கதவு திறந்ததுமே இளநங்கையின் அழகிய விழிகள் முத்துக்குமரி மீது குற்றம் சாட்டும் தோரணையில் எழவே செய்தன.

பெரும் சங்கடத்தால் முத்துக்குமரி ஒரு வினாடி நின்ற இடத்தில் அசைந்துவிட்டு மெள்ளத் கதவை மூடினான். பிறகு அடிமேலடி எடுத்துவைத்து உட்புறம் வந்தான். இளநங்கை ஏதும் பேசாவிட்டாலும், உள்ளம் உறுத்தியதன் விளைவாக முத்துக்குமரியே பேசமுற்பட்டு, “சற்று நேரமாகிவிட்டது” என்று அர்த்தமில்லாமல் ஏதோ சொன்னான். இளநங்கை அப்பொழுதும் பேசவில்லை. அவள் கண்கள் மட்டும் மேற்கொண்டு கேள்விகளை வீசின. அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முறையில் பின்புறம் உள்ள அருவிக்கருகில் போயிருந்தேன்,” என்று கூறினாள் பாண்டியன் மகள்.

“அங்கு இத்தனை நேரம் என்ன செய்து கொண்டிருந் தாய்!” என்று எழுந்தது இனதங்கையின் கேள்வி.

“எதுவும் செய்யவில்லை. அருவியைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தேன்,” என்றாள் முத்துக்குமரி.

“என்னைத் துணைக்குக் கூப்பிட்டால் நானும் வந்திருப்பேனே. தன்னந்தனியாகச் செல்வது அபாயமல்லவா?” என்று இளநங்கை மீண்டும் வினவினாள்.

“இங்கென்ன அபாயமிருக்கிறது! கோட்டையில் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள், பாதுகாப்பும் பலமாயிருக்கிறதே?” என்றாள் முத்துக்குமரி அலட்சியமாக.

ஆனால் அது உண்மை அலட்சியமல்லவென்பதை இளநங்கை எளிதில் புரிந்து கொண்டாள். முத்துக்குமரியின் கசங்கிக்கிடந்த சேலையையும் கன்றிக்கிடந்த கன்னங்களையும் நுழைந்த உடனே பார்த்துவிட்ட இளநங்கை, “உன் கன்னம் ஏன் சிவந்து கிடக்கிறது, “என்றொரு கேள்வியையும் வீசினாள்.

அந்தக் கேள்வி முத்துக்குமரியைத் திடுக்கிடச் செய் தாலும் அவள் மெல்லச் சமாளித்துக் கொண்டு, “இரண்டு கைகளையும் நீண்டநேரம் கன்னத்தில் ஊன்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்” என்று சமாதானம் சொன்னான்.

பெண் சொல்லும் பொய் பெண்ணுக்குத் தெரியுமாதலால், அதை இளநங்கை அடியோடு தம்பவில்லை. இருப்பினும் மன்னன் மகளை அத்து மீறிக் கேள்விகள் கேட்கக் கூடாதென்று தீர்மானித்து, “குமரி! இக்கோட்டையைச் சுற்றிலுங்கூடச் சேரர் ஆபத்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். ஆகவே நீ தனித்து எங்கும் போகாதிருப்பது நல்லது. அருவிக்குச் செல்லும்போதுகூடத் துணை இருக்கட்டும், என்று எச்சரிக்கை மட்டும் செய்தாள். அத்துடன் அன்றிரவு இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டார்கள்.

படுத்துக் கொண்டார்களே தவிர இருவருக்கும் நீண்ட நேரம் உறக்கமே வரவில்லை. இருவர் மனக்கண் முன்பும் இரு ஆடவர்களின் உருவங்கள் எழுந்து உறக்கத்தைக் கெடுத்தன. ஆகவே மறுநாள் காலை இரு பெண்களும் அயர்ந்த உடல்களுடனும், சிவந்த கண்களுடனுமே எழுந்திருந்தார்கள்.

