Home Historical Novel Raja Muthirai Part 1 Ch34 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch34 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

85
0
Raja Muthirai Part 1 Ch34 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch34 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch34 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 34 வீரபாண்டியன் ஆராய்ச்சி

Raja Muthirai Part 1 Ch34 |Raja Muthirai Part1|TamilNovel.in

அருவியின் ஓரத்தில், மலையின் மெல்லிய இன்பக் காற்றில், பந்தத்தின் பொன்னிற ஒளியில், பலப்பல விஷயங் களை மேலுக்குப் பேசிக்கொண்டிருந்தாலும், உள்ளே உணர்ச்சிகள் புரண்டதன் விளைவாக ஏற்பட்ட கைகளின் லேசான அசைவு, இடையின் நெகிழ்ச்சி, ஏறிட்டுப் பார்த்த ஒரே ஒரு சமயத்தில் உதயமான உதடுகளின் வெட்கமடிப்பு ஆகிய பல குறிப்புகளால் தனது இதய தாபத்தையெல்லாம் வீரபாண்டியனுக்கு உணர்த்திக்கொண்டிருந்த இளநங்கை பாண்டிய மன்னன் முன்பு வெளியிட்ட குறிப்பிலக்கணத் துக்குப் பெரு விளக்கம் தந்தானானாலும், அத்தனை இலக்கணமும் வீரபாண்டியனால் சுட்டிக்காட்டப்பட்ட பொருளைக் கண்டதும் பறந்தே விட்டது. அப்படிப் பறந்து விட்டதால், வீரபாண்டியன் அவளை இறுகப் பிடித்து அணைத்துத் தூக்கிய சமயத்தில் இன்ப உணர்ச்சிகளுக்குப் பதிலாக பெரும் வியப்பும் அச்சமும் கலந்த பிரமையே அவளை ஊடுருவலாயிற்று. அந்த அச்சமும் வியப்பும், ‘ஆம் ஆம்’ என்ற அவள் சொற்களில் மட்டுமின்றி அவன் அழகிய நாசியிலிருந்து கிளம்பிய பெருமூச்சிலும் பிரதி பலித்தன. அருவிக்கரையோரமாக இரண்டு சிறு கற்களுக்கிடையில் பளிச்சிட்ட ஒரு பெருமுத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்த இளநங்கை, அது தமிழர் கடலில் கிடைக்கும் இணையற்ற முத்துக்களில் ஒன்றென்பதையும் ஏகவிலையுள்ள தென்பதையும் தெரிந்து கொண்டாளானாலும், அது அங்கு எப்படி வந்ததென்பதைப் புரிந்துகொள்ள முடியாததால் வீரபாண்டியனை ஏறிட்டு நோக்கினாள்.

அவனைச் சுற்றிக் கிடந்த வீரபாண்டியன் கைகள் நன்றாக ஒருமுறை இறுகிப் பிறகு சட்டென்று அவன் அழகிய உடலைத் தன் பிணைப்பிலிருந்து விடுவித்தன. அவன் கால்கள் கம்பீர நடை நடந்து, முத்து விழுந்து கிடந்த இடத்துக்குச் சென்றன. அந்த முத்துக்கருகில் சென்றதும் அதை உடனே கையில் எடுக்காமலே சில விநாடிகள் உற்றுப் பார்த்த பிறகு, ஏதோ புரிந்து கொண்டு விட்டவன் போல் தலையை அசைத்த வீரபாண்டியன், அதை எடுத்துத் தனது இடதுகை கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் ஏந்தி, பந்த வெளிச்சத்தில் தூக்கிக் காட்டி ஆராய்ந்தான். பிறகு அருகில் வந்து நின்ற இளநங்கையிடமும் அதைக் காட்டி, “இதைப் பார் இளநங்கை! இதிலிருந்து உனக்கு என்ன புரிகிறது” என்றும் வினவினான்.

இளநங்கை ஏற்கனவே முத்தைப் பார்த்துக் கொண்டி ருந்தாளானாலும் அதைப்பற்றி ஏதும் தெரித்துக்கொள்ள இயலாததால் வீரபாண்டியனை ஏறெடுத்து நோக்கி, “நல்ல பெரிய முத்து,” என்று மட்டும் சொன்னாள்.

இடது கையில் முத்தைப் பிடித்துப் பந்த வெளிச்சத்தில் நன்றாகத் திருப்பிய வீரபாண்டியன், “முத்துப் பெரிதென்பது மேலாகப் பார்க்கும் போது தெரிகிறது. வேறென்ன தெரிகிறது?” என்று வினவினான்.

