Home Historical Novel Raja Muthirai Part 1 Ch31 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch31 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

78
0
Raja Muthirai Part 1 Ch31 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch31 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch31 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 31 குருதி பாய்ந்த கோடரி

Raja Muthirai Part 1 Ch31 |Raja Muthirai Part1|TamilNovel.in

விண்மீன்கள் முதல் ஜாம முடிவைக் காட்டிய வுடனேயே வெளியேறிய முத்துக்குமரி வெள்ளி முளைத்த பின்பும் விடுதி திரும்பாது போகவே வேதனை நிறைந்த இதயத்துடன் அருவிக்கரைக்கு விரைந்த இளநங்கை அங்கும் இளவரசியைக் காணாததால் வேகத்துடன் மன்னர் விடுதியை அடைந்து அங்கிருந்த காவலரிடம், “இளவரசியைக் காணவில்லை,” என்ற இரண்டே சொற்களை நெஞ்சு படபடக்க உதடுகள் துடிக்கக் கூறினான்.

அடுத்த வினாடி காவலரில் ஒருவன் பக்கத்திலிருந்த கொம்பை எடுத்துப் பலமாக மும்முறை ஊதினான் இன்னொருவன் இளநங்கையை அழைத்துக்கொண்டு விடுதிக்குள் சென்றான். கொம்பு ஊதல் ஒலியால் அப்பொழுதே கண் விழித்த பாண்டிய மன்னன் வினாக்களை விடுக்கும் பாணியில் சற்றே உயர்ந்த புருவங்களுடனும், தூங்கி வழிந்த நேரத்திலும் வேல்களெனப் பனிச்சிட்ட சிங்கக் கண்களுடனும் இளநங்கையை வரவேற்றான்.

எதிர்பாராத பெரும் அபாயம் நேரிடும் சமயங்களில் மட்டுமே கொம்புகள் எச்சரிக்கையாக ஊதப்படுமென்பதை உணர்ந்திருந்த இளநங்கை, அப்படிக் கொம்புகள் ஊதப்பட்ட பின்பும் எந்தவித அவசரத்தையோ துடிப்பையோ காட்டாமல் சுந்தரபாண்டியன் தன்னை வரவேற்றதைக் கண்டு, விஷயத்தை அவன் உணராத தாலேயே அத்தகைய நிதானத்தைக் காட்டுகிறானென்று நினைத்தாள். அத்தகைய செய்தியை எப்படி உரைப்பதென்று அறியாமல் சங்கடப்பட்டு முகத்தில் கலவரத்தைக் காட்டி நின்றாள். சுந்தர பாண்டியனின் சீரிய கண்கள் அவளைக் கூர்ந்து நோக்கின. படுக்கையேதுமில்லாத மரமஞ்சத்தில் சயனித்திருந்த சுந்தர பாண்டியன், அப்பொழுதுதான் விழித்து எழுந்து உட்கார்ந் திருந்தானாதலால், அவன் மேலுடை சற்று விலகி அவன் அகன்ற மார்பில் இரண்டு மூன்று வாட்பயிற்சிக் காயங்களைக் காட்டிக்கொண்டிருந்தது. தலையின் குழலும் முரட்டுத்தனமாக முகத்தில் சிதறிக் கிடந்தது. அந்த நிலையில் சுந்தரபாண்டியன் கேட்டான், “என்ன இளநங்கை, என்ன விஷயம்?’ என்று.

விடுதிக் காவலரிடம் பதைபதைத்துச் சொன்ன அதே செய்தியை மதுரைக் காவலனிடம் சொல்லச் சக்தியற்றுப் போயிருந்த இளநங்கையின் உதடுகளில் சொற்கள் வேகத்துடன் வர மதுத்தன. பெண் காணவில்லையென்று தந்தையிடம் சொல்லும் தைரியமில்லாததால் அந்தத் தையல் சிறிது தயங்கவே செய்தாள்.

