Home Historical Novel Raja Muthirai Part 1 Ch36 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch36 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

77
0
Raja Muthirai Part 1 Ch36 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch36 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch36 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 36 செண்பகப் பூ

Raja Muthirai Part 1 Ch36 |Raja Muthirai Part1|TamilNovel.in

எதிரேயிருந்த புதருக்கருகில் கள்வர்கள் வைத்திருந்த விளக்கினிடம் வந்தவுடனேயே, அந்தக் கிழவன் யாரென்பதைப் புரிந்துக்கொண்ட வீரபாண்டியன் பெரு வியப்படைந்தான் என்றால், அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. தான் பாண்டிய நாட்டுப் படைவீரரின் உடையணிந்து கோட்டைக்குள் துழைந்த சமயத்தில், மன்னன் விடுதியின் முன்பாகக் காவல் புரிந்து கொண்டிருந்த அந்த வயோதிகனே எதிரியின் கையான் என்பதை வீரபாண்டியன் நினைத்துக் கூடப் பார்க்காததால், கிழவனின் உண்மைச் சொரூபம் வெளியானதும், ‘இந்த வயதில் இத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு இவனுக்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும்?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் இளவரசன். அவனது வயோதிகமும், சாதாரணமாக அவன் முகத்தில் பிரதிபலித்த போலி சாத்விகப் பார்வையுமே கோட்டைக்குள்ளிருந்த சகலரையும் ஏமாற்றியிருக்க வேண்டும் என்று தீர்மானித்தான் வீரபாண்டியன். எந்த வீரனையும் சற்று எட்டப் பார்க்கும் போதே எடைபோட்டு விடவல்ல தன் அறிவைக் கூடப் பயனற்றதாக அடித்த அந்தக் கிழவன் லேசுபட்டவனாயிருக்க முடியாதென்று தீர்மானித்துக் கொண்டதால், அவனை மிகுந்த எச்சரிக்கை யுடன் சமாளிக்க வேண்டும் என்ற உறுதியும் கொண்டான் வீரபாண்டியன்.

வீரபாண்டியன் எதிரிலுள்ள மற்றொரு புதரில் ஒளிந்து கொண்டிருப்பதை அறியாத வயோதிக வீரன், கள்வர்களை நோக்கிச் சொன்னான், “முன்னால் நீங்கள் தூக்கிச் சென்ற பெண் எந்த விடுதியிலிருந்தாளோ அந்த விடுதியிலேயே இவளும் இருக்கிறாள். அவள் எந்த இடத்தில் வந்து தனது காதலனைச் சந்திக்கிறாளோ அங்குதான் இவளும் சந்திக்கிறாள்,” என்று.

“இவளுக்கும் காதலன் இருக்கிறானா?” என்று வினவினான் கள்வர்களில் ஒருவன்.

“இருக்கிறான். ஆனால் முந்தியவனைப்போல் சிறு பிள்னையல்ல அவன். கரிய அறிவுடையவன். அதுமட்டு மல்ல; கூரிய வானையும் உடையவன். கூரிய கோடரி ஒன்றுமிருக்கிறது அவனிடம்,” என்றான் கிழவன்.

கோடரியா?” சற்று அலட்சியத்துடன் கேட்டான் கள்வன்.

“அதை அத்தனை அலட்சியமாக நினைக்க வேண்டாம். அவன் கண்ணுக்கெட்டும் தூரத்தில் நீ எங்கிருந்தாலும் அது உன்மீது பாய்ந்துவிடும். அதைவிட அபாயமான ஆயுதத்தையோ, அதை எறிபவனைவிட அபாயமான மனிதனையோ நான் பார்த்ததில்லை. இம்முறை காரியம் முன்பு போல் அத்தனை எளிதாயிருக்காது.” என்று எச்சரித்தான் கிழவன்.

“அந்த மனிதன் இருக்கும் போதா நாம் பெண்ணைத் தூக்கப் போகிறோம்? கோட்டை உறங்கும் போது தானே நாம் இதைச் செய்யப்போகிறோம்?” என்று கேட்டான் கள்வர்களில் இன்னொருவன்.

