Home Historical Novel Raja Muthirai Part 1 Ch37 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch37 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

60
0
Raja Muthirai Part 1 Ch37 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch37 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch37 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 37 நீ யாரென்பது எனக்குத் தெரியும்!

Raja Muthirai Part 1 Ch37 |Raja Muthirai Part1|TamilNovel.in

செண்பகப் பூவை முகர்ந்ததும், மரத்திலிருந்து உதிர்ந்துவிட்ட மற்றொரு செண்பகப் பூவைப்போல சாய்ந்து விழப்போன இளநங்கையைக் கீழே விழாமல் தாங்கிப் பிடித்து இருகைகளிலும் ஏந்தியவண்ணம் உள்ளே நுழைந்த அந்த வயோதிக வீரன், வாயிற்கதவை மென் இடது காலால் தள்ளி மூடிவிட்டுச் சென்றதன்தி கையிலிருந்த பூங்கொடியை உள்ளிருந்த பஞ்சணையில் படுக்க வைத்ததும், மீண்டும் வாயிற்புறம் வந்து அந்த கதவை ஓசைப்படாமல் தாளிட்டுக் கொண்டும் சென்றான பஞ்சணையில் கிடந்த பைங்கிளியை உந்து நோக்கிவிட்டு விடுதியின் பின்புறம் சென்று புறக்கடைச் சுவரை ஆராய்ந்தான்.

பாதுகாப்பை முன்னிட்டு அந்தப் பின்புறச் சுவரில் வாயிற்படி ஏதும் வைக்கப்படாததாலும், மற்றவர்கள் செல்வதுபோல் வாயில் வழியாக விடுதியைச் சுற்றிச் செல்ல முடியாதாகையாலும், வயோதிகன் அந்தச் சுவருக்கருசிலிருந்த இரண்டு மூன்று பாறைகளை உருட்டி நிற்க வைத்து அதில் ஏறிப் பார்த்தான். அடுப்புப்போல் வைக்கப்பட்ட இரு பாறைகளின்மீது மூன்றாவது பாறை திடமாக நின்றதையும் அதன்மீது ஏறியதும் பின்புறத்தில் எட்ட இருந்த மரமும் அருவியும் பந்தமும் நன்றாகத் தெரிவதையும் கவனித்த வயோதிகன் திருப்தியுடன் கீழே இறங்கினான் பிறகு உள்ளே வந்து இளநங்கையை ஒருமுறை அசக்கிப் பார்த்து விட்டுப் பரம திருப்தியுடன் மீண்டும் வாயில் கதவைத் திறந்து மூடிக்கொண்டு வெளியே வந்து படிகளில் இறங்கிச் சென்றான். அங்கிருந்த நிலையையும் பா வீட்டு விண்மீன்களையும் நோக்கினான்.
மூன்றாம் ஜாமம் அப்பொழுதுதான் துவங்கியிருந்தது. அதனால் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட வயோதிகன், மன்னன் விடுதியிலிருந்து கிளம்பி நேராக இளநங்கை விடுதியைக் கடந்து செல்லுமுன்பு, சற்றுத்தூரத்திலிருந்த ஒரு காவலனிடம் பேச்சுக் கொடுத்தான் “என்னை விடுதியின் பின் புறக் காவலுக்கு போட்டிருக்கிறார்கள். மன்னர் விடுதியில் இருவர்தான் காவலிருக்கிறார்கள். நீயும் பார்த்துக்கொள்” என்று கூறினான் கிழவன்.

வீரன் முகத்தில் வியப்பு துளிர்த்தது. “விடுதிக்குப் பின் புறம் காவல் எப்பொழுதும் கிடையாதே,” என்று கூறினான் வியப்பு குரலில் ஒலிக்க.

“மன்னன் மகள் காணாது போன பிறகு காவல் போட்டிருக்கிறார்கள்,” என்று கூறிய கிழவன் பெரு அலுப்புடன் செல்பவனைப் போல நிதானித்து இளநங்கையிருந்த விடுதியைச் சுற்றிப் பின்புறம் சென்றான். சரி, சந்தேகம் ஏதாவது ஏற்படுமானால் அதை விலக்கி யாகிவிட்டது, இனி யாரும் பார்க்கவும் மாட்டார்கள் தேடவும் மாட்டார்கள்’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்ட கிழவன் விடுதியின் பின்புறம் செனறதும் நிதானத்தைக் கைவிட்டுப் பெரும் சுறுசுறுப்பைக் காட்டினான்.