அன்று முழுவதும் ஏதேதோ சிந்தனைகளுடன் பொழுதைப் போக்கிய முத்துக்குமரி, இரவு வந்ததும் எப்படி இளநங்கை அறியாமல் தான் அருவிக்கரையை அடைய முடியும் என்பதைப்பற்றி யோசிக்கலானாள் முந்திய நாளிரவே தனக்காகக் காத்துக்கொண்டிருந்த இளநங்கை கண்டிப்பாய் அன்றிரவு உறங்கமாட்டாள் என்பதை உணர்ந்திருந்த முத்துக்குமரி அவளை வேறு வகையில் ஏமாற்றத் திட்டமிட்டாள். ஒரு விநாடி, ‘ஏன் உண்மையைச் சொல்லி விட்டாலென்ன? அவரை நான் காதலிப்பது அவளுக்கும் தெரிந்ததுதானே?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். இருப்பினும் நாணம் அவள் எண்ணத்துக்குக் குறுக்கே நின்றது. “சே சே! எப்படிச் சொல்வேன் இதை? உடன் பிறந்தவளாய் இருந்தாலும் சொல்ல முடியுமா? காதலின் நிகழ்ச்சிகளில், ரகசியம், திருட்டுத்தனம் உண்டு என்பதுதான் ஏற்பட்டுவிட்டதே?” என்று தனக்குள் சொல்லி நகைத்தும் கொண்டாள். ரகசியமும் திருட்டுத்தனமும் இல்லாவிட்டால் காதலில் என்ன சுவையிருக்கிறது? என்றும் தன்னைக் கேட்டுக் கொண்டான் முத்துக்குமரி. ‘என்னைக் கேள்வி கேட்கிறாளே இளநங்கை? இவள் மட்டுமென்ன? சிறிய தந்தையை வளைத் திருப்பவள்தானே?” என்று அவள்மீதும் குற்றம் சாட்டினாள்.

இத்தகைய எண்ணங்களால் வேறு வகையில் தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ள முயன்று அதற்கு அடுத்த நாளிரவில் ஆரம்ப காலத்திலேயே அடியும் போட்டாள். இருவரும் பெயருக்கு உணவருந்திக் கொண்டிருந்த சமயம் அது. “இளநங்கை! நான் இன்றும் போகப் போகின்றேன் அருவிக்கரைக்கு ” என்று மெள்ளத் துவங்கினான் முத்துக் குமரி.

“ஏன்? இன்றும் இந்திரபானு உன்னைத் தொட்டுத் தூக்கினாரா? அல்லது விடுதிப் படியில் தொப்பென்று போட்டாரா? இன்று யார் மேல் கோபம்” என்று வினவினாள் இளதங்கை குரலில் ஏளனம் ஒலிக்க.

முத்துக்குமரியின் எண்ணம் முந்திய நாள் நிகழ்ச்சிகளை நோக்கி ஓடியது, ‘தொட்டார்: தூக்கவில்லை’ என்று சொல்லலாம் போலிருந்தது அவளுக்கு. அதனால் உள்ளம் சிரிக்க, உதடுகள் மட்டும் பொய்க் கோபம் கொள்ள, “எப்பொழுதும் இதுதான் உனக்கு? கோபமிருந்தால்தான் அருவியிடம் போக வேண்டுமா?” என்று வினவினாள்.

“காதலிருந்தாலும் போகலாம்,” என்றாள் இளநங்கை நகைத்து.

முத்துக்குமரிக்குத் திக்கென்றது மனம். ஒருவேளை இளநங்கை தனது ரகசியத்தை ஊகித்துவிட்டாளோ என்று எண்ணி, “அதெல்லாம் உனக்குத் தெரியும்” என்றாள் வேடிக்கையாக.

“ஏது?’

“அருவிக்கரை, ஆற்றங்கரை இங்கெல்லாம் போவது எதற்கென்று?”
“என்ன சொல்லுகிறாய்? ஆற்றங்கரையா?”

“பொருநைக்கரை.”

“என்ன !”

“அங்கொருவர் உன்னைத் தினம் வேவு பார்த்ததாகக் கேள்வி. வேவு பார்த்தாரோ, வேறு என்ன பார்த்தாரோ எனக்குத் தெரியாது.”