கிழவன் முகத்தில் சற்றுக் கடுமை படர்ந்தது. “கோட்டை உறங்கும்; இவன் உறங்கமாட்டான். அவன் கழுகுக் கண்களிலிருந்து யாரும், எதுவும் தப்புவது கடினம். ஆகவே, இம்முறை நாம் மிகுந்த எச்சரிக்கையுடனிருக்க வேண்டும்” என்று சற்றுப் பயத்துடனேசோ முதலில் பேசிய கிழவன், பிறகு உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு பேசலானான். “இப்பொழுது முதல் ஜாமம் முடிந்து விட்டது. நான் இங்கிருந்து சென்றதும் மூன்றாம் ஜாம ஆரம்பத்தில் ஒரு சிறு விளக்கைப் பழைய இடத்தில், அதாவது மதகு மூலம் கோட்டைக்குள் அருவி புகுமிடத்திலுள்ள கோட்டைச் சுவரில் அசைக்கிறேன் நீங்களிருவரும் பழையபடி உள்ளே வாருங்கள்…” என்று சொல்லிக் கொண்டே போன கிழவனை இடைமறித்த கள்வனொருவன், “நாங்கள் இருவருமா?” என்று வினவினான் வியப்புடன்.

“ஆம்.” கிழவன் குரல் திட்டமாக இருந்தது.

“போன தடவை ஒருவர் தானே வந்தோம்?”

“அந்தப் பெண் வேறு; இவள் வேறு.”

“என்ன வித்தியாசம் இருவருக்கும்?”

“இவனைப் பெண் என்று சொல்லுவதைவிட ஆண் என்று சொல்வது பொருத்தும். அதிக முன் எச்சரிக்கை யில்லாவிட்டால் இவளைப் பிடிப்பது கஷ்டம். இவளுக்குச் சிலம்பம், வாட்போர், மற்போர் எல்லாம் தெரியும்.”

“பெரிய முரடா?”

“அசாத்திய முரடு, கொற்கையில் இரண்டு மூன்று வாலிபர்கள் கால் முறித்திருக்கிறது. கொலை இன்னும் செய்யவில்லை. செய்ய முடியாதென்பதல்ல. அவளுக்கு வாய்ப்பு வரவில்லை. அந்த வாய்ப்பை நாம் அளிக்க வேண்டாம்.” இதைச் சொன்ன கிழவன் கண்களிலும் சிறிது அச்சம் உதயமாயிற்று.

இதைக் கேட்ட கள்வர்களும் பயந்தார்கள், “மிக அபாயமான வேலை,” என்றான் ஒருவன்.

“அபாயமில்லாமல் பணம் ஏது?” என்று சீறிய கிழவன், “ஆனால் உங்கள் அபாயத்தைப் பெரிதும் குறைக்கிறேன். நீங்கள் வருவதற்குள் அவள் மூர்ச்சையற்றுக் கிடப்பாள், சுவருக்கு அப்பால் கொண்டு வருவதுதான் உங்கள் பொறுப்பு” என்றும் கூறினான்.

“மூர்ச்சையாகக் கிடப்பாளா?” என்று வினவினான் ஒரு கள்வன்.

“ஒருத்தி காணாமற்போன இடத்துக்கு மற்றொருத்தி வருவாளா?” என்று வினவினான் இன்னொருவன்,

“நான் வரவழைக்கிறேன், அதற்கு வசதி இருக்கிறது.” என்று தன் தலையை விரலால் தட்டிக் காட்டிய கிழவன், போன தடவை வந்தவளின் காதலனும் வெளியே சென்று விட்டான். அந்தப் பெண்ணிடம், அவள் காதலன் மறுநாள் அருவிக்கருகில் சந்திப்பானென்று கூறி வரவழைத்தேன். இவளிடம் வேலுமுறை கையாளப் போகிறேன். அறிவு சம்பந்தமான செயல்களை எனக்கு விட்டுவிடுங்கள், வெறும் உடல் கொழுப்பினால் செய்யக்கூடிய அலுவல்களை நீங்கள் செய்தால் போதும்,” என்றான்.
“இப்பொழுது என்ன சொல்லி அந்தப் பெண்ணை அழைத்து வருவீர்கள்?” என்று வினவினான் முதல் கள்வன்.