ஏதோ விபரீதம் நேர்ந்திருக்கிறதென்பதை இளநங்கை வந்தவுடனேயே பாண்டிய மன்னன் உணர்ந்து கொண்டான். எந்த நிலையையும் சூசகங்களைக் கொண்டே எடை போடவல்ல பெரும் திறன் கொண்ட பாண்டிய மன்னன் வெளியே அபாயத்தை உணர்த்த கொம்புகள் வாதப்பட்டதிலிருந்தும், அதைத் தொடர்ந்து இளநங்கை உடல் துடிக்க, முகத்தில் கலவரம் ததும்ப, உன்ளே துழைந்ததிலிருந்தும் விரும்பத்தகாத ஏதோ ஒரு விபரீதம் நேர்ந்திருக்கிறதென்பதைப் புரிந்து கொண்டு விட்டானாதலால், இளநங்கை! தைரியமாகச் சொல்! என்ன நடந்தது? என்று இரண்டாம் முறை வினவினான்,
அந்தக் கேள்வியை அவன் கேட்ட பொழுது கூட அவன் குரலிலோ, நிலையிலோ எந்தவிதப் பதற்றமும் இல்லாதிருந்தாலும் இளநங்கைக்கும் நிதானம் சிறிதும் வராது போகவே “இளவரசி இளவரசி..” என்று துவங்கி மேலே ஏதும் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினாள்.

“என்ன முத்துக்குமரிக்கு?” என்று வினவினான் சுந்தர் பாண்டியன் மஞ்சத்தைவிட்டு எழுந்திராமலே.

“காணவில்லை?” உயிரைப் பிடித்துக்கொண்டு அந்த வார்த்தையை உதிர்த்தாள் இளநங்கை. அதைச் சொன்ன பின்பு அவளுக்கிருந்த வேதனை அதிகமாகவே, நிற்கும் சக்தியில்லாமலே பக்கத்திலிருந்த மஞ்சத்தில் சென்று அரசன் அனுமதியில்லாமலே உட்கார்ந்தும் கொண்டாள்.

எந்தத் தந்தைக்கும் அதிர்ச்சியைத் தரும் அந்தச் செய்தி எம்மண்டலமும் கொண்டருளவிருந்த பாண்டிய பெருமாளுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தருமென்றோ அவன் துள்ளி எழுவானென்றோ, கோபத்தால் கூச்சலிடுவானென்றோ இளநங்கை நினைத்திருந்ததால் அவள் பெரும் ஏமாற்றமே அடைந்தாள். சுந்தரபாண்டியன் மஞ்சத்தை விட்டு எழுந்திருக்கக்கூட இல்லை. மடித்திருந்த ஒரு காலை மட்டும் கீழே எடுத்துத் தொங்கவிட்டுத் தரையில் ஊன்றியதைத் தவிர வேறு அசைவு எதுவும் அவனிடம் காணப்படவில்லை. அவன் புத்தி மட்டும் தீவிர சிந்தனையில் ஈடுபட்டிருந்ததை முகம் காட்டியது. அவன் சிங்க விழிகள் மட்டும் ஒருமுறை அவளைக் கூர்ந்து நோக்கின. “அவள் காணாதது உனக்கு எப்பொழுது தெரியும்?” என்று ஒரு கேள்வியும் மன்னனிடமிருந்து எழுந்தது சர்வ சகஜமாக.
அவன் நிதானம் பெரும் எரிச்சலைத் தந்தது இளநங்கைக்கு, “முதலில் இளவரசியைத் தேடச் சொல்லுங்கள். பிறகு என்னை விசாரிக்கலாம்,” என்றாள்.

“அந்தப் பணி துவங்கிவிட்டது,” என்றான் சுந்தர பாண்டியன்.

“எந்தப் பணி?” என்று வினவினாள் இளநங்கை .

“என் மகளைத் தேடும் பணி.”

“தேட நீங்கள் உத்தரவிடவில்லையே?”

“தேவையில்லை. இந்த விடுதிக் காவலனிடம் நீ சொன்னாயல்லவா என் மகள் காணவில்லையென்று?”

“சொன்னேன்.”

“உடனே கொம்பு ஊதப்பட்டது.”

“கோட்டை விழிக்க, எங்கும் எச்சரிக்கையாயிருக்கக் கொம்பு ஊதப்படுகிறது. தவிர, உன்னிடம் விஷயத்தை அறிந்த காவலன் என் உத்தரவுக்குக் காத்திருக்க மாட்டான். இத்தனை நேரம் வீரர்களை ஏவியிருப்பான் கோட்டைப் புறத்தைச் சல்லடை போட்டுச் சலிக்க, உற்றுக் கேள்,” என்றான் வீரபாண்டியன்.

