Home Historical Novel Raja Muthirai Part 1 Ch32 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch32 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

78
0
Raja Muthirai Part 1 Ch32 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch32 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch32 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 32 குறிப்பாலுணர்த்துதல்

Raja Muthirai Part 1 Ch32 |Raja Muthirai Part1|TamilNovel.in

இரவின் ஆரம்பத்தில் பாண்டிய மன்னனால அழைக்கப் பெற்று அவன் விடுதிக்குச் சென்ற இளநங்கை அந்த விடுதியின் முன்கூடத்தில் மன்னனை நோக்கிய வண்ணம் நின்றிருந்த உயர்ந்த உருவத்தைக் கண்டதும் பல விநாடிகள் அசைவத்து நின்றுவிட்டாள். அவள் தான் அசைவற்று நின்றுவிட்டாளே தவிர அவள் உணர்ச்சிகள் ஒரு நிலையில் நிற்காமல் பெருவேகத்துடன் உடலில் சுழல ஆரம்பிக்கவே, தன்னைச் சமாளித்துக் கொள்ளப் பக்கத்திலிருந்த ஒரு தூணைத் தனது இடது கையால் பிடித்துக் கொண்டாள். அவள் வரும்வரை வாயிற் புறத்துக்கு முதுகைக் காட்டிக் கொண்டு மன்னனிடம் பேசிக் கொண்டிருந்த வீரபாண்டியன், அவள் காலடி ஓசை கேட்டதுமே திரும்பியதால் இளநங்கை கண்களும் அவன் கண்களும் ஒரு கணம் சந்திக்கவும் செய்தன. அவன் கண்களில் அன்று அந்தப் பழைய நகைப்பு இல்லை. அவன் தின்ற தோரணையிலும், நிதானத்திலும்கூட ஒரு கடுமை இருந்தது. எதிரிகளை எதிர்க்கும் போது மிகப் பயங்கரமாக மாறும் முகமும், கழுகுப் பார்வை வீசும் கண்களும் அன்று அத்தனை பயங்கரமாக இல்லையென்றாலும், முகம் இரும்பினால் செய்தது போல் உணர்ச்சியற்று கெட்டிப்பட்டிருந்தது. அவன் கன்னச் சதைகள் கூடச் சிறிதும் இளகாமல் இரும்பு போலிருந்ததையும், வேல்முனைக் கண்கள் தன்னை நோக்கியதையும் கண்ட இளநங்கை இளவரசன் இதயத்தில் சினம் மூண்டு கிடக்கிறதென்பதை மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டாள்.

அவளை ஒரு விநாடியே கவனித்த இளவரசன், அந்த விநாடியிலும் பழைய உறவையோ தொடர்பையோ சிறிதும் காட்டாமலும், ஏதோ ஒரு குற்றவாளியைப் பார்ப்பது போலும் பார்த்தான். தனது கையிலிருந்த கோடரியை அவளிடம் நீட்டி, “இதை நீ இதற்கு முன்பு பார்த்திருக்கிறாயா?” என்று கேட்ட கேள்வியிலும், அன்பின் ஒலி சிறிதுமின்றிக் குற்றவாளியை விசாரிக்கும் தோரணையே இருந்ததைக் கண்ட கொற்கைக் கோட்டைக் காவலன் மகள் ‘கடமை என்று வரும்போது பாண்டிய மன்னனும் சரி, அவர் தம்பியும் சரி, பழைய உறவைப் பற்றிச் சிறிதும் சிந்திப்பது கிடையாது. இருவரும் உணர்ச்சியற்ற இரும்புத் துண்டங்கள்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவன் நினைப்புக்குச் சான்று கூறும் தோரணையிலும் குரலிலுமே கோடரியை நீட்டி அந்தக் கேள்வியைக் கேட்டான் வீரபாண்டியன். அதைக் கையில் வாங்கிப் பார்க்கவேண்டிய அவசியம் ஏதுமில்லை யென்றாலும் சம்பிரதாயத்துக்காக வாங்கிக்கொண்டு அதன்மீது தனது கண்களை ஓடவிட்டாள் இளநங்கை. அந்தக் கோடரியும் அதில் படிந்த இரத்தக் கறையும் அவளைப் பொதும் நிலைகுலையச் செய்தமையால், ஒரு விநாடி பேசாமலேயிருந்த இளநங்கை மெள்ளத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “இதை எப்படி நான் மறக்க முடியும்?” என்று மெள்ளக் கூறினாள்.