“அந்தக் கவலை உங்களுக்குத் தேவையில்லை. சரியாக மூன்றாம் ஜாமம் முடித்ததும், மதகில் மூழ்கி உள்ளே வாருங்கள்,” என்று உத்தரவிட்ட கிழவன், “நான் சொல்வது புரிந்ததா?” என்று வினவினான்.

புரிந்தென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த கள்வர்களிருவரை நோக்கி, அவளையும் இதே இடத்துக்குக் கொண்டு வாருங்கள். இங்கு முன்பு போல் பத்துப் புரவி வீரர்கள் இருப்பார்கள். அவர்களிடம் அவளை ஒப்படையுங்கள்.” என்றான் கிழவன்.

“முதல் பெண்ணைப் போல் இவளும் சண்டையிட்டுத் தப்பியோட முயன்றால்?” என்று வினவினான் ஒரு கள்வன்.

“அவளை வாயில் துணியடைத்து மட்டும் தூக்கி வந்தோம். அவளுக்குச் சுரணையிருந்தது. இவளுக்கு இருக்காது,” என்று கிழவன் விளக்கினான்.

“சரி, உங்கள் ஆணைப்படி இம்முறை செய்து விடுகிறோம். அடுத்தபடி இம்மாதிரிப் பணி எங்களால் முடியாது. இது முடிந்தவுடன் பணமுடிப்பு எங்களிடம் வரவேண்டும்,” என்றான் ஒரு கள்வன்.

“பணமுடிப்புக்கு நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. பெண்ணை இங்கு கொண்டு வந்தவுடன், இங்குள்ள வீரர்களிலொருவன் பணமுடிப்பைத் தயாராக வைத்திருப்பான். பெண்ணை இங்கு கொண்டுவந்து சேர்ப்பதுடன் உங்கள் பணி முடிந்துவிடுகிறது. இம்முறை மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள் வீரபாண்டியன் எப்பொழுது எங்கிருப்பான் என்பதை சொல்ல முடியாது,” என்றான் கிழவன்.

அந்தப் பெயரைக் கேட்டதும் இரு கள்வர்களும் திடுக்கிட்டுக் கலவரம் நிரம்பிய விழிகளைக் கிழவன் மீது நிலைக்க விட்டார்கள். “என்ன! வீரபாண்டியரா! அவரா இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்?” என்று கேட்டான் ஒரு கள்வன் திகிலுடன்.

“ஆம்.” கிழவன் திடமாகச் சொன்னான்.

“வீரபாண்டியர் சம்பந்தப்பட்ட விஷயமானான பெரும் ஆபத்தாயிற்றே?” என்றான் மற்றொரு கள்வனும் பயத்துடன்.

“ஆபத்தில்லாமல் நீங்களிருவரும் விளையாடவா பொன் முடிப்புத் தருகிறோம்? அல்லது நீங்கள் பெரும் புலவர்களா, சேரமன்னனிடம் பொற்கிழி பெற?” என்று வினவினான் கிழவன்.

“சேர மன்னரா!” என்று வாயைப் பிளந்தான் ஒரு கள்வன்.

“ஆம்.”

“நேற்று வந்தவர் சேர நாட்டவராகக் காணப்பட வில்லையே!”