வெளியே வீரர் நடமாட்டம் பலமாகக் கேட்டது. எங்கும் எச்சரிக்கைக் கூச்சலும், பதில் கூச்சலும் கேட்டன. கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டு வெளியே புரவிகள் பாய்ந்து செல்லும் ஒலிகளும் இளநங்கையின் காதில் விழுந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் கோட்டைக்கு உயிர்த் துடிப்பை உண்டாக்கிவிடக் கூடிய அத்தனை திறமையுடன் பாண்டிய மன்னன் படை நிர்வாகத்தை அமைத்திருக்கிறானென்பதைப் புரிந்து கொண்ட இள தங்கை பிரமித்தாள். கொற்கையில் தன் தந்தையின் நிர்வாகமும் சிறந்ததுதானென்றாலும் இத்தனை துரிதமாகக் கோட்டை வீரர் செயல்பட முடியாதென்பதை இளநங்கை உணர்ந்து கொண்டாள். ஆதலால், எப்படியும் முத்துக்குமரி அகப்பட்டுவிடுவாளென்று எண்ணினாள். அந்தத் தைரியத்தில் அரசன் கேட்ட கேள்விகளுக்குப் பதில்களையும் தங்கு தடையின்றிக் கூறினாள்.

“முத்துக்குமரி எங்கிருந்து மறைந்தாள்? விடுதியிலிருந்தா?” என்று வினவினான் சந்தரபாண்டியன்.

“இல்லை” என்றாள் இனநங்கை, தயக்கம் குரலில் ததும்ப.

“வேறெங்கு மறைந்தாள்?” என்று வினவினான் மன்னன்.

“அருவிக்கரைக்குச் சென்றாள் இரவின் ஆரம்பத்தில்,” என்றாள் இனநங்கை,

பாண்டிய மன்னன் முகத்தில் சந்தேகச் சாயை சற்றே படர்ந்தது. “இன்றிரவு மட்டும்தானா?” என்று வினவினான் அவன்.

“இல்லை. இரண்டு நாட்களாகவே போகிறாள், என்று இளநங்கை கூறினாள். அவன் குரலில் அச்சமிருந்தது. இதை ஏன் முன்பே கூறவில்லையென்றோ, ஏன் அவளைத் தனித்து அனுப்பினாயென்றோ மன்னன் வினவினால் என்ன பதில் சொல்வதென்ற அச்சமிருந்தது அவன் சொற்களில்.

“எதற்காகப் போகிறாள்?” என்றான் சுந்தர பாண்டியன் மீண்டும்.

என்ன பதில் சொல்வதென்று அறியாமல் திகைத்த இளநங்கை, “அங்கு உட்கார்ந்து அருவியைப் பார்த்தால் மனத்துக்கு அமைதியாய் இருப்பதாகக் கூறினாள்,” என்று கூறினாள், உண்மையைச் சொல்ல இஷ்டப்படாமல்.

பாண்டியன் விழிகள் அவளைக் கூர்ந்து நோக்கின அவன் கேள்வியும் திட்டமாக வந்தது. “அதை நீ நம்பினாயா?” என்று வினவினான் மன்னன்.

“இல்லை”. என்று ஒப்புக்கொண்டாள் இளநங்கை மன்னன் கண்கள் தன்னை ஊடுருவியதால் எதையும் மறைக்க முடியாதென்ற காரணத்தால்.

“வேறெதற்குச் சென்றாள்?” என்று மீண்டுமொரு கேள்வியை வீசினான் பாண்டியன் மன்னன்.

இளநங்கை பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல மனம் துணியவில்லை. பேசாமல் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள். மன்னனிடம் ஓரளவு வெறுப்பும் கொண்டாள் அவள் அந்தச் சில நிமிடங்களில், ‘மகள் காணவில்லை யென்றதும் துடித்தெழுந்து ஓடித் தேடாமல் இங்கு உட்கார்ந்து நிதானமாக விசாரணை செய்யும் இவர் என்ன தந்தை?’ என்று அலுத்தும் கொண்டாள். இருப்பினும் முத்துக்குமரிக்கும், இந்திரபானுவுக்குமிருந்த நட்பைப்பற்றி அரசனிடம் சொல்ல அவளுக்குத் துணிவு வரவில்லை .