“நரன் கொற்கையில் வீரரவியின்மீது எறிந்த கோடா இவ்விடத்திற்கு எப்படி வந்தது?” என்று மீண்டும் வினவினான் வீரபாண்டியன்.

“என் மூலம் வந்தது.”
“உன் மூலமா!”

“ஆம். வீரரவியே என்னிடம் அனுப்பினான். தான் தப்பி விட்டதை எனக்கு உணர்த்த,” என்றான் இளங்கை.

“எங்கே? “

“கொட்டுந்தளத்தில்.”

“பிறகு இந்தக் கோடரி உன்னிடம் தானிருக்கிறது.”

“ஆம்.”

“வேறு யாரிடமும் கொடுக்கவில்லையா?”

“இல்லை. தனியாக என் உடைகளில் மறைத்து வைத்திருந்தேன்.”

“ஏன்?”

இந்தக் கேள்வியை வீரபாண்டியன் கேட்டதும் இளநங்கையின் கண்கள் அவனை நோக்கி நகைத்தன ‘எப்பேர்ப்பட்ட அறிவாளிகளும் சில சமயங்களில் முட்டாள்களாகி விடுகிறார்கள்’ என்று தீர்மானித்தாள் இளநங்கை. பொருநைத் தோப்பு முகப்பில் நிலவொளியில் அவன் மடியில் கிடந்து சிகிச்சை பெற்ற சமயத்தில் முதன் முதலாக அதைத் தான் பார்த்தது, பிறகு அதை அவன் வீரரவியின் மீது எறிந்து தன்னைத் தூக்கி வந்தது, அதன் பின்னர் பொருநைக் கரையில் உட்கார்ந்து பொற்கோடரி நஷ்டத்தைப்பற்றி அவன் விவரித்தது ஆகிய அனைத்தையும் பாபு எண்ணிப் பார்த்த இளநங்கை, தங்கள் இருவரையும் இப்படிப் பலபடி இணைத்ததும் அவன் இலச்சினை பதித்ததும், தன்னைக் காத்ததுமான அந்தக் கோடரியை வீர பாண்டியனாகவே பாவித்து, அவள் தன் சீலையில் சுருட்டி மறைந்திருக்க, அதைப்பற்றி விவரம் கேட்டால் தான் என்ன பதில் சொல்ல முடியும் என்று எண்ணினாள் வாணாதித்தன் மகள்.

அவள் தயக்கம் வீரபாண்டியன் உணர்வைச் சற்று இந்த உலகத்துக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். அவள் அழகிய விழிகளில் துளிர்த்த நகைப்பொலி அவன் புத்தியின் இருளையும் சிறிது கிழித்திருக்க வேண்டும். ஆகவே, அவன் தன் கேள்வியின் காரணத்தை விளக்க முற்பட்டு, “வேது யார் கையிலும் இது கிடைக்கக் கூடாதென்பதற்காக மறைத்து வைத்திருந்தாயா?” என்று வினவினாள்.

“ஆம்,” என்றாள் இளநங்கை, அவன் சமாளித்துக் கொள்ள முயல்வதை எண்ணி, உள்ளூர நகைத்துக் கொண்டு.

வீரபாண்டியன் சிறிது நிதானித்துவிட்டுச் சொன்னான், “இருப்பினும் இது வேறொருவருக்குக் கிடைத்திருக்கிறது; உபயோகிக்கப்பட்டும் இருக்கிறது.”எனறு.

