Home Historical Novel Raja Muthirai Part 1 Ch4 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch4 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

75
0
Raja Muthirai Part 1 Ch4 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch4 |Raja Muthirai Part 1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch4 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 4 ராஜமுத்திரை

Raja Muthirai Part 1 Ch4 |Raja Muthirai Part 1|TamilNovel.in

அந்த வாலிபன் தந்த பொருளைக் கண்டதும் தந்தை எதற்காகப் பிரமித்தார்; கூவினார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாததால் வியப்பு மிஞ்சிய தன் வேல் விழிகளை அவரை நோக்கி உயர்த்திய இளநங்கை, “ஏன் இப்படிப் பதட்டப்படுகிறீர்கள்?” என்று வினவினாள்.

கோட்டைக் காவலன் விழிகளும் வியப்பையே கக்கின. “ஏன், பதட்டப்படுகிறேனா?” என்று அவர் கேட்ட கேள்வியிலும் ஆச்சரியத்தின் எல்லை தெரிந்தது.

“ஆம்! இந்தப் பதக்கத்தைக் கையில் வாங்கியதும் ஏதோ நெருப்புத் துண்டத்தை ஏந்திவிட்டது போல் துடிக்கிறீர்களே?” என்று மீண்டும் கேட்டாள் இனதங்கை.

கோட்டைக்காவலர் அவளைப் பரிதாபத்துடன் பார்த்து விட்டு, “நீ குழந்தை, உனக்கு எங்கே இதைப் பற்றித் தெரியப்போகிறது?” என்று கூறினார். “சரி சரி! அது கிடக்கட்டும். இதை உன்னிடம் கொடுத்தவர் எங்கே?” என்று கேட்டு, அந்த வாலிபன் இருப்பிடத்தை அறிவதில் ஆவலைக் காட்டினார்.

“எனக்குத் தெரியாது” என்று பதில் சொன்னான் இளநங்கை.

“தெரியாதா?

“தெரியாது”
“பின் இது எப்படி உன் கையில் வந்தது?”

“அவர் இதைக் கொடுத்து உங்கள் கையில் கொடுக்கும் படி சொன்னார்.”

“எந்த இடத்தில் சொன்னார்?”

*தோப்பின் விளிம்பில்.”

“அங்குதான் அவரைச் சந்தித்தாயா?”

“நான் சந்திக்கவில்லை. அவர் என்னைத் தொடர்ந்து வந்தார். “

“இன்றா?”

“இல்லை. பத்து நாட்களாகவே தொடர்ந்து வருகிறார்.”

தந்தையும் மகளும் இப்படிக் கேள்வி பதில்களை மாற்றிக் கொண்டபிறகு, தத்தையே சற்று அடங்கினார். சட்டென்று தாம் வினாக்களை விடுப்பதால் பயனேதுமில்லை என்பதை உணர்ந்ததால், “நடந்ததைச் சொல்” என்று கடைசியாகக் கூறிவிட்டுத் தமது மஞ்சத்தில் அமர்த்துவிட்டார். இளநங்கையின் இடுப்பில் ரத்தம் கசியா விட்டாலும், வலி மட்டும் அப்பொழுதும் இருந்து கொண்டிருக்கவே, ஒரு கையால் இடையின் அந்தப் பகுதியைத் தாங்கிக்கொண்டு, எதிரேயிருந்த மற்றொரு மஞ்சத்தில் உட்கார்ந்து கடந்த பத்து நாட்களாக நடந்த கதையை எடுத்துச் சொன்னான். அவள் தந்தையும் அதை வெகு நிதானமாகக் கேட்டுக் கொண்டார். நடந்த விடியங்கள் அனைத்தும் சொன்னாளென்று கூற முடியாது தான். அந்த இளங்காளை தன் இடையைக் கட்டியபோது, சேலையைக் கீழே தள்ளியது. படித்துறையில் தான் மஞ்சள் பூசும் போது மல்லாந்து நீந்திய போதும் கண்கொட்டாமல் பார்த்தது – இவற்றையெல்லாம் அவள் சொல்ல முடியுமா என்ன?