“வேறெதுவும் தெரியவில்லை. பெரிய முத்து. அரை ஸாகியோவுக்கு மேல் எடையிருக்கும். ஆகவே அரசர்களோ பெரும் தனவந்தர்கனோ அணியக்கூடியது என்றுதான் தெரிகிறது.” என்றாள் இளநங்கை ..
வீரபாண்டியனின் கண்கள் வெகு தீட்சண்யத்துடன் பிரகாசித்தன. “அது சரி இளநங்கை! இதற்கும் முத்துக் குமரி காணாமற்போனதற்கும் என்ன சம்பந்தம் தெரிகிறது உனக்கு?” என்று வினவினான், இளவரசன் ஏதோ உண்மையைக் கண்டுபிடித்துவிட்ட குரலில்.

மீண்டும் அவன் கையிலிருந்த பெருமுத்தின்மீது தனது பெருவிழிகளை இனதங்கை நாட்டினாளானாலும், அவளுக்கு ஏதும் விளங்காது போகவே, அவள் அவன்மீது

நன்றாகச் சாய்த்து நின்றாள். “எனக்கேதும் தெரியவில்லை” என்று உண்மையை யே சொன்னாள்.

அவள் காற்றுப் பட்டாலும் உணர்ச்சிவசப்படக் கூடிய வீரபாண்டியன், அவள் தன்மீது சாய்ந்து நின்ற அந்தச்சமயத்தில் அடியோடு உணர்ச்சியற்றிருந்தான்.

அவன் உடல் பெரும் இரும்பாகிவிட்டதை அவன் மீது சாய்ந்த விநாடியே புரிந்து கொண்ட இளநங்கை, வீர பாண்டியன் உள்ளத்தில் கோபத்தின் வேகம் உதயமாசி விட்டதைப் புரிந்து கொண்டாள். அவன் முகத்தை நோக்கிய அவள் அதன் கடினத் தன்மையைக் கண்டதும் வீரபாண்டியன் அடியோடு விரும்பாத ஒரு நிகழ்ச்சியை அந்தப் பெருமுத்து நிரூபிக்கிறதென்பதைப் புரிந்து கொண்டாலும், அவனிருந்த நிலையின் காரணமாக அதைப்பற்றி ஏதும் கேட்கத் துணிவு வரவில்லை அவளுக்கு.

வீரபாண்டியனே சொன்னான் உணர்ச்சியற்ற, வறண்ட குரலில், “இந்த முத்து புதிய முத்தல்ல,” என்று.
இளநங்கையின் கையொன்று அவன் கையுடன் இணைந்தது. “புதியதல்லவா?” என்ற சொல்லும் உதட்டி லிருந்து மெல்ல உதிர்ந்தது.

“அல்ல, புதிய முத்தல்ல, இதன் அடியைப் பார்,” என்ற வீரபாண்டியன் அந்த முத்தை ஒரு முறை உருட்டி விரலொன்றால் அந்த இடத்தைத் தட்டியும் காட்டினான். அத்துடன் மேலும் சொல்லவும் செய்தான். “இந்த அடிப் பகுதியில் முத்து முழுவெண்மையாக இல்லை; லேசாக மஞ்சள் ஏறியிருக்கிறது. அதுமட்டுமல்ல; அதிலுள்ள மஞ்சளும் முத்தைப் போலவே மிகப் பழையது,” என்று.

இளநங்கை பதிலேதும் சொல்லவில்லை. முத்து விஷயத்தில் அவளுக்கும் பெரும் பைத்தியம் உண்டு முத்தங்காடியை இரவிலும் பகலிலும் சுற்றுவதிலும், பெருமுத்துக்களை முடிந்த அளவில் வாங்கிச் சேர்ப்பதிலும் ஆவலுள்ளவள் தான் இளநங்கை. முத்துக்களின் தரம், அளவு, சுபாவம் இத்தனையும் அறிந்தவள்தான். ஆனால் தனது ஆராய்ச்சிக்கும், கண்ணுக்கும் புலப்படாத ஏதேதோ விஷயங்களை வீரபாண்டியன் சொல்வதைக் கேட்டுப் பிரமித்தாலும் மேலும் ஏதும் சொல்ல வகையில்லாமல் அவனையே பேசத்தூண்டி, “இத்தனையும் எப்படித் தெரிகிறது உங்களுக்கு?” என்றான்.