“இல்லை.”
“அவர்.” என்ற கள்வனை எரிக்கும் விழிகளால் பார்த்தான் கிழவன். “இரவில் எதுவும் பேசாதே,” என்ற பழமொழியையும் உதடுகளிலிருந்து உதிர்த்தான் “உங்களிடம் நாட்டு நடப்புகளைப் பேசவும், அரசர் படைத் தலைவர்கள் ஆகியோரைப் பற்றி விவாதிக்கவும் நாங்கள் இங்கு வரவில்லை.” என்றும் அதட்டிய கிழவன் சொன்னபடி செய்யுங்கள். வழக்கம்போல் உங்களுக்குத் துணையும் அதிகமிருக்கும். இருபது வீரர்களுக்குக் குறையாமல் உங்களுக்கு உதவுவார்கள்,” என்று கூறிவிட்டு, அத்துடன் அங்கிருந்து கிளம்பினான். அவன் சொன்னதைப் பார்த்துக் கொண்டே நின்ற கள்வர் இருவர் முகத்திலும் பயத்தின் சாயை பலமாகப் படந்து கிடந்தது.

வீரபாண்டியன், மறைந்த இடத்தைவிட்டு நகரவே யில்லை. கிழவனும் அவனுடன் வந்தவர்களும் ஏதோ பேசும் அரவம் மட்டும் சற்றுத் தொலைவில் கேட்டது அவன் காதுகளுக்கு. அதற்குப் பிறகு அவனுடன் வந்த நாலைந்து பேர் ஒரு திக்கிலும் கிழவன் மட்டும் கோட்டையை நோக்கியும் செல்வதைக் குதிரைக் குளம்பொலிகளால் உணர்ந்த வீரபாண்டியன், மெல்லத் திரும்பி ஓசைப்படாமல் நடந்து தனது புரவியிருக்குமிடம் வந்து பல விநாடிகள் அங்கேயே நின்றான். கள்வரிருவரும் விளக்கை அணைத்து விட்டதையும் பிறகு அவர்கள் மீண்டும் கோட்டைப் பாதையை நோக்கிச் சென்று விட்டதையும் உணர்ந்த வீரபாண்டியன், ஒருமுறை மரங்களின் அடைப்பிலிருந்து வெளிவந்து ஆகாயத்தை நோக்கினான். அங்கிருந்த விண்மீன்களின் நிலையைக் கவனித்து, ‘சரி, சரி! நிரம்ப அவகாசமிருக்கிறது. இப்பொழுதுதான் இரண்டாம் ஜாமம் துவங்கியிருக்கிறது, என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். பிறகு தனது புரவி மீது ஏறி மீண்டும் கோட்டைப் பாதையில் செல்லாமல் எதிர்மலைக்குச் சென்ற பாதையை ஆராய்ந்துகொண்டு சென்றான். அப்படிச் சென்ற சமயத்தில், அவன் முகத்தில் தீவிர சிந்தனை மட்டுமிருந்ததேயன்றிக் கோபமோ, கோபம் துளிர்க்கும் சமயத்தில் ஏற்படும் அந்தப் பயங்கரப் பார்வையோ இல்லை. முகத்தில் ஒரு குழப்பம் மட்டும் லேசாக இருந்தது. சற்று முன்பு தான் கண்டெடுத்த பதக்கத்தைக் கச்சையிலிருந்து எடுத்து இரண்டு மூன்று முறை திருப்பித் திருப்பிப் பார்த்தான். ‘இதுதான் சிறிது சங்கடத்தை அளிக்கிறது. இது உண்மையானால் பாண்டிய மன்னன் எந்தப் பக்கம் திரும்புவார்? மேற்கிலா? வடக்கிலா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டான். பிறகு எதிரே எழுந்து நின்ற மலையைக் கவனித்தான். ‘அங்குதான் எங்கோ கோட்டையாறு கிளம்பு வேண்டும்’, என்றும் தனக்குள் முணுமுணுத்தும் கொண்டான்.