வெகு துரிதமாக நடந்து சென்று மரத்தடியின் பொந்தில் மறைத்து வைத்திருந்த அகல் விளக்கை எடுத்து மதில்சுவருக்குப் பக்கத்திலிருந்த கொளுத்தி, பந்தத்தில் கொளுத்தி, சுவர்மீது வைத்து இருமுறை அசக்கினான். சற்று நேரம் நிதானித்து எதையோ உற்றுக் கேட்டபின் அவன் முகத்தில் திருப்தி நிலவியது. பிறகு அருவிக்கருகில் சென்று மதகுமூலம் குபுகுபுவென்று வந்து உள்ளே பாய்ந்து கொண்டிருந்த நீர்க்குழிக்குப் பக்கத்தில் நின்றான். அவன் அதிக நேரம் காத்திருக்க அவசியமில்லாதிருந்தது. அந்த மதகுத் துவாரத்தின் மூலம் ஒருவர் பின்னொருவராக இருவரும் வந்தார்கள்.

அவர்கள் அருவியின் வேகத்தில் புரண்டு எழுந்திருத் ததும் தன் பின்னால் அவர்களை வரச்சொல்லி, இளநங்கை யிருந்த விடுதியின் பின்புறம் வந்ததும் அங்கு இரண்டு பாறைகளை அவர்களை அடுக்கச் சொல்லி, “நீங்கள் இங்கேயே இருங்கள். நான் அவளைக் கொண்டு வருகிறேன் சத்தம் சிறிதும் செய்யவேண்டாம்” என்று கூறிவிட்டு, அப்பாறைகள் மீது ஏறி அடுத்த பக்கத்தில் தான் ஏற்கெனவே அடுக்கியிருந்த பாறை வழியாக இறங்கிச் சென்றான். அடுத்த இரண்டு மூன்று திமிடங்களுக்குள் இளநங்கையைத் தூக்கிவந்த கிழவன் பாறைமீது ஏறி “உம்… பிடியுங்கள்” என்று அவர்களிடம் இளநங்கையைக் கொடுத்தான்.

அவர்கள் அந்த புஷ்பச் சுமையை வாங்கி மறுபுறம் இறங்கியவுடன் சுவர் ஏறிக் குதித்துத் தானும் இறங்கிய வயோதிகன் இளநங்கையைத் தூக்கிக்கொண்டு அவர்களைத் தன்னுடன் வரும்படி சைகை செய்து அருவிக் கரையை நோக்கி மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்தான் அருவிக்கரைக்கு வந்ததும் கள்வரிலொருவனைச் சுவரேறி வெளியே குதிக்கும்படி உத்தரவிட்டு, இன்னொரு கள்வனை மதில்மீதேறி நிற்கச் சொல்லி இனதங்கையைத் தான் வாங்கி உயர்த்தினான். அவனை மதில் மீதிருந்தவன் வாங்கிக் கீழே கொடுக்க அங்கிருந்த கள்வன் வாங்கிக் கொண்டான். மற்றவனும் சிரமப்பட்டு அப்புறம் குதித்து விடவே மதில்மீது தொங்கி நின்ற கிழவன் அவர்களைப் போகும்படி சைகை செய்துவிட்டுப் பழையபடி மன்னன விடுதிக்கு வந்து, வாயில் காவல் முடிந்துவிடவே, நேராகக் காவலர் விடுதிக்குச் சென்று தனது படுக்கையில் படுத்து நன்றாக உறங்கினான்.

முதல்நாளிரவு பூராவும் விழித்திருந்த காரணத்தால் நீண்டநேரம் உறங்கிவிட்ட வயோதிக வீரன் கதிரவன் உதித்து நான்கு நாழிகைக்குப் பிறகே எழுந்திருந்தான். நேரம் அதிகமாகிவிட்டதைச் சாளரத்தின் மூலம் உடலில் பட்ட சூரிய கிரணத்திலிருந்து அறிந்து கண்ணைக் கசகிக் கொண்டு படுக்கையிலேயே சிறிது நேரம் உட்கார்ந்து போசித்தான்.