“முத்துக்குமரி!” அதட்டினாள் இளநங்கை,

ஆனால் அந்த அதட்டல் பொய் அதட்டல் என்பதைப் புரிந்து கொண்ட முத்துக்குமரி உணவைப் பாதியிலேயே முடித்துக் கைகழுவிக் கொண்டு, இளநங்கையிடம் அவள் தோள் மீது கையை வைத்துக்கொண்டு “இளநங்கை!” என்று, அன்பு சொற்களில் சொட்ட அழைத்தாள்.

“ஏன்?” என்று வினவினான் இளநங்கை.

“நீ தினமும் பொருநைக்குப் போனாய் நீராட அமைதியை நாட எத்தனையோ ஆபத்திருந்தும் உன்னை ஒருவர் கண்காணிப்பதை அறிந்துங்கூடப் போனாயல்லவா?” என்று வினவினாள் முத்துக்குமரி.

“ஆம்”

“அப்படிதான் நானும் போகிறேன்.”

“உன்னை அவர் வேவு பார்க்கிறாரா?”

“இல்லை. தனிமையை நாடிப் போகிறேன்! அங்கு உட்கார்ந்திருப்பது எனக்கு ஆறுதலாயிருக்கிறது.”

“எனக்குப் பயமாயிருக்கிறது குமரி.”

“ஒன்றுக்கும் பயப்படாதே. அவர் இந்த விடுதியின் மீதும் நமது நடமாட்டத்தின் மீதும் ஒரு கண் வைத்தேயிருப்பாரென்று உனக்குத் தெரியாதா?”

அதை அறிந்தே இருந்தாள் இளநங்கை; ஆகவே எதற கும் எச்சரிக்கையாயிருக்கும்படிக்கும், அச்சமிருந்தால் உடனே காவலருக்குக் குரல் கொடுக்கும்படியும் கூறி விடை கொடுத்தாள் முத்துக்குமரிக்கு. இத்தனை கஷ்டத்தில் விடைபெற்று அருவிப் பாறைக்கருகில் தனித்து வந்த முத்துக்குமரி அங்கு நின்று கொண்டிருந்தவனைக் கண்டதும் பெரிதும் வெகுண்டான். அவள் வெகுண்டதைக் கண்ட அந்த வயோதிக வீரன் தலைதாழ்த்தி அவனை வணங்கி, “சொன்னபடி படைத்தலைவர் வரமுடியவில்லை. மன்னிக்கச் சொன்னார்,” என்று மிகுந்த பணிவுடன் தறினான்.

“ஏன் வரமுடியவில்லை?” என்று சீறினாள் முத்துக்குமரி.

இந்திரபானு வராதது மட்டுமின்றி, தனக்குப் பதில் விவரம் சொல்ல இன்னொருவனை அனுப்பியதும் விந்தையாயிருந்தது பாண்டியன் பைங்கிளிக்கு. ரகசியமாக வைத்திருக்க வேண்டிய சந்திப்புக்குத் தூதன் எதற்கு என்றும் சிந்தித்தாள் அவள்.
அவள் மனத்திலோடிய அனைத்தையும் அந்த வயோதிகன் புரிந்து கொண்டிருக்கவேண்டும். அவன் சொன்ன பதிலில் சகலத்துக்கும் விடையிருந்தது. “வேறு அலுவலுக்கு மன்னர் உத்தரவிட்டபடியால் படைத்தலைவர் கோட்டையை விட்டுச் சென்றுவிட்டார். இன்னும் இந்தப் பகுதியில் எதிரிகள் நடமாட்டம் இருப்பதாலும், இந்தப் பகுதி தன்னந்தனியாக அதிகக் காவலில்லாமல் இருப்பதாலும், நீங்கள் இங்கு தனித்திருப்பது உசிதமல்லவென்று படைத் தலைவர் கருதுகிறார். ஆகையால்தான் என்னை அனுப்பி வார்,” என்றான் அந்த வீரன்.

“நான் இங்கு வரப்போது அவருக்கு எப்படித் தெரியும்?” என்று வேண்டுமென்ற கேட்டான் முத்துக்குமரி.