ஆனால், மன்னனின் அடுத்த கேள்வி அவளைத் திடுக்கிடவைத்தது. இந்திரபானுவைச் சந்திக்கச்சென்றாளா?” என்று வினவினான் சுந்தரபாண்டியன் சர்வ சாதாரணமாக.

இளநங்கையின் குனிந்த தலை திடுக்குற்று எழுந்தது. அவன் அழகிய விழிகளில் அச்சம் மிதமிஞ்சிச் சொட்டிற்று. பதில் சொல்ல உதடுகள் மறுத்தன. ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் ஆட்டினாள் கோட்டைக் காவலன் மகள். அதற்குமேல் பாண்டிய மன்னன் என்ன சிறுவானோ என்று அவனை ஏறெடுத்து நோக்கவும் இயங்கினாள்.

சுந்தரபாண்டியன் எந்தவிதப் பதற்றத்துக்கும் உள்ளாகவில்லை. இரு கைகளையும் ஒருமுறை தட்டினான். உன்ளே நுழைந்த காவலனை நோக்கி, “இந்திரபானுவை இங்கு அனுப்பு,” என்று உத்தரவிட்டான்.

அந்த உத்தரவை ஏற்றுத் துரிதமாக வெளியே ஓடிய காவலன் சிறிது நேரத்துக்கெல்லாம் ஓடிவந்து, “படைத் தலைவரை விடுதியில் காணவில்லை,” என்றான்.

இந்தச் செய்தியைக் கேட்ட இளநங்கையின் இதயத்தில் அச்சம் நூறு மடங்காகியது. ஆனால், பாண்டிய மன்னன் மட்டும் எவ்வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல், “இளவரசியைத் தேடுவதோடு இந்திர பானுவையும் தேடச் சொல்,” என்று உத்தரவிட்டு, “சரி இளநங்கை! நீ உன் விடுதிக்குச் செல்; செய்தி ஏதாவது இடைத்தால் சொல்லியனுப்புகிறேன்,” என்றான்.

இளநங்கை தனது ஆசனத்தைவிட்டு எழுந்த மன்னனை நோக்கினாள். மன்னன் முகத்தில் சிந்தனை தீவிரமாயிருந்தது. மன்னன் உணர்ச்சிகளை நன்றாகக் கட்டுப்படுத்தியிருந்தாலும், திடமாக மஞ்சத்தில் அவன் உட்கார்ந்திருந்தாலும், புருவங்கள் இரண்டு மூன்று முறை சுளித்ததிலிருந்து அவன் மனத்தில் மகள் மறைவால் வேதனை நிரம்பிக் கிடந்ததைப் புரிந்து கொண்ட இளநங்கை, அவ்விடத்தைவிட்டு நகராமலே நின்றாள். பிறகு துவங்கினாள், “மன்னவா! நானும் இங்கு இருக்கிறேன்,” என்று அவனுக்கு ஆதரவு சொல்லும் முதையில்,

துன்பப் புன்முறுவலொன்று சுந்தரபாண்டியனின் வீர வதனத்தில் படர்ந்தது. “தேவையில்லை இளநங்கை பகையும், போரும் பல துன்பங்களைத் தருகின்றன அவற்றைத் தாங்கவே மன்னன் இருக்கிறாள். நீ போ உன் இடத்துக்கு,” என்றான் மன்னன்.

இளநங்கை ஒரு வினாடி தயங்கினாள். பிறகு சென்றாள் தன் விடுதி நோக்கி. விடுதியை அடைந்த பின்பும் விடுதிக்குள் நுழையாமல் கோட்டைப் புறத்தைப் பார்த்துக் கொண்டே வெளித் தாழ்வரையில் உட்கார்ந்திருந்தாள். கோட்டையில் எங்கும் பரபரப்பாயிருந்தது. ஆயுதம் தாங்கிய காவலர் எல்லா இடங்களிலும் நடமாடினார்கள். கோட்டைக்குள்ளிருந்த எல்லா விடுதி வாயில்களிலும் பந்தங்கள் கொளுத்தப்பட்டதால் எங்கும் வெளிச்சம் அதிகமாயிருந்தது. கோட்டையின் கதவுகள் அடிக்கடி பெரும் சத்தத்துடன் திறந்து மூடின. வீரர்கள் பலர் புரவிகளில் அமர்ந்து வெளியே பாய்ந்து சென்று சுற்றுப் புறங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