பிறகு எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்துக் கொண்டு காவல் உடையணிந்து காவலர் விடுதியிலிருந்து வெளியே வந்தான். கோட்டையைச் சுற்றிலும் ஒருமுறை கண்ணை ஓட்டிய கிழவன் முகத்தில் மேலும் திருப்தியே நிலவியது. இனநங்கை காணாமற்போனதைக் குறித்துப் பெரும் குழப்பமும், கலவரமும் கோட்டையில் இருக்குமென்று எதிர்பார்த்த கிழவன் அக்கோட்டையில் அமைதியைக் கண்டு வியந்தான். இத்தகைய காவல் புலிகளைக் கொண்டு பாண்டிய மன்னன் என்ன காரியத்தைச் சாதிக்கப் போகிறான் என்று தனக்குள் இகழ்ச்சியுடன் சொல்லியும் கொண்டான். இரவில் காணாது போனவளை நான்கு நாழிகைக்குப் பிறகும் தேட முற்படாத மன்னனின் தீட்சண்யத்தைப் பற்றி அலுத்துக் கொண்டான் கிழவன். “சரி, அவர்கள் அறிந்து கொள்கிற போது, அறிந்து கொள்ளட்டும்.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, காவல் விடுதியிலிருந்து படிகளில் இறங்கி மன்னன் விடுதியை நோக்கி நடந்தான்.

வழக்கம்போல் கோட்டை மிகுந்த சுறுகறுப்புடன் காணப்பட்டது. புரவிகள் நடைப் பழக்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன. இன்னும் சில காவல் வீரர்கள் புரவிகள் மீதமர்ந்து வேகமாகக் கோட்டையின் பல பகுதிகளில் அணிவகுக்கவும், போர் பயிற்சி செய்யவும் சென்று கொண்டிருந்தார்கள். இத்தனையும் கிழவனுக்குப் பூரண உற்சாகத்தை அளித்தன. ராஜநடை நடந்து மன்னன் விடுதிக்கு வந்தான்.

மன்னன் விடுதியை அவன் அடைந்ததும், அங்கு அவன் முற்றும் எதிர்பாராத பணியொன்று காத்திருந்தது அவனை மன்னர் அழைத்ததாக அங்கிருந்த காவலன் உறவே, உள்ளே சென்ற கிழவனை மஞ்சத்தில் உட்கார்ந்திருந்த மன்னன் புன்முறுவலுடன் வரவேற்று “உன் பெயரென்ன?” என்றான்.

“முஞ்சன்!” என்றான் வயோதிகன், திடீரென மன்னன் தன் பெயரைக் கேட்பதன் காரணம் அறியாமல்.

“முஞ்சனா!” என்ற மன்னன், “வடநாட்டுப் பெயராகத் தெரிகிறது,” என்று கூறினான். மன்னன் முறுவல் அதிகமாக விரிந்தது.

“ஆம். நான் வடநாட்டவன் தான்,” என்றால் வயோதிகன் சற்றுச் சங்கடத்துடனும், சந்தேகத்துடனும்.

“மிக்க மகிழ்ச்சி.” மன்னன் மகிழ்ச்சி எல்லை கடந்து தெரிந்தது அவர் முகத்தில்.

கிழவனுக்கு மெல்லப் பயம் துளிர்த்தது. “எதற்கு மகிழ்ச்சி மகாராஜா?” என்று வினவினான் அவன்.

“நமக்குச் சேவை புரிய வடநாட்டிலிருந்து நீ வந்தது குறித்து,” என்றான் மன்னன்.

கிழவன் சங்கடம் அதிகமாயிற்று. “வயிறு வளர்க்க எங்கு சென்றாலென்ன?” என்ற கிழவன் சொற்களை இவை மறித்து மன்னன், “எதைச் செய்தாலென்ன?” என்று முடித்தான்.

கிழவன் நிமிர்ந்து நன்றாக நின்றுகொண்டான் அவன் உள்ளத்தில் என்ன குழப்பமோ பயமோ இருந்தாலும் அது முகத்தில் தெரியவில்லை. “மகாராஜாம் எதற்கு அழைத்தீர்கள் என்னை?” என்று கேள்வியைக் தொடர்ந்தான் பணிவு நிறைந்த குரலில்.