இளநங்கை அந்த பொற்கோடரியை ஒரு கையில் தாங்கி இன்னொரு கையால் அதன் பிடியைத் தடவிக் கொடுத்தாள். அதன் கனத்த வார்ப்படத்தில் பொறிதிருந்த ராஜமுத்திரையை மட்டும் அவள் தொடவில்லை, அதில் படிந்திருந்த காரணத்தால், அந்தக் குருதிக் கறையை நோக்கிய அவள், “ஆம்” என்று ஆமோதிக்கும் பாவனையில் தலையை ஆட்டினாள்.

வீரபாண்டியன் விளக்கினான்: “இந்தக் கோட்டையிலிருந்து கால் காத தூரத்தில் இது கிடந்தது. மஞ்சள் வெயிலில் இது பளபளத்துக் கிடந்தபடியால் தூரத்திலேயே இதை நான் பார்க்க முடிந்தது. கலப்படமில்லாத பசும் பொன்னால் செய்யப்பட்டதாகையால் இது பெரிதும் பளபளக்கவே நான் இதை நாடி என் புரவியைச் செலுத்தினேன். நடுப்பாதையில் இது கிடந்தது…”

இந்த இடத்தில் சற்று நிதானித்த வீரபாண்டியன் மன்னனிருந்த இடத்தை நோக்கி இரண்டடி நடந்து மன்னன் மஞ்சத்திலிருந்த ஒரு கிழிந்த சீலையை எடுத்து இளநங்கையிடம் நீட்டி, “இது பக்கத்திலிருந்த ஒரு முட் புதரில் மாட்டிக் கொண்டிருந்தது,” என்றும் கூறினான்.

இளநங்கை அந்தச் சீலைக் கிழிசலைக் கையில் வாங்கி நோக்கினாள். “இது முத்துக்குமரி அணிந்திருந்த சீலையின் முத்தானைதான். சந்தேகமில்லை. இதை உடுத்துக்கொண்டு அவள் அன்று அருவிக்கரைக்குச் சென்றான்,” என்று கூறவும் செய்தாள்.

வீரபாண்டியன் மேலும் கேட்டான், இளவரசி இந்திரபானுவைச் சந்திக்கத்தான் அருவிக்குச் சென்றா நென்று உனக்குத் தெரியுமா?” என்று.

“தெரியும்,” என்றாள் இளநங்கை திடமாக.

“எப்படித் தெரியும்? உன்னிடம் சொன்னார்” என்று வீரபாண்டியன் வினவினான்.

இளவரசி மறைந்து கோட்டையே அல்லோல் கல்லோலப்படும் அந்த நிலையிலும் இளநங்கையில் இதழ்கள் இளநகை கூட்டின. முரட்டுத்தனமாக வீரபாண்டியன் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒரு விநாடி அவள் விழிக்கவும் செய்தாள். பிறகு சொன்னாள், “என்னிடம் சொல்லவில்லை , இருப்பினும் தெரியும்,” என்று.

“சொல்லாவிட்டாலும் தெரியும் என்பது விசித்திர மில்லையா?” என்று வினவினான் வீரபாண்டியன்.

“பெண்களைப் பற்றி ஆண்கள் உணரமுடியாத பல விசித்திரங்களில் இதுவும் ஒன்று,” என்று பதில் கூறினாள் இளநங்கை.