அந்த மலைப்பகுதியின் காலைப் பொழுது வழக்கம் போல் மிக இன்பமாகவே இருந்தது. பட்சி ஜாலங்கள் எங்கும் கூவின. காலையின் குளிர் காற்று மிக இன்பமாக வீசியது. பல மலர்களின் நறுமணம் கதம்ப வாசனையாக வந்து கொண்டிருந்தது. ஆனால் அத்தனை இன்பமும் வேதனையையே அளித்தது இளதங்கைக்கு. அந்த வேதனையுடனேயே அன்று காலைப் பொழுதைக் கழித்தாள் அவள். காவலர் கொண்டுவந்த காலை உணவைக்கூட அருந்தவில்லை இளநங்கை.

பகல் உச்சிவேளைக்கு மன்னனிடமிருந்து வந்த வீரனொருவன் இளவரசியை எங்கும் தேடியாகிவிட்ட தென்றும், இளவரசியோ, இந்திரபானுவோ சென்ற இடம் தெரியவில்லையென்றும் அறிவித்தான்.

சட்டென்று இளநங்கைக்கு ஒரு யோசனை தோன்றவே, “மன்னனின் சாம்பல் நிறப் புரவி இருக்கிறதா?” என்று வினவினாள்.

“இருக்கிறது தேவி. அது மட்டுமல்ல. எல்லாப் புரவிகளும் இருக்கின்றன. ஒரு புரவிகூடக் குறையவில்லை,” என்று வீரன் கூறினான்.
அதற்கு மேல் அவனை ஏதும் கேட்கவில்லை இளநங்கை. ‘புரவியும் கொண்டு சொல்லவில்லையென்றால் இருவரும் நடத்தா சென்றிருக்கிறார்கள்? ஏன் செல்ல வேண்டும்? ஒரு வேளை இந்திரபானு மீண்டும் எதிரிபக்கம் இரும்பி விட்டானா? அப்படியானால் இளவரசி அபகரிக்கப் பட்டாளா? ஒருவேனை இந்திரபானுவின் மறைவுக்கும் இளவரசி காணாமற் போனதற்கும் சம்பந்தமில்லாதிருக்குமோ? என்று பலபடி தன்னைக் கேள்வி கேட்டுக் கொண்ட இளநங்கை, பெரும் குழப்பத்துட விருந்தாள்.

அன்று முழுவதும் மேற்கொண்டு அவளுக்குச் செய்தி எதுவும் கிடைக்கவில்லை. அன்றிரவில் தான் ஏதோ புலன் இடைத்தது. அந்தப் புலன் யாருமே எதிர்பாராத பெரும் விபாதத்தை உணர்த்தியது. அந்தப் புலனைக் கொண்டு வந்தவனைக் கண்டதும் பேரதிர்ச்சியுற்றாள் இளநங்கை. அன்றிரவின் ஆரம்பத்தில் திடீரென மன்னனால் அழைக்கப் பெற்ற இளநங்கை மன்னன் விடுதிக்குச் சென்றதும் முற்றிலும் எதிர்பாராத ஒரு மனிதனைக் கண்டாள். ஒரு பொருளையும் கண்டான். மன்னனுடன் நின்றிருந்த மனிதன் அவளிடம் ஒரு கோடரியை நீட்டினான். “இதை நீ இதற்கு முன்பு பார்த்திருக்கிறாயா?” என்று அதிகாரத் தோரணையிலும் வினவினான்.

அத்த மனிதனைக் கண்டே பிரமித்த அவள் கோடாரியைக் கண்டதும் மிதமிஞ்சிய திகைப்பினால் நிலைத்து நின்றுவிட்டான் பல வினாடிகள். அவள் உதடுகள் பயத்தால் துடித்தன. அந்த மனிதன் அவளை அதிர்ச்சிக் குள்ளாக்கினான். அந்தக் கோடாரி அவனை அச்சுறுத்தியது. ஆனால் அதில் படிந்திருந்த ரத்தக் கறை அவளை அடியோடு நிலைகுலையச் செய்துவிட்டதால் விழித்த கண்கள் விழித்தபடி நீண்ட நேரம் நின்று விட்டாள் இளநங்கை.

Previous articleRaja Muthirai Part 1 Ch30 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch32 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here