Home Historical Novel Raja Muthirai Part 1 Ch40 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch40 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

69
0
Raja Muthirai Part 1 Ch40 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch40 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch40 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 40 போர்க் கவிதை

Raja Muthirai Part 1 Ch40 |Raja Muthirai Part1|TamilNovel.in

சிங்கணன் கோட்டையிலிருந்து உயிருடன் வெளியே செல்லவேண்டுமானால் என்ன செய்ய இணங்க வேண்டு மென்பதை வீரபாண்டியன் எடுத்துச் சொன்னபோது அவன் முகத்தில் உணர்ச்சிப் பெருக்கு இல்லை. வீரபாண்டியனின் கண்களிலும், அவன் உட்கார்ந்திருந்த தோரணையிலுங்கூட அமைதியே நிலவிக் கிடந்தது. முகத்தில் சீற்றமில்லை; கண்களில் அந்தக் கழுகுப் பார்வையில்லை. உடல் இரும்பாக இறுகவில்லை.

பரம அமைதியுடன் சிங்கணன் தப்புவதற்கான நிபந் தனையை எடுத்துச் சொன்னான் பாண்டிய நாட்டு இளவரசன். ஆனால் அதைக் கேட்ட சிங்கணன் மனத்தில் அச்சம் பொதும் நிலவியது. வீரபாண்டியனின் அத்தனை அமைதிக்குப் பின்னால் பெரும் வஞ்சமும், விஷமமும் இருக்கிறதென்று தீர்மானித்த சிங்கணன் என்ன பதிலுரைப்பது என்று தெரியாமல்கூட நீண்ட நேரம் விழித்தது விழித்தபடியே உட்கார்ந்து விட்டான். வீரபாண்டியன் பேச ஆரம்பித்த போதிருந்த நிலை அவன் பேச்சை முடித்தபோது இல்லை சிங்கணனுக்கு.

உண்மையில் தேனொழுகும் குரலில் தனது நிபந்தனையைச் சொல்லத் துவங்கினான் பாண்டிய இளவல். சொல்லுமுன்பு தனது ஆசனத்தில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கைகளின் விரல்களை ஒன்றுடன் ஒன்று கோத்தும் கொண்டான். சிங்கணனை ஏறெடுத்து நோக்கிய கண்களில் விபரீதம் ஏதுமில்லை. ஏதோ தீவிர சிந்தனை மட்டுமிருந்தது. “சிங்கணரே! நான் முன்பே சொன்னேன், பாண்டியர் விருந்தைப் போன்றதுதான் பாண்டியர் நீதியுமென்று. விருத்தை எத்தனை நேர்மையுடனும் ருசியுடனும் நாங்கள் படைக்கிறோமோ, அத்தனை நேர்மையுடனும் ருசியுடனும் நீதியையும் படைக்கிறோம். வியாதியுள்ளவனுக்கு விருந்து ருசிக்காதது போல், எங்களிடம் விரோதமுள்ளவர்களுக்கு எங்கள் நீதியும் ரசிப்பதில்லை. உங்கள் சம்பந்தமாக நாங்கள் செலுத்தத் தீர்மானித்திருக்கும் நீதியும் உம்மால் விரும்பத்தக்கது. ஏற்கத் தக்கதும்கூட. ஆனால் அதை விரும்புவதும் ஏற்பதும் உமது இஷ்டத்தைப் பொறுத்தது. இதில் எந்த வலுக்கட்டாயமுமில்லை…’ என்ற வீரபாண்டியன் சிங்கணனையும் நோக்கிவிட்டுத் தனது சகோதரனையும் தோக்கினான்.

சிங்கணன் தலைவிதியைப்பற்றி எந்த அக்கறையும் காட்டாமலும் அதிகமாக அதைப்பற்றிச் சிந்திக்காமலும் ஏதோ ஒரு நாடகத்தை வேடிக்கை பார்ப்பதுபோல் உட்கார்ந்திருந்த ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், “ஆம் தம்பி, கட்டாயம் ஏதுமில்லை. அவர் இஷ்டத்துக்கே விட்டுவிடுவோம்,” என்றான்.