‘முத்தைப்பற்றி இத்தனைக்கூடத் தெரியாவிட்டால் முத்துக் கள்ளர்களைப் பிடிக்கப் பாண்டிய மன்னன் என்னை அனுப்புவாரா?’ என்று தன்னைத்தானே சிலாகித்துக் கொண்ட வீரபாண்டியன், “இது பல நாட்கள் அணியப் பட்டுப் பிறகு கழற்றி வைக்கப்பட்ட முத்து. அதனால் அடியிலுள்ள மஞ்சள் கறை அப்படியே இருக்கிறது. பெண்கள் பூசும் மஞ்சள் கறைதான் லேசில் அழியாது. ஆகவே, இந்த முத்து ஏதோ ஒரு பெண்ணின் மார்பில் தவழ்ந்தது. அதிலுள்ள மஞ்சளில் பட்டுப்பட்டுக் கறை படித்திருக்கிறது: சந்தேகமில்லை. இது ஒரு காலத்தில் முத்துக்குமரியால் உபயோகப்படுத்தப்பட்டதுதான். ஆனால் இது ஏன் இங்கு வந்தது? வெகு நாட்கள் அணியாத இந்த முத்தை, கின்ளுக் கம்பியில் தொங்கிக் கிடந்த இதை, ஏன் முத்துக்குமரி இந்த இடத்துக்கு எடுத்துவந்தான் என்பதுதான் எனக்குப் புலப்படவில்லை” என்று கூறினான்.

“கின்ளுக் கம்பியில் தொங்கிக் கிடந்ததா?” என்று வினவினான் இளநங்கை.

“ஆம். மதுரையில் முத்துக் கட்டும் முறையில் அது ஒன்று; முத்தை அதிகமாகத் துளைக்காமல் நல்ல பொற் கம்பியை வட்டமாக வளைத்து இருமுனைகளும் முத்தின் பக்கத்தில் சற்றே ஊடுருவும்படி பொருத்துவார்கள். அப்படி இணைக்கப்படும் தனி முத்துக்களை எந்த ஆபரணத்திலும் எந்த முறையிலும் கம்பியை தீக்கி இணைக்கலாம்,” என்று விளக்கிய வீரபாண்டியன், “இதோ பார் இளநங்கை, இந்த முத்தின் இரு பக்கங்களில் கம்பி நுழைந்த வடு இருக்கிறது.” என்று இரண்டு சிறு புள்ளிகளையும் காட்டினான்.

இளநங்கை வியப்புடன் அந்தப் புள்ளிகளைப் பார்த்து வீரபாண்டியனையும் பார்த்தாள். “அப்பப்பா! உங்களுக்கு எத்தனை கூரிய பார்வை!” என்று வியப்புடன் சொற்களையும் மெல்ல உதிர்த்தாள்.

“பல நாட்களாக அணியாத முத்தைத் தனது ஆபரணத்தில் என்ன காரணத்தாலோ எடுத்து அணித்து கொண்டு வந்திருக்கிறாள் முத்துக்குமரி. இங்கு எதிர்பாராத விபத்து அவளுக்குக் காத்திருக்கிறது. ஆகவே முத்தைக் கழற்றி எறிந்திருக்கிறாள் தமக்கு வழிகாட்ட. மிகச் சாமர்த்தியமாக எதிரி அறியாமல் இதைச் செய்திருக்கிறான் என் மகள். இதை வளைத்திணைத்திருந்த பொற்கம்பியும் இங்கு எங்காவது கண்டிப்பாய் இருக்கும்,” என்று கூறிய வீர பாண்டியன், அடி மேலடி எடுத்து வைத்து நடந்து பந்த வெளிச்சம் வந்த இடங்களிலெல்லாம் கண்ணை ஓட விட்டான். அவன் ஊகித்தது சரியாகவே இருந்தது. அவனைத் தொடர்ந்து சென்ற இளநங்கையின் கண்களுக்கே தென்பட்டது அந்த முத்துக்கம்பி, “அதோ இருக்கிறது.” என்று சுட்டிக் காட்டினாள் இரண்டு கூழாங்கற்களுக்கிடையில் கிடந்த அந்தக் கம்பியை.