அதுவரை மௌனமாக மஞ்சத்தில் அமர்ந்து இருவர் சம்பாஷணையிலும் தலைவிடாத சுந்தரபாண்டியன் எழுந்திருந்து, தனது தம்பியின் பக்கத்தில் வந்து தின்றுகொண்டு இனநங்கையை நோக்கி, “இளநங்கை! தம் இப்படியெல்லாம் விசாரிக்கிறானே என்று கோபப்படாதே என் மகள் மறைந்து போனதற்கு இத்திரபானுதான் காரணமா என்று தெரியவில்லை. இருவரும் காணவில்லை என்பதுதான் தெரித்திருக்கிறது. அவள் அருவிக்கரைக்குச் சென்றதாக நீ கூறும் மூன்று நாட்களில் முதல் நாள் இந்திரபானு இங்கு இருந்திருக்கிறான்; மறுநாள் இல்லை மூன்றாம் நாள் இருந்திருக்கிறான். ஆகையால் அவன் மறைவுக்கு அவன்தான் காரணமா அல்லது வேறு யாராவது காரணமா என்று ஆராயப் பார்க்கிறான் தம்பி என்று விளக்கினான்.

அதை அவள் அறிந்தே இருந்தாள். இருப்பினும் நேரிடையாக முத்துக்குமரி சொல்லாத விஷயங்களுக்கு அத்தாட்சி காட்டவும் முடியாதாகையால் இளநங்கை சொன்னாள், “மன்னவா! பெண்கள் மற்றப் பெண்ணின் நடவடிக்கைகளைப் பல குறிப்புகளைக் கொண்டு உணருவார்கள். அது எப்படி என்று சொல்ல இயலாது. சொன்னாலும் ஆண்மக்கள் புரிந்துகொள்ள முடியாது. ஆகையால்தான் என்னால் விளக்கமுடியவில்லை. ஆனால் இளவரசி சென்றது இந்திரபானுவைச் சந்திக்கத்தான். அதில் சந்தேகம் வேண்டாம்.”

அவள் குரலிலிருந்த உறுதியைக் கவனித்த அண்ணனும், தம்பியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு மன்னன் வீரபாண்டியனை நோக்கிச் சொன்னான், “அப்படியானால் உன் ஊகம் சரிதான் தம்பி,” என்று.

“என்ன உலகம்?” என்று வினவினாள் இளநங்கை ஆவலுடன்.

“முத்துக்குமரி இருக்கும் இடத்தில் இந்திரபானுவும் இருக்கிறான் என்று நினைக்கிறான் தம்பி,” என்று மன்னன் கூறினான்.

இளநங்கை வீரபாண்டியனை நோக்கி, “அப்படியானால் முத்துக்குமரியை இந்திரபானு தூக்கிச் சென்று விட்டாரென்று முடிவுகட்டி விட்டீர்களா?” என்று இனவினாள்.

வீரபாண்டியன் கண்கள் அவன் இதயத்தையே ஊடுருவுவதுபோல் கூர்ந்து பார்த்தன. அப்படி முடிவு கட்டினால் அது தவறாகுமா?” என்று பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டான் அவன்.

“ஆம்,” திட்டமாக வந்தது இளநங்கையின் பதில்.

“என்ன அத்தனை திட்டமாகச் சொல்கிறாய்?” என்று வினவினான் இளவரசன்.

“இந்திரபானு இளவரசிக்குக் களவில்கூடத் தீங்கு நினைக்கமாட்டார்,” என்று இளநங்கை மீண்டும் வலியுறுத்தினாள்.

“என்ன காரணம்?

“உலகத்தின் மாபெரும் சக்தி”

“என்ன சக்தி அது?”

“பெண்ணிடம் ஆணை ஈர்க்கும் சக்தி. ஒரு பெண்ணிடம் உயிரை வைத்திருப்பவன் எக்காரணத்தைக் கொண்டும் அவளுக்கு தீங்கு விளைவிக்கமாட்டான் அதுவும் இரண்டு உள்ளங்கள் இணைந்துவிடும்போது…?”

“அப்படியானால் இளவரசியும்….”

“ஆம்.”

“அத்தாட்சி?”

இளநங்கை இதழ்கள் இகழ்ச்சியுடன் மடிந்தன “உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் புரிந்துகொள்ள முயலாதீர்கள் இளவரசே,” என்றும் கூறினாள் அவள் இகழ்ச்சியுடன்.