அந்தச் சமயத்தில் அந்த இடத்தில் தான் பேராபத்தி லிருந்ததை உணர்ந்து கொண்டான் பாண்டிய இளவரசன் அந்தப் பகுதியில் சேரர் படையால் நிர்வகிக்கப்படும் கள்வர்கள் மட்டுமல்ல – சேரர் படைப் பிரிவுகளும் இருக்க வேண்டுமென்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்டால் அவன், கள்வர்களைச் சேரவீரர்கள் பணமுடிப்புடன் சந்திப்பார்கள் என்று கிழவன் சொன்னதால், எந்தப் பகுதியிலும் அவர்களிருக்கலாமென்பதையும், எந்தச் சமயத்திலும் அவர்களால் தான் வளைக்கப்படலம் மென்பதையும் அறிந்திருந்தான் அவன். அத்தகைய அபாய நிலையிலிருந்தும், இளநங்கையின் நிலையும் பெரிய ஆபத்திலிருந்தும், அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் மலையையும் கோட்டையாற்றைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டும் சென்றான்.

வீரபாண்டியன் சிந்தனை இந்த நிலையிலிருச்சு இளநங்கையின் சிந்தனை மட்டும் வீரபாண்டியன் மீதே வயித்திருந்தது. கோட்டையை விட்டுச் சென்ற அவல் என்ன ஆபத்திலிருக்கிறோனோ என்ற திகிலே அவளை வாட்டிக் கொண்டிருந்ததால், பஞ்சணையில் வேதனை நிரம்பிய உள்ளத்துடன் புரண்டு கொண்டிருந்தாள். இன்ப சமயங்களில் துரிதமாகத் துள்ளியோடிவிடும் நேரம் அந்தத் துன்ப நிலையில் ஏனோ வெகு தாமதமாக ஒடி கொண்டிருந்தது.

நேரத்தை அவள்தான் ஒட்டிக்கொண்டிருந்தாள் அப்படி மெல்ல நகர்ந்த நேரமும் இரண்டாவது ஜாமத்தை முடித்த சமயத்தில் கிழவன் மெள்ள மன்னனிருந்த விடுதிக் காவலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இளநங்கையின் விடுதி நோக்கிச் சென்று மெள்ளக் கதவைத் தட்டினான். ஏற்கெனவே விழித்திருந்ததால் வெகு வேகமாக வந்து கதவைத் திறந்த இளநங்கை, “என்ன வேண்டும் உனக்கு?” என்று வினவினாள்.

கிழவன் புன்முறுவல் காட்டினான். “எனக் கெதுவும் வேண்டாம். வேண்டுவது வேறொருவருக்கு” என்றான்.

அவன் சொல்வதைப் புரிந்து கொண்டாள் இளநங்கை. “அவர்…” என்று துவங்கினாள்.

“இளவரசர் வந்துவிட்டார்.”

“அப்படியா!” என்று இளநங்கை மகிழ்ச்சிப் புன்முறுவல் காட்டினாள்.
“நாளை அதே இடத்தில் சந்திப்பதாகச் சொன்னார்.” என்றான் கிழவன்.

*அப்படியா?”

“ஆம்.”

“இன்று ?”

“வெளியே போய்வந்த களைப்பால் உறங்கச் சென்று லிட்டார். ஆனால் வெளியிலிருந்து ஒன்று கொண்டு வந்தார். உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.” என்ற இழவன், அதுகாறும் தன் கையில் மறைத்து வைத்திருந்த செண்பகப் பூ ஒன்றை அவளிடம் நீட்டினான்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக்கொண்ட இளநங்கை அதை ஒரு விநாடி பார்த்தாள். பிறகு ஆசையுடன் நாசியால் முகர்ந்தாள். “அப்பா! என்ன வாசனை!” என்று சொற்களை உதிர்த்து முடிக்க முயன்றாள். சொற்களைச் சொல்லி முடிக்கவில்லை அவள் வாசனை’ என்ற சொல் குழறி வந்தது வாயிலிருந்து. கண் பெரு இருட்டாக இருட்டியது. விழ இருந்த வாணாதித்தன் மகளை வயோதிகன் வெகு லாகவமாகப் பிடித்துத் தூக்கிக் கொண்டு விடுதிக்குள் சென்றான்.

Previous articleRaja Muthirai Part 1 Ch35 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch37 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here