சுந்தரபாண்டியன் சிறிது சிந்தித்துவிட்டுக் கேட்டான் “நீ வயோதிகன் ஆனதால் அரச குடும்பத்து ரகசியங்களை வெளியிடாதிருக்க முடியுமென்று நினைக்கிறேன்,” என்று.

கிழவன் உள்னத்தில் சிறிது சாந்தி நிலவியது “முடியும்”, என்றான்.

“அப்படியானால் ஒன்று கேட்கிறேன். நமது விடுதியில் நீ காவலிருக்கும் சமயங்களில் எதிர் விடுதியைப் பார்க்க முடியுமல்லவா?”

“முடியும்”

“இளநங்கையும், என் தம்பியும் விடுதிக்குப் பின்புறம் இராக்காலத்தில் செல்வதைப் பார்த்திருக்கிறாயா?”

“மகாராஜா!”

“உம்… பதில் சொல்லு, பயப்பட வேண்டாம்.”

“எப்போதோ ஒருமுறை பார்த்திருக்கிறேன்.”

“இல்லை. பலமுறை போயிருக்கிறான். நேற்றிரவும் போயிருக்கிறாள்.”

“இல்லை மகாராஜா.”

“எப்படித் தெரியும் உனக்கு?”

“நேற்றிரவு நான்தான் இங்கு காவலிருந்தேன்.”

“அதனாலென்ன?”

“அங்கு ஏற்கனவே இளவரசி காணாமல் போய் விட்டதால் அந்த விடுதியின் மீதும் கண் வைத்திருப்பேன். யாரும் விடுதியிலிருந்து செல்லவில்லை . தவிர ” என்று சொன்னதும் கிழவனுக்குப் பெரும் சந்தேகம் ஏற்பட்டது. “மகாராஜா! தேற்றிரவு வீரபாண்டியர் இங்கில்லையே வெளியே சென்றாரே” என்றான் குழம்பிய குரலில்.

“சென்றது உண்மை. பிறகு திரும்பிவிட்டான். நீ காவல் செய்கிற லட்சணமும் அந்த விடுதிமீது கண் வைக்கிற லட்சணமும் இதுதானா?” என்று சீறிய மன்னன், “சரி சரி! நீ போய் இளநங்கையை அழைத்து வா!” என்றும் உத்தரவிட்டான்.

கிழவன் திருதிருவென ஆந்தை போல் விழித்தான். மன்னன் இட்ட விசித்திர ஆணையை நினைத்துக் கலங்கவும் செய்தான். இளநங்கை காணாத விஷயத்தை மற்றவர்கள் மூலம் மன்னன் அறியத் தான் போட்ட திட்டம் படுதூளாகி விட்டதையும், அதையும் தானே சொல்ல வேண்டி வந்த நிலையையும் நினைத்துக் குழப்பத்துடன் வெளியே சென்றான்.

பெருங்குழப்பத்துடன் மன்னனின் விடுதிப் படிகளிலிருந்து இறங்கி விடுதிக்கு மெல்ல மெல்ல நடந்து சென்ற கிழவனுக்கு அந்த விடுதியிலும் ஓர், ஆச்சரியம் காத்திருந்தது. அவன் அந்த விடுதியின் படிகளில் ஏறிக்கதவைத் திறந்தவுடனேயே, “யார் அது?” என்ற அதட்டலான குரல் உள்ளிருந்து கேட்டது.

அந்தக் குரலைக் கேட்டு அசைவற்று நின்றுவிட்டான் கிழவன். அது இளநங்கையின் குரல்! அதில் எந்தவித ஆயாசமோ, அதிர்ச்சியோ இல்லை. அதைக் கேட்டுச் செயலற்று நின்றுவிட்ட கிழவனிருந்த இடத்துக்கு இளநங்கையே எழுந்து வந்தான். அன்று அவள் புத்தம்புது உடை உடுத்தியிருந்தாள். கையிலும் ஒரு செண்பக மலரை வைத்துக்கொண்டு அதை முகர்ந்த வண்ணம் வெளியே வந்தாள்.