மேலும் நிபந்தனையை விவரிக்கத் தொடங்கிய வீர பாண்டியன், “கேட்டீரா சிங்கணரே! இதில் கட்டாயம் ஏதுமில்லை. மன்னரே ஒப்புக்கொண்டு விட்டார். தவிர, நீர் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமும் அப்படிப் பிரமாதமானதல்ல; நியாயத்துக்கும் தர்மத்துக்கும் உகந்தது.” என்றான்.

சிங்கணனின் முகத்தில் சந்தேகச் சாயை படர்ந்தது. வீரபாண்டியன் பூர்வபீடிகை வேறு ஏதோ பெரும் ஏற் பாட்டுக்கு அடிப்படையென்பதைப் புரிந்து கொண்டான் ஆகவே சொன்னான், “நியாயத்துக்கும், தர்மத்துக்கும் கட்டுப்படுவதில் போசளர்களுக்கு எந்தவித ஆட்சேபமுமிருக்காது. இருப்பினும் விவரமாகச் சொல்லுங்கள்” என்று.

“நீங்கள் நியாயத்தை ஒப்புக் கொள்வீர்களென்று தெரிந்ததால்தான் உம்மை இங்கு வரவழைத்துப் பேசுறேன். நியாயமற்ற, தர்மமற்ற செய்கைகளில் சம்பத்தில் நீர் டுபட்டிருந்தாலும், அவை வீரரான உமது மனத்தை வாட்டி வதைக்கிறதென்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமுமில்லை. பெண் களவிலும் பொருள் களவிலும் சம்பந்தப்படுவதோ, சம்பந்தப்படுபவருடன் சகவாசம் கொள்வதோ பிரர்களுக்கு எத்தனை கஷ்டமென்பதை நான் உணர்வேன். ஆகையால் சொல்கிறேன். நீர் செய்த தவறுக்கு, அநீதிகளுக்குப் பரிகாரம் செய்யுங்கள்.” என்றான் பாண்டியன்.

வீரபாண்டியன் விஷயத்துக்கு தேரே வராமல் சுற்றி வளைத்துப் பேசியது அவனுக்குப் பெரும் எரிச்சலையும் ஓரளவு பயத்தையும் தரவே, பரிகாரத்தைச் சீக்கிரம் சொல்லுங்கள்,” என்றான் சங்கடத்துடன்.

குரலைத் தாழ்த்தி, “பரிகாரமொன்றும் பெரும் பரிகாரமில்லை. தியாயத்தைத்தான் செய்யச் சொல்லுகிறேன். எங்கள் பொருளைத் திரும்ப எங்களிடம் சேர்த்து விடவேண்டும்,” என்றான் வீரபாண்டியன்.

சிங்கணன் பிரமித்தான், “என்ன! உங்கள் பொருளை உங்களிடம் சேர்ப்பிப்பதா? என்ன பொருளைக் குறிப்பிடுகிறீர்கள்? பாண்டிய இளவரசியையா? முத்துக் தவியலையா?”

“இரண்டையும் தான்,” என்று மன்னன் குறுக்கே புகுந்தான்.

மன்னவா ?”

“என்ன சிங்கணரே”

“இது சாத்தியமா?”

“இங்கிருந்து கொண்டு போவது சாத்தியமானால் அங்கிருந்து கொண்டு வருவதும் சாத்தியம்தானே?” என்று மன்னன் புன்முறுவல் செய்தான்.

“முத்துக் குவியலைக் கடத்தியது நான் அல்லவே?” என்றான் சிங்கணன் சீற்றத்துடன்.

இந்தச் சமயத்தில் வீரபாண்டியன் குரல் குறுக்கே புகுந்தது. “அங்குதான் உமக்கு அதிர்ஷ்ட ம் அடிக்கிறது.” என்றான்.