அவற்றைத் தவிர பொதுவாகச் சொல்ல வேண்டி யதையெல்லாம் சொல்லவே செய்தாள், மூன்றாம் பிறை முதற்கொண்டு அந்த வாலிபன் தன்னைக் கண்காணித்தது. முத்தங்காடியிலிருந்து தொடர்ந்துவந்தது. அவனைக் கொல்ல நடந்த முயற்சி, பிறகு தன் மீது கத்தி பாய்ந்து தான் மூர்ச்சையடைந்தது. அவன் சிகிச்சை செய்தது – இவற்றை மட்டும் பொதுப்படையாகச் சொன்னாள். அப்படிப் பொதுப்படையாகச் சொன்னபோதுகூடப் பல இடங்களில் அவள் குரல் சங்கடப்பட்டது. சில இடங்களில் நெகிழ்ந்து பலவீனப்படவும் செய்தது. சாதாரண சமயமாயிருந்தால் கோட்டைக் காவலர், மகளின் தடுமாற்றத்தையெல்லாம் கவனித்திருப்பார். ஓரளவு அவள் மனோநிலையை உனர்ந்துமிருப்பார். அவருக்கு அப்போதிருந்த மனக் கிளர்ச்சியில், கையிலிருந்த பொருளைத் திருப்பித் திருப்பிப் பார்த்த பிரமையில், தமது மகளின் மன நெகிழ்ச்சியையோ குரல் உணர்ச்சியையோ சிறிதும் கவனிக்கவேயில்லை.

அவள் பத்து நான் கதையின் பொது அம்சங்களைச் சொல்லி முடித்ததும், அவர் எப்படியிருந்தார்? விவரமாகச் சொல்” என்று மட்டும் கேட்டார். ஏதோ குற்ற விசாரணை செய்யும் நீதிபதியைப் போல.
இளநங்கையின் வதனம் மிகவும் மென்மைப்பட்டது. அதில் ஒரு வெட்கமும் சூழ்ந்து கொண்டது. ஆகவே தலை குனிந்த வண்ணம் சொன்னாள். “அவரை நான் நன்றாகப் பார்க்கவில்லை. பொதுவில் பார்த்ததுதான்,” என்று.

கோட்டைக் காவலர் அவள் உணர்ச்சிகளைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவள் தம் மகளென்பதைக்கூட மறந்துவிட்டதாகத் தோன்றியது. அவா முகமிருந்த நிலை, “சரி, சரி, தெரிந்ததைச் சொல்” என்றார்.

அப்பொழுதும் இளநங்கை அந்த வாலிபனைப் பற்றி விவரிக்க விரும்பாததால், “ஏனப்பா, அவர்தான் நானை இங்கு வருவதாகச் சொல்லியிருக்கிறாரே, அவரை நீங்கள் நேரிலேயே பார்க்கலாமே!” என்றாள்.

கோட்டைக் காவலர், அவள் கேள்வியையும் யோசனையையும் ரசிக்கவில்லையென்பதை அவர் முகம் காட்டியது.

“அதிருக்கட்டும். கேட்பதற்குப் பதில் சொல்” என்றார் கண்டிப்பான குரலில்.

இளதங்கை பஞ்சத்தில் சங்கடத்துடன் அசைந்தாள். பிறகு கோபத்துடன் கேட்டாள். “என் இடையில் அந்தக் கள்வர்கள் எறிந்த குறுவாள் காயம் பிராணனை வாங்குகிறது. மருத்துவரைக் கூப்பிடக்கூட உங்களுக்கு யோசனையில்லை. திரும்ப திரும்ப பெயரைக்கூட சொல்ல மறுத்த அவரைப் பற்றி விவரம் கேட்கிறீர்களே” என்று.

கோட்டைக் காவலர் அவள் கோபத்தை லவலேசமும் லட்சியம் செய்பவில்லை. “காயத்தைப் பார்த்தால் போகிறது. அவர்தான் கட்டியிருக்கிறாரே, அந்தக் குறுவாளால் பிராணன் போகிறதாயிருந்தால் நீ கோட்டை வரையில் நடந்து வந்திருக்கவும் முடியாது. இங்கு உட்கார்ந்து கோபப்படவும் முடியாது. விஷயத்தைச் சொல், அவர் எப்படியிருந்தார்?” என்று கோட்டைக் காவலர் தயை தாட்சண்யமில்லாமல் கேட்டார்.