கிழவன் மனோநிலை விவரிக்க இயலாதிருந்தது. ஏதோ பிசாசைப் பார்ப்பது போல் அவளை வெறித்துப் பார்த்தான் கிழவன். “மன்னர்..” என்று சிறிது சிரமத்துடன் துவங்கினான்.
“என்ன மன்னருக்கு!” சர்வ சகஜமாக கேட்டாள் இளநங்கை.

“உங்களை அழைத்துவரச் சொன்னார்” என்றான் கிழவன்.

“ஏதாவது விசேஷமுண்டா?”

“தெரியாது.”

மேற்கொண்டு கேள்வி ஏதும் கேட்காமல் அவனைப்பின் தொடர்ந்தாள் இளநங்கை. அவளை அழைத்துக் கொண்டு மன்னன் விடுதிக்குள் நுழைந்த கிழவன் மலைத்து நின்றான் வாயிற்படியில்.

“உள்ளே வா” என்ற மன்னன் குரல் அவன் கால்களை உள்ளிழுத்துச் சென்றது.

மன்னனுக்கருகில் வீரபாண்டியனும் உட்கார்த்திருந் தான். அவர்களுக்கருகில் இருந்த இரண்டு ஆசனங்களில் ஒன்றில் இளநங்கை உட்கார்ந்தாள்.

“நீங்களும் உட்காருங்கள்” என்று வீரபாண்டியன் இன்னொரு மஞ்சத்தைக் கிழவனுக்குக் காட்டினான்.

“நான்…” என்று இழுத்தான் கிழவன்.

“யாரென்பது எனக்குத் தெரியும்” என்ற வீர பாண்டியன் உதடுகளில் புன்முறுவல் விரிந்தது. இடைக்கச்சையிலிருந்த ஒரு பதக்கத்தை எடுத்துக் கையில் வீர பாண்டியன் சுண்டிக் காட்டியதும், பெரும் பீதி கிழவன் உள்ளத்தைச் சூழ்ந்து கொண்டது. வீரபாண்டியன் கைகளில் வைத்து ஒருமுறைக்கிருமுறையாக அந்தப் பதக்கத்தைச் சுண்டிக் கையில் பிடித்தபோது, தனது உயிரையே அவன் பிடிக்கிறானென்பதைப் புரிந்து கொண்ட தால் பீதி பெரிதும் வளர்ந்தாலும், அதைக் கூடியவரை வெளிக்குக் காட்டாமல் அடக்கிக் கொண்டான் அந்த வயோதிகன். அது மட்டுமல்ல. அப்பொழுதும் ஏதும் அறியாதவன்போல் நடித்த கிழவன், “நீங்கள் சொல்வது விளங்கவில்லை. நான் யாரென்பது உங்களுக்குத் தெரியுமென்பதும் விசித்திரமில்லை. நான் மன்னர் விடுதியின் காவலன்,” என்று கூறினான்.

இளவரசன், தன்னிடம் சிக்கிக்கொண்ட அந்தச் சமயத்திலும் கிழவன் தைரியத்துடன் உண்மையை மறைக்க முயல்வதைக் கண்டு ஆச்சரியம் மேலிட்டவனாய்ச் சொன்னான், “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!” என்று.

கிழவன் திடுக்கிட்டான். “என்ன சொல்கிறீர்கள்?”

வீரபாண்டியன் ஒரு விநாடி ஏதோ சிந்தித்தான். “நீங்கள் அந்தத் தாடியையும், மீசையையும் எடுத்து விட்டால்ḥ நாம் சௌகரியமாகப் பேசலாமல்லவா?” என்று கடைசியில் வினவினான்.

“இளவரசே!”

“பதற வேண்டாம். உங்களை முதலில் பார்த்தபோதே நான் புரிந்து கொண்டேன் உமது வேஷத்தை, பாம்பின் கால் பாம்பறியுமல்லவா? ஒரு வேவுகாரன் இன்னொரு வேவுகாரனைப் புரிந்துகொள்வது கஷ்டமா?” என்றும் கூறி நகைத்தான் வீரபாண்டியன்.

கிழவன் திக்பிரமை பிடித்து நின்றான்.

Previous articleRaja Muthirai Part 1 Ch36 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch38 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here