சிங்கணன் முகத்தில் சீற்றம் மறைந்து இகழ்ச்சி மண்டியது. “அதிர்ஷ்டமா?” என்று அவன் கேட்ட ஒற்றைச் சொல் கேள்வியில் இகழ்ச்சி ஒலித்தது.

“ஆம். அதிர்ஷ்டந்தான். ஒன்றை முடிக்கப்போனால் இன்னொன்றும் கிடைக்கிறது.”
வீரபாண்டியன் காட்டிய குதூகலம் வேப்பங்காயாக் இருந்தது சிங்கணனுக்கு “எதை முடிக்கப் போகிறேன்? எது கிடைக்கிறது?” என்று வினவினான் வெறுப்பு நிரம்பிய குரலில்.

“முத்துக்குமாரியை மீட்கப் போகிறீர். “

“தானா,”

“சேரனிடத்திலிருந்தா!”

“ஆம்.”

“மீட்டால்!”

“அவனிடம்தான் முத்தும் இருக்கிறது. இரண்டையும் மீட்ட பெருமை உம்மைச் சாரும். உமது பெயர் பாண்டியா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.”

சிங்கணன் அத்தனை ஆபத்திலும் ஆத்திரத்திலும் நகைத்தான். “வீரபாண்டியரே! உமக்கு இந்தப் பணி பரம சுலபமாகத் தோன்றுகிறது.”

“உமக்கும் அப்படித்தான் தோன்ற வேண்டும்.” என்றான் வீரபாண்டியன்.

“இங்கிருந்து முத்துக்குமரியைக் கொண்டு போனதை எத்தனை லாவகமாகத் திட்டமிட்டுச் செய்தீர்! அந்த அறிவு, முன்யோசனை, திட்டம், வேடம் எல்லாமே அவளைத் திருப்பிக்கொண்டு வரவும் உபயோகப்படு மல்லாவா?”
“நான் சேரநாடு சென்றால் சேரன் என்னை உயிருடன் விடுவானென்று நினைக்கிறீரா?”

“ஏன் விடமாட்டான்? அவனுக்கு எத்தனை சிறந்த சேவை புரிந்ததிருக்கிறீர்?”

இதைக்கேட்ட சிங்கணன் சிறிது சிந்தனையிலிறங்கினான், பிறகு சொன்னான்: “வீரபாண்டியரே! உமக்குச் சேரனை நன்றாகத் தெரியும். நீர் மலைக்காட்டில் உமது வீரர்களைக்கொண்டு சூழ்ந்து கொன்று போட்ட சேரப் படைப்பிரிவைப் பற்றி நாளைக்குள் சேரனுக்குத் தகவல் எட்டிவிடும். அந்தப் படை பலியானதற்கு எனக்கு என்ன வெகுமதி கிடைக்கும் தெரியுமா? மரண தண்டனைதான் டைக்கும்.”

வீரபாண்டியனும் சிறிது சிந்தித்தான். “உயிர் போய் விடும் என்கிறீர்!”

“ஆம். சந்தேகமே வேண்டாம்” என்றான் சிங்கணன்.

இதில் நீர் தீர்மானம் செய்ய வேண்டியது ஒன்றிருக்கிறது, சேரன் படைப் பிரிவை இழந்ததற்காக உம்மைக் கொலை செய்வான். தாங்கள் முத்துக்குமரி களவுக்காக உம்மைக் கொலை செய்வோம். இதில் எந்த மரணம் விரும்பத்தக்கது?” என்று வீரபாண்டியன் மேலும் சொன்னான்: “சிங்கணரே! வீரர்களுக்கு மரணம் எந்த விநாடியிலும் நிச்சயம். ஆகையால் வீரனாயிருப்பவன் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் ஏணத்துக்குப் பின் தனது நிலை என்னவென்பதைப்பற்றி மட்டும் சிந்திக்கிறான். நீர் சேரநாடு சென்று உயிரிழந்தால், ஒரு பெண்ணைக் களவாடிய, வெறுக்கத்தக்க, நாளை மக்கள் எள்ளி நகையாடக்கூடிய கேவலமான குற்றத்துக்காக உயிரிழப்பீர். எப்படி உயிரிழப்பது சிலாக்கியமென்று இனைக்கிறீர்?”