அதைக் கையில் எடுத்த வீரபாண்டியன் அதை ஒரே ஒரு விநாடி பார்த்துவிட்டு, அதை முத்தின் துவார வடுக்களில் பிணைத்துப் பொருத்திக் குண்டலம் போல் ஆக்கி இளநங்கையிடம் காட்டி, “பார்த்தாயா!” என்று வினவினான். அவன் கை விரல்களிலாடிய அந்த முத்துக் குண்டலத்தைப் பார்த்த அவள் பெருவியப்பெய்தினாள். பொற்கம்பிகளுக்கிடை ஆடிய சமயத்தில், அந்த முத்து வெண்மையுடன் இன்னும் பல ஒளிகளை வெளியிட்டது. அப்படிப் பளபளத்த முத்தை அவளிடம் காட்டிவிட்டுச் சிறிது ஏதோ யோசித்த வீரபாண்டியன், “இளநங்கை! இப்படி வா,” என்றழைத்துக் கழுத்தில் சுழன்று மார்புக் கிடையில் சென்றிருந்த பொற் சங்கிலியை இழுத்து, முத்துக் கம்பியின் ஒருபுறத்தை நீக்கி சங்கிலிக்குள் கோத்து மீண்டும் அதைப் பழையபடி பொருத்தினான்.
பிறகு முத்தைப் பற்றியோ வளையத்தைப் பற்றியோ சிந்திக்காமல் அருவிக் கரையோரம் நடந்து கோட்டை மதில் சுவர் வரையில் சென்றான். மதிலையும் மதில் சுவருக்கு அடியிலிருந்த பெரும் துவாரத்தின் மூலம் வந்து கொண்டிருந்த அருவி நீரையும் நீண்ட நேரம் ஆராய்ந்தான். பிறகு திடீரென மதிலை நோக்கி ஓடி அதன்மீது தாவி ஏறிக் கோட்டைக்கு வெளியே குதித்தான்.

நீண்ட நேரம் வீரபாண்டியளைக் காணவில்லை. அவனை அழைக்கவோ வேறு ஏதும் தினைக்கவோ திராணி யில்லாமல் நின்று கொண்டிருந்தான் இளநங்கை முத்துக்குமரி அபகரிக்கப்பட்டது விஷயமாக அவனுக்கு ஏதோ புலன் கிடைத்த விட்டதென்பதை அவள் உணர்த்தானானாலும், அது என்ன புவன், அதிலிருந்து என்ன தெரிந்து கொண்டான் இளவரசன் என்பது புரியாததால், எதிர்பார்ப்பு நிறைந்த சிந்தனையுடன் தின்று கொண்டிருந்தான், இளநங்கை அருவிக் கரையின் ரத்தில், நீண்ட நேரம் கழித்து மீண்டும் கோட்டைச் சுவர் வழியாக ஏறிக் குதித்து உள்ளே வந்த வீரபாண்டியனின் முகம் பார்ப்பதற்குக் கல்லாயிருந்தது. அவன் மனதின் கடுங் கோபத்தை அந்த முகத்திலிருந்தே புரிந்து கொண்ட இனநங்கை கேட்டான், “ஏதாவது புலன் கிடைத்ததா?” என்று.

“கிடைத்தது புலன் ஒன்றல்ல. பல,” என்ற வீர பாண்டியன் குரலில் கடுமை இருந்தது.

“என்ன புலன்கள்”” என்று வினவினாள் இளநங்கை.

“முத்துக்குமரி இங்கு வந்து காத்திருக்கிறாள் இந்திர பானுவுக்காக. அப்பொழுது அந்தக் கோட்டைச் சுவருக்குக் கீழுள்ள அருவித் துவாரத்தின் வழியாக ஒருவன் உள்ளே வந்து அவளைப் பின்புறமாகக் கட்டிப் பிடித்துத் தூக்கியிருக்கிறான். பிறகு அவளைக் கோட்டைச் சுவர் வழியாக வெளியே உள்ள ஒருவனிடம் கொடுத்திருக்கிறான்.” என்று கூறினான் வீரபாண்டியன்.