“அத்தாட்சியின்றி வேறு எந்த வகையில் இளவரசியின் மனத்தை நீ புரிந்துகொண்டாய்” என்ற வினவினான் வீரபாண்டியன்.

“இலக்கணம் என்பது ஒன்று உண்டு,” என்று இழுத்தாள் இளநங்கை.

“ஆம். தெரியும்” என்றான் வீரபாண்டியன்.

“அதில் குறிப்பாலுணர்த்துதல் என்றொரு வகை உண்டு.”

“உண்டு “.

“பெண்கள் தங்கள் கருத்தை அப்படித்தான் உணர்த்துவார்கள். ஆண்களைப்போல் பட்டவர்த்தன மாகப் பேச மாட்டார்கள்.”
அதற்குமேல் வீரபாண்டியன் அவளை விசாரிக்க வில்லை. மன்னனும் விசாரணை போதுமென்ற காரணத்தால், ‘இளநங்கை! நீ போ உன் விடுதிக்கு என்றான். இளநங்கை போகத் திரும்பினாள். அவளுடன் செல்ல வீரபாண்டியனும் அடியெடுத்து வைத்தான். சுந்தபாண்டியன் குரல் அவனைத் தடுத்தது. “நீ எங்கே போகிறாய் தம்பி?” என்று கேட்டான் மன்னன்.

“இன்னும் சிறிது ஆராய்ச்சி இருக்கிறது” என்றான் வீரபாண்டியன் சற்றே தலையைத் திருப்பி.

“ஆராய்ச்சியா?” மன்னன் கேள்வியில் வியப்பிருந்தது.

“ஆம். அருவிக்கரையைப் பார்க்கவேண்டும்.”

“அதை நம் வீரர்கள் பார்த்துவிட்டார்களே.”

“இருப்பினும் நானும் ஒருமுறை பார்க்கிறேன். பிறகு கோடரி கிடந்த இடத்தையும் பார்க்கவேண்டும்.”

“இந்த இருட்டிலா!”

“ஆம்.”

“கோட்டைக்கு வெளியே தனியாகப் போகப் போகிறாயா?”

“ஆம்.”

இதற்குமேல் மன்னன் பேசவில்லை. ஆபத்து என்றால் வீரபாண்டியனுக்குப் பரம இன்பம் என்பதை அவன் உணர்ந்திருந்தான். அது மட்டுமல்ல. தம்பியை வெளியே செல்லத் தூண்டியது எது என்பதையும் அவன் உணர்ந்து கொண்டான். இளநங்கை வெளியே செல்ல அடியெடுத்து வைக்குமுன்பு வீரபாண்டியனைக் கண்ணிமைக்கும் நேரம் பார்த்ததை மன்னன் கண்டான். ‘சரி. இலக்கணம் துவங்கிவிட்டது. இளநங்கையும் குறிப்பாலுணர்த்திவிட்டாள்,’ என்று உள்ளூர நகைத்துக் கொண்டான். சுந்தரபாண்டியன் அவர்களிருவரும் வெளியே செல்வதைப் பார்த்துக் கொண்டே தனது விடுதிக்கு வெளியே வந்தான். இருவரும் தமது விடுதி நோக்கிச் சென்றாலும் விடுதிக்குள் நுழையாமல் மலைச் சரிவில் ஏறி அருவியிருந்த பின்புறம் செல்வதைப் பார்த்து நின்ற சுந்தரபாண்டியன், ‘தம்பிக்கும் பலவீன மேற்பட்டு விட்டது’ என்று தனக்குள் வருந்தினான்.

அடுத்த அரைஜாம நேரம் தம்பி பெரும் பலவீனத்தில் இருந்தான். இளநங்கை குறிப்பாலுணர்த்திய விவரங்கள், விதங்கள், விஷயங்கள், அவனை அடியோடு திணற அடித்து விட்டன.

Previous articleRaja Muthirai Part 1 Ch31 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch33 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here