இதைச் சொன்ன வீரபாண்டியன் குரலில் அனுதாபம் பெரிதுமிருந்ததைப் போசளத் தண்டநாயகன் கவனித்தான். அந்த அனுதாபம் சுந்தரபாண்டியன் முகத்திலும் படர்ந்து கிடந்தது. அந்த இரு சகோதரர் களையும் அவன் நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். முத்தை இழந்து, மகளை இழந்து நிற்கும் அந்த வேதனையிலும் இன்னொரு வீரனின் அவன் நிலையைக் கண்டு பரிதாபப்படும் அந்த இரு சகோதரர் களையும் பார்த்துப் பார்த்து, “இப்படியும் இருவரா?” என்று பிரமிப்பில் ஆழ்ந்தான்.

வீரபாண்டியன் சொன்னதில் உண்மை பெரிதுமிருந்தது அவனுக்குத் தெள்ளெனப் புரிந்திருந்தது. இருப்பினும் சேரன் பக்கத்தில் தின்று எந்த உதவியும் புரியுமாறு போசள மன்னன் வீரசோமேசுவரன் ஆணையிட்டிருப்பதை எண்ணிப் பெருமூச்செறிந்தான். இருப்பினும் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவனாய்த் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்றுகொண்டு, “வீரபாண்டியரே! உமது ஆணை எதுவாயிருந்தாலும் சரி, நிறைவேற்றுகிறேன். சொல்லுங்கள். ஆனால் உயிருக்குப் பயந்து நானிதைச் செய்ய வில்லையென்பது நினைவிலிருக்கட்டும். முத்துக் களவை நான் செய்யவில்லை. அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை. பெண் களவெனும் ஈனத் தொழில் செய்திருக்கிறேன். அதைச் சரிசெய்யப் பார்க்கிறேன் சொல்லுங்கள். நான் செய்ய வேண்டியதென்ன?” என்ற வினவினான். அவன் குரலில் உறுதியிருந்தது. அவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டானென்ற ஒலியுமிருந்தது.

வீரபாண்டியன் அவனைத் தன்னருகில் வரச் சைகை செய்து கச்சையிலிருந்து ஓர் ஓலையை எடுத்து அவன் கையில் கொடுத்தான். ஓலையைப் பிரித்துப் பார்த்த சிங்கணன் அதில் செய்தி ஏதுமில்லாததையும் சில கோடுகளும் குறிகளும் ஊரின் பெயர்களுமிருந்ததையும் கவனித்தான். முதலில் அவனுக்கு ஏதும் விளங்க வில்லையானாலும், ஊன்றிப் பார்க்கப் பார்க்கப் பல விஷயங்கள் புரிந்தன. அவன் முகத்தில் சொல்ல வொண்ணா வியப்பு விரிந்தது. அந்த வியப்பைப் பூர்ணமாகப் பிரதிபலித்த குரலில், “வீரபாண்டியரோ மன்னவா!!” என்ற சொற்கள் வெளிவந்ததன்றி. அவள் கண்களும் அந்த இரு சகோதரர்களையும் வியப்பு உதிர மாறி மாறிப் பார்த்தன,

முரட்டுக் குழல்கள் முகத்தில் தொங்கிய தனது முகத்தை ஆமென்பதற்கு அறிகுறியாக அசைத்தான் சந்தரபாண்டியன், வீரபாண்டியன் இதழ்களில் இளநகை அரும்பிநின்றது.

“இதில் பாண்டிய இளவரசியை மீட்பதுபற்றி ஏது மில்லையே?” என்றாள் சிங்கணன்.

“வெளிப் பொருளாக இல்லை,” என்றான் வீரபாண்டின்.

“உட்பொருளாக இருக்கிறதா?”

“ஆம்.”