அதற்குமேல் தாமதிப்பதற்குக் காரணமில்லாததால். இளநங்கை சொன்னாள் சங்கடத்துடன், “அவர் நல்ல உயரம். மெல்லிய உடல்தான். இருப்பினும் இரும்பு என்பதை அவர் கட்டுப்போட்ட முரட்டுத்தனத்திலிருந்து தெரிந்துகொண்டேன்” என்று.

உண்மையில் அந்த வாலிபன் கட்டுப் போட்டபோது அவளுக்குச் சுரணையில்லை. அவன் தொடையில் படுத்திருந்தபோது காலின் கடினத்தைத்தான் அறிந்தி ருந்தாள். ஆனால் அதை எப்படிச் சொல்லுவாள் அவள்? சிறிது மாற்றியே விஷயத்தைக் கூறினாள், தந்தை விடாப்பிடியாகக் கேள்விகளைக் கேட்டதால்.

“உம்.” என்று மேலே சொல்லும்படி ஊக்கினார் தந்தை.

*கண்களில் பெரும் ஒளியிருந்தது. யாரையும் கனடுருவிப் பார்க்கும் சக்தி வாய்ந்த கண்கள் போல் தோன்றின, இடைவில் பெரும் வாளொன்றைக் கட்டியிருந்தார்.” என்று இளநங்கை சிறிது தாமதித்தாள்.

கோட்டைக் காவலர் அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் மனத்தில் பதியவைத்துக் கொண்டார். ஆகவே, ஏதும் பேசாமல் மௌனமாகவே இருந்தார். இளநங்கை மேலும் விவரிக்கத் தொடங்கி, “அவர் நெற்றி யில் சூரியனைப்போல் திலகமிருந்தது. கழுத்தில் ஒரு வீரச்சங்கிலி இருந்தது. அதற்கு ஒரு புதுவித முகப்பு இருந்தது. தாரத்தில் பார்த்ததால் அதன் விவரம் புரியவில்லை ஆனால் ஒன்று மட்டும்…” என்று சிறிது நிறுத்தினாள்.

கோட்டைத் தலைவர் திடீரென்று உயிர் பெற்றவர் போல் தலையை நிமிர்த்தினார். “ஆனால் என்ன?” என்று வினவினார் துடிப்புடன்.

“வலது கையில் ஒரு பெரும் கங்கணமிருந்தது. மிக மஞ்சளாய் இருந்ததால் அது சுத்தத் தங்கமாயிருக்க வேண்டும். அதன் முகப்பில் ஒரு பெரும் முத்து இருந்தது” என்று கூறினான் இளநங்கை.

“பெரும் முத்தா!” என்ற தந்தையின் கேள்வியில் ஆச்சர்யம், ஆவல் இரண்டும் ஒலித்தன.

“ஆம்,” என்றாள் இளநங்கை.

“எத்தனை பெரியது?” என்று வினவினார் கோட்டைக் காவலர்.

“இத்தனை.” என்று பரிமாணத்தை விரல்களைக் குளித்துக் காட்டிய இளநங்கை, “ஒன்று மட்டும் நிச்சயம், அத்தனை பெரிய முத்தை நான் இதுவரை பார்த்ததில்லை” என்றாள்.

“அங்காடியில் முத்துச்சரத்தைப் பார்த்ததாகக் கூறினாயே, அந்த முத்துக்களைவிடப் பெரியதா?” என்று வினவினார் அவள் தந்தை.

“பல மடங்கு பெரியது.”

“நல்ல கனமிருக்குமா?”

“இருக்குமென்றுதான் தோன்றியது”

“என்ன எடையிருக்கும்?”

“எடை யார் போட்டது?”

“உனக்குத்தான் முத்துக்களைப்பற்றி எல்லாம் தெரியுமே. நீ முத்துப் பைத்தியமாயில்லாவிட்டால், தங்கத்தைக் கொட்டிக் கொட்டிக் கொடுத்து முத்துக்களை வாங்கி வாங்கி சோப்பாயா பிரதி வருடம்? அது இடக்கட்டும் சொல், இந்த முத்தின் எடை எத்தனை யிருக்கும்?”