இளநங்கையின் பிரமிப்பு உச்சநிலைக்குச் சென்றது. “என்ன! நேரில் அத்தனையும் பார்த்த மாதிரி சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“நேரில் பார்க்க வேண்டிய அவசியமில்லை இளநங்கை. இங்குள்ள அடையாளங்கள் அனைத்தையும் சொல்கின்றன. அதோ அந்த பந்த வெளிச்சம் இந்தப் பிராந்தியம் பூராவும் விழுவதால், அருவிக் கரைக்கருகில் யாரிருந்தாலும் உள் விடுதிக்குப் பின்புறமுள்ள மரத்திடம் வரும்போதே நன்றாகத் தெரியும். ஆகவே மரத்தடியிலேயே யாராவது மறைந்திருந்தாலொழிய முத்துக்குமரியை ஏமாற்றிருக்க முடியாது. ஆகவே, அருவிக்கரைக்கு அவள் வரும்போது யாருமில்லை. பின்புதான் அந்த மனிதனும் வந்திருக்க முடியும். ஒன்று அவன் உள்ளேயிருந்து வரலாம் அல்லது வெளியிலிருந்து வரலாம். உள்ளிருந்து வரவில்லை சுவருக் கருகிலுள்ள அருவிக்கரையில் சரம் சொட்டச் சொட்ட – யாரோ நடந்திருக்கிற அடிச்சுவடு தெரிகிறது பகலாயிருந்தால் துணி ஈரம் அதிகமாகச் சொட்டி விட்டாலும் அந்தச் சுவடு மறைந்திருக்கும். ஆனால் இன்னுமிருக்கிறது. அதுமட்டுமல்ல, முத்துக்குமரியை அவன் பிடித்தவுடன் அவள் திமிறியிருப்பதும் பாறைக் கருகில் தெரிகிறது. சரிவு பெற்ற கூழாங்கற்களுக்குக் கீழேயுள்ள பொடி மண்ணில் காலடிகள் தெரிகின்றன. சந்தேகமில்லை. முத்துக்குமரி பலவந்தமாகத் தூக்கிச் செல்லப்பட்டிருக்கிறாள். அந்த நிலையில் எதிரி அறியாமல் இந்த முத்தையும் கம்பியையும் கழற்றி நழுவவிட்டிருக்கிறாள். நான் இதைக் கண்டால் தொடர்ந்து வருவேனென்பது அவளுக்குத் தெரியும். இத்தனையும் புரிகிறது எனக்கு. ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை ” என்றான் வீரபாண்டியன்.

அவன் விவரணத்தைக் கேட்டுப் பிரமித்துப் போன இளநங்கை, “என்ன புரியவில்லை?” என்று வினவினாள்.

“நான் இப்பொழுது இங்கு வருவேனென்பது அவளுக்கு எப்படித் தெரிந்தது?” என்று வினாவினான் வீர பாண்டியன்.

“மன்னர் சொல்லியிருப்பார்,” என்றாள் இளநங்கை.

“ஒருகாலும் சொல்லிருக்க மாட்டார். நான் வருவதைப் பெரும் ரகசியமாக வைத்திருக்கும்படி அவருக்கு ஓலை எழுதியிருந்தேன். வேறு எப்படியோ தெரிந்திருக்கிறது அவளுக்கு. வேறு யாரோ இதை அறிந்திருக்கிறார்கள் கோட்டைக்குள் ஒரு புல்லுருவியிருக்கிறான்.”

இளநங்கையின் இதயம் துடித்தது. “அப்படியா! இத்தனை பாதுகாப்புள்ள கோட்டையில் யார் வேவு பார்க்க முடியும்? அதுவும் அரசரை வேவு பார்க்க முடியும்? ஒரு வேளை..

“என்ன இளநங்கை.?” என்று வினவினான் வீர பாண்டியன்.

“இந்திரபானு…”

அதே சந்தேகம் வீரபாண்டியனுக்கும் உதித்திருக்க வேண்டும். “இருக்கும் நிலை இந்திரபானுவுக்கு விரோத மாகத்தான் இருக்கிறது. ஆனால் முழுதும் ஆராயாமல் தீர் மானிக்க முடியாது. வா – போவோம்” என்று சொன்ன வீர பாண்டியன் அவளை அழைத்துக்கொண்டு அவன் விடுதிக்கு வந்து சேர்ந்தான். “உன்ளே போ இனநங்கை,” என்றான்.

“நீங்கள்?” “மன்னரைப் பார்க்கப் போகிறேன்.”

இதைக் கூறிவிட்டு வெகுவேகமாக மன்னனிருந்த விடுதிக்குச் சென்று உள்ளே நுழைந்த வீரபாண்டியன், சில விநாடிகளுக்கெல்லாம் வெளிவந்து புரவி லாயத்தை நோக்கிச் சென்றான். அடுத்த விநாடி சாம்பல் நிறப் புரவியில் ஆரோகணித்த பாண்டிய இளவல் கோட்டைக்கு வெளியே பாய்த்து சென்றான்.

அவன் நடவடிக்கை அத்தனையையும் இளநங்கை தனது விடுதித்தாழ்வரையிலிருந்தே பார்த்துக்கொண்டு நின்றாள். சுற்றிலும் ஆபத்திருக்கிறதென்பதை அருவிக் கரையில் வீரபாண்டியன் தந்த விளக்கத்திலிருந்து புரிந்து கொண்டதால், அவன் ஆபத்தை நோக்கிச் செல்கிறா னென்பதை அறிந்து துன்பப் பெருமூச்சு விட்டாள். உண்மையில், அந்தச் சமயத்தில் வீரபாண்டியன் அவனும் உணராத, முற்றிலும் எதிர்பாராத பேராபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்.

Previous articleRaja Muthirai Part 1 Ch33 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch35 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here