“இதென்ன கவிதையா?”
“இதுவும் ஒருவிதக் கவிதைதான். புனைந்தவரும் புலவர்தான்.

“யாரந்தப் புலவர்?”

பதிலுக்குச் சுந்தரபாண்டியனைச் சுட்டிக்காட்டிய வீரபாண்டியன் கூறினான்; “மதுரை, சங்கப் பலகைக்கும் புலவர்களுக்கும் இருப்பிடமில்லையா சிங்கணரே? அதை ஆளும் பாண்டியமன்னர் புலவராக இருப்பதிலோ, கவிதை வடிப்பதிலோ வியப்பு என்ன இருக்கிறது? உமது கையிலிருக்கும் ஓலையும் உட்பொருள் கொண்டது. கவிதையை வடிப்பது. ஆனால் அது சாதாரணக் கவிதையல்ல; போர்க்கவிதை. அந்தக் கவிதை வெகு நீக்கிரம் பேரிடிபோல் ஒலிக்கும். சேரநாட்டில் அதைப் பாடுவோர் வீரர். பக்கவாத்தியங்கள் முரசு, கொம்பு, சங்கு முதலியன. இந்தக் கவிதையை அரங்கேற்றி வைக்கும் பொறுப்பு உம்முடையது, தீர் இன்தே சேரநாட்டை நோக்கிச் செல்லும். அந்த ஓலையில் குறிப்பிட்டுள்ள அம்புகள் காட்டும் வழியில், அதில் குறிப்பிட்டிருப்பது போல் தடந்து கொண்டால் உமக்கு எந்தவித ஆபத்தும் தேரிடாது. உம்முடன் என் வீரர்கள் இருவரையும் அனுப்புகிறேன்,” என்று வீரபாண்டியன் மிகுந்த உணர்ச்சியுடன் கூறினான்.

“இருவர் எதற்கு?” என்று சிங்கணன் கேட்டான்.

அதற்காண காரணத்தையும் சொன்னான் வீர பாண்டியன். “முத்துக்குமரி எந்த இடத்தில் இருக்கிறாளோ அந்த இடத்தில் இந்திரபானுவும் இருக்கிறானென்பதை முன்னமே சொன்னேன் உங்களுக்கு. இந்த இரண்டு வீரர்களின் சேர்க்கை உம்மிடம் இந்திரபானுவுக்கு இருக்கும் கோபத்தை விரட்டும். உமக்குப் பெருவீரனொருவன் உதவியும் சேர நாட்டில் கிடைக்கும். உங்கள் பணியை நிறைவேற்றுவது சுலபமாகும்,” என்று கூறினான்.

வீரபாண்டியன் வெகு சாமர்த்தியமாகத் தன்னைச் சேர நாட்டிலும் அப்புறம் இப்புறம் திரும்பவொட்டாய லடித்துவிட்டதை உணர்ந்துகொண்டான், மீண்டும் சில விதாடிகள் சிந்தித்தான். பிறகு கேட்டான். “நான் எப்பொழுது பயணப்படவேண்டும்?” என்று.

“இன்று மாலை,’ என்றான் வீரபாண்டியன்.

“சரி. நான் தயாராயிருக்கிறேன்,” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான் சிங்கணன்.

அவன் சென்றதும் சுந்தரபாண்டியன் தம்பியை நோக்கி, “அந்த இரண்டாவது ஓலை எங்கே?” என்ற வினவினான்.

கச்சையிலிருந்து மற்றோர் ஓலையை எடுத்து நீட்டினான் வீரபாண்டியன்.

“இந்தக் கவிதை சரியாயிருக்கிறது. எதுகை, மோனை எல்லாமே சரி,” என்று சிலாகித்தான் சுந்தரபாண்டியன்.

இரு சகோதரர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகக் கலந்தே நகைத்தார்கள் அந்தச் சிரிப்பில் போர்க் கவிதையின் பறை, சங்கு, கொம்பு எல்லாமே ஒலித்தன.

Previous articleRaja Muthirai Part 1 Ch39 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch41 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here