இளநங்கை சற்று யோசித்தாள். “யவனர் எடைப்படி பார்த்தால் ஒரு வாக்கியோவுக்குக் குறையாது” என்று கூறினாள் முடிவில்.

“இப்பொழுது புரிகிறதா உனக்கு?” என்று வினவினார் கோட்டைக் காவலர்.

“ஏதும் புரியவில்லை எனக்கு.” என்றாள் அவர் மகள்.

கோட்டைக் காவலர் தன் மஞ்சைத்தைவிட்டு எழுந்து அப்படியும் இப்படியும் அறையில் உலாவினார். பலகணி மூலம் வெளியே எட்டிப் பொருதையாற்றைச் சில விநாடிகளும், அதன் விளிம்பிலிருந்த தோப்பைச் சில விநாடிகளும் கவனித்தார். பிறகு உட்புறம் திரும்பி, “மகளே பாண்டிய நாட்டின் சதித் திட்டங்களை நீ அறியமாட்டாய், இந்தக் கொற்கை தோன்றிய நாளாக, பாண்டிய மன்னர் களின் இரண்டாவது தலைநகராக இது இருந்த நாளாக, அதாவது சுமார் ஐந்நூறு ஆண்டுகளாகச் சில முக்கிய வரம்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்று அதிக முக்கியத்துவமின்றி, ஆண்டுக்கு ஒருமுறை கூடும் முத்துச் சந்தையைத் தவிர, வேறு கும்பல் கூச்சலின்றி மாறிக் கிடக்கும் இந்தக் கொற்கை மாநகரம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டின் பிரதான கடல் வாயிலாக இருந்தது. இங்கு நடந்தது உலக வாணிபம்; இந்த நகரம் இன்று பார்க்கும் சோனகர், யவனர், எகிப்தியர், அராபியர் ஆகியவர்களை விடப் பன்மடங்கு அதிகமாகப் பார்த்த காலம் அது. பொருநையின் முகத்துவாரம் இந்தக் கோட்டையிலிருந்து கூப்பிடு தூரத்திலிருந்த அந்த மகோன்னத நாளில், இன்று காயல் பட்டணத்து வாசலில் நிற்கும் உலக மரக்கலங்கள் இங்கு நின்று கொண்டிருந்தன. பிறகு கடல் பின்வாங்கி, தாமிரபரணியிலும் மண்ணைடித்த பிறகு, காயல் துறைமுகப் பட்டணமாயிற்று, அந்தப் பழைய காலக் கொற்கையில் நடந்த முத்து வாணிபம் கணக்கில டங்காதது. பாரத நாட்டுச் செல்கமெல்லாம் கொற்கையின் கடலில் கிடந்தது. அதை வாங்க, வாரியெடுத்துக்கொண்டு, போக வணிகர், திருடர், வீரர் அனைவருமே வந்தனர். வணிகருக்கு வசதியளிக்கப்பட்டது. வரம்புக்குட்பட்டு, திருடர் தண்டிக்கப்பட்டனர். வீரர்களுக்கு வாணிபமில்லை. பரிசு உண்டு. ஆனால், அன்றும் இன்றும் முத்துக்களைப் பற்றிய உச்ச வரம்பு ஒன்றுதான். சட்டதிட்டங்கள் ஒரே வகைதான். அந்தச் சட்டத்தின் முக்கிய விதி ஒன்று உண்டு.” என்று உணர்ச்சியுடன் வார்த்தைகளை உதிர்த்தார்.

தந்தை பாண்டி நாட்டு முத்துக்களின் வாணிப வரலாற்றைப் பற்றிப் பெருமையுடன் கூறியதற்குக் காரணம் அவளுக்குத் தெரியும், ஆனால் சட்ட திட்டங்களைப் பற்றி அவர் ஏன் குறிப்பிட முயன்றார் என்பது அவளுக்குத் தெரியவில்லை . “அந்த முக்கிய விதி என்ன?” என்று வினவினாள்.