நேற்று நீங்கள் தனித்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்துத் தாம் எச்சரித்ததாகவும், இருப்பினும் நீங்கள் வரப் போவதாகப் பிடிவாதம் செய்வதாகவும் கூறினார் படைத் தலைவர். அப்படி நீங்கள் வரும் பட்சத்தில் உங்களுக்குக் காவலாகத் தானும் வருவதாகக் கூறினாராமே?” என்றான் அந்த வீரன்.

இதைக் கேட்ட முத்துக்குமரி உள்ளூர நகைத்து கொண்டாள். தனக்குச் செய்தியை அனுப்புவதிலும் எத்தனை சாமர்த்தியமாக நடந்து கொண்டிருக்கிறான் இந்திரபானு என்பதை எண்ணிப் பெருமகிழ்ச்சி கொண்டான். இருப்பினும் அவன் வராதது ஏமாற்றத்தையும் துன்பத்தையும் அளிக்கவே, “மீண்டும் என்று வருவார் படைத்தலைவர்?” என்று வினவினாள்.

“நாளை மாலை வந்துவிடுவார்.”

“மன்னர் எப்பொழுது வந்தார் கோட்டைக்கு?”

“இன்று மாலை.”

“வந்தவுடன் படைத்தலைவரை அனுப்பி விட்டாரா?”

“ஆம்.”

முத்துக்குமரி சற்று யோசித்துவிட்டு விடுதியை நோக்கித் திரும்பினாள். அவளை நோக்கிவந்த வீரன் சொன்னான் பணிவுடன்: “நீங்கள் இங்கு தங்க வேண்டு மென்றால் இருக்கலாம். அவருக்குப் பதில் நான் காவலிருக்கிறேன்.”

கிழவனின் காவல் பிடிக்காததால், “வேண்டாம். நான் வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு விடுதி நோக்கி நடந்து சென்றாள் முத்துக்குமரி.

அன்று வேதனையுடன் சென்ற முத்துக்குமரி மறு நாளிரவை எதிர்பார்த்து ஒரு நாளைக் கழித்தாள். ஒரு இரவும், ஒரு பகலும் ஒரு யுகமாயிருந்தது அவளுக்கு மறுநாள் இரவும் முதல் நாளிரவு போலவே கிளம்பிய முத்துக்குமரியை இளநங்கை தடுக்கவில்லை. போகிற காரணத்தை அவள் சந்தேகத்துக்கிடமின்றிப் புரிந்து கொண்டதால் மறுத்து எதுவும் பேசவில்லை.

முத்துக்குமரி அன்றும் பெரும் மகிழ்ச்சியுடனேயே சென்றாள். அவள் சென்றதைப் பார்த்துக்கொண்டிருந்த இளநங்கை தனது பஞ்சணையில் மல்லாந்து கிடந்தாள். நேரம் வெகு துரிதமாக ஓடிக் கொண்டேயிருந்தது. நீண்ட நேரம் முத்துக்குமரி வரவேயில்லை .

வெள்ளி முளைத்ததும் முத்துக்குமரி வராதிருக்கவே சந்தேகமடைந்த இளநங்கை, விடுதியின் பின்புற ஓடையை நோக்கிச் சென்றாள். அங்கும் முத்துக்குமரி இல்லாது போகவே. மன்னனிருந்த விடுதிக்கு வெகு வேகமாகவே ஓடினாள். அங்கிருந்த காவலரிடம் முத்துக்குமரியைக் காணவில்லையென்ற விஷயத்தைச் சொன்னதும் கோட்டை முழுவதுமே விழித்துக்கொண்டது. எங்கும் வீரர்கள் ஓடினார்கள். கோட்டை சல்லடை போட்டுச் சயிக்கப்பட்டது. முத்துக்குமரியை எங்கும் காணவில்லை. எவடு தெரியாமல் மறைந்துவிட்டாள். அவள் மட்டுமல்ல மறைந்தது; அன்று மாலை கோட்டைக்குத் திரும்பிய இந்திர பானுவும் மறைந்துவிட்டானென்பதை வெகு விரைவில் கணர்ந்து கொண்டாள் இளநங்கை.

Previous articleRaja Muthirai Part 1 Ch29 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch31 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here