“அரை ஸாக்கியோ எடைக்கு மேற்பட்ட முத்து எதையும் யாரும் பாண்டி நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லக் கூடாது. அதற்கு மேற்பட்ட எடையுள்ள முத்துக்கள் மன்னர் பொக்கிஷத்துக்குத்தான் போக வேண்டும்” என்று கோட்டைத் தலைவர் மிக நிதானமாகவும் உறுதியுடனும் வார்த்தைகளை உதிர்த்ததன்றி மகளை உற்று நோக்கவும் செய்தார்.

இளதங்கையும் தனது கண்களை உயர்த்தி, தநதையை பிரமிப்புடன் நோக்கினான். இருவர் கண்களும் நீண்ட நேரம் சந்தித்துக் கிடந்தன. அதுவரை விளங்காத பல விஷயங்கள் இளநங்கைக்கு விளங்கவும் தொடங்கியதால் அவள் வதனத்தில் வியப்புப் படர்ந்தது. அவள் வாய், பேசும் சக்தியை இழந்து கிடந்தது.

மகனின் வியப்பைக் கண்ட கோட்டைக் காவலர் சிறிது நேரம் அவள் உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்க இடம் கொடுத்துவிட்டு, “இந்தா, இப்படி வா” என்று அழைத்தார். அறையின் மூலையிலிருந்த விளக்கருகில் மகள் வந்ததும் “இப்பொழுதும் இதைப் பார்” என்று அந்த வாலிபன் தந்த பொருளை அவள் கையில் கொடுத்தார்.

ஏற்கனவே அவள் நிலவில் அதைப் பார்த்துக் கொண்டு தான் வந்திருந்தாள். இருப்பினும் அதை மீண்டும் கவனித்தாள். தங்கத்தால் கட்டை விரல் பருமனுக்குக் கோடரி போல் செய்யப்பட்டிருந்த தகட்டின் மேல் ஒரு யானை செதுக்கப்பட்டிருந்தது. அதன் மேல் ஒரு பெரும் முத்தும் ஐந்து சிறுமுத்துக்களும் மீனைப்போல் கைப் பிடியாகப் பதிக்கப்பெற்றிருந்தன. அந்தப் பதக்கம் புது விதமாயிருந்தது. அது கழுத்தில் அணியப் பயனற்றதென்பதை அதில் கயிறோ, சங்கிலியோ கோக்க வழியில்லாதது, எடுத்துக் காட்டியது. கையில் கட்ட வேண்டுமானாலும் வேறு தங்க ஆபரணத்தில் புதைத்தால் தான் சாத்தியமென்பதையும் அவள் புரிந்து கொண்டாள். ஆகையால் மீண்டும் குழப்பத்துடன் தந்தையை ஏறெடுத்து நோக்கினாள்.

கோட்டைக் காவலர் சொன்னார், ஆழ்ந்த சிந்தனை யுடன், “அது அபூர்வமான பொருள் மகளே! நீ ஓர் அபூர்வமான மனிதனைச் சந்தித்திருக்கிறாய்” என்று.

தந்தையின் குரலால் மேலும் குழப்பமே அடைந்த இளநங்கை கேட்டாள், “அபூர்வ மனிதரா?” என்று.

ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார் கோட்டைக் காவலர்.

“அப்படியானால் இது!” என்று அந்தப் பொருளைக் காட்டி வினவினான் இனதங்கை.

கோட்டைக் காவலர் உடனே பதில் சொல்லவில்லை. ஆழ்ந்த யோசனைக்குப் பின்பே வாயைத் திறந்தார். அவர் வாயிலிருந்து உதிர்ந்த ஒற்றைச் சொல், தொலை தூரத்தி லிருந்து வருவதைப்போல் கேட்டது இளநங்கைக்கு. “ராஜ முத்திரை!” என்ற ஒற்றைச் சொல்லை ரகசியம், பயம், மரியாதை ஆகிய மூன்றும் கலந்தொலித்த குரலில் கூறினார் கோட்டைக் காவலர்.

Previous articleRaja Muthirai Part 1 Ch3 